புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_c10வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_m10வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_c10 
30 Posts - 50%
heezulia
வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_c10வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_m10வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_c10வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_m10வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_c10வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_m10வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_c10 
72 Posts - 57%
heezulia
வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_c10வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_m10வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_c10வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_m10வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_c10வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_m10வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள்


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sun Dec 31, 2017 1:17 pm



கை நடுக்கம், விரல்களால் எதையும் சரியாகப் பிடிக்க முடியாமலிருத்தல், மணிக்கட்டுப் பகுதியில் வலி… இந்தப் பிரச்னைகள் எல்லாம் முதியவர்களுக்கு வரலாம்; மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ஏற்படலாம். இப்போது மாணவ, மாணவியர்களும் அதிக அளவில் இவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

பேனாவைப் பிடித்து எழுதும்போது, விரல்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதால் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால், தசைநார்களில் பாதிப்பு, நரம்புப் பிரச்னைகள், விரல்களில் வலு குறைந்து போதல், சோர்வு எனப் பல பிரச்னைகள் ஏற்படும். இதிலிருந்து மீள சில பயிற்சிகளை விரல்களுக்குக் கொடுக்கவேண்டியது அவசியம்’’ என்கிற உடற்பயிற்சி நிபுணர் கொ.குமரேசன், அந்தப் பயிற்சிகள் பற்றியும் அவற்றை எப்படிச் செய்வது என்பதையும் விளக்குகிறார்.

க்ரிப் ஸ்ட்ரென்த்தென் (Grip strengthen):

ஒரு பந்தை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, நான்கு விரல்களாலும் உள்நோக்கிப் பந்தைப் பிடித்து அழுத்தவும். சில விநாடிகள் அழுத்தம் தந்துவிட்டுப் பின்னர் விரல்களை ரிலாக்ஸ் ஆக்கிக்கொள்ளலாம்.

பலன்: ஒரு பொருளைக் கையால் பற்றும்போது தேவைப்படும் பிடிமானத் திறன் கூடும். கை நடுக்கம், நரம்புப் பிரச்னை போன்றவை சரியாகும்.

ஃபிஸ்ட் (Fist exercise):

விரல்களை மடித்து விரிப்பதுதான் இந்தப் பயிற்சி. கைவிரல்களை மடக்கும்போது, கட்டை விரலானது மற்ற நான்கு விரல்களுக்கும்மேல் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். விரிக்கும்போது, விரல்களுக்கு இடையே இரண்டு இன்ச் இடைவெளி இருக்க வேண்டியது அவசியம். இப்படி விரித்து மடக்கினால்தான், பலன் முழுமையாகக் கிடைக்கும்.

பலன்: அதிக நேரம் தட்டச்சு செய்பவர்களின், கம்ப்யூட்டர் கீபோர்டுகளில் வேலை செய்பவர்களின் கை நரம்புகள் தளர்ந்து காணப்படும். இந்தப் பயிற்சியால், அவை இறுகி இயல்பு நிலைக்குத் திரும்பும்.

ஃபிங்கர் ஹேண்ட் க்ரிப்பர்ஸ் (Finger hand grippers):

கடைகளில் கிடைக்கும் ஹேண்ட் க்ரிப்பரால் (Hand gripper) செய்யவேண்டிய பயிற்சி இது. இதன் இரண்டு பக்கமும் இருக்கும் கைப்பிடிகளை அழுத்தி, பின் விடுவிப்பதுதான் பயிற்சி. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 10 முறை இதைச் செய்ய வேண்டும்.

பலன்: முழங்கையையும் விரல்களையும் இந்தப் பயிற்சி லகுவாக்கும்; விரல்கள் வலிமையாகி, கை உறுதி பெறும்.

புல்லிங் வித் ஃபிங்கர்ஸ் (Pulling with fingers): ஒரு துண்டின் உதவியுடன் செய்யவேண்டிய பயிற்சி இது. டேபிளின் மேல் துண்டை விரித்து, கை விரல்களால் துண்டின் நுனியில் தொடங்கிச் சிறிதுசிறிதாகச் சுருக்க வேண்டும். துண்டின் அளவு பெரிதாக இருக்கும் பட்சத்தில், அதிக நேரம் செய்ய வேண்டியிருக்கும். முழுவதுமாகச் செய்ததும், முதலில் இருந்து மீண்டும் செய்யவேண்டும். குறைந்தபட்சம் ஐந்து முறையாவது இதைச் செய்யவேண்டும்.

பலன்: கை விரல்களை நீட்டி மடக்குவதால் விரல்கள் வலுவாகும். பிடிமானத்தில் பிரச்னை இருப்பவர்கள் இதை அடிக்கடி செய்யலாம்.

க்ளா ஸ்ரெட்ச் (Claw stretch):

கைகளை விரித்துக்கொண்டு, விரல்களை உள்நோக்கி மடக்க வேண்டும். மடக்கும்போது, விரலின் மேல்நுனி, கீழ்நுனியைத் தொடுமாறு வைக்க வேண்டும். பெருவிரலை மடக்கச் சிலர் சிரமப்படுவார்கள். அந்த விரலை எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு மடக்கினால் போதும். இதைச் செய்யும்போது, உள்ளங்கை நன்கு விரிவடைந்து, அதில் மெல்லிய வலி ஏற்பட வேண்டும். அப்போதுதான் முழு பலன் கிடைக்கும்.

பலன்: உள்ளங்கை மற்றும் விரல்களுக்கான பயிற்சி இது. விரல்களை அதிகம் பயன்படுத்துவோர் இதைச் செய்வதால் விரல் எலும்புத் தேய்மானம், நரம்புத் தளர்ச்சி போன்றவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

ரிஸ்ட் ஆக்டிவ் ரேஞ்ச் ஆஃப் மோஷன் (Wrist active range of motion):

கையில், மணிக்கட்டின் மேல் உள்ளங்கையைச் சிறிது நேரம் தரையை நோக்கித் தொங்கவிட வேண்டும். சில விநாடிகள் கழித்து, மேல்நோக்கி 90 டிகிரி கோணத்தில் நிமிர்த்த வேண்டும். இதுபோல 10 முறை செய்ய வேண்டும். அடுத்து, கையை நேராக வைத்து, விரல்களை உள்நோக்கி மடித்துக்கொள்ளவும். மடித்துக்கொண்ட உள்ளங்கையை மணிக்கட்டுக்கு 45 டிகிரி கோணத்தில் இருக்கும்படியாக வளைத்துக்கொள்ள வேண்டும். இதை ஐந்து முறை செய்யவேண்டும்.

பலன்: மணிக்கட்டுக்கு இது மிகவும் நல்ல பயிற்சி. கம்ப்யூட்டரை அதிகமாகப் பயன்படுத்துவோருக்கு மணிக்கட்டில் வலி, மூட்டு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அவர்கள் அவசியம் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

ரிஸ்ட் ஃப்ளெக்சேஷன் ஸ்ட்ரெட்ச் வித் த பாட்டில் (Wrist flexation stretch with the bottle):

பாட்டில், டம்ளர் போன்றவற்றின் உதவியுடன் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். டம்ளரின் பின்பகுதி விரல்களுக்கு அருகில் இருக்கும்படி பிடித்துக்கொண்டு, மணிக்கட்டை மேல்நோக்கி மடக்க வேண்டும். இந்தப் பயிற்சியை, அப்படியே கீழ்நோக்கிச் செய்ய வேண்டும். தரையை நோக்கிக் கைவிரல்களும், டம்ளரின் வாய்ப்பகுதியும் இருக்க வேண்டும்.

பலன்: கைகளில் உள்ள தசைகளுக்கும் மணிக்கட்டுக்கும் சிறந்த பயிற்சி. சிலருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், உள்ளங்கையில் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும்.

பின்ச் ஸ்ட்ரென்தென் (Pinch strengthen):

ஸ்ட்ரெட்ச் பால் (Stretch Ball) என்ற சிறிய வகை ரப்பர் பந்தை வைத்து இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். விரல்களுக்கு அழுத்தம் கொடுத்து பந்தை அழுத்த வேண்டும். கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் பந்தைக் கிள்ளுவதுபோல் (Pinch) செய்ய வேண்டும். அப்போது மற்ற விரல்களுக்குக் கொடுத்த அழுத்தத்தை விலக்கிக்கொள்ளலாம். ஆனால், விரல்கள் பந்தை ஒட்டியபடி இருக்க வேண்டும். ஒரு முறை செய்ததும் ரிலாக்ஸ் செய்துவிட்டு, மீண்டும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும். முதலில் செய்யும்போது விரல்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்குச் சிறிது நேரமும், ரிலாக்ஸ் ஆக அதிக நேரமும் எடுத்துக்கொள்ளலாம். நன்றாகப் பழகியதும் அழுத்தம் கொடுப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம்.

பலன்: கைகள் வலுவில்லாமல் இருப்பதன் காரணமாக, பொருள்களை அதிக நேரம் பிடிக்க முடியாமல் சிலர் திணறுவார்கள். அவர்கள் இந்தப் பயிற்சியைச் செய்தால், தசைகள் இறுகி விரல்கள் வலுப்பெறும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக