புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்த மருத்துவம் Poll_c10காந்த மருத்துவம் Poll_m10காந்த மருத்துவம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
காந்த மருத்துவம் Poll_c10காந்த மருத்துவம் Poll_m10காந்த மருத்துவம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
காந்த மருத்துவம் Poll_c10காந்த மருத்துவம் Poll_m10காந்த மருத்துவம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
காந்த மருத்துவம் Poll_c10காந்த மருத்துவம் Poll_m10காந்த மருத்துவம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காந்த மருத்துவம் Poll_c10காந்த மருத்துவம் Poll_m10காந்த மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காந்த மருத்துவம் Poll_c10காந்த மருத்துவம் Poll_m10காந்த மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காந்த மருத்துவம் Poll_c10காந்த மருத்துவம் Poll_m10காந்த மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்த மருத்துவம் Poll_c10காந்த மருத்துவம் Poll_m10காந்த மருத்துவம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
காந்த மருத்துவம் Poll_c10காந்த மருத்துவம் Poll_m10காந்த மருத்துவம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
காந்த மருத்துவம் Poll_c10காந்த மருத்துவம் Poll_m10காந்த மருத்துவம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்த மருத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 11, 2009 8:32 am

பொதுவான உடல் நலத்திற்கான பின் வரும் சிகிச்சைகள்யாவும் மரப்பலகையின் மீதோ பாயின் மீதோ அமர்ந்தபடி எடுக்கப்பட வேண்டியவை.

சிகிச்சை முறை 1

வலது உள்ளங்கை வடதுருவத்தின் (நீலம்) மீதும் இடது உள்ளங்கை தென் துருவத்தின் (சிவப்பு) மீதும் வைக்கப்படவேண்டும். நேரம் - 10 நிமிடம். வடதுருவக் காந்த வட்டுகளில் N என்ற எழுத்தும், தென் துருவக்காந்த வட்டங்களில் S என்ற எழுத்தும் இருப்பதைப்பார்த்து எப்போதும் நினைவில் கொள்ளவும்.

சிகிச்சை முறை 2

வலது காலை வடதுருவத்தின் மீது (N) வைக்கவும். இடது உள்ளங்கையைத் தென் துருவத்தின் மீது (S) வைக்கவும். நேரம் 5 நிமிடம்.

சிகிச்சை முறை 3

இடது காலைத் தென் துருவத்தின் மீது (S) வைக்கவும். வலது உள்ளங்கையை வடதுருவத்தின் மீது (N) வைக்கவும். நேரம் 5 நிமிடம்.
சிகிச்சை முறை 4

வடதுருவத்தை (N) வலது காலின் கீழும் தென்துருவத்தை (S) இடது காலின் கீழும் வைக்கவும். சிகிச்சை நேரம் 10 நிமிடம். பொதுச் சிகிச்சை மேற்கொண்ட பின்னரே நோய்களுக்கான குறிப்பிட்ட தனிச் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இ.என்.டி (E.N.T. Magnets) காந்தங்கள் காது, மூக்கு, தொண்டை மற்றும் கண்களில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த உதவும்.

1. இருமல், மூக்கடைப்பு, ஆஸ்த்துமா, சைனஸ் போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தும் முறை:

இ. என். டி. காந்தத்தில் மூக்கின் வலதுபுறம் வடதுருவக் காந்தத்தையும் மூக்கின் இடதுபுறம் தென் துருவக்காந்தத்தையும் வைத்திருக்கவும். நேரம் 10 நிமிடம்.

2. கண் நோய்களுக்கான சிகிச்சை

கண்களை மூடியபடி வலது கண்மீது வடதுருவமும் இடது கண்ணின் மீது தென் துருவமும் படுமாறு காந்தங்களை வைக்கவும். நேரம் 10 நிமிடம். நோயின் கடுமைக்கேற்ப ஒரு நாளிலேயே பல முறை எடுக்கலாம்.

3. காது நோய்களுக்கான சிகிச்சை

இ.என்.டி. காந்தங்களை வலது காதின் பின்புறம் வடதுருவம் படுமாறும் இடது காதின் பின்புறம் தென் துருவம் படுமாறும் பிடித்திருக்கவும். நேரம் 10 நிமிடம். நோயின் தீவிரத்திற்கு ஏற்ப ஒரு நாளில் பல முறை சிகிச்சை எடுக்கலாம். சைனஸ் தொல்லைக்கும் பயன்படும்.

4. தொண்டை சதை அழற்சி, சளி, இருமல் போன்ற நோய்களுக்கான சிகிச்சை

தொண்டையின் இருபுறமும் வலப்பக்கம் வடதுருவமும், இடப்பக்கம் தென் துருவமும் படுமாறு வைத்திருக்கவும். நேரம் 10 நிமிடம். ஒரு நாளில் நோய்த் தன்மையைப் பொறுத்து பல முறை எடுக்கலாம்.

5. தலைவலி, சைனஸ் போன்றவற்றிற்கான சிகிச்சை

இ.என்.டி. காந்தத்தின் வட துருவம் நெற்றியின் வலப்பக்கத்திலும், தென் துருவம் நெற்றியின் இடப்பக்கத்திலும் படுமாறு பிடித்திருக்கவும். (நேரம்-10 நிமிடம்) தேவைக்குத் தக்க படி பல முறை எடுக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 11, 2009 8:32 am

காந்த நீர் தயாரிக்கும் முறை:

மத்திய தரக் காந்தங்களை ஒரு மரப் பலகையின் மீது வைக்கவும். கொதிக்க வைத்து ஆறிய குடி நீரை இரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடிப் பாட்டில்களில் நிரப்பவும். ஒரு பாட்டில் நீரை ஒரு காந்தத்தின் வடதுருவத்தின் மீதும் (N) மற்றொரு பாட்டில் நீரைத் தென் துருவக் காந்தத்தின் மீதும் (S) வைத்து 8 மணி நேரம் கழித்து எடுக்கவும்;. இரு பாட்டில் நீரையும் பின்னர் ஒரு பாத்திரத்தில் ஊற்றிக்கலக்கவும். இதை மீண்டும் தனித்தனிப் பாட்டில்களில் ஊற்றி மரப்பலகை மீதே வைக்க வேண்டும். இந் நீரே இரு துருவக் காந்த நீர் எனப்படும். பெரியவர்கள் 2 அவுன்ஸ் வீதமும் சிறியவர்கள் 1 அவுன்ஸ் வீதமும் குடிக்க வேண்டும்.

இரண்டாவது முறை:

கொதித்து ஆறிய குடிநீரை ஒரு பாட்டிலில் நிரப்பவும். அதை மத்திய தர காந்தத்தின் தென்துருவத்தின் மீது (S) வைக்கவும். இன்னொரு மத்தியத் தரக்காந்தத்தின் வடதுருவம் (N) அதன் மேல் பகுதியில் படுமாறு வைக்கவும. 8 மணி நேரம் கழித்துக் காந்தங்களை விட்டு நீரை எடுத்து ஒரு மரப்பலகை மீது வைக்கவும். இதுவும் இரு துருவக் காந்த நீர் தயாரிக்கும் முறையாகும். சாப்பிட்டு அரைமணி இடைவெளிக்குப் பின் காந்த நீர் குடிக்க வேண்டும்.

காந்த நீர்ப் பயன்கள்:

உள்ளுக்கு அருந்துவது என்பது இந்தச் சிகிச்சை முறையில் காந்த நீரை மட்டுமே. நோயின் தன்மைக்கேற்பத் தென்துருவ, வடதுருவக் காந்த மேற்றப்பட்டுக் குறிப்பிட்ட நாள்கள் இந்நீரை அருந்தி வரவேண்டும். இரண்டும் கலந்த நீரையும் நோய்க்குத் தக்கபடி குடிக்க வேண்டும். தொடர்ந்து காந்த நீர் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள்-கொலஸ்ட்ரால் போன்றவை நீங்கி இரத்த நாளங்கள் சுத்தம் ஆகி இரத்த ஓட்டம் சீராகி உடலில் ஆரோக்கியம் ஏற்படும். பெண்களுக்கான மாதவிடாய்த் தொல்லைகள் நீங்கும். இது கிட்னியில் சிறுநீர்க்கல் இருப்பதையும் கரைக்கும். சிறுநீர்க்கல் ஏற்படாமல் தவிர்க்கும். இன்ன நோய் என இனம் கண்டு கொள்ள முடியாத நிலையில் துன்பப்படும் நோயாளிகளும் காந்த நீரை அருந்திக் குணமடைந்திருக்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 11, 2009 8:34 am

கால் மூட்டு வலிகள், மூட்டு வீக்கங்கள் முதலானவற்றிற்குச் சிகிச்சைகள்:

பாதிக்கப்பட்டுள்ள காலின் வலப்பக்கம் வட துருவமும் அதே காலின் இடப்பக்கம் தென்துருவமும் வைக்க வேண்டும். நேரம் 15 நிமிடம்.

முதுகுவலி, இடுப்புவலி ஆகியவற்றிற்கான சிகிச்சை:

இடுப்பின் வலது பக்கம் வடதுருவத்தையும் இடது பக்கம் தென் துருவத்தையும் வைக்க வேண்டும். இச்சிகிச்சையைப் படுத்தபடியும் எடுக்கலாம். நேரம் 10 அல்லது 15 நிமிடம்.

தோள் பட்டை வலி:

தோளின் வலது பக்கம் வடதுருவத்தையும், இடது பக்கம் தென்துருவத்தையும் வைக்க வேண்டும். நேரம் 10 நிமிடம். இந்த முறையைப் படுக்கையில் இருந்தும் எடுத்துக் கொள்ளலாம்.

உடல் பருமனைக் குறைத்தல்:

வடதுருவத்தை வலது கால் தொடையின் மீதும், தென் துருவத்தை இடது கால் தொடையின் மீதும் வைக்க வேண்டும். தசைப் பிடிப்புகளும், வலிகளும் குணமாகும். நேரம் 10 நிமிடம்.

பெண்களுக்கான நோய்கள்:

வட துருவம் வயிற்றின் கீழ்ப்பகுதியில் வலது பக்கமும் இதன் தென் துருவம் வயிற்றின் கீழ்ப்பகுதியில் இடது பக்கமும் படுமாறு வைக்க வேண்டும். நேரம் 10 நிமிடம்.

குணமாகும் நோய்கள்:

மாத விடாய்த் தொடர்பான நோய்களும் பெண்களின் சில பாலியல் நோய்களும் குணமாகும்.

மூட்டு வலி மற்றும் ரத்த ஓட்ட சீர் இன்மை முதலியவற்றிற்கான சிகிச்சை:

தென்துருவத்தைப் பாதத்தின் அடியிலும் வடதுருவத்தை அதற்கு மேல்பகுதியிலும் படுமாறு வைக்கவேண்டும். நேரம் 10 நிமிடம்.

கால் மூட்டு வலி, தசை பிடிப்பு முதலியவற்றிற்கான சிகிச்சை:

(S) தென் துருவத்தைக் காலின் கீழும் (N) வடதுருவத்தைப் பிரச்சனைக்குரிய அதே கால் மூட்டுப்பகுதியிலும் பிடித்திருக்கவும். முழங்கால் வலிகள், மூட்டுக்குக் கீழ்ப்பகுதியிலான தசைப்பிடிப்பு, ரத்த ஓட்டக்கோளாறுகள் முதலியவற்றைச் சரிபடுத்தும். நேரம் 5-10 நிமிடம்.

(S) தென் துருவத்தைப் பாதிக்கப்பட்டுள்ள காலின் பாதத்தின் கீழும் (N) வடதுருவத்தை இடுப்புப்பகுதியிலும் பிடிக்கவும். உடலின் கீழ்ப்பாகத்தில் ஏற்படும் முடக்கு வாதம், கால் தொடர்பான நோய்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். நேரம் 10-15 நிமிடங்கள்.

தசைப்பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு முதலியவற்றிற்கான சிகிச்சை:

பாதத்தின் கீழ் தென்துருவத்தையும் இடுப்பின் மத்தியில் முதுகுப் பகுதியில் வடதுருவத்தையும் (N) வைக்கவேண்டும். இடுப்புக்குக் கீழே ரத்த ஓட்டம் சீராக இது உதவும். நேரம் 10 நிமிடம்.

முதுகுத்தண்டு, நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளுக்கான சிகிச்சை:

தென்துருவத்தை அடிமுதுகிலும் வடதுருவத்தை முதுகு தண்டின் மேல் பகுதியிலும் பிடிக்கவும். நரம்புகள் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இச் சிகிச்சை பயன்படும். (நேரம்-5-10 நிமிடம்) இந்த முறையையும் படுக்கையில் இருந்த படியே எடுத்துக் கொள்ளலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 11, 2009 8:34 am

ஆர்த்திரட்டிஸ், விரல்களுக்கான சிகிச்சை:

பாதிப்புக்குள்ளான உள்ளங்கையின் கீழ்த் தென் துருவத்தையும் அதே கையின் மேல் பகுதியில் வட துருவத்தையும் வைக்க வேண்டும். (நேரம் 5-10 நிமிடம்)

கை மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான சிகிச்சை:

தென் துருவத்தை உள்ளங்கையின் கீழும், வட துருவத்தைக் கை மூட்டின் கீழும் வைக்கவும். (நேரம்-10 நிமிடம்)

கழுத்து, தோள் பட்டை வலிகளுக்கான சிகிச்சை:

உள்ளங்கையின் கீழே தென் துருவத்தையும், தோள் பட்டையின் மீது வட துருவத்தையும் வைக்கவும். இந்த முறை கையில் ஏற்படும் தொல்லைகளுக்குப் பயன் படுவதோடு கழுத்து, தோள் பட்டை வீக்கங்கள் முதலானவற்றிற்கும் பயன் தரும். (நேரம்5-10 நிமிடம்)

கழுத்துப் பிடிப்புச் சிகிச்சை:

தென் துருவத்தை உள்ளங்கையின் கீழும் வட துருவத்தை முதுகின் மேல் பகுதியிலும் வைக்கவும். (நேரம்-10 நிமிடம்)

சீரண மண்டலச் சிகிச்சை:

வடதுருவத்தை அடிவயிற்றுப் பகுதியிலும் தென்துருவத்தை அதற்கு நேர் பின் புறம் முதுகிலும் பிடிக்கவும். நேரம் 10 நிமிடம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 11, 2009 8:35 am

காந்த மருத்துவம் கண்கண்ட மருத்துவம்:

காந்த மருத்துவத்தால் எந்தத் தீய விளைவுகளும் ஏற்படாது. எல்லோரும் எளிதாகப் பின்பற்றலாம். நாள்தோறும் மருத்துவரை நாடிஅலைய வேண்டாம். உங்களுக்கு நீங்களே சிகிச்சை செய்து கொள்ளலாம்.மூட்டுவலி, முதுகுவலி, கழுத்துவலி முதலான நோய்களுக்குக் காந்த மருத்துவந்தான் கை கொடுத்துக் காப்பாற்றுகிறது. நாளுக்கு நாள் குணமளித்து இயல்பான நலவாழ்வை மீட்டுக்கொடுக்கிறது.

காந்த மருத்துவம் ஒரு இயற்கையான மருத்துவம். எளிமையான மருத்துவம். நம் உடம்பிலுள்ள நோய் எதிர்ப்புத் திறனை வளர்த்து இந்த மருத்துவம் நோயை நீக்குகிறது. மற்ற மருத்துவ முறைகளோடு இதையும் சேர்த்துக் கைக்கொள்வதால் ஒன்றும் இடையூறு இல்லை.உடலின் இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி உடலுருப்புக்களைச் சரியாக இயங்கச் செய்து இந்த மருத்துவம் நோய்களைப் போக்குகிறது.

மற்ற மருத்துவ முறைகளால் தீராத பல நோய்களுக்கு இந்த மருத்துவம் கண்கண்ட மருந்தாக விளங்குகிறது. நோய் உள்ள பகுதிகளில் வடதுருவ-தென்துருவக் காந்த வட்டுகளை வைத்துத் தகுந்த முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய்கள் நீங்குகின்றன. தேவைப்படும் போது தூய்மையான நீரில் காந்த சக்தியை ஏற்றித் தயாரிக்கப்பட்ட காந்த நீரும் சிகிச்சைக்குப் பயன்படுகிறது.

காந்த மருத்துவ வழி முறைகளைப் பின்பற்றி முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், உணவிலும் கொஞ்சம் மாறுதல்கள் செய்து கொள்ள வேண்டும். உணவு முறையும் காந்த மருத்துவமும் நோயை விரைவில் குணப்படுத்தி இயற்கை நல வாழ்வைக் கொடுக்கும்.

காந்த மருத்துவ வழிமுறையில் சில சிறப்புக் குறிப்புகள்:


1. காந்த மருத்துவத்தை ஒரு காந்தச் சிகிச்சையாளர் மூலமே தொடங்க வேண்டும்.

2. காந்தச் சிகிச்சைக்கு ஏற்ற நேரம் காலை வேளையும், மாலை வேளையும்.

3. சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னால் அல்லது சாப்பிட்டு ஒரு மணி நேரம் ஆன பின்னால் காந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

4. சாப்பிட்ட உடனே காந்த நீரை அருந்துதல் கூடாது. சாப்பிட்டு 1 மணி நேரம் ஆன பின்பு அருந்தலாம்.

5. காந்த சிகிச்சை எடுத்து அரை மணி நேரத்திற்குள் குளிக்கக்கூடாது.

6. சிகிச்சை எடுத்துக் கொண்ட உடனே குளிர்ந்த பானங்கள் எதுவும் அருந்தக்கூடாது. குளிர்ந்த தண்ணீரும் அருந்தக் கூடாது.

7. பேறுகாலப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் காந்த சிகிச்சையாளர்களின் அறிவுரை இல்லாமல் காந்த சிகிச்சையளிக்கக்கூடாது.

8. காந்தச் சிகிச்சை எடுக்கும்போது கைக்கடிகாரத்தை கழற்றிவிடவேண்டும். சிகிச்சை எடுக்கும் நேரத்தில் பேட்டரி உள்ள பொருட்கள் (கால்குலேட்டர், டிரான்சிஸ்டர், ரேடியோ முதலானவை) சிகிச்சை எடுப்பவர் வசம் இருக்கக்கூடாது. காந்தச் சிகிச்சை எடுப்பவரிடம் சாவி போன்ற இரும்பாலான பொருள்கள் எதுவும் இருக்கக்கூடாது.

9. காந்த சிகிச்சை எடுக்கும் நேரத்தில் மர நாற்காலி, மரப்பலகை அல்லது பாயின் மீது அமர்ந்து எடுக்கவேண்டும். அந்த நேரத்தில் இரும்பாலான பொருள்களின் தொடர்பு இருக்கக்கூடாது.

10. காந்தக்கருவிகளை இதயத்தின் அருகிலும்,மூளையின் அருகிலும் காந்தச் சிகிச்சையாளரின் மேற்பார்வையில்லாமல் பயன்படுத்தக்கூடாது.

11. காந்தச் சிகிச்சைக்குரிய கருவிகளைக் காந்தச் சிகிச்சையாளர் அறிவுரைப்படி பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும்.

12. காந்தச் சிகிச்சையாளரின் அறிவுரைப்படி-நோய்க்குத் தக்கபடி-உரிய காந்தக் கருவிகளையே சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 11, 2009 8:37 am

காந்தக் கருவிகளும் காந்தப் பட்டைகளும்:

நடுத்திறன் காந்தமும், இ.என்.டி. காந்தமும் இந்தக் கையடக்க நூலும் ஒரு வீட்டில் இருந்தால் போதும் டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை. பொதுவான உடல் ஆரோக்கியத்திற்குப் பொதுச் சிகிச்சை நான்கும் எடுத்துக் கொண்டு காந்த நீர் தயார் செய்து ஒரு நாளைக்கு இருவேளை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் உயரும். கொலஸ்ட்ரால், சிறுநீரகக் கற்கள் முதலியவற்றைக் கரைக்கும் ஆற்றல் வளரும். இது போன்ற தொல்லைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

மலச்சிக்கல் பல நோய்களுக்கு மூல காரணம். உணவு முறையை மாற்றி அமைப்பதின் மூலமோ தேவைப்பட்டால் எனிமாக் குவளைகளைப் பயனபடுத்துவதன் மூலமோ மலச்சிக்கலை நீக்கிக்கொண்டே சிகிச்சைகளை தொடங்கவும்.

ஒவ்வொரு நோய்க்கும் உரிய பட்டைகளை நோய்க்குரிய இடத்தில் அணிவதற்கு முன்பு பொதுச் சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும், இது முக்கியம். சிகிச்சையை முதல் முதலாகத் தொடங்கும் பொழுது பொதுச் சிகிச்சையை ஒருமுறை எடுத்துக் கொண்டால் போதும்.

பட்டைகளை லேசாக கட்டினாலே போதும். இறுக்கி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஒரே ஒரு காந்தப் பட்டை இருந்தால், அதை குடும்பத்தில் உள்ள எல்லோரும் வெவ்வேறு நேரங்களில் பயன்படு்த்திக் கொள்ளலாம்.



தலைப்பட்டை (Head Belt)

நோயின் தன்மைக்கு ஏற்ப 30 நிமிடம் முதல் 1 மணி வரை நெற்றியில் வைத்துத் தினமும் கட்டி வந்தால் நாள்பட்ட தலைவலி மண்டையில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறி இரத்த ஓட்டம் சீர்பட்டு நாளடைவில் குணம் ஏற்படும். தலைவலி தூக்கமின்மை போன்ற நோய்கள் நீங்கும்.

தொண்டைப் பட்டை (Head Belt)

இந்தப்பட்டையைத் தொண்டையில் தினம் 10-30 நிமிடங்கள் கட்டி வந்தால் டான்சில்ஸ், தொண்டைவலி, வீக்கம், தைராய்டு சுரப்பிவீக்கம் போன்ற நோய்கள் குணமாகும். உப்புத்தண்ணீர் விட்டுக் காரல் செய்து சு{ரிய ஒளியில் தொண்டையைச் சில நிமிடங்கள் காட்டி வந்தால் தொண்டை சார்ந்த எல்லாவிதப் பிரச்சனைக்கு நல்லது.

கழுத்துப் பட்டை (Cervical Spondlysis Belt)

இந்தப் பட்டையைத் தினம் 1மணி முதல் 3 மணி நேரம் வரை கழுத்தில் கட்டி வந்தால் கழுத்து வலி, தோள்வலி, தோள்பிடிப்பு முதலியவைகள் குணமாகும். உணவில் வெள்ளைப்பூண்டு, இஞ்சி அதிகம் சேர்த்துக் கொண்டு உடலில் உள்ள வாயுவை வெளியேற்ற உதவவேண்டும்.

இடுப்புப் பட்டை (Back Belt)

இந்தப்பட்டையைத் தினம் 1-2 மணி நேரம் தொடர்ந்து கட்டிவந்தால் இடுப்பு வலி குணமாகும். முள்ளந்தண்டுப் பகுதி வலி, முதுகுதசை வலி ஆகியவை குணமாகும்.

மேற்குறிப்பிட்ட இதே பட்டையை வயிற்றின் முன்பகுதியில் காந்தம் இருக்கும்படி கட்டி வந்தால் வயிற்று வலியுடன் கூடிய மாதவிடாய்த் தொல்லைகளுக்கும், வயிற்றுக் கோளாறுகளுக்கும் பொதுவாக நல்லது. நாளடைவில் நல்ல குணம் ஏற்படும். மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் வாயுப்பொருட்களைத் தவிர்த்து விடவும். கிழங்கு வகைகளையும் நீக்கி விடவும். காந்த நீரும் அவ்வப்போது தொடர்ந்து குடிக்க வேண்டும்.

வயிற்றுப் பட்டை (Obesity Belt)

வயிறு தொப்பை என்பது ஆண், பெண் எல்லோருக்கும் பிரச்சனைதான். இடுப்பிற்குக் கட்டும் அதே பெல்ட்டை வயிற்றுக்கு முன் பக்கம் வைத்துக் கட்டவேண்டும். ஒரு மாதத்தில் 4,5 அங்குலம் வயிறு குறைகிறது. வயிற்றுப்பகுதியில் 5, 6 மணி நேரம் கட்ட வேண்டும்.

சில பெண்களுக்குப் பிரசவம் ஆன பின்பு வயிறு சிறிது கூட குறையாமல் அப்படியே இருக்கும். இது ஒரு பெரும் பிரச்சனையே. இந்தப்பிரச்சனை தீர அந்த பெல்ட்டைப் பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் 2,3 மாதத்தில் பழைய நிலைக்கு வந்து விடுகிறது.

நீரிழிவுப் பட்டை (Diabetes Belt)

இந்தப்பட்டையை வயிற்றில் வலது பக்கத்தில் ஒரு மணி நேரமும் இடது பக்கத்தில் ஒரு மணி நேரமும் தினமும் 2 மணி நேரம் கட்டி வரவும், தென் துருவக் காந்த நீர் 4-5 முறை 2 அவுன்ஸ் வீதம் குடிக்கவேண்டும். உணவில் கசப்புள்ள பாகற்காய், கோவைக்காய், முள்ளங்கி, கோஸ் முதலியவற்றைப் பச்சையாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலையில் ஒரு எலுமிச்சம் பழத்தில் பாதியின் சாறும், மீதியை மாலையிலும் குடிக்கவேண்டும். வெந்தயப்பொடி, வில்வ இலைப்பொடி, அருகம்புல், குறிஞ்சா இலை போன்றவை பச்சையாகக் கிடைத்தால் மிகவும் நல்லது. கிடைக்காத போது பொடிகளைப் பயன்படுத்தி வரலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 11, 2009 8:38 am

மூட்டுப் பட்டை (Joint Belt)

இதைத்தினம் 1 மணி நேரம் கட்டி வரவேண்டும். முழங்கால் வீக்கம், வலி, எலும்புத் தேய்வால் ஏற்பட்ட வலி முதலியவை நாளடைவில் குணம் ஆகும். வாயுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். கறி, முட்டை போன்றவற்றைத் தவிர்த்து விடவும். மலச்சிக்கலை நீக்க வேண்டும்.

இரத்த அழுத்தப் பட்டை (B. P. Watch)

இந்தப்பட்டையை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்ள வேண்டும். தினம் 5 மணி நேரம் கட்டிக்கொண்டால் உயர் இரத்த அழுத்தம் சமன்படும். இதே பட்டையை இடது மணிக்கட்டில் கட்டிக்கொண்டால் குறைந்த இரத்த அழுத்தம் சீர்செய்யப்படுகிறது.

காந்த மூக்குக் கண்ணாடி (Magnetic Spectacles)

தினம் 15-30 நிமிடம் கண்ணில் போட்டு வந்தால் தூரப்பார்வை, கிட்டப்பார்வை, கேட்டராக்ட் போன்றவை ஆரம்பக்கால நோயாக இருந்தால் முதலில் கட்டுப்பட்டு நாளடைவில் நீங்கிவிடும்.

காந்த மூக்குக் கண்ணாடி உபயோகிக்கும் பொழுது கண்களை லேசாக மூடிக்கொள்ள வேண்டும். கேட்டராக்ட் நோய்க்கு மட்டும் கண்ணாடியில் இரு காந்தங்களையும் N வட துருவமாகவே மாற்றி சிகிச்சை தரவேண்டும். மற்ற எல்லா கண் நோய்க்கும் வலது பக்கம் N இடது பக்கம் S காந்தங்களைப் பொருத்தினால் கண் வியாதிகள் விரைவில் குணமாகும்.

ஆஸ்த்துமா செயின் (Magnetic Necklace)

இந்தச் செயினைக் குளிக்கும் நேரம் தவிர 24 மணி நேரமும் அணிந்து கொள்ளலாம். கழுத்து, மார்பு வலிகள் நீங்கும். கழுத்துபிடிப்பு, ஆஸ்த்துமா, மார்புச்சளி,இதயக்கோளறுகள், மூச்சுக்குழாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு மிகவும் நல்லது.

ஆஸ்துமா பட்டை (Asthama Pad)

கடுமையான ஆஸ்துமா தொல்லையின் போதும், கடுமையான இருமலின் போதும் இந்தப்பட்டையை மூன்று அல்லது நான்கு மணி நேரம் கட்டிக் கொள்ளலாம். குளிர் காலத்தில் இதைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

நாட்பட்ட நோய்களுக்கு மேலே உள்ள பட்டைகளைத் தொடர்ந்து கட்டி வருவதுடன் காந்த நீரும் குடிப்பது அவசியம். அன்றாட உணவில் பாதியளவாவது பச்சையாகச் சமைக்காத காய்கறிகளையும், பழவகைகளையும் சேர்த்துக்கொண்டு வந்தால் நாளடைவில் நோய் முற்றிலும் குணமடையும்.

மின்காந்த சிகிச்சை (Electro - Magnetic Treatment)

நோயின் தீவிரம் அதிகமாகி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வலி இருந்தால் தேவை ஏற்படின் காந்த சிகிச்சையாளரை அணுகி மின் காந்த சிகிச்சை (நுடநஉவசடி - ஆயபநேவiஉ கூசநயவஅநவே) 10-15 நிமிடம் எடுத்துக் கொண்டு நோயின் தீவிரத்தைத் தணித்துக் கொள்ளவும்.

முக பாரிச வாயு (Facial Paralysis)

ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட பக்கம் காதருகே குறைந்த திறன் காந்தத்தின் தென்துருவம் படுமாறு வைக்கவேண்டும். சிறிது முன்னேற்றம் ஏற்பட்டவுடன் நடுத்தர திறன் காந்தத்தின் வடதுருவத்தை அதே இடத்தில் ஒரே நாளில் 2-3 முறை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 11, 2009 8:38 am

குடல்வாத நோய் (Appendicitis)

உயர்திறன் காந்தத்தின் தென் துருவத்தை வலியுள்ள பகுதியில் வயிற்றின் வலதுபுறம் 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஒரு நாளில் 2-3 முறை வைக்கலாம். ஒரு நாளில் 4 முதல் 5 முறை வரை காந்த நீரைப் பருகவேண்டும். பொதுவாக 150 வகையான நோய்களுக்குக் காந்த சிகிச்சை அளிக்கலாம் எனப்பல ஆராய்ச்சி வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள். அதிலும் தீவிர நோய்களான ஆஸ்துமா, சர்க்கரை (நீரிழிவு) மூட்டு வலிகள் சரும வியாதிகள், கீழ் வாதம், இரத்தக் கொதிப்பு, சிறு நீரகக்கற்கள், தலைவலி, பாரிசவாயு, ஜலதோஷம், இருமல், கழுத்துவலி, ஒற்றைத் தலைவலி, உள்நாக்குச் சதை வளர்ச்சி, முதுகுத் தண்டுவலி, நரம்புத் தளர்ச்சி, பெண்களுக்கான மாதவிடாய்த் தொல்லைகள் போன்ற நோய்களைக் காந்த சிகிச்சை குணப்படுத்தியுள்ளது.

நோயை உண்டாக்கும் உணவுகளை நிறுத்தினால் நோய்கள் மறையும். நோய் உண்டாக்குவதில் குறிப்பிடத்தக்க உணவுகள் எண்ணெய், டால்டா, நெய், பால், தயிர், மோர், காபி, சர்க்கரை, முட்டை, மாமிசம், முதலியவைகள் ஆகும். இந்த உணவுகளை நோயாளிகள் முதலில் நிறுத்த வேண்டும். நோய் வராதவர்கள் முடிந்த அளவு குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதை மனதில் நிறுத்திக் காந்தச் சிகிச்சையையும் சரி இயற்கை மருத்துவத்தையும் சரி பின்பற்றினால் எல்லோரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். வாழ்க்கையில் நோய் இன்றி வாழ விரும்புவோர்க்கும் காந்த மருத்துவம் ஒரு வரப்பிரசாதமாகும். காந்த மருத்துவம் கண்கண்ட மருத்துவம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக