புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_c10  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_m10  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_c10 
32 Posts - 51%
heezulia
  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_c10  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_m10  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_c10  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_m10  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_c10  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_m10  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_c10 
74 Posts - 57%
heezulia
  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_c10  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_m10  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_c10  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_m10  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_c10  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_m10  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 07, 2018 7:52 pm

  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Kaala_june7_12

By சுரேஷ் கண்ணன் - தினமணி
-
அடித்தட்டு மக்கள், தங்களின் அடிப்படை உரிமைகளை
அதிகாரத்தின் கைகளிலிருந்து மீட்பதற்குப் போராட்டத்தைத்
தவிர வேறு வழியேயில்லை என்கிற அரசியல் செய்தியை
அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது, ரஞ்சித்தின் ‘காலா’
திரைப்படம்.

‘நிலம் எங்கள் உரிமை’ என்கிற ஆதாரமான செய்தி
பல்வேறு இடங்களில் தொடர்ந்து நினைவூட்டப்பட்டுக்
கொண்டேயிருக்கிறது. ஆனால் இது சார்ந்த தீர்வு எந்த
வகையான போராட்டத்தில் கிடைக்கும் என்பது
தடுமாற்றத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது.

எதிர்ப்பதற்காகவும் தற்காத்துக் கொள்வதற்காகவும்
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் வன்முறையை
வன்முறையால் எதிர்கொள்வது அவசியம்தான்
என்றாலும், நிலையான தீர்வுகளுக்கு மக்களிடம்
அரசியல் விழிப்புணர்வு பரவுவதே சரியான வழி
என்பதை ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் சொன்ன
இரஞ்சித், ‘காலா’வில் பல குழப்பமான செய்திகளை
விட்டுச் சென்றிருக்கிறார்.

காலாவின் மகனான லெனின் ஜனநாயகப்
போராட்டங்களின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண
முயல்கிறார். ஆனால் அவரின் வழிமுறைகள்
கோமாளியாக்கப்படும் சூழலில் அதிகாரத்தின்
மூர்க்கத்தை எதிர்க்கவும் கட்டுப்படுத்தவும் ரஜினியின்
ரவுடியிஸம்தான் இறுதி வரை கைகொடுக்கிறது.
இதன் மூலம் இரஞ்சித் உணர்த்த வரும் செய்தி என்ன?

**


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 07, 2018 7:53 pm

மும்பை, தாராவியில் உள்ள அடித்தட்டு மக்களின்
காப்பாளன் ‘காலா’ என்கிற கரிகாலன். அங்குள்ள
மக்களுக்கு ‘வீடு கட்டித் தருகிறேன்’ என்று சில
கட்டுமான நிறுவனங்கள் கிளம்புகின்றன.

இந்தத் திட்டத்தின் பின்னால் அந்த ஊரின் பிரபல
அரசியல்வாதியான ஹரிதாதா இருக்கிறார். தாராவி ப
குதியின் முன்னாள் காப்பாளராக இருந்தவரும்,
காலாவின் தந்தையுமான ‘வேங்கையன்’ கொல்லப்
படுவதற்கு இந்த ஹரிதான் காரணம்.

ஹரியின் சூழ்ச்சியை உணரும் கரிகாலன், வீட்டுத்
திட்டம் நிறைவேற்றப்படாமலும், அதன் மூலம் பாமர
மக்கள் ஏமாறாமல் இருக்கவும் அரணாக நிற்கிறார்.
இதன் மூலம் அவர் பல தனிப்பட்ட இழப்புகளை
எதிர்கொள்ள நேர்கிறது.

எதிரிகளைக் காலா வீழ்த்தினாரா, வீழ்ந்தாரா
என்பதைப் படத்தின் பிற்பகுதியில் வரும் பரபரப்பான
காட்சிகள் விவரிக்கின்றன.

**

மிகையான ஒப்பனையுடன் இளம்பெண்களிடம் ‘டூயட்’
பாடும் அபத்தங்களில் இருந்து விடுபட்டுத் தன் வயதிற்கு
ஏற்ற பாத்திரங்களை ரஜினி ஏற்கத் துவங்கியிருப்பது
மகிழ்ச்சி. இது தொடர வேண்டும்.

‘காலா’வாகப் பெரும்பான்மையான இடங்களில் ரஜினி
தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால்
சில காட்சிகளில் வழக்கமான ஹீரோயிஸம் உயர்ந்து
நிற்பது நெருடலாகவும் அபத்தமாகவும் இருக்கின்றன.

அறுபது வயதிற்கு மேற்பட்ட ஒருவர், பத்து பதினைந்து
மூர்க்கர்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடும் காட்சிகள்
ரஜினி மற்றும் வெகுஜன ரசிகர்களுக்காகச் செய்யப்பட்ட
சமரசமாகி நிற்கின்றன.

எனவே இது ரஜினி சினிமாவாக அல்லாமலும் இரஞ்சித்தின்
சினிமாவாக இல்லாமலும் இரண்டுங்கெட்டான்தனமாக
ஆகியுள்ளது.

இழந்த காதலின் தேடல் மற்றும் ஏக்கம் என்கிற படிமம்
இரஞ்சித்தின் படங்களில் தொடர்ந்து காணப்படுகின்றன.
தொலைந்து போன மனைவியை ‘கபாலி’யில் தேடித்
தவித்த ரஜினி, ‘காலா’வில் தன் பழைய காதலியைக்
கண்டு உருகுகிறார்; மருகுகிறார்.

இது தொடர்பான காட்சிகள் இயல்பாகவும்
நெகிழ்ச்சியாகவும் பதிவாகியிருக்கின்றன. இரஞ்சித்தால்
நல்லதொரு ‘ரொமாண்ட்டிக்’ சினிமாவைத் தர முடியும்
என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.



ரஜினியின் பழைய காதலி ‘ஜெரீனா’வாக ஹியூமா குரேஷி
இயல்பாக நடித்திருக்கிறார். இருவரும் உணவகம் ஒன்றில்
அமர்ந்து பேசும் காட்சி சிறப்பானது. தங்களின்
‘மலரும் நினைவுகளைப்’ பரவசத்துடன் நினைவுகூர்வது
முதற்கொண்டுச் சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவர்கள்
சமகாலத்திற்குள் வந்து விழுவது வரை அந்தக் காட்சி
அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 07, 2018 7:53 pm


ரஜினியின் மனைவி ‘செல்வி’யாக நடித்திருக்கும்
ஈஸ்வரி ராவின் நடிப்பு பிரத்யேகமாகச் சொல்லப்பட
வேண்டியது. ‘தே.. இப்படி வந்து உக்காரு. திருஷ்டி சுத்திப்
போடணும்’ என்று ஏக வசனத்தில் கணவரைத் தொடர்ந்து
கலாட்டா செய்து கொண்டேயிருந்தாலும் அடியாழத்தில்
உள்ள அவரின் அன்பும் காதலும் பல காட்சிகளில்
அற்புதமாகப் பிரதிபலித்திருக்கின்றன.

பழைய காதலியை சந்தித்துவிட்டு ரகசிய உற்சாகத்துடன்
வரும் ரஜினியிடம் ‘தின்னவேலில பத்தாப்பு படிக்கும்போது
என்னையும் நெறய பசங்க விரட்டிட்டு இருந்தாங்க..
அதில ஒருத்தன் என்னையே சுத்தி சுத்தி வந்தான். நானும்
ஒரு எட்டு ஊருக்குப் போய் அவன் எப்படியிருக்கான்னு
பாத்திட்டு வந்துடறேன்’ என்று கோபத்தை வெளிக்காட்டும்
காட்சி நகைச்சுவைக் கலாட்டா.

எதிர்நாயகனாக நானா படேகர். அதிகார மமதையும்
அகங்காரமும் தளும்பி வழியும் அரசியல்வாதியின்
பாத்திரத்தை அற்புத இயல்புடன் கையாண்டிருக்கிறார்.

எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வில்லத்
தனத்தைக் காட்டியிருக்கிறார். ‘உன்னைத்தான் கொல்ல
நினைச்சேன். உன் மனைவியும் மகனும் இறந்துட்டாங்க.
மன்னிச்சுடு’ என்று ரஜினியிடம் சொல்வது போன்ற
காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

ரஜினியின் மச்சானாகவும் வலதுகையாகவும் வரும்
சமுத்திரக்கனியின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. ரஜினியின்
மகன் ‘லெனின்’ ஆக நடித்திருக்கும் மணிகண்டனின்
பங்களிப்பு சிறப்பானது.

*


பார்வையாளர்கள் எரிச்சலடையும்படி பாடல்களைச்
செயற்கையாகத் திணிக்காமல் சரியான சந்தர்ப்பங்களில்
உபயோகிக்கும் இரஞ்சித்தின் திறமை ‘காலா’விலும்
தொடர்கிறது.

பொருத்தமான இடங்களில் பாடல்கள் அளவோடு
ஒலிக்கின்றன. படவெளியீட்டிற்கு முன்னால் ‘பாடல்களை’
இரைச்சலாக உணர்ந்தவர்கள் கூட திருப்தியடையும்படி
இருக்கின்றன பாடல் காட்சிகள். இரஞ்சித் முன்மொழியும்
அரசியல், பாடல் வரிகளில் கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன.

காட்சிகளின் பரபரப்பிற்கு சந்தோஷ் நாராயணின்
அபாரமான பின்னணி இசை உறுதுணையாக நின்றிருக்கிறது.
வசனங்கள் இயல்பாகவும் சமயங்களில் அரசியல் அனல்
தெறிப்புடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

-----

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 07, 2018 9:54 pm



காலா படத்தை இங்கு ஆன்லைனில் பார்த்து மகிழுங்கள்.

இணைப்பு இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.

Kaala online streaming



  ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 08, 2018 12:37 pm

நன்றி சிவா, ராஜா அனுப்பிய லிங்க் இல் நேற்று பார்த்துவிட்டோம் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக