புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
68 Posts - 46%
heezulia
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
64 Posts - 43%
mohamed nizamudeen
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
5 Posts - 3%
prajai
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
2 Posts - 1%
jairam
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
1 Post - 1%
kargan86
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
107 Posts - 52%
ayyasamy ram
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
9 Posts - 4%
prajai
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
2 Posts - 1%
jairam
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_m10ஊழலே பொதுப்பணி ஆனது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழலே பொதுப்பணி ஆனது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2015 2:16 am


தமிழகம் ஊழலில் சிக்கித் தவிக்கிறது என்பதற்கு அடுக்கடுக்காக ஆதாரங்கள் பெருகிவருகின்றன. நெல்லை வேளாண் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியிடம் டிரைவர் வேலை நியமன விவகாரத்தில் அரசியல்வாதிகள் டார்ச்சர் செய்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டார். இதுபோல தொடரும் ஒவ்வொரு அதிகாரியின் தற்கொலைக்குப் பின்னணியிலும் ஆளும் கட்சியினர் மற்றும் துறை அதிகாரிகளின் தலையீடு இருப்பது தெரியவருகிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கம் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. அதில் பொதுப்பணித் துறையில் இதுவரை நடந்த ஊழலை இந்த சங்கம் அம்பலப்படுத்தி இருக்கிறது. முதற்கட்டமாக இந்த சங்கம் சார்பில் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் தொடங்கி, உதவிப் பொறியாளர் வரையான 10 பேரின் பெயர் பட்டியல் கடந்த 9ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுக்கப்பட்டது!

''45 சதவிகிதம் கமிஷன் கேட்கிறார்கள்!'

தமிழ்நாடு பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் குணமணியிடம் பேசினோம். ''பொதுப்பணித் துறையில் அரசு அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர்கள் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதில், சென்னையில் பாராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் 150 பேரும் கட்டுமான பணிகளுக்கு 106 ஒப்பந்ததாரர்கள் உள்பட 600க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இதில், சிலருக்கு மட்டுமே தொடர்ந்து பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில டெண்டர்கள் முறைப்படி நடப்பது இல்லை. ஆளும் கட்சியினர் தொடங்கி அதிகாரிகள் வரை தலையீடு அதிகமாக இருக்கின்றன.

ஒரு பணியில் 45 சதவிகிதம் கமிஷனாகக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஒப்பந்ததாரர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். மீதமுள்ள 55 சதவிகித பணத்தைக்கொண்டு பணிகளை செய்து அதில் லாபமும் பார்க்க வேண்டியதுள்ளது. அப்படியென்றால் பணிகள் எந்த அளவுக்கு செய்யப்பட்டு இருக்கும் என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். இந்த லட்சணத்தில்தான் பணிகள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.

பொதுப்பணித் துறை அமைச்சருக்கு 5 சதவிகிதம், மற்ற துறையில் பணிகள் நடந்தால் அந்தத் துறை அமைச்சருக்கு 5 சதவிகிதம், கண்காணிப்புப் பொறியாளருக்கு 2 சதவிகிதம், செயற்பொறியாளருக்கு 7 சதவிகிதம், உதவி செயற் பொறியாளருக்கு 7 சதவிகிதம், உதவிப் பொறியாளருக்கு 7 சதவிகிதம், பணி ஆய்வாளர் (ஒர்க்கிங் இன்ஸ்பெக்டர்) 3 சதவிகிதம், அலுவலக ஊழியர்களுக்கு 5 சதவிகிதம், வருமானவரித் துறை, சேல்ஸ் டாக்ஸ் ஆகியவற்றுக்கு தலா 2 சதவிகிதம் என 45 சதவிகித பணம் கொடுக்க வேண்டும் என்பது இந்தத் துறையில் எழுதப்படாத சட்டம். இதில் வருமானவரித் துறை, சேல்ஸ் டாக்ஸ் மட்டுமே அரசு கஜானாவுக்குச் செல்கிறது. மற்றவை அனைத்தும் தனிப்பட்ட நபரின் பாக்கெட்டுக்குச் சென்றுவிடுகிறது.

பல பொறியாளர்கள் ஒப்பந்தததாரர்களிடம், 'மந்திரிக்குக் காசு கொடுங்கள்’ என்று கேட்பது வாடிக்கை. 10 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதம் வரை பணத்தை லஞ்சமாகக் கொடுத்தோம். இப்போது 45 சதவிகிதப் பணத்தைக் கேட்பதால் எங்களால் கொடுக்க முடியவில்லை. லஞ்சம் கொடுக்காத ஒப்பந்ததாரர்களுக்கு எந்தப் பணிகளும் வழங்கப்படுவது இல்லை. பொதுப்பணித் துறையில் நடந்து வரும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே எங்களிடம் லஞ்சம் கேட்ட முதல் 10 பொறியாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறோம்.

இந்தப் பட்டியலில் சென்னை சேப்பாக்கம் மருத்துவப் பணிகள், கட்டடம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்புப் பொறியாளர் கே.மோகன்ராஜ் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்து உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியராஜ், ஆயிரத்து அரசு ராஜசேகர், திருமூர்த்தி, சங்கரலிங்கம், சிவசண்முகசுந்தரம், கிருஷ்ணசாமி, உதவி பொறியாளர்கள் சண்முகநாதன், செந்தில் கமலாகரன், செயற்பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் உள்ளனர்.

இது ஆரம்பம்தான்... அடுத்த லிஸ்ட் விரைவில் வரும். அதில், தமிழகம் முழுக்க ஊழல் செய்த 22 பேரின் விவரங்கள் இடம்பெறும். அதையும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் விரைவில் கொடுக்க உள்ளோம். இந்தத் துறையில் உள்ள பெரும்பாலான பொறியாளர்கள் மந்திரிக்குக் காசு கொடுக்க வேண்டும் என்று சொல்லியே லஞ்சம் கேட்கிறார்கள். இந்த அளவுக்கு ஊழல் பெருகி உள்ள இந்தத் துறையின் அமைச்சரும், முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்க பல முறை முயற்சி செய்தோம். ஆனால் அவர் எங்களைச் சந்திக்கவில்லை.

இந்தத் துறை செயலர் மற்றும் முதன்மை பொறியாளர், தலைமைப் பொறியாளரையும் சந்திக்க முயற்சித்தோம். சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஊழல் பட்டியலில் தங்களின் பெயரை குறிப்பிட வேண்டாம் என்று சில பொறியாளர்கள் எங்களிடம் பேரம் பேசி வருகிறார்கள். ஒரு பொறியாளர் தரப்பில் எங்களிடம் 5 கோடி ரூபாய் வரை பேரம் நடந்தது. அதற்கு நாங்கள் சம்மதிக்காததால் எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கிறார்கள். உயிர் போனாலும் பரவாயில்லை. ஊழல் பெருச்சாளிகளை வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்துவோம். பொறியாளர்கள் செய்த ஊழல் தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்து இருக்கிறோம். லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக எங்களை கைது செய்தாலும் பரவாயில்லை. லஞ்சம் வாங்கியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டால் போதும்'' என்றார்.



ஊழலே பொதுப்பணி ஆனது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2015 2:16 am

''அமைச்சர்களின் பினாமிகள்!'

ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ''ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் கிரானைட் பணியை செய்தேன். அந்தப் பணி முடிந்து பில் பாஸ் செய்ய மந்திரிக்கு காசு கொடுக்க வேண்டும் என்று அங்குள்ள உதவி செயற்பொறியாளர் தர் என்னிடம் 90 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டார். இந்த உரையாடல் வாட்ஸ்அப்பில் வந்தபிறகு எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதற்குப் பயப்படாமல் சங்கம் சார்பில் சேப்பாக்கம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் ஊழல் செய்த பொறியாளர்கள் தொடர்பான பேனர் வைக்கப்பட்டது. அதை சிலர் இரவோடு இரவாக கிழித்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் மெரீனா காவல் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறையில் வேலை செய்யாமல் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள், அமைச்சர்கள் பங்களாக்களில் பராமரிப்புப் பணி என்று சொல்லி பல லட்சங்களை சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் சுருட்டி இருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பராமரிப்புப் பணி, அமைச்சரின் பினாமி ஒப்பந்ததாரருக்கு மட்டுமே கொடுக்கப்படும். சில டெண்டரை பேரம் பேசி தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

கடந்த 5ம் தேதி நடந்த டெண்டரில் வி.ஐ.பி. தரப்பினருக்கு 24 சதவிகிதம் கொடுத்து 50 கோடி மதிப்பிலான பணிகளை வெளிமாவட்ட ஒப்பந்ததாரர்கள் பெற்று இருக்கிறார்கள். இதற்கென தனி நெட்வோர்க் செயல்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட ஆளும் கட்சி மாவட்ட செயலாளர்களுக்குத் தனியாக 10 சதவிகிதம் கமிஷன் கொடுக்கப்படுகிறது. கடந்த 2007ல் போடப்பட்ட அரசு உத்தரவு (ஜி.ஓ. எண் 422007) பொறியாளர்களுக்குச் சாதகமாக உள்ளது. அதைத் திருத்தியமைக்க வேண்டும். இல்லையெனில் ரத்துசெய்ய வேண்டும். ஊழல் பட்டியல் வெளியிட்டதைத் தொடர்ந்து சங்கத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்களது போராட்டம் தொடரும்'' என்று படபடத்தார்.



ஊழலே பொதுப்பணி ஆனது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2015 2:17 am

''பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும்!'

தரமணியில் உள்ள பொதுப்பணித் துறையின் நீர் ஆதரவு நிறுவனத்தின் செயற்பொறியாளர் தேவராஜன், லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் பேசினோம். ''பொதுப்பணித் துறையில் காலம் காலமாக ஊழல் நடந்து வருகிறது. அதை ஒப்பந்ததாரர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பட்டியலில் முதலில் உள்ள மோகன்ராஜ், தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியாளர் சங்கத்தின் தலைவர். பாண்டியராஜ், இணைச் செயலாளர். இவர்களைக் காப்பாற்ற சங்கத்தில் சிலர் முயற்சித்து வருகிறார்கள்.

சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கடந்த 1992ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கையால் சிறந்த பொறியாளர் என்பதற்கு அண்ணா விருதை வாங்கியுள்ளேன். பணியில் நேர்மையாக இருப்பதால் எனக்கு டம்மி போஸ்ட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வுகூட கிடைக்க காலதாமதப்படுத்தப்படுகிறது. பொதுப்பணித் துறை பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்களே பொறியாளர்கள் மீது குற்றம் சுமத்துவதால் நிச்சயம் இது உண்மையாகத்தான் இருக்கும். எனவே, இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும். சம்பந்தப்பட்ட பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். துறைவாரியான மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.



ஊழலே பொதுப்பணி ஆனது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2015 2:17 am

7,500 தங்க நாணயங்கள்!

பொதுப்பணித் துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ''ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கண்காணிப்புப் பொறியாளர் மோகன்ராஜின் மகன் 'மொசக்குட்டி’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் வெளியானபோது தமிழகம் முழுவதுமுள்ள பொதுப்பணித் துறை பொறியாளர்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டும். இல்லையெனில் டிக்கெட் எடுத்து மற்றவர்களுக்குக் கொடுத்து படத்தைப் பார்க்க வைக்க வேண்டும் என்று மோகன்ராஜ் வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்துப் பொறியாளர்களும் படத்தைப் பார்த்து இருக்கிறார்கள். அவருக்கு விசுவாசியான ஒப்பந்ததாரர்கள் 'மொசக்குட்டி’ படத்துக்கு பேனர் வைத்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்.

ஓய்வுபெற்ற பிறகும் ஆலோசகர் என்ற பதவியில் இரண்டு ஆண்டு காலமாக இருந்த பொறியாளர் ஒருவர், மேலிடத்துக்குப் பணத்தை வசூலித்துக் கொடுப்பதில் கில்லாடி.

முதன்மைப் பொறியாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர், வி.ஐ.பிக்கு நெருக்கமானவர் என்பதால் அந்தப் பதவியில் நீட்டிப்புப் பெற்று பல கோடிகளைச் சம்பாதித்து உள்ளாராம். இவரது உறவினர் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தில் மரக்கடை நடத்தி வருகிறார். அவர் மூலம் செம்மரக்கடத்தலிலும் ஈடுப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். மேலும், இந்த முதன்மைப் பொறியாளரின் மகள் திருமணத்துக்கும் அவரது வீடு குடிபுகும் விழாவுக்கும் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் தலா ஒரு சவரன் தங்க நாணயத்தை அன்பளிப்பாக கொடுத்து இருக்கிறார்கள். மொத்தம் 7,500 தங்க நாணயங்கள் வந்ததாகச் சொல்கிறார்கள். தனியார் வங்கியில் இவரது மனைவி பெயரில் ஷேர் இருக்கிறதாம்'' என்று சொல்கிறார்கள்.

ஒப்பந்தத் தொகையில் பாதி பணம் இப்படி லஞ்சமாகப் போனால் வேலை எப்படி சிறப்பாக இருக்கும்?



ஊழலே பொதுப்பணி ஆனது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2015 2:18 am

''ஒப்பந்ததாரர்கள்தான் எங்களை மிரட்டுகிறார்கள்!''

தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியாளர் சங்கத் தலைவரும் கண்காணிப்புப் பொறியாளருமான கே.மோகன்ராஜிடம் பேசினோம். இவர்தான் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர். ''நான் உள்பட 10 பொறியாளர்கள் மீது ஒப்பந்ததாரர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்துள்ள புகார் அடிப்படை ஆதாரமற்றது. அது அனைத்தும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள்.

கடந்த 2007ம் ஆண்டு அரசு ஜி.ஓ 42ன்படி பொறியாளர்கள் அவசர பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தப் பணிகளும் ஒப்பந்ததாரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. நாங்கள் நேர்மையாளர்கள், நடுநிலையாளர்கள். என்றைக்குமே அனைத்துப் பணிகளும் எல்லா ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுத்துள்ளோம். சில ஒப்பந்ததாரர்கள் லாபம் தரும் பணிகளை மட்டுமே செய்ய விரும்புவார்கள். அவர்கள்தான் இதுபோன்று பொறியாளர்களை விஜிலென்ஸில் பிடித்துக் கொடுத்து விடுவதாக மிரட்டுவார்கள். ஒப்பந்ததாரர்களை பணி நிமித்தமாகக் கண்டிக்கும் பொறியாளர்கள் மீது தேவையில்லாத குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.

விஜிலென்ஸில் கொடுத்துள்ள புகாரை சட்டப்படி சந்திப்போம். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் செய்துள்ள பணி விவரங்களும் எங்களிடம் உள்ளன. இந்தப் பிரச்னையை சும்மா விடப்போவதில்லை. 45 சதவிகித கமிஷன் என்பது எல்லாம் சுத்தப்பொய். ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் குணமணி, கடந்த 2010ல் சேப்பாக்கத்தில் ஒரு பொறியாளரை விஜிலென்ஸில் பிடித்துக் கொடுத்துள்ளார். அந்த வழக்கு நடந்து வருகிறது. 'மொசக்குட்டி’ படத்தைத் தயாரித்தவர் என்னுடைய பினாமி என்று சொல்வது முற்றிலும் தவறானது. அந்தப்படத்தில் என்னுடைய மகன் தினேஷ் கதாநாயகனாக வீரா என்ற பெயரில் நடித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. படம் வெளியானபோது குணமணி உள்ளிட்ட சில ஒப்பந்ததாரர்கள் விளம்பரம், பேனர் வைத்தனர். அப்போது அவர்களைக் கண்டித்தேன். என்னுடைய மகன் தினேஷ் டாக்டர். அந்த வேலையை அவன் செய்வதே எனக்கு விருப்பம்'' என்று சொன்னார்.

ஒப்பந்ததாரர்கள் லஞ்ச ஒழிப்புப் துறையில் கொடுத்துள்ள புகார் ஒட்டுமொத்த பொதுப்பணித் துறையை உலுக்கியுள்ளது. ''ஒப்பந்ததாரர்களின் இந்த செயல், பொறியாளர்களுக்கு மனவேதனை, உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசுக்குக் கெட்டப் பெயர் ஏற்படுத்தும். இநக்ச் செயலை வண்மையாக கண்டிக்கிறோம். பொறியாளர்கள் தவறு செய்திருந்தால் விதிமுறைக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம்'' என்று பொதுப்பணித் துறை பொறியாளர் சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

விகடன்



ஊழலே பொதுப்பணி ஆனது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக