புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
21 Posts - 66%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
63 Posts - 64%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 26, 2022 8:54 pm

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’

’திரிபுரம்’ என்றதும் ஏதோ புராணக் கதை போல என நினைக்க வேண்டாம்!
நம் வாழ்வுக் கதைதான்!

1 . ஆந்திராவிலிருந்து ‘பஞ்சம் பிழைக்க’இரு பெண்கள், தமிழகம் வருகின்றனர்; அவர்களின் சீரழிவுதான் கதை!

2. இவ்விருவரோடு , பஞ்சத்திற்காக வேறு இடம் பெயரும் மக்கள்பலரும் சாலையில் எப்படிப்போனார்களாம்? தாம் போகும் வட்டாரமும் பஞ்சமான இடமா இல்லயையா என்பதெல்லாம் தெரியாது, சாலையில் எதிரெதிர்த் திசையில் போனார்களாம்! இக் காட்சியைப் படமாக எடுக்கும் இயக்குநருக்கு நல்ல கைக்குறிப்பு இது! :
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ ECku8FR

3 . தாய் நரசம்மாவும் , வயதுக்கு வந்த மகள் வெங்கிட்டம்மாளும்தான் பிழைப்புத்தேடிப் பயணம் வருகிறவர்கள். சாப்பிட ஒன்றும் இல்லை! பட்டினிதான்! ’பட்டினி’யால் ஏற்படும் வலியையையும் அவமானத்தையும் துல்லியமாக வேறுபடுத்துகிறார் பாருங்கள் கதாசிரியர்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ TWWvlMJ

4 . அந்த இரு பெண்களும் முதலிற் சென்னையில் வேலை கிடைக்குமா என்று சுற்றியுள்ளனர்! ‘கக்கூஸ்’ கழுவும் தோட்டி வேலைதான் கிட்டியது! ஆனால், இதுவரை இப்படிப்பட்ட வேலையெல்லாம் செய்தது கிடையாதே? எப்படிச் செய்வது? இந்தத் தயக்கம் காரணமாக , வேற்றூர் கிளம்புகின்றனர்;டிக்கெட் இல்லாததால், விருதுநகரில் இறக்கி விடப்பட்டுள்ளனர்!
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ GBWRak0

பிச்சை எடுத்தே காலத்தை ஓட்டிவிடலாம் என்று அப் பெண்கள் முடிவு செய்ய இயலாது பயணத்தைத் தொடர்ந்தனராம்!
கு.அழகிரிசாமி, கதையின் ஒவ்வொரு அசைவிலும் மக்களின் மன நுட்பங்களைக் காட்டிச் செல்கிறார் பாருங்கள்! ‘சிறந்த சமுதாய ஞானி கு.அழகிரிசாமி’ என்று நம்மைக் கதறவைக்கும் இதுபோன்ற பல இடங்கள் இவரின் எல்லாச் சிறுகதைகளிலுமே உள்ளன!
5 . பயணத்தைத் தெற்கு நோக்கித் தொடர்ந்தனரே ஒழியக், கோவில்பட்டிப் ‘பிராந்தியத்தில்’ உள்ள பஞ்ச நிலை பற்றி அவர்களுக்குத் தெரியவில்ல! எழுதுகிறார் ஆசிரியர்:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ UUxVVTh

நாம், நமது வட்டார நிலை தெரியாமலேதான் வாழ்கிறோம்! வாய் கிழிய வெளிநாட்டு அரசியல் எல்லாம் பேசுவோம்! ஆனால் , நம் வட்டாரத்து நிலை நமக்குத் தெரியாது!இதை ஆசிரியர் கூறும்போதுதான் நம் கண் திறக்கிறது! இதற்குக் காரணம் என்ன தெரியுமா? நம் கண் முன்னே தெரியும் ‘உள்நோக்க ஊடகங்கள்’ சொல்வதுதான் நமக்கு வேதவாக்கு! நாம் யாரைத் தலைவர்கள் என்று நினைக்கிறோமோ அவர்களிடம் நம்மை அடகுவைத்து, ‘அவருக்குத் தெரியாததா?’ என விடுவதும்தான்!

6 .சாத்தூரில் , ஒரு வெள்ளிரிக்காய்த் துண்டு கீழே கிடந்தது!அதை எடுத்துச் சாப்பிடலாம் என்றால், அவமானமாக இருந்தது அப் பெண்களுக்கு! தாய்க்குச் சாப்பிட எண்ணம் வந்தது! கையிலும் எடுத்தாள்! ஆனால் மகள் அதை வெறுக்கிறாள்! அந்த நிலையில் அழகிரிசாமி எழுதுகிறார் பாருங்கள்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ P4ENSWe

தனி மனிதன், ‘தனி மனிதன்’ அல்ல! அவன் சமுதாயத்தின் கருத்தோட்டத்தைப் புறக்கணித்துப் போக முடியாது என்பதை அழகாக விளக்குகிறார் அல்லவா?

7 . பட்டினி கிடந்த வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்னாகும்?எனக்குத் தெரியாது! நம்மில் பலருக்குத் தெரியாது!ஆசிரியர் கூறுவதைக் கேட்போம்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ IzamY2X

8 . கன்னிப் பெண்ணாகிய வெங்கிட்டம்மா பசியால் துடிக்கிறாள்! பார்த்த வாலிபர்கள் உதவ விழைகின்றனர்! இந்த நிலையை ஓர் ஓவியமாக்க முடியுமா? என்னால் முடியாது! அழகிரிசாமி தீட்டுகிறார்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Nz1ES9M

காட்சியை விவரிப்பது வேறு! அது என்னாலும் முடியும்! ஆனால் அங்குள்ள மாந்தர்களின் உளவியலை , ஆசிரியர் தீட்டியது போன்று,என்னால் வரைய முடியாது!

9 .நரசம்மாவுக்கு இப்போது மான அவமானம் எல்லாம் பெரிதாகப் படவில்லை! எல்லாம் பார்த்துப் பழகியாகிவிட்டது! ஆனால், இந்த நிலையைவிட்டு நீங்கிப் வேறு வாழ்க்கை முறைக்கு அவளால் போக முடியவில்லை!இதனை எப்படிக் காட்டுகிறார் ஆசிரியர்?:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ C993Gpw

சமுதாயத்துக்கும் தனிமனிதர்களுக்கும் இடையே நடைபெறும் நுட்பமான போராட்டம்!

10 . கடைசியில், வெங்கிட்டம்மாள் என்ற ஆந்திரக் கன்னி, தனது கற்பை இழக்கவேண்டி வந்தது! ‘கக்கூஸ்’ கழுவுவதே அவமானம் என முன்பு நினைத்த அவள், இப்போ கற்பை இழக்கவேண்டிவந்தது! பட்டினியும், சமுதாயமும் அவளை அங்கேதான் தள்ளிவிட்டது!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ GqyBSq5

11 . பத்து ரூபாய்க்காகக் கற்பை இழந்தபின், புகைவண்டிநிலையம் வந்தாள் வெங்கிட்டாம்மாள், தாய் நரசம்மாவுடன்.
அப்போது, கற்பிழந்து பெற்ற பணத்தை, ஒரு கையிலிருந்து மறுகைக்கு மாற்றினாள்; மீண்டும் அந்த இடக் கையிலிருந்து அதை வலக் கைக்கு மாற்றினாள்! மாற்றும்போது பலமாகச் சிரித்தாள்! வாய்விட்டுச் சிரித்தாள் ! பலமுறை விட்டுவிட்டுச் சிரித்தாள்!
அந்தச் சிரிப்புக்குப் பொருள் என்ன?
ஆசிரியர் இப்படி முடிக்கிறார்!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Y5WeN0n

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ CHbXQ6o

‘திரிபுரம்’ என்ற தலைப்பின் பொருளும் நமக்கு விளங்குகிறது!
சத்தமில்லாமல், நம் கண்ணில் துளிர்க்கும் நீரைத் துடைத்துக் கொள்கிறோம்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக