புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_c10திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_m10திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_c10 
32 Posts - 51%
heezulia
திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_c10திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_m10திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_c10திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_m10திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_c10திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_m10திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_c10 
74 Posts - 57%
heezulia
திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_c10திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_m10திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_c10திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_m10திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_c10திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_m10திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்!


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 13, 2016 5:56 pm

திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குட்டித் திமிங்கலங்கள் நேற்று ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை பார்ப்பதற்கு நள்ளிரவிலும் பொதுமக்கள் கடற்கரைகளில் திரண்டனர்.6 அடி முதல் 18 அடி வரை நீளம் கொண்ட அந்த திமிங்கலங்களின் எடை 100 முதல் 200 கிலோ வரை இருந்தன. ஆலந்தலை முதல் கல்லாமொழி வரையிலான கடல் பகுதியின் கடற்கரைகள் இவ்வாறு சுமார் 100 திமிங்கலங்கள் வரை பரவிக் கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடலில் காயம்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணிகளில் காவல்துறையினர், ஊர்காவல்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.


திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய பகுதியில் நெல்லை சரக டி.ஜ.ஜி அன்பு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இதற்கான காரணங்களை ஆராய்ந்தனர்.ராட்சத திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் போலீஸ் டிஜிபி ஆய்வு மேற்கொண்டார்.

நன்றி செய்தி . காம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 6:02 pm

திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! 103459460
-
திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! QV9MsvWVRe2PzKXGaqLp+IMG-20160113-WA0002
-
திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Tr7vLJQSJW2dVy6DF9Sw+IMG-20160113-WA0003

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 13, 2016 6:03 pm

கூடங்குளத்தில் கடந்த வாரம் ஏதோ சோதனை செய்தார்களாமே , அதன் பிறகு தான் இது போல திமிங்கிலங்கள் செத்து கரை ஒதுங்கின "இந்த விஷயம் பெரிதாக ஆககூடாது என்று தான் மத்திய அரசு ஜல்லிக்கட்டு அனுமதி நாடகத்தை ஆடியது" என்று whatsapp ல ஒரு செய்தி பார்த்தேன்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 13, 2016 6:09 pm

இதில் 25 க்கும் மேல் இறந்து விட்டன. எல் நினோவால் ஏற்பட்டுள்ள் கடல் நீரோட்ட திசை மாற்றம் மற்றும் கடல் நீர் வெப்பநிலை மாற்றம் இந்த இடம்பெயர்வுக்கு காரணமாக இருக்கலாம். தகுந்த ஆய்வும்.. கரையொதுங்கும் இந்த கடல்வாழ் பாலூட்டிகளை பாதுகாக்கும் சரியான திட்டமும் முகாமைத்துவமும் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும். இவற்றின் இழப்பு கடல் வாழ் உயிரினச் சூழலை பாதிக்கும்.

பீட்டா அமைப்பு க்கு திமிங்கலம் எல்லாம் பாலூட்டி வகையில் சேர்ந்து என்று தெரியாது போலும்...




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 6:09 pm

திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! 0YRAkaqMS2iQMkcDD0XM+whale_2694348f
-
கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர்:


இப்பகுதியில் ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்தால், அணு உலையுடன் தொடர்புபடுத்தி
பேசுவது வழக்கமாகிவிட்டது. தற்போது மின் உற்பத்தி நடைபெற வில்லை.
உற்பத்தி நடைபெற்ற போது அணுஉலையை குளிர்விக் கும் தண்ணீரின்
வெப்பநிலையை குறைத்து வெளியேற்றியபோதுகூட இவ்வாறு திமிங்கலங்கள் ஒதுங்க வில்லை.
-
இது முதல்முறை அல்ல


மணப்பாடு கடற்கரையில் திமிங்கலங்கள் மொத்தமாக கரை ஒதுங்குவது
இது முதல்முறை அல்ல. இதற்கு முன் 1973-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி
147 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஓரிரு நாட்கள் உயிரோடு இருந்த அவை
பின்னர் இறந்துவிட்டன.
-
அதேபோல்தான் இப்போதும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி யுள்ளன.
ஒரே காலத்தில் தான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
இதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
மேற்கொண்டு வருகின்றனர்.
---
மேலும், மணப்பாடுக்கும், கூடங்குளத்துக்கும் 40 கி.மீ. தூரம் இருக்கிறது.
இதற்கும், அணுமின் நிலையத்துக்கும் சம்பந்தம் கிடையாது.
-

தமிழ் தி இந்து காம்


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 13, 2016 6:17 pm

கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்...வட்டமிடும் விமானங்கள்... பீதியை கிளப்பும் சத்தம் ... அணு உலையில் நடப்பதென்ன?'

 
அணு உலையில் மர்மமாக நடக்கும் சில விவகாரத்தில், அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என குற்றஞ்சாட்டியுள்ள கூடங்குளம் அணு உலை எதிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன், அணு உலையில் மர்மமான பல விஷயங்கள் நடப்பதாக பகீர் கிளப்புகிறார்.

தூத்துக்குடி மாவட்ட கடலோரப்பகுதிகளில் நேற்றும், இன்றும் நுாற்றுக்கணக்கில் திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இந்த நிகழ்வுக்கு காரணம் என்ன என்பது புரியாமல் மீன்வளத்துறையினரும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் கெமிக்கல் நிறுவனங்கள் மற்றும் உரத்தொழிற்சாலை போன்றவைகள் வெளியேற்றும் கழிவுகள் இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்கிற கருத்து நிலவுகிறது. அத்துடன், தாது மணல் நிறுவனத்தின் கழிவுகள் கடலில் கலப்பது, அணு உலையை குளிர்விக்கும் சூடான நீர் கடலில் கலப்பது, அணுக்கதிர்வீச்சு போன்றவையும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதற்கு காரணமாக இருக்கக் கூடுமோ என்கிற அச்சமும் பொதுமக்களிடம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிறுவனங்களை குற்றஞ்சாட்டி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பளரான சுப.உதயகுமார் கருத்து தெரிவித்திருப்பது இந்த விவகாரத்தை இன்னும் சூடாக்கியுள்ளது. அணு உலையில் மர்மமான முறையில் பல சம்பவங்கள் நடப்பது குறித்து பல ஐயங்களை எழுப்புகிறார் அவர். இதுபற்றி அவரிடம் பேசினோம்...

கூடங்குளத்தை சுற்றிலும் என்ன நடந்தாலும் அணு உலை மீது பழிபோடுகிறீர்களே?

இடிந்தகரை முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை எங்கும் 50 முதல் 300 எண்ணிக்கையிலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன, அல்லது இறந்து கிடக்கின்றன. கூடங்குளம் அணு உலைப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர், துணை ராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர். நேற்று (ஜனவரி 11) இரவு முழுவதும் கூடங்குளம் பகுதியில் சிறிய ரக விமானங்கள் பறந்த வண்ணமிருந்தன.

அணு உலையில் சில பரிசோதனைகள் நடப்பதாக நேற்று செய்திகள் வந்தன. அங்கே என்னவோ குழப்பம் நடக்கிறது. அதனால் மக்கள் பீதி அடைந்து போய் இருக்கிறார்கள். ஆனால், அதிகாரவர்க்கம் வழக்கம்போல அமைதிகாக்கிறது, அல்லது மூடிமறைக்க முனைகிறது. பேய்க்கு வாழ்க்கைப்பட்டோரே, பிணம் தின்ன பழகிக் கொள்ளுங்கள். இதுதான் நமக்கு வாழ்க்கை இனிமேல்! என்று சொல்வதை தவிர நம்மால் என்ன செய்ய முடியும்?

கூடங்குளம் அணு உலையில் தற்போது பராமரிப்புப் பணிகள் நடப்பதாக வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்து இருக்கிறாரே?

அங்கே என்ன நடக்கிறது என்பதே மர்மமாக இருக்கிறது என்கிறேன். மக்களிடம் உண்மையை தெரிவிக்க மறுக்கிறார்கள். கடந்த 6 மாதத்துக்கும் மேலாக அணு உலை இயங்காமல் கிடக்கிறது என்கிறார்கள். ஆனால், ஏதோ சோதனைகளை நடத்துவதாக அறிகிறேன். அதனால் அங்கிருந்து அளவுக்கு அதிகமாக சத்தம் கேட்பதாக மக்கள் சொல்கிறார்கள். ஆனால், அணு உலை நிர்வாகம் வாயை திறக்க மறுக்கிறது. 'பராமரிப்புப் பணிகள் முடிந்து பிப்ரவரி 15-க்குள் அணு உலை செயல்படத் தொடங்கும்' என அணு உலை வளாக இயக்குநர் சுந்தர் சொல்கிறார். இந்திய அணுசக்திக் கழக தலைவர் சேகர்பாசு, 'இன்னும் பராமரிப்புபணிகள் நிறைய நடக்க வேண்டியதிருப்பதால் ஜூன் 15-க்கு பிறகு முதல் அணு உலை மீண்டும் செயல்படத் தொடங்கும்' என்கிறார்.

இதை எல்லாம் விட வேடிக்கை என்னவென்றால், ரஷ்ய அதிபர் புடின், ஓரிரு வாரத்தில் அணு உலை செயல்படும் என்கிறார். இதில் எதை நம்புவது? யார் சொல்வது சரியானது? ஆளாளுக்கு எதையாவது சொல்லி மக்களை குழப்புவதன் மர்மம் என்ன? மக்களிடம் உண்மையை தெரிவிக்க மறுப்பது நியாயம்தானா? நாங்கள் ஏற்கெனவே பலமுறை தெரிவித்து இருப்பதுபோல, தரமற்ற உதிரிப்பாகங்களால் அமைக்கப்பட்ட கூடங்குளத்தின் முதல் இரு அணு உலைகள் இயங்கவும் இல்லை. இனிமேல் அவை இயங்கப்போவதும் இல்லை.

நிலைமை இப்படி இருக்கும்போது, மத்திய அரசானது கூடங்குளத்தில் மேலும் 12 அணு உலைகளை அமைக்க ஒப்பந்தம் போட்டு இருக்கிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட இரு அணு உலைக்கு அந்தப் பகுதியில் கடுமையான எதிர்ப்பு இருக்கும் சூழலில், கூடுதல் அணு உலைக்கு ஒப்பந்தம் போட்டிருப்பதன் மூலம் மக்களை பற்றிய சிந்தனை அரசுக்கு இருக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது.



திமிங்கலங்கள் செத்து கரை ஒதுங்குவதை அணு உலைக்கு எதிரான உங்களது போராட்டத்துக்கு பயன்படுத்துவதுடன், மக்களிடம் வதந்திகளை பரப்புவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

முன் எப்போதும் இல்லாத வகையில் திமிங்கலங்கள் செத்து மடிகின்றன. அணு உலையில் இருந்து தேவையற்ற சப்தம் வருகிறது. அங்கே போலீஸ் மற்றும் துணை ராணுவ படை குவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பதை அப்பகுதி மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டியது கடமை இல்லையா? ஆனால், அதில் என்ன மறைக்க இருக்கிறது? அணு உலையில் இப்போது என்ன சோதனை நடத்தப்படுகிறது என்பதை மக்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க வலியுறுத்துகிறோம்.

அத்துடன், கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய அனைத்து அறிக்கைகளையும் மக்களுக்குக் கொடுக்க வேண்டும். ஒன்றிய தகவல் ஆணையம், 'இந்த அறிக்கைகளை மக்களுக்குக் கொடுங்கள்' என்று பணித்த பிறகும், இந்திய அணுமின் கழகம் டெல்லி உயர் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கியிருப்பதை ரத்து செய்து இருப்பது எதற்காக? நெல்லை, குமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அனைவருக்கும் பேரிடர் பயிற்சி கொடுங்கள் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். பாதுகாப்பு தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவியுங்கள் என்கிறோம். அது அரசின் கடமை அல்லவா?



அரசு கொண்டுவரும் திட்டங்கள் பற்றிய முழு உண்மைகளை மக்களுக்குத் தெரிவியுங்கள். உண்மை பேசுங்கள் என்று நாங்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? மக்களை மதித்து செயல்படுங்கள். பிரதமர், முதல்வர், உயர் அதிகாரிகள் போன்றோர் மக்களிடம் உண்மையாக, நேர்மையாக பேசுங்கள். நீங்கள் அனைவரும் தேவதூதர்கள் போலவும், மக்களை அடிமைகள் போலவும் நினைத்து செய்லபடாதீர்கள் என்கிறோம். இதில் எதையும் செய்யாமலிருந்தால், வதந்திகளும், பீதிகளும் பரவத்தான் செய்யும். அதற்கு மக்கள் பொறுப்பல்ல.

அணு உலை எதிர்ப்பு தொடர்பாக அரசியல்வாதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறீர்களே. அதற்கு வரவேற்பு எப்படி உள்ளது?



அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் சார்பாக அரசியல்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறோம். தேர்தல் சமயத்தில் அணு சக்திக்கு எதிராக வாக்குறுதி கொடுக்க, பல்வேறு அரசியல் கட்சியினரையும் சந்தித்து வலியுறுத்தி வருகிறோம். பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க-வில் கட்சித் தலைவரையோ அல்லது முக்கிய நிர்வாகியையோ கூட பார்க்க முடியவில்லை. மக்களின் கருத்துக்கு அவர்கள் மதிப்பு கொடுப்பது அவ்வளவுதான்.

நன்றி விகடன் செய்தி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 13, 2016 6:22 pm

கூடங்குளத்தில் பொங்கல் வச்சுட்டானுங்களா???




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 13, 2016 7:21 pm

இது முதல்முறை அல்ல

மணப்பாடு கடற்கரையில் திமிங்கலங்கள் மொத்தமாக கரை ஒதுங்குவது
இது முதல்முறை அல்ல. இதற்கு முன் 1973-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி
147 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஓரிரு நாட்கள் உயிரோடு இருந்த அவை
பின்னர் இறந்துவிட்டன.
-
அதேபோல்தான் இப்போதும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி யுள்ளன.
ஒரே காலத்தில் தான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
இதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
மேற்கொண்டு வருகின்றனர்.
---
மேலும், மணப்பாடுக்கும், கூடங்குளத்துக்கும் 40 கி.மீ. தூரம் இருக்கிறது.
இதற்கும், அணுமின் நிலையத்துக்கும் சம்பந்தம் கிடையாது.


காசுக்கு மாரடிக்கும் இந்த ஜென்மத்தின் அறிக்கையை பாருங்கள் , இவனெல்லாம் அணுஉலை இயக்குனர்.

40 கிமீ தூரம் இருக்குதாம் அதனால் எந்த வித பாதிப்பும் கிடையாதாம் , முன்னாள் துணை அமைச்சன் நறுனவாய்சாமி கூட தேவலாம் போல

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 13, 2016 7:58 pm

ராஜா wrote:கூடங்குளத்தில் கடந்த வாரம் ஏதோ சோதனை செய்தார்களாமே , அதன் பிறகு தான் இது போல திமிங்கிலங்கள் செத்து கரை ஒதுங்கின "இந்த விஷயம் பெரிதாக ஆககூடாது என்று தான் மத்திய அரசு ஜல்லிக்கட்டு அனுமதி நாடகத்தை ஆடியது" என்று whatsapp ல ஒரு செய்தி பார்த்தேன் ..
ம்ம்  பயம் பயம் பயம் ......................படித்துப் பார்க்கவே பயங்கரமாய் இருக்கே !....................சோகம்.இந்த அரசியல் வாதிகள் மட்டும் எப்படி மக்களுக்கு நன்மை செய்கிறேன் என்று சொல்லி, கூசாமல் இப்படி முதுகில் குத்துகிறார்கள்?  அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக