புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_c10தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_m10தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_c10 
32 Posts - 51%
heezulia
தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_c10தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_m10தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_c10தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_m10தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_c10தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_m10தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_c10 
74 Posts - 57%
heezulia
தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_c10தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_m10தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_c10தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_m10தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_c10தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_m10தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2021 9:30 am

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 14ஆம் தேதி முதல் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 16 ஆம் தேதி பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தின் மூன்றாவது நாளான நேற்று (ஆகஸ்ட் 18 ஆம் தேதி) எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது.

அப்போது நான் பேசியதை இங்கே பதிவு செய்கிறேன். நான் பேசும்போது குறுக்கிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வனத்துறை அமைச்சர் க. ராமச்சந்திரன் ஆகியோர் பேசியதையும் முடிந்த அளவுக்கு பதிவு செய்திருக்கிறேன்.

வானதி சீனிவாசன்:

பெருமைமிக்க, வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இந்த சட்டப் பேரவையில் எனக்கு வாய்ப்பளித்த, தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு என் முதல் நன்றி. 'மானமும் மண்ணும்' உயிரென நம்பி வாழும் விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு_ கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வழங்கி, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும், எனது தேர்தல் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கோவை மாவட்டத்தில் 10க்கு 10 தொகுதிகளில் வெற்றி பெற காரணமாக இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி . வேலுமணி, கோவை தெற்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ அண்ணன் கே.அர்ஜுனன் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள், நிர்வாகிகள்,தொண்டர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கையும், வரலாறும் இருக்கும். கொள்கைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன். சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு, கோவை குண்டு வெடிப்பு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களுக்கும், 1980களின் இறுதியில் கொல்லப்பட்ட வீர கணேஷ், வீர சிவா மற்றும் மதுரை ராஜகோபால், பேராசிரியர் பரமசிவம், வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ், சசிகுமார் உள்ளிட்டோருக்கு இந்த தருணத்தில் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், மற்றும் சக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சட்டப்பேரவையில் 'கன்னிப் பேச்சு' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை கேட்க முடிகிறது. 'கன்னி' என்ற வார்த்தையை நான் நாகரிகமான வார்த்தையாக கருதவில்லை. 'கன்னியா' என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்த 'கன்னி' என்பது, இளம் வயது பெண்களின் பெண்மையைக் குறிக்கும் சொல். எனவே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல் முதல்முறையாக பேரவையில் ஆற்றும் உரையை தூயத் தமிழில் 'முதல் பேச்சு' அல்லது 'அறிமுக உரை' என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு:

உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

வானதி சீனிவாசன்:

நான் பேசும்போது அமைச்சர்கள் பதிலளிக்க விரும்பினால் இடையிடையே குறுக்கிடாமல் நான் பேசி முடித்ததும் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தொலைக்காட்சி விவாதங்களில் பலமுறை இன்றைய பேரவைத் தலைவரை இடைமறித்து பேசியிருக்கிறேன். அவற்றையெலலாம் மனதில் கொள்ளாமல் பேரவைத்தலைவர் எனக்கு நேரம் வழங்க வேண்டும்.

சட்டப்பேரவைத் பேரவைத் தலைவர் மு.அப்பாவு:

சட்டப்பேரவைக்கு என்று ஒரு மரபு உள்ளது உறுப்பினர்கள் பேசும்போது இடைமறித்து அதற்கு பதிலளிக்க அமைச்சர்களுக்கு உரிமை உள்ளது. உறுப்பினர் வானதி சீனிவாசன் தொலைக்காட்சி விவாதங்களில் எப்போதும் கண்ணியமாக பேசக்கூடியவர். அதுபோல இங்கும் பேசினால் அனுமதி அளிக்க தயார்.

வானதி சீனிவாசன்:

பட்ஜெட் மீதான விவாதத்திற்கு செல்லும் முன்பு என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து இந்தப் பேரவைக்கு அனுப்பியுள்ள கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளை முதலில் முன்வைக்க விரும்புகிறேன்.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி கோவை மாவட்டத்தின் இதயம் போன்ற பகுதியாகும். 'கோவை பெருநகர வளர்ச்சிக் குழுமம்" அமைக்கப்படும் என்ற நிதியமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். நன்றி தெரிவிக்கிறேன். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் இத்தனை மாதங்களில், ஆண்டுகளில் முடிவடையும், 2-ம் கட்டம், 3-வது கட்டம் என்று அறிவித்து விட்டு கோவை மாநகருக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மட்டும், மத்திய அரசுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருப்பது கவலை அளிக்கிறது.

சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு:

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து தான் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியும்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:

முதல் பேச்சு, அறிமுக பேச்சு என்று உறுப்பினர் கூறியதால் நான் குறுக்கிட விரும்பவில்லை. சுருக்கமாக சொல்கிறேன். மத்திய அரசின் சட்டத்தின் அடிப்படையில், மத்திய அரசுடன் ஆலோசித்துதான் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியும். அந்தச் சட்டத்தை மீற முடியாது.

சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு:

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி வேண்டும். அனுமதி வேண்டாம் என்றால் இங்கேயே ஆரம்பிக்க சொல்லிவிடுங்கள்.

வானதி சீனிவாசன்:

மெட்ரோ ரயில் திட்டம் என்பது மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டம்தான். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் எத்தனையோ திட்டங்களை தெளிவாக நிறைவேற்றுவோம் என்று சொல்லிவிட்டு, கோவை மெட்ரோ திட்டத்திற்கு மட்டும் மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்கப்படு்ம் என்று சொல்லப்பட்டிருப்பதுதான் சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்:

மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் உதவியோடு, மத்திய அரசின் நிதியுதவியைப் பெற்றுத்தான் நிறைவேற்ற முடியும். அப்படித்தான் இதுவரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தபோது, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதி குறித்து அழுத்தம் கொடுத்துப் பேசியிருக்கிறேன். அந்த அழுத்தத்தின் அடிப்படையில்தான், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்திற்கு நேற்று (ஆகஸ்ட் 17) அனுமதி கிடைத்திருக்கிறது. பாஜக உறுப்பினர் சொன்னதுபோல, கோவைக்கும் நிச்சயமாக அழுத்தம் கொடுப்போம். கவலைப்பட வேண்டாம். கோவைக்கு மட்டுமல்ல; மதுரைக்கும் அறிவித்திருக்கிறோம். ஆகையால், எங்கெங்கு அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டுமோ, அந்தந்த முறையிலே நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

வானதி சீனிவாசன்:

முதல்வருக்கு நன்றி. கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை வரும் 5 ஆண்டுக்குள் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. கோவையின் மிக முக்கியமான டி.கே. மார்க்கெட் பகுதியில் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் நவீன அடுக்குமாடி வணிக வளாகம், நவீன பன்னடுக்கு வாகன நிறுத்துமிடமும் அமைக்க வேண்டும்.

தங்க நகைத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி எனது தொகுதி. பாரம்பரியமாக தங்க ஆபரணங்கள் செய்யும் தொழிலாளர்கள் அத்தொழிலை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள், cluster உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி அவர்களின் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்.

கோவை காந்திபுரம் மத்திய சிறையையொட்டி அதிகமான நிலப்பரப்பு உள்ளது. மாநகரத்தின் மத்தியப் பகுதியில் உள்ள அந்த இடத்தில் ஒரு பூங்கா அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால் மக்களுக்கு சுத்தமான காற்று கிடைக்கும். மக்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்:

உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, கோவையில் மத்திய சிறையை மாற்றி, அங்கு ஒரு பூங்காவை உருவாக்க வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைத்தார். திமுக ஆட்சியில் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்தியபோதே, அன்றைய முதல்வர் கருணாநிதி ள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஆனால், அதற்குப்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப்பிறகு, 10 ஆண்டு காலம் அவர்கள் அதைப்பற்றி யோசிக்கவில்லை. சிந்திக்கவில்லை. எனவே, உங்களுடைய கோரிக்கை இந்த ஆட்சியில் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

வானதி சீனிவாசன்:

முதல்வருக்கு நன்றி. 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடியிருக்கிறோம். சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்திலிருந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரது வாழ்க்கை வரலாறு ஆவணப்படுத்தப்படும்" என்று அறிவித்திருக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்ட களத்தில் தமிழகத்தின் பங்கு அளவிட முடியாதது. மிக முக்கியமானது. விவசாயத்திற்காக சென்னையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதுபோல, தமிழகத்திலிருந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க வேண்டும்.

நேற்று (ஆகஸ்ட் 17) இந்த அவையில் பேசிய திமுக உறுப்பினர் டாக்டர் எழிலன், சுதந்திரப் போராட்ட வீரர் கடலூர் அஞ்சலையம்மாள் பற்றி குறிப்பிட்டார். அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கடலூருக்கு நேரில் சென்று அஞ்சலையம்மாளுக்கு அஞ்சலி செலுத்தினேன். அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். சுதந்திரப் போராட்ட தியாகி என்ற ஊரறிந்த அந்த அம்மையாரின் குடும்பம், சுதந்திர தியாகிகளுக்கு உதவித் தொகையைக் கூட பெறாமல் வறுமையில் வாடி வருகிறது. அஞ்சலையம்மாள் போன்ற ஆயிரக்கணக்கான தியாகிகளையும் நினைவுகூரத் தக்க வகையில் அந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக திமுக அரசிற்கு வாழ்த்துகள். கடந்த 2011-ல் கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு இருந்தபோதுதான் நாட்டிலேயே முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதற்கான திட்டங்களைத் தீட்டி பிரதமர் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

விவசாயம், நிலங்கள் பெரும்பாலும் மாநில அரசை சார்ந்துள்ளது. இந்நிலையில் தனி வேளாண் பட்ஜெட் என்பது மத்திய பாஜக அரசின், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதால் அதனை முழுமையாக பாஜக சார்பில் வரவேற்கிறோம். இந்த வேளாண் பட்ஜெட்டில் 21 பத்திகளில் மத்திய அரசின் திட்டம் என்று வருகிறது. வேளாண்மை தொடர்பான மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அதுபற்றி பட்ஜெட்டில் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. வாழை நார், பழங்கள் நார் போன்ற கழிவுப் பொருள்களில் இருந்து ஆடைகள் தயாரிக்கும் தொழில் இப்போது வளர்ந்து வருகிறது. இதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இருந்திருந்தால் நன்றாக இரு்திருக்கும்.

மலைப்பகுதிகளில் விவசாயிகளுக்கும் யானை போன்ற வன விலங்குகள் - மனித மோதல்கள் சாதாரணமாக உள்ளது. யானை, பன்றி, மயில் போன்ற விலங்குகளிடம் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க திட்டங்களை வேளாண் பட்ஜெட்டில் அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன்:

யானைகள், எருமைகள், பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:

வன விலங்குகள் - மனித மோதல் கடந்த 7 ஆண்டுகளாக அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. விலங்குகள் வசிக்கும் இடத்திற்கு மனிதர்கள் சென்று விவசாயம் செய்வது, கட்டிடம் கட்டுவது என்று குறுக்கிடுவதால்தால் இது நடக்கிறது. இதற்கு கோவையில் பெரிய உதாரணம் உள்ளது. அது யார் என்பதை சொன்னால் அரசியலாகி விடும். நில மேலாண்மை திட்டத்தின்படி நில ஆக்கரமிப்பை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் கோவை, தேனி மாவட்டங்களில் மனிதர்கள்- விலங்குகள் மோதல் குறையும்.

வானதி சீனிவாசன்:

அரசின் சேவைகள் அனைத்தும் மின்னணு மயமாக்கப்படும், அரசின் கொள்முதலுக்காக தனி இணையதளம் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் சார்பில் https://www.india.gov.in/spotlight/government-e-marketplace-procurement-made-smart#tab=tab-1 என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து யாருடைய சிபாரிசும் இல்லாமல், இடைத்தரகர்கள் இல்லாமல் அரசின் ஒப்பந்தங்களைப் பெற முடியும். இந்த இணையதளம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதுபோல தமிழக அரசும் கொள்முதலுக்கான இணையதளம் தொடங்கும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.

சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை பாராட்டுகிறோம். கப்பல் படையை நிறுவி பல நாடுகளில் தனது அரசை நிறுவிய மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாள் அரசு விழாவாகக் கொண்டாடும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி.

அதிகமான தொல்லியல் இடங்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. அதனால்தான் தமிழகத்தில் தொல்லியல் துறையை இரு மண்டலங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. தொல்லியல் இடங்கள் அடையாளம் காணவும், அங்கு ஆய்வு செய்து பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

14-வது நிதிக் குழுவில் மத்திய வரி தொகுதிப்பிலிருந்து மாநிலங்கள் 32 சதவீதம் நிதி பெறலாம் என்பதை 42 சதவீதம் என்று மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு செல்லும் செஸ் வரி மாநிலங்களுக்கு சரியாக பகிர்ந்தளிக்கப்படுவதில்லை என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. சுமார் 10 உறுப்பினர்கள் மத்திய அரசை குறைகூறி பேசியுள்ளனர். அவர்களுக்கு பதிலளிக்க எனக்கு நேரம் வழங்க வேண்டும். காம்பன்சேஷன் செஸ், கல்வி செஸ் வரிகளில் 100 சதவீதத்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து கொடுக்கிறது. மற்ற துறைகளில் வசூலாகும் செஸ் வரிகளில் 52 சதவீதம் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:

ஓய்.வி.ரெட்டி தலைமையில் 14-வது நிதிக் குழு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்டது. அக்குழு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிதியை 32லிருந்து 42 சதவீதமாக உயர்த்தியது. 2014 -ல் மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதி குறைந்துவிட்டது அல்லது அதிகரிக்கவில்லை. ரூ. 1 லட்சத்து 14 ஆயிரம் கோடி செஸ் வரி, எதற்காக வசூலிக்கப்பட்டதோ, அதற்காக செலவழிக்கப்படாமல் மத்திய அரசின் பொது கணக்கிற்கு மாற்றப்பட்டதாக 2019 இந்திய கணக்குத் தணிக்கைத் துறை தலைவரின் (சிஏஜி) ஆய்றிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. மாநில அரசின் வரிப்பணத்தை செலவழிக்கும் உரிமையை மாநில அரசுகள் இழந்து விட்டன. மத்திய அரசு சொல்கிறபடி செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்:

மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்தளிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. இதுவரை மத்திய அரசு, மத்திய அரசு என்று அழைத்துவிட்டு இப்போது 'ஒன்றிய அரசு' அழைப்பதை பார்க்கிறோம். பேரவைத் தலைவர் அவர்களே, நீங்கள் ஆசிரியர். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் பெண் கவிஞர், "ரோஜா மலரை எந்த பெயரிட்டு அழைத்தாலும் அதன் வாசனையை நம்மால் மாற்ற முடியாது" என்று பொருளில் கவிதை எழுதியிருப்பார். அதுபோல, மத்திய அரசை நீங்கள் எந்த பெயரிட்டு அழைத்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசுக்கு உள்ள உரிமைகளை அதிகரிக்கவும் முடியாது. குறைக்கவும் முடியாது.





தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2021 9:30 am

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:

ரோஜா மலரை யாரும் மல்லிகை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ரோஜா மலர் ரோஜா மலர்தான். மத்திய அரசின் வரி அதிகாரத்தையும், செயல்பாட்டு அதிகாரத்தையும் எதிர்த்து முதலில் பேசியது நாங்கள் இல்லை. இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, மத்திய அரசின் வரி அதிகாரங்கள் பற்றி எங்களுக்கு முன்னுதாரணமாக பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார். ஜிஎஸ்டி மாநில உரிமைகளைப் பறிக்கும் என்று மோடி கூறியிருக்கிறார்.

வானதி சீனிவாசன்:

கூட்டாட்சி தத்துவத்திற்கு பலமான குரலைக் கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி, சமூக நீதிக்கு மிகப்பெரிய உதாரணமாக இருந்து கொண்டிருக்கிறார். சுதந்திர இந்தியாவிலேயே அதிகமான பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, பெண்களுக்கு தனது அமைச்சரவையில் இடம் கொடுத்து சமூக நீதிக்கு மிகப்பெரிய உதாரணமாக நமது பிரதமர் விளங்கிக் கொண்டிருக்கிறார். மத்திய அரசை விமர்சித்த இங்கே பலர் பேசினார்கள். அவர்களுக்கு பதிலளிக்க எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் மீதான சாலை மற்றும் போக்குவரத்து செஸ் வரி மூலம் கிடைக்கும் தொகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதன் மிகப் பெரிய பயனாளியாக தமிழகம் இருக்கிறது. 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 1 லட்சத்து 3 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இவையில்லாமல் ஆயுஷ்மான் பாரத் திட்டம், அனைவருக்கும் கழிப்பிடங்கள் கட்டும் திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், ரயில்வே, துறைமுகங்கள் என்று தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதி பற்றிய விவரங்களை நான் கொடுக்கிறேன்.
அதனை எனது உரையின் ஒரு பகுதியாக பேரவைத் தலைவர் பதிவு செய்து கொள்ள வேணடு்கிறேன்.



தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 19, 2021 4:39 pm

அருமையான தொகுப்பு 
அணிவகுத்து வந்த கேள்விகள் பதில்கள் 

ரசித்தேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 19, 2021 8:06 pm

அருமை  அருமை  இப்படித்தான் மக்கள் உறுப்பினர்கள் செயல்படவேண்டும் பாராட்டுகின்றேன்.>  ஓர்  சினியர்சிட்டிசன் /மூத்தகுடிமகன் என்றமுறையில்............. தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன் 3838410834

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக