புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
68 Posts - 53%
heezulia
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
15 Posts - 3%
prajai
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
9 Posts - 2%
jairam
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_m10பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 27, 2020 12:29 pm

ஒவ்வொரு தெய்வமும் பல்வேறு வடிவங்கள் கொண்டு
வழிபடப்படுகின்றனர். சிவ பெருமான், முருகன், அம்பாள் எ
ன்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் பல்வேறு வடிவங்கள்
உள்ளன.

அப்படித்தான் லட்சுமி தேவியும் நம்முடைய வாழ்க்கையூடாக
செயல்படும் தன்மைகளையும், குணங்களையும்,
உபயோகப்படுத்தப்படும் செல்வங்களையும் கொண்டு
அஷ்ட லட்சுமிகளாக வழிபடப்படுகிறாள்.

அஷ்ட லட்சுமிகளும் நம்முடைய இக வாழ்க்கையில்
மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள். மானிடராக
பிறந்த ஒவ்வொருவரும் செல்வம், ஞானம், புகழ், வீரம்,
சந்தான பாக்கியம், காரியங்களை விரைவாக சாதிக்கும்
ஆற்றல் என்று பெற்றவர்களே மகிழ்ச்சியோடும்
நிறைவோடும் இருப்பவராவர். பூரண கும்பத்தில்
அஷ்ட லட்சுமிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, இதை அஷ்டலட்சுமி கடம் என்றே அழைக்கிறோம்.

இந்த அஷ்ட லட்சுமி திருவாரூர், வாஞ்சியம், வைகல்,
திருக்கோழம்பம், திருநின்றியூர், மாயூரம், திருமருகல்,
திருப்புகலூர் ஆகிய எட்டு தலங்களில் லிங்கம் ஸ்தாபித்து
வழிபட்டாள்.

‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள்’ என்று
பெரியோர்கள் ஆசி கூறுவார்கள். பதினாறு என்பது
பதினாறு செல்வங்களைக் குறிக்கும்.
இந்த 16 செல்வங்களை அருளுபவளே 16 லட்சுமிகள்.
இதை ஷோடச மகாலட்சுமி என்பார்கள்.

பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்?
சௌந்தர்ய லட்சுமி, சௌபாக்கிய
லட்சுமி, கீர்த்தி லட்சுமி, வீர லட்சுமி,
விஜய லட்சுமி, சந்தான லட்சுமி, மேதா
லட்சுமி, வித்யா லட்சுமி, துஷ்டி லட்சுமி,
புஷ்டி லட்சுமி, ஞான லட்சுமி, சக்தி
லட்சுமி, சாந்தி லட்சுமி, சாம்ராஜ்யலட்சுமி,
ஆரோக்ய லட்சுமி, ஆதிமஹாலட்சுமி ஆகும்.

இந்த பதினாறு லட்சுமிகளையும் முக்கோணத்திற்குள்
எழுதிக் கொண்டு பூஜை செய்யும் முறை மிக விஸ்தாரமாகக்
சக்தி வழிபாட்டில் கூறப்பட்டிருக்கிறது.

நாம் தீபாவளியன்று மகாலட்சுமியை பூஜிப்பதோடு
சில மகாலட்சுமி தலங்களையும் தரிசிப்போம்,
வாருங்கள்.

திருக்கண்ணமங்கை

நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்று. திருவாரூருக்கு அருகேயுள்ளது. மூலவர், பக்தவச்சலப் பெருமாள். இத்தலத்தில் திருமாலுக்கும் திருமகளான மகாலட்சுமிக்கும் நடந்த திருமணத்தைக் காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டேயிருந்தார்கள். மேலும், தேனீக்களின் வடிவில் கூடு கட்டி பெருமாளை தரிசித்தபடி இருந்தனர்.

பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட மகாலட்சுமி முதலில் பெருமாளின் அழகிய திருமுகத்தை கண்டாள். அதை உள்ளத்தில் நிறுத்தி இத்தல
நாயகனையே திருமணம் செய்ய வேண்டுமென்று இங்கு வந்து தவமியற்றினாள். பெருமாளே தன் பாற்கடலை விட்டு இங்கு வந்து மகாலட்சுமியை மணம் புரிந்ததால் பெரும்புறக் கடல் என்கிற திருநாமமும் பெருமாளுக்கு உண்டு. மேலும், இந்த க்ஷேத்ரத்திற்கு லட்சுமி வனம் எனும் திருப்பெயரும் உண்டு. பஞ்ச கிருஷ்ண தலங்களில் இதுவும் ஒன்று.

கூடலூர்

இக்கோயிலை கூடல் அழகிய பெருமாள் கோயில் என்பர். தல விருட்சம், புளிய மரம். தாயாரின் திருநாமம் மகாலட்சுமி. கூடலழகர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். கோயில் முன் மண்டபத்தில் மகாலட்சுமி, கையில் வெண்ணெயுடன் நவநீத கிருஷ்ணர் ஆகியோர் உள்ளனர். கோயிலின் முன் மண்டப மேற்சுவரில் ராசி சக்கரத்தின் மத்தியில் மகாலட்சுமி காட்சி தருகிறாள். கருவறையில் கூடல் அழகிய பெருமாள் நின்ற கோலத்தில் தாயார்களோடு சேவை சாதிக்கிறார். இத்தலம் தேனிக்கு அருகே உள்ளது.

திருவாலி

மகாலட்சுமியோடு பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு லட்சுமி நரசிம்ம க்ஷேத்ரம் என்றே பெயர். திருமங்கையாழ்வாருக்கு அருள்பாலிக்க வேண்டுமென்று லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். இதன் தொடர்பாக லட்சுமி திருவாலியில் தவமியற்றும் பூர்ண
மகரிஷிக்கு மகளாக அவதரித்தாள்.

பெருமாளை லட்சுமி தேவியார் மணம் புரிந்து வரும்போது திருமங்கை மன்னன் வழிப்பறி செய்ய அவரது காதில் பெருமாள் அஷ்டாட்சர மந்திரத்தை கூறி ஆட்கொண்டார். மூலவராக இருக்கும் நரசிம்மர், லட்சுமியாகிய திருவை ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பதால் திரு ஆலிங்கன ஊர் என்பது திருவாலி என்று மருவியது. நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் சீர்காழிக்கு அருகேயுள்ளது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 27, 2020 12:29 pm


பேளூர் கரடிப்பட்டி

கரடிப்பட்டியில் லட்சுமி நாராயணப் பெருமாளின் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அஷ்ட லட்சுமிகளின் பளிங்குச் சிலைகள் கண்களையும் மனதையும் கவர்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டவை இச்சிலைகள். செவ்வக வடிவிலான மகா மண்டபத்தைச் சுற்றிலும் தனித் தனி சந்நதிகளில் இவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு லட்சுமியும் அவரவர்க்குரிய திக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்கள். மூலவர் லட்சுமி நாராயணர், தனது மடியில் மகாலட்சுமியை அமர வைத்திருக்கும் கோலம் கொள்ளை அழகு! எந்த திக்கிலிருந்தும் துயரம் தீண்டிவிடாதபடி அஷ்ட லட்சுமிகள் பக்தர்களைக் காக்கிறார்கள். சேலம் மாவட்டம், வாழப்பாடி யிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருச்சி - ரங்கம்

ரங்கத்திலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஒரு வைணவக் கோயிலில் பிரதோஷ பூஜை என்பது இத்தலத்தின் சிறப்பாகும். கருவறையில் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் மகாலட்சுமியை தனது இடது மடியில் அமர வைத்து ஆலிங்கன நிலையில் அருள்பாலிக்கிறார். வலது கையால் அபய ஹஸ்தம் காட்டி அருள்கிறார்.

வரகூர்

இத்தலத்தில் லட்சுமி நாராயணர், வராக மூர்த்தி, கிருஷ்ணர் என்று மூன்று கோலங்களில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நடைபெறும் உறியடி உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றது. கருவறையில் லட்சுமி நாராய ணர் பத்ம விமானத்தின் கீழே இடது மடியில் மகாலட்சுமியை அமர்த்தியபடி சேவை சாதிக்கிறார். லட்சுமி நாராயணரையே கிருஷ்ணராக பாவித்து வணங்குகின்றனர்.

நாராயண தீர்த்தருக்கு லட்சுமி நாராயணரே நேரடியாக பாமா ருக்மிணி சமேத கிருஷ்ணராக தரிசனம் கொடுத்தார். அவரும் கிருஷ்ண லீலா தரங்கிணியை இயற்றினார். இக்கோயிலில் துளசி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், சாதிக்காய், கிராம்பு உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து இடித்த பொடியை பிரசாதமாகத் தருகிறார்கள். தஞ்சைக்கு அருகேயே இத்தலம் அமைந்துள்ளது.

திண்டிவனம்


இத்தலத்தில் நரசிம்மரின் உக்கிரம் தணிய வேண்டி தாயாராகிய லட்சுமி அவரை வணங்கிய நிலையில் நிற்கிறார். நரசிம்மரையும், மகாலட்சுமியையும் இந்த கோலத்தில் காண்பது என்பது மிகவும் அரிதாகும். மூலவராக லட்சுமி நரசிங்கப் பெருமாள் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். இங்குள்ள அனுமன் சங்கு சக்ரங்களோடு நான்கு திருக்கரங்களோடு அருள்பாலிக்கிறார். ஏனெனில், நான்கு அரக்கர்களை வதம் செய்வதற்காக பெருமாளே அனுமனை அனுப்பினாராம். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே திண்டிவனம் அமைந்துள்ளது.

தாளக்கரை

நின்ற கோலத்தில் லட்சுமி அருள்பாலிக்கும் தலம் இது. மகாலட்சுமியோடு பாற்கடலிலிருந்து வெளிப்பட்டவன்தான் சந்திரன். இத்தலத்தில் சகோதர முறை கொண்ட சந்திரனே சுவாமிக்கு விமானமாக இருப்பதை வேறு எத்தலத்திலும் காண முடியாது. கருவறையில் மூலவராக நரசிம்மர் கையில் சங்கு, சக்ரத்துடன் சாந்த மூர்த்தியாகவும், மகாலட்சுமியும் சேர்ந்தே நின்ற கோலத்தில் தனியே இருப்பதை வேறெங்கும் தரிசிக்க முடியாது. நரசிம்மர் பீடத்தில் சக்ரம் உள்ளது.

கீழையூர்

அமைதி தவழும் அழகிய கிராமம். பஞ்சரங்க ஷேத்ரங் கள் என்ற அரங்கன் ஆலயங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று. இத்தலம் கிழக்கு அரங்கமாகும். அதுவே கீழையூர் என்றாயிற்று. கோயிலை கீழரங்கம் என்கிறார்கள். ரங்கத்தின் அபிமான தலம் இது. கோயிலின் மகாமண்டபத்தைக் கடந்து வரும்போது வலப்புறம் தாயார் சந்நதி உள்ளது. தாயாரின் திருநாமம் ரங்கநாயகி. இக்கோயிலின் வடக்கே உள்ள பத்மதடாகம் எனும் புஷ்கரணியில் எம்பெருமானை மணந்து கொள்ள தாயார் தவம் செய்தார். இவ்வூரிலிருந்து 1 கி.மீ. தூரமுள்ள திருமணங்குடி எனும் ஊரில் பெருமாளை திருமணம் செய்து கொண்டார். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி சாலையில் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில்.

திருநின்றியூர்

திருமாலின் திருமார்பினில் நீங்காதிருக்கும் வரம் வேண்டி அலைமகளாம் லட்சுமிதேவி இங்கு ஈசனைப் பூஜித்து பேறு பெற்றதாக தல புராணம் கூறுகிறது. கருவறைக்குள் கருணையோடு மகாலட்சுமீஸ்வரர் என்கிற திருப்பெயரோடு, ருத்ராட்சப் பந்தலின் கீழ் அருள்பாலிக்கிறார். தேவாதி தேவர்கள் நித்தமும் வந்து இந்த பெருமாளைத் தொழுகிறார்கள். வழக்கமான தேவகோஷ்ட மூர்த்தங்களோடு மகாவிஷ்ணுவும், கஜலட்சுமியும் தனி அழகுடன் காட்சியளிக்கின்றனர். நீலி மலர்ப் பொய்கை லட்சுமி தீர்த்தமாகவும், விளா மரம் தல விருட்சமாகவும் விளங்குகின்றன.

அனுஷ நட்சத்திரத்திற்கு அதிதேவதையே மகாலட்சுமிதான் என்பதால் அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்த தலம் இது. செல்வச் செழிப்பு உண்டாக லட்சுமி ஹோமம் நடத்தப்படுகின்றது. தாமரை இதழில் தேனூற்றி ஹோம அக்னியில் இட்டு யாகங்கள் செய்யப்படுகின்றன. மயிலாடுதுறை வட்டத்தில், சீர்காழி-மயிலாடுதுறை பேருந்து சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

ராம்பாக்கம்

கருவறையில் பிரதான நாயகர், லட்சுமி நாராயணப் பெருமாளாக கம்பீரமாக வீற்றிருக்கிறார். லட்சுமி தேவியை மடியில் அமர்த்தி, வலது கையில் சக்கரம், இடது கையில் திருச்சங்கு இன்னொரு கரத்தில் வரத முத்திரையோடு மற்றொரு திருக்கரத்தால் லட்சுமியை அணைத்தவாறு காட்சி தருகிறார். பெருமாளும், அவர் தம் திருவடியும் தாமரைப்பீடத்திலேயே அமைந்துள்ளன. ராம்பாக்கம், கடலூர்-விழுப்புரம் பாதையில் மடுகரையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. புதுச்சேரியிலிருந்து மடுகரைக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

- கிருஷ்ணா
குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக