புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
11 Posts - 50%
heezulia
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
53 Posts - 60%
heezulia
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 01, 2021 5:33 pm

கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Image-463
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Image-464
-
எதையும் உடன்பாடாக, நேர்மறையாக காண்பதும் எப்போதும் உயர்வாக எண்ணுவதும் தமிழர்க்கு வாய்த்த இரு தனிப்பெரும் பண்புகள். தொல்காப்பியம் தொடங்கி இன்றைய ஹைக்கூ கவிதை வரையிலான நீண்ட தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் இவ்விரு பண்புகளே கோலோச்சி நிற்கக் காணலாம்

.’இன்னாது இம்ம இவ்வுலகம்’ எனப் பாடிய சங்கச் சான்றோர்
அத்துடன் நின்று விடாமல் ‘இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’ என அறிவுறுத்தி
இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல்’ என்கிறார் வள்ளுவர். இருபதாம் நுாற்றாண்டுத் தமிழ்க் கவிதையின் தலைமகனான பாரதியும் புதிய
ஆத்திசூடியில் ‘பெரிதினும் பெரிது கேள்’ எனப் பாடி இருப்பார். ஹைக்கூ கவிதைகளும் உடன்பாட்டுச் சிந்தனைகளை, தன்னம்பிக்கை கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கக் காணலாம்.

முதல் ஹைக்கூ : தமிழுக்கு 1984ல் ‘புள்ளிப் பூக்கள்’ என்னும் முதல் ஹைக்கூ தொகுப்பினைத் தந்தவர் ஓவியக் கவிஞர் அமுதபாரதி.

‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு உரியது. அலகிலா விளையாட்டைப் புரிவது கவிதை’ என்பது கவிதை பற்றிய அவரது விளக்கம். அவரது ஹைக்கூ
கவிதைகளில் தன்னம்பிக்கை சிந்தனைகள் ஆங்காங்கே நம்பிக்கைக் கீற்றாய் வெளிப்பட்டிருக்கக் காண்கிறோம். சிந்தனைக்கு விருந்தாகும்

உதாரணங்கள் சில:
* ‘முதிர்ந்தால் என்ன?
இன்னும் இளமையிருக்கு
கண்களில்!’


* ‘முன்னால் நீண்டது முள்;
சோர்வற்ற எனக்காக
பின்னால் முகிழ்த்தது பூ’


* ‘குட்டிச் சுவர்தான்
அதன் தலையிலும் ஓர்
அற்புத இளஞ்செடி!’


* ‘அடர்ந்த காட்டின் இறுக்கம்
ஒரு குருவியின் வரவால்
கலகலப்புற்றது!’

ஒன்பது முறை எழுந்தவன் : முன்னணிக் கவிஞர்களில் தனியொரு ஹைக்கூ தொகுப்பினை வெளியிட்டிருப்பவர் – ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்காக இடைவிடாமல் குரல் கொடுத்துக்
கொண்டிருப்பவர் – ஈரோடு தமிழன்பன். ‘சூரியப் பிறைகள்’ என்னும் அவரது கவிதைத் தொகுப்பு 1985ல் வெளிவந்தது. அதில் இடம்பெற்றிருக்கும் கவிதை ‘பத்தாவது தடவையாக
விழுந்தவனுக்கு முத்தமிட்டுச் சொன்னது பூமி:

‘ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?’
வாழ்க்கையில் அவ்வப்போது விழுவது கூட முக்கியம் இல்லை; விழும் போது எல்லாம் சோர்ந்து விடாமல், முடங்கிப் போகாமல் நம்பிக்கையோடு எழுவதுதான் முக்கியம். பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு பூமி முத்தமிட்டுச் சொன்னது இதுதான்: ‘கவலைப்படாதே நம்பிக்கை இழக்காதே!ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ?’

வாழ்க்கை இதுதான்! : இன்பமும் துன்பமும் சேர்ந்ததே வாழ்க்கை; குணமும் குற்றமும் கொண்டவனே மனிதன்; நன்மையும் தீமையும் கலந்ததே உலகம்; பிறப்பும் இறப்பும் நிகழ்வதே வாழ்க்கை. எதையும் இயல்பு எனக் கொண்டால் எதிலும் அளவு எனப் பின்பற்றி நடந்தால்,
வாழ்வில் நம்மைத் துன்பம் அணுகாது. நெருக்கடி நம்மைத் தாக்காது. பிரச்னை நம்மைச் சூழாது.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 01, 2021 5:34 pm

கவிஞர் அறிவுமதி ஹைக்கூ ஒன்றில் அன்றாட வாழ்க்கைக் காட்சியின் வாயிலாக இவ்வுண்மையினை அழகுற உணர்த்துகின்றார்: ‘வாழ்க்கை இதுதான்.செத்துக் கொண்டிருக்கும் தாயருகில்சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை’இதனை இன்னமும் சற்று மாற்றி
‘சாகும் தாய் அருகில் சிரிக்கும் குழந்தை’ என்னும் ஹைக்கூவாக வடித்துக் காட்டி இருப்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

துளிர்க்கும் தளிர்கள்! : ‘ஹைக்கூவைச் செய்ய முடியாது. அது எங்காவது தென்படும். அதை அடையாளம் காண ஒரு தனிப்பார்வை வேண்டும். மித்ரா கொடுத்து வைத்தவர். அவருக்கு இந்த ஹைக்கூ பார்வை இயல்பாய் வாய்த்திருக்கிறது’ என்பது அப்துல் ரகுமான், கவிஞர் மித்ராவுக்குச் சூட்டியுள்ள புகழாரம். ‘என்ன நம்பிக்கை தண்டவாளங்களின் நடுவே தளிர்கள்’
என்னும் மித்ராவின் ஹைக்கூ இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை இழக்காத மரம் : வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழக்கலாம்; ஆனால் ஒரு போதும் நம்பிக்கையை மட்டும் மனிதன் இழந்து விடவே கூடாது.
‘வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்’ என்னும் அப்பர் வாக்கினைப் பொன்னே போல் போற்றி, இறுதி மூச்சு வரை ஒருவன் தனது கடமையை ஆற்றி வந்தால் போதும் வாழ்வில் சிறப்பு வந்தே தீரும்.

இதனைத் நயம்பட உணர்த்தும் ஹைக்கூ ஒன்று: ‘எல்லாம் இழந்தும்
நம்பிக்கை இழக்காத மரத்தை அலங்கரித்தது வசந்தம்’ ‘கவிதை கண்ணீரைத் துடைக்கும் கையாக இங்கே மாறுகிறது. தளர்ந்து போகாத தன்னம்பிக்கைக்காக மரத்தின் தலையில் மலர் மகுடம் சூட்டும் வசந்தத்தை வாழ்த்துவதோடு எழுதிய பல்லவனையும் பாராட்டுகிறோம்’ என இத் தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையில் கவிஞர் மு.மேத்தா குறிப்பிட்டார்.

எத்திசை சென்றாலும் : ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!’ என்றும் ‘பெரிதே உலகம் பேணுநர் பலரே!’ என்றும் நம்பிக்கையுடன் முழங்கினர் சங்கச் சான்றோர்கள். அவர்களின் அடிச்சுவட்டில் இன்றைய ஹைக்கூ கவிஞர்களும் பயில்வோர் மனங்களில் நம்பிக்கையை
விதைத்துச் செல்கின்றனர்.

உதாரணமாக புதுச்சேரிக் கவிஞர் செந்தமிழனியனின் ஹைக்கூ ஒன்று:’கொட்டிக் கிடக்கிறது நம்பிக்கை தேடலே வாழ்க்கை பரந்த பூமி’ இந்த பூமி பரந்து விரிந்தது; இதில் ஒருவர் நம்பிக்கையோடு இமைப் பொழுதும் சோராது தேடலை மேற்கொண்டால், கொட்டிக் கிடக்கிறது வாய்ப்பு! வாய்ப்பு தானாக யாரையும் தேடி வராது; வாய்ப்புக்காக ஏக்கத்தோடு காத்திருப்பதிலும் பயன் இல்லை.

‘நம்பிக்கை…
வைக்கோல் போரில்
துளிர்விடும் நாற்று’


என செ.ஆடலரசன்
படைத்திருக்கும் ஹைக்கூ கவிதையும் இங்கே கவனிக்கத்தக்கது. இங்ஙனம் இன்றைய தமிழ் ஹைக்கூ கவிதைகள் பதிவு செய்திருக்கும் நேர்மறை சிந்தனைகள் பொருள்
பொதிந்தவை; நம்பிக்கை தந்து வாழ்வின் மேம்பாட்டுக்கு நலம்
பயப்பவை.

பேராசிரியர் நிர்மலா மோகன்
எழுத்தாளர், மதுரை
நன்றி-தினமலர்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக