புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் Poll_c10விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் Poll_m10விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் Poll_c10 
42 Posts - 63%
heezulia
விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் Poll_c10விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் Poll_m10விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் Poll_c10விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் Poll_m10விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் Poll_c10விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் Poll_m10விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 5:33 am


எதிர்பாராத நேரத்தில் நடக்கும் விபத்துதான் ஒருவரின் வாழ்க்கையை திக்குத்தெரியாமல் திசைமாற்றிவிடும். கை இழந்து, கால் ஒடிந்து என்று விபத்தில் சிக்கி மீண்டவர்களைக் கேட்டால், அந்தக் கோரத்தின் வலி புரியும். அந்தப் பாதிப்பில் இருந்து மீளாமல் இருப்பவர்களும் ஏராளம்.

சாலைகளில் நாம் கடந்து செல்லும்போது எத்தனையோ விபத்துகளை பார்த்திருப்போம். விபத்தில் சிக்கித் தவிப்பவர்களில் எத்தனை பேரை நாம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்? விபத்தில் சிக்கியவர்களை செல்போனில் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்வதில் காட்டும் அக்கறையை, அவர்களுக்கு உதவுவதில் காட்டியிருக்கிறோமா? அதுவும் விபத்தில் சிக்கியது நடிகர் என்றால், இன்னும் கேட்கவே வேண்டாம். அவருடன் அந்த சூழ்நிலையிலும் போட்டோ எடுப்பதில் ஆர்வம் காட்டும் மனிதர்களே அதிகம்! அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் நடிகர் பிரகாஷ்ராஜ்!

கடந்த 12-ம் தேதி ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரில் பயணித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். அப்போது மாதாபூர் மேம்பாலம் அருகில் சிக்னலில் பிரகாஷ்ராஜ் கார் நின்றது. பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று அவரது கார் மீது பயங்கரமாக மோதியது. பக்கத்தில் நின்ற ஆட்டோ மீதும் பேருந்து இடிக்க... அந்த ஆட்டோவும் கார் மீது மோதியது. 'உள்ளே இருப்பவர்கள் அவ்வளவுதான்’ என்று சொல்லும் அளவுக்கு பெரிய சப்தம். பெரிய அளவில் நசுங்கிவிட்ட காரில் இருந்து வெளியே வர பிரகாஷ்ராஜ் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார். உடனே கூட்டம் கூடிவிட்டது. காருக்குள் இருப்பது பிரகாஷ்ராஜ் என்றதும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அவரை மீட்க யாரும் உதவாமல் சுற்றி நின்று போட்டோ எடுப்பதிலேயே ஆர்வம் காட்டியுள்ளனர். காலில் அடிபட்ட வேதனையுடன் இருந்த பிரகாஷ்ராஜுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. காயம் லேசானதுதான். நடிகர் என்றதும் அவரை ரசிக்க ஆரம்பிக்கும் மனோபாவம், பார்வையாளர்களைத் தொற்றிக்கொண்டது. மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற பிறகு தனது மனவேதனையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

என்ன ஆச்சு? பிரகாஷ்ராஜிடம் கேட்டோம்.

''அந்த விபத்தில் இருந்து உயிர் தப்பியது கடவுள் புண்ணியம்தான். ஆட்டோவில் வந்த ஒரு குடும்பம் மொத்தமாக சாலையில் தூக்கி வீசப்பட்டு இருந்தது. காயங்களுடன் பலர் உயிருக்குப் போராடினார்கள். அவர்களுக்கு அங்கிருந்த இளைஞர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. அவர்களை படம் எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். அவர்களின் மனிதாபிமானம் இல்லாத செயலைப் பார்த்து நான் வேதனை அடைந்தேன். என்ன ஆச்சு நமக்கு? எங்கே போகிறோம் நாம்? வாழ்க்கையின் யதார்த்தத்தைப் பார்த்து நொறுங்கிப்போனேன்.

வாழ்க்கையில் நடக்கும் துன்பங்களை எல்லாம் பார்த்து சிரிக்கிறார்கள். அந்தத் துன்பம் அவர்களுக்கு வர எவ்வளவு நாள் ஆகும்? அடுத்தவர் வீட்டுக்குள் எட்டிப்பார்த்துச் சிரிக்கும் புத்தி மனிதனுக்கு எப்படி வந்தது? இதற்குத்தானா டெக்னாலஜி வளர்ந்தது? அடுத்தவன் துயரத்தைப் படம் பிடித்துதான் அதில் நாம் சந்தோஷப்படணுமா?

சந்தோஷமான தருணங்களைப் படம் பிடிங்க... பார்த்து சந்தோஷப்படுங்க. அடுத்தவன் கஷ்டப்படும்போது கைகொடுங்க. அதுதான் மனிதாபிமானம். சொல்லப்போனா, அன்றைக்கு அந்தச் சம்பவத்தை படம் எடுத்த எல்லோரும் காலேஜ் படிக்கிற பசங்க. எனக்கு கோபம் வந்தது. 'ரோடு பப்ளிக் பிராப்பர்ட்டி. இங்கே படம் எடுக்க எவன் அனுமதியும் தேவை இல்லை’னு நினைச்சு படம் பிடிக்கிறாங்கபோல. மனுஷங்க பப்ளிக் பிராப்பர்ட்டி இல்லையே! மொத்தத்துல மனிதநேயம் என்பதை எல்லோருமே மறந்துட்டாங்க. அதைத்தான் நான் திரும்பத் திரும்ப யோசிக்கிறேன்!'' என்று வருத்தத்துடன் சொன்னார்.

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் மட்டுமே தெரியும்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி



விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 20, 2014 6:22 am

முகநூல்ல ஏற்றுமதி பண்ணணும்ல அதுக்கு தான், எல்ஆரும் படம் எடுக்குராங்க.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 12:31 pm

பிரகாஸ்ராஜ் சொன்ன ஒவ்வொரு வரிகளும் மனதை வேதனைப் படுத்தும் உண்மை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 20, 2014 1:02 pm

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் மட்டுமே தெரியும்!

உண்மை!



விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 20, 2014 1:08 pm

சிந்திக்க வேண்டிய உண்மை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக