புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_m10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 
62 Posts - 57%
heezulia
 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_m10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_m10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_m10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_m10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 
104 Posts - 59%
heezulia
 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_m10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_m10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_m10 உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 1:50 am


உயிருக்கு உயிரான நண்பர்களே, நேற்று இரவு ரொம்பவும் கொடுமை. எத்தனையெத்தனை மக்கள்! குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை; எல்லோரும் அப்பாவிப் பொதுமக்கள்; படுகாயமடைந்து, உறுப்புகளை இழந்து, ரத்தம் வடிய நடுங்கிக்கொண்டு, செத்துக்கொண்டு வண்டிகளில் மந்தைமந்தையாக ஏறிச்சென்று… அப்பப்பா! இப்படியொரு நிலைக்குத்தான் இறுதியில் கொண்டுவந்து விட்டிருக்கிறது இஸ்ரேலியப் படையெடுப்பு.

இங்கே அவசரச் சிகிச்சை ஊர்திகளில் பணியாற்றுபவர்கள்தான் நிஜமான வீரர்கள். காஸாவிலுள்ள எல்லா மருத்துவமனைகளிலும் நேரங்காலம் பார்க்காமல் 12-24 மணி நேரம் கூடப் பணியாற்றுகின்றனர். கொடூரங்கள் நிரம்பிய பணியின் சுமையினாலும் களைப்பினாலும் அவர்களுடைய முகங்கள் சாம்பல் பூத்துப்போயிருக்கின்றன. இத்தனைக்கும் ஷிஃபா மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்குக் கடந்த நான்கு மாதங்களாகச் சம்பளமே வரவில்லை. இருந்தும், படுகாயமுற்றவர்களிடம் அக்கறை காட்டுவதிலும், இன்னாருக்கு இன்ன சிகிச்சை என்று தீர்மானிப்பதிலும், எப்படிப்பட்ட வீரர்கள் அவர்கள்! அதுமட்டுமல்லாமல், எல்லாவற்றையும் நிதானிக்க முயல்கிறார்கள் அவர்கள்: அதாவது, எண்ணற்ற மனித உடல்கள், வெவ்வேறு அளவுகள், கைகால்கள், நடப்பவர், நடக்காதவர், சுவாசிப்பவர், சுவாசிக்க இயலாதவர், நிற்காமல் ரத்தம் வெளியேறிக்கொண்டிருப்பவர், ரத்தப்போக்கு நின்றிருப்பவர்கள் என்று மனிதர்களின் - ஆம் மனிதர்கள்தான் - பெரும் குழப்பம், கூச்சலுக்கு இடையில் அந்த வீரர்கள் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முயல்கிறார்கள். மனிதர்கள்… மனிதர்கள்… மனிதர்கள்! ஆனால், ‘உலக ராணுவங்களிலேயே மிகவும் நியாயமாக நடந்துகொள்ளும் ராணுவம்(!)' அந்த மனிதர்களை விலங்குகள்போல் மற்றுமொரு முறையும் நடத்தியிருக்கிறது.

காயமுற்றவர்களிடம் நான் கொண்டிருக்கும் மதிப்பு எல்லையற்றது; வலி, வேதனை, அதிர்ச்சி ஆகியவற்றுக்கு இடையிலும் எவ்வளவு மனஉறுதி அவர்களுக்கு! அதேபோல், மருத்துவ ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரையும் எவ்வளவு மெச்சினாலும் தகும்! பாலஸ்தீனர்களின் மனஉறுதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்து பணியாற்றியது எனக்கு வலிமையைத் தருகிறது. இருப்பினும், சில சமயம் எனக்கு ஓவென்று கத்தலாம் போன்று தோன்றும், யாரையாவது இறுக்கிக் கட்டியணைத்துக்கொள்ளத் தோன்றும், அழத் தோன்றும், ரத்தத்தில் தோய்ந்திருக்கும் குழந்தையொன்றின் சருமத்தையோ முடியையோ முகர்ந்து பார்க்கத் தோன்றும், எல்லோரும் ஒருவருக்கொருவர் அரவணைத்துக்கொள்வதன்மூலம் எங்களைக் காத்துக்கொள்ளத் தோன்றும். ஆனால், இதையெல்லாம் செய்ய எங்களால் முடியாது, அவர்களாலும் முடியாது.

ஐயோ, சாம்பல் பூத்த முகங்களே! போதும்! மேலும்மேலும் படுகாயமடைந்து, உறுப்புகளை இழந்து, ரத்தம் வடிய வந்துகொண்டிருப்பவர்களின் கூட்டத்தை இனியும் தாக்குப்பிடிக்க முடியாது. ஏற்கெனவே, ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறது அவசரச் சிகிச்சை அறை. எங்கெங்கும் ரத்தத்தில் நனைந்த கட்டுத்துணிகள், ரத்தம் சொட்டச்சொட்டக் குவியலாகக் கிடக்கின்றன. ஐயோ! சுகாதாரப் பணியாளர்கள் ரத்தத் துணிகளையும், தூக்கியெறியப்பட்ட ரத்தக் குப்பைகளையும், கொட்டிக் கிடக்கும் முடி, ஆடைகள், மருந்து செலுத்தும் குழாய்கள் என்று மரணத்தின் மிச்சங்களையெல்லாம் உடனுக்குடன் கூட்டி அள்ளுகிறார்கள். ஆனால், இவையெல்லாம் மறுபடியும் மறுபடியும் நிகழும். எல்லாவற்றையும் ஆரம்பத்திலேயிருந்து செய்ய வேண்டும். 24 மணி நேரத்துக்குள் 100 பேருக்கு மேல் ஷிஃபா மருத்துவமனையை நாடி வந்திருக்கிறார்கள். எல்லா வசதிகளையும் கொண்ட பெரிய மருத்துவமனையால் இந்த எண்ணிக்கையை எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், இங்கோ, மின்சாரம், நீர், மருந்து மாத்திரைகள், கட்டுப்போடுவதற்கான துணிகள், ஊசிகள், தூய்மைச் சாதனங்கள், அறுவைச் சிகிச்சை மேஜைகள், உபகரணங்கள், உடலியக்கக் கண்காணிப்புக் கருவிகள் என்று எதுவுமே இல்லை. அருங்காட்சியகமாக மாறிவிட்ட முற்காலத்து மருத்துவமனைகளிலிருந்து கொண்டுவரப்பட்டவைபோல, துருப்பிடித்தும் குலைந்தும் போய்விட்டன எல்லாம். ஆனால், இந்த ஹீரோக்கள் (பணியாளர்கள்) இதைப் பற்றியெல்லாம் குறைபட்டுக்கொண்டிராமல், அசாதாரணமான மனஉறுதியுடன், போர்வீரர்களைப் போல, இருப்பவற்றைக் கொண்டு எல்லாவற்றையும் சமாளிக்கிறார்கள்.

எனது படுக்கையில் இருந்தபடி இதையெல்லாம் நான் உங்களுக்கு எழுதும்போது என் கண்களில் நீர் பெருகுகிறது. கதகதப்பான கண்ணீர், ஆனால் வலியாலும் வேதனையாலும் கோபத்தாலும் பயத்தாலும் எழும் பயனற்ற கண்ணீர். ஐயோ, இதெல்லாம் நடக்க வேண்டுமா?

இப்போது இஸ்ரேலின் போர் இயந்திரம் தனது கொடூரமான சிம்பனியை இசைக்க ஆரம்பிக்கிறது; கரைகளில் இருக்கும் ராணுவப் படகுகளிலிருந்து பீரங்கிகள் சரம்சரமாகக் குண்டுகளைத் துப்புகின்றன. சீறும் எஃப்-16 ரக போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள்… இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை, அல்லது அமெரிக்காவால் வழங்கப்பட்டவை.

மிஸ்டர் ஒபாமா உங்களுக்கு இதயம் இருக்கிறதா?

ஒரே ஒரு நாள் ஷிஃபா மருத்துவமனைக்கு வரும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். வந்து, சுகாதாரப் பணியாளர் வேடத்தில் இங்கே ஒரு நாள் மட்டும் இருந்து பாருங்கள்!

அப்படி இருந்தீர்களென்றால் நிச்சயம் வரலாறே மாறிவிடும் என்று 100% நம்புகிறேன்.

இதயமும் அதிகாரமும் உள்ள யாரும், இந்த ஷிஃபா மருத்துவமனையை விட்டுச்செல்லும்போது ‘பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துவேன்' என்ற முடிவை எடுக்காமல் இங்கிருந்து விடைபெற முடியாது.

ஆனால், இதயமற்றவர்கள், ஈவிரக்கமற்றவர்கள் பல்வேறு கணக்குகளைப் போட்டுப்பார்த்துவிட்டு, காஸா மேல் மற்றுமொரு தாக்குதலுக்குத் திட்டமிட்டுவிட்டார்கள்.

இதோ இரவு நெருங்குகிறது. இந்த இரவில் ரத்த ஆறு தொடர்ந்து ஓடியபடி இருக்கும். ஆம், மரண ஆயுதங்களை அவர்கள் முருக்கேற்றுவது எனக்குக் கேட்கிறது.

தயவுசெய்து, உங்களால் முடிந்த ஏதாவது செய்யுங்கள். இது, நிச்சயம் தொடரக் கூடாது.

- மேட்ஸ் கில்பெர்ட், நார்வே நாட்டைச் சேர்ந்த மயக்க மருந்து மருத்துவர், பாலஸ்தீனப் போராட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக, பல்வேறு தருணங்களில் மருத்துவச் சேவை புரிந்திருக்கிறார், புரிந்துவருகிறார்.

தமிழில்: ஆசை


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 26, 2014 6:56 pm

மிக வேதனையாக உள்ளது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக