புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10 
32 Posts - 51%
heezulia
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10 
74 Posts - 57%
heezulia
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 2:08 am

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R1மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R2aமன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R3மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R4
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R5மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R6மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R7மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R8
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R9மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R11மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R12
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Rasi01
நன்றி: சக்திவிகடன்




மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 2:09 am

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R1அதீத தன்னம்பிக்கை கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் மன்மத ஆண்டு பிறப்பதால், உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வி.ஐ.பி.கள் நண்பர்களாவார்கள். உடன்பிறந்தவர்கள் வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

உங்களின் தனாதிபதி சுக்ரனும் தன ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வீடு கட்டவும், வாங்கவும் வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். இந்த மன்மத வருடம் உங்களுக்கு 10-ம் ராசியில் பிறப்பதால், செயற்கரிய காரியங் களைச் செய்வீர்கள். பொறுப்புகள் தேடி வரும். வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.  இந்த ஆண்டு முழுக்க அஷ்டமத்துச் சனி தொடர்வதால், எதையோ இழந்ததைப் போன்ற ஒருவித அச்சம் இருந்து கொண்டேயிருக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. எதிலும் அவசர முடிவுகள் வேண்டாம்.

புரட்டாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும், உண்டு. கர்ப்பிணிகள் அவ்வப்போது மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெறுவது நல்லது. ஐப்பசி மாதப் பிற்பகுதி கார்த்திகை மற்றும் மார்கழி முன்பகுதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கிரகண தோஷம் அடைவதாலும், மாசி மாதம் பிற்பகுதி முதல் பங்குனி மாதம் வரையிலும் சனியுடன் சம்பந்தப்படுவதாலும் சிறுசிறு விபத்துகள், கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் பிரிவுகள், ஏமாற்றங்களும் வந்து நீங்கும்.

4.7.15 வரை குரு 4-ம் வீட்டில் நிற்பதால், தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாயாருக்கு சோர்வு, ரத்த அழுத்தம் வந்து நீங்கும். 5.7.15 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால், தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீண்பழியிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

ஜனவரி 7-ம் தேதி வரை ராகு உங்கள் ராசிக்கு 6-ல் நிற்பதால், ஷேர் மூலமாக பணம் வரும். கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால், திடீர் பயணங்கள் உண்டு. நெடு நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால், 8.1.16 முதல் ராகு 5-ம் வீட்டில் நுழைவதால், பிள்ளைகள் பாதை மாற வாய்ப்பிருக்கிறது. அவர்களின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 9-ம் தேதி முதல் கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் நுழைவதால், ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
     
வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. தொழில் ரகசியங்கள் கசியக்கூடும்; கவனம் தேவை. ஆனி, ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்களும், திடீர் லாபமும் வரும். கமிஷன், ஸ்டேஷனரி, உணவு வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் என்னதான் உண்மையாக உழைத்தாலும் எந்தப் பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். சிலர், உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வார்கள். புது உத்தியோக வாய்ப்புகள் ஆனி, ஆவணி மாதங்களில் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

மொத்தத்தில், இந்த மன்மத வருடம் அலைச்சலையும், வேலைச்சுமையையும், பணப்பற்றாக்குறையையும் தந்தாலும், சகிப்புத் தன்மையால் வெற்றியையும், சாதனை களையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அல்லது சஷ்டி திதி நாளில் எட்டுக்குடி திருத்தலம் சென்று. அங்கு கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை, கந்த சஷ்டி கவசம் படித்து வணங்கி வாருங்கள். அகதிகளுக்கு உதவுங்கள்.




மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 2:09 am

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R2aகலாரசனையும், கற்பனைத் திறனும் உள்ளவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் மன்மத ஆண்டு பிறப்பதால், தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தந்தையாருக்கு இருந்து வந்த நோய் குணமாகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

உங்கள் ராசிநாதன் சுக்ரன் ஆட்சி பெற்று அமர்ந் திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், மாதக் கணக்கில் கிடப்பில் இருந்த வேலைகளெல்லாம் விரைந்து முடிவடையும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். உங்கள் கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக நீடிப்பதால், சுற்றியிருப் பவர்களே உங்களை ஏமாற்றுவதாக நினைத்து வருந்துவீர்கள். களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால், குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன பிரச்னைகளைப் பெரிதாக்க வேண்டாம். மனைவிக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சைகள் செய்ய நேரிடும். புதியவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

4.7.15 வரை உங்களின் அஷ்டம-லாபாதி பதியான குரு 3-ம் வீட்டில் நிற்பதால், எந்த வேலையையும் முதல் கட்டத்தில் முடிக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுவீர்கள். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சில நேரங்களில் எதிலும் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். 5.7.15 முதல் குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நுழைவ தால், முதல் முயற்சியிலேயே எடுத்த காரியங்களை முடித்துக்காட்டுவீர்கள். தடுமாற்றம் நீங்கி தன்னம்பிக்கை பெருகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கக்கூடும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும்.
ஜனவரி 7-ம் தேதி வரை ராகு உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால், பிள்ளைகளை நினைத்து ஆதங்கப்படுவீர்கள்.

மகளின் திருமணம் சற்று தாமதமாகி முடியும். பழைய கடன் பிரச்னை தூக்கத்தைக் கெடுக்கும். கேது ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால், ஷேர் மூலமாக பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மூத்த சகோதரர் உதவுவார். ஆனால், 8.1.16 முதல் ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் இடத்திலும் அமர்வதால், பொறுப்புகள் அதிகமாகும். ஆவணி, மாசி, பங்குனி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர், உறவினர் வருகையாலும் வீடு களைகட்டும். வேலை கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். வழக்குகள் சாதகமாகும். ஆடி மாதம் 15-ம் தேதி முதல் ஆவணி மாதம் வரையிலும் ராசிநாதன் சுக்ரன் வக்ரம் அடைவதால், தொண்டை, கண், பல் வலி வந்து நீங்கும்.

வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறை யும். வேலையாட்களால் நிம்மதி குறையும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளப் பாருங்கள். பண விஷயத்தில் கவனமாகச் செயல்படவும்.

ஏற்றுமதி-இறக்குமதி, பிளாஸ்டிக், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். அதிக வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். ஆவணி, பங்குனி மாதங்களில் அதிரடி லாபம் உண்டு.

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டே இருக்கும். மேலதிகாரி உங்களுக்குச் சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்துகொள்ள முடியாமல் போகும். எனினும் கடினமாக உழைப்பீர்கள். சக ஊழியர்களால் எதிர்ப்புகள் வந்து போகும். மாசி, பங்குனி மாதங்களில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பணத் தட்டுப்பாடு மற்றும் பகைமையைத் தருவதாக இருந்தாலும், முயற்சியாலும், சமயோசித புத்தியாலும் வெற்றியைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: தஞ்சை அருகில் சேங்கனூல் அருளும் சத்தியகிரீஸ்வரரை, ஏதேனும் ஒரு மாத சிவராத்திரி அன்று வில்வார்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.




மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 2:12 am

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R3போராட்ட குணம் கொண்டவர் நீங்கள். சூரியன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில், இந்த மன்மத ஆண்டு பிறப்பதால், தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கௌரவ பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

4.7.15 வரை குருபகவான் தனஸ்தானமான 2-ல் நிற்பதால், இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 5.7.15 முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால், எந்த வேலையையும் முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். புதிய முயற்சிகள் தாமதமாகும். மனைவியுடன் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும்.

உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், வீண் அலைச்சல்கள் உண்டு. எதிலும் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல்நலனிலும் கவனம் தேவை. 7.1.16 வரை ராகு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலும், 10-ம் இடத்தில் கேதுவும் நிற்பதால், அடுத்தடுத்த வேலைச்சுமையால் அவதிக்குள்ளாவீர்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் 8.1.16 முதல் ராகு 3-ம் வீட்டில் நுழைவதால், தடைப்பட்ட வேலைகளையெல்லாம் விரைந்து முடிப்பீர்கள். கேது 9-ல் நுழைவதால், தந்தையாருடன் மோதல்கள் வரக்கூடும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

சித்திரை, புரட்டாசி, தை, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு உண்டு. வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும். ஆனி, ஆடி, ஆவணி முற்பகுதி வரை சனி வக்ரமாகி ராசிக்கு 5-ல் அமர்வதால், பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உயர்கல்வி விஷயத்திலும் அவர்கள் விருப்பத்துக்கே விட்டுவிடுவது நல்லது.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து, அதற்கேற்ப புது முதலீடுகள் செய்யுங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். தை, பங்குனி மாதத்தில் நல்ல இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். மருந்து, கட்டட உதிரி பாகங்கள், லாட்ஜிங், எலெக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். உங்களுக்குத் தகுந்தாற்போல் நல்ல பங்குதாரரைச் சேர்ப்பீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிராகச் செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாறுவார். புது அதிகாரியால் மதிக்கப்படுவீர்கள். என்றாலும் ஜனவரி 7-ம் தேதி வரை கேது 10-ல் நிற்பதால், அலுவலகத்தில் சின்னச் சின்ன நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். புரட்டாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த ஆண்டு, சனி பகவான் திருவரு ளுடன் சாதகமாக அமைந்து, உங்களைச் சாதிக்க வைத் தாலும், குருவின் போக்கால் சிறுசிறு ஏமாற்றங்கள் ஏற்படக்கூடும். எனினும், தொலைநோக்குச் சிந்தனையால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

பரிகாரம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் மாரியம்மனை, வெள்ளிக்கிழமைகளில் சென்று எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து வணங்கி வழிபட்டு வாருங்கள். ஆலய உழவாரப் பணிகளுக்கு உதவுங்கள்.




மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 2:13 am

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R4சுதந்திரத்தை அளவாகப் பயன்படுத்துபவர் நீங்கள்! உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணவரவு திருப்தி கரமாக இருக்கும். திருமணம் கூடி வரும்.

உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், உங்களுடைய நிர்வாகத் திறமை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடிவடையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வருடம் பிறக்கும்போது சுக்ரனும் லாப வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், தாயாருடனான பிணக்குகள் நீங்கும். இந்த ஆண்டு முழுக்க உங்களின் சப்தம-அஷ்டமாதிபதியான சனிபகவான் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பூர்வீகச் சொத்தைப் பராமரிக்க அதிகம் செலவு செய்யவேண்டி வரும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மனைவியின் உடல்நலம் பாதிக்கக்கூடும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

4.7.15 வரை குரு ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாகத் தொடர்வதால், அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் அளவோடு பழகுவது நல்லது. 5.7.15 முதல் குரு தனஸ்தானமான 2-ம் வீட்டில் நுழைவதால், பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். நோய்களில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மழலை பாக்கியம் கிடைக்கும். ஜனவரி 7.1.16 வரை ராகு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், மனோபலம் கூடும். வெளிநாட்டில் இருப்பவர்களால் நல்ல திருப்பம் உண்டாகும். 9-ம் இடத்தில் கேது நிற்பதால், தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.

அவருக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சை, மூட்டு வலி, நெஞ்சு வலி வந்துபோகும். வழக்கை நினைத்து அவ்வப்போது பயம் வரும். 8.1.16 முதல் ராகு 2-ம் வீட்டில் நுழைவதால், பணப்பற்றாக்குறை நீடிக்கும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால் எதையும் யோசித்துப் பேசுவது நல்லது. கண் தொடர்பான பிரச்னைகள் வந்தால், உடனடியாக மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசிக்கவும். கேது 8-ல் மறைவதால், தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். என்றாலும், மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.

வியாபாரத்தில் சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்களும் வரும். உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். கணினி உதிரி பாகங்கள், உணவு, வாகனம், ரியல் எஸ்டேட் வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.

உத்தியோகத்தில், புரட்டாசி மாதம் முதல் வேலைச்சுமை குறையும். உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். வேலையில் ஈடுபாடு வரும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உயரதிகாரிகளின் கனிவுப் பார்வை உங்கள் மீது திரும்பும். எதிரியாக நினைத்த சக ஊழியர்கள் வலிய வந்து நட்புறவாடுவார்கள். வீண் பழி, அவதூறு வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களை சுறுசுறுப்பு ஆக்குவதுடன், உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: கும்பகோணம் சக்ரபாணி பெருமாளை துவாதசி நாளில் துளிசி மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். ஊனமுற்றோருக்கு உதவி செய்யுங்கள்.



மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 2:13 am

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R5எடுத்த முடிவுகளில் பின்வாங்கமாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால், மகிழ்ச்சி தங்கும். குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும். உங்கள் யோகாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், சிலருக்கு வெளிநாடு, அண்டை மாநிலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

வைகாசி, ஆனி, தை, பங்குனி மாதங்களில் பண வரவு அதிகரிக்கும். மகளுக்குத் திருமணம் முடியும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உங்கள் ராசிநாதன் சூரியன் பலவீனம் அடைவதால், முதுகு வலி, உறவினர் பகை, வீண் செலவுகள் வந்து நீங்கும். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குரு மறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், செலவுகள் அதிகமாகும். அலைச்சலும் இருக்கும். வீண்பழிகளும் வரக்கூடும். 5.7.15 முதல் உங்கள் ராசிக்குள் குரு நுழைவதால், ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவுகள் ஏற்படக்கூடும்.

உங்களுடைய ராசிக்கு பிரபல யோகாதிபதி யாக விளங்கும் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும்போது, புத்தாண்டு பிறப்ப தால், பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்னைகள் தீரும். வீடு, மனை வாங்குவீர்கள். தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். விட்டுக்கொடுத்துப் போகவும்.புதன் சாதகமாக இருப்பதால், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். சாதுர்யமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். ராசிக்கு 10-ல் சுக்ரன் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், தைரியம் கூடும். மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் ராகு நிற்பதால், பார்வைக் கோளாறு வந்து நீங்கும். சிலருக்கு சின்னச் சின்ன அறுவைச் சிகிச்சைகள் வர வாய்ப்பிருக்கிறது. 8.1.16 முதல் ராகு உங்கள் ராசிக்குள் நுழைய இருப்ப தால், மன உளைச்சல், தாழ்வுமனப்பான்மை வந்து போகும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். ராகுவின் போக்கு சரியில்லாததால், குலதெய்வத்தை வணங்குங்கள்.

கேது உங்களுடைய ராசிக்கு 8-ல் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், சேமிப்புகள் கரையும். மனைவிக்கு ஆரோக்கியம் குறையும். 8.1.16 முதல் 7-ம் வீட்டிலேயே கேது வந்து அமர்வதால், மனைவியுடன் கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். இந்த ஆண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டிலேயே சனி தொடர்வதால், தாயாருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வரக் கூடும். சில நேரங்களில் அரசுக்கு அபராதம் செலுத்த நேரிடலாம்.

பொதுவாக, இந்த வருடத்தில் வியாபாரம் ஓரளவுதான் லாபம் தரும். எனவே, பெரிய முதலீடுகள் வேண்டாம். மற்றபடி, உங்களுடைய ராசிக்கு 6-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். அண்டை மாநிலத்தில், வெளிநாட்டில் இருப்பவர்களின் ஆதரவால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.பிளாஸ்டிக், கெமிக்கல், மருந்து, கட்டுமானப் பொருட்களால் லாபம் வரும். வைகாசி, ஆனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். தள்ளிப் போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடும். எனினும், உயரதிகாரிகளின் ஆதரவு உண்டு. உத்தியோக ஸ்தானத்தை சனி பார்ப்பதால் வீண் விமர்சனங்கள், விரும்பத்தகாத இடமாற்றங்கள் இருக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். தை, பங்குனி மாதங்களில் புது வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சற்றே ஆரோக்யக் குறைவையும், ஒருவித படபடப்பையும் தந்தாலும், கடந்த கால அனுபவ அறிவால் முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், பழைய சீவரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மரை, புதன் கிழமையில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். ஏழைகளின் கல்விக்கு உதவுங்கள்.



மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 2:14 am

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R6திட்டமிடுவதில் வல்லவர் நீங்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் குரு அமர்ந்திருக்கும்போது மன்மத வருடம் பிறப்பதால், நீண்ட நாள் கனவுகள் நனவாகும். குடும்ப வருமானம் உயரும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும்.உங்கள் ராசியிலேயே ராகு அமர்ந்திருக்கும்போது மன்மத வருடம் பிறப்பதால், சிறுநீரக தொற்று ஏற்படலாம்; கவனம் தேவை. பயணங்களிலும் எச்சரிக்கை தேவை.

ராகு ராசிக்குள்ளேயே 7.1.16 வரை நீடிப்பதால், முன்கோபம் அதிகமாகும். நண்பர்களுடன் பகை ஏற்படக்கூடும். தூக்கம் குறையும். ராசிக்கு 7-ல் கேது அமர்ந்திருப்பதால், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். மனைவிக்கு பித்தப் பை சம்பந்தமான பிரச்னைகள் வந்து நீங்கும். 8.1.16 முதல் ராகுவும், கேதுவும் சாதகமாவதால், யோக பலன்கள் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் மோதல்கள் விலகும்.

ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தின் முற்பகுதி வரை உங்கள் ராசிக்கு பகைக் கோளான செவ்வாயின் போக்கு சரியில்லாததால், ரத்தத்தில் ஹீமோ குளோபின், கால்சியம் பற்றாக்குறையும், மின்சாரம், நெருப்பால் சிறுசிறு விபத்துகளும், சகோதர வகையில் செலவுகளும் வந்து நீங்கும்.

ராசிக்கு 3-ம் வீட்டில் சனி நிற்கும்போது மன்மத வருடம் பிறப்பதால், தன்னம்பிக்கை அதிகமாகும். வழக்குகள் சாதகமாகும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வெளிநாடு, அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் பயனடைவீர்கள். புதிய நண்பர்களால் அனுகூலம் உண்டு.

சந்திரன் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது மன்மத வருடம் பிறப்பதால், குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் உங்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்வார்கள். உங்களுடைய ராசிக்கு 8-வது வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். சகோதர வகையில் மனவருத்தம் வரும். பூமி, சொத்து, பாகப்பிரிவினை பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உடல் உஷ்ணம் அதிகமாகும். தலையில் அடிபட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுடைய ராசிநாதன் புதன் பலவீனமாக இருப்பதால், சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் - பொல்லாதவர்களை இனம் காண்பதில் குழப்பம் ஏற்படும்.

உங்களின் தன-பாக்யாதிபதியான சுக்ரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அவருக்கு நல்ல நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும்.

வியாபாரத்தில், இந்த வருடம் அதிக லாபம் ஈட்டுவீர்கள். கடன் தொகையை நயமாகப் பேசி வசூல் செய்வீர்கள். கட்டுமானப் பொருட்கள், வாகன வகைகள், இரும்பு, உணவு வகைகளால் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கார்த்திகை, மார்கழி, மாசி மாதங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த வழி பிறக்கும்.

உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். ஆனி, ஆடி மாதங்களில் சம்பளம் உயரும். உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு தந்த அதிகாரி மாற்றப்படுவார். கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான வழக்கு சாதகமாகும். சம்பள நிலுவைத் தொகை கைக்கு வரும். மார்கழி, மாசி மாதங்களில் புது வாய்ப்புகளும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, புதிய வாய்ப்பு வசதிகளை ஓரளவு அதிகரிக்கச் செய்வதாகவும் அமையும்.

பரிகாரம்: திருச்சி- உறையூருக்கு அருகில் திருக்கோழியூரில் அருளும் அழகியமணவாளப் பெருமாளை, சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.



மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 2:15 am

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R7எல்லோரையும் அனுசரித்துச் செல்பவர் நீங்கள்.உங்களின் ராசி நாதனான சுக்ரன் ராசிக்கு 8-ல் மறைந்து இருந்தாலும், ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில், மன்மத வருடம் பிறப்பதால் உங்களுடைய அனுபவ அறிவு கூடும். நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஆற்றலும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் குரு அமர்ந்திருக் கும் நேரத்தில் மன்மத வருடம் பிறப்பதால், 4.7.15 வரை இனம் தெரியாத கவலைகளும், வீண் பயமும் இருந்துகொண்டே இருக்கும்.5.7.15 முதல் குரு லாப வீட்டில் வந்து அமர்வதால் பணவரவு அதிகரிக் கும். செல்வாக்கு கூடும், தடைகள் அகலும்.வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. மகளுக்கு நல்ல வரனும் மகனுக்கு வேலையும் அமையும்.

ஏழரைச் சனி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், செலவுகள் துரத்தும். எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பயம் இருக்கும். பாதச் சனி நடைபெறுவதால், கை, காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருங்கள். அவ்வப்போது பார்வைக் கோளாறு, காது வலி, தொண்டை வலி வந்து போகும். உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால், உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் வாக்குவாதங்கள் வரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது, கூடுதல் அறை அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும்.

ராசிக்கு 6-ல் 7.1.16 வரை கேது தொடர்வதால், பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். குடும்ப வருமானம் உயரும். ஷேர் மூலம் பணம் வரும். 8.1.16 முதல் 5-ம் வீட்டுக்குள் கேது நுழைவதால், பிள்ளைகளுடன் மனத்தாங்கல் வரும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். 7.1.16 வரை ராசிக்கு 12-வது வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால், வேலைச்சுமை அதிகமாகும். ஆனால், 8.1.16 முதல் ராகு 11-வது வீட்டுக்கு வருவதால், திடீர் பண வரவு உண்டு. உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் நிற்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், மனைவியின் உடல் நிலை பாதிக்கும். அவ்வப்போது ஈகோ பிரச்னைகளும், வாக்குவாதங்களும் வரும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.ஆடி மாதம் மத்திய பகுதி துவங்கி ஆவணி மாதத்திலும் உங்கள் ராசிநாதன் சுக்ரன் வக்ரமாகி நிற்பதால், சிறுசிறு விபத்துகள், சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.

வியாபாரத்தில் தேக்க நிலை நீடிக்கும். பாக்கிகளை வசூலிப்பதிலும் இடையூறுகள் இருக்கும். வேலையாட்களாலும் பிரச்னைகள் அதிகரிக்கும். ஜூலை மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். புது முதலீடு செய்ய உதவிகள் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களிலும் புது ஒப்பந்தங்கள் கூடி வரும். தை, மாசி, பங்குனி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையாட்களால் எழும் பிரச்னைகளும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

உத்தியோகத்தில் ஏமாற்றங்களும், சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும் இருந்துகொண்டிருக்கும். ஆடி மாதம் முதல் உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. மூத்த அதிகாரிகளுடனான மோதல்கள் விலகும். வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பும் வரும். தை, மாசி, பங்குனி மாதங்களில் பதவி- சம்பள உயர்வை எதிர்ப்பார்க்கலாம். புது வேலையும் சிலருக்கு கிடைக்கும். அயல்நாடு மற்றும் வெளிநாடு தொடர்புடைய நிறவனத்திலும் சிலருக்கு வேலை கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த புத்தாண்டு, ஏழரைச் சனியால் சில இடையூறுகளை அளித்தாலும், குருவின் திருவருளால் சாதிக்க முடியும்!

பரிகாரம்: பண்ருட்டி அருகில் திருத்துறையூரில் அருளும் பசுபதீஸ்வரரை, பிரதோஷ நன்னாளில் வில்வார்ச்சனை செய்து வழிபடுங்கள். ஏழைப் பெண்களுக்கு உதவுங்கள்.



மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 2:16 am

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R8பிறருக்கு உதவும் மனப்பான்மை மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்குள்ளேயே சனி நின்றுகொண்டிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஏழரைச் சனியின் தாக்கம் உங்களுக்கு அதிகரித்திருப்பதால், கோபம் அதிகமாகும். வளைந்துகொடுத்துப் போவதன் மூலமாக இந்த வருடத்தில் நீங்கள் அதிகம் வெற்றிபெறலாம்.

ராசிக்கு 3-வது ராசியில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால், மனதில் தைரியம் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பணவரவு உயரும். சந்திரன் சாதகமாக இருப்பதால், சமயோசித புத்தியாலும் சாதித்துக் காட்டுவீர்கள். 7.1.16 வரை கேது 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். 8.1.16 முதல் 4-ம் வீட்டில் கேது வந்து அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், மனோபலம் கூடும். ஆனால் செவ்வாய் 6-ல் மறைந்திருப்பதால், கொஞ்சம் அலைச்சலும் இருக்கும். உங்களுடைய ராசிநாதனாகிய செவ்வாய் ஆனி மற்றும் ஆடி மாதத்திலும், ஐப்பசி மாதம் பிற்பகுதி முதல் கார்த்திகை, மார்கழி மாதம் முன்பகுதி மற்றும் மாசி மாதம் பிற்பகுதி முதல் பங்குனி மாதம் வரை பலவீனமாக இருப்பதால், இக்காலகட்டங்களில் சிறுசிறு விபத்துகள், பண இழப்புகள், சகோதரர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும்.

புதன் உங்களுடைய ராசிக்கு 6-ல் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பழைய நண்பர்களால் தொந்தரவுகள் அதிகரிக்கும். உங்களுடைய ராசிக்கு 7-வது வீட்டில் சுக்ரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், மனைவி ஒத்தாசையாக இருப்பார். மனைவிவழி உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், சனி மனைவி ஸ்தானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதால், அவ்வப்போது சண்டை, சச்சரவுகள் வந்துபோகும். வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

குரு பகவான் 4.7.15 வரை சாதகமாக இருப்பதால், மகளுக்குத் திருமணம் கூடி வரும். ஆனால், உங்களுக்கு ஜென்மச் சனி நடைபெறுவதால், பிள்ளைகளின் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் நேரத்தில் விசாரித்துப் பார்த்து திருமணம் முடிப்பது நல்லது. 5.7.15 முதல் உங்கள் ராசிக்கு குரு 10-ம் வீட்டில் வந்து அமர்வதால், உங்களைப் பற்றிய விஷயங்களை, ரகசியங்களை தெரிந்து வைத்திருப்பவர்கள் அதை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப முதலீடு செய்வது நல்லது. ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபம் அதிகரிக்கும். ஜென்மச் சனி நடைபெறுவதால், வேலையாட்களால் இழப்புகள், ஏமாற்றங்கள் வரும். சித்திரை, வைகாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் வரும். ஆவணி மாதத்தில் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சித்திரை, வைகாசி மாதங்களில் புதுச் சலுகைகள் கிடைக்கும். ஜூலை முதல் குரு 10-ம் வீட்டில் வந்தமர்வதால் வேலைச்சுமை, விரும்பத்தகாத இட மாற்றங்கள் எல்லாம் வந்துபோகும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். சிலர் பணியிலிருந்து கட்டாய ஓய்வு பெறக்கூடிய சூழ்நிலை உருவாகும். முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். ஆவணி, தை மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மொத்தத்தில் இந்த புத்தாண்டு ஆரோக்ய குறைவையும், அலைச்சலையும் தந்தாலும், செல்வாக்கும் செல்வமும் பெற்றுத்தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: வியாழக் கிழமைகளில் அருகிலுள்ள சாயிபாபா சந்நிதிக்குச் சென்று, கூட்டுப் பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு வழிபட்டு வாருங்கள். இயன்றால் ரத்ததானம் செய்யுங்கள்.



மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 2:16 am

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! R9தனக்குத்தானே நீதிபதியாக இருப்பவர்களே! உங்கள் ராசிக்கு 2-வது வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். செல்வாக்கு கூடும். உங்களைப் பற்றிய அவதூறுகள் குறையும். ஆனால் ஏழரைச் சனி உங்களுக்கு தொடங்கியிருப்பதால், பண விஷயத்தில் கொஞ்சம் கறாராக நடந்துகொள்வது நல்லது. தன்னம்பிக்கை குறையும். கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும்.

7.1.16 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் கேது தொடர்வதால், தாயாரின் உடல் நிலை பாதிக்கும். சின்னச் சின்ன காரியங்களைக்கூட ஒரே முயற்சியில் முடிக்க முடியாமல் போகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளும் தலைதூக்கும். 8.1.16 முதல் கேது 3-ம் வீட்டில் நுழைவதால், தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மனத்தாங்கல் நீங்கும். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாகும்.அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். 7.1.16 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால், அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். கௌரவக் குறைவான சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் அடிமனதில் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் 8.1.16 முதல் ராகு 9-ம் இடத்தில் நுழைவதால், வேலைச்சுமை குறையும். வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது.

உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், குழந்தை பாக்யம் உண்டாகும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் கூடி வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஆனால் சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளால் தவிர்க்க முடியாத செலவுகள் இருக்கும். 4.7.15 வரை உங்கள் ராசிநாதன் குரு 8-ல் மறைந்திருப்பதால், அலைச்சலும், செலவினங்களும் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கும். நண்பர்கள்கூட உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை விட்டு விலகுவார்கள். ஆனால் 5.7.15 முதல் குரு உங்களுடைய ராசிக்கு 9-ல் அமர்ந்து உங்கள் ராசி யைப் பார்க்க இருப்பதால், நல்லது நடக்கும். அலைச்சல் குறையும். பண வரவு அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். தந்தைவழிச் சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

வியாபாரத்தில், இந்த ஆண்டு லாபம் அதிகமாகும். ராசிநாதனாகிய குரு பகவான் 5.7.15 முதல் 9-ல் அமர்வதால், வியாபாரத்தை விரிவுபடுத்த கடனுதவி கிடைக்கும். வைகாசி, ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. நல்லவர்கள் பங்குதாரர்களாக அறிமுகமாவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும். என்றாலும் 7.1.16 வரை ராகு 10-ம் வீட்டிலேயே நிற்பதால் இழப்புகள் வந்து போகும்.

உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும் வைகாசி ஆவணி மாதங்களில் புதிய வாய்ப்புகள் வரும். பதவி- சம்பள உயர்வும் பெறுவீர்கள். புரட்டாசி மாசி மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களும் மதிப்பார்கள் 7.1.16 வரை ராகு 10-ம் இடத்திலேயே தொடர்வதால் வேலைச்சுமை இருக்கும். ஆனால், ஜூலை முதல் குரு 9-ம் வீட்டில் நுழைவதால் சம்பள பாக்கி கைக்கு வரும். ஆவணி, மாதத்தில் பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் வேறு நல்ல நிறுவனத்திலும் வேலைக் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த புத்தாண்டு, தடுமாற்றம், தயக்கத்தில் இருந்து விடுவிப்பதுடன், பல நற்காரியங்களில் வெற்றி பெற வைப்பதாக அமையும்.

பரிகாரம்: ஞாயிறு அல்லது தசமி நாளில், திருக்கோவிலூரில் அருளும் வீரட்டேஸ்வரரை நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்.



மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக