புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
43 Posts - 50%
ayyasamy ram
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
30 Posts - 35%
prajai
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
3 Posts - 3%
Jenila
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
1 Post - 1%
jairam
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
30 Posts - 21%
prajai
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
7 Posts - 5%
Jenila
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
4 Posts - 3%
Baarushree
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
3 Posts - 2%
Rutu
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
1 Post - 1%
jairam
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீதை ராமன் கல்யாணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 21 Mar 2019 - 11:56

 சீதை ராமன் கல்யாணம் Tamil-Daily-News-Paper_9435236455
-
அலுத்துப் போய்விட்டது சீதைக்கு. சுயம்வரம் என்றால் என்ன? ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாளில், மணமகன்கள் எல்லோரும் வரிசையாய் வீற்றிருக்க, மணமகள் அவர்கள் ஒவ்வொருவராகப் பார்த்து, அவரவர் குணநலன், பதவி, குலம் போன்ற பட்டியலிடப்பட்ட தகவல்கள் முன்மொழியப்பட, அதைக்கேட்டு, தன் மனதுக்குப் பிடித்தவரைத் தேர்வு செய்யும் ஒரு வழிதானே?

இல்லையாம்! தந்தை ஜனக மகாராஜா, அவ்வாறு தன்னை மணக்க விரும்புபவரை அழைத்து, பலப்பரீட்சை செய்து, அந்த சோதனையில் வெற்றி பெறுபவரே தனக்கு மாலையணிப்பான் என்று அறிவித்துவிட்டார். அதனால் தன்னை மணக்க விரும்பி எப்போதும் அரசகுமாரர் வந்தாலும் அப்போது அவனுக்கு பலப்பரீட்சைதான். அதாவது அரசகுமாரன் வரும்போதெல்லாம் தனக்கு சுயம்வரம்தான்.

அடிக்கடி இப்படி மேற்கொள்ளப்படும் சுயம்வரத்தால் மட்டும் சீதைக்கு அலுப்பில்லை. வருபவர்களில் யாராவது சோதனையில் வென்று, தனக்கு மாலையிடுகிறான் என்றே வைத்துக் கொள்வோம், அவ்வாறு மாலையிடுபவன் தன் மனதுக்கு உகந்தவனாக இருப்பான் என்பது என்ன நிச்சயம்? அதாவது ஒரு பலசாலியால் தன்னை மணக்க முடியும் குணத்தால் அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும்!

சீதை குழம்பிய மனதுடன் உப்பரிகையில் உலா வந்தாள். அரண்மனை வளாகத்திற்குள் சோதனையை மேற்கொள்ள வரும் அரசகுமாரர்களை அங்கிருந்தே பார்ப்பாள். பார்த்தவுடன் மனதில் பதியக் கூடியவர்களாக அவர்களில் யாரும் இல்லாததை உணர்ந்து வேதனைப்படுவாள். அவர்களில் யாருமே சோதனையில் வென்றுவிடக் கூடாதே என்று வேண்டிக் கொள்வாள். நல்ல வேளையாக அதுவரை அவர்கள் யாருமே பலசாலியாக இல்லை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 21 Mar 2019 - 11:56

என்ன சோதனை அது?

விதேக நாட்டின் மன்னரான ஜனகர், ஒரு சமயம் பிரமாண்டமான யாகம் ஒன்றைச் செய்தார். சிறிதுகூட அப்பழுக்கின்றி, எந்தக் குறையும் சொல்ல இயலாதபடி நிறைவுபெற்ற அந்த மகா யாகத்தைப் பெரிதும் பாராட்டினான், வருணன். தன் பிரமிப்புக்குப் பரிசாக ஒரு தெய்வீக வில்லையும் இரண்டு அம்பறாத் தூணிகளையும் தந்தான்.

அந்த வில், சிவதனுசு! சிவபெருமானுடைய ஆசிகளைப் பெற்றது. சிறந்த, நல்லொழுக்கம் மிக்க, பெரியோரை மதிக்கும் பண்புடைய ஆற்றல் மிக்க, அதேசமயம் தேர்ந்த அடக்கமும் உள்ள வீரனால் மட்டுமே அந்த தனுசைத் தொட்டுத் தூக்க முடியும்.

அந்த சிவதனுசைத் தூக்கி, யார் நாணேற்றுகிறாரோ அந்த சுத்தமான வீரனுக்கே தன் மகள் என்று அறிவித்திருந்தார் ஜனகர்.

இப்படி ஒரு சோதனையில் வெல்பவனே தன் மருமகன் என்று அவர் நிபந்தனை விதித்ததற்கும் ஒரு காரணம் இருந்தது.

அது, சீதை ஒரு தெய்வக் குழந்தை என்பதால்தான்! ஆமாம். யாகம் செய்வதைத் தன்னுடைய தலையாய கடமைகளில் ஒன்றாகக் கருதி அதன்படியே செய்தும் வந்தவர் ஜனகர். ஒருமுறை அவ்வாறு யாகம் செய்ய முற்பட்டு, அந்த முறைப்படி, அதற்கான இடத்தைத்தானே தேர்ந்தெடுத்து, தானே கலப்பையைப் பிடித்து நிலத்தை உழுதார். யாகம் முடிந்த பிறகுதானே அவிர்பாகம்? ஆனால், யாகத்துக்காக நிலத்தை உழுதபோதே ஜனகருக்கு அவிர்பாகம் கிடைத்துவிட்டது. அது ஓர் அழகிய பெண் குழந்தை. மண் பூசிய பொன்மேனி, மந்தஹாசச் சிரிப்போடு, பூமி தேவியே தன் இரு கரங்களாலும் அந்தக் குழந்தையைத் தாங்கி, தன்னிடம் தூக்கித் தருவதுபோல உணர்ந்தார் ஜனகர்.

அப்படியே அந்தக் குழந்தையை அள்ளிக்கொண்டார். நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். பூமிதேவி தந்த வரம் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். அந்தக் குழந்தையை நேரே தன் மனைவியிடம் எடுத்துச் சென்றார். ‘நம் செல்வம், நம் குழந்தை’ என்று பூரிப்போடு சொல்லி, அவளிடம் குழந்தையை ஒப்படைத்தார்.
-
அந்தக் குழந்தையைப் பார்த்த மாத்திரத்திலேயே தாய்மை சுரந்தது அரசிக்கு. சீதை ராஜ வம்சத்து வாரிசானாள். ஜனகன் மகளானதால் ஜானகியானாள். விதேக நாட்டின் இளவரசி என்பதால் வைதேகி என்றும் மிதிலை நகரில் கண்டெடுக்கப்பட்டவள் என்பதால் மைதிலி என்றும் பலரும் அவளை வாயார அழைத்து, நெஞ்சார வாழ்த்தினார்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 21 Mar 2019 - 11:57

அந்த ஜானகிக்குத்தான் சுயம்வரம்.

அவளுடைய தெய்வீகப் பேரழகு, அவளுடைய தந்தையான ஜனகரின் விரிந்து பரந்த சாம்ராஜ்யம், அவளை மனைவியாக அடைவதால் ஏற்படக்கூடிய கௌரவம், எல்லாவற்றையும் கணக்குப் போட்டு, பல தேசத்து ராஜகுமாரர்கள் வில் தூக்கும் சோதனையில் தம்மை உட்படுத்திக் கொண்டு தோல்வியை மட்டும் தழுவிச் சென்றார்கள்.

சீதையின் மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு. வில்லை வளைக்கும் வீரன், தன் மனதையும் வளைத்துப் போடுவானா? வீரமும் பலமும் மட்டுமே தகுதியாக இருக்கும் பட்சத்தில், பிற குணநலன்களெல்லாம் சீரழிந்த ஒருவன் தனக்கு மாலையிட்டு விடுவானோ என்ற பயமும் இருந்தது.

ஆனால் சிவதனுசு தெய்வீகம் நிரம்பியது. நல்லொழுக்கம் இல்லாதவனால் அதை அசைக்கவே முடியாது என்ற உண்மை அவளுக்குத் தெரியவில்லை.

ஏக்கத்தோடு உப்பரிகைக்கு வந்தாள். மன மாற்றத்துக்காக அரண்மனைக் காட்சிகளில் மனதை லயிக்க விட்டாள். பளிச்சென்று கண்களில் சுடரொளி. ‘அதோ, தூரத்தில் சூரியன்போல பிரகாசித்துக் கொண்டு வரும் அந்தப் பேரழகன் யார்? முன்னால் ஒரு முனிவர் வருகிறார். அவனுக்குப் பின்னால் அவனுடைய சாயலில், அடக்கத்தோடு குனிந்த தலை நிமிராமல் ஓர் இளவல். இருவருக்கும் நடுவே கண்கூசாத பிரகாசம். மனதுக்குள் மகரந்தமாக மணம் வீச வைக்கும் தோற்றம். இவனும் வில்லேந்திதான் வருகிறான். அரண்மனைக்குள் வருவானா, சிவதனுசைப் பற்றி நாணேற்றுவானா, என் கழுத்தில் மங்கல நாண் சூட்டுவானா?’

தவித்தாள் சீதை. இந்தப் புது உணர்வில் அவளுடைய கண்களும் மனமும் படபடத்தன. அக்கம் பக்கம் தன்னை வேடிக்கை பார்க்குமே என்ற நாணம் சிறிதும் இன்றி, வைத்த விழி வாங்காமல் வீரனின் மனதை ஊடுருவ முயன்றாள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 21 Mar 2019 - 11:57

பளிச்சென்று அவளுடைய மனதில் ஒரு மின்னல். ஆமாம் அண்ணலுக்கும் அவள் மனம் பேசுவது கேட்டதோ? எண்ண அலைகள் சங்கமித்தனவோ? அதன்பலனாய் அவனும் நிமிர்ந்தான். பார்வைக் கோடுகள் ஒன்றோடொன்று சந்தித்து, கலந்து, முழுமன நினைவாக, முழு உடல் உணர்வாக நெகிழ்ச்சியூட்டிக் கொண்டன.

ஒரு விநாடிக்கும் குறைவான நேரம்தான். மனமின்றி கால்கள் பயணத்தைத் தொடர, அவன் முன்னே சென்றான். இவளும் மனமின்றி பார்வையை விழிக்குள் வாங்கி, இமைமூடி பிரார்த்தித்தாள். மூடிய விழிகளிலிருந்து கசிந்து வந்த கண்ணீர் அந்தப் பிரார்த்தனையின் யுகாந்திர தவத்தைப் புரிய வைத்தது. விசுவாமித்திரர், ராமனையும் லட்சுமணனையும் ஜனகரின் அரண்மனைக்குள் அழைத்துச் சென்றார்.

பகலிலேயே, தூங்காமல், விழி மூடாமல், கனவில் சஞ்சரித்தாள் சீதை. தன்னைக் கண்ணோடு கண் நோக்கியவன் தன் காதலனாவானா, தன்னைக் கரம் பிடிப்பானா என்று ஏங்கித் தவித்தாள். ஆனால் சிவதனுசு என்ற நந்தி குறுக்கே நிற்கிறதே! ‘ஏ, சிவதனுசே, நான் மனதார விரும்பும் நாயகனின் கைக்குள் நீ அடங்கிவிடு. அவனுக்காக வளைந்து கொடுத்து நாணேற்றிக்கொள். இது அவனுக்காக இல்லை, எனக்காக ஆமாம், இத்தனை நாள் இந்த அரண்மனையில் உன்னுடனேயே வாழ்ந்து வருகிறேனே, உன் தங்கைக்காக. என் மனமொப்பியவருடன், இனிது நான் வாழ நீதான் வளைந்துகொடுத்து ஆசி வழங்க வேண்டும்’ என்று உளமாற வேண்டிக் கொண்டாள்.

ராமனும் மனசுக்குள் காதல் வயப்பட்டிருந்தான். ஒரு வீச்சுப் பார்வையிலேயே என்னை முற்றிலுமாக கவர்ந்துவிட்ட அவளை, இந்த தேசத்து ராஜகுமாரியை, நான் மணக்க இயலுமா?
யோசித்தபடியே சென்றவனை ஜனகர் வரவேற்றார். ஆரம்பகட்ட உபசரிப்புகள் முடிந்ததும், தன் மகள் சீதையை மணமுடிக்க, தான் வைத்திருக்கும் நிபந்தனையையும் சொன்னார். பலபேர் வந்து முயன்று தோற்ற கதைகளையும் சொன்னார்.

ராமன், தன்னை அங்கே அழைத்து வந்திருந்த தன் குரு விசுவாமித்திரரைப் பார்த்தான். அவர் மனசுக்குள் சிரித்துக்கொண்டார். ‘தெரியாமலா உன்னை இங்கே அழைத்து வந்தேன், ராமா? நீ மணமுடிக்கும் நாள் வந்துவிட்டது. உன் தகுதிக்கும் அழகுக்கும் பண்புக்கும் ஏற்ற பெண்ணை உன்னுடன் இணைத்து வைக்க வேண்டிய என் பொறுப்பும் முடிய வேண்டும். ஆமாம், ஒரு பொய் சொல்லச் சொல்லி அரிச்சந்திரனையும், அவன் மனைவி சந்திரமதியையும் பிரித்து வைத்து பாவம் தேடிக் கொண்டேனே... அதற்கு பிராயச்சித்தம்தான் இது.’

தன் நினைவோட்டத்திலிருந்து விடுபட்ட முனிவர் ராமனைப் பார்த்து சம்மதமாகத் தலையசைத்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 21 Mar 2019 - 11:58


தம்பி லட்சுமணனைப் பார்த்தான், ராமன்.

‘அண்ணா, உங்கள் கண்ணுக்குள்ளும் மனசுக்குள்ளும் புகுந்த காரிகையை, உங்கள் மீது காதல் கணை வீசியவரை, இந்த சிவதனுசில் நாணேற்றி வெல்லுங்கள்’ என்று கண்களாலேயே தன் விருப்பத்தைச் சொன்னான். அண்ணன் ஆணையிட்டால் தன்னாலேயே அந்த தனுசில் நாணேற்றிவிட முடியும். ஆனால் அது அண்ணன் புகழுக்கு இழுக்கு உண்டாக்குமே என்றுதான் வாளாவிருந்தான். சீதையைக் கண்டபிறகு அண்ணனின் பழகு முறையில் ஏற்பட்டிருந்த வெட்கம் கலந்த மாற்றத்தை அவனால் உணர முடிந்தது. ஆகவே வெற்றி நாயகனாக இத்தருணத்தில் விளங்க வேண்டியவன் அண்ணனே என்று முடிவுக்கும் அவன் வந்திருந்தான்.

ராமன் சிவதனுசைப் பற்றினான். அது ஏற்கெனவே சீதையின் மானசீக வேண்டுகோளை செவி மடுத்திருந்ததோ? மிக எளிதாக அவனுடைய கைக்குள் குழைந்து நின்றது. நிமிர்த்திய தனுசின் கீழ் முனையைத் தனது வலது பாதத்தால் பற்றிக் கொண்டான் ராமன். மேல் முனையை வருடியபடி அதில் நாணைப் பூட்டினான். மேல் முனை நெகிழ்ந்தது. அண்ணலின் திரு முடியையும் அவனுடைய கருணை ததும்பும் விழிகளையும் பார்த்துப் பரவசப்பட்டிருந்தது தனுசு. ஆனால், இதென்ன, தன்னுடைய கீழ்முனைக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைத்திருக்கிறது!

ஆமாம்... ராமனின் பாதம் பட அதுதான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்! ராமனின் முடியைக் கண்டு மகிழ்ந்தாலும் அவனுடைய அடியையும் காணும் ஏக்கத்தில் அப்படியே வளைந்து குனிந்து, மிக மிகக் குனிந்து, பாக்கியம் பெற்ற தன் கீழ்முனையைப் பார்க்க... ‘படீர்’ என்ற வெடிச்சத்தத்துடன் தனுசு முறிந்தது. ‘போதும், இந்தப் பிறவியில் என் ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி ஒரு பிறவி வேண்டேன்’ என்ற நிறைவு அந்த ‘படீரி’ல் தெரிந்தது. அப்படியே இரண்டாக உடைந்து ராமன் பாதத்திலேயே விழுந்து சரண மோட்சம் அடைந்தது.

வையகமே மகிழ்ந்தது. சீதைக்குப் பொருத்தமானவன். அவனை அவள் மணப்பதில்தான் எல்லோருக்கும் எவ்வளவு சந்தோஷம்! ஜானகி, ஜானகி மணாளனானாள். மூவுலகத்தாரும் மலர் சொரிந்து வாழ்த்த, ராமன் சீதையின் கைத்தலம் பற்றினான்.
-
நன்றி- தினகரன் (ஆன்மிகம்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக