புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
30 Posts - 55%
heezulia
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
21 Posts - 38%
Manimegala
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
1 Post - 2%
jairam
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
12 Posts - 4%
prajai
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
9 Posts - 3%
Jenila
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
4 Posts - 1%
jairam
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
3 Posts - 1%
Rutu
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_m10விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 14, 2020 2:15 pm

விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Main-qimg-7d848a2fb2b767260d1a1169e62af675
-
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது , எனது தமிழ் ஆசிரியர் ஒரு கதையை கூறினார். இந்தக் கேள்வியை கண்டதும் அந்தக் கதை எனக்கு நினைவிற்கு வந்தது.

ஒரு மிகப்பெரிய மலையின் அடிவாரத்தில் அழகிய காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் ஒரு பறவை மிகவும் இன்பமாக சுற்றித்திரிந்து உலா வந்துகொண்டிருந்தது.

அப்பொழுது மலைமீது ஆகாயத்தில், மேகங்களுக்கு இடையில் சில தேவர்கள் வேகமாக மிதந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட அந்த அழகிய பறவை ஒரு பெரிய மரத்தின் மேல் உள்ள கிளையில் தன் இறகுகளை மடித்து சற்றே அமர்ந்தது.

ஆகாயத்தில் முதலில் அக்னி தேவன் செல்வதையும் அவர் பின்னால் வாயு தேவன் மற்றும் அனைத்து தேவர்களும் செல்வதைக் கண்டு பறவை ஆச்சரியமடைந்தது.

அனைத்து தேவர்களுக்கும் பின்னால் தேவேந்திரன் செல்வதையும் பறவை கவனித்தது. பறவைக்கு தேவர்கள் அனைவரும் எங்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை.

“சரி, நம் வேலையை பார்ப்போம்” என்று எண்ணி பறவை அருகிலிருந்த மாமரங்களில் இருந்து விழுந்திருந்த மாம்பழங்களை கொத்திக் கொண்டு இருந்தது.

வயிறார சில மாங்கனிகளை உண்ட பின்னர் சற்று இளைப்பாற எண்ணி ஒரு மரக்கிளையில் சாய்ந்தது.

அப்பொழுது அனைத்து தேவர்களும் ஆகாயத்தில் ஏதோ பேசிக்கொண்டு தேவலோகத்திற்கு திரும்பிச் செல்வதை உறங்கும் கண்களோடு பறவை கவனித்தது.

பறவை ஒரு நிமிடம் அதிர்ந்து போனது. அதன் அதிர்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா?

அனைத்து தேவர்களையும் கண்ட பறவை இறுதியில் எமதர்ம ராஜன் கதையையும் பாசக் கயிற்றினையும் சுமந்துகொண்டு நடந்து வரும் காட்சியை கண்டதனால்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 14, 2020 2:17 pm

விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Main-qimg-94772a0bb0d53934f939e5b160e55735
-
பறவை சற்று அச்சம் அடைந்தது. ஒருவர் இறக்கும் தருவாயில் அல்லவா எமதர்மனை காண இயலும். அப்படி எனில் தாம் மரணமடைய போகின்றோமா என்றெல்லாம் பறவை சிந்தித்தது. ஆனால் எமதர்மன் தன்னைக் காணவில்லை என்று பறவை நிதானம் அடைந்தது.

என்ன ஆச்சரியம்! அடுத்த நொடியே எமதர்மன் தன் தலையை திருப்பி தொலைதூரத்தில் உள்ள கானகத்தில் உள்ள மரக்கிளையில் சாய்ந்து கொண்டிருந்த பறவையை பார்வையிட்டான்.

அந்த பார்வையே பறவையை நிலைகுலையச் செய்தது.

எமதர்மர் சில வினாடிகள் பறவையை நோக்கிவிட்டு தேவர்களை பின் தொடர்ந்து சென்றுவிட்டார்.

இந்த அச்சமயமான சம்பவம் பறவைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை எமதர்மன் என்னைத்தேடி இந்த கானகத்திற்கு வந்துவிட்டால் என்செய்வேன்? எங்கே போவேன்? இந்த அச்சத்திலிருந்து எப்படி நான் விடுதலை அடைவேன்?

சிறிது நேரம் சிந்தித்ததில் பறவைக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அது என்னவென்றால் தான் எமனின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் எம்பெருமான் மகாவிஷ்ணுவை துதிக்க வேண்டும் என்று முடிவு செய்தது.

கண்களை இறுக மூடிக்கொண்டு நாராயணனை அகக்கண்ணால் வழிபடத் தொடங்கியது.

கண்ணில் கண்ணீர் மல்க பரந்தாமனை துதி பாடியது பறவை!

பறவையின் இசை கேட்டு இன்பமுற்று நாராயணர் தன் கருட வாகனத்தில் ஏறி பறவையைக் காண கானகத்திற்கு வந்தார்.

“பறவையே! உனது கண்களை திறவாய்!உனது பக்தி மயமான துதியைக் கேட்டு யாம் அகம் மகிழ்ந்தோம்! உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள்” என்று நாராயணர் புன்னகையுடன் வினவினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 14, 2020 2:19 pm

விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா Main-qimg-153ef60023d66a520b71759f92ef3607
-
பறவை மெதுவாக கண்களைத் திறந்து, “ஐயனே! வைகுண்ட வாசா! உனது வைகுண்டத்தில் எனக்கு ஒரு சிறு இடம் அளிப்பாயா? எமதர்மராஜன் என்னை தன் கண்களால் மிரட்டி விட்டுச் சென்றார். நீ அறியாதது ஒன்றுமில்லை. என்னை நீயே காப்பாற்ற வேண்டும்!” என்று நெகிழ்ச்சியுடன் உரைத்தது.

நாராயணரும், “அப்படியே ஆகட்டும்!” என்று பறவைக்கு அருள்மொழி மொழிந்தார்.

பறவை மிக்க மகிழ்ச்சி அடைந்தது. சில நொடிகளிலேயே நாராயணர் பறவையை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

வைகுண்டத்தை அடைந்த பறவை அளப்பரிய இன்பத்தைப் பெற்றது. நாராயணர் வைகுண்டத்தில் ஒரு குளத்திற்கு அருகில் உள்ள சிறிய பாறையை பறவைக்கு காண்பித்து, “பறவையே! நீ இந்த குளத்தை சுற்றியும், பாறைக்கு அருகிலும் எங்கு வேண்டுமெனிலும் சுற்றித்திரிந்து விளையாடிக் கொள்ளலாம்! வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.” என்று கூறி விட்டு தன் பத்தினியான மகாலட்சுமியை காணச் சென்றார்.

பறவை ஆனந்தமடைந்து குளத்திற்கு அருகில் சிறிது நேரம் விளையாடியது. பின்னர் பாறைக்கு பின்னே உள்ள சின்னஞ்சிறு செடிகளில் உருண்டு பிரண்டு இன்புற்றது. ஆனால் சற்று நேரத்திலேயே குளமும் பாறையும் பறவைக்கு சலித்துப் போயின.

பறவை சற்று தூரத்திற்கு பறந்து சென்றது. வைகுண்டத்தின் பரந்துவிரிந்த இயற்கை அழகினை கண்டது. குளத்திற்கு சற்று தூரத்திலுள்ள ஒரு பெரிய மாமரத்தை கண்டது. அதன்மேல் பறவை சென்று அமர்ந்தது. சில மாங்கனிகளை உண்டது. சற்று நேரத்திலேயே எங்கிருந்தோ வந்த ஒரு வேடனது அம்பானது அந்தப் பறவையின் இதயத்தை துளைத்தது. பறவை தன் கண்களில் நீர் மல்க மரத்திலிருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது எமதர்மராஜன் பறவைக்கு அருகில் நடந்து வந்து அமர்ந்துகொண்டார். பறவை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தருணத்தில் எமதர்மரிடம், “பிரபு! தாங்கள் என்னை கண்டுவிட்டீர்கள் என்று அச்சம் அடைந்து எனது வசிப்பிடத்தை நீங்கி வைகுண்டம் அடைந்தேன். ஆனால் தாமோ இங்கு வந்த எனது உயிரை பறித்துவிட்டீர்! விதியை மதியால் வெல்ல நினைத்து இறுதியில் தோல்வியையே சந்தித்தேன். என்னாளிலும் விதியை வெல்ல ஒருவராலும் முடியாது என்று நான் நன்கு உணர்ந்து கொண்டேன்” என்று உரைத்தது.

எமதர்மராஜன் பறவையின் கூற்றைக் கேட்டு மெல்ல சிரித்தார். “அன்பிற்குரிய பறவையே! நான் ஏன் உன்னை மலையிலிருந்து கவனித்தேன் என்று நீ அறிவாயா? நீ உயிர்விடும் தருவாயில் வைகுண்டத்தில் இருக்க வேண்டும் என்பதே உனது விதி! ஆனால் நீ இருந்ததோ இந்த வைகுண்டத்தில் இருந்து தொலை தூரத்திலுள்ள உனது வசிப்பிடத்தில். நீ ஒரு வேளை உனது வசிப்பிடத்தை நீங்கி இங்கே வந்து இருக்காவிடில் நான் உனது உயிரை பறித்து இருக்க இயலாது. என் பணியை நீயே எளிதாக்கிவிட்டாய்! மதியை செயல்படச்செய்வதும் செயல் இழக்கச்செய்வதும் விதியே ஆகும். ஆனால் ஒன்றை அறிந்துகொள்! விதி என்றும் சதி செய்யாது! விதி நமக்கு இறுதியில் மிகப்பெரிய நன்மையைத் தரும். இன்று நீ மட்டும் வைகுண்டம் வரவில்லை எனில் இன்னும் பல ஆயிரம் பிறவிகள் எடுத்திருப்பாய்! நீ வைகுண்டத்தில் உயிர் துறப்பதால் மறுபிறவியின்றி இறைவனடி இணைந்தாய்! எல்லாம் நன்மைக்கே! விதி என்ன நிகழ்வை நிகழ்த்தினாலும் அதன் சூழ்ச்சமத்தை புரிந்துகொள்பவரே மதியில் சிறந்தவராவார்!” என்று எமதர்மர் எடுத்துரைத்தார்.

இந்த அற்புத உண்மையைக் கேட்டு பறவை ஆனந்தக் கண்ணீருடன் தன் இறுதி பிறவியிலிருந்து விடுதலை பெற்றது.

இனி நீங்களே கூறுங்கள்!

விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா அல்லது அந்த நிகழ்வும் விதியின் விளையாட்டா?

-இரமாதேவி நரசிம்மன்
தமிழ் ‘கோரா’

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக