புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 8:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:32 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 1:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
29 Posts - 35%
prajai
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
3 Posts - 4%
Jenila
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
2 Posts - 2%
M. Priya
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
7 Posts - 5%
prajai
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
5 Posts - 4%
Jenila
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
4 Posts - 3%
Rutu
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
2 Posts - 1%
manikavi
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 3:34 pm

ஒரு நாள் காலையில் ஒரு குருவானவர் பாவத்தின் பயங்கரத்தைக் குறித்து சபையாரைக் கடுமையாய்க் கண்டித்துணர்த்திப் பேசினார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஓர் அங்கத்தினர் ஆராதனையின் முடிவில் அக்குருவானவரிடம் சென்று, ஐயா, நீங்கள் இவ்வளவு காரசாரமாகவும், வெளிப்படையாகவும் பாவத்தைக் குறித்துப் பகிரங்கமாய்ப் பேசவேண்டியதில்லை. காரணம் எங்களுடைய வாலிபப் பையன்களும் பெண்களும் பாவங்களைக் குறித்து வெளிப்படையாய் அறிந்துகொண்டால் அவர்கள் வெகு எளிதில் பாவிகளாகிவிடுவார்கள். வேண்டுமானால் பாவத்தைப் பாவம் என்று சொல்லாது, அதனை ஒரு குற்றம் என்று சொல்வீராக. ஆனால் பாவத்தைக் குறித்து இவ்வளவு பகிரங்கமாய்ப் பச்சையாகப் பேசவேண்டாம் என்றார்.

உடனே அக்குருவானவர் தன்னுடைய மருந்துப் பெட்டியில் நஞ்சு என்று தீட்டப்பட்டிருந்த ஒரு விஷ மருந்தை எடுத்து வந்து, அந்த அங்கத்தினரிடம் காட்டி, ஐயா, நான் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை அறிகிறேன். நஞ்சு என்று தீட்டப்பட்ட சீட்டை இந்த மருந்துப் புட்டியிலிருந்து எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக தேன் என்ற பெயரை அல்லது யாவரும் விரும்பும் இன்னொரு இனிய பெயரை, அதே நஞ்சு நிறைந்த புட்டியின்மேல் எழுதச் சொல்லுகிறீர். அதே நஞ்சை எவ்வளவு தூரம் இனிப்பான மருந்து என்று எழுதுகிறேனோ அவ்வளவு தூரம் ஆபத்தாக முடியும். நஞ்சு நஞ்சுதான். நஞ்சுதனை நஞ்சு என்று வெளியரங்கமாய், தெளிவாக வெகு திட்டவட்டமாய்க் கூறாவிட்டால் ஆபத்து நேரிடும். அது வஞ்சகமாகும். உள்ளதை உள்ளதென்று சொல்லவேண்டும். இல்லாததை இல்லாததென்று சொல்லவேண்டும். பாவத்தைப் பாவம் என்று சொல்லிப் பகிரங்கமாய்க் கண்டித்துணர்த்த வேண்டும். பாவத்தைக் குறித்து ஏனோதானோவென்று அசட்டையாயிருக்கிறவர்கள் மோசம் போவது திண்ணம்.

தற்காலத்தில் பாவத்தின் பயங்கரத்தையும் ஆபத்தையும் நாம் சரியாய் உணருகிறதில்லை. பாவம் மனிதனைக் கொல்லும் தன்மையுடையது. இக்கொடிய பாவத்தைப் பாவம் என்று வெளிப்படையாய்க் கூறாது, தற்காலத்தில் அதனை இலேசாக மதித்து, அப்பாவத்தோடு விளையாடி, அப்பாவத்தை இயற்கையான குற்றமென்றும், மனித பலவீனமென்றும், ஏதோ தவறுதல் என்றும் இலேசாக அதனைச் சாக்குப்போக்குச் சொல்லி நிர்விசாரமாக இருந்துவிடப் பார்க்கிறோம். ஆனால் சத்திய வேதாகமம் பாவத்தின் பயங்கரத்தையும், பாவம் விளைவிக்கும் மரணத்தையும் வெகு திட்டவட்டமாய் வெளிப்படுத்தியிருப்பதுபோல, நாமும் பாவத்தைப் பாவம் என்று கூறிப் பகிரங்கமாய் முகதாட்சண்யமின்றி கண்டித்துணர்த்த வேண்டும்.

மாபெரும் போப் கிரகோரி என்னும் புகழ்பெற்ற போப்புவானவர் ஆறாம் நூற்றாண்டு இறுதியில் வாழ்ந்தார். அவர் பாவங்களையெல்லாம் ஏழு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். அவையாவன: ஆணவம், சினம், பொறாமை, காமம், பெருந்தீனி, சோம்பல், பேராசை, இவை கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு என இத்தனை நூற்றாண்டுகளிலும் பெயர்பெற்று வந்திருக்கின்றன. பரிசுத்த வேதாகமத்தில் இந்தக் கொடிய பாவங்கள் ஏழும் மொத்தமாக ஒரே வசனத்தில் தொடர்ந்து கூறப்படாவிட்டாலும், வேவ்வெறு இடங்களில் பரிசுத்த வேதாகமத்தில் மனிதனைக் கொல்லக்கூடிய பாவங்களைப்பற்றி வாசித்தறிகிறோம். தாமஸ் அக்குவினாஸ் போன்ற பிரபல திருமறைப் பண்டிதரெல்லாம் போப் கிரகோரி என்பவர் பாவங்களையெல்லாம் இவ்வாறு ஏழு வகையாகப் பிரித்திருப்பதை அங்கீகரித்துள்ளார்கள். எனவே, நீதி நெறிப்படி பாவங்களை ஏழு வகைப்படுத்துவது எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 3:36 pm

1.ஆணவம்

மனிதனைக் கொல்லக்கூடிய கொடிய பாவங்களை ஏழு வகைப்படுத்தலாம். அவற்றுள் தலையாய முதற்கொடிய பாவம் ஆணவமாகும். அழிவுக்கு முன்னானது அகந்தை. விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை என்று நீதிமொழிகள் 16:18ல் கூறியுள்ளவாறு, எல்லா அழிவுக்கும் முதற்காரணமாக இயற்கையாய் வருவது ஆணவமே. அநேகமாக மற்ற எல்லாப் பாவங்களுக்கும் அடிப்படைக் காரணமாக அகத்திலும் ஒழுக்கத்திலும் எழும் முதற்பாவம் ஆணவம். தன்னலத்தின் வௌ;வேறு வடிவங்களே வௌ;வேறு பாவங்களாகும். நான் என்ற ஆணவமே எல்லாப் பாவங்களுக்கும் ஆதி வித்தாகும். மற்றவர்களைவிட தான் தான் பெரியவன் என்ற எண்ணமும், தகுதிக்கு மிஞ்சி தன்னையே தகாத முறையில் தகாதவாறு வீணாகப் பெருமைப்படுத்திக் கொள்ளுதலும் ஆணவம் முளைப்பதற்கு மூலவித்துக்களாகும். மனமேட்டிமையுள்ள வனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன். கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான் என்று பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் 16:5ல் கூறியுள்ளது. மீண்டும் நீதிமொழிகள் 29:23ல் இயம்புவதைக் கேளுங்கள். மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும். மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.

ஆண்டவர் அருவருக்கும் ஆணவம் சுயமரியாதை அன்று, அல்லது நியாயமான சுயமதிப்பு உணர்ச்சியுமன்று. உண்மையான தகுதிக்கு மிஞ்சி, தகுதியற்ற முறையில் தன்னையே அகந்தையோடு பெரியவன் என்று எண்ணிக்கொள்ளுதல் ஆணவமாகும். இந்த ஆணவம் தன்னையே தகுதியற்ற தன்மையில் பெருமைப்படுத்திக்கொண்டு மற்ற மனிதரையும் கடவுளையும் இழிவுபடுத்தி வெறுத்து ஒதுக்கித்தள்ளிவிடுகிறது. எல்லாம் வல்ல இறைவனைவிட தன்னையே பெரிதாகக் கருதும் இந்தத் தற்பெருமையே கடவுள் அருவருக்கிறார். பிற மனிதரை வீண் கர்வத்தோடு புறக்கணித்துவைக்கும் அகந்தையை ஆண்டவர் வெறுக்கிறார். ... மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன் என்று ஆண்டவர் சங்கீதம் 101:5ல் கூறியுள்ளார். ஆணவத்தை ஆண்டவரால் சகிக்க முடியாது. அவர் அதனை அருவருக்கிறார்.

ஆணவம் அநேக வடிவங்களில் தலைகாட்டும். ஆனால் அத்தனையும் அகந்தையான இருதயத்தினின்று எழும்புவனவாகும். சிலர் மேட்டிமையான பார்வையில் ஆணவம் கொள்ளுகிறார்கள். சிலர் தங்கள் குலத்தில் ஆணவம் கொள்ளுகிறார்கள். சிலர் தங்கள் அலுவலில் ஆணவம் கொள்ளுகிறார்கள். வேறுவகையாகக் கூறுமிடத்து, பக்திப்பெருமை, அறிவுப்பெருமை, செல்வப்பெருமை, சமூகப்பெருமை என்று பெருமையைப் பலவகைப்படுத்தலாம். பெருமையுள் மாபெரும் கொடிய பெருமை பக்திப்பெருமையாகும். இந்த ஆவிக்குரிய பெருமைதான் லூசிபர் என்னும் தேவதூதனை அதமாக்கிக் கொடும் பேயாக்கிவிட்டது. இந்த ஆவிக்குரிய ஆணவந்தான் பாவத்தின் ஆதிமூலவித்தாகும். இந்த ஆவிக்குரிய அகந்தையிலிருந்துதான் ஆதியில் பாவம் ஆரம்பமானது.

ஏசாயா 14:12-15 செப்புவதைக் கேளுங்கள். அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே ! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

நான் வானத்துக்கு ஏறுவேன். தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன். வடபுறங்களிலுள்ள ஆராதனைக்கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன். உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.

இப் பகுதியில் லூசிபர் தன்னை உன்னதமான கடவுளுக்கும் மேலாக உயர்த்தி நான், நான் என்று ஆணவத்தோடு ஐந்து தடவை நான் ஏறுவேன், நான் உயர்த்துவேன், நான் வீற்றிருப்பேன், நான் உன்னதங்களில் ஏறுவேன், நான் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று வீண் கர்வத்தோடு அகந்தை கொப்பளிக்க கூறியுள்ளதைக் கூர்ந்து கவனியுங்கள். லூசிபரின் இதயத்தில் எழுந்த நான் என்ற ஆணவமே இம்முழு உலகிலும் செய்யப்பட்ட முதல் பாவமாகும். லூசிபரைப்போல் நாமும் ஆண்டவர் எனக்கு வேண்டாம் என்று அவரை ஒதுக்கித் தள்ளி விட்டு, நாமே நமக்கு ஆண்டவராகும்பொழுது அந்த ஆணவப்பேய் நம்மையும் பிடித்துக் கொள்ளுகிறது.

ஆவிக்குரிய ஆணவம் கொண்டவன் ஆண்டவரது அருளையே நம்பிப் பற்றிக் கொள்ளாது, தன்னுடைய சுயநீதியையே நம்பி, அதிலேயே வீண் திருப்திகொண்டு, அழிந்துபோகிறான். கிறிஸ்துவின் கிருபையே நம்பிப் பிழைக்காதவர்கள் கடவுளுடைய நியாயத்தீர்ப்புக்குட்படுவார்கள். தற்பெருமை கொண்ட மமதையாளர்கள் பழைய பரிசேயனைப்போல் பிறரைப் பழிக்கிறார்கள். தங்களையோ புகழ்கிறார்கள். தங்களை நீதிமான்களென்று தவறாக கருதுகிறார்கள். மற்றவர்களை அற்பமாக எண்ணுகிறார்கள். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் என்று இயம்பியதைப்போல் இறுமாப்புக்கொள்கிறார்கள். தாங்கள் சுயநிறைவு கொண்டவர்கள் என்றும், தங்களுக்கு கடவுளும் நிகரில்லை, பிறமனிதரும் நிகரில்லை என்று அகந்தை கொள்ளுகிறார்கள், கடவுள் தங்களுக்குத் தேவை இல்லையென்று சுயதிருப்தி கொள்கிறார்கள். இத்தகைய சுயநீதிச் செருக்கு கர்த்தருக்கு அருவருப்புஆபாச அழுக்கு கந்தை அணிந்தவன் அகில உலகிலுள்ள அத்தனை பேரையும்விட தானே அதிக அலங்காரமான தூயஆடை அணிந்தவன் என்று வீண் மனப்பால் குடித்துக்கொண்டிருப்பதுபோல், சுயநீதி மமதையாளர்கள் சுயதிருப்தி என்னும் வீண் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். இப் பரிசேய பரம்பரையாளருக்குக் கடவுள் கடுமையான எச்சரிப்பு விடுத்துள்ளார். .... தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது (யாக்.4:6).

கொசு விழாமல் வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். நியாயப்பிரமாணத்தை எழுத்துத் தவறாமல் கைக்கொள்ளவேண்டும் என்று பறை சாற்றுகிறார்கள். ஆனால் நியாயப்பிரமாணத்தின் ஆவிக்குரிய கருத்தையோ மறந்துவிட்டார்கள். தாங்கள் தாம் பரிசுத்தவான்களென்றும், மற்றவர்களெல்லாரும் அசுத்தர்களென்றும் பிறரை வெறுத்துத்தள்ளுகிற ஆன்ம ஆணவ நெஞ்சத்தினர் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். முற்றிலும் புனிதமான திருச்சபை என்று இவ்வுலகில் இருக்கமுடியாது என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். கோதுமையும் களையும் ஒன்றாக வளரும் என்றும், இவ்வுலகத்தின் முடிவுகாலமட்டும் இவ்விரண்டையும் வேறுபடுத்திப் பிரிக்கமுடியாதென்றும், இயேசு கிறிஸ்து இரண்டாந்தடவையாக இவ்வுலகுக்கு மீண்டும் வரும்போது அவர்தாமே களைகளைக் கோதுமையினின்று பிரித்தெடுத்து, அக் களைகளை அவியாத அக்கினியில் போடுவார் என்னும் உண்மையைப் பலர் மறந்துவிட்டார்கள். அநேகப் பரிசேயர்கள் தற்காலத்தில் எழும்பி, தாங்களே தங்களால் செய்யமுடியாத, களையைக் கோதுமையினின்று பிரித்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வேலையை இப்பொழுது மனிதன் செய்யமுடியாது. கிறிஸ்துதாமே தமது இரண்டாம் வருகையின்போது செய்யப்போகும் வேலை இது. அதுவரை திருச்சபையில் கோதுமையோடு களைகளும் இருந்தால் நாம் ஆச்சரியப்படுவதற்கொன்றும் இல்லை. அநேகர் தங்கள் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், தங்கள் சகோதரர் கண்ணிலிருக்கிற துரும்பை பார்த்து, அதனை அகற்றுவதற்கு முயலுகிறார்கள். இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டுமா என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே, முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு. பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய். அநேகர் பிறரைப் பழித்துக் கூறுவதிலும் இழித்துரைப்பதிலுமேயே தங்கள் நேரத்தைப் போக்குகிறார்கள். அகந்தையிலெல்லாம் அதிகக் கொடிய அகந்தை இதுவாகுமன்றோ!

ஆணவத்தின் மற்றொரு வடிவம் அறிவுப் பெருமையாகும். அறிவுப் பெருமையைக் குறித்து பரிசுத்தவேதாகமம் 1.கொரிந்தியர் 8:1-2ல் பகர்ந்துள்ளதைக் கேளுங்கள். ... அறிவு இறுமாப்பை உண்டாக்கும். அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும். ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறிய வேண்டிய பிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை. கல்லாதாரையும் அறிவீனரையும், தாழ்த்தப்பட்டோரையும் அதிக இழிவாக இத்தகைய அறிவு அகந்தையாளர்கள் கருதுகிறார்கள். நமது மனோசக்தியளவு ஆண்டவரால் அருளப்பட்டது என்பதை இத்தகைய அறிவு இறுமாப்பாளர்கள் மறந்துவிடுகிறார்கள். பிறர் செல்வத்தைத்தான் தாங்கள் அனுபவித்துவருகிறார்கள் என்பதையும் இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. அறிவுப் பெருமைக்கு இதுவும் ஒரு காரணமாகுமன்றோ? புனித பவுல் அடிகளார் ரோமர் 12:16ல் தீட்டியுள்ளதைக் கேளுங்கள்: ...... மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள். உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.

தத்துவ நிபுணரான பிளாட்டோ என்பவர் ஒரு தடவை சில நண்பர்களுக்கு ஓர் அறையிலே விருந்து வைத்து உபசரித்தார். இவ்வறையில் விலையேறப்பெற்ற இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சொகுசிருக்கை போடப்பட்டிருந்தது. வழக்கமாக அழுக்கு ஆடையிலே காணப்படும் ஒரு நண்பர் அன்றும் அழுக்கு ஆடை அணிந்து கொண்டு அவ்வறைக்குள்ளே வந்து, அந்த அலங்காரமான சொகுசிருக்கையைக் கண்டு, அதன்மேல் ஏறி நின்று, அதனை மிதித்து, நான் பிளாட்டோவின் அகந்தையைக் காலின்கீழ் மிதிக்கிறேன் என்றான். பிளாட்டோ சாந்தமாக, ஆனால் என்னைவிட நீ அதிக அகந்தையோடு அதனைக் காலின்கீழ் மிதிக்கிறாய், என் நண்பனே என்று பதிலுரைத்தார்.

அறிவுப் பெருமை, கிறிஸ்துவின் கிருபை சுவிசேஷத்திற்கு அடிக்கடி எதிரியாகத் தோன்றுகிறதற்கு காரணம், அறிவுப் பெருமை கடவுள் மீது நம்பிக்கை வையாமல், சுய நம்பிக்கையிலே அதிக கவனம் செலுத்துகிறது. நீதிமொழிகள் 3:5 கூறும் சத்தியம் யாதெனில், உன் சுய புத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு. ஆனால் அறிவு அகந்தையாளர்களோ தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிலே நம்பிக்கையாயிராமல், தங்கள் சுய புத்தியின்மேல் முழுவதும் சாய்ந்துவிடுகிறார்கள். கடவுளை ஒரு சோதனைக் குழாயில் போட்டு, தங்கள் அறிவு ஆராய்ச்சியினால் அவரை அளந்து காட்டினால் மட்டுமே தாங்கள் அவரை ஏற்றுக்கொள்வோம் என்று கூறுகிறார்கள். கடவுளை முழுவதும் நம்பி, அவரையே சார்ந்து, பிழைக்க மனமற்றிருக்கிறார்கள். கல்வி, ஞானம், பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்டவை விசுவாசம், நம்பிக்கையாகும். உள்ளத்தையும் கடந்து நிற்பவர் கடவுள். மனித அறிவையும் கடந்து நிற்பவர் கடவுள். எனவே மனிதன் கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும். அவர் நம்பிக்கைக்கு உரியவர். அவரை நம்பினால் மட்டுமே நாம் பிழைக்கமுடியும். அவரை நம்பாது நாம் நம்மையே நம்பிக்கொண்டிருப்போமானால், நாம் அழிவது திண்ணம். கிறிஸ்துவையல்லாமல் நம்மால் ஒன்றும் செய்யக்கூடாது. தேவனால் எல்லாம் கூடும். ஆகவே மனிதன் தன் சுயபுத்தியின்மேல் சாயாமல், தன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்தால் வாழ்வு பெறுவான். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (சங்.111:10).



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 3:37 pm

உண்மையான மதம் சிலர் நினைக்கிறபடி அறிவை மட்டுப்படுத்தாமல் பெரிதும் அறிவை வளர்த்துவிடுகிறது. சிறந்த அறிஞரான பவுல் அடிகளார் ரோமர் 12:2ல் பறைசாற்றியுள்ளதைக் கேளுங்கள். .... உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். குறுகிய நோக்கமும், தற்பெருமையும், ஆணவமும் கொண்டவர்களை ஆண்டவர் வெறுக்கிறார். அறிவுப் பெருமையை அவர் அருவருக்கிறார். நீதிமொழிகள் 26:12ல் கடவுள் இவ்வாறு கூறியுள்ளார். தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப் பார்க்கிலும் மூடனைக் குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.

செல்வச் செருக்கு ஆணவத்தின் மற்றொரு வடிவமாகும். அருள் செல்வத்திற்குக் காரணமாகிய ஆண்டவரிடமிருந்தே பொருள்செல்வமும் மனிதருக்குக் கிட்டுகிறது. எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றும் காரணமுமாயிருப்பவர் கடவுளே. உபாகமம் 8:18 கூறுகிறபடி, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக. அவரே... ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி சொன்னது: எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கர்த்தாவே மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள். வானத்திலும் ப+மியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்.... ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது. தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர். உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு. எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும் (1.நாளா.29:10-12).

உலகப் பொருள்மீது கொண்டுள்ள அகந்தையால் ஆண்டவர் இகழப்படுகிறார். நான் என்னும் ஆணவமும் முதலிடம் பெறுகிறது. இரண்டாவது இடம் பெறவேண்டியது முதலிடம் பெற்றுவிடுகிறது. நான் என்னும் அகந்தை அரியணை அமர்ந்து ஆட்சி செலுத்துகிறது. ஆண்டவர் இருக்கவேண்டிய இடத்தில் மனிதன் அமர்ந்துகொள்ளப் பார்க்கிறான். தன்னையே தனக்குக் கடவுளாக்கிக் கொள்கிறான். உலகப் பொருள் அவனுக்கு ஜீவன் ஆகிவிடுகிறது. மேலும் மேலும் உலகப் பொருளையும் செல்வத்தையும் திரட்டி வைக்க அல்லும் பகலும் அரும்பாடுபடுகிறான். பணப் பேராசை அவனைப் பற்றிப் பிடித்துக்கொள்கிறது. அவனுடைய இதயமெல்லாம் அவனுடைய ஐசுவரியத்தின் மீதே இருக்கிறது. சங்கீதம் 62:10 விடுத்துள்ள எச்சரிப்பைக் கவனித்துக் கேளுங்கள். கொடுமையை நம்பாதிருங்கள். கொள்ளையினால் பெருமை பாராட்டாதிருங்கள். ஐசுவரியம் விருத்தியானால் இதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள். 1.தீமோத்தேயு 6:9ல் மீண்டும் வேதாகமமம விடுக்கும் எச்சரிப்பைப் பாருங்கள். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிறமதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளில் விழுகிறார்கள்.

நீ அனுபவிக்கிற நன்மைகளும் ஆசீர்வாதங்களும் ஐசுவரியப் பொருள்களும் ஆண்டவரிடமிருந்து வந்தவையாகும். செல்வத்தைச் சம்பாதிப்பதற்குரிய பலத்தையும் சுகத்தையும் வாழ்நாளையும் கொடுத்தவர் கர்த்தர்தாமே. உலக ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கான காலத்தையும் உனக்குக் கிருபையாய் அருளிச் செய்தவர் ஆண்டவர்தாம். நீ இருப்பது கர்த்தருடைய கிருபையினால்தான். பின் ஏன் அனாவசியமாய் அகந்தை கொள்கிறாய்? நீ அனுபவிக்கும் எல்லா நன்மைகளையும் உனக்கு இரக்கமாய்க் கொடுத்த கடவுளை அல்லவோ நீ இடைவிடாமல் இதயப+ர்வமாய் நன்றியோடு துதித்துக் கொண்டிருக்கவேண்டும். யாக்கோபு 1:17 அறைகூவுகிறதைக் கவனியுங்கள். நன்மையான எந்த ஈவும் ப+ரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது. அவரிடத்தில் யாதொரு மாறுதலும் வேற்றுமையின் நிழலுமில்லை. கடவுள் எனக்கு ஒன்றும் செய்யவில்லையென்று ஒரு மனிதனும் சொல்லமுடியாது. நமக்கு இருக்கிற அத்தனை நன்மைகளும் அவர் கரத்திலிருந்து வந்தவையே. வேலை செய்ய உனக்குப் பலம் கொடுத்தவர் அவர், சிந்திக்க உனக்கு ஓர் அற்புதமான மனதைக் கொடுத்தவர் அவர். உரிமையோடு வாழ உனக்கு ஒரு நல்ல நாட்டை ஈந்தவர் அவர். உன்னிடம் இருக்கும் எல்லாப் பொருள்களும் கிருபையாய் உனக்குத் தந்தவையேயாகும். எனவே, எல்லா மகிமையும் கனமும் ஆண்டவருக்கே உரியன. பெருமை பாராட்டுவதற்கு உனக்கு என்ன இருக்கிறது?

சமூகப்பெருமை ஆணவத்தின் இன்னொரு தோற்றமாகும். சாதிப்பெருமை, இனப்பெருமை, குலப்பெருமை, நிறப்பெருமை போன்றவையெல்லாம் ஆணவத்தின் பல்வேறு அம்சங்களாகும். அணுக்குண்டு யுகத்திலிருக்கும் நம்மையும் அச்சின்னஞ்சிறு அணு ஓர் அணுவுள்ள மனிதராக்கியுள்ளது என்று அரசியல்மேதை இயம்பியுள்ளார். கடவுள் பட்சபாதமுள்ளவரல்லர். மனித குலத்துள் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று ஒன்றும் இருப்பதாக மனிதர் கருதுவதுபோல் கடவுள் கருதுவதில்லை. எல்லாரையும் ஒரே இரத்தத்தினால் தோன்றப்பண்ணினவர் அவர், எல்லாரும் ஒரே கடவுளால் படைக்கப்பட்ட மக்களாய் சகோதர அன்போடு வாழவேண்டும் என்று விரும்புகிறவர் ஆண்டவர்.

மேல்சாதி, கீழ்சாதி என்னும் கருத்து பரிசுத்தவேதாகம சத்தியத்திற்கு முற்றிலும் முரண்பட்டதாம். கிறிஸ்தவ நெறிக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். ஜெர்மனி நாட்டை நான் பார்வையிட்டபோது கிட்லருக்கு மேல் சாதி என்று ஓர் உயர்ந்த சாதி இருப்பதில் நம்பிக்கை இருந்ததாகக் கேள்விப்பட்டேன். அத்தவறான கருத்துகாரணமாக உலகம் எவ்வளவோ அவதியுற்றது. ஒரு பெரிய நாடு எவ்வளவோ சீரழிந்துவிட்டது.

சமூகப் பெருமை யாருள்ளத்தில் இருந்தாலும் அது பயங்கரமான பாவமேயாகும். ஆம், ஆணவம் ஒரு கொடி விஷப் பாவம் என்று பரிசுத்த வேதாகமம் நமக்குத் திட்டமாய்க் கற்பித்துள்ளது. தேவனுடைய இராஜ்யத்திற்குள் நாம் செல்லாதபடி, ஒரு முட்டுக்கட்டைபோல் ஆணவம் நம்மைத் தடுத்து நிறுத்திவிடும். ஆணவம் நம்மைக் கொன்று ஒழித்துவிடும். ஆணவமுள்ள எந்த ஆணும் அல்லது பெண்ணும் ஆண்டவருடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது. நான் என்ற ஆணவமுள்ளோரை ஆண்டவர் அதிகமாய் அருவருக்கிறார். உன்னைக் கொல்லும் கொடிய பாவம் ஆணவம்.

ஆணவம் என்ற பாவத்தை அறவே ஒழிப்பது எப்படி? இப் பயங்கர பாவத்திலிருந்து விடுதலை பெறுவது எங்கனம்? உன்னைக் கொன்று ஒழித்துக் கொண்டிருக்கும் இப்பயங்கர பாவமாகிய ஆணவத்தைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைக் கண்ணீரோடு கிறிஸ்துவிடம் அறிக்கை செய். நொறுங்குண்ட நறுங்குண்ட இருதயத்தோடு மனத்தாழ்மையோடும் கிறிஸ்துவிடம் வா. உனது ஆணவம் என்னும் பாவத்தினின்று உன்னை விடுதலையாக்குவதற்காக அப்பாவத்தைச் சிலுவையின்மேல் சுமந்து தீர்த்த தேவாட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார். கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது (பிலி.2:5). ஆணவத்தோடு பரலோக இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க ஒரு மனிதனாலும் கூடாது. நான் என்ற ஆணவத்தோடு இயேசு கிறிஸ்துவிடம் சென்றால், நாம் எற்றுக்கொள்ளப்படமாட்டோம். உன் பாவத்தை ஒத்துக்கொண்டு, அதற்காக மனஸ்தாபப்பட்டு இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் புண்ணியத்தின் மூலமாய் இயேசு கிறிஸ்துவிடம் பாவ மன்னிப்புக்காக கெஞ்சி, மன்றாடி, இயேசு கிறிஸ்துவையே உன் இரட்சிப்பாகவும், உன் இரட்சகராகவும், உன் தெய்வமாகவும் ஏற்றுக்கொள்ளும்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்.



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 3:38 pm

2.சினம்

கோபம் பாவம் பழி என்பர். பொதுவாக எல்லாரும் கோபப்படக்கூடியவர்கள். சின்னஞ்சிறு குழந்தைக்குக்கூட சினம் பொத்துக்கொண்டு வந்து விடுகிறது. சாப்பிடாமல் அடம் பிடிக்கிறது. சிறுவனுக்கும் கண் மூக்கு தெரியாமல் சினம் வந்து விடுகிறது. குடும்பத்தினரை அவமானத்தில் ஆழ்த்தும் அளவுக்கு மனைவிக்குக் கோபம் வரம்பு கடந்து பொங்கிவிடுகிறது, அனைவருக்கும் தலைவலியை உண்டாக்கிவிடுகிறது. கணவன் சினத்தால் சீறீவிழுகிறான், பசியெல்லாம் பஞ்சாய்ப் பறக்கும் அளவுக்கு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் வெகுளிக்கு ஆளாகி, சினத்திற்கு இரையாகிவிடுகின்றனர். இயற்கையாகக் கோபத்திற்கு விலக்கானவர்கள் யாருமே இல்லை என்று கூறிவிடலாம்.

கோபம் இதயத்தி;ல் கொந்தளிப்பு உண்டாக்கும். குடும்பத்தில் சண்டையை உண்டாக்கும். சமூகத்தில் சச்சரவை உண்டாக்கும். நாட்டில் குழப்பத்தை உண்டாக்கும். சினத்தால் சீரழிந்த குடும்பங்களுக்கு ஓர் அளவுண்டோ? அறிவு அடக்கத்தை இழந்து சினத்திற்கு அடிமையாகும்பொழுது, அலுவல் உறவுகளும் முறிந்து போகின்றன. கோபம் என்னும் கத்தி, பொங்கும் சினம் என்னும் சாணைக்கல்லில் கூர்மையாக்கப்பட்டு, எத்தனையோ நண்பர்களின் உறவை வெட்டி வீழத்திவிடுகிறது.

திருச்சபை சினத்தைப் பழித்துக் கூறுகிறது. பரிசுத்த வேதாகமம் வெகுளியை வெகுவாய்க் கண்டித்துக் கூறுகிறது. கோபம் பிறரைத் தாக்குகிறது. நொறுக்குகிறது. பழித்துவிடுகிறது. பழிவாங்கிவிடுகிறது. கொலைசெய்துவிடுகிறது. கோபத்தால் உடலும் உள்ளமும் ஊனம் அடைகின்றன. துப்பாக்கி சுடுவோனையும் கொல்ல வல்லது, சுடப்படுவோனையும் கொல்ல வல்லது. அதுபோல், கோபம் கோபப்படுவோனையும் கொல்ல வல்லது. கோபப்படப்படுவோரையும் கொல்ல வல்லது. சினம் சேர்ந்தோரையும் கொல்லும், சார்ந்தோரையும் கொல்லும்.

வெகுளி இவ்வையகத்திற்கு வெகு வேதனையையும், வேறுபாட்டையும், அழிவையுங் கொண்டு வந்துள்ளபடியால், கடவுள் வெகுளியை வெகுவாய் வெறுக்கிறார். சங்கீதம் 37:8ல் நாம் வாசிக்கிறபடி கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு. பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். ஆண்டவராகிய இயேசு கோபத்தைக் கண்டித்துள்ளார். கோபம் பாவம் பழி என்று பறைசாற்றியுள்ளனர். மத்தேயு 5:22ல் இயேசுநாதர் இவ்வாறு இயம்பியுள்ளார். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான். தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான். நீதிமொழிகள் 16:32ல் சாலமோன் ஞானியர் சாற்றியுள்ளதைக் கேளுங்கள். பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன். பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன். யாக்கோபு 1:19ல் பரிசுத்த வேதாகமம் மீண்டும் கூறுகிறது. ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவீர்கள்.

மனிதனிலுள்ள மிருக சுபாவத்தை வெளிப்படுத்தும் சினம் ஒரு கொடிய பாவமாகும். பலர் பார்வைக்கு வசீகரமாகத் தோன்றுகின்றனர், கவர்ச்சிகரமாகக் காணப்படுகின்றனர், நம்முடைய அன்புக்குரியவர்களாகத் தோன்றுகின்றனர். ஆனால், அவர்களுக்கு கோபம் வந்துவிட்டாலோ, அவர்களைப் பார்க்க அவ்வளவு அருவருப்பாகிவிடுகிறது. நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளைப்போல், வனவிலங்குகளைப்போல், பகுத்தறிவற்ற மாக்களைப்போல் அம் மக்கள் மாறிவிடுகின்றனர். கட்டுக்கடங்காமல் உணர்ச்சிவெள்ளப்பெருக்கெடுக்குமிடத்து அதிக இரத்தத் துடிப்பு ஏற்பட்டு, உடல் நலமே சீரழிந்துவிடுமென்று மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள். அவனுடைய ஆற்றல் பெரிதும் விரயமாக்கப்படுகிறது. கோபம் கோபப்படுவோரைக் கொல்லக்கூடிய பாவமாகும்.

வெகுளி மனிதனிலுள்ள மிருக உணர்ச்சியை வெகுளிப்படுத்துவதோடு கிறிஸ்தவ சாட்சியையும் கெடுத்துவிடுகிறது. பேதுரு ரோம போர்ச்சேவகர்கள்மீது சினம் கொண்டு வேலைக்காரனுடைய வலது காதற வெட்டினபோது, இயேசு சுவாமி அவனுடைய கோப உணர்ச்சியைக் கடிந்துகொண்டு, உன் பட்டயத்தை உறையில்போடு. பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள் என்றார் (மத்.26:52). அநேகக் கிறிஸ்தவச் சாட்சிகள் மாம்ச கோபத்தால் வலுவிழந்து போயிள்ளன.

தன்னை ஒரு சிறந்த கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்ட ஒரு பெண், தன்னுடைய கணவன் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவேண்டுமே என்று அதிக அக்கறைகொண்டாள். தன்னுடைய குருவானவரைத் தன் கணவரோடு இரட்சிப்பைக் குறித்து பேசுமாறு செய்தாள். அக்குருவானவர் அந்த ஆடவனை அண்டி, அவனுடைய ஆத்தும இரட்சிப்பைக் குறித்து உரையாடியபொழுது, அவன் கூறின கூற்று குருவானவரைத் திடுக்கிட வைத்தது, போதகரே, மதப்பற்றற்றவன் நான் அல்லன். ஆனால் கிறிஸ்தவ மதம் என் மனைவியைப்போல என்னையும் கோபமுள்ளவனாக்குமானால் அம்மதம் எனக்கு வேண்டாம் என்றான்.

குருவானவர் அவனுடைய மனைவியைக் கண்டு நடந்ததைக் கூறினார். அப்பெண் தன்னுடைய கோபக் குணத்தால் தன்னுடைய கணவன் கிறிஸ்துவண்டைய வராதபடி தடுக்கப்பட்டுள்ளான் என்பதை அறிந்து பெரிதும் மனம் வருந்தினாள். இதயம் புண்பட்டாள். தன்னுடைய கோப சுபாவத்துக்காக மனங்கசந்து அழுது, கிறிஸ்துவிடம் மன்னிப்புக்காக கெஞ்சினாள். கிறிஸ்துதாமே தனக்குப் பொறுமைக் குணத்தைக் கொடுத்தருளுமாறு இறைஞ்சினாள். கிறிஸ்துதாமே அவளுக்குச் சாந்த குணத்தைக் கொடுத்துதவினார். பரிசுத்தாவியானவர் அவளுடைய கோப சுபாவத்தைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆண்டார்.

சில நாட்களுக்குப் பின்னர் அவளுடைய கணவன் தூண்டில் போட்டு மீன் பிடிக்க வெளியே சென்றான். மீன் பிடித்த பின்னர், நீண்ட தூண்டில் கம்பைத் தன் தோளின்மேல் வைத்துக் கொண்டு அவன் இல்லம் ஏகியபொழுது அந்நீண்ட தூண்டில் கம்புடன் வீட்டிலுள்ள ஒரு விலையுயர்ந்த விளக்கு உடைந்து, சுக்கல்சுக்லாகச் சிதறிக் கீழே விழுந்தது. விளக்கு படாரென்று கீழே நொறுங்கி விழுந்த சத்தத்தைக் கேட்டுத் திகைத்து நின்ற கணவன் வழக்கப்படி தன் மனைவியிடமிருந்து வரும் கோப இடி ஓசையை எதிர்பார்த்தவனாய் அசைவற்று நின்றான். ஆனால் மனைவியிடமிருந்து கோப இடி ஓசை வராதது கண்டு வியப்புற்று அவள் முகத்தை உற்று நோக்கியபொழுது, அம்முகம் புன்முறுவல் ப+த்துக் குலுங்கக் கண்டான். மனைவியின் முகத்தில் சாந்தம் தவழ்ந்தது. அமைதியும், அன்பும், பொறுமையும் பொங்கி வழிந்தன. வருந்த வேண்டாம் என் அருமைக் கணவரே, எந்தச் குடும்பமாயினும் விபத்து சாதாரணமாக நிகழ்க் கூடியதே. அதற்காக கவலைப்படவேண்டாம், என் அன்பரே என்றாள்.

வழக்கப்படி, நீ சீறிச் சினந்து விழ மாட்டாயோ? என்று வினவினான் கணவன்.

என் அன்புள்ள கணவரே, நான் இனிக் கோபப்படமாட்டேன். நான் இதுகாறும் உம்மிடம் கோபமாக நடந்து கொண்டதற்காக மிகமிக வருந்துகிறேன், மன்னிக்கவும். கிறிஸ்துவின் ஆவியானவர் எனக்குச் சாந்தமாக என் இதயத்தில் வாசம் பண்ணுகிறார். இனி நான் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டி. பழையவைகள் எல்லாம் ஒழிந்தன. எல்லாம் புதிதாயின என்றாள்.

சில ஞாயிறுகள் கழிந்த பின்னர் அக்கணவர் சிறந்த கிறிஸ்தவனாக அத்திருச்சபையில் சேர்ந்து, கிறிஸ்துவுக்கென்று சிறந்த தொண்டாற்றினார். அவருடைய மனைவியின் கோபம் என்னும் பாவம் நீங்கினவுடனே, அவளுடைய கிறிஸ்தவச் சாட்சிக்குப் புத்துயிர் உண்டாக்கிவிட்டது.

கோபம் மனதைக் குழப்பிக் கலக்கிக் கெடுத்துவிடுகின்றது. இதய சாந்தியைச் சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடுகின்றது. கோபம் இருக்கிற இடத்தில் சமாதானம் இருக்கமுடியாது. மனஅமைதி நிலவ முடியாது. முகரூபம்கூட மாறிப்போய்விடும். ஆதியாகமம் 4:6ல் கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று. உன் முகநாடி ஏன் வேறுபட்டது? என்றார். ஒருவன் பொறுமையை இழக்கும்போது, அவன் மற்ற நற்பண்புகளையும் நன்மைகளையும் இழந்துவிட நேரிடும். கோபத்தால் உன் முகப்பொலிவு அழிந்துவிடும். கோபத்தால் உன் புகழ் மங்கிவிடும். கோபத்தால் உன் நண்பர் உன்னைவிட்டுப்போய்விடுவர். கோபத்தால் உன் நல்வாழ்வு போய்விடும். கோபத்தால் உன் கிறிஸ்தவ சாட்சி சீரழிந்துவிடும்.

கோபம் கொலைக்கு மூலமாகும். அதனால்தான் கோபம் பாவம் பழி என்று கூறுவர். காயீன் ஆபேலை கொலைசெய்யுமுன் அவன்மீது கோபம்கொண்டான். எரிச்சல் அடைந்தான். கோபம் துப்பாக்கியில் குண்டு வைக்கிறது. கோபம் பழிக்குக் கத்தியைத் தீட்டுகிறது. கோபம் ஈட்டி முனைக்கு விஷம் ஊட்டுகிறது. கோபம் உயிரைக் குடித்துவிடுகிறது. கோபம் குடும்பத்தைக் கெடுத்துவிடுகிறது. கோபம் நாட்டை அழித்துவிடுகிறது. கோபம் வாழ்க்கையைப் பாழாக்கி விடுகிறது. கோபம் அனைவரையும் கொல்லும் ஒரு கொடிய பாவமாகும். அனாவசிய, அநியாய, அர்த்தமற்ற, வீணான, நியாயமற்ற, குற்றமுள்ள, கோபத்தையே இங்கு குறிப்பிடுகிறோம். இக்கோபம் சுத்த மனச்சாட்சிக்கு விரோதமானது. குற்றமற்றவர்களை அநியாயமாய்த் தாக்குகிறது. பகையையும் வன்மத்தையும் மூட்டிவிடுகிறது. குடும்பத்திலும் சமூகத்திலும் சண்டை சச்சரவுகளை எழுப்பிவிடுகிறது. கோபம் கொண்டோரையும் கோபத்திற்கு ஆளானோரையும் ஒரு மிக்க சினத் தீ எரித்து கொளுத்தி விடுகிறது. சினம் சென்றவிடமெல்லாம் அழிவுச் சின்னமே காணப்படும். இத்தகைய அநியாய கோபத்தை ஆண்டவர் வெறுத்துத் தள்ளுகிறார்.



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 3:39 pm

நம்மில் பலர் கோபம் என்னும் கொடி பாவத்துக்கு ஆளாகியிருக்கிறோம், அடிமையாகியிருக்கிறோம். இது நம்முடைய இயற்கைச் சுபாவம் என்றும், நம்முடைய பலவீனம் என்றும், நம்முடைய பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொண்ட பிறவிக் குணமென்றும் சாக்குப்போக்குச் சொல்லிவிடுகிறோம். இது ஒரு பலவீனம் அன்று. இது ஒரு பாவமாகும். கொடி பாவமாகும். நமது கோபத்தால் பரிசுத்தாவியானவரைப் பெரிதும் துக்கப்படுத்திவிடுகிறோம். ஆண்டவர் கோபத்தை அருவருக்கிறார்.

கோபம் பாவமானால் அப்பாவத்தைப் போக்குவது எப்படி? கோபத்தின்மீது நமக்கு வெற்றி கிடையாதா? கோபத்தை அடக்கி ஆள வழிவகையே இல்லையா? கோபப்பட்டுத்தான் தீரவேண்டுமா? கோபப்படாமல், சாந்தமாய், சமாதானமாய், அமைதியாய், பொறுமையாய், சாந்தியாய், நிம்மதியாய், அன்புற்று இன்புற்று வாழ கிறிஸ்தவ மார்க்கத்தில் இடமில்லையா? கிறிஸ்து இதற்கு உதவிசெய்ய வல்லமையுள்ளவரா? அவர் நமக்கு உதவி செய்வாரா? கலிலேயாக் கடல் கடும் புயலால் சீற்றங்கொண்டு பொங்கி எழுந்தபோது, அதனை அடக்கி அமைதியுறச் செய்தவர், நம்முடைய சீற்றத்தையும், சினத்தையும் அடக்கி நாம் அமைதியோடும் பொறுமையோடும், அன்போடும் வாழச்செய்வதற்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவர் எல்லாம் வல்ல இறைவன். கோபத்தை அடக்கவேண்டிய அவசியம் இல்லாவிட்டால் ஆண்டவர் சங்கீதம் 37:8ல் கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு. பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம் என்று கூறியிருக்கமாட்டார். மனிதன் சாந்தமாய், பொறுமையாய், அன்பாய் இருக்கவேண்டும் என்பதே ஆண்டவர் விருப்பம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சாந்த சொரூபியாய் இருக்கிறார். அவர் அன்பின் வடிவம். அவர் சமாதான பிரபு. அவர் தம்மிடம் வேண்டுவோருக்கு கோபத்தின் மீது வெற்றிதர வல்லவராயிருக்கிறார்.

கோபத்தின்மீது வெற்றி அடைவது எப்படி? முதலாவது, கோபம் ஒரு கொடிய பாவம் என்பதை உணரவேண்டும். கோபம் குடியிருக்குமிடம் பாழாய்ப்போய்விடும் என்பதை அறியவேண்டும். கோபத்தை ஒரு சிறிய பலவீனம்தான் என்று கருதுவது தவறு. அல்லது கோபம் எனது பெற்றோரிடமிருந்து நான் சுதந்தரித்துக்கொண்ட பிறவிக்குணம் என்று பாவத்தையும் பழியையும் நமது பெற்றோர் தலையில் சுமத்திவிட்டு நான் கோபப்பட்டுக்கொண்டிருப்பது பாவமாகும். அல்லது எப்பொழுதாவது எல்லாரும் கோபப்படத்தானே செய்கிறார்கள். நானும் ஏதோ வேளா வேளைகளில் வெகுண்டு விடுவதால் அதனால் என்ன குடிமுழுகிப்போய்விடுகிறது என்று வீண் சாக்குப்போக்குச் சொல்லி, கோபத்தின் பயங்கரத்தை உணராது வாழ்வது பெரும் பாவமாகும். கோபம் கடவுளுக்கு விரோதமான கொடிய பாவம் என்பதை மறவாது, அப் பயங்கர பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு, கோபத்தின் மீது வெற்றி கொள்வதற்கு விருப்பம் கொள்வதே முதற்படி.

இரண்டாவது, கோபம் என்னும் கொடிய பாவத்தைத் தயவாக மன்னித்தருளுமாறு அப்பாவத்தைக் கிறிஸ்துவிடம் அறிக்கை செய்யவேண்டும். தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான். தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான். மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான் என்று இயேசு கிறிஸ்து திருவாய் மலர்ந்தருளியுள்ளதை உற்று நோக்குமிடத்து, கோபம் நம்மை இம்மையில் எரித்து பாழாக்குவதுமல்லாமல், மறுமையில் எரிநரகத்தில் தள்ளிவிடும் என்னும் சத்தியத்தை மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். நம்மைக் கொல்லும் கோபம் என்னும் அக் கொடிய பாவத்தின் அகோரத்தை உணர்ந்தவர்களாய், நொறுங்குண்ட இருதயத்தோடும், மனஸ்தாபக் கண்ணீரோடும் கிறிஸ்துவின் பாதத்தில் விழுந்து, பாவமன்னிப்புக்காகவும், அப்பாவ விடுதலைக்காகவும் கெஞ்சி மன்றாடவேண்டும். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் (இயேசு கிறிஸ்து) உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1.யோ.1:9).

கோபம் என்னும் பாவத்தை நாம் கிறிஸ்துவிடம் அறிக்கையிடும்போது, அவர் அப்பாவத்தை மன்னித்து கோபத்தை நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறார். அது மட்டுமல்ல, சாந்த சொரூபியாகிய அவர் நமக்குச் சாந்த குணத்தைக் கொடுத்தருளுகிறார். சாந்தத்துக்கு ஊற்றும் காரணமாயிருக்கிற இயேசு கிறிஸ்துதாமே நம் இதயத்திலிருந்து சாந்தமாக, பொறுமையாக, சமாதானமாக, அன்பாகப் பொங்கி வழிகிறார். முன்னால் சீற்றமும் சினமும் பொங்கி வழிந்த இதயத்திலிருந்து இப்பொழுது சாந்தமும் அன்பும் பொங்கி வழிகின்றது. முன்பு, முற்கோபத்தால் எத்தனையோ மனிதரையும் குடும்பங்களையும் நாசமாக்கிய நாம், இப்பொழுது நமது பொறுமைக்குணத்தால் எத்தனையோ பேருக்கு ஆசீர்வாதமாக வாழ்கிறோம். முன்னர் எத்தனையோ பேரைச் சினத் தீயால் சுட்டெரித்த நாக்கு இப்பொழுது எத்தனையோ பேருக்கு ஆறுதலளிக்கிறது. எத்தனையோ ஆத்துமாக்கள் கிறிஸ்துவைத் துதிப்பதற்கு ஏதுவாயிருக்கிறது. வெகுண்டு பிறரைத் துன்புறுத்திய கைகள் இப்பொழுது பிறருக்குப் பணிசெய்யும் கைகளாக மாறிவிடுகின்றன. சினந்து மக்களுக்குத் தீமை செய்ய விரைந்து சென்ற கால்கள், இப்பொழுது பிற மக்களுக்கு நன்மை செய்யச் சுற்றித் திரிகின்றன. சினம் பொங்கிய இடத்திலிருந்து இப்பொழுது சாந்தம் பொங்குகிறது. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். ஆண்டவர் கூறியுள்ளபடி அவர்கள் ப+மியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.

பேதுரு பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெறமுன் வெகுண்டார், வெட்டினார், மறுதலித்தார். ஆனால் அவர் கிறிஸ்துவின் ஆவியைப் பெந்தெகோஸ்தே நாளில் பெற்றதிலிருந்து மீண்டும் ஒரு தடவையாவது அவர் நியாயமில்லாமல் கோபித்ததில்லை. கிறிஸ்துவை அவர் அதன் பின் மறுதலித்ததில்லை. அவருடைய நாவு கிறிஸ்துவை மகிமைப்படுத்தினது. அவருடைய கை அநேகரை கிறிஸ்துவண்டை கூட்டிச் சேர்த்தது. அவருடைய கால் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக நாடெங்கும் சுற்றித்திரிந்தது. கிறிஸ்துவில் அன்புகூர்ந்து, கிறிஸ்தவ ஆடுகளை மேய்த்து, கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்து, கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சியாய் மரித்து, அநேக ஆத்துமாக்களை நித்திய பேரின்பத்திற்குள் வழிநடத்தும் கிறிஸ்தவக் கருவியாக அவர் திகழ்ந்தார். கிறிஸ்து இயேசுவால் இரட்சிக்கப்பட்டது பேதுருவைப் பலவீனப்படுத்திவிடவில்லை. உறுதியும் வல்லமையும் நிறைந்தவராகவே மாற்றிற்று.

நீயும் சாந்தகுணமுள்ளவனாகலாம். தேவஆவியினால் ஆளப்படுவதே சாந்தம். உனக்கும் கோபத்தின்மேல் வெற்றி வேண்டுமா? கோபத்திலிருந்து விடுதலை வேண்டுமா? நீ சாந்த சீலனாக அநேகருக்கு ஆசீர்வாதமாக வாழ விரும்புகிறாயா? அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. உன்னை முற்றிலுமாய்க் கிறிஸ்துவிடம் ஒப்புவித்து விடு. அவரே உன் இதயத்தினின்று சாந்தமாக, சமாதானமாக, அன்பாக பொங்கிவழிவார்.

நியாயமாக நீதிக்காகப் படவேண்டிய கோபம் ஒன்றுண்டு என்று சத்திய வேதாகமத்தில் காண்கிறோம். பாவத்தைக்கண்டு, ஒழுக்கக்கேட்டை கண்டு, அநியாயத்தைக் கண்டு, அசுத்தத்தைக் கண்டு நாம் வெகுண்டு எச்சரிக்காது அவற்றைக் கண்சாடையாய் விட்டுவிடக்கூடாது. தீச்செயல்களைக் கண்டு சினந்து எச்சரிக்காவிட்டால், அப்பாவப்பழி நம் தலையின்மேல் விழுமன்றோ? ஆகவே தேவன் அங்கீகரிக்கக் கூடியதும் நியாயமானதுமான கோபம் ஒன்றுண்டு. நமது பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் படகாட்சிகளிலும் காணப்படும் அசுத்த ஆபாசங்களைப் பார்த்து நாம் பொறுத்துக் கொண்டிராமல்,அவற்றை எச்சரித்து அகற்றுவதற்கு ஆவன செய்யவேண்டும். பட்டணங்களிலும், தெருக்களிலும், வீடுகளிலும், நிறுவனங்களிலும் காணப்படும் அட்டுழியங்களை நாம் கசந்துகொண்டு, எச்சரித்து அவற்றைப் ப+ண்டோடு ஒழிக்க முயலவேண்டும். பாவத்தை பாவம் என்று எச்சரிப்பது கிறிஸ்தவனது கடமையாகும்.

மூன்றாவது, நியாயமான தேவகோபத்தைப்பற்றிப் படிக்கிறோம். ரோமர் 1:18 கூறுகிபடி சத்தியத்தை அநியாயத்தினால் அடக்கி வைக்கிற மனுஷருடைய எல்லா வித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மீண்டும் பரிசுத்த வேதாகமம் கொலோசேயர் 3:6ல் அறைகூவியுள்ளதைக் கேளுங்கள். இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். கடவுள் பரிசுத்தமுள்ளவர், நீதி நியாயமுள்ளவர். அசுத்தத்தைப் பார்க்கமுடியாதபடி அவருடைய கண்கள் அவ்வளவு பரிசுத்தமாயிருக்கின்றன. அசுத்தம் எதிர்ப்படுமிடத்து, அவருடைய பரிசுத்தம் அந்த அசுத்தத்தைப் பார்க்க முடியாதபடி கோபப்படுகிறது. அவர் பாவத்தின்மீது கோபம் கொள்கிறார். பாவம் அவருக்கு ஒருக்காலும் பிடிக்காது. பாவம் அவருக்கு அருவருப்பு.

பாவிகள் தங்கள் பாவத்தைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அவற்றைவிட்டுத் திரும்பி, தம் பாவத்திற்காக சிலுவையிலறையுண்ட இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமலிருக்கும்போது தேவகோபாக்கினைக்குள்ளானவர்களாயிருக்கிறார்கள்.

கிறிஸ்து இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாத பாவிகளுக்கு விரோதமாய்த் தேவகோபாக்கினை பற்றி எரியப்போகும் நியாயத்தீர்ப்பு நாள் வருகிறது. அவரை நீ விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர் உனக்கு விரோதமாக ..... என்னைவிட்டு பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் என்பார்.



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 3:47 pm

3.பொறாமை

பொறாமையும் பகையும் மனிதனைப் பாழ்படுத்தி அழிவுக்குட்படுத்தும், பொறாமை குடும்பங்களைச் சீரழித்துவிடும்.பொறாமை நண்பர்களை விரட்டியடித்துவிடும். பொறாமை நம் அலுவலைக் குழப்பிவிடும். பொறாமை நமது ஆன்மாவையும் நம்மையும் கொன்றொழித்துவிடும். யோபு 5:2ல் நாம் வாசிக்கிறபடி, கோபம் நிர்மூடனைக் கொல்லும். பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.

பொறாமையினால் ஒரு மனிதன் தன்னைத்தானே கொன்றுவிட்ட வரலாற்றைப்பற்றி, கிரேக்க கதை ஒன்று விவரம் தெரிவித்துள்ளது. ஒரு விளையாட்டு வீரனுக்கு கௌரவம் அளிப்பதற்காக அப்பட்டணத்தார் அவனுக்கோர் உருவச் சிலை அமைத்தார்கள். இதைக்கண்ட இன்னொரு விளையாட்டு வீரனுக்குப் பொறாமை ஏற்பட்டது. தனக்கு எதிர்போட்டியிட்டு விளையாடும் அவ்விளையாட்டு வீரனின் உருவச்சிலையை எப்படியாவது அகற்றி ஒழித்துவிட வேண்டுமென்று இப்பொறாமைக்காரன் கங்கணம் கட்டினான். ஒவ்வொரு நாள் இரவிலும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாய்த் தன்னால் முடிந்த மட்டும் உளிகொண்டு அவ்வுருவச்சிலையின் அடிப்பாகத்தை வெட்டிக்கொண்டுவந்தான். இறுதியில் ஒரு நாள் தான் எண்ணியதைப் ப+ர்த்திசெய்துவிட்டான். அந்த உருவச்சிலை விழுந்தது. ஆனால் அந்த உருவச்சிலையை வெட்டிக்கொண்டிருந்தவன் மீதே அது விழுந்துவிட்டது. பொறமைக்காரன் அவ்விடத்தில்தானே செத்து மடிந்துவிட்டான். அவனுடைய பொறாமையே அவனுடைய உயிருக்கு உலை வைத்துவிட்டது. பொறாமை பொறமைக்காரரைக் கொன்றுவிடும்.

மனநோய் மருத்துவரைவிடச் சிறந்த ஒப்பற்ற ஆலோசனை தரவல்ல சத்திய வேதாகமம் இயம்புவதைக் கேளுங்கள். ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே (சங்.49:16). ஒருவன் செல்வம் மிகுந்தவனாகும்போது அவன்மீது பொறாமை கொள்ளவேண்டியதில்லை. அவ்வாறு பொறாமை கொள்வதால் நமக்கு ஒரு பைசாகூட கிடைக்காது. வெறும் பொறாமையால் நமது பணம் அதிகரிக்காது. ஆனால் அப்படி பொறாமையால் நமது ஆன்மா அழிந்துவிடும். பணக்காரார்களின்மீது நாம் பொறாமை கொள்வதற்கு அவசியமே இல்லை. அதற்குக் காரணத்தையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. ஐசுவரியவான் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை. அவன் மகிமை அவனைப்பின்பற்றிச் செல்வதுமில்லை (சங்.49:17).

பொறாமைக்காரன் பிறருடைய வாழ்வைக்கண்டு மனம் புழுங்குகிறான். பிறருடைய வாழ்வைத் தன்னுடைய தாழ்வாகக் கருதுகிறான். பிறருடைய முன்னேற்றத்தைத் தன்னுடைய தாழ்நிலையாகக் கருதுகிறான். பிறருடைய வெற்றியைத் தன் தோல்வியாக எண்ணுகிறான். பிறருடைய ஆசீர்வாதத்தைத் தன் சாபமாக எண்ணுகிறான். பிறருடைய ஆக்கத்தை தன் அழிவாக எண்ணுகிறான். இப்பொறாமையே அவனை அடியோடு அழித்துவிடுகிறது. பொறாமையால் முன்னேறினவர்களை நான் ஒருக்காலும் கண்டதில்லை. ஆனால் பொறாமையால் சீரழிந்தவர்களைக் கண்டிருக்கிறேன். உனக்குள் பொறாமை வந்துவிட்டால், நீ ப+ரண மனிதனாக இருக்கமுடியாது. பொறாமை எப்படியாவது உன் உருவைக் குலைத்துவிடும். உன் அழிவைச் சிதைத்துவிடும். உன் குணாதிசயத்தை குறைத்துவிடும். உன் பண்பைப் பாழாக்கிவிடும், உன் உடலையே உருக்கிவிடும், உன் எலும்பைக்கூட உருக்கிவிடும் என்று வேதாகமம் செப்புகிறது. சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன். பொறாமையோ எலும்புருக்கி (நீதி.14:30). பொறாமை பெரும் துன்பம் விளைவிக்கும், பெரும் துக்கம் தரும். பெரும் வேதனை உண்டாக்கும். பொறாமையால் நமக்கும் நன்மையில்லை, பிறருக்கும் நன்மையில்லை. இரண்டுபேருக்கும் தீமையே விளையும், அழிவே உண்டாகும்.

பொறாமை மற்றவர்களை அநியாயமாய்த் தாக்குகிறது. மற்றவர்களுக்கு அநியாயமாய் நஷ்டம் விளைவிக்கிறது. அதனால் தமக்கு லாபமில்லை. பிறருக்கும் லாபமில்லை. பிறருக்கு நஷ்டம் விளைவிப்பதில் பொறாமை பெருமகிழ்ச்சி அடைகிறது.

ஒரு ப+ஞ்செடி முள்செடியைப் பார்த்து: நீ உன் அருகே வருகிறவர்களின் ஆடைகளின் மீது ஏன் அவ்வளவு பொறாமை கொள்கிறாய்? அந்த ஆடைகளால் உனக்கு பயன் என்ன? என்று கேட்டது. அதற்கு விடையாக முள்செடி இவ்வாறு கூறினது: எனக்கு இந்த ஆடைகளால் பயன் ஏதுமில்லை. அந்த ஆடைகளை நான் அணிந்துகொள்ளவும் விரும்பவில்லை. ஆனால் அந்த ஆடைகளையெல்லாம் கிழித்துவிடுவதே எனக்கு ஆசை.

இந்த முள்செடியைப்போலவே பொறாமைக்காரரும் பிறரைத் துன்பப்படுத்தி அழிப்பதையே தங்கள் பேரின்பமாகக் கருதுகிறார்கள். தங்களுக்கு எவ்வித ஆதாயம் வராவிட்டாலும் பரவாயில்லை, பிறர் தாழ்வடைந்து சின்னாபின்னமாகச் சிதைந்துபோகவேண்டுமென்பதே இவர்களுடைய சிந்தையாகும். இது சாத்தானின் சிந்தையாகும். ஆதாம் ஏவாளின் நல்வாழ்வைக் கண்டு சகிக்கமுடியாத சாத்தான் அவர்களைப் பாழாக்குவதில் மனம் மகிழ்ந்தான். அப் பொறாமையால் அவனும் பாழானான். பொறாமை கொள்ளும் மனிதனும் பாழாவான். ஆண்டவர் பொறாமையை அருவருக்கிறார். ஞானிகளும் இப்பொறாமையைக் கண்டித்துரைத்துள்ளார்கள்.

சுhலோமோன் கூறியுள்ளதைக் கேளுங்கள். உக்கிரம் கொடுமையுள்ளது. கோபம் நிஷ்டுரமுள்ளது. பொறாமையோவென்றால் அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? (நீதி.27:4).

பரிசுத்த பவுல் கூறியுள்ளதைக் கேளுங்கள். வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளாமலும் இருக்கக்கடவோம் (கலா.5:26).

பரிசுத்த யாக்கோபு கூறியுள்ளதைக் கேளுங்கள். வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு (யாக்.3:16).

பிரான்ஸிஸ் பேக்கன் இவ்வாறு கூறினார்: தன்னுடைய சொந்த அலுவலில் ஈடுபட்டு அனாவசியமாக பிறருடைய காரியங்களில் தலையிடாமல் இருக்கிறவர்கள் பொறாமை என்னும் சோதனையிலிருந்து எளிதில் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் தன் காரியத்தைவிட்டுவிட்டு பிறர் காரியங்களிலே பொறாமையோடு ஈடுபடுகிறவர்கள் இப்பயங்கர சோதனைக்கு தப்பிக்கொள்வது அரிது.

கோரேஸ் என்பவர் பின்வருமாறு உரைத்துள்ளார்: சிஸிலியர்களைப் பொறாமையைப்போல் சித்திரவதை செய்வது வேறெதுவுமில்லை.

கோரேஸ் என்பவர் மீண்டும் உரைத்துள்ளார்: பொறாமைக்காரன் மற்றவர்களுடைய வாழ்வைக் கண்டு, முன்னேற்றத்தைக் கண்டு, உயர்வைக்கண்டு, பொறாமையால் பெருமூச்சுவிட்டு, மெலிந்து சீரழிந்து போகிறான்.

சாமுவேல் ஐhன்சன் இவ்வாறு பகர்ந்துள்ளார்: தூண்டுவாரின்றியே சீறிச் சினந்து பொங்கி வழிவது பொறாமையே. அது பிறர் வாழ்வைச் சகிக்காது. அது அமைதியாயிராது. அது சேர்ந்தோரைச் சின்னாபின்னமாய்ச் சிதைத்துவிடும்.

பெட்ரோனியஸ் பகர்ந்துள்ளதைக் கேளுங்கள். புலவர்கள் குறிப்பிடுவது பிணம் தின்னிக் கழுகு என்னும் பறவையே அல்ல. அதைவிடக்கொடிய கொல்லும் தன்மையேயுள்ள மனிதனை உயிரோடு தின்னவல்ல பொறாமையே பேராசையே. பரிசுத்த வேதாகமச் சத்தியத்தின்படி பொறாமை நமது இயற்கைச் சுபாவமாகும். உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது. உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் கொலை செய்தும் பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள். நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும் நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.... நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? (யாக்.4:1-2,5). காயீன் ஆபேல்மீது பொறாமைகொண்டான். இப்பொறாமை காயீன் உள்ளத்தில் எரிச்சலை உண்டாக்கியது. அவன் முகநாடி வேறுபட்டது. பொறாமையால் காயீன் ஆபேலைக் கொன்றான். காயீன் இவ்வாறு ஆபேல்மீது பொறாமை கொள்வதற்கு நியாயமே இல்லை. இவ்வாறு பிறர்மீது பொறாமை கொள்வதற்கு நமக்கு என்ன நியாயம் இருக்கிறது? பொறாமை கொள்வதற்கு அவசியமே இல்லை. ப+ந்தோட்டத்தில் களைகள் இயற்கையாக முளைத்தெழும்புவதுபோல, மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவுக்குள் மறுபிறப்படையாத இதயங்களில் பொறாமைபோன்ற பாவங்கள் இயற்கையாகவே முளைத்தெழும்பிவிடுகிறது.

யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பின்மீது பொறாமைகொண்டு, அவனை எகிப்திய வியாபாரிகளுக்கு விற்றுப்போட்டார்கள். இப்பொறாமை யோசேப்பின் சகோதரர்களுக்குத் தீமையை விளைவித்ததே தவிர, யோசேப்பின் சிறப்பு இதனால் பாதிக்கப்படவில்லை. எனவே, யார்மீது பொறாமை கொள்ளுகிறோமோ அவர்களைக் காட்டிலும் பொறாமைப்படுகிறவர்களே பொறாமையால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஏறிந்தவனிடமே திரும்பிவரும் சக்கரப்படை ஆயுதம்போல, பொறாமை தன்னை உபயோகிப்பவர்களையே மீண்டும் வந்து சேர்ந்து தாக்கி நிற்கும்.

ஆமான் மொர்தெகாய் மீது பொறாமைகொண்டு, அவனைக் கொன்றொழித்துவிடத் திட்டமிட்டான். அவனைக் கொல்வதெற்கென்று ஒரு தூக்குமரத்தை ஆயத்தம் பண்ணினான். ஆனால் அப் பொறாமை ஆமானையே கொன்றுபோட்டது. ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம் பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள் (எஸ்.7:10).



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 3:50 pm

உங்களில் எத்தனைபேர் நீங்கள் பிறருக்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் நீங்களே தூக்குப்போட்டீர்கள்? பொறாமை காரணமாகப் பிறருக்கு வெட்டிய குழியில் தாங்களே விழுந்து மாண்டுபோனவர்கள் ஏராளம்.

நமது வீடுகளிலும் நாடுகளிலும் இதற்கு எண்ணிறைந்த சான்றுகள் உள. பொறாமை கொண்ட எந்த மனிதனாவது உண்மையாகவோ மன மகிழ்ச்சியாய் இருந்ததுண்டா என்று வினவுகிறேன். பொறாமை மன நிம்மதியைக் குலைத்துப்போடும், பொறாமைப்படுகிறவனைப் படுகுழியில் தள்ளிவிடும். எப்பொழுது பொறாமை என்னும் பாவத்தில் வீழ்கிறோமோ, அப்பொழுதே நம் ஆன்மா செத்துவிடும்.

பொறாமை ஏன் இவ்வளவு கொடிய பாவமாக இருக்கிறது? கடவுள் ஏன் பொறாமையை இவ்வளவு கசந்து வெறுத்துத் தள்ளவேண்டும்? பொறாமையின் பயங்கரம் கடவுளுக்குத் தெரியும். பொறாமையின் காரணமாக எவ்வளவு அழிவு ஏற்படும் என்பதை ஆண்டவர் அறிவார். நமது நல்வாழ்வைக் கருதுகிற ஆண்டவர் பொறாமையை வெறுக்கிறார். நமது ஆத்துமா வாழ்கிறதுபோல எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கவேண்டுமென்பதே ஆண்டவரது சித்தம். பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் (3.யோ.1:2).

நன்றாக இருந்த லூசிபர் என்ற தேவதூதன் அனாவசியமாக நியாயமின்றி ஆண்டவர்மீது பொறாமைகொண்டான். உடனே அவன் சாத்தான் ஆனான். அப்பொறாமை அவனையே அழித்துவிட்டது. எனவே, தம் சிருஷ்டியை அழிக்கும் பொறாமையின்மீது ஆண்டவர் பிரியம் கொள்வாரோ? அவர் அதனை அருவருக்கிறார். கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்து கொள்வதற்குக் காரணமாயிருந்த பாவங்களுள் ஒன்று பொறாமையாகும். பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்தான் (மாற்.15:9).

இயேசு கிறிஸ்துவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் பற்றி பரிசேயரும் சதுசேயரும் பொறாமை அடைந்தனர். மக்கள் திரள்திரளாக இயேசு கிறிஸ்துவண்டை வந்து அவருடைய அமுத மொழிகளைக் கேட்டு, அவரால் சுகம் பெற்று, நன்மை பெற்று வருவதைப்பற்றியும், இயேசுவின் புகழ் நாடெங்கும் வெகுவிரைவில் பரவி வருவதைப் பற்றியும் அவர்கள் பொறாமைகொண்டார்கள். மக்கள் இயேசு கிறிஸ்துவை ராஜாவாக்க முயன்றபோது, அவர்களின் பொறாமை கொழுந்துவிட்டெரிந்தது. வர வர இயேசு கிறிஸ்துவின் மேன்மையும் மகிமையும் நாடெங்கும் காட்டுத்தீ போல்பரவிச் செல்வதைக்கண்டு, அவர்களால் சகிக்கமுடியவில்லை. உலகம் முழுவதும் இயேசுவைப் பின்சென்றுவிட்டதே என்று பொறாமைப்பட்டார்கள். அவர்கள் நெஞ்சில் மூண்டெழுந்த பொறாமைத் தீயை அவர்களால் அடக்கி வைக்கமுடியவில்லை. இயேசுவைக் கொன்றொழித்துவிட சதி செய்தார்கள். பொதுவாக பரிசேயரும் சதுசேயரும் ஒருவருக்கொருவர் இணங்காதவர்களாயிருந்தும், இருவகுப்பினரும் இயேசுவின் மீதிருந்த பொறாமை காரணமாக, அவ்விரு வகுப்பாரும் ஒன்று சேர்ந்து இயேசுவைக் கொன்றுவிட இணங்கினார்கள். இருவகுப்பாரும் பொறாமையால் நிதானத்தை இழந்தார்கள். நியாயத்தை மறந்தார்கள். நீதியைக் கசந்தார்கள். தங்களுக்குள்ளிருந்த வேற்றுமை உணர்ச்சிகளைக்கூட ஒதுக்கி வைத்துவிட்டார்கள். பொறாமைக்கு அடிமையானார்கள். பொறாமை அவர்கள் புத்தியைக்கொன்றுவிட்டது. அவர்கள் ஆன்மாவை அழித்துவிட்டது. அநியாயமாக இயேசுவைக் கொல்வதற்கு இருவகுப்பாரும் கூடிக்கொண்டார்கள். பொறாமையின் கொடுமைதான் என்னே! என்னே!

பொறாமை ஆன்ம சுகத்தையே அறவே ஒழித்துவிடும். ஜென்ம பாவத்தின் பயங்கர அறிகுறிகளுள் ஒன்று பொறாமையே. இப்பாவம் மனுக்குலமனைத்தையும் ஆட்கொண்டுள்ளது. இயற்கையாகவே எல்லா மனிதனுக்குள்ளும் பொறாமைப்படும் சுபாவம் இருக்கத்தான் செய்கிறது. ஓவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான பொறாமை உண்டு. இயேசு கிறிஸ்துவைத் தன் நாயகராக ஏற்றுக்கொள்ளுமுன் பவுலுக்கு ஆவிக்குரிய பொறாமை இருந்தது. புதிதாகப் புகழ்பெற்றுப் புனிதமாய் நடந்த கிறிஸ்தவர்களைக் கண்டு பவுல் பொறாமைப்பட்டான். இப்பொறாமை நெருப்பை அவன் நெஞ்சத்துக்குள் அடக்கி வைத்திருக்க முடியவில்லை. கிறிஸ்தவ இனத்தையே இப்ப+மியிலிருந்து ப+ண்டோடு அழித்துவிடவேண்டுமென்று சீறிச் சினந்துபொங்கி எழுந்தான். சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்தி கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய், இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால் அவர்களைக் கட்டி எருசலேமுக்குக்கொண்டுவரும்படி தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டுவாங்கினான். ஸ்தேவான் என்னும் கிறிஸ்தவ சீஷன் கல்லெறிந்து கொல்லப்படுவதற்கு ஒரு காரணமாகவும் இருந்தவன் பவுல். ஸ்தேவான் கல்லெறியுண்டு சாகும்போது அவனுடைய முகத்தில் ஓர் ஆச்சரியமான மகிமையின் ஒளி பிரகாசித்ததைப் பவுல் கண்டான். அதே ஒளி தமஸ்குவிற்குச் செல்லும் பாதையில் அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. ஸ்தேவானை ஆட்கொண்டிருந்த இயேசு கிறிஸ்து பவுலையும் ஆட்கொண்டார். இயேசுவிடம் பொறாமையில்லை. அவரிடம் அன்புதான் உண்டு. அந்த அன்பு அன்றிலிருந்து பவுலை ஆட்கொண்டது. பவுல் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியானான். பழைய பொறாமை போன்ற பாவங்களெல்லாம் ஒழிந்துபோயின. எல்லாம் கிறிஸ்துவுக்குள் புதிதாயின. கிறிஸ்துவே அவனுக்குள்ளிருந்து அன்பாகப் பொங்கினார். பேரின்பமாகப் பொங்கினார். பவுல் அதன்பின்னர் அன்பு வடிவமான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையே தன் முழு இருதயத்தோடும் சேவித்தான். தன் இருதயம் முழுவதையும் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டான். இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டான். இயேசுவே அவனுக்கு ஞானமும், நீதியும், மீட்புமானார்.

கொடிய சயரோக கிருமிகள் உன் உடலில் இருக்கின்றன என்று நீ கேள்விப்பட்டால், அவற்றை அப்புறப்படுத்துவதில் உடனடியாக ஈடுபடுவாய். அதற்காக எவ்வளவு நேரத்தை வேண்டுமானாலும் சரி, எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் சரி, உடனே செலவழிக்கத் தயங்கமாட்டாய். உதாரணம் உன் உடலுக்குள் புகுந்துவிட்ட சயரோக கிருமிகள் உன்னைக் கொன்றுபோடும் என்பதை அறிவாய். அதைப்போல் உனக்குள் புகுந்திருக்கும் பொறாமை என்னும் பேய்க்குணம் உன் சரீரத்தை மட்டுமல்ல, உன் ஆத்துமாவையும் கொன்றொழித்துவிடும் என்பதை மறவாதே. இவ்வளவு கொடிய கொல்லும் தன்மையுள்ள பொறாமை உனக்குள் இருந்தும், நீ அதனை அகற்றுவதற்கு முயலாது, சும்மா இருப்பது விந்தையிலும் விந்தையே. கடவுளுடைய பார்வையில் பொறாமையும் விபச்சாரத்தைப்போல் மனிதனைக்கொல்லும் தன்மையுள்ள கொடிய பாவமே. கலாத்தியர் நிருபத்தில் கூறப்பட்டுள்ள பதினேழு மாம்சத்தின் கிரியைகளில் ஒன்று பொறாமையாகும். இப்பொறாமை என்னும் பாவம் விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாரதனை, பில்லிசூனியம் போன்ற பாவங்களோடு சேர்ந்து அவைகளுக்குச் சமமாக வைத்து எண்ணப்படும் கொடிய பாவமாகும். மற்ற பாவங்களைவிட இப்பொறாமை என்னும் பாவம் அதிகமாகப் பரவி வேரூன்றியிருத்தலைக் காணலாம். எனினும், இப்பொறாமையைப் பிரசங்கபீடங்களிலிருந்து கண்டித்துப் பேசுவதை நாம் அதிகமாகக் கேட்பதில்லை. இப்பாவம் நம் நாட்டுச் சட்ட திட்டங்களால் தடைவிதிக்கப்படவில்லையாயினும், இப்பாவம் கடவுளால் பெரிதும் வெறுக்கப்படுகிறது. சுகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள். இதோ நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார் (யாக்.5:9).

பொறாமை யாருடைய உள்ளத்திலிருக்கிறதோ அவர்கள் அகத்திலும் முகத்திலும் மன மகிழ்ச்சியும், ப+ரிப்பும், திருப்தியும் காணமுடியாது. அமைதியும், சாந்தி சமாதானத்தையும் பொறாமை ஒழித்துவிடும். பொறாமை காரணத்தால் எத்தனையோ பேருடைய வாழ்வில் கசப்பும் கொடுமையும், ஏமாற்றமும், குழப்பமும், பிணியும், துக்கமும் துன்பமும் குடிகொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். நமது வேலையையும் நாம் செவ்வனே செய்யமுடியாதபடி பொறாமை தடுத்துவிடும். ஆண்டவருக்கு நாம் இதயப+ர்வமாய்த் தொண்டுசெய்யாதபடி தடைசெய்துவிடுகிறது. நமக்கும் நமது நரம்பு மண்டலத்திற்கும் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தி, நமது சுகத்தையெல்லாம் நசமாக்கிவிடும் இப்பொறாமை.



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 3:51 pm

பிற மக்களோடு கூடிய கூட்டுறவை அல்லாது தெய்வத்தோடு கூடிய அன்னியோன்னிய ஐக்கியத்தையும் கெடுத்து தொலைத்துவிடும் இப்பாழான பொறாமை. பொறாமையுள்ளம் ஆண்டவரோடு ஒன்றித்து இணைந்து நிற்கமுடியாது. நீ இதுவரை உன் இதயத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்காமல் வாழ்ந்தால், அதற்கொரு காரணம் உன் நெஞ்சத்திலிருக்கும் பொறாமையாகும். பொறாமை உன்னைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும். பொறாமை உன்னுள்ளத்திலிருக்கும்வரை நீ ஆண்டவரோடு ஐக்கியப்பட முடியாது. ஆண்டவர் உன்னுள்ளத்தில் வரவேண்டுமாயின் நீ உன்னுடைய பொறாமை பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு, அதனை அறிக்கையிட்டு, நீ இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் இப்பொறாமை எனும் பாவமறக் கழுவி சுத்திகரிக்கப்படவேண்டும். இவ்வாறு கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டு, சுத்தமாக்கப்பட்ட இதயத்தில் பிதாவாகிய தெய்வமும், குமாரனாகிய தெய்வமும், பரிசுத்தவியானவராகிய தெய்வத்தின் மூலம் வாசம் பண்ணுவார். அப்பொழுது நீ கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாவாய். அப்பொழுது பழைய மாம்சத்தின் கிரியைகளெல்லாம் ஒழிந்துபோகும், எல்லாம் புதிதாகும்.

கொலைகாரனின் கொடிய கோடரியின் கூரிய முனையைக் காட்டிலும் பன்மடங்கு கூர்மையானது பொறாமை என்று சேக்ஸ்பியர் கூறியுள்ளார்.

பொறாமை அகந்தை அரிபிளவைப்போல் அரித்துவிடும். மனிதனைச் சமுதாயத்தினின்று பிரித்துவிடும். அவனைத் தன்னந்தனியாக்கிக் கொன்றுவிடும். பொறாமைக்காரன் பிறரோடு கூடிவாழ முடியாது. காரணம் பிறர் வாழ்வை அவனால் பொறுக்கமுடியாது. அவனும் வாழமாட்டான். பிறரையும் வாழவிடமாட்டான். அவன் ஓர் ஆன்ம குஷ்டரோகி ஆகிவிடுகிறான். அப் பொறாமை என்னும் குஷ்டரோகம் அவனை அயலாரிடமிருந்து பிரித்துவிடும், ஆண்டவரிடமிருந்தும் பிரித்துவிடும்.

கடைசி நாள் நியாயத்தீர்ப்பில் நாம் இந்தப் பொறாமை பாவத்திற்காகவும் நியாயந்தீர்க்கப்படுவோம். இப்பாவத்தைக்குறித்தும் நாம் ஆண்டவருக்கு கணக்கொப்புவிக்கவேண்டும். இப் பொறாமையாகிய பாவம் நம்மை நரக ஆக்கினைக்குட்படுத்திவிடும்.

என்னுடைய சரீர சுகம், மனச்சமாதானம், ஆன்ம வாழ்வு இவற்றைப் பாதிக்கும் இப்பாழான பொறாமைப் பாவத்தை எங்கனம் விட்டுவிடுவது என்று நீங்கள் வினவலாம்.

முதலாவது, உண்மையை ஒத்துக்கொள். அதாவது, உனக்குள்ளிருக்கும் பொறாமைக் குணத்தை நீ அறிந்தவனாய், பொறாமை உன்னிடத்தில் உண்டு என்னும் உண்மையை நீ ஒத்துக்கொள். உனது தோல்விக்காக பிறர்மீது பழி சுமத்திக் கொண்டிருக்காதே. மற்றவர்களுக்குள்ளும்தான் இப்பாவம் தலைதூக்கி நிற்கிறதே என்று நீ வீண் சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டு சும்மாயிராதே. உன் குற்றத்தை நீ உணர்ந்து கொள்வதால், நீ சிறிய மனிதனாகிவிடுவாய் என்று தவறாகக் கருதாதே. உள்ளபடியே நீ உண்மையை ஒத்துக்கொள்ளும்பொழுது உன்னைப் பெரிய மனிதனாகப் பிறர் மதிப்பார்கள். எனவே நீ பாவி என்பதை முதலாவது ஒத்தக்கொள்.

இரண்டாவது, உன் பாவத்தை கடவுளிடம் அறிக்கையிட்டு விட்டுவிடு. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1.யோ.1:9). நீ சொஸ்தமடையும்படிக்கு, உன் குற்றங்களை அறிக்கையிடு (யாக்.5:15). மனந்திரும்பி பாவத்தை அறிக்கையிட்டு அதை விட்டுவிடு.

மூன்றாவது, உன்னைப் புது சிருஷ்டியாக்கும்படி கிறிஸ்துவிடம் உன்னை ஒப்புவித்துவிடு. பொறாமையை உன் சுயபலத்தால் வெல்லவே முடியாது. பவுல் இப்பாவ வெற்றியின் இரகசியத்தைக் கண்டுபிடித்தவனாய், பிலிப்பியர் 4:13ல் கூறியுள்ளதைக் கேளுங்கள். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. இயேசுகிறிஸ்துவை அல்லாமல் நாம் ஒன்றும் செய்யமுடியாது. இயேசுகிறிஸ்து ஒருவர் மட்டும்தான் பாவம் அற்றவர், முழுக்க முழுக்க பரிசுத்தமானவர். அவர் ஒருவரே முழுக்க முழுக்க அன்புள்ளவர். பாவச் சுபாவம் படைத்த நம்மைச் சிலுவையில் கொன்றொழித்துவிட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நமக்கு ஜீவனாகவும் பரிசுத்தமாகவும், இரட்சிப்பாகவும், எல்லாவற்றிற்கும் எல்லாமாகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும். கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன். இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் (கலா.2:20). கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் (கலா.5:24). ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை (கலா.5:22-23).

நான்காவது, கிறிஸ்துவின் ஆவியானவர்உன் இதயத்தில் வந்து வாசம்பண்ணுமாறு ஆண்டவரை வருந்திக்கேள். பிதாவாகிய தெய்வம், குமாரனாகிய தெய்வம் பரிசுத்தாவியானவரின் மூலமாய் உன்னில் வாழ விடு. அப்படியே நீங்களும் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள் (ரோ.6:11). ஆவியின் முதற்கனி அன்பு (கலா.5:22). அன்பு நமது இதயத்தை முற்றிலும் நிரப்பிப் பொங்கி வழியும்பொழுது அவ்விடத்தில் பொறாமை தங்கியிருக்க இடமில்லாமல் வெளியேற்றப்பட்டுவிடும். அன்புள்ள இடத்தில் பொறாமை இருக்கமுடியாது. எனவே, பொறாமை நமது இதயத்திலிருந்து அகற்றப்படுவதற்கு ஒரே வழி, பரிசுத்த அன்புக்கடவுளாகிய இயேசு கிறிஸ்து நம் இதயத்தை முற்றிலும் ஆட்கொள்ளவேண்டும். நம் இதயத்தை இயேசுகிறிஸ்துவுக்கு முழுவதும் ஒப்புக்கொடுக்கும்போது, அவர் நம் இதயத்தில் தங்கி அன்பைப் பொழிவார். அப்பொழுது பொறாமை அகன்றுபோம். இயேசு கிறிஸ்துவாலே பொறாமையை நீ வெல்வாய். இதற்கு இயேசு கிறிஸ்துவேயன்றி வேறொரு வழியும் இல்லை. எனவே உடனே உன்னை முற்றிலுமாய்க் கிறிஸ்துவிடம் ஒப்புவித்துவிடு.



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Dec 24, 2009 4:07 pm

வாவ் தலா சூப்பர் கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு 677196 கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 4:17 pm

இது கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரிபாஸ்!



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக