புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_c10பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_m10பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_c10 
21 Posts - 66%
heezulia
பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_c10பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_m10பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_c10பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_m10பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_c10 
63 Posts - 64%
heezulia
பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_c10பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_m10பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_c10பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_m10பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_c10பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_m10பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி?


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 15, 2016 5:30 pm

பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? P14a

கடந்த ஆண்டு இதே நேரத்தில் மக்கள் மத்தியில் சுடச்சுட பேசப்பட்டு வந்த விஷயம் ‘பிரதான் மந்த்ரி சுரக்‌ஷா பீமா யோஜனா’ (தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி) மற்றும் ‘பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ (ஆயுள் காப்பீட்டு பாலிசி) என்கிற மத்திய அரசின் இரண்டு இன்ஷூரன்ஸ் திட்டங்கள்தான்.

கடந்த ஓராண்டு காலத்தில் இந்தத் திட்டங்கள் எப்படி செயல்பட்டன, இதுவரை இந்த பாலிசியின் மூலம் எத்தனை பேருக்கு க்ளெய்ம் தரப்பட்டிருக் கிறது, எத்தனை பேர் இந்த  திட்டத்தில் இணைந்திருக் கிறார்கள், புதிதாக இன்ஷூரன்ஸ் எடுக்க விரும்புபவர்களை இந்த திட்டத் தில் இணைக்கிறார்களா என்கிற கேள்விகளுக்குப் பதிலை தெரிந்து கொள்ளும்முன் இந்தத் திட்டங் களில் இதுவரை எத்தனை பேர் சேர்ந்து பயன் அடைந்திருக்கிறார்கள்       என்பதைப் பார்ப்போம்.

எத்தனை பேர்?

கடந்த 29 ஏப்ரல் 2016 நிலவரப்படி, பிரதான் மந்த்ரி சுரக்‌ஷா பீமா யோஜனா (பி.எம்.எஸ்.பி.வொய்) திட்டத்தின் கீழ் 9,42,28,483 பேர் இணைந்து இருக்கிறார்கள். பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (பி.எம்.ஜே.ஜே.பி.வொய்) திட்டத்தின் கீழ் 2,95,96,415 பேர் இணைந்திருக்கிறார்கள்.

கலக்கும் க்ளெய்ம்கள்!

கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி வரையில், பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை 23,798 பேர் இழப்பீடு (க்ளெய்ம்) கோரினார்கள்.

பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி? P14b

அதில் 21,385 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக அரசு வலைதளங்கள் சொல்கின்றன. இதில் அதிகபட்சமாக எல்.ஐ.சி நிறுவனம் 8,345 பேருக்கும், எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் 7,430 பேருக்கும் இழப்பீடு வழங்கி இருக்கின்றன. 364 பேருக்கு மட்டுமே இழப்பீடு  நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது இழப்பீடு கோரிய மொத்த நபர்களில் வெறும் 1.53% என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பிரதான் மந்த்ரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் மொத்தம் 4,950 நபர்கள் இழப்பீடு கோரி இருக்கின்றனர். அதில் 3,277 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. இழப்பீடு கோரிய மொத்த நபர்களில் 807 பேருக்கு (இது மொத்த நபர்களில் 16.30%) இழப்பீடு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.  866 பேருடைய இழப்பீட்டுக் கோரிக்கைகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

பி.எம்.எஸ்.பி.வொய் திட்டத்துக்கு அதிகபட்சமாக யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் 926 இழப்பீடுகளையும், நேஷனல் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் 803 இழப்பீடுகளையும், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் 791 இழப்பீடுகளையும் வழங்கி இருக்கின்றன.

ரெனீவல் பிரீமியம்!

பிரதான் மந்த்ரி சுரக்‌ஷா பீமா யோஜனா (பி.எம்.எஸ்.பி.வொய்) திட்டத்துக்கு ஆண்டு பிரீமியமாக 12 ரூபாய், மே மாதம் 31-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்போ நம் வங்கிக் கணக்கிலிருந்து (எந்த வங்கிக் கணக்கு மூலமாக இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தோமோ அந்த வங்கிக் கணக்கு) ஆட்டோ டெபிட் முறையில் வசூலிக்கப்படும். அதற்கான நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்.களை வங்கிகள் இப்போது அனுப்பத் தொடங்கிவிட்டன.

அதேபோல் பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்துக்கு ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும். அந்த தொகையும் மேற்கூறியது போலவே மே 31-ம் தேதி அல்லது அதற்கு முன்பே நம் வங்கிக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் முறையில் வசூலிக்கப்படும். எனவே, இந்த இரண்டு பிரீமியத்துக்குத் தேவையான (330+12) 342 ரூபாயை இந்த இரண்டு பாலிசிகளையும் எடுத்தவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருப்பது அவசியம்.

புதிய நபர்கள் இணைப்பு!

பெரும்பாலான அரசு வங்கிகளில் இதற்கென்றே தனியாக ஆட்களை வைத்து நிர்வகித்து வருகிறார்கள். புதிதாக வருபவர்களையும் இதில் சேர்த்தும் வருகிறார்கள். சில கிராமபுறப் பகுதிகளில் குறைவான ஆட்கள் பணிபுரியும் வங்கிக் கிளைகளில் இந்த திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமல், சாதாரண வங்கிப் பணிகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாக மக்களிடமிருந்து புகார் வருகிறது.

சில வங்கிகளில் இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியாமல் பல அதிகாரிகள் இருக்கின்றனர். இந்தத் திட்டம் கடந்த ஆண்டுடன் முடிந்துவிட்டதா கவும் சொல்கிறார்கள். ஆனால், இந்தத் திட்டம் இப்போதும் செயல்பாட்டில் இருப்பதால், வங்கி அதிகாரிகளை வற்புறுத்தி இந்தத் திட்டத்தில் சேர ஒவ்வொருவரும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

புதிதாக சேருபவர்கள் கவனிக்க!

1. இந்த பாலிசிகளில் சேருவதற்கு எந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கி றீர்களோ, அந்த வங்கிக் கிளையைதான் அணுக வேண்டும்.

2. வங்கிக் கணக்கு எண், மின்னஞ்சல் முகவரி, ஏதாவது ஒரு அடையாளச் சான்று, முகவரிச் சான்று, ஆதார் (இருந்தால்), மொபைல் எண் போன்றவைகளை கட்டாயம் எடுத்துச் செல்லவும்.

3. எந்த திட்டத்தில் சேர இருக்கிறோமோ, அந்த  திட்டத்துக்குரிய  விண்ணப்பத்தையும் நாமே பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டு வங்கிக்குச் செல்வது நல்லது. பல வங்கிகளில் பிரின்டர் வேலை செய்யவில்லை, மின்சாரம் இல்லை, பிரின்டரில் டோனர் தீர்ந்துவிட்டது என்று சொல்லி நம்மை அலையவிடலாம்.

4. யாரை நாமினியாக நியமிக்க வேண்டும், நாமினி மைனராக இருக்கும்பட்சத்தில் மைனருக்கு யாரை காப்பாளராக நியமிக்க வேண்டும் என்பது போன்ற அதிமுக்கியமான விஷயங்களை வங்கிக்கு செல்வதற்குமுன்பே தீர்மானித்துக் கொண்டு செல்லவும்.

5. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர் 18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்கவேண்டும். பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் இணைபவர்கள் 18 - 70 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். மேற்கூறிய திட்டங்களுக்கான, வயது வரம்பை பூர்த்தி செய்தவர்கள் எப்போது வேண்டுமானாலும், திட்டங்களில் இணையலாம்.

இந்த பாலிசிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியிடம் சமர்பித்தபின், அடுத்த இரண்டு அல்லது மூன்று வேலை நாட்களுக்குள் வங்கிக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் முறையில் முதல் வருட பிரீமியம் வசூலிக்கப்படும். பிரீமியம் வசூலிக்கப்பட்டதற் கான எஸ்.எம்.எஸ், நாம் வங்கியிடம் கொடுத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். கூடவே, ஒரு அத்தாட்சி ஸ்லிப்பும் வழங்கப் படும். அதையும் கட்டாயம் வாங்கிக் கொள்வது அவசியம். இந்்த அத்தாட்சிக் கடிதம்தான் நாம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் சேர்ந்ததற்கான சான்று. அதோடு இந்த அத்தாட்சிக் கடிதம்தான் பாலிசிதாரரின் இன்ஷூரன்ஸ் சான்றிதழாகவும் கருதப்படும்.

குறைந்த பிரீமியத்தில் இழப்பீடு கிடைக்கும் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எல்லோரும் எடுத்துக் கொள்வது அவசியம். அதைவிட அவசியம், இந்த பாலிசியை எடுத்தபின், அது தொடர்பான விவரங்களை யும் நாமினி பற்றிய குறிப்புகளையும் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியப் படுத்துவது. செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா?

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய:

* PMSBY  
http://jansuraksha.gov.in/Files/PMSBY/English/ApplicationForm.pdf#zoom=250


* PMJJBY  
http://jansuraksha.gov.in/Files/PMJJBY/English/ApplicationForm.pdf#zoom=250

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆயுள் காப்பீட்டு பாலிசியில் இழப்பீடு கோரும்போது!

பி.எம்.ஜெ.ஜெ.வொய். திட்டத்தில் எளிமையாக க்ளெய்ம் பெறுவது எப்படி எனறு எல்.ஐ.சி வட்டாரத்தில் விசாரித்தோம்.

‘‘க்ளெய்ம் கோரும்போது இறப்புச் சான்றிதழ், இறந்தவரின் வங்கி பாஸ்புக் அல்லது திட்டத்துக்கு 330 ரூபாய் செலுத்தியதற்கான வங்கி ஆதாரம், (எஸ்.எம்.எஸ்.கூட எடுத்துக் கொள்ளலாம்), நாமினி மூலம் விண்ணப்பித்து கையெழுத்திட்ட இழப்பீட்டுப் படிவம், நாமினியின் வங்கிக் கணக்கு விவரங்கள், நாமினியின் வங்கிக் கணக்கு விவரங்களை உறுதிப்படுத்தும் விதத்தில் நாமினியின் வங்கி பாஸ்புக் அல்லது ரத்து செய்யப்பட்ட ஒரு காசோலையை கட்டாயம் இணைக்கவும். இறந்தவர் மற்றும் நாமினியின் ஆதார் அட்டை இருந்தால், அதையும் கட்டாயம் இழப்பீட்டுப் படிவத்துடன் இணைக்கவும்.

மேற்கூறியவை எல்லாம் இணைத்து எந்த வங்கியில் இன்ஷூரன்ஸ் எடுத்தோமோ, அதே வங்கிக் கிளையில் இவைகளை சமர்ப்பித்தால் போதும். க்ளெய்ம் தொகை சம்பந்தப்பட்ட நாமினியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.’’

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தனிநபர் காப்பீட்டு பாலிசியில் இழப்பீடு கோரும்போது!

பி.எம்.எஸ்.பி.வொய் திட்டத்தில் எளிமையாக க்ளெய்ம் பெறுவது  எப்படி என்பதை குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜர் டி.ஏ.கேசவன் விளக்குகினார்.

“விபத்து நடந்து நிரந்தர ஊனம் ஏற்பட்டிருந்தால் விபத்து ஏற்பட்டதற்கான எஃப்.ஐ.ஆர், பாலிசிதாரர் கையெழுத்திட்ட விண்ணப்பம், ஒருவேளை கைகள் பாதிப்புக்குள்ளாகி இருந்தால் கெஸட்டட் அதிகாரிகள் முன்னிலையில் பாலிசிதாரர் கைரேகை வைத்துக் கொள்ளலாம். வேறு விதமான விபத்தின் தன்மையைப் பொறுத்து பஞ்சநாமா மற்றும் எஃப்.ஐ.ஆர் தேவைப்படும். இழப்பீடு கோருபவரிடம் ஆதார் விவரங்கள் இருந்தால், கட்டாயமாக வங்கியிடம் சமர்பிக்கவும்.

இதுவே பாலிசிதாரர் இறந்துவிட்டால், அதற்கான இறப்புச் சான்றிதழ், எஃப்.ஐ.ஆர் விவரம், நாமினி பூர்த்தி செய்து கையெழுத்திட்ட இழப்பீட்டுப்  படிவம், நாமினியின் வங்கி விவரங்கள் மற்றும் அதை உறுதிப்படுத்தும் பாஸ்புக் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை போன்றவைகளை இணைத்து வங்கியிடம் சமர்பித்தாலே போதுமானது. வங்கி, இந்த விவரங்களை எல்லாம் உறுதிப்படுத்திவிட்டு, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் கொடுக்கும். அதன் பிறகு அடுத்த 7 - 15 நாட்களுக்குள் இழப்பீட்டை பரிசீலித்து பாலிசிதாரர் அல்லது நாமினிக்கு வழங்கப்படும்” என்று முடித்தார்.

ந.விகடன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக