புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
48 Posts - 41%
prajai
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
1 Post - 1%
kargan86
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
1 Post - 1%
jairam
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
8 Posts - 5%
prajai
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_m10ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 31, 2018 10:40 pm

ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'!

அவன் மகா சாது, மகா பக்தி, மகா உழைப்பு, மகா மகா வினயம், இன்னும் பல மகாக்களுக்கு உரியவன். பொருத்தமில்லாத ஒரு மகாவுக்கும் உரியவன் - மகா குடியன்.

எங்கள் குவார்ட்டர்ஸில் தோட்டக்காரன், காவல்காரன், அக்கம் பக்கத்துக்கெல்லாம் ஆடி மாசக் கூழ் ஊற்றும்போது சமையல்காரன்.

சாயந்தரத்துக்குள் காம்பவுண்ட் வேலைகளை ஒழுங்காக செய்து முடித்துவிட்டு அங்கிருக்கும் பிள்ளையார் முன்னால் (சிறிய ஒரு பிள்ளையார் கோவிலை குடித்தனக்காரர்கள் கட்டியிருந்தனர்.) உட்கார்ந்து விடுவான்.

விடிய விடிய பிள்ளையார் சந்நிதி தோட்டக்கார கிருஷ்ணனுடையதுதான்.

வயிறு முட்டக் குடித்துவிட்டு சுருண்டு படுக்கிற விவகாரமெல்லாம் அவனிடமில்லை. பிள்ளையார் எதிரில் உட்கார்ந்து அவரோடு பேசத் தொடங்கிவிடுவான். பேச்சு சில சமயத்தில் பழைய சினிமாப் பாட்டாக மாறி - அங்கங்கே அவனது சொந்தக் கருத்துக்கள், நாட்டு நடப்பு இதெல்லாம் கலந்து வரும். உதாரணமாக - ''போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?''... பாட்டைத் தொடங்குகிறான் என்றால் சிறிது நேரமே ஒரிஜினல் வரிகள் வெளிப்படும்.

அப்புறம் அவனுக்குள்ளிருக்கும் அரசியல் ஞானமும், கவிதை நயமும், புரட்சிக் கனலும் சில குடித்தனக்காரர்களின் மேலுள்ள எரிச்சலும் பாட்டோடு கலந்துவிடும்.

"போனால் போகட்டும் போடா... டேய் பாலாஜி ராவ்! என்னடா பெரிய ஆபீசரு. உன் காரை நான் இன்னும் நல்லாத் துடைக்கணுமா? ஹா. ஹா. ஹா! (சிரிப்பு - எம்.ஆர். ராதா குரலில்) போடா போடா இவனே. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாருடா? உன் கார் மட்டும் நிலையாடா?... (வேறு பாட்டு தலையெடுக்கிறது) பொன்னை விரும்பும் பூமியிலே, என்னை விரும்பும் ஓருயிரே. ஹா. ஹா. ஹா! உன்னை விரும்பவே மாட்டேண்டா. (சில கெட்ட வார்த்தைகள்.) ஓட்டு போடணுமா ஓட்டு. போங்கடா போங்க. யாரை நம்பி நான் பொறந்தேன். (சிரிப்பு) பிள்ளையார்தான் என் சாமி. அதுக்குத்தாண்டா என் ஓட்டு. டேய் பாலாஜி ராவ், உன்னைவிட உன் வீட்டு நாய் ரொம்ப நல்ல நாய். வாடான்னா வரும். வந்து படுத்துக்கடான்னா வந்து படுத்துக்கும்."

இப்படியாக ராத்திரி 12 மணி வரை பாட்டும் வசனமுமாக இருக்கும். தூங்குவதற்கு மிக இடைஞ்சலாக இருப்பதாகக் குடித்தனக்காரர்கள் அவ்வப்பொழுது லேசாகக் குறை கூறுவார்களே தவிர தீவிரமாக முடிவெடுத்து அவனை வேலையிலிருந்து நீக்கியதில்லை.

ராத்திரி பூரா அமர்க்களப்படுத்தினாலும் காலையில் 5 மணிக்கு முன்னதாகக் குளித்து நெற்றியில் பளீரெனத் திருநீறு துலங்க தோட்டம், கோயில் எல்லா இடங்களிலும் சுத்தமாகப் பெருக்கிக்கொண்டிருப்பான்.

"என்னய்யா ராத்திரி ரொம்பக் கலாட்டா பண்ணிட்டிருந்த?" என்று யாராவது அதட்டினால் ஒரு நெளி நெளிந்துகொண்டு நைஸாக நழுவி விடுவான். ராத்திரியானால் மறுபடி குடி, உளறல், பிள்ளையாருடன் பேச்சு, பாட்டு.

அவனிடம் ஒரு நாள் காலையில் "யோவ்! போய் ஒரு ரூபாய்க்கு கற்பூரம் வாங்கிட்டு வாய்யா?" என்றேன். வாங்கி வந்தான்.

"உட்கார் இப்படி" பிள்ளையார் முன்னால் உட்கார வைத்து நானும் உட்கார்ந்து கொண்டேன். குடியால் ஏற்படக்கூடிய கெடுதல்களையெல்லாம் ஒரு மணி நேரம் அவனுக்கு சொன்னேன்.

அவனது நல்ல குணங்களையும், அவனது கடவுள் பக்தியைப் பற்றியும் அரை மணி பாராட்டினேன்.

"இனிமேல் குடிக்கமாட்டேங்க. சத்தியமாக," என்றான். பெரியதாக அழுகை வேறு.

"சரி, சரி. நீ எத்தனையோ தடவை சத்தியம் பண்ணியிருக்கே. ஆனா குடிக்காம இருக்கிறதில்லே. அதனால் இந்தத் தடவை கற்பூரத்தை அணைத்து சத்தியம் பண்ணனும்," என்றேன்.

கற்பூரத்தை ஏற்றினேன். தணதணவென்று ஒரு ரூபாய் கற்பூரம் எரிந்தது.

"சொல்லுடா, இனிமேல் இந்த பிள்ளையார் சாமி சத்தியமா குடிக்கமாட்டேன். பிள்ளையார் மேலே இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்!"

நான் சொன்னபடியே சொல்லிக் கற்பூரத்தை அணைத்தான். இது காலை 9 மணிக்கு.

மாலை 7 மணிக்கு பிள்ளையார் முன்னால் ஒரு உருவம் உட்கார்ந்து அவரைக் கேள்வி கேட்கிறது.

"ஹூம்! நீயெல்லாம் ஒரு பிள்ளையார்! கேட்கிறேன் சொல்லு. ஏய்யா, நான் குடிக்கிறேனா. சொல்லு பார்ப்போம். (சில கெட்ட வார்த்தைகள்.) அவ பஜாரி. சரி உடு. நானும் பஜாரிதான். ஹா! ஹா! (சிரிப்பு) அவ பொம்பள பஜாரி. நான் ஆம்பள பஜாரி. ஹா! ஹா! கப்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணிட்டா குடிக்கக்கூடாது. மவனே, கப்பூரத்துக்கும் சத்தியத்துக்கும் இன்னாடா சம்பந்தம். குடிசை பத்தி எரிஞ்சா பத்து ஆளுங்க வந்து நெருப்ப அணைக்கிறாங்க. (பெருஞ் சிரிப்பு.) அத்தனை பேரும் குடிக்கமாட்டேண்ணு சத்தியம் பண்ணாங்களா."

நான் நினைத்துக்கொண்டேன். சத்தியம் என்பது ரொம்பப் பெரிய விஷயம். அதைப் பெரிய கோடீஸ்வரர்களாலேயே கூடக் காப்பாத்த முடிவதில்லை. இந்த ஏழைக் குடிகாரனால மட்டும் எப்படிக் காப்பாத்த முடியும்.

பாக்கியம் ராமசாமி

ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 01, 2018 10:24 am

ஆம் அண்ணா சத்தியம் உண்மையில் பெரிய விஷயம் தான் 
அதை அப்படி நினைப்பவருக்கு 

 சத்தியம் 
நான் இந்த வார்த்தையை பேச்சில் கூட பயன் படுத்த மாட்டேன் 
ஒருவருக்கு வாக்கு கொடுத்தால் எந்த நிலை வந்தாலும் அந்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும் 
அப்படி வாழ பழகிவிட்டால் அவனை மற்றவர்கள் ஏதோ வேற்றுகிரஹ வாசி போல பார்ப்பார்கள் 

பாகுபலி வசனம் 
கொடுத்த வாக்கிற்க்காக செய்த சத்தியத்திற்க்காக அந்த இறைவனே ஆனாலும் எதிர்த்து நில் 

எனக்கு என் அம்மா சொல்லி கொடுத்தது 
வாயால சொல்லிட்டா தயாரா வித்தாவது செய்யணும் 

அனால் அப்படி நடப்பது ஒரு போதை அது பழகிவிட்டால் மாற்றுவது கடினம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 01, 2018 10:37 am

நானும் இந்தக் கதையின் நாயகனைப் போலத்தான்..

புகைப்பதை நிறுத்துகிறேன் என என் மனைவியின் மீது பல முறை சத்தியம் செய்துவிட்டேன்...

Sent from Topic'it App

ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 01, 2018 1:38 pm

சிவா wrote:நானும் இந்தக் கதையின் நாயகனைப் போலத்தான்.. புகைப்பதை நிறுத்துகிறேன் என என் மனைவியின் மீது பல முறை சத்தியம் செய்துவிட்டேன்... Sent from Topic'it App
அது ரொம்ப சுலபமாச்சே நான் இதுவரை 500 தடவைக்குமேல் நிருத்திருக்கிரேனே
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! 15357810

Sent from Topic'it App

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 01, 2018 2:00 pm

நீங்களுமா பாலா?

இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு...

நான் கூட நான் மட்டும்தான் இப்படியே என நினைத்தேன்... 😀

Sent from Topic'it App

ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 01, 2018 2:19 pm

சிவா wrote:நீங்களுமா பாலா?

இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு...

நான் கூட நான் மட்டும்தான் இப்படியே என நினைத்தேன்... 😀

Sent from Topic'it App
மேற்கோள் செய்த பதிவு: 1275979

இடது தான் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பார்களோ 
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! 676261 ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! 676261 ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! 676261 ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! 676261

நான் சொன்னது மட்டையை தான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 01, 2018 3:42 pm

பிள்ளையார் முன் உட்காரர கும்பல் போல் தோணுதே.!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 01, 2018 3:45 pm

ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 01, 2018 4:43 pm

பாக்கியம் ராமசாமி கதை . கேட்கவா வேண்டும் அமர்க்களம்.

எந்தன் நினைவுக்கு வரும் ஒரு கதை.

தன் பெண்ணுக்கு வந்த வரனுடன் ஒரு தகப்பனாரின் உரையாடல்

த--(தகப்பனார்) --வணக்கம் நான் xx அவரின் தகப்பனார்.
பை--(பையன் )--வாங்க வாங்க வணக்கம் நாந்தான் yy
த : எங்கே வேலை ?
பை: மன்னார் கம்பெனியில் VP யாக இருக்கேன்.
த: பரவாயில்லையே ,சம்பளம் எல்லாம் ...
பை: கைக்கு 6 லக்கத்துக்கு மேல் வரும்
த: வண்டி ......
பை : ரெண்டு கார் இருக்கு
த: அப்பிடியா ,கண்ணுலே படலையேன்னு கேட்டேன்.
பை: ஒன்னு சர்வீஸுக்கு விட்டுருக்கேன். ரெண்டாவது பிரென்ட் 100 கிமு தூரத்திலே இருக்கிற கோவிலுக்கு குடும்பத்தோட  போகணும்னு னா.ட்ரெயினில் போய் அவஸ்தை படாதே னு சொல்லி பெட்ரோல்  ரொப்பி ட்ரைவர் ஏற்பாடு பண்ணி அனுப்பி உள்ளேன்.
த : ரொம்ப உபகார குணம் போலே.
பை : ஆமாங்க நண்பர்களெல்லாம் அப்பிடித்தான் சொல்லிட்டே இருப்பாங்க.
நம்மால முடிஞ்சதை செய்யறோம்.  பிறவி எடுத்ததே அதற்குதானே.
த : கேட்கவே சந்தோஷமா இருக்கு .......புகை......பழக்கம் .
பை: எனக்கு அகர்பத்தி ஸ்மெள்ளே அலர்ஜி . காலைலே சாமி முன்னாலே
உட்கார்ந்து அரை மணி பூஜை பண்ணிட்டு கடைசில அகர்பத்தி ஏத்தி
கடவுளுக்கு காண்பித்துவிட்டு ,பூஜாரூமிலிருந்து வந்துவிடுவேன்.  புகை கூடவே கூடாது.
த: ட்ரிங்க்ஸ் வகைரா..................
பை : பேசப்படாது சார். கோக் ,பெப்சி எல்லாம் உடம்புக்கு நல்லது இல்லனு சொல்லறதனால
பாட்டில் ட்ரிங்க்ஸ் கிடையாது. தினமும் காலைலே பூஜை முடிந்தவுடன் அரை டம்பளர் கங்கை தீர்த்தம் கடவுள் பேரை சொல்லி உள்ளே போகும். மாதாமாதம் காசியில் இருந்து கொரியர் மூலமா வருது.
த: அப்போ ஒரு கெட்ட வழக்கமும் கிடையாது. ரொம்ப சந்தோஷம் .
பை : அப்பிடின்னு சொல்லமுடியாது .....ஒரு சின்ன கெட்ட பழக்கம் உண்டு...
த : இவ்வளவு நல்ல குணங்கள் இருக்கையிலே ,ஒரு சின்ன கெட்ட பழக்கம் இருந்தால்
பரவாயில்லை....அதெல்லாம் கவலை இல்லே ...இனிமே அதை எல்லாம் வெளியே சொல்லவேண்டாம்.
தகப்பனார், பெண்ணுக்கு நல்ல வரன் கிடைத்ததாக  நினைத்து அபார்ட்மெண்ட்லிருந்து  வெளி வருகையில் , அவருடைய பழைய நண்பரை சந்தித்தார். அவரும் அதே அபார்ட்மெண்டில் இருப்பதாக கூறினார் . ரொம்ப நல்லது என்று நினைத்து, வந்த விஷயத்தை சொல்லி ,அந்த பையன் எப்பிடி என்றார்.

அவருடைய நண்பர் :  அந்த பைய........னா.. அவன் வாயிலிருந்து பொய்யை தவிர வேறெதுவும் வராதே!

பழைய கதை எப்பவோ படித்தது என்பது உண்மை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 01, 2018 4:52 pm

கதை அருமை ஐயா 

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக