புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_c10முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_m10முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_c10 
20 Posts - 65%
heezulia
முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_c10முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_m10முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_c10முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_m10முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_c10 
62 Posts - 63%
heezulia
முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_c10முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_m10முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_c10முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_m10முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_c10முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_m10முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 1:44 pm

பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம்

ஒரு முயற்சி வெற்றி பெறும்போது நமக்கு என்ன கிடைக்கிறது?

நாம் விரும்பியதை அடைகிறோம்.
நம் சாதனை - நம்மால் முடியும் என்று நிரூபிக்கிறது.
நமக்கு நம் மீதே ஒரு பெருமை ஏற்படுகிறது.
நமக்கு மனநிறைவைத் தருகிறது.

மேலே கூறிய நான்கு விளைவுகளையும் பார்த்தோமானால் கடைசியில் கூறப்பட்ட மூன்று விளைவுகளும் நம் மனதில் ஏற்படுகின்ற உணர்வுகள் என்பது புரியவரும்.

நம்மைப் பற்றி நம் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் மனநிறைவு - இவைதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குகின்றன. மேலும் சாதனை செய்யத் தூண்டுகின்றன.

இப்படிப்பட்ட எண்ணங்கள் ஆணின் மனதில் அதிகம் எழுகின்றனவா அல்லது பெண்ணின் மனதில் அதிகம் எழுகின்றனவா என்று கேட்டால், அந்த வாய்ப்பு, குறிப்பாக கிராமங்களில் வாழும் பெண்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை.

சாதனை புரியும் வாய்ப்புகள் பொதுவாக பெண்களுக்குக் குறைவு. அதிலும் கிராமப் பெண்களுக்கு இன்னும் குறைவு. காரணம் கல்வியறிவின்மை மற்றும் நமது சமூகப் பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள், மரபுகள்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 1:44 pm

வெற்றிக்கு முதல்படி: அறிவு - படிப்பு

ஒரு ஆணுக்குக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை நாம் ஒரு பெண்ணுக்குக் கொடுப்பதில்லை.

"ஒரு பெண் எதற்குப் படிக்க வேண்டும்? கல்யாணம் செய்து கொண்டு கணவன் வீட்டுக்குப் போகிறவள்தானே?" என்று ஒரு பெண்ணைத் திருமணத்திற்காகவே வளர்க்கிறோம்.

ஒரு ஆண் திருமணம் ஆகாமல் இருக்கலாம். ஒரு பெண் திருமணம் ஆகாமல் இருந்தால் அபவாதம். 'கெட்ட பெயர்'. இப்படி ஒரு மரபு. மேனாடுகளில் ஆண்களைப் போல பெண்கள் இப்போது காலந்தாழ்ந்து திருமணம் செய்துகொள்கிறார்கள் அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்கிறார்கள்.

ஒரு பெண்ணின் முன்னேற்றத்தைத் தடை செய்வது படிப்பின்மைதான். படிப்பு இருந்தால்தான் ஊர் உலகம் தெரியும்; படிப்பு இருந்தால்தான் நல்ல வேலைக்குப் போக முடியும். நல்ல வேலைக்குப் போனால்தான் நிறைய சம்பாதிக்க முடியும்; தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 1:45 pm

வெற்றி என்பது: தன் காலில் நிற்கும் பெருமை

தன் காலில் நிற்கும் பெருமை இருக்கிறதே. அதை நம் நாட்டில் பெண்களுக்கு இல்லாமல் செய்துவிட்டோம். பெண்களை "சார்ந்து நிற்க வேண்டிய ஒரு சமுதாயமாக" உருவாக்கிவிட்டோம்.

ஒரு பெண்ணோ, ஆணோ, தன் காலில் நிற்கும்போது - தன்னால் சம்பாதித்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வரும்போது, அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அவர்கள் யாரையும் 'சட்டை' செய்யவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு சமூக மதிப்பு, சமூகத்தில் ஒரு பெருமை கிடைக்கிறது. வாத்தியாரம்மா, டாக்டரம்மா, வக்கீலம்மா என்று ஊரும் உலகமும் உங்களைப் பெருமையுடன் அழைப்பதைப் பாருங்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கும் வீட்டிலே இருந்துகொண்டு வேலைக்குப் போகாத பெண்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதை வெவ்வேறானது.

சம்பாதிக்கிற மருமகளை மாமியார் அதிகம் அதட்டிக் கேட்க முடிவதில்லை; அதிகாரம் செய்வதில்லை. மாறாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கின்றன.

"பொட்டைக் கழுதை" என்று பெண்களை இழிவுபடுத்துவதும், "பொம்பளை மாதிரி பேசறீயே!" என்று பெண்களை உதாரணம் காட்டுவதும் சமுதாயத்தில் பெண்களைக் கேவலப்படுத்துகிறது.

"சாண் பிள்ளையானாலும் அவன் ஆண்பிள்ளை!" என்று ஆண்பிள்ளையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது அவனது சகோதரியின் மண்டையில் அடிக்கிறது. "உன்னால் ஒன்றும் செய்ய முடியாது; ஏனெனில் நீ ஒரு பெண்!" என்று சொல்லாமல் சொல்கிறது, நம் சமுதாயம்.

முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும். அதற்கு முதலில் பெண்கள் படிக்க வேண்டும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 1:46 pm

வெற்றிக்குத் தேவை: பொருளாதார சுதந்திரம்

பொருளாதார சுதந்திரம் - அதாவது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, ஒரு பெண் வாழ்வதற்குத் தேவையான வருமானம்தான் அவளுக்கு உறுதுணையாக என்றும் நிற்கும்.

ஆணுக்குள்ள அத்தனை திறமைகளும் ஒரு பெண்ணிடம் இருக்கின்றன. அதற்கு மேலும் இருக்கின்றன. இதை நாம் புரிந்துகொண்டு மதிப்புக் கொடுத்து நம் பெண்களை வளர்க்கத் தவறிவிட்டோம். பெண்களுக்கு ஏன் பொருளாதார சுதந்திரம் வேண்டும்? இந்த உலகத்தைப் பார்த்தோமானால் ஒருவன் படித்தவனா; படிக்காதவனா என்பது முக்கியமல்ல! பணமிருந்தால் படிக்காதவன் கூட மதிக்கப்படுகின்றான். மரியாதை செய்யப்படுகிறான்.

ஒருவன் பதவியில் இருக்கிறானா? அல்லது பதவி ஏதும் இல்லாமல் இருக்கிறானா? என்பது முக்கியமல்ல. பதவி இல்லாமல் இருந்தாலும் பணம் இருந்தால் பதவியில் உள்ளவர்களை எல்லாம் அடிபணிய வைக்கலாம். எனவே பணம்தான் முக்கியம்.

ஒரு நபர் ஆணா பெண்ணா என்பது முக்கியமல்ல. சொத்துக்கு வாரிசு ஒரு பெண்தான் என்னும்போது உலகமே அந்தப் பெண்ணுக்கு அடிவணங்குவதைப் பார்க்கலாம்.

பணம் என்பது நமக்குப் பாதுகாப்பைத் தருகிறது; பெருமை தருகிறது; செல்வாக்குத் தருகிறது; வலிமை தருகிறது. அதனால்தான் வள்ளுவர், "மகளே! பணம் இல்லாவிட்டால் இந்த உலகில் உனக்கு வாழ்வே இல்லை" என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 1:47 pm

35 வயதுக்குமேல்: வெற்றி உண்டு

பணம், சாதனை, வெற்றி என்பதெல்லாம் எதற்காக? அதன் பலன் என்ன? என்ற கேள்வி வருகிறது.

மனிதன் தன் வாழ்வில் மகிழ்வுடன் மனநிறைவுடன் இருக்க விரும்புகிறான். அதுதான் வாழ்வு என்று கருதுகிறான். ஒரு ஆணைப் பார்த்து, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்கிறோம். அவர் "சும்மாதான் இருக்கிறேன்" என்றால் எவ்வளவு கேவலமாக அவரை மதிப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். வேலை, சம்பாத்தியம் எல்லாம் ஆண்மையின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.

மாறாக, ஒரு பெண்ணை யாரும் 'என்ன செய்கிறீர்கள்?' என்று நம் ஊரில் கேட்பது இல்லை. காரணம் பெண்ணுக்குக் குடும்பம், குழந்தைகள், கணவன், வீடு என்று இருக்கின்றன. அதுவே பெரிய வேலைதான். அதுவே பெரிய மனநிறைவைத் தருகிறது.

ஆனால், ஒரு 30-35 வயது பெண்மணியின் நிலை என்ன? அந்த வயதுக்கு மேலும் ஒரு 30 ஆண்டுகள் வாழக்கூடிய - வாழவேண்டிய பெண்ணின் நிலை என்ன?

கணவன் வேலைக்குப் போகிறான். குழந்தைகள் பெரியவர்களாகி படிக்கப் போகிறார்கள். ஒரு பெண்மணி தன்னிடம் எவ்வளவோ திறமை இருந்தும் அவற்றிற்கெல்லாம் எந்த வாய்ப்புமில்லாத நிலையில் வீட்டில் பொழுதைக் கழிக்கிறார்.

இத்தனை நாள் நம் சமுதாயத்தில் தொழில், வேலை என்பது ஆணுக்கும், குடும்பம், குழந்தை வளர்ப்பு என்பது பெண்ணுக்குமாக என்ற ஒரு நடைமுறை இருந்து வந்தது.

இன்று உலகம் மாறி வருகிறது. பெண்கள் படிக்கிறார்கள். அதிகம் பேர் வேலை பார்க்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள்; தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து சமுதாயத்திற்குப் பயன்படும் பணிகளைச் செய்கிறார்கள். எனவே, மாறிவரும் புதிய உலகிற்கு ஏற்பக் கிராமத்துப் பெண்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

சம்பாத்தியம், குடும்பம் என்ற இரண்டிலும் பங்கு பெறும் போதுதான் தன் காலில் நிற்கும் குணமும், பொருளாதார சுதந்திரமும், தன்னைப் பற்றிய நம்பிக்கையும், சார்ந்து நிற்காத குணங்களும் வளரும். இது பெண்களுக்கு நாளைய உலகிற்கு அவசியமான தேவைகள்.

வருமானம், குடும்பம் என்பவற்றில் ஆண்-பெண்ணின் பங்கு பாதிப் பாதி என்ற விகிதத்தில் இருக்க வேண்டியதில்லை. அது அவர்கள் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். அதேபோல, வளரும் குழந்தைகள் வீட்டிலிருக்கும்போது வருமானத்திற்காக தொழிலிலோ, வேலையிலோ இறங்க வேண்டியதில்லை. அந்தக் குடும்பக் கடமை முடியும்போது, அடுத்த கடமைக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் பெண்தான் வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்க முடியும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 1:47 pm

பெண் குணம்

பெண்களைப் பற்றி ஆராய்ந்தவர்கள் ஆண்களைவிடப் பெண்கள் நம்பற்குரியவர்கள், பிறரை மன்னிப்பவர்கள், உறவில் நயம் தெரிந்து அன்பு காட்டுபவர்கள், கடின உழைப்பாளிகள் என்று எழுதுகிறார்கள்.

ஒரு ஆளை மதிக்கும் அளவுகோல் இன்று எல்லா நாடுகளிலும் பணம்தான். ஆனால் ஜப்பானியர் பணத்தைவிடக் குணத்தை அதிகமாக மதிக்கிறார்கள். அடக்கம், பணிவு, எளிமை, சமுதாயத்துடன் சேர்ந்து இணைந்து இயங்குதல்; பிறருடன் இனிமையாகப் பழகுதல் என்ற பெண் குணங்களை ஜப்பானியர் போற்றுகிறார்கள். அதற்காக அவர்களிடம் பணம் பண்ணும் - தன் காலில் நின்று தொழில் செய்யும் குணங்கள் இல்லை என்பது பொருளல்ல. இன்று பணத்தில் அமெரிக்காவை மிஞ்சும் நிலையில் ஜப்பான் இருக்கிறது.

அமெரிக்காவைப் பொதுவாகப் பார்த்தால் அங்கே ஆண் குணங்கள் அதிகம். அசாத்திய தன்னம்பிக்கை, சுதந்திரம், தன்னைப் பற்றிய பெருமை, தனது தனித்தன்மை பற்றிய உணர்வு - இவை எல்லாம் அதிகம் அங்கே.

எந்த சமுதாயத்திற்கும் இந்த இரண்டு வகைக் குணங்களும் தேவை.

பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் பெண்கள் சமுதாயம், குறிப்பாக நம்முடைய கிராமப் பெண்கள் - அடுத்த நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்க வேண்டுமானால், அவர்களுக்கு இன்று அவசியமான ஒன்று: கல்வி. இரண்டாவது: உலக ஞானம். மூன்றாவது: தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை.


- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி (வெற்றிக்கு முதல் படி-நூலிலிருந்து)





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 2:12 pm

இதுவும் ஒரு பதிவு மட்டும் படித்து விட்டு பதில் போடுகிறேன், முழுவதும் படித்துவிட்டு பிறகு மீண்டும் எழுதுகிறேன் புன்னகை டாக்டர் உதயமூர்த்தி அவர்களின் இந்த பதிவுக்கும் நன்றி செந்தில் !
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 2:15 pm

krishnaamma wrote:இதுவும் ஒரு பதிவு மட்டும் படித்து விட்டு பதில் போடுகிறேன், முழுவதும் படித்துவிட்டு பிறகு மீண்டும் எழுதுகிறேன் புன்னகை டாக்டர் உதயமூர்த்தி அவர்களின் இந்த பதிவுக்கும் நன்றி செந்தில் !

என்னிடம் அவரது புத்தகங்கள் நிறைய உள்ளது அம்மா. தன்னம்பிக்கை ததும்பும் எழுத்துகளின் தலைவர் அவர்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Thu Feb 27, 2014 11:35 pm

டாக்டர் உதயமூர்த்தி அவர்களின் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி!
இப்போது கிராமம் நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் பெண்களை படிக்க வைக்க பெற்றோர்கள் எண்ணுகிறார்கள்.ஆண்களை விட பெண்களுக்கு மன உறுதி அதிகம் .ஆனால் சமிப காலமாக நாடு முழுவதும் பரவலாக பெண்களுக்கு எதிராக நடக்கும் உடல் ரீதியான வன்முறைகளைக் கண்டு பெற்றோர்கள் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.அதனால் பெண்குழந்தைகளை படிப்பு வேலை போன்ற காரணமாக வெளியூர் அனுப்ப அச்சப்படும் சூழல் உறுவாகியுள்ளது.இந்நிலைநீடித்தால் பெண்களின் வளர்ச்சியும் அவர்களின் தன்னம்பிக்கையும் பாதிக்கப்படும் .இந்நிலைமாற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 28, 2014 8:14 am

முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும் 103459460 
-
அரிது அரிது பெண்ணாக பிறப்பது

முற்காலத்தில் “பெண்” எனும் சொல் எழும் முன்

கல்லிக்காய் அழித்ததாம் பெண்ணை!


இன்றோ பெண் எனும் சொல் கேட்கும் முன்

மனதில் தோன்றுவது சாதனைகளும் சாகசங்களும் தான்

ஆம்! நம் நாட்டை ஆள்வதும் பெண்தான்!

நம்மை பெற்றவளும் பெண்தான்!

நம்மை தாங்குவதும் பெண்தான்!

பெண் இல்லையேல் உலகத்தில் மனித இனம் ஏது?


இவையெல்லாவற்றிற்கும் நன்றி செய்யும் வகையில்

நானும் ஒரு பெண்!


-ரேவதி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக