புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
127 Posts - 54%
heezulia
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
9 Posts - 4%
prajai
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 10:07 am

மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Sm10
-
குழந்தைகளே நலமா….

நான் தான் பன்னீர் பேசறேன். எனது தாவரவியல் பெயர்
மில்லிங்டானியாஹார்டென்னிசிஸ்,
அறிவியல் பெயர் கயேட்டார்டா ஸ்பீசிஆச என்பதாகும்.
காஃபி குடும்பத்தைச் சேர்ந்தவன். தமிழகத்தில் காண்பதற்கு
மிக அரிதாகி விட்ட மரங்களுள் நானும் ஒருவன்.

எனக்கு மரமல்லி மரம், கார்க் ட்ரீ, மல்லி மரம் என வேறு பெயர்களும்
உண்டு. நான் செங்குத்தாக வளருவேன். என் இலை, பூ, வேர் அனைத்தும்
உங்களுக்கு பயன் தருபவை. என் இலை காண்பதற்கு முருகனின் வேல்
போன்ற வடிவத்திலிருக்கும்.

நான் முருகப் பெருமானுக்கு உகந்த மரமாவேன். சில திருக்கோயில்களில்
என் புஷ்பம் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு உகந்த மலராகவும் கருதப்படுகிறது.

என் நறுமணம் கொண்டே என்னை நீங்கள் அடையாளம் காணலாம்.
வெள்ளை நிறத்தில் அளவில் சற்று நீண்டு என் மலர் தரும் நறுமணம்
உங்கள் மனதுக்கு புத்துணர்வையும், அமைதியையும் தரும். மலர்கள்
பூக்கும் காலங்களில், என் மரத்தினடியில் பூ மெத்தைப் போல பரவி,
அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை நான் பரப்புவேன்.

பன்னீர் புஷ்பங்களை இயற்கையில் அருட்கொடை என்றே சொல்லலாம்.
சங்கக் காலத்தில் என் மலரின் பெயர் மெளவல். என் மலரின் அரும்புகளை
மகளிரின் பல் வரிசைக்கு உவமையாக காட்டியிருக்காங்க.

பன்னீர் மலர்கள் உள்ள இடத்தில், எதிர்மறை எண்ணங்கள் விலகி
தன்னம்பிக்கை எண்ணங்கள் உருவாகும், பன்னீர் புஷ்பங்கள் உடலுக்கும்,
மனதுக்கும் சக்தியைக் கொடுக்குமுன்னு அந்தக் காலத்தில் சொல்லி
வெச்சிருக்காங்க குழந்தைகளே. பொதுவாக, பன்னீர் மரங்கள் வீட்டில்
இருந்தாலோ பெண்களுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் நீங்கி விடும்
என்கின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 10:08 am


பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் என் அருமையை உணர்ந்திருக்காங்க.
அவங்க, விஷமாகும் உணவுகளால் ஏற்படும் நோய்களைப் போக்கவும்,
காய்ச்சலை கட்டுப்படுத்தவும், நுரைநீரல் டானிக்காவும் என் மரத்தின்
வேரை அரைத்து கஷாயமாக்கி பயன்படுத்தறாங்க.

என் மலரிலிருந்து ஆஸ்த்துமா நோயைப் போக்க மருந்து தயாரிக்கறாங்க.
தனி அடையாளம் கொண்ட என்னை நறுமணத்துக்காகவும், அழகுக்காகவும்,
வீட்டுத் தோட்டங்கள் தெருக்களில் வளர்க்கலாம். என் பூக்களில் இருந்து
பெறப்படும் சாறிலிருந்து தைலம் தயாரிக்கலாம் அல்லது அதனுடன் இனிப்பு
சுவை கலந்து குடித்தால் நல்ல ஆரோக்கியம் பெறலாம்.

இந்தத் தைலம் மூட்டு எலும்புகள், முதுகு வலிகள் போன்ற உடம்பில் ஏற்படும்
அனைத்து வலிகளுக்கும் சிறந்த நிவாரணி.

என் பூவிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை முகத்திலோ உடம்பிலே
தேய்தால் சுருக்கங்கள், கருமை நிறம், தழும்புகள் நீங்கும். என் பூவை நீருடன்
சேர்த்து வேக வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனை தினம் அருந்தி வந்தால்
காய்ச்சல் வராது,

உங்களுக்கு நோய் எதிர்ப்பு திறனைக் கொடுக்கும் மற்றும்
சளி தொல்லையால் ஏற்படும் கோளாறுகள் வராது, எலும்புகளுக்கு
உறுதியைக் கொடுக்கும். என் காய்ந்த பன்னீர் மலர்களை, சாம்பிராணி
புகையிலிட்டு அந்த வாசனையை நீங்க சுவாசித்தீர்களேயானால் உங்களுக்கு
சுவாசப் பிரச்னையே இருக்காது.

என் மரத்தின் கிளைகள் மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால்
மருந்துகள் சேமிக்கப்படும் குப்பிகளில், காற்றை புகவிடாமல் தடுக்க
தக்கையாக பயன்படுத்தறாங்க. என் பட்டையை நீரிலிட்டு மூன்றில் ஒரு
பங்காக தண்ணீர் சுண்டி பருகி வந்தால், வயிற்றுப் போக்கு நீங்கும்.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்
வழங்கப்படும் திருநீற்றுப் பிரசாதம் என் இலையில் தான் வைத்து
வழங்கப்படுகிறது என்பது எனக்கு சூட்டிய மணி மகுடம்.

மேலும் தொன்மையான தருமை ஆதீனம் போன்ற சைவத் திருமடங்களிலும்,
சன்னிதானங்கள் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளிக்கும் போது திருநீற்றுப்
பிரசாதங்களை என் இலைகளிலேயே வைத்து வழங்குவர்.

நான் தஞ்சாவூர் மாவட்டம், திருச்சோற்றுத்துறை, அருள்மிகு சோற்றுத்துறை
நாதர், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, ஆரயண்யேஸ்வரர் ஆகிய
திருக்கோயில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன். நன்றி குழந்தைகளே,
மீண்டும் சந்திப்போம்.
-
---------------------------------

பா. இராதாகிருஷ்ணன்
நன்றி- சிறுவர்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக