புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
60 Posts - 48%
heezulia
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
17 Posts - 2%
prajai
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோணம்! Poll_c10கோணம்! Poll_m10கோணம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோணம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 04, 2014 1:34 pm

பூஜை அறையில், கிரகப்பிரவேச பத்திரிகைகளை வைத்து, பூஜை செய்த பின், சுதா தன் கணவன் வாசுவிடம், ''என்னங்க, மொத பத்திரிகைய, உங்க அக்கா வீட்டுக்கும், அடுத்து எங்க அப்பா, அம்மாவுக்கும் கொடுத்துட்டு, அப்புறம் மத்தவங்களுக்கு கொடுக்கலாம்,'' என்றாள்.

'சுதா சட்டென்று உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்கக்கூடியவ. அவளுடைய கட்டளைக்கு மாறாக, மொத பத்திரிகைய, வேறு ஒருத்தருக்கு கொடுக்க, முடிவு செய்துள்ள விஷயத்தை, முன்கூட்டியே சொன்னா அவளுக்கு, 'முணுக்'குன்னு கோபம் வந்துரும். அப்புறம் பத்திரிகை கொடுக்க, கூட வர மறுத்துடுவா. போகும் வழியில் சொல்லி, சமாளிச்சுக்கலாம்...' என்று, தனக்குள்ளே முடிவெடுத்துக் கொண்டான் வாசு.''பத்திரிகை எல்லாம் எடுத்துக்கிட்டீங்களா?'' என்று, கேட்டாள் சுதா.''ம்... நேற்றே ஒரு பையில எடுத்து வைச்சுட்டேன்.''
''அப்புறம்... யார் யாருக்கு, கொடுக்கணும்ன்னு ஒரு லிஸ்ட் எழுதினோமே, அதையும் எடுத்துக்கங்க. கூடவே, இன்னும் கொஞ்சம் பத்திரிக எடுத்துக்கங்க... திடீர்ன்னு யாராவது ஞாபகம் வந்துச்சுன்னா, கொடுக்க சவுகரியமாய் இருக்கும்.''

சுதாவுக்கு எல்லாமே சரியாக செய்ய வேண்டும். திட்டமிடுதல், அவளுடைய ரத்தத்தில் ஊறிய ஒன்று.
வாசலில், கால்டாக்சி வந்து நின்றது. ஒரே நாளில், அனைவருக்கும் பத்திரிகையை கொடுத்து விட வேண்டும் என்று, டாக்சியை ஏற்பாடு செய்யச் சொன்னவளும் அவள்தான்.

வீடு கட்ட ஆரம்பித்ததிலிருந்தே, அவளுக்கு அலைச்சல் தான். விடியற்காலை எழுந்து, சமைத்து, குழந்தைகளை பள்ளிக்கும், கணவனை ஆபீசுக்கும் அனுப்பிய பின், நேரே வீடு கட்டும் இடத்துக்கு சென்று விடுவாள்.
'இன்ஜினியர் தான் மேற்பார்வ பார்த்திட்டிருக்காரே, நீ வேறே ஏன் வெய்யில்ல போய் நின்னு, உடம்ப கெடுத்துக்கிறே...' என்று, சொல்லிப் பார்த்தான் வாசு.

'என்ன அப்படி சொல்லிட்டீங்க... நாளைக்கு நாம வாழப் போற வீடுங்க. வேலை செய்யுற இடத்துல ஆள் இல்லன்னா அவங்க பாட்டுக்கு, ஏடாகூடமா வீட்ட கட்டி வெச்சுருவாங்க. உங்களுக்கென்ன, நீங்க ஆபீசுக்கு புறப்பட்டு போயிடுவீங்க. வீட்டிலேயே நாள் பூராவும் கிடந்து அல்லாடப் போறவ நான் தானே...' என்பாள். வாசுவுக்கு, அதற்கு மேல் பேச முடியாது.

டாக்சி சிறிது தூரம் தான் சென்றிருக்கும். அசதியில், தூங்கி விட்டாள் சுதா.
ஒரு வகையில், அவள் தூங்கியதும் நல்லது தான் என, எண்ணிக் கொண்டான் வாசு. விழித்துக் கொண்டிருந்தால், அந்த தெருவுக்குள் கார் நுழையும்போதே, 'யார் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தேனோ, அவங்களுக்கா மொத பத்திரிகைய கொடுக்கப் போறீங்க...'என்று, கத்த ஆரம்பித்து விடுவாள்.
அவள் கோபத்திலும், நியாயம் இல்லாமல் இல்லை.

முன்பு நடந்த சம்பவம், பசுமையாய் நினைவில் இருந்தது.தற்போது குடியிருக்கும் வீட்டிற்கு முன், வேறு ஒரு வீட்டில் தான், வாடகைக்கு இருந்தனர். வீட்டின் சொந்தக்காரர் மாடியிலும், இவர்கள் கீழ் போர்ஷனிலும் குடியிருந்தனர்.வீட்டின் சொந்தக்காரர் சரியான சிடுமூஞ்சி. இருந்தாலும், குழந்தைகளின் படிப்பிற்காகவும், வாசுவின் அம்மாவோட வைத்தியத்திற்காகவும், அவர்கள் சகித்துக் கொண்டு, காலம் தள்ளினர்.

ஒருநாள், வாசுவின் அம்மாவுக்கு உடல்நிலை மோசமாக, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, திரும்ப, காரில் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அதைப் பார்த்ததும், வீட்டின் சொந்தக்காரர் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார்.
'வாசு சார்... டாக்டர் என்ன சொன்னார்...' என்று, கேட்டார்.இவ்வளவு அக்கறையாக, நம் அம்மாவப் பத்தி விசாரிக்கிறாரே என்று, எண்ணியவன், டாக்டர் சொன்னதை சொன்னான்...

'அம்மாவுக்கு வயிற்றில கட்டி இருந்து ஆபரேஷன் செய்தோம் இல்லையா... அது புற்று நோய் கட்டியாம் சார். வயசு வேற ஆயிடுச்சு, குணம் ஆகிறது கஷ்டமாம். 'இன்னும் கொஞ்ச நாள் தான் இருப்பாங்க; அதனால, அவங்க கேட்கிறதை வாங்கிக் கொடுங்க'ன்னு டாக்டர் சொல்லிட்டார்...' என்றான் வருத்தத்துடன்.

'அப்படியா... உங்க அம்மாவுக்கு ஏதாவது ஆகுறதுக்கு முன்னால, சீக்கிரம் வேறு வீடு பாத்துக்கங்க...'
வீட்டுக்காரர் இப்படி சொன்னதும், வாசுவுக்கு என்ன பேசுவது என்றே தோன்றாமல், திகைத்துப் போய் நின்றான்.
சுதா தான் பேசினாள்... 'என்ன சார் இப்படி பேசுறீங்க... நாங்களே அம்மாவுக்கு இப்படி ஆகிருச்சேன்னு, இடிஞ்சு போயி இருக்கோம். நீங்க என்னடான்னா, வெந்த புண்ல வேலப் பாய்ச்சுற மாதிரி பேசுறீங்களே... இப்படி திடீர்ன்னு வீட்டை காலி செய்யச் சொன்னா எப்படிங்க...' என்றாள்.

'இதோ பாரும்மா... இந்த வீட்ட கட்டினதிலிருந்து, இங்க, எந்த ஒரு துக்க சம்பவமும் நடக்க நான் அனுமதிச்சதில்ல. அதனால, உங்க மாமியாருக்கு, ஏதாவது ஆகிறதுக்கு முன், வீட்ட காலி செய்துடுங்க. இல்லன்னா, நான் பொல்லாதவன் ஆகிருவேன்...' என்று, கொஞ்சமும் தாட்சண்யம் இல்லாமல் சொன்னவர், 'விடுவிடு'வென, மாடியேறிப் போய் விட்டார்.

'என்னங்க அவர் இப்படி பேசிட்டு போறார்... நீங்க என்னடான்னா பேசாம இருக்கீங்க. நாளைக்கு இவங்க வீட்டில யாரும் சாகவே மாட்டாங்களா... ஏன், இவரே கூட செத்தா, என்ன செய்வாங்களாம்...'
'சுதா... மெதுவாகப் பேசு; அவர் காதுல விழுந்துடப் போகுது...'

'கொஞ்சங் கூட மனிதாபிமானம் இல்லாம பேசிட்டு போறவரு காதுல விழுந்ததா விழட்டுமே!'
மறுநாள் காலை, சுதா, வாசல் தெளிக்க, கதவைத் திறந்தாள்; கேட்டில், 'டுலெட்' போர்டு தொங்கிக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும், அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. 'என்ன மனுஷன் இந்த ஆளு...' என்று நினைத்து, வாசல் தெளிப்பதை விட்டு, உள்ளே வந்து, கணவனை எழுப்பினாள்.'ஏங்க... அந்த ஆளு என்ன செய்திருக்கான்னு வந்து பாருங்க...' பதற்றத்துடன் கூறினாள்.

தொடரும்......


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 04, 2014 1:35 pm

என்னவோ ஏதோ என்று, பதறிப் போய் எழுந்தவன், அவளைப் பின் தொடர்ந்து, வாசலுக்கு வந்து பார்த்தான். அப்போது தான், அவளுடைய ஆத்திரத்திற்கான காரணம் புரிந்தது.'இதோ பாருங்க... இனிமே, இந்த வீட்டில ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது. உடனே, வேற வீடு பாத்து குடி போறோம்...'என்றாள் கோபத்துடன்.

'என்ன சுதா... திடீர்ன்னு முடிவெடுத்தா எப்படி... நல்ல வீடா அமையணுமே... நான் வேணும்ன்னா இன்னிக்கே புரோக்கர்ட்ட சொல்லி வைக்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வீட்ட காலி பண்ணிடலாம்...'என்றான்.

'சரி சரி... நீங்க ஆபீசுக்கு போய்ட்டு வாங்க. சாயந்திரம் பேசிக்கலாம்...''வீட்டிற்கு ஏற்பாடு செய்துட்டீங்களா...' என்று கேட்டால், என்ன பதில் சொல்வது என்ற யோசனையோடு, ஆபீசிலிருந்து வீடு திரும்பியவனுக்கு, சுதா சொன்ன தகவல், ஆச்சரியமளித்தது.'நீங்க ஆபீசுக்கு போனதும், எங்க அண்ணனுக்கு போனப் போட்டு, நடந்ததையெல்லாம் சொன்னேன். நாம இடம் வாங்கிப் போட்டிருக்கோமே... அதுக்கு பக்கத்திலயே, ஒரு வீட்ட வாடகைக்கு பாக்க சொன்னேன். மதியமே, 'ஒரு வீடு ரெடியா இருக்குது, வந்து பாரு'ன்னு சொல்லிட்டாரு. நாளைக்கே, நாம ரெண்டு பேரும் போயி, அந்த வீட்டப் பாக்றோம்...' என்ற சுதாவின் முகத்தில், நிம்மதி தெரிந்தது.

'ஆமா... அங்க ஏன் பாக்கச் சொன்னே... புள்ளைங்க பள்ளிக்கூடம் போகணும்னா தூரமாச்சே...'
'இதோ பாருங்க... காரணம் இல்லாம, நான் அங்க வீட்ட பாக்கச் சொல்லல. நாம வாங்கிப் போட்டிருக்கிற இடத்தில, வீட்ட கட்டலாம்ன்னு முடிவு செய்துட்டேன். அதுக்கு, பக்கத்திலே குடியிருந்தாதானே, வீடு கட்டுறபோது, நமக்கு வசதியாக இருக்கும்...'அவள் ஒரு முடிவுக்கு வந்து விட்டாள் என்றால், அதை மாற்றுவது கடினம் என்பதை, அவன் அறிவான்.

'என்ன சுதா, நீ தானே, 'அந்த இடத்த அப்படியே வச்சிருந்து, பின்னால, அதை வித்து, குழந்தைகளோட மேல் படிப்புக்கு பயன்படுத்தலாம்'ன்னு சொன்னே...''நான் இல்லன்னு சொல்லலை. இப்போ போகப் போற வீட்டிலேயும், இந்த மாதிரி வேறு ஏதாவது பிரச்னை வராதுன்னு என்ன நிச்சயம்... அதனாலதான், நான் என் முடிவ மாத்திக்கிட்டேன்...'அப்படி, திடீரென்று முடிவெடுத்து கட்டிய வீட்டிற்குத் தான், இப்போது கிரகப்பிரவேசம் அழைப்பிதழ் கொடுக்கப் புறப்பட்டிருந்தனர்.
வாசு, டிரைவருக்கு, ஒரு வீட்டை அடையாளம் காட்டினான். கார் திடீரென குலுக்கலுடன் நிற்கவே, நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுதா, விழித்துக் கொண்டாள்.

''அதற்குள்ளவா உங்க அக்கா வீடு வந்திடுச்சி,'' என்றவள், முன்பு குடியிருந்த வீட்டின் முன், கார் நிற்பதைக் கண்டு அதிர்ந்தாள்.''எதுக்கு இப்போ இங்க வந்திருக்கீங்க,'' என்று கேட்டாள் கோபமாக.
''வா... பழைய வீட்டு ஓனருக்கு, பத்திரிக கொடுத்துட்டு வரலாம்,'' காரின், கதவைத் திறந்து கொண்டே கூறினான்.''உங்களுக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு... நாம பட்ட அவமானத்தை எல்லாம் மறந்துட்டீங்களா?''

வாசு, உதட்டின் நடுவில் விரலை வைத்து, 'டிரைவரின் முன், சண்டை போட வேண்டாமே' என்பது போல், சைகை செய்தான்.முகத்தில், எள்ளும் கொள்ளும் வெடிக்க, அவனை பின் தொடர்ந்தாள்.
வீட்டுக்கார அம்மா தான் அவர்களை வரவேற்றாள். சுதா வாயே திறக்கவில்லை; வாசு தான் பேசினான்...

''நாங்க புதுசா வீடு கட்டி, கிரகப்பிரவேசம் வச்சிருக்கோம்; மறக்காம வந்துருங்க,'' என்றவாரே, பத்திரிகை ஒன்றை உருவி, அந்த அம்மாவிடம் நீட்டினான்.''சார் இல்லைங்களா... வெளிய எங்கேயும் போயிருக்காரா?''அவன் கேட்டது தான் தாமதம், வீட்டுக்காரம்மாவின் கண்களில், 'பொலபொல'வென, கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

''அதையேன் கேட்கறீங்க... நீங்க வீட்ட காலி செய்துட்டு போன கொஞ்ச நாளையிலேயே, ஒரு சாலை விபத்தில, இறந்துட்டாரு. 'போஸ்ட்மார்ட்டம் செய்த பாடிய, வீட்டுக்கு கொண்டு வரக்கூடாது'ன்னு உறவுக்காரங்க சொல்லிட்டதால, அப்படியே சுடுகாட்டுக்கு எடுத்துட்டுப் போய்ட்டோம். உங்க விலாசம் தெரியாததால, சொல்லியனுப்ப முடியல.''

''கேட்கறதுக்கே ரொம்ப வருத்தமா இருக்கு,'' என்றவன், ''சரிங்கம்மா அவசியம் வந்துடுங்க,'' என்று கூறி, புறப்பட்டான். சுதா மவுனமாக, அவனை பின் தொடர்ந்தாள்.அன்று முழுவதும், சுதா, அவனிடம் பேசவே இல்லை. பிள்ளைகள் சாப்பிட்டு தூங்க போன பின், இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர். அப்போதும், அவள் பேசவில்லை.சாப்பிட்டு முடித்து, சோபாவில் உட்கார்ந்த வாசு, அவனே பேச்சை ஆரம்பித்தான்... ''என்ன சுதா... என் மேல உள்ள கோபம் இன்னும் தீரலையா?''

''இக்கட்டான சூழ்நிலையில, நம்ம வயிறெரிய, வீட்ட காலி செய்யச் சொன்னவங்களுக்கு, மொத பத்திரிகைய கொடுத்தா, கோபப்படாம என்ன செய்வாங்க... கடைசியிலே பாத்தீங்களா... அந்த ஆளு, உடம்பக்கூட வீட்டுக்கு கொண்டு வரலையாம்!''

''இதோ பாரு சுதா... நம்மள அவமானப்படுத்தினவங்க, காயப்படுத்தினவங்களை எல்லாம் நாம எப்பவும் மனசில வச்சிட்டிருந்தோம்ன்னா, நமக்குத் தான், 'டிப்ரஷன்' ஏற்படும். கடல்ல ஏற்படுற, 'டிப்ரஷன்' புயலாகவும், சுனாமியாகவும் உருவாகுற மாதிரி, மனசிலே ஏற்படுற, 'டிப்ரஷன்' வியாதிகள உருவாக்குதுன்னு ஆராய்ச்சியாளருங்க சொல் றாங்க. இந்த, 'டிப்ரஷன்'னால எத்தனையோ பேர் தற்கொலை கூட செய்துக்கிறாங்க... அதனால, எந்த பிரச்னையையும் பாசிட்டிவா எடுத்துக்கணும்.''

'' நீங்களும் உங்க பாசிட்டிவ் அப்ரோச்சும்,'' என்று சலித்துக் கொண்டாள் சுதா.
''சரி, இப்படி உட்கார். நான் உன்ன ஒண்ணு கேட்றேன் பதில் சொல்லு,'' என்றவாரே, அவள் கையைப் பிடித்து, தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.

''எத்தனை நாளைக்கு, இப்படி வாடகை வீட்டில இருந்து அல்லாடப் போறீங்க, வாங்கிப் போட்டிருக்கிற இடத்தில, வீட்டக் கட்ட வேண்டியது தானேன்னு நம் சொந்தக்காரர்களும், நண்பர்களும் சொன்னப்போ, நமக்கு வீடு கட்டணும்ன்னு தோணிச்சா... இல்லையே!
''அன்னிக்கு, அந்த ஆளு அப்படி நடந்துக்கிட்டதாலதானே, நீ கோபம் அடைஞ்சு, வீட்ட கட்டியே ஆகணும்ன்னு முடிவெடுத்தே... இதோ, இப்போ வீடும் ரெடியாயிடிச்சு; நாமளும் குடி போகப் போறாம். இனிமே வாடகை வீடு தொல்லையே, நமக்கு இல்லை.

''இப்போ சொல்லு... நாம வீடு கட்டியதற்கு, தூண்டுகோலாக அமைஞ்சது, அந்த ஆளோட நடவடிக்கை தானே காரணம். அவரை அறியாமலேயே, நமக்கு நன்மை செய்திருக்காரு. அதனால தான், அவருக்கு மொத பத்திரிகை கொடுக்கணும்ன்னு, என் மனசுக்குப்பட்டது. நான் செஞ்சது தப்பா?''
வாசு சொல்ல சொல்ல, அவன் வாதத்தில் நியாயம் இருப்பதை, உணர ஆரம்பித்தாள் சுதா.

''ஆமாங்க, நீங்க சொல்றதும் வாஸ்தவம் தான். அவரு நமக்கு நன்மை தான் செஞ்சிருக்கார்ன்னு, இப்போது புரியுது. நீங்க பாத்த கோணத்தில, நான் பாக்கத் தவறிட்டேன். உங்க மனச புரிஞ்சுக்காம, உங்ககிட்ட கோபமா இருந்ததுக்கு மன்னிச்சுடுங்க,'' சுதாவின் குரலில் நெகிழ்ச்சி தெரிந்தது.
''என்னம்மா இது... நமக்குள்ள என்ன மன்னிப்பு! 'என் மேல் கோபம் கொள்ள இவளுக்கு உரிமை இல்லையா'ன்னு உன் கோபத்தை, பாசிட்டிவாகத்தான் எடுத்துக்கிட்டேன்,'' என்றவனின் கரத்தை, ஆதரவாகப் பற்றினாள் சுதா.

ரா.சந்திரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 05, 2014 12:07 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றீமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Apr 05, 2014 4:18 pm

அருமையான கதை...கதை உணர்த்தும் செய்தி அனைவரும் சிந்திக்கவேண்டிய விடயம்.

பகிர்வுக்கு நன்றிகள் அம்மா.. கோணம்! 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக