புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_c10மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_m10மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_c10 
23 Posts - 68%
heezulia
மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_c10மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_m10மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_c10 
11 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_c10மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_m10மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_c10 
60 Posts - 63%
heezulia
மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_c10மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_m10மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_c10மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_m10மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_c10மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_m10மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 17, 2015 7:37 pm

மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! DbgULUSPqPwYKRByYM3Q+vaikothump(2)
சென்னை: இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பான ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் விசாரணை அறிக்கை, செப்டம்பரில் வெளியாகும் என்ற ஐ.நா சபையின் அறிவிப்பிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' இலங்கையில் இந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரி சிறிபாலசேனா ஈழத்தமிழர்களை கருவறுக்கத் துடித்த ஜே.வி.பி. அமைப்பில் செயல்பட்டவர்.

‘ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பது ஒருபோதும் கிடையாது. இங்கு ஒற்றை ஆட்சிமுறைதான்’ என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துவிட்டார். ‘தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவத்தை ஒருபோதும் வெளியேற்ற மாட்டோம்’ எனறு புதிய அதிபர் சிறிபாலசேனா சொல்லிவிட்டார்.

ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் நியமித்த விசாரணைக்குழு அறிக்கை, அடுத்த மாதம் மார்ச்சில் கூட இருக்கிற மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்வதாக இருந்தது. இதனைத் தாக்கல் செய்யக்கூடாது என்று சிறிபாலசேனா அரசு பிரசாரத்தில் ஈடுபட்டது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதற்காகவே இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பயணம் செய்தார்.

இந்த நிலையில் இலங்கையின் வடக்கு மாகாண சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஷ்வரன் அவர்கள், சட்டசபைத் தீர்மானத்தை அறிவித்தார். அதன்படி, “ஈழத்தில் நடந்தது போர்க் குற்றமல்ல; இனப்படுகொலை என்றும், இது குறித்து 1950 களில் இருந்து அண்மைக்காலம் வரை நடைபெற்ற தமிழினக் கொலைகள் குறித்து ஐ.நா.மன்றம் விசாரிக்க வேண்டும் என்றும், இனப்படுகொலை குற்றவாளியான சிங்கள அரசை சர்வதேச நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் ஐ.நா. பாதுகாப்புச் சபை நிறுத்த வேண்டும்” என்றும் நீதி கோரப்பட்டது.

இந்தப் பின்னணியில் சிங்கள அதிபர் மைத்ரி சிறிபாலசேனா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியா-இலங்கை அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகிவிட்டன. இதைவிட தமிழினத்திற்கு ஒரு துரோகத்தை எவரும் செய்ய முடியாது.

பிரதமர் அறிவித்துள்ள ஒப்பந்தங்கள் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டை - தமிழக மக்களை மிகத் துச்சமாக மதித்து எடுக்கப்பட்ட எதேச்சதிகார நடவடிக்கையாகும். ஈழத் தமிழ் குலத்தையும், தமிழ் இனத்தையும் அநீதியின் இருட்டில் நிரந்தரமாக அழுத்துவதற்கு இன்றைய நரேந்திர மோடி அரசும் தீட்டம் தீட்டிவிட்டது.

ஐ.நா.வின் புதிய மனித உரிமை ஆணையாளர் ரவுத் அல் உசைன், இலங்கை குறித்து விசாரணை அறிக்கை மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படாது என்றும், செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது என்றும் நேற்று அறிவித்தது மிகவும் அதிர்ச்சி தருகிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் இதே ஆணையாளர் உசைன்தான், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியங்கள்கூட சொல்லமுடியாத அநீதி நடக்கிறது என்று அதிர்ச்சியுற்றதாகக் கூறினார். அதே ஆணையாளர்தான் விசாரணை அறிக்கையை செப்டம்பரில் வெளியிடுவேன் என்கிறார்.

ஐ.நா.மன்றத்தில் நீதி இருப்பது உண்மையானால், மனித உரிமைக் கவுன்சிலுக்கு மனித உரிமைகள் மீது அக்கறை இருப்பது உண்மையானால், கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினர் இலங்கைத் தீவிற்குச் சென்று இனக் கொலையுண்டு மடிந்த ஈழத்தமிழர் தாயகத்திற்கு குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் அச்சமின்றி சாட்சியம் அளிக்கின்ற நிலையை ஏற்படுத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதனைச் செய்யா விட்டால், மனித உரிமை கவுன்சில் என்பது உலகத்தை ஏமாற்றுகின்ற விளம்பரக் கவுன்சில் என்றுதான் பொருள்படும்.

புதிய அதிபர் விசாரணைக் குழுவை அனுமதிக்காவிட்டால், சிங்கள அரசின் கோரமுகம் மீண்டும் உலகுக்கு வெளிப்படும். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தியா-இலங்கை போட்டுள்ள பொருளாதார ஒப்பந்தங்கள் தமிழக சட்டமன்றத் தீர்மானங்களுக்கு எதிரானது எனக் கண்டித்தும், மனித உரிமைக் கவுன்சிலின் விசாரணைக் குழுவினர் இலங்கையின் தமிழர் தாயகத்திற்குச் சென்று விசாரணை நடத்துவதை வலியுறுத்தியும்தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
அப்படி நிறைவேற்றப்படும் தீர்மானம், தமிழர்களின் இதயங்களில் சூழ்ந்துள்ள வேதனை இருட்டுக்கு மத்தியில் நம்பிக்கை ஒளிக்கீற்றாக விளங்கும்" என்று கூறியுள்ளார்.

நன்றி-விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Feb 17, 2015 9:18 pm

.

ஐ நா வின் மனித உரிமைகள் அமைப்பு ஒரு காமடியான அமைப்பு

அது இருக்குதா இல்லையா என்பதே சில நேரங்களில் தெரியாது



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 17, 2015 9:39 pm

இருக்கு ஆனா இல்லை கேசா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக