புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_c10`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_m10`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_c10`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_m10`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_c10`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_m10`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_c10 
53 Posts - 60%
heezulia
`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_c10`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_m10`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_c10`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_m10`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_c10`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_m10`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 7:43 am

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கேரளாவின் எர்ணாகுளம், பத்தனம்திட்டா உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் போடப்பட்டிருப்பதால் பெற்றோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.

`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை KaCg3HvQNWSepa65Obfy+bc5e638d5adc42cfdd96b66c8e1d1024
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல், சித்தா மற்றும் யுனானி மருத்துவப் படிப்புகளிலும் நீட் தேர்வின் மூலமாகவே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நீட் தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். இதற்காக மாணவர்கள், தனியார் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.சி உள்ளிட்ட 30-க்கும் அதிகமான கல்வித் திட்டங்களின் கீழ் மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் பெரும்பாலான மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். அத்துடன், தமிழகத்தில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். இந்த நிலையில், அனைத்து வகை கல்வி அமைப்பிலும் படித்தவர்களுக்கும் ஒரே தரத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனை சி.பி.எஸ்.சி அமைப்பு நடத்துகிறது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 7:44 am

கடந்த ஆண்டு, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுமா? விலக்கு அளிக்கப்படுமா? என்கிற கேள்வி கடைசி வரையிலும் நீடித்தது. அதனால் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்த 5 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடித்த சோகம் ஏற்பட்டது. அதனால், இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் பயிலும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது. அதில் சிறப்பாகக் கல்வி பயிலும் மாணவர்களை கடந்த ஜனவரி மாதத்தில் அடையாளம் கண்டு 2,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு 8 முகாம்களில் 25 நாள்களுக்குத் தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கான வினா-விடை புத்தகங்களும் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
அதனால், இந்த ஆண்டு தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் அரசுப் பள்ளி மாணவர்களும் பெருமளவுக்கு நீட் தேர்வுக்குத் தயாராகி உள்ளனர். மே 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான அனுமதிச் சீட்டுகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்த, தமிழக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பலருக்கும் வெளிமாநிலத் தேர்வு மையங்களுக்கு ஹால் டிக்கெட் வந்திருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 7:46 am

குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்குக் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதியில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் செய்வதறியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள். இது தொடர்பாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த காளிமுத்து மைலவன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ``நெல்லை, தூத்துக்குடி, குமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணபித்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதனால் நீட் தேர்வு எழுதும் 17 வயதே நிறைந்த மாணவர்கள் அண்டை மாநிலத் தேர்வு மையங்களுக்குத் தேர்வு எழுதச் செல்வதில் சிரமம் உருவாகும். எனவே, தேர்வு மையங்களை தமிழகத்திற்குள் மறு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், சி.பி.எஸ்.சி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், `தேர்வு மையங்கள் ஒதுக்கீடு என்பது கணினி மூலம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களை மாற்ற முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை ISlehT0GThKpb1OAaQRB+fbcd71904356e51b04e7dd36b8155b50

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்துக்கு உள்ளேயே தேர்வு மையத்தை ஒதுக்க வேண்டும். கணினி கோளாறால் ஏற்பட்ட தவற்றைச் சரி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. கடந்த வாரத்தில் வெளியான இந்தத் தீர்ப்பு தமிழக மாணவர்களின் நெஞ்சில் பால் வார்த்தது. ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து, நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சி சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 7:46 am

அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று (3-ம் தேதி) வெளியிட்ட தீர்ப்பில், `நீட் தேர்வுக்காக நாள் நெருங்கி விட்டது. மே 6-ம் தேதி மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தமிழக மாணவர்களுக்குக் கணினி கோளாறால் கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதை சரிசெய்ய போதுமான கால அவகாசம் இல்லை. அதனால் தேர்வு மையத்தை இனி மாற்றமுடியாது. அதனால் உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கப்படுகிறது. அதே சமயம், அடுத்த ஆண்டு தவறு ஏற்படாமல் சி.பி.எஸ்.சி பார்த்துகொள்ள வேண்டும்’ எனத் தீர்ப்பளித்தது.
அதனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைமை உருவாகி இருக்கிறது. இது பற்றி அதிகாரிகளிடம் பேசியபோது, ``நீட் தேர்வானது நாடு முழுவதும் 151 நகரங்களில் நடத்தப்படுகிறது. நாட்டிலேயே அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 17 நகரங்களிலும் அடுத்ததாக தமிழகத்தில் 12 நகரங்களிலும் தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, கேரளா, குஜராத் மாநிலங்களில் தலா 10 நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் 9 நகரங்களும் டெல்லியில் 5 நகரங்களும் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் இந்த ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை என மொத்தம் 12 நகரங்கள் ஒதுக்கப்பட்ட போதிலும், தமிழகம் சார்பாக கம்மம், ரெங்காரெட்டி ஆகிய இரு இடங்களும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு நெல்லையில் உள்ள 10 பள்ளிகளில் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு 4000 பேர் தேர்வு எழுதினார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 7:47 am

இந்த ஆண்டு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த 6000-க்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த ஆண்டும் 10 பள்ளிகளில் மட்டுமே தேர்வு மையங்களை ஏற்படுத்தியதன் காரணமாகவே இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் 700 முதல் 1000 மாணவர்களுக்குக் கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டிய நிலை உருவாகி விட்டது.
ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதுமே இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தார்கள். ஆனால், அதற்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்கான தேர்வு மையங்களை ஒதுக்காததால், தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 6000 மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதும் நிலைமை உருவாகியிருக்கிறது. கேரளா மட்டுமல்லாமல் சிலருக்கு ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதுதான் வேதனையின் உச்சம்’’ என்றார்.
தேர்வு மையங்களை ஒதுக்குவதில் ஏற்பட்ட குழப்பதால் மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோரும் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எர்ணாகுளம், பத்தனம்திட்டா மையங்கள் ஒதுக்கப்பட்டதால், அங்கு முதல்நாளிலேயே செல்ல வேண்டிய நிலைமை உருவாகியிருக்கிறது. ஆனால், அங்கு செல்வதற்கான ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து வசதி மிகக் குறைவாக இருப்பதால் பெற்றோர் சிலர் ஒன்றிணைந்து தனியாக வாகனங்களை வாடகைக்கு அமர்த்திச் செல்லுகின்றனர். வேறு சில மாணவர்கள் தேர்வு எழுதுவதும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 7:49 am

`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை WoCKosHETriURyE88hac+a54bddd699c0eb2788d6b3cde6ecd2b5
இது பற்றி நெல்லையில் உள்ள ஜெயேந்திரா பள்ளியில் நீட் தேர்வுக்காகப் படித்து வரும் மாணவியான கவுசல்யா பேசுகையில், ``நான் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையிலிருந்து வந்து பயிற்சி எடுத்து வருகிறேன். என்னுடன் சேர்ந்து மேலும் இரு மாணவிகள் இங்கு பயிற்சிக்கு வந்தார்கள். ஆனால், அவர்களுக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் போடப்பட்டதால், அங்கு சென்று தேர்வு எழுதுவதில் உள்ள சிரமம் காரணமாகப் பாதியிலேயே பயிற்சியை நிறுத்தி விட்டார்கள்.
எங்க வீட்டிலும் கஷ்டமான சூழ்நிலையில், `இந்தத் தேர்வை எழுதித்தான் ஆகவேண்டுமா?’னு கேட்டார்கள். நானும் திட்டவட்டமாக எழுத வேண்டும் என்று சொன்னதால் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு எந்தப் பள்ளி? எப்படிச் செல்ல வேண்டும்? என்பது தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறோம். தெரியாத ஊரில், புரியாத மொழி பேசும் நகரில் எப்படி சமாளிக்கப் போகிறோம் என நினைத்தாலே பயமாக இருக்கு. இது போன்ற நிலைமை இனி யாருக்கும் வரக்கூடாது’’ என்றார் வேதனையுடன்.


மதுபால கிஷோர் என்ற மாணவன் கூறுகையில், ``நாங்கள் படிக்காத சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வு நடத்தப்படுவது ஒரு சோகம் என்றால், தேர்வு மையத்தை தெரியாத இடத்தில் வைத்து விட்டு அங்கே சென்று தேர்வு எழுது என்பது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நான் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்தபோது மூன்று இடங்களை தேர்வு செய்யச் சொன்னார்கள். முதலில் நெல்லையைத் தேர்வு செய்தேன். அடுத்தடுத்த இடங்களாக மதுரை மற்றும் திருச்சியைத் தேர்வு செய்தேன்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 7:50 am

`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை AuYyF6yRA2P6CiHFb0Db+5357673f500e1cf0e3edae667eec3128

ஆனால், நான் தேர்வு செய்த நகரங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் எர்ணாகுளம் நகரில் தேர்வு மையத்தை போட்டிருக்கிறார்கள். இடையில் உயர்நிதிமன்றத் தீர்ப்பு வந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அதையும் உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது வேதனையளிக்கிறது. அவர்களாகவோ அல்லது கம்ப்யூட்டரோ தேர்வு மையத்தை தேர்வு செய்யும் என்றால் என்னிடம் மூன்று இடங்களைக் கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவர்களாகவே விரும்பிய இடத்தை போட்டுவிட வேண்டியது தானே? எனக்காவது பரவாயில்லை. ராஜஸ்தானில் தேர்வு மையமாகப் போடப்பட்டிருக்கும் மாணவர்களை நினைத்தாலே கவலையாக இருக்கு’’ என்று படபடத்தார்.
இதே போல பெற்றோரும் நீட் தேர்வு மையம் தொடர்பாக அதிருப்தியில் இருக்கிறார்கள். மாணவர்கள் கேரளாவுக்குச் சென்று தேர்வு எழுதுவதற்கு பேருந்து வசதி இருக்கிறதா? என்பதைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் அமைச்சர்களும் அதிகாரிகளும் இருப்பதாகப் பெற்றோர் குற்றம் சாட்டுகிறார்கள். தேர்வு மையத்தை மாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, மத்திய அரசிடம் பேசி கேரளாவுக்குச் சிறப்பு ரயில்களையாவது இயக்க ஏற்பாடு செய்திருக்கலாமே? என்கிற கேள்வியையும் பெற்றோர் எழுப்புகிறார்கள். தமிழக அரசு உறங்குகிறதா? அல்லது உறங்குவது போல நடிக்கிறதா? என்பதே இப்போது மக்களிடம் எழும் கேள்வியாக இருக்கிறது.
நன்றி
விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக