புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_c10அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_m10அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_c10 
21 Posts - 66%
heezulia
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_c10அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_m10அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_c10அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_m10அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_c10 
63 Posts - 64%
heezulia
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_c10அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_m10அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_c10அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_m10அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_c10அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_m10அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 15, 2015 11:56 am

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு IlNLF7g4SRR1wBnM7Zwa+jj_2511425g
-
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு P2p3lcWnS9KbIFKPAnw4+jj2_2511426g
-

நாட்டின் 69-வது சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றி உரையாற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே அரசின் லட்சியம் அந்த லட்சியத்துக்காகவே தமிழக அரசு செயல்படுகிறது" என்றார்.

அவரது முழு உரை:


இந்திய நாட்டின் விடுதலைக்காக உரிமைக் குரல் எழுப்பி, நாளெல்லாம் சிறை கண்டு, அடிபட்டு, மிதிபட்டு, நாடி நரம்புகள் வலுவிழந்து, மாண்டு போன பெயர் தெரியாத ஆயிரக்கணக்கான சுதந்திரத் தியாகிகள்; தூக்குக் கயிற்றை துச்சமென மதித்து முத்தமிட்ட தென்புலத்து வீரபாண்டிய கட்டபொம்மன்; புலியெனச் சீறிய பூலித்தேவன்; வீரமிகு மருது பாண்டியர்; தீரமிகு தீரன் சின்னமலை; தாய்நாட்டுக் கொடி காக்க தன்னை மாய்த்துக் கொண்ட கொடி காத்த திருப்பூர் குமரன்; தாய் நாட்டுக்காக தன்னையே மாய்த்துக் கொண்ட வீர வாஞ்சிநாதன், பாட்டுக்கொரு புலவன் பாரதி; தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்" என்று சொன்ன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்; வீரமங்கை வேலு நாச்சியார்; வீரமங்கை வேலுநாச்சியாரின் படைத் தளபதி வீரர் தாய் குயிலி; வட இந்தியாவைச் சேர்ந்த பகத் சிங், குருதேவ், ராஜகுரு என எண்ணற்ற வீரர்களை நெஞ்சில் நினைத்து போற்றுவதற்கம்; அவர்களின் புகழை பாடுவதற்கும்; அவர்களின் தியாகங்களை நினைவு கூரவும் இந்தச் சுதந்திரத் திருநாளை நாம் இங்கே இன்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

சுதந்திரத்தின் இலக்கணம் என்ன என்பது ஒவ்வொருவரின் மனப்பாங்கைப் பொறுத்து அமைகிறது. இருப்பினும், சுதந்திரத்தின் அடித்தளமாக, ஆணிவேராக, அச்சாணியாக விளங்குவது பொருளாதாரச் சுதந்திரம். பொருளாதாரச் சுதந்திரம் என்பது இன்றியமையாத தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலும்; பிறரைச் சார்ந்திராமல் சொந்தக் காலில் நிற்பதை உறுதி செய்யும் வகையிலும்; அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுதலே ஆகும். அனைவருக்கும் தேவையான வாழ்வாதாரம் கிடைப்பதும்; சமூகரீதியில் ஏற்றத்தாழ்வுடன் இல்லாத நிலையுமே. உண்மையான சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்கப்பெற்றுள்ளதை பறைசாற்றுவதாக அமையும்.

ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனுமில்லை;

சாதியில் இழிவு கொண்ட மனிதரென்பர் இந்தியாவில் இல்லையே!


என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளே சுதந்திரம் என்பதற்கான உள்ளார்ந்த பொருள்.

இதையே தான் நமது ஆன்றோர்களும் சான்றோர்களும்

"ஏழை ஈடேற வேண்டும்;

ஏழை உரிமை பெற வேண்டும்;

சாதி பேதம் ஒழிய வேண்டும்;

ஒற்றுமை மலர வேண்டும்"
என்று கூறினர்.

பாரதி கண்ட கனவை நனவாக்கும் வகையில் "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற லட்சியத்தை இலக்காகக் கொண்டு; தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெறும் நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக எடுத்து வருகிறது"

ஏழைகள் ஏற்றம் பெறுவதற்கு அடித்தளமாக விளங்கும் அறிவைத் தரக்கூடிய கல்விக்கு எனது அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைவருக்கும், கட்டணமில்லா கல்வி; ஆண்டுதோறும் 4 இணை விலையில்லா சீருடைகள், உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இவையின்றி, விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இடை நிற்றலைத் தவிர்க்கும் வகையில் பத்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 72,843 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 1,319 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 182 தொடக்கப் பள்ளிகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன. உயர் கல்வியைப் பொறுத்த வரையில் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 53 கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. தேசிய சட்டப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தரப்பு மக்கள் குறிப்பாக ஏழை, எளிய, மக்கள் உடல் நலன் பேணும் வகையில் பற்பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன,

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்; 12000 ரூபாய் நிதியுதவி வழங்கும் மகப்பேறு உதவித் திட்டம்; வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 122 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. இவை தவிர, புதிதாக 172 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டன்; சிறப்பு பொது விநியோகத் திட்டம்; தாலிக்கு தங்கத்துடன் 50,000 ரூபாய் வரை நிதி உதவி வழங்கும் திருமண உதவித் திட்டம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 6 லட்சம் பெண்கள் திருமண உதவி திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு, 1,948 கோடி ரூபாய் நிதியுதவியும், 2154 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விலையில்லா மிக்சி கிரைண்டர் மற்றூம் மின்விசிறி வழங்கும் திட்டம்; மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ஓய்வூதியத் திட்டம்; விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் என பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வண்ணம் அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகங்கள், அம்மா சிமெண்ட், அம்மா திட்டம் என எண்ணற்ற மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் மின் உற்பத்தியை நாங்கள் பெருக்கி இருக்கிறோம். தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் கிடைக்கப் பெறும்.

மொத்தத்தில் நான்காண்டு ஆட்சியில் நாலாபுறமும் வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் உள்ளம் துள்ளும் அளவுக்கு துறைதோறும் ஒளி வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.
-
தமிழ் தி இந்து காம்

69-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தத் தருணத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 11,000 ரூபாயாகவும்; அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் 1,881 நபர்கள் பயன் அடைவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றிற்கு 1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

இது தவிர விடுதலைப் பேராட்டத்தில் பங்கு கொண்டு நாட்டிற்காக சிறப்புற பணியாற்றியவர்களின் தியாகங்கள் போற்றும் வகையில், அவர்களது வாரிசுதாரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள்; மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள்; முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள்; வ.உ.சிதம்பரனாரின் பேரன் ஆகியோர் பெற்று வரும் 4,500 ரூபர் சிறப்பு ஓய்வூதியம் இனி 5,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் 185 நபர்கள் பயனடைவர். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு 11 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

ஒட்டுமொத்த வளர்ச்சி; அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற லட்சியப் பாதையில் தொடர்ந்து நாங்கள் பயணிப்போம் என்ற உறுதிமொழியை தெரிவித்து விடை பெறுகிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.
-
தமிழ் தி இந்து காம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 15, 2015 3:53 pm

தன் வாழ்நாள் முழுவதும் மதுவிலக்குக்காகப் போராடிய சசிபெருமாளின் பெயரை முதல்வர் குறிப்பிட்டிருக்கலாம் . அவருடைய தியாகம் ,நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகத்திற்கு இணையானது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக