புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10 
64 Posts - 50%
heezulia
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுப்பூசி ரகசியங்கள்-தொடர்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Aug 29, 2014 9:23 pm

தடுப்பூசி ரகசியங்கள்-1
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P3_6a
நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்!
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P36
உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் சிக்கி, இவை உண்டாக்கும் நோய்களுக்கு ஆளாகி, பல ஆபத்துகளைச் சந்தித்திருப்போம். ஆனால், மனித இனத்துக்கே கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம், 'தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்ற தற்காப்புப் படைதான்.

நாம் உறங்கினாலும் இந்தத் தற்காப்புப் படை உறங்குவது இல்லை; இதற்கு 24 மணி நேரமும் நம்மைக் 'காவல் காக்கும்’ வேலைதான். நாட்டைக் காக்கின்ற ராணுவம்போல், இது நம் உடலைக் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் 'கேம்ப் ஆபீஸ்’. ரத்த வெள்ளை அணுக்கள்தான் தளபதிகள். 'T’ அணுக்கள், 'B’ அணுக்கள், 'மேக்ரோபேஜ்’ அணுக்கள், 'எதிர் அணுக்கள்’ (Antibodies) என்று பலதரப்பட்ட சிப்பாய்கள் இந்தத் தற்காப்புப் படையில் பணிபுரிகிறார்கள்.  
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P36a
ரத்தக்குழாய்களும், ரத்தக்குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க்குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள். சரி, யாருடன் யுத்தம்? கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகள் என்று சொன்னோமல்லவா? அவற்றுடன்தான் யுத்தம். இந்தக் கிருமிகளுக்குள்ளும் பலவிதங்கள் உண்டு. சுருக்கமாகப் பிரித்தால், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஆகிய நான்கு வகைகளில் அவை அடங்கும்.

இந்த 'எதிரிகள்’ நம் உடலுக்குள் நுழையும்போது, உடலின் தற்காப்புப் படை தன்னிடமுள்ள 'சிப்பாய்’களை அனுப்பி, யுத்தம் செய்யும். சில சிப்பாய்கள் இந்த எதிரிகளைக் கொன்றுவிடுவார்கள். சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தைத் துப்புரவு செய்வார்கள். இன்னும் சில சிப்பாய்கள் இந்த எதிரிகளை நினைவில் வைத்துக் கொண்டு, இனியும் இதுபோன்ற எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்று வேவு பார்த்துத் 'தளபதி’க்குத் தகவல் அனுப்புவார்கள். இப்படி, நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப் படை.

இவ்வாறு நம் உடல் மேல் படையெடுக்கும் பல வகைப்பட்ட கிருமிகளை அல்லது உடலுக்குத் துன்பம் தரும் எந்த ஒரு வெளிப்பொருளையும் எதிர்த்துத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் உடலில் தற்காப்புப் படை தருகின்ற சக்திக்கு 'நோய் எதிர்ப்பு சக்தி’ அல்லது 'நோய்த் தடுப்பாற்றல்’ (immunity) என்று பெயர்.

நோய் எதிர்ப்பு சக்தியின் வகைகள்:

நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Innate Immunity ), 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Acquired immunity) என இரண்டு வகைகள் உண்டு. 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது. 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது பிறவியில் அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் செயற்கை முறையில் தூண்டும்போது கிடைப்பது. இது, நாம் பிறந்த பிறகு, நம் வாழும் காலத்தில் பெறப்படுவது. இது எப்படிச் சாத்தியமாகிறது? 'முள்ளை முள்ளால் எடுக்கிற வித்தை’தான் இங்கு கைகொடுக்கிறது. ஒரு நோய்க்கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.

தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் (Oral vaccines) மூலம் வீரியம் குறைந்த நோய்க்கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக 'எதிர் அணுக்கள்’ உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழித்துவிடும். இதன் பலனாக, அந்த நோய் நம்மை அண்ட முடியாது. இதுதான் தடுப்பூசிகள் வேலை செய்வதற்கான அடிப்படைத் தத்துவம். தடுப்பூசியின் மகிமைகளைப் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.

பொதுநல மருத்துவரான டாக்டர் கு.கணேசன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர்.  ஆங்கில மருத்துவச் செய்திகளை எளிமையாக எழுதுவது இவருக்குக் கைவந்த கலை. இதுவரை 28 மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழில் தயாரிக்கும் 'மருத்துவக் கலைச்சொல் பேரகராதி’ பணியில் வல்லுனர் குழு உறுப்பினராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் வல்லுனர் குழு உறுப்பினராகவும் உள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 'மகாகவி பாரதி அறிவியல் தமிழ் விருது’ வழங்கி சிறப்பித்துள்ளது. இவருக்குக் கிடைத்துள்ள இலக்கியப் பீடம் விருதும், இந்திய மருத்துவக் கழகம் வழங்கியுள்ள 'எழுத்துச் சாதனையாளர் விருது’ம் இவருக்குப் புகழ் சேர்க்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியம் குறித்து பெற்றோரிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதில் அதிக அக்கறை உள்ளவர். அதன் வெளிப்பாடுதான் இந்தத் தொடர்!

- போர் ஓயாது...

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Aug 29, 2014 9:25 pm

தடுப்பூசி ரகசியங்கள் - 2

தடுப்பூசியின் அவசியங்கள்!

தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P36A


உலகில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வரை ஒரு நோய்க்கான எதிர்ப்பு சக்தி என்பது, அந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அவருக்கு எதிர்ப்பு சக்தி பெறப்படுவதாக இருந்தது. உதாரணத்துக்கு... சின்னம்மை ஒருவருக்கு வந்து குணமான பிறகு, அந்த நோய்க்குரிய எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுவதால், அவரது வாழ்நாளில் அந்த நோய் மீண்டும் வருவது இல்லை. ஆனால், நோய் ஏற்படும்போது அவர் நோயின் தன்மையால் துன்பப்படுவார். அவருடன் நெருங்கிப் பழகும் குடும்பத்தினர்கள், நண்பர்கள் அல்லது மாசடைந்த சுற்றுச்சூழல் வழியாக மற்றவர்களுக்கும் நோய் பரவ வழி உண்டு. நோய் தீவிரமடையும்போது, அந்த நபர் உயிரிழக்கவும் நேரலாம்.

இந்த நிலைமை, 1796-ம் ஆண்டில், 'எட்வர்ட் ஜென்னர்’ என்ற இங்கிலாந்து மருத்துவர், பெரியம்மை நோய்க்கு (Small pox) முதல்முறையாகத் தடுப்பூசியை அறிமுகப்படுத்தி, அந்த நோயைக் கட்டுப்படுத்திய பிறகு மாறிவிட்டது. ஒருவர், குறிப்பிட்ட நோய்க்கான தடுப்பூசியை முறையாகப் போட்டுக்கொண்டால், அந்த நோய்க்கு உண்டான எதிர்ப்பு சக்தி அவருக்குக் கிடைத்துவிடுகிறது; அதன் பிறகு, அவருக்கு அந்த நோய் வருவது இல்லை என்பது உறுதியானது. இதன் மூலம் தடுப்பூசிகளின் மகிமையை உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கியது.

உடலுக்கு செயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடியவை தடுப்பூசிகள்/தடுப்பு மருந்துகள். இவை ஒருவருக்கு நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே, அந்த நோய்க்குரிய எதிர்ப்பு சக்தியைக் கொடுத்துவிடுகின்ற ஆற்றல் பெற்றவை. இதன் மூலம் அந்த நோயினால் ஏற்படும் துன்பங்கள் அவருக்கு உண்டாக வாய்ப்பே இல்லை. ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது, அவருக்கு நோய் வராது; அதனால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாது.

மக்கள் தடுப்பூசிகளைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்பு உலக அளவில் அம்மை நோய்கள், போலியோ போன்ற கடுமையான தொற்றுநோய்களின் தாக்கம் குறைந்து இறப்பு விகிதமும் குறைந்தது. குறிப்பாக, பெரியம்மை நோயை உலகிலிருந்தே விரட்டிவிட்டோம். இந்தியாவில், போலியோவை ஒழித்துவிட்டோம். சில தடுப்பூசிகள் தொற்று நோய்களைத் தடுப்பதோடு, புற்றுநோய்கள் வராமலும் தடுக்கின்றன. 'ஹெப்படைட்டிஸ் பி’ தடுப்பூசி கல்லீரல் புற்றுநோயையும், ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயையும் தடுக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்தப் பலனாக, மக்களின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துள்ளது.

குறிப்பிட்ட சமூகத்தில் உள்ளவர்களில் பெரும்பான்மையோர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால், அந்தச் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் அந்த நோய் ஏற்படும் ஆபத்து குறைந்து விடுகிறது. இதற்குச் 'சமூக நோய் பாதுகாப்பு’ (Herd Immunity) என்று பெயர்.

'குழந்தைக்கு இரண்டு வயது முடியும்போது, முறைப்படி தரவேண்டிய தடுப்பூசிகளைப் போட்டுவிட்டால், அந்தக் குழந்தைக்கு 15 வகைப்பட்ட கடுமையான குழந்தைப்பருவ நோய்கள் ஏற்படுவது இல்லை. குழந்தையின் வயதுக்கேற்ற வளர்ச்சியும் சரியாக உள்ளது' என்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கி, நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக்கொள்வதற்கும், நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் மிக எளிய வழி, தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதுதான்!

தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P36b

டீன் ஏஜ் மற்றும் முதியவர்களுக்கும் தடுப்பூசி!

குழந்தைகள் மட்டுமின்றி இளைய வயதினரும் முதியோரும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயம்’ என்று அறிவுறுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம். 11 - 12 வயதில் ஆண், பெண் இரு பாலரும் ஹெச்.பி.வி தடுப்பூசியையும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சின்னம்மை, அக்கி அம்மை, நிமோனியா, டிப்தீரியா, ஃப்ளு, கக்குவான் இருமல், டெட்டனஸ் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

தடுக்கப்படும் நோய்கள்

1. தட்டம்மை – Measles

2. சின்னம்மை – Chickenpox

3. அக்கி அம்மை – Herpes zoster

4. அம்மைக்கட்டு – Mumps

5. போலியோ – Poliomyelitis

6. காசநோய் – Tuberculosis

7. காலரா – cholera

8. டிப்தீரியா – Diphtheria

9. கக்குவான் இருமல் Pertusis

10. டெட்டனஸ் – Tetanus

11. இன்ஃபுளூயன்சா – Influenza

12. ஹெப்படைட்டிஸ் ஏ, பி – Hepatitis-A, Hepatitis-B

13. ருபெல்லா Rubella

14. டைபாய்டு காய்ச்சல் – Typhoid Fever

15. நிமோனியா – pneumonia

16. ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு –Rotavirus Diarrhoea

17. ரேபீஸ் – Rabies

18. மூளை உறைக் காய்ச்சல் – Encephalitis

19. மூளைக் காய்ச்சல் – Meningitis

20. கர்ப்பபைவாய் புற்றுநோய் -Cervical cancer

- போர் ஓயாது

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Aug 29, 2014 9:28 pm

தடுப்பூசி ரகசியங்கள்! - 3
தடுப்பூசி என்னும் தாழ்ப்பாள்

தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P50
தடுப்பூசி என்பது எப்படி உருவாக்கப்படுகிறது? இதைத் தெரிந்துகொண்டால், அது எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது சுலபம். 'முள்ளை முள்ளால் எடுப்பது’ என்ற சொலவடையை அடிக்கடி பயன்படுத்துவோமே, தடுப்பூசித் தயாரிப்பும் முள்ளை முள்ளால் எடுக்கிற வேலைதான். ஒரு தடுப்பூசியை உயிருள்ள, வீரியம் குறைந்த நோய்க் கிருமிகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அல்லது அழிக்கப்பட்ட கிருமிகளை முழுவதுமாகவோ, ஒரு பகுதியாகவோ பயன்படுத்தியும் தயாரிக்கலாம். இந்த மூலக்கூறுகளை 'ஆன்டிஜென்’ (Antigen) என்கிறோம். இவைதான் ரத்தத்தில் 'எதிர் அணு’க்களின் (Antibodies) உற்பத்தியைத் தூண்டுகின்றன. இந்த எதிர் அணுக்கள் உடலுக்குள் நுழையும் கிருமிகளுடன் போராடி, நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகின்றன. ஒரு தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் அது 'தடுப்பூசி’ (Injectable Vaccine). அதையே சொட்டு மருந்தாக வாய்வழி செலுத்தினால், அது 'வாய்வழித் தடுப்பு மருந்து’ (Oral Vaccine).

தடுப்பு மருந்துகளில் உள்ள கிருமிகள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். இந்தக் கிருமிகள் உடலுக்கு நோய் ஏற்படுத்தும் அளவுக்கு வீரியமுள்ளவை அல்ல. ஆனால் நம் தடுப்பாற்றல் மண்டலம், இந்தக் கிருமிகள் உடலில் நோய்களை உண்டாக்கிவிடக் கூடாதே என்று எச்சரிக்கையாக இருந்து, எதிர் அணுக்களை உற்பத்திசெய்து, நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. ஆக மொத்தம், ஓர் அலாரம் அடிக்கும் வேலையைச் செய்வதுதான் இந்தக் கிருமிகளின் வேலை.

ஒற்றைகூட்டுத் தடுப்பூசி:

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் ஒரே ஒரு ஆன்டிஜெனை மட்டும் பயன்படுத்தி, தடுப்பூசி தயாரித்தனர். இந்த வகைத் தடுப்பூசிக்கு 'ஒற்றைத் தடுப்பூசி’ (Single vaccine) என்று பெயர். இந்தத் தடுப்பூசி மூலம், குறிப்பிட்ட ஒரு நோய்க்கான எதிர்ப்பு சக்தியை மட்டுமே பெற முடிந்தது. உதாரணமாக டைபாய்டு தடுப்பூசி. தற்போது உள்ள அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் ஒரே தடுப்பூசியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்டிஜென்களைப் பயன்படுத்தி, ஒரே நேரத்தில் பல நோய்களைத் தடுக்கும் வகையில் தடுப்பூசிகளைத் தயாரிக்கின்றனர். இந்த வகைத் தடுப்பூசிக்குக் 'கூட்டுத் தடுப்பூசி’ (Combination vaccine) என்று பெயர். பைவேலன்ட், டிரைவேலன்ட், டெட்ராவேலன்ட், பென்டாவேலன்ட் தடுப்பூசி எல்லாம் இதற்கான உதாரணங்கள்.

கூட்டுத் தடுப்பூசியின் நன்மைகள்:

தனித்தனியாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படும் போது, உடலில் பல இடங்களில் தடுப்பூசிகளைக் குத்தவேண்டியது வரும். கூட்டுத் தடுப்பூசியைப் பயன்படுத்தும்போது குத்தப்படும் இடங்களையும், வலியையும் குறைக்கலாம். ஒற்றைத் தடுப்பூசியைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு தடுப்பூசிக்கும் தனித்தனியாக மருத்துவமனைக்குச் சென்றுவர வேண்டும். கூட்டுத் தடுப்பூசியால் மருத்துவமனைக்குச் சென்று வரும் பயணங்களையும் குறைக்க முடியும். பணச் செலவும் குறையும்.

முதன்மைத் தடுப்பூசி (Primary vaccine):

ஒருவருக்கு முதல்முறையாகச் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு 'முதன்மைத் தடுப்பூசி’ என்று பெயர். இது 24 மணி நேரத்திலிருந்து இரண்டு வாரங்களுக்குள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கத் தொடங்கிவிடும். அதே நேரத்தில், நான்கு வாரங்கள் ஆகும்போது, எதிர்ப்பு சக்தியின் அளவு சிறிது குறையத் தொடங்கும். ஆகவே, மீண்டும் அதே தடுப்பூசியைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் செலுத்த வேண்டும். இப்படி, உடலுக்குத் தேவையான அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதற்காக மீண்டும் செலுத்தப்படுகிற தடுப்பூசிக்கும் 'முதன்மைத் தடுப்பூசி’ என்றுதான் பெயர். வீட்டுக்குச் சரியான காவலாளி அமையும் வரை ஒருவர் மாற்றி ஒருவர் எனக் காவலாளிகளைப் பணியில் அமர்த்துவதைப் போலதான் இதுவும்.

ஊக்குவிப்புத் தடுப்பூசி (Booster vaccine):

சில தடுப்பூசிகளை முதன்மைத் தடுப்பூசியாகப் பல முறை போட்ட பிறகும்கூட குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த நோய்களுக்குரிய எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். அந்த நேரத்தில், மீண்டும் அதே தடுப்பூசி போடப்பட வேண்டும். இதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்காக, மீண்டும் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு 'ஊக்குவிப்புத் தடுப்பூசி’ என்று பெயர். வீட்டில் காவலாளி இருப்பார். ஆனால், அவர் காவல் நேரத்தில் தூங்குவார். அப்போது அவரைத் தட்டி எழுப்புகிறோம். அதுமாதிரிதான் இது.

தடுப்பூசி வகைகள்

தடுப்பூசி தயாரிக்கப் பயன்படும் 'ஆன்டிஜென்’களைப் பொறுத்து தடுப்பூசிகள் ஒன்பது வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன;

உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசிகள் (LIve vaccines)

உயிரற்ற நுண்ணுயிரித் தடுப்பூசிகள் (Killed vaccines)

மொத்த செல் தடுப்பூசிகள் (Whole-cell vaccines)

பகுதிப் பொருள் தடுப்பூசிகள் (Fractional vaccines)

துணைப் பொருள் தடுப்பூசிகள் (sub unit vaccines)

நச்சு முறிக்கப்பட்ட தடுப்பூசிகள் (Toxoid vaccines)

தனிக் கூட்டுச் சர்க்கரைப்பொருள் தடுப்பூசிகள் (Pure polysaccharide vaccines)

இணைக் கூட்டுச் சர்க்கரைப்பொருள் தடுப்பூசிகள் (conjugate polysaccharide vaccines)

மறுசேர்க்கை டி.என்.ஏ. மரபணுத் தடுப்பூசிகள் (Recombinant DNA vaccines)

இனி ஒவ்வொரு தடுப்பூசியைப் பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்வோமா?

- போர் ஓயாது

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Aug 29, 2014 9:31 pm

தடுப்பூசி ரகசியங்கள்! - 4

தடுப்பூசி என்பது தமிழ் சூழலுக்குப் புதிய விஷயம் அல்ல. 'வெள்ளம் வரும் முன் அணை போடு’ என்பது காலங்காலமாய் நம் சூழலில் உலவிவந்த சொலவடைதான். தடுப்பூசி என்பது அந்தக் கருத்தாக்கத்தில் விளைந்த கருவிதான்.

தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P50a

குழந்தைக்கு உரிய காலத்தில் போடப்படும் தடுப்பூசி, பிற்காலத்தில் அந்தக் குழந்தையின் ஆரோக்கியத்தைக் காக்கும் அரணாக அமையும். பெரும் செலவையும் மன உளைச்சலையும் தவிர்க்கும். அதனால், தடுப்பூசி விஷயத்தில் அலட்சியம் கூடாது. செலவு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அரசாங்கமே, அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்களிலும் பெரும்பாலான ஊசிகளை இலவசமாகப் போடுகின்றது. பெற்றோராகிய நம்முடைய மிகப் பெரிய பொறுப்பு... உரிய காலத்தில் அவற்றை எல்லாம் குழந்தைகளுக்குப் போடுவது மட்டும்தான்.

பி.சி.ஜி தடுப்பூசி   (BCG Vaccine):
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P50aaaa
குழந்தை பிறந்ததும் போடப்படும் முதல் தடுப்பூசி, பி.சி.ஜி (BCG Bacillus Calmette Guerin ). 'தோல் ஊசி’ என்று இதைச் சொல்வார்கள். டி.பி. (Tuberculosis) எனப்படும் காச நோய் வருவதைத் தடுக்கும். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மட்டும் 1.40 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சுமார் 20 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படியெனில், இந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டியதன் அவசியம் புரிந்திருக்கும்.  

காசநோய்:

காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவுக்கு 'மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’ (Mycobacterium Tuberculosis) என்று பெயர். நுரையீரல்களைத்தான் இந்த நோய் அதிகம் பாதிக்கிறது. என்றாலும், குடல், தோல், எலும்பு, மூளையுறை, சிறுநீரகம், நிணநீர்த் தாரைகள் போன்ற பகுதிகளையும் இது பாதிக்கும். காசநோய்க் கிருமிகள் நோயாளியின் சளியில் வெளியேறும். இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியைக் காறித் துப்பும்போது, இந்தக் கிருமிகள் சளியுடன் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக்கும் நபருக்கும் தொற்றிக்கொள்ளும்.

காசநோயின் அறிகுறிகள்:

இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், மாலைநேரக் காய்ச்சல், சளியில் ரத்தம், பசியின்மை, உடல்எடை குறைதல், நெஞ்சு வலி, இரவில் உடல் வியர்ப்பது, எந்த நேரமும் களைப்பு ஏற்படுதல் இவையே காசநோயின் முக்கிய அறிகுறிகள்.

பிரைமரி காம்ப்ளெக்ஸ் (Primary complex):

குழந்தைகளுக்கு ஏற்படும் காசநோயை 'பிரைமரி காம்ப்ளெக்ஸ்’ என்கிறோம். குழந்தைக்கு அடிக்கடி சளியுடன் காய்ச்சல், தொடர் மூச்சிறைப்பு, பசியின்மை, உடல் எடை குறைவது அல்லது வயதுக்கு ஏற்றபடி உடல்எடை அதிகரிக்காதது, கழுத்தில் நெறிக்கட்டிகள் நீடிப்பது போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.

பரிசோதனை என்ன? சிகிச்சை என்ன?

காசநோயை சளிப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே,  'மாண்டோ’ பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, எலிசா பரிசோதனை, ஜீன்எக்ஸ்பெர்ட் (Gene Xpert Test) போன்ற பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இந்த நோய்க்குச் சரியாகவும் ஆறு மாதங்கள் தொடர்ச்சியாகவும் மருந்துகள் எடுத்துக்கொண்டால், இதை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

இவ்வளவு சிரமப்படவேண்டிய அவசியமும் இல்லை. காசநோயைத் தடுக்க இருக்கவே இருக்கிறது பிசிஜி தடுப்பூசி.
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P50aa


'பிசிஜி’யைப் போட்டுக்கொள்ளும் முறை:

குழந்தை பிறந்தவுடன் 0.1 மி.லி. அல்லது 0.05 மி.லி. அளவில் இடது புஜத்தில் தோலுக்குள் (மிஸீtக்ஷீணீபீமீக்ஷீனீணீறீ ஸிஷீutமீ) போடப்பட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் இது போடப்படவில்லை என்றால், அடுத்த ஒன்றரை மாதத்தில் போட்டுக்கொள்ளலாம்; அப்போதும் போடப்படவில்லை எனில், 5 வயதுக்குள் போட்டுக்கொள்ளலாம். அதன் பிறகு, இதைப் போட்டுக்கொள்ளத் தேவை இல்லை. குழந்தையின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து, இது வேலை செய்யும். தடுப்பூசி போடப்பட்ட இடத்தை இரண்டு நாட்களுக்குத் தேய்க்கக் கூடாது. குழந்தையைக் குளிப்பாட்டக் கூடாது. அந்த இடத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  

புஜத்தில் தழும்பு அவசியமா?

பிசிஜி போடப்பட்ட புஜத்தில் அறு வாரங்கள் கழித்து, சிறு கொப்புளம் ஏற்படும். அது பெரிதாகி நீர்க்கொப்புளம் ஆகி, சில நாட்களில் சீழ்க்கொப்புளமாகும். பிறகு, அது உடைந்து புண்ணாகும். 12 வாரங்களுக்குள் அது தானாகவே சரியாகி, அந்த இடத்தில் நிரந்தரத் தழும்பு உருவாகும். இந்தக் கொப்புளத்திலும் தழும்பிலும் எந்த மருந்தையும் தடவக் கூடாது. இந்தத் தழும்பு, தடுப்பூசி நன்றாகச் செயல்படுகிறது என்று அறிவிக்கும் அறிகுறி. இவ்வாறு தழும்பு ஏற்படாதவர்கள், 5 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ளலாம்.

இலவச தடுப்பூசி!

இந்திய அரசின் சுகாதாரத் துறை, குழந்தை பிறந்தது முதல் போடவேண்டிய தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இவற்றுடன் பெற்றோரின் விருப்பத்தின் பெயரில் போடக்கூடிய புதிய தடுப்பூசிகளையும் சேர்த்து, 'இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு’ (IAP) ஒரு அட்டவணையைப் பரிந்துரைக்கிறது. இதில் பெரும்பாலான ஊசிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் இலவசமாகவே போடப்படுகின்றன.

- போர் ஓயாது.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Aug 29, 2014 9:36 pm

தடுப்பூசி ரகசியங்கள்! - 5
முக்கியம் இந்த முத்தடுப்பு ஊசி!


தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P40

ஒரே ஒரு ஊசி போதும்... மூன்று நோய்களை விரட்டியடிக்கலாம். ஆச்சர்யமாக இருக்கிறதா? அந்த ஊசியின் பெயர் டி.டி.பி (DTP) தடுப்பூசி. இது தொண்டை அடைப்பான், டெட்டனஸ், கக்குவான் இருமல் ஆகிய நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஒரு ஊசி மூலம் மூன்று தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுவதால், இதற்கு 'முத்தடுப்பு ஊசி’ என்றும் பெயர் வந்தது. கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமா?

தொண்டை அடைப்பான் (Diphtheria):

'காரினிபாக்டீரியம் டிப்தீரியே’ (Corynebacterium diphtheriae) என்ற பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தொண்டையில் சாம்பல் நிறத்தில் ஒரு சவ்வு உருவாகும். இந்தச் சவ்வு வீங்கி, தொண்டையை அடைக்கும். அப்போது குழந்தை சுவாசிக்கவும் உணவை விழுங்கவும் சிரமப்படும். இந்த பாக்டீரியா வெளியிடும் ஒருவித நச்சுப் பொருள், இதயத்தைப் பாதித்து குழந்தையின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

டெட்டனஸ் (Tetanus):

'கிளாஸ்ட்ரிடியம் டெட்டனி’ (Clostridium tetani) என்ற பாக்டீரியாவால் இது ஏற்படுகிறது. இந்த நோய்க்கு ரண ஜன்னி, இசிவு நோய், இழுப்பு நோய், வாய்ப்பூட்டு நோய், வில்வாத ஜன்னி, தசை விறைப்பு நோய் எனப் பல பெயர்கள் உண்டு. இந்த நோய் வந்தவரால் வாயைத் திறக்க முடியாது. கழுத்தை அசைக்க முடியாது. திடீரென்று முதுகு வில் போல் வளையும். வயிறு மரப்பலகைபோல் இறுகிவிடும். கைகால் தசைகள் விறைத்துக்கொள்ளும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். வலிப்பு வரும். இவற்றைத் தொடர்ந்து உயிரிழப்பும்கூட ஏற்படும்.

கக்குவான் இருமல் (Pertussis):

'பார்டெட்டெல்லா பெர்டூசிஸ்’ (Bordetella pertussis) என்ற பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது. தொடர்ச்சியான இருமல், இந்த நோயின் முக்கிய அறிகுறி. சுவாசிக்க முடியாத அளவுக்கு சில நிமிடங்கள் வரை தொடர்ந்து இருமல் வரும். இருமி முடிந்ததும் ஒரு விதக் 'கேவல் ஒலி’ எழும். வாந்தி வரும். இப்படிப் பல வாரங்கள் நீடிக்கும் இருமல் தொல்லையால், குழந்தை பால் குடிப்பதற்கும் உணவு உண்பதற்கும் சிரமப்படும். நோய் தீவிரமாகும்போது, நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழாய்த் தளர்ச்சி போன்ற நோய்களும் சேர்ந்துகொள்வதால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P40b
தடுப்பூசி வகை:

முத்தடுப்பு ஊசியில் டி.டி.டபிள்யூ.பி (DTwP) மற்றும் டி.டி.ஏ.பி (DTaP) என்று இரண்டு வகை உள்ளது. நோயில் இருந்து பாதுகாப்பதில் இரண்டுமே ஒன்றுதான். எனவே, குழந்தைகளுக்கு இதில் ஏதேனும் ஒரு ஊசியைப் போட்டாலே போதுமானது.

டி.டி.டபிள்யூ.பி ஊசி மருந்து, தொண்டை அடைப்பான் மற்றும் டெட்டனஸ் கிருமிகளின் முறிக்கப்பட்ட நச்சில் இருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்கும். ஆனால், கக்குவான் இருமலுக்குரிய கிருமியின் தயாரிப்பு மட்டும் வேறுபடும். அழிக்கப்பட்ட அந்தக் கிருமியின் மொத்த செல்களிலிருந்து (Whole cells) இது தயாரிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசியில் பக்கவிளைவுகள் உண்டு என்றாலும், விலை குறைவு என்பதால், இதுவே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.

டி.டி.ஏ.பி ஊசியில், தொண்டை அடைப்பான் மற்றும் டெட்டனஸ் நோய்க்கான தடுப்பு மருந்து முதலில் சொல்லப்பட்டது போலவே தயாரிக்கப்படும். ஆனால், கக்குவான் இருமலுக்கு மட்டும் அந்தக் கிருமியின் 'ஆன்டிஜென்’களைப் (Antigens) பயன்படுத்தி இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள். இந்தத் தடுப்பூசியில் பக்கவிளைவுகள் குறைவு. குறிப்பாக, தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி ஏற்படுவது, காய்ச்சல் உண்டாவது போன்றவை குறைவாக இருக்கும். அதேவேளையில், இது 'மரபுசார் பொறியியல்’ (Genetic engineering) எனும் நவீனத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுவதால், இதன் விலை அதிகம். தனியார் மருத்துவமனைகளில் இது கிடைக்கிறது.

போட்டுக்கொள்ளும் முறை:

குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் மற்றும் ஒன்றரை வயது, ஐந்து வயது முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். இதன் அளவு அரை மி.லி. குழந்தையின் வெளிப்பக்கத் தொடையில், முன் பக்கத்தின் மத்தியப் பகுதியில் (Antero lateral aspect) தசை ஊசியாகப் (Deep intra muscular route) போட வேண்டும். இதனுடன், போலியோ தடுப்பூசி, 'ஹிப்’ தடுப்பூசி (Hib vaccine), மஞ்சள் காமாலை பி தடுப்பூசி ஆகிய தடுப்பூசிகளும் போடப்படுவது உண்டு. இந்த ஊசிகளைக் குழந்தையின் தொடையில் தனித்தனி இடங்களில் ஒரே நேரத்தில் போட்டுக்கொள்ளலாம். இப்போது முத்தடுப்பு ஊசியானது, 'ஹிப்’, மஞ்சள் காமாலை பி, போலியோ தடுப்பூசி ஆகியவற்றுடன் கலந்து ஒரே ஊசியாகவும் கிடைக்கிறது. இதற்கு, 'பென்டாவேலன்ட் தடுப்பூசி’ என்று பெயர். பல முறை ஊசி குத்தினால் குழந்தைக்கு வலிக்கும் என்று கருதுபவர்கள், இந்த பென்டாவேலன்ட் தடுப்பூசியை ஒவ்வொரு முறையும் ஒரே ஊசியாகப் போட்டுக்கொண்டால் போதும்.
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P40c
முத்தடுப்பு ஊசியைப் போடவில்லை என்றால்...

இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத குழந்தை, 7 வயதுக்குக் கீழ் இருந்தால், முத்தடுப்பு ஊசியை 6 மாத இடைவெளியில் விடுபட்ட தவணைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு ஒன்றரை வயதிலும், 5 வயதிலும் இதைப் போடவில்லை என்றால், இப்போது உடனடியாக ஒரு ஊசியையும் அடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு ஒரு ஊசியையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு ஒரு முறை கூட முத்தடுப்பு ஊசி போடவில்லை என்றால், உடனடியாக ஒரு ஊசியையும், ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணைகளையும், பிறகு 6 மாத இடைவெளியில் இரண்டு தவணைகளையும் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு 7 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்றால், டி.டி.ஏ.பி (Tdap) என்ற தடுப்பூசியைப் போட வேண்டும்.

யார் போட்டுக்கொள்ளக் கூடாது?

ஏற்கனவே இதைப் போட்ட ஒரு வாரத்தில், குழந்தைக்கு மூளை மற்றும் நரம்பு தொடர்பான பாதிப்புகள் வந்திருந்தால், மீண்டும் போட்டுக்கொள்ளக் கூடாது. இதைப் போட்டுக்கொண்டபோது குழந்தைக்கு வலிப்பு வந்திருந்தாலும், தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் குழந்தை அழுதிருந்தாலும், 105 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சல் வந்திருந்தாலும் அடுத்த முறை தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும்போது மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். புற்றுநோய் போன்ற கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த நோயிலிருந்து முற்றிலும் குணமான பிறகே போட்டுக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் வந்தால்?

இந்தத் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைக்குக் காய்ச்சல் வரலாம். தடுப்பூசி போடப்பட்ட உடல் பகுதியில் வீக்கம், வலி, தோல் சிவப்பது ஆகியவை ஏற்படலாம். குழந்தை நீண்ட நேரம் அழக்கூடும். இரண்டு நாட்களுக்கு 'பாராசிட்டமால்’ மாத்திரை/மருந்து கொடுத்தால் காய்ச்சல், வலி குறைந்துவிடும். எனவே, கவலை வேண்டாம்!

- போர் ஓயாது

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Aug 29, 2014 9:39 pm

தடுப்பூசி ரகசியங்கள்! - 6
போயே போச்சே போலியோ!

தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P30
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் போலியோ நோய், வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் கை, கால் தசைகளைப் பாதித்து, அவற்றின் இயங்கும் சக்தியை இழக்கச் செய்கிறது. இதனால் கை, கால் தசைகள் சிறுத்து, இளம்பிள்ளை வாதம் ஏற்படு்கிறது.

இந்த மோசமான இளம்பிள்ளை வாத நோயை, ஒவ்வொரு முறையும் இரண்டே இரண்டு மருந்துச் சொட்டு்க்கள் மூலமாக இருந்த இடம் தெரியாமல் ஒழித்தே விட்டோம். அப்படி ஒரு மகத்தான சாதனை புரிந்த மருந்துதான் போலியோ சொட்டு மருந்து.

நோய் பாதிப்பு  

போலியோ கிருமிகள் அசுத்தமான உணவு மற்றும் குடிநீர் மூலம் நம் குடலுக்குள் சென்று, அங்கிருந்து ரத்தத்தின் வழியே மூளையை அடைந்து, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கின்றன. முக்கியமாக, கால் தசைகளை இயக்குகின்ற நரம்புகளைப் பாதிப்பதால், இந்த நோய் உள்ளவர்களுக்குக் கால்கள் செயல் இழக்கும்.  இந்த நோய்க் கிருமிகள் மலத்தின் வழியாக வெளியேறி, மற்றவர்

களுக்கும் பரவும். பல நேரங்களில் போலியோ கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை. ஆனால், சில நேரங்களில் மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும். சுவாசத்துக்கு உதவும் தசைகளை இந்தக் கிருமி தாக்கும்போது, பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி இறப்பைத் தழுவலாம் என்பதால், இது மிகவும் அபாயகரமானது.

போலியோ தடுப்பின் முக்கியத்துவம்

உலக அளவில், சென்ற நூற்றாண்டில் கோடிக்கணக்கான பேர் போலியோவால் முடமாயினர். இந்த நிலைமை ஆண்டுதோறும் அதிகரித்து வரவே, போலியோவுக்குக் கடிவாளம் போட மருத்துவ உலகம் களத்தில் இறங்கியது. 1952ம் ஆண்டில், 'ஜோனஸ் சால்க்’ (Jonas Salk) என்ற அமெரிக்க மருத்துவர், போலியோ நோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு, இந்த நோயின் தாக்குதல் உலக அளவில் குறையத் தொடங்கியது.

1957ம் ஆண்டில,் 'ஆல்பர்ட் சாபின்’ (Albert Sabin) என்ற மற்றொரு அமெரிக்க மருத்துவர் இதே நோய்க்குத் தடுப்புச் சொட்டு மருந்தைக் கண்டுபிடித்தார். குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியைப் போடுவதை விட சொட்டு மருந்தைக் கொடுப்பது எளிதாகவும், செலவு குறைவாகவும் இருந்தது. இதனால், இந்திய அரசாங்கம் 'குழந்தைகளுக்கு முறைப்படி போலியோ சொட்டு மருந்து கொடுத்தால், நோயைத் தடுக்கலாம்’ என்னும் விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது. இந்தியாவில், 2011ம் ஆண்டிலேயே போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது.  'இந்தியா போலியோ இல்லாத நாடு’ எனும் நற்சான்றிதழையும் உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் கொடுத்துவிட்டது. 'அதான் போலியோவை முற்றிலும் ஒழித்தாயிற்றே... பிறகு ஏன், தொடர்ந்து தடுப்பூசி/சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்?’ என்ற சந்தேகம் எழலாம். காரணம் இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் இன்னமும் போலியோ ஒழிக்கப்படவில்லை. அங்கிருந்து இடம்பெயர்ந்து குடியேறுபவர்கள் அல்லது சுற்றுலாவாசிகள் வழியாக இந்த நோய் மீண்டும் இந்தியாவுக்கு வந்துவிட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்கத்தான் தடுப்பூசி பயன்படுத்த வேண்டும் என்கிறது, உலக சுகாதார நிறுவனம்.

தடுப்பு மருந்து வகை

போலியோவைத் தடுக்க, தடுப்பூசியும் (Inactivated polio vaccine - IPV ) தடுப்புச் சொட்டு மருந்தும் (Oral Polio Vaccine - OPV) உள்ளன. அழிக்கப்பட்ட போலியோ கிருமியைப் பயன்படுத்தித் தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள். உயிருள்ள, வீரியம் குறைந்த போலியோ கிருமியைப் பயன்படுத்தி சொட்டு மருந்தைத் தயாரிக்கிறார்கள்.
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் Kvew4JmRH2FIsIbTRtxL+s
பென்டாவேலன்ட் தடுப்பு ஊசி

போலியோ தடுப்பூசியைத் தனியாகவும் போட்டுக்கொள்ளலாம்; பென்டாவேலன்ட் தடுப்பூசி மூலமும் போட்டுக்கொள்ளலாம். போலியோ தடுப்பூசியின் விலை அதிகம் என்பதால், குழந்தைக்குத் தடுப்பூசி போட வசதி இில்லாதவர்கள் போலியோ சொட்டு மருந்தை மட்டும் போடலாம்.

முகாம்களும் முக்கியம்!

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு தடுப்பூசியும் சொட்டு மருந்தும் கொடுத்திருந்தாலும்கூட, அரசாங்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் போலியோ தடுப்பு முகாம்களிலும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டியது மிக அவசியம்.

தடுப்பூசி போடவில்லை எனில்...?

ஆரம்பத்திலிருந்தே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத குழந்தைக்கு, 5 வயதுக்குள், 2 மாத இடைவெளியில் 2 ஊசிகளையும், 6 மாத இடைவெளியில் மூன்றாவது ஊசியையும் போட வேண்டும். ஒன்றிரண்டுமுறை போட்டுவிட்டு மீதித் தவணைகளைத் தவறவிட்டவர்கள், ஏற்கனவே சொன்ன இடைவெளியில், விடுபட்ட தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்; விடுபட்ட சொட்டு மருந்தையும் போடலாம்.

அம்மாக்கள் கவனிக்க:

குழந்தைகளுக்கு மிதமான சளித் தொல்லை இருந்தாலும், தயங்காமல் போலியோ சொட்டு மருந்தைத் தரலாம்; தடுப்பு ஊசியையும் போட்டுக்கொள்ளலாம். பக்க விளைவுகள் இல்லை என்பதால் பயம் தேவை இில்லை!

போலியோ தடுப்பு ஊசியே சிறந்தது, ஏன்?

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் போலியோவைத் தடுக்க, தற்போது தடுப்பூசியை மட்டுமே பயன்படுத்துகி்ன்றனர். ஆனால், இந்தியா, பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளில் தடுப்பூசி, சொட்டு மருந்து இரண்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. வாய்வழியாகத் தரப்படும் சொட்டு மருந்தினால், 25 லட்சம் பேரில் ஒருவருக்கு, போலியோ வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், போலியோ தடுப்பூசியைப் போட்டுக்கொள்பவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, இதற்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் சிறந்தது என்று 'இந்தியக் குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பு’ (மிகிறி) இந்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. வரும் ஆண்டுகளில் சொட்டு மருந்துக்குப் பதில் தடுப்பூசியே பயன்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

போர் ஓயாது

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Aug 29, 2014 9:44 pm

தடுப்பூசி ரகசியங்கள்! - 7
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P42

மக்களைத் தாக்கும் நோய்க் கிருமிகளில் வைரஸ் மிக மோசமானது. இது ஏற்படுத்தும் பாதிப்புகள் கடுமை யானவை; மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை. உதார ணத்துக்கு... சென்ற நூற்றாண்டில் எய்ட்ஸ்; இப்போது எபோலா. இந்த வரிசையில் சத்தம் இல்லாமல் உயிரைப் பறிக்கும் மற்றொரு வைரஸ் கிருமி 'ஹெபடைட்டிஸ் பி’ (Hepatitis - B). இதற்கு 'உயிர்க்கொல்லி நோய்’ என்ற பட்டப் பெயரும் உண்டு. ஆனால், இந்த வைரஸ் தொற்றைத் தவிர்க்க தடுப்பூசி உள்ளது என்பது ஆறுதலான விஷயம்.

பொதுவாக, எந்த ஒரு கிருமி கல்லீரலைத் தாக்கினாலும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். அது பாக்டீரியாவாகவும் இருக்கலாம்; வைரஸாகவும் இருக்கலாம். வைரஸ்களில் 'ஹெபடைட்டிஸ்’ வைரஸ் முக்கியமானது. ஏ, பி, சி, டி, இ என இவற்றில் பல வகைகள் உள்ளன. இவற்றில் ஹெபடைட்டிஸ் பி மற்ற வைரஸ்களைவிட மிகவும் மோசமானது. இது கல்லீரலைத் தாக்கி மஞ்சள் காமாலை – பி எனும் தொற்று நோயை ஏற்படுத்துகிறது.

உலகில் சுமார் 20 கோடிப் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள். இதற்குப் பிரத்யேகமாக மருந்து, மாத்திரை, சிகிச்சை எதுவும் இல்லை. இது வந்தால் மரணம் நிச்சயம் என்பதால், ஒவ்வொருவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது.

பரவும் விதம்

ரத்தம், தாய்ப்பால், விந்து மற்றும் பெண் பிறப்புறுப்புத் திரவங்களின் மூலம் இந்த நோய்க்கிருமி வெளியேறி பரவுகிறது. கர்ப்பிணிக்கு / பாலூட்டும் தாய்க்கு இந்த நோய் இருந்தால், குழந்தைக்கும் இது தொற்றுகிறது. உடலுறவு மூலம் இது மற்றவர்களுக்குப் பரவுகிறது.

தனக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது என்பதை அறியாமல் யாராவது ரத்ததானம் செய்தால், அந்த ரத்தத்தைப் பெற்றுக்கொண்ட வருக்கும் இந்த நோய் வரும்.(தற்போது பரிசோதனைகள் பல செய்து நோய் பாதிப்பு இல்லை என்று தெரிந்த பிறகே தானமாகப் பெறப்பட்ட ரத்தம் மற்றவர்களுக்கு செலுத்தப்படுகிறது.) இவர்களுக்குப் போடப்பட்ட ஊசியையும் சரியாகத் தொற்று நீக்கம் செய்யாமல், மற்றவர்களுக்குப் பயன்படுத்தினால், நோய் பரவும்.

போதை ஊசி பழக்கம் உள்ளவர்கள், டாட்டூ குத்திக்கொள்பவர்களுக்கு இந்த நோய் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய் உள்ளவர்கள் பயன்படுத்திய சவரக்கத்தி, ரேசர் பிளேடு...போன்றவற்றில் சுமார் ஏழு நாட்கள் வரை இந்தக் கிருமிகள் உயிருடன் இருக்கும். அந்தச் சமயத்தில் அந்தப் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினால், அவர்களுக்கும் இந்த நோய் வந்துவிடும்.

நோய் பாதிப்பு

இந்த நோய்த்தொற்று உள்ளவருக்குப் பசி இருக்காது. காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவற்றைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை ஏற்படும். இதனால், கண்களும் தோலும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போகும். மலம் வெள்ளை நிறத்தில் போகும். வயிறு வலிக்கும். தோல் அரிக்கும். எலும்பு மூட்டுகளிலும் தசைகளிலும் கடுமையான வலி உண்டாகும். இந்த அறிகுறிகள் அனைத்தும் சில வாரங்களில் மறைந்துவிடும் என்றாலும், இந்த நோய் உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, நோய் கடுமையாகும். அதேநேரத்தில் இதன் அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. குறிப்பாக, குழந்தைகளுக்கும், சிறுவர்சிறுமிகளுக்கும் இந்த நோய் இருப்பதே வெளியில் தெரியாது. அந்த நேரத்தில் தங்களுக்கு நோய் இருப்பதை அறியாமலேயே மற்றவர்களுக்கு இந்த நோயைப் பரப்புவார்கள். ஆதலால், இவர்களை 'நோய்க் கடத்துநர்கள்’ என்று கூறுகிறார்கள். இவர்

களுக்கு நாட்கள் ஆக ஆக கல்லீரல் சுருங்கும் (Liver Cirrhosis). கல்லீரலில் புற்றுநோய் வரும். இறுதியில், மரணம் ஏற்படும்.

தடுப்பூசி வகை

மஞ்சள் காமாலை – பி நோய்க்கு சிகிச்சைதான் இல்லை. 100 சதவீதம் இதை வராமல் தடுக்க 'மஞ்சள் காமாலை – பி தடுப்பூசி’ உள்ளது. இது தனியாகப் போடப்படும் ஊசியாகவும், பென்டா

வேலன்ட் என்னும் கூட்டுத் தடுப்பூசியாகவும் கிடைக்கிறது. இந்த நோய்க் கிருமியை மரபு

சார் பொறியியல் தொழில்நுட்பத்தில் ஈஸ்ட் செல்களில் வளர்த்து, அதன் மேல் அடுக்கு ஆன்டிஜெனைப் (Surface antigen) பயன்படுத்தி இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள்.

தடுப்பூசியின் அவசியம்

இந்தியாவில் 100ல் 4 பேர் மஞ்சள் காமாலை பி கிருமியைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். 100 கர்ப்பிணிகளைப் பரி சோதித்தால், குறைந்தது 3 பேரிடம் இந்த நோய்க் கிருமிகள் காணப்படுகின்றன. இவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் நோய் பரவ வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில் இந்தத் தடுப்பூசியை முறைப்படி போட்டுக்கொள் கிறவர்களுக்கு இந்த நோய் வருவதே இல்லை. இந்தியாவில் இந்தத் தடுப்பூசி போடத் தொடங்கிய பிறகு, கல்லீரல் புற்றுநோயும் கல்லீரல் சுருக்க நோயும் ஏற்படுவது மிகவும் குறைந்துள்ளது.

போட்டுக்கொள்ளும் முறை

குழந்தை பிறந்தவுடன் முதல் தவணை, ஒன்று முதல் ஒன்றரை மாதங்களுக்குள் இரண்டாம் தவணை, 6 மாதங்கள் முடிந்ததும் மூன்றாம் தவணை என்று இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். இதன் அளவு அரை மில்லி. குழந் தையின்வெளிப்பக்கத் தொடையில் தசை ஊசியாகப் போட வேண்டும். குழந்தை குறை மாதத்தில் பிறந்து உடல் எடை 2 கிலோவுக்குக் குறைவாக இருந்தால், முதல் தவணைத் தடுப்பூசியைப் பிறந்தவுடன் போடக்கூடாது. பிறந்த 30ம் நாளில் முதல் தவணையையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணையாக வழக்கம் போலவும் போட வேண்டும்.

தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி, சிறிது வீக்கம், மிதமான காய்ச்சல், களைப்பு, தலைவலி போன்ற சிறு அவஸ் தைகள் உண்டாகலாம். ஆனால், இவை தானாகவே சரியாகிவிடும். கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் இதில் இல்லை என்பது ஆறுதலான விஷயம்!

தடுப்பூசியைப் போடவில்லை எனில்....?

ஆரம்பத்தில் இருந்தே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் எந்த வயதிலும் இதைப் போட்டுக் கொள்ளலாம். மொத்தம் மூன்று முறை இதைப் போட்டுக் கொள்ள வேண்டும். முதல் ஊசிக்கும் இரண்டாம் ஊசிக்கும் ஒரு மாதம் இடைவெளியும், இரண்டாம் ஊசிக்கும் மூன்றாம் ஊசிக்கும் ஐந்து மாதம் இடைவெளியும் விட வேண்டும். 10 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இதன் அளவு அரை மி.லி. 10 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இதன் அளவு ஒரு மி.லி. குழந்தைகளுக்குத் தொடையிலும், பெரியவர் களுக்கு இடது புஜத்திலும் போட வேண்டும். இடுப்பில் மட்டும் போடவேகூடாது.

யாருக்கு இது அவசியம் ?

இந்தியாவில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை பி தடுப்பூசி அவசியம். அவர்களோடு, போதை ஊசி போட்டுக்கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், பாலியல் தொழிலாளியுடன் பாலுறவு வைத்துக்கொள்பவர்கள், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், நெடுங்காலம் கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளவர்கள், கல்லீரல் நோய் வந்துள்ளவர் வீட்டில் வசிக்கும் மற்றவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள்... ஆகியோர் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.

தவிர, மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவப் பணி உதவியாளர்கள், செவிலியர்கள், கிராமப்புற சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவச் சமூகப்பணி செய்பவர்கள், ரத்த வங்கி மற்றும் ரத்தப் பரிசோதனைக் கூடங்களில் பணிபுரிபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோரும் இந்தத் தடுப்பூசியை அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிக்கு மஞ்சள் காமாலை இருந்தால்?

கர்ப்பிணிக்கு மஞ்சள் காமாலை இருந்தால், பிறக்கப்போகும் குழந்தைக்கு அது பரவிவிடும். இதைத் தடுக்க, குழந்தை பிறந்தவுடன், மஞ்சள் காமாலை பி இம்யுனோகுலோபுலின் எனும் தடுப்பு மருந்தை அரை மில்லி அளவில் தசை ஊசியாகப் போட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் போடவில்லை என்றால், அடுத்த 7 நாட்களுக்குள் இதை அவசியம் போட்டுவிட வேண்டும். இத்துடன் வழக்கமான மஞ்சள் காமாலை பி தடுப்பூசியையும் போட வேண்டும். இந்த இரண்டையும் ஒரே தொடையில் போடக்கூடாது. தனித்தனி தொடைகளில் போட வேண்டும்.

போர் ஓயாது

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 29, 2014 9:59 pm

சூப்பருங்க தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் 1571444738
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Aug 30, 2014 10:14 am

அருமையான தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள். ஆனால் ஹோமியோபதி
மருத்துவர் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறுகிறாரே ஏன்?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 8:34 am

தடுப்பூசி ரகசியங்கள்! - 8
டாக்டர்.கு.கணேசன்


மனித உடலின் தலைமைச் செயலகம் மூளை. இதயம் இயங்கிக்கொண்டிருக்கும்போதே, மூளை இறந்துவிட்டால், உயிர் இருந்தும் பயன் இல்லை. அப்படிப்பட்ட மூளையைத் தாக்குவதற்கு என்றே பல நோய்கள் வரிசையில் காத்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, மூளை உறைக் காய்ச்சல்.


மூளையை மூன்று உறைகள் போர்த்திப் பாதுகாக்கின்றன. அவற்றுக்கு ‘மெனிஞ்சஸ்’ என்று பெயர். இவற்றை பாக்டீரியா / வைரஸ் கிருமிகள் பாதிக்கும்போது, கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும். அதற்கு ‘மூளை உறைக் காய்ச்சல்’ (Meningitis) என்று பெயர். இது ஒரு கொடுமையான தொற்றுநோய். இதை ஏற்படுத்துகின்ற பாக்டீரியாக் கிருமிகளில் ஒன்று, ‘ஹீமோபிளஸ் இன்ஃபுளூயென்சா-பி’( Haemophilus Influenza –Type b). இந்தக் கிருமி மூளை உறையைப் பாதிக்கும்போது உண்டாகிற நோய்க்கு ‘ஹிப் மூளை உறைக் காய்ச்சல்’ என்று ஒரு தனிப் பெயரும் உண்டு. பொதுவாக, இந்த நோய் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. குழந்தைகளின் உடலில் இந்த நோய்க்கு உரிய இயற்கையான எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதால், உடனே நோய் தாக்குவதற்கு ஏதுவாகிறது.

நோய்ப் பரவல் மற்றும் அறிகுறிகள்:

இந்த வகை பாக்டீரியாக் கிருமிகள் மூக்கு, தொண்டை, நுரையீரல் போன்ற இடங்களில் தங்கி, நோயை உண்டாக்கும்; இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், சளியைக் காறித் துப்புதல் ஆகியவற்றின் மூலம் நோய்க்கிருமிகள் வெளியாகி, காற்றின் வழியாக மற்றவர்களுக்குப் பரவும்.


இந்த நோய்க் கிருமிகள் மூளையை மட்டுமல்லாமல், தொண்டை, மூளை, இதயம், எலும்பு, ரத்தம் என்று பல பகுதிகளைப் பாதிக்கும். இவற்றில் மூளை உறைக் காய்ச்சல்தான் திடீரென்று கடுமையான காய்ச்சலாக வரும். தாங்க முடியாத அளவுக்குத் தலைவலியை உண்டாக்கும். அடிக்கடி குமட்டலும், வாந்தியும் ஏற்படும். மூளை உறைகளை மட்டுமன்றி மூளைத் தண்டுவடத்தையும் இந்த நோய்க் கிருமிகள் பாதிக்கின்றன. இதனால், தண்டுவடச் சவ்வு வீங்கும். இதன் விளைவாக, கழுத்துத் தசைகள் கடுமையாக இறுகிக்கொள்ளும். கழுத்துப் பகுதி கடுமையாக வலிக்கும். கழுத்தை அசைக்கவோ, திருப்பவோ முடியாது. இதுவே இந்த நோயின் மிக முக்கிய அறிகுறி. இந்த நோயாளிகளுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு, மனநோயாளிபோல் நடந்துகொள்
வார்கள். இவர்கள் அரள்வதும், மிரள்வதும், உளறுவதுமாக இருப்பார்கள். பேச்சுக்கொடுத்தால், சம்பந்தமில்லாமல் பதில் கூறுவார்கள்.

நோய் பாதிப்பு:


இந்தக் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று குணமடைந்தால்கூட, நோயாளிக்குப் பேச்சு நின்றுபோவது, பார்வை பறிபோவது, காது கேட்காமல் போவது, பக்கவாதம் ஏற்படுவது போன்ற பாதிப்புகள் நிரந்தரமாகிவிடும். எனவே, இதை வரவிடாமல் தடுக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு இரண்டு தடுப்பூசிகள் நமக்கு உதவுகின்றன.

தடுப்பூசி வகை:


தனியாகப் போடப்படும் ‘ஹிப்’ தடுப்பூசி (Hib vaccine) ஒரு வகை. பென்டாவேலன்ட் எனும் ‘கூட்டுத் தடுப்பூசி’ மற்றொரு வகை. இந்த நோய்க் கிருமியின் மேலுறையில் இருக்கின்ற பி.ஆர்.பி (Polyribosyl-ribitol phosphate - PRP) எனும் சர்க்கரைப் பொருளைப் பிரித்து எடுத்து, ஒரு புரதப் பொருளுடன் இணைத்து, இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கிறார் கள். இதனால் ‘இணைக் கூட்டுச் சர்க்கரைப் பொருள் தடுப்பூசி’ (Conjugate polysaccharide vaccine) என்று இதனைக் கூறுகிறார்கள்.

போட்டுக்கொள்ளும் முறை:

குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். இதற்கு முதன்மைத் தடுப்பூசி என்று பெயர். அதன் பிறகு, ஒன்றரை வயது முடிந்தவுடன், ஊக்குவிப்பு (Booster) ஊசியாக ஒரு தவணை போட வேண்டும். இந்த வயதில் போட்டுக்கொள்ளாதவர்கள் பிறகு எந்த வயதில், எப்படிப் போட்டுக் கொள்வது என்பதை அட்டவணையில் தெரிந்து கொள்ளலாம்.


ஒருமுறை தரப்படும் தடுப்பூசியின் அளவு அரை மில்லி. இதைக் குழந்தையின் வெளிப்பக்கத் தொடையின் முன் பகுதியில் தசை ஊசியாகப் போட வேண்டும். ஊசி போடப்பட்ட இடத்தில் சிறிது வலி, வீக்கம், தோல் சிவப்பது போன்ற தொல்லைகள் ஏற்படலாம். மிதமான காய்ச்சல் வரலாம். இவை எல்லாமே மூன்று நாட்களில் சரியாகிவிடும். காய்ச்சலுக்கு ‘பாராசிட்டமால்’ திரவ மருந்து அல்லது மாத்திரை தரலாம்.

தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் P50b

செல்போன் மூலம் தடுப்பூசி தகவல்:

குழந்தைக்கு எந்தத் தடுப்பூசியை எப்போது போடுவது என்று பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. சிலர் வேலைப் பளுவில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட மறந்துவிடுகின்றனர். இந்த மாதிரி பெற்றோர்களுக்கு உதவுவதற்காகவே, ‘இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு’ (Indian Academy Of Paediatrics) நல்லதொரு ஏற்பாட்டை செய்துள்ளது.


பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National vaccine remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.


இதற்கு என்ன செய்ய வேண்டும்?


Immunize<குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி>
என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.
உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.
உடனே ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.


போர் ஓயாது..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக