புதிய பதிவுகள்
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_m10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10 
22 Posts - 48%
heezulia
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_m10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_m10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_m10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_m10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_m10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_m10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_m10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10 
17 Posts - 3%
prajai
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_m10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_m10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10 
9 Posts - 1%
Jenila
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_m10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_m10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_m10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10 
4 Posts - 1%
jairam
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_m10‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82274
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2020 9:10 am

‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’  14
-

-
காலியாகக் கிடக்கும் அனைத்துச் சுற்றுச்சுவர்களிலும்
பன்னிற எழுத்துக்களில் வரைந்து வைக்கிறார்கள்;
‘வாழ்த்த வயதில்லை, எனவே வணங்குகிறோம்!’
பெரியய்யா, பெரியாயி, தாத்தன் என்று முதற்சொல்லை
எழுதிக்கொள்கிறார்கள். அதைக்கூட அறியாமை என்று
அறிந்துகொள்ள முடிகிறது.

அவர்களில் பதின்பருவ வாரிசுகளைக் கூட
‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
என்கிறார்களே! இதையெல்லாம் தன்னடக்கமாக எடுத்துக்
கொண்டு தாண்டியும் போய் விடலாம்தான்.

ஆனால் இவர்களுக்குத் தமிழ் மரபு தெரியவில்லையே என்று
நமக்கு மூலக்கடுப்பு வருகிறது. வாழ்த்த வயதில்லாமல்
வணங்கப் பெறும் தலைவர்களோ, சுவரொட்டி வண்ணங்களில்
சிரிப்புக்களை செலவின்றி சிந்தி, தம்மைத் தமிழ்
வளர்ப்பவராயும் பாவித்துக்கொள்கிறார்கள்.

நமக்கு எழும் கேள்வி, வாழ்த்த வயதில்லை எனும்போது,
எதனால் ‘தமிழ் வாழ்க’ என்றும், ‘தலைவர் வாழ்க’ என்றும்
விலா வலிக்க, விண் முட்டக் குரல் எழுப்புகிறார்கள்?

தமிழை விடவும் தாம் வயதில் மூத்தவர் என்பதாலா?
‘வாழ்க’ என்று சொல்வது வாழ்த்துவதுதான். ‘வாழ்க’ எனும்
சொல், மரியாதையுடன் ஏவும் சொல். வியங்கோள் வினைமுற்று
என்கிறது தமிழ் இலக்கணம்.

அதுவும் அர்த்தமாகவில்லை என்றால் எட்டாம் வகுப்புத் தமிழ்
வகுப்பில் போய் அமரலாம்.

1882ல் பிறந்த மகாகவி சுப்ரமணிய பாரதி, மகாத்மா காந்திக்கு
வயதில் மூத்தவரில்லை. பிறகு எங்ஙனம் ‘வாழ்க நீ எம்மான்’
என்று மகாத்மா காந்தி பஞ்சகம் பாடினார்,

‘வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை, தவறிக் கெட்டுப்பாழ்பட்டு
நின்றதாம் ஓர் பாரத தேசம் தன்னைவாழ்விக்க வந்த காந்தி
மகாத்மா! நீ வாழ்க! வாழ்க!’ என்று?

ஒன்று தெரிகிறது, பாரத தேசம் ஏதோ இன்று புதியதாகப்
பாழ்பட்டுப் போய் விடவில்லை. அன்றே பாழ்பட்டுத்தான்
நின்றிருக்கிறது!எட்டாம் நூற்றாண்டு மாணிக்கவாசகன்,
சிவபெருமானைவிட வயதில் மூத்தவரா? பிறகு ஏன் சகோதரர்களே,
‘நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என்
நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!’ என்றெல்லாம் வாழ்த்துகிறார்.

எனவே அனைத்துக் கட்சித் தொண்டர்களே!
உங்கள் தலைவர்களின் பிறந்த நாள், திருமண நாள் விழாக்களில்
மனப்பூர்வமாக அவர்களை ‘வாழ்க’ என்றே வாழ்த்துங்கள்.
ஒன்றும் குறைந்து போகாது. அவர்கள் சீரும் சிறப்பும் பெற்றுத்
தம்குடி பல்கிப் பெருகி பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
வாழ்ந்தால்தானே, தொண்டர்கள் தம்குடி பல்கிப் பெருகி வாழ
முடியும்?

தொண்டர்கள் வாழ்ந்தால்தானே, ‘தொல்குடித்’ தமிழினம்
வாழ இயலும்! வேண்டுமானால் சர்வ அங்கமும் நிலத்தில் தோய
வணங்கவும் செய்யுங்கள்!

எட்டு அங்கமும் நிலத்தில் கவிழ்ந்து கிடக்கும் உங்கள் முதுகின்
மேல் உங்கள் தலைவர்களைக் கால் பதித்து நடந்து போகச்
செய்யுங்கள். உங்கள் முதுகில் வியர்வை பொங்கி உப்புப்
படிந்திருந்தால், அவர் செருப்புப் போட்டே நடக்கலாம்.

மண் சோறு உண்ணுங்கள்! தலை மயிர் மழித்துக்
கொள்ளுங்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82274
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2020 9:11 am



‘வாழ்க’ கோஷத்துடன் தீக்குளித்துச் சாகவும் செய்யலாம்.
பெண்டு பிள்ளைகளைக் கட்சி காப்பாற்றும்! பாண்டிய மன்னனின்
ஆபத்துதவிகள் போல, தன் தலை வெட்டித் தாம்பாளத்தில் வைத்து
நீட்டுங்கள்! ஆனால் ‘வாழ்த்த வயதில்லை’ என்று மட்டும் சுவரொட்டி
அடிக்காதீர்கள்!

‘வாழ்க’ எனும் சொல்லோ, ‘வணக்கம்’ எனும் சொல்லோ,
கால் குப்பி மது, கோழி பிரியாணி, ஐந்நூறு பணம் என்பதற்கான
கூப்பாட்டுச் சொல் அல்ல. குற்ற உணர்ச்சியுட னும், தாழ்வு
மனப்பான்மையுடனும் கூலிக்கு வினையாற்றுவதல்ல.

ஆழ்ந்த அன்புடன், உள்ளம் கசிந்து, நன்றி ததும்பி வழிந்து,
மனப்பூர்வமாக வாழ்த்தினால் அதற்கு நற்பயன்கள் உண்டு.

பழங்காலத்தில் எப்படி பிறந்த நாள், பண்டிகை நாள் வாழ்த்துச்
சொல்லிக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. சிற்றரசர்கள்,
பாளையப்பட்டுக்காரர்கள், ஜமீன்தார்கள் பிறந்த நாள் மங்கலம்
கொண்டாடி இருக்கலாம்.

அவர்களை முதன்மைக் குடிமக்கள் அரும்பொருட்கள் அளித்து
களி கண்டிருக்கலாம்.

என்ன விதமான பரிசுப் பொருட்கள் கொண்டு போய்க்
கொடுத்திருப்பார்கள்? எத்தனை வயதோ அத்தனை பொற்காசுகள்?
வைரத்தால் ஆன ஆரம்? சந்தனத்தாலான ஆறடி உயர யானை?
பெரும் யானைத் தந்தங்கள் கால்களாய் அமைந்த சப்ர மஞ்சக்
கட்டில்கள்? நாம் எதைக் கண்டோம்?

சேரன் செங்குட்டுவனைக் காண கப்பம் சுமந்து வந்த மன்னர்கள்
கொணர்ந்த பட்டியல் தருகிறார் இளங்கோவடிகள்,
வெளிப்படையாக.

யானையின் வெண் தந்தங்கள், அகிற் கட்டைக் குவியல், கவரிமான்
மயிரினால் ஆன சாமரம், தேன்குடங்கள், சந்தனக்கட்டை,
சிந்தூரக் கட்டி, நீலக்கற்கள், கஸ்தூரி, ஏலக்கொடி, மிளகுக்கொடி,
கூவைக் கிழங்குகள், அவலைக் கிழங்குகள், தேங்காய்கள்,
மாம்பழங்கள், பச்சிலை மாலை, பலாப்பழங்கள், பூண்டு, கரும்பு,
பூங்கொடிகள், வாழைக்குலைகள், சிங்கம், புலி, யானை, குரங்கு -
இவற்றின் குட்டிகள், வருடை மான், காட்டு மான், கஸ்தூரிக் குட்டிகள்,
கீரிகள், ஆண் மயில்கள், புனுகு, புனுகுப் பூனைக் குட்டிகள்,
காட்டுக் கோழி, கிளிகள்... இன்று இவற்றைக் கொண்டு மன்னர்களைக்
காணப் போனால்,

வாசல் கதவைக் கூடத் திறக்க மாட்டார்கள்.
பிறகெங்கே வாழ்த்துச் சொல்வது!

போன தலைமுறை சாதாரண மக்களுக்கு தமது சொந்தப் பிறந்த
நாளே தெரியாது. பிறகெப்படி மற்றவருக்குத் தெரியும்?
அஞ்சல்துறை அறிமுகம் ஆன காலத்துக்குப் பிறகுதானே, வாழ்த்து
அட்டைகளே அச்சாகி இருக்க வேண்டும்?

பொங்கல் வாழ்த்து, தீபாவளி வாழ்த்து, கிறிஸ்துமஸ் வாழ்த்து,
திருமண வாழ்த்து என... என் பள்ளி நாட்களில், கல்லூரி நாட்களில்
வாழ்த்து அட்டைகள் வாங்கத் திரியும், வந்ததைக் காட்டி மகிழும்
தோழர்கள் உண்டு.

கையில் காசில்லாதவன் எங்கே கடைத் தெருவுக்குப் போவது?

இன்று பெரும்பாலும் வாழ்த்து அட்டைகள் நின்றுவிட்டன.
தபால் ஊழியருக்கும் சுமை குறைவு. மரங்களும் தப்பித்தன.
எல்லாம் குறுஞ்செய்தி மயம். எதிர்காலத்தில் ஈதருக்கு அடுத்த
படியாகக் ககன வெளி எல்லாம் குறுஞ்செய்திகள் செறிந்திருக்கும்.
அதிலும் வியாபாரம் ஆகும் எனத் தெரிந்த நிறுவனங்கள் பண்டிகை
நாட்களில் செய்திக்கு கட்டணம் உயர்த்தினர்.

நம்ம ஆட்கள் எவ்வளவு அறிவாளிகள்! பண்டிகைக்கு இரு தினங்கள்
முன்பே வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார்கள். எதற்கு வாழ்த்துக்கு
பணம் பாழ்ச்செலவு?

இப்படிப் போகிறது விலைமதிப்பில்லா வாழ்த்தின் வரிசை!
நொந்து சபிப்பது பலிக்குமானால், வாழ்த்துவதில் நன்மை
விளையாதா? கொடுங்கோன்மை அதிகாரத்துத¢ திருக்குறள் பேசுகிறது:
‘அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே செல்வத்தைத்
தேய்க்கும் படை’இது அரசர்க்குக் கூறியது என்று ஒதுங்கிப் போக
வேண்டாம்.

‘ஒருவன் அல்லற்பட்டு, ஆற்றமாட்டாமல் அழுத கண்ணீர், அவன்
அல்லற் படுவதற்குக் காரணமாக இருந்தவரின் செல்வத்தை அழிக்கும்
ஆயுதம்’.

என்ன அலுப்பு நமக்கு என்றால், மேடை தோறும் திருவள்ளுவர்
பேர் பாடும் இனம் கூடத் திருக்குறளை நம்புவதில்லை என்பதுதான்.
ஆற்றாது அழுத கண்ணீர் சகல சம்பத்துக்களையும் தேய்த்து
இல்லாமல் ஆக்கும் வலுவான ஆயுதம் என்றால், அது பலிக்கும் என்றால்,
வாழ்த்துவது பொருளற்றுப் போகுமா?

எனவே, வாழ்க, வாழ்த்து எனும் சொற்களை வெறும் சடங்கு -
சம்பிரதாயமாகக் கொள்ளாமல், அந்தச் சொற்கள் மந்திரம் என்றும்,
அதற்கென ஆற்றல் உண்டு என்றும் எண்ணி, உலகம் வாழ்த்தும்படியாக
நடந்துகொள்ள வேண்டும். பிறர் வயிறு எரிந்து தூற்றும்படியாக நடந்து
கொள்ளக்கூடாது என்பதை மனம் கொளல் வேண்டும்.
-
-----------------------நாஞ்சில் நாடன்
(கற்றது கைம்மண்- கட்டுரையிலிருந்து)
ஓவியம்-மருது
நன்றி-குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2020 8:44 pm

நல்ல பகிர்வு ....நன்றி....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 18, 2020 3:41 pm

அரசியல்வாதியை வாழ்த்த வயது யில்லை 
ஆகவே திட்டுகிறோம் என்று 
ஒரு நகைச்சுவை படித்ததாக ஞாபகம்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 18, 2020 3:54 pm

இந்த பதிவை பதிவிட்ட உங்களை வாழ்த்த வயதில்லை

வாழ்த்துகிரேன்
நன்றி நன்றி நன்றி நன்றி
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக