புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_m10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_m10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_m10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10 
3 Posts - 6%
prajai
இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_m10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10 
2 Posts - 4%
Baarushree
இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_m10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10 
2 Posts - 4%
viyasan
இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_m10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10 
1 Post - 2%
Rutu
இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_m10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10 
1 Post - 2%
சிவா
இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_m10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_m10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_m10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10 
2 Posts - 15%
Rutu
இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_m10இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின் நாடகங்கள்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 09, 2009 1:25 pm

இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Jeya_%20fasting
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஜெயலலிதா இன்று சென்னையில் உண்ணாவிரதம்:

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று திங்கட்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார்.

காலை 9.10 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ள ஜெயலலிதா மாலை 5 மணிக்கு முடிக்கிறார். இதற்காக உண்ணாவிரதம் நடைபெறும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் அமர்ந்து ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார்.

மேலும் தொண்டர்கள் உட்காருவதற்கு வசதியாக பந்தல் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. உண்ணாவிரதத்தின் போது இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. உண்ணாவிரத மேடையில் அதற்காக தனியாக உண்டியல் வைக்கப்பட்டிருக்கும்.

இந்த உண்டியலில் ஜெயலலிதா முதலில் நிதியை அளித்து உண்ணாவிரதத்தை தொடங்குகிறார். ஜெயலலிதாவின் உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளான தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது இது 2-வது தடவையாகும். இதற்கு முன்பு கடந்த 1985-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து செங்கல்பட்டில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார்.

அப்போதும் உண்டியல் வைத்து அவர் நிதி திரட்டி இலங்கைத் தமிழர்களுக்கு உதவினார். சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா மீண்டும் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 09, 2009 1:37 pm

ஜெ. உண்ணாவிரதம் இலங்கை தமிழர்களுக்கு ஆறுதலை தரும்: ராமதாஸ்

இலங்கைத் தமிழர்களுக்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நடத்தும் உண்ணாவிரதம், நாடு தழுவிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடும் எச்சரிக்கையாக அமையும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் படுகொலையை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை வரவேற்று பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:


தமிழ்நாட்டில் மிகப் பெரிய சக்தி அதிமுக. அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் நடத்துவது இலங்கைத் தமிழர் களுக்கு மிகுந்த ஆறுதல் தருவதாகும். அது அவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்யும். அத்துடன் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நாடு தழுவிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வலிமை யான செய்தியை உணர்த்துவதாக அமையும். அது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடும் எச்சரிக்கை விடுப்பதாகவும் அமையும்.

சர்வதேச சமூகத்திடம் உதவிகளை எதிர்பார்த்து நிற்கும் இலங்கைத் தமிழர்கள், மிக நெருங்கிய உறவு கொண்ட தமிழகத் தமிழர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். இலங்கைத் தமிழர்களின் துயர நிலை குறித்து அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஆழ்ந்த கவலை தெரிவித்து உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில்தான் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் நடத்த ஜெயலலிதா முடிவு செய்தார்.

தற்போது இலங்கையில் மனித அவலநிலை அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆண்டு கால இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இப்போதுதான் மனித அவலநிலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.


இலங்கைத் தமிழர்கள் பட்டினிக் கொடுமையால் அதிக அளவில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அங்கு ‘பாதுகாப்பு வளையம்’ என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளிலேயே தடை செய்யப்பட்ட கொத்து வெடிகுண்டுகளை வீசி இலங்கை ராணுவம் படுகொலை செய்து வருகிறது. இவற்றை எல்லாம் தடுத்து நிறுத்தும் கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது என்றார்.

இலங்கையில் மக்கள் பசியால் உயிர்துறந்துவருகிறார்கள், ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தால் என்ன அவர் தீக்குளித்தால் என்ன? முடிந்தால் சிங்களவனை எதிர்க்க ஆயுதம் வழங்குங்கள், அல்லது தமிழக சிறப்பு அதிரடிப்படையை ஈழத்தமிழர் பாதுகப்புக்கு அனுப்புங்கள்.
இதுபோன்ற நாடகங்கள் உங்கள் செல்வாக்கு சரிவுக்கு நீங்களே தோண்டும் புதைகுழிகள்..


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Mar 09, 2009 8:30 pm

சுயநிர்ணய அதிகாரமுள்ள 'தமிழ் தனி நாடு' வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்: உண்ணாவிரத மேடையில் ஜெயலலிதா

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற 'தமிழர் நாடு' வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று உண்ணாவிரத மேடையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜெயலலிதா பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதத்தை நடத்துகிறோம். கடந்த ஆண்டு இந்திய அரசு இராணுவ உதவி செய்வதாகவும், ஆயுதங்கள் வழங்கி வருவதாகவும் செய்திகள் வந்தன. இதை மத்திய அரசு மறுக்கவில்லை. இந்திய பாதுகாப்புதுறை உயர் அதிகாரிகளும், இராணுவ அதிகாரிகளும் இலங்கை சென்றதாகவும் கூறப்பட்டது. அதையும் மத்திய அரசு மறுக்கவில்லை, திமுகவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மத்தியில் அங்கம் வகிக்கும் திமுக மந்திரிகள் இராஜினாமா செய்வதாக மிரட்டிக் கூட பார்க்கவில்லை. இதுபற்றி கேள்வி கேட்ட என்னை கருணாநிதி கேலி செய்கிறார். இது முழுக்க முழுக்க மத்திய அரசு சம்பந்தப்பட்டது. இது கூட ஜெயலலிதாவுக்கு தெரியவில்லையே என்றார்.

இலங்கை இராணுவ வீரர்களுக்கு ஹரியானா மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதிநவீன சாதனங்களை வைத்து இலங்கை வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்திய அரசு ஒப்புதலுடன் தான் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இலங்கை இனப் படுகொலை மத்திய அரசின் முழு ஒத்துழைப்போடு நடக்கிறது. இந்த இனப் படுகொலையில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும் பெரும் பங்குண்டு. சட்டசபையில் தீர்மானம் போட்டதாக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் கருணாநிதி. தீர்மானங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை என்கிறார். கருணாநிதியின் பாசாங்கு தீர்மானங்களை நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?.

ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு இராணுவ உதவிகள் வழங்குவது வழக்கமான நடைமுறைதான். ஆனால் இந்தியா வழங்கும் ஆயுத உதவியும், பயிற்சியும் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இலங்கைக்கு வழங்கப்படும் முழு ஆயுத பலத்தையும் அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். இலங்கை இராணுவம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறலாம். ஆனால் அங்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்த்தால் புலிகள், போராளிகள் தவிர அப்பாவி மக்களும் பலியாவது தெரிய வருகிறது..

இந்தியா வழங்கிய துப்பாக்கிகளும் தோட்டாக்களும் அப்பாவி தமிழர்களை கொலை செய்ய பயன்படுத்தப்படுகிறது.

இலங்கைப் பிரச்சினையில் திமுக அரசும், மத்திய அரசும் செயல்பட்டு வரும் விதத்தைப் பார்த்து மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

இலங்கையில் அவதிப்பட்டு வரும், அல்லல்பட்டு வரும் அங்குள்ள தமிழர்கள் குறித்து கருணாநிதிக்கு அக்கறை இல்லை. இதுகுறித்து ஏதாவது நடவடிக்கை எடுங்கள் என்று அவரிடம் கேட்டால், மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு மாநில முதல்வரால், என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறார் கருணாநிதி.

தமிழகத்தைச் சேர்ந்த 10 மத்திய மந்திரிகள் உள்ளனர். அவர்கள் இதை ஏன் எதிர்க்கவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் என்ற பிரம்மாஸ்திரத்தை கருணாநிதி பயன்படுத்தமாட்டார். அறிக்கை மட்டும் விடுவார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Mar 09, 2009 8:31 pm

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம். ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறக்க காரணமான திசை மாறிப்போன ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இலங்கை அதிபருடன் நம் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கு இனப் படுகொலையை உடனடியாக நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று நான் கருணாநிதிக்கு ஆலோசனை கூறினேன். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழக மக்கள் அனைவரும் பிரதமர் அலுவலகத்திற்கு தந்திகள் அனுப்ப வேண்டும் என்றார். பின்னர் பிரதமரை வற்புறுத்த, மத்திய ஆளும் கூட்டணியிலிருந்து விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதையும் செய்யத் தயார் என்று அறிவித்தார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் ராஜினாமா கடிதங்களைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் நாடாளுமன்ற மக்களவை தலைவருக்கோ, அல்லது மாநிலங்களவைத் தலைவருக்கோ அக்கடிதங்களை அனுப்பவில்லை. அதற்கு பதிலாக அவர் நிர்ணயித்த கெடுவான கடைசி தேதியை முடிவுக்கு வரவிட்டு, பின்னர் அந்த இராஜினாமா கடிதங்களை தானே கிழித்து போட்டு விட்டார்.

இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பேசியதாக கூறி இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கருணாநிதி தலைமையில் நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.

எனவே கருணாநிதியின் முழு ஆசி மற்றும் தூண்டுதலின்பேரில்தான் இருவரும் பேசினர். அதுவே அவர்களை சிக்கலில் மாட்டி விட்டு விட்டது.

பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சீமான் மீண்டும் கைது செய்யப்பட்டார், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

உண்மையி்ல் சீமான் என்ன மாதிரியெல்லாம் பேசினாரோ அதையே கருணாநிதியும் பேசியுள்ளார். அவர் என்னென்ன வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தினாரோ அதையெல்லாம் கருணாநிதியும் பயன்படுத்தியுள்ளார்.

எந்த வார்த்தைகள் அவர்களை இன்று சிக்கலில் மாட்டிவிட்டதோ, அவை யாவும் கருணாநிதியின் ஆசியும் ஒப்புதலும் பெற்றவை தான்.

ஆனால் சீமானுக்கு மட்டும் சிறைத் தண்டனை. ஆனால் கருணாநிதியோ தலைமை பீடத்தில் அமர்ந்து கொண்டு அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று நாம் உண்ணாவிரதம் இருப்பதினால், பசியினால் வாடும் இலங்கைத் தமிழர்களின் வயிறு நிரம்பப்போவதில்லை. இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் ஒரு அடையாளமே. இந்த உண்ணாவிரதத்தின் மூலம், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள் குறித்து, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள் என்பதையும், இது போன்ற சம்பவங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்கிற விதம், தமிழக மக்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது என்பதையும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தெரியப்படுத்துகிறோம்.

ஒரு அசட்டு தைரியத்தில் திமுகவும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்துள்ளன. வரும் தேர்தலில் மக்கள் இந்த கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டப் போகிறார்கள் என்றார் ஜெயலலிதா.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Mar 09, 2009 8:57 pm

இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். 24318765

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Mar 09, 2009 9:06 pm

இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். 77969767

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Mar 09, 2009 9:06 pm

இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். 37136903

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Mar 09, 2009 9:07 pm

இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். 29836111

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Mar 09, 2009 9:07 pm

இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். 83036093

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 14, 2009 10:37 pm

‘கொள்ளை’க்கு ஒரு ஒத்திகை!

இந்திய தேர்தல் - அரசியல்வாதிகளின்  நாடகங்கள். Jaya-c10

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம் என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு மிகச் சரியான உதாரணம் என்று எதையும் உங்களால் பார்த்திருக்க முடியாது. ஆடு நனையும்போது, ஓநாய் ஊளையிடுவதை எந்தக் காட்டுக்குப் போய் காத்திருந்து பார்ப்பது?!

ஆனால் இதோ நாட்டுக்குள் அதற்கு ஒரு நல்ல உதாரணத்தை காட்டிக் கொண்டிருக்கிறார் ஒருவர்… அவர்தான் ஜெயலலிதா.

அம்மா என்ற வார்த்தையையே அவமானத்துக்குரியதாக்கிய, பெருமைக்குரிய மாபெரும் புரட்சித்தலைவி!

இதுவரை அவரைப் பற்றிய நேரடியான விமர்சனங்களுக்கு நாம் போனதில்லை. காரணம், அவரது கோமாளித்தனங்களுக்கு விமர்சன கிரீடம் எதற்கு என்ற காரணத்தால். அந்த கோமாளித்தனங்களை மக்களும் ஓரளவு புரிந்து வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கையால்.

ஆனால் இப்போது மோசடி நாடகம் ஒன்றை அரங்கேற்றத் துவங்கியுள்ளார். அது திடீர் ஈழத் தமிழர் பாசம்!

ராஜபக்சேவின் உ.பி.ச.வுக்கு வந்திருக்கிற இந்த திடீர் பாசம் அத்தனை சாதாரணமாக, ஒரு அரசியல் ஸ்டன்டாக மட்டும் பார்க்கக் கூடிய சமாச்சாரமா என்ன?

ஈழத் தமிழர்களையும், அவர்களுக்காகப் போராடும் விடுதலைப் புலிகளையும் முற்று முழுதாக வெறுக்கும் ஒரு அரசியல்வாதி என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் இவர்.

ஈழத்தில் போர் முனையில் சிக்கி கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களைப் பற்றி கொஞ்சமும் ஈவிரக்கமின்றி, ‘போர் என்று வந்தால் பொதுமக்கள் சிலர் சாகத்தான் செய்வார்கள். இதைப் பெரிதுபடுத்துவதா?’ என்று கிண்டலடித்தவர்.

இப்போதும் அதே நிலையை அவர் தொடர்வதுதான் நேர்மையான இருக்கும். மக்களுக்கும் ‘பாதுகாப்பாக’ இருக்கும்.

ஆனால் இப்போது ஈழத் தமிழர் ஆதரவு என்ற கபட நாடக அரங்கேற்றத்துக்கு ஒத்திகையை ஆரம்பித்துள்ளார். தேர்தல் தேதியும் கூட்டணி நெருக்கடியும் முற்றத் தொடங்கிவிட்டதால், இந்த ஒத்திகையின் வேகமும் இனி பலமாக இருக்கும். போதாக்குறைக்கு இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வேறு, அம்மையாரின் கட்சிக்கு டெபாஸிட் கிடைக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. எனவே இப்போதுதான் இவருக்கு வைகோ, ராமதாஸ், கம்யூனிஸ்டுகளின் பேராதரவு தேவை. ஏற்கெனவே அவர்கள் இவர் காலால் இட்ட வேலையை தலையால் செய்யத் தயங்காதவர்கள்தான். எனவே இப்போது ஈழத் தமிழர்கள் விஷயத்தில் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் மக்கள் ஆதரவை அப்படியே அறுவடை செய்யப் பார்க்கிறார்.

அதன் முதல் முன் நகர்வுதான் ஈழத் தமிழர்கள் மீது இவருக்கு திடீரென்று பொத்துக் கொண்டு வந்துள்ள பாசம்.

இலங்கைத் (ஈழம் என்ற வார்த்தையை அவர் சொல்லமாட்டாராம்!!) தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளதாக இன்று அறிக்கை விடுத்துள்ளார் ஜெயலலிதா.

“கடந்த ஆறு மாத கால மாக இலங்கையில் வாழும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவர் (மக்களுக்கு தெரிந்தததால்தான் இத்தனை உணர்வுப்பூர்வமாக அதிமுக - காங்கிரஸுக்கு பதிலடி தர காத்து நிற்கிறார்கள். அந்த உண்மை ஜெயலலிதாவுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது!).

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்காகவும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளையும், உயிர்களையும் பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க. முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கைத் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்ற இந்த சோதனையான தருணத்தில், இந்த ஆண்டு எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை என நான் முடிவு செய்துள்ளேன்.

எனவே, கழக உடன் பிறப்புகள் எனது பிறந்த நாளன்று என்னை சந்திப்பதைத் தவிர்க்குமாறு (ஹைய்யா… தொண்டனுங்க இம்சையிலிருந்து தப்பிச்சாச்சு!!)அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இனி…

ஈழத்தமிழர் ஆதரவு மேடைகளில் கூட அம்மையார் தோன்றக் கூடும். வைகோ, பாண்டியன், ராமதாஸ் கரங்களோடு தனது கைகளையும் கோர்த்துக் கொண்டு காட்சி தரவும்கூடும். இப்தார் கஞ்சி குடிக்கும் ஷோ போல. எல்லாம் தேர்தல் வரைதான்.

என்னமோ போங்க… கொள்ளைக்காரங்க வர தயாராகிட்டாங்க. சூதானமா இருந்துக்கிடுங்க!

-விதுரன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக