புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_m10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10 
69 Posts - 58%
heezulia
‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_m10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_m10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_m10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_m10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10 
111 Posts - 59%
heezulia
‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_m10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_m10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_m10‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது!


   
   
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Tue Oct 05, 2021 7:24 pm

‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! (2021)

[justify]முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது- பெறும் படைப்பாளர்களுக்கு மனமுவந்த வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
2021ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, ‘பபாசி’ (Bapasi) சார்பில், வெளியிடப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு ஆறு பேருக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொற்கிழி மற்றும் பாராட்டுப் பத்திரம் தொடர்ந்து ‘பபாசி’ சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

2021-ம் ஆண்டுக்கான விருதாளர்கள் பட்டியலைப் பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் அறிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டு விருது பெறும் விருதாளர்கள்:

1. அபி – கவிதை

2. இராசேந்திர சோழன் – புனைவிலக்கியம்

3. எஸ்.ராமகிருஷ்ணன் – உரைநடை

4. வெளி ரங்கராஜன் – நாடகம்

5. ப.மருதநாயகம் – ஆங்கிலம்

6. நதித் சாகியா – பிற இந்திய மொழி (காஷ்மீரி)



படைப்பாளர்கள் ஆறு பேர்களுக்கும் நமது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்வோம்.

அவர்கள் குறித்த சிறு அறிமுகங்கள்:





கவிஞர் அபி

அபியின் இயற்பெயர் ஹபிபுல்லா. மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். லா.ச.ரா படைப்புகளில் முனைவர் பட்டம் பெற்றவர். ரூமி, கலீல் கிப்ரானின் கவிதைகளிலிருந்து தன் அழகியலைப் பெற்றுக்கொண்டார். பின்னர் மேலும் செறிவானதும் பூடகமானதுமான கவிதைகளுக்குள் சென்றார்
அபி எழுதிய

1. மெளனத்தின் நாவுகள். (1974)

2. அந்தர நடை (1978)

3. என்ற ஒன்று (1987)

4 அபி கவிதைகள் (2013)

என்னும் நான்கு கவிதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன என ஜெயமோகன் அவர்களும்,

”பொருள் பொதிந்த படிம அலங்காரத்திலும், உள்ளுறைந்திருக்கும் தொனி அழகிலும் மிகவும் விஷேசமான கவி. வார்த்தைகள் இணையும் அழகில் ஒளிரும் கவிதைகள் இவருடையவை” என மோகன் செல்லச்சாமியும் இப்படைப்பாளர் குறித்துக் கூறுகின்றனர்.

இராசேந்திர சோழன்

எழுபதுகளில் எழுதத் தொடங்கிய தமிழ்ப் படைப்பாளிகளில் முக்கியமானவர் இராசேந்திரசோழன் அவர்கள். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், இலக்கியம், நாடகம், தத்துவம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். அஸ்வகோஷ் என்கிற பெயரிலும் நிறைய எழுதி இருக்கிறார் ‘அறிவை சனநாயகப் படுத்துவதொன்றே அதிகாரத்தை முறியடிக்கும்’ என்கிற கோட்பாட்டை புனைவுசாரா தன் எழுத்தின் இலக்காகக் கொண்டுள்ள இவர், இந்த நோக்கில் மார்க்சியத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் எழுதிய “கடவுள் என்பது என்ன?” “சொர்க்கம் எங்கே இருக்கிறது?” என்கிற நூல்களும், பின்நவீனத்துவக் கோட்பாட்டை விமர்சித்து எழுதிய “பின் நவீனத்துவம் - பித்தும் தெளிவும்” என்கிற நூலும் குறிப்பிடத்தக்கவை.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பதில் முன்னோடியாய்த் திகழ்ந்தவர்களில் ஒருவர். இவரது ‘மொழிக்கொள்கை’ என்ற நூல் தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளது எனப் பிரேமாவதி நீலமேகம் இப்படைப்பாளர் குறித்துக் கூறுகின்றார்.

எஸ்.ராமகிருஷ்ணன்

நாடறிந்த தமிழ்எழுத்தாளர்.

கட்டுரைக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்படுகிறது அவரின் கட்டுரைகள் எத்தன்மை வாய்ந்தது என்பதை அவரே இவ்வாறு கூறுகிறார்” என்னை சுற்றிய உலகம் ஆயிரக்கணக்கான மனிதர்களை அவர்களின் அடையாளத்தை அழித்து கழிப்பறை புழுக்கள் போல அலைந்து திரிய விட்டிருக்கிறது.

பிழைப்பிற்காக வந்தேறியவர்கள் தங்கள் அவமானங்களையும், அவமதிப்புகளையும் தாங்கிக் கொண்டு கவிழ்ந்ந்த தலையோடு ஏதாவது செய்து வாழ்ந்துவிட முடியும் என்று முட்டிமோதுகிறார்கள். நம்மைச் சுற்றிய மனிதர்களில் நம் கவனம் செல்லாத சிலரின் மீதான என் அக்கறைகளே இந்தக் கட்டுரைகள்.

வெளி ரங்கராஜன்

நவீன இலக்கியம் சார்ந்து கணையாழி, கசடதபற, பிரக்ஞை, இன்று, படிகள், காலச்சுவடு போன்ற இலக்கியச் சிறுபத்திரிகைகளில் இலக்கியவிமர்சனம், கதை, கவிதை என பங்களிப்புகள் செய்தவர்.

தமிழில் நாடக இலக்கியங்களை உருவாக்கவும், நாடகச் சிந்தனைகளை முன்னெடுக்கவும் "வெளி" என்ற நாடக இதழை 1990இல் தொடங்கி 10 ஆண்டுகள் நடத்தியவர். புதிய நாடகப் பிரதிகள், நாடகக் கோட்பாடுகள் குறித்த விவாதங்கள், உலக நாடக இயக்கம் என தமிழில் செறிவான நாடகச் செயல்பாட்டிற்கான களமாகவும் ஆவணமாகவும் வெளி இதழ் பயன்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட புதிய நாடகங்களும், மொழிபெயர்ப்பு நாடகங்களும் வெளி இதழ்களில் பிரசுரமாயின.

1994இல் இலங்கையில் நடந்த நாடகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு 'மரபும் மாற்றங்களும்' என்ற தலைப்பில் கட்டுரை வழங்கியவர். புதிய நாடகங்களை இயக்கியும், இசை நடனம் போன்ற நிகழ்கலைகளில் சமகால நுண்ணுணர்வுக்கான பொறிகளை அடையாளப்படுத்தியும் கலை இலக்கியத் தளத்தில் தொடர்ந்து இயங்கிவருபவர் என இவரின் நாடகக்கலைப்பணியைத் தமிழ் விக்கிப்பீடியா கூறுகிறது.

பேராசிரியர் ப. மருதநாயகம்

”பேராசிரியர், கல்வியாளர், நூலாசிரியர், ஆய்வாளர் என அறியப்படுகிறார். ஆங்கில இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் புலமை பெற்று விளங்குபவர். 20 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலப் பேராசிரியராக கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றியுள்ளார்.



பேராசிரியர் ப. மருதநாயகம் ஆங்கிலம், தமிழ், அமெரிக்க இலக்கியம் ஆகிய மூன்றிலும் முறையே சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அமெரிக்க நாட்டு ஹவாயி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்களும் தொன்மத் திறனாய்வு பற்றிய ஆய்வேட்டிற்காகத் தமிழில் முனைவர் பட்டமும், "தமிழ்ச் செவ்விலக்கியங்கள்: ஒப்பியல் பார்வை" என்னும் ஆங்கிலக் கட்டுரைத் தொகுதிக்காகப் புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தின் முதல் டி. லிட். பட்டமும் பெற்றவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஆங்கிலப் பேராசிரியராகக் கடமை ஆற்றியுள்ளார். புதுவைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்றபின் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தார். கடந்த பத்து ஆண்டுகளாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வுத்தகைஞராகச் செயல்படுகிறார் என இவர் குறித்துத் தமிழ் விக்கிப்பீடியா கூறுகிறது



நதித் சாகியா

இந்திய மொழிகளில் காஷ்மீரி மொழியில் சிறந்த படைப்பாளராக விளங்குகிறார். இவரின் படைப்புகள் பல மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
[/justify]

T.N.Balasubramanian and bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 05, 2021 8:17 pm

நன்றி நல்ல தகவல் 

விருது பெற்றோர்க்கு வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அவர்களை பற்றிய குறிப்புகள்  ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! 3838410834 ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! 3838410834



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக