புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 16:50

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 16:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_c10மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_m10மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_c10 
15 Posts - 58%
heezulia
மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_c10மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_m10மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_c10 
11 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_c10மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_m10மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_c10 
52 Posts - 59%
heezulia
மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_c10மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_m10மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_c10மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_m10மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_c10மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_m10மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 17 Jan 2023 - 20:38

மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Main-qimg-ad6e2b6a8f35059d36a927884787692f-lq
-
வனத்துறையினருக்கு மனித – வனவிலங்கு மோதல்களை தடுத்தல், விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கும்கி பணிகளில் உதவும் துறை யானைகளை சிறப்பிக்கும் வகையில், யானை பொங்கல் கொண்டாடப்படுகிறது.

யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா… என்னது யானை பொங்கலா… ஒருவேளை தப்பா படிச்சிட்டோமா… என்பதுதானே உங்கள் மைண்ட்வாய்ஸ்? ஆம்! எனக்கும் முதல்முறை யானை பொங்கல் பற்றி கேள்விப்பட்டபோது அப்படிதான் இருந்தது. பிறகு இதைப் பற்றி விசாரித்தப்போது, ஒவ்வொரு வருடமும் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் கொண்டாடப்படுகிறது என்பது தெரியவந்தது.

மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Main-qimg-8b12cb57e4872884c22d4cce6cd1b303-lq
-
முகாமின் பெயரைக் கேட்டதும், ஒருவேளை வேறு மாநிலமாக இருக்குமோ என்று நினைக்காதீர்கள். இந்த முகாம் கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில்தான் உள்ளது. இது தமிழக வனத்துறையின் இரண்டாவது பெரிய யானைகள் முகாம்.

கோழிகமுத்தி பகுதியில் `மலைசர்’ என்னும் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். இந்த முகாமில் உள்ள யானைகளுக்கு பெரும்பாலும் இந்த மக்கள்தான் பாதுகாவலர்களான மாவூத் மற்றும் கவாடிகளாக இருக்கிறார்கள். இவர்கள் தலைமுறை தலைமுறையாக யானை வளர்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளில் இருந்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்பட்ட உலக யானைகள் தினத்தன்று, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் சார்பாக, மலைசர் மக்கள் யானைகள் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்படுகின்றனர் என்று `கஜ்கெளரவ விருது’ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 17 Jan 2023 - 20:39

மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Main-qimg-304d984606c576d7decb2f64f968648b-lq
-
கோழிகமுத்தி யானை முகாம்…

Prasanth

சரிசரி… சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவோம். யானை பொங்கல் என்றால் என்ன, எப்படி கொண்டாடப்படுகிறது என்பது குறித்து, கோழிகமுத்தி யானைகள் முகாமைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி நமக்கு விளக்குகிறார்…

இதுதான் யானை பொங்கல்…

“கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 26 யானைகள் உள்ளன. அந்த யானைகளையும், அவற்றைப் பராமரிக்கிற மாவூத், கவாடி-களையும் வனத்துறை சார்பாக சிறப்பிக்க, இத்தகைய யானை பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்தப் பொங்கல் கோழிகமுத்தி யானைகள் முகாமில், 2001-ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள், பொங்கலுக்கு முந்தைய வாரமே களைக்கட்டத் தொடங்கிவிடும்.
-
மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Main-qimg-145c9df18b252a4c8d182b7eb2fc9aa2-lq
-
யானை பொங்கல்!

Prasanth

பொங்கல் கொண்டாட்டத்தன்று, யானைகளைச் சிறப்பிக்கும் வகையில் ஐந்து அல்லது ஏழு பொங்கல் வைக்கப்படும். மேலும் இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில், கோழிகமுத்தி மற்றும் வரகளியார் பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் துறை யானைகள் மட்டும்தான் கலந்து கொள்ளும்.

இந்த பொங்கலில் என்ன ஸ்பெஷல்?

யானை பொங்கல் அன்று, துறை யானைகளை அலங்கரித்து வரிசையில் நிற்கவைத்து, சிறப்பு மற்றும் ஊட்டசத்து மிகுந்த உணவுகள் வழங்கப்படும். மேலும் பொங்கல் வைத்தல், பந்தல் மற்றும் தோரணம் கட்டுதல், பாராம்பர்ய நடனம் ஆடுதல் என ஊர் மக்களின் பங்களிப்பு வெகுவாக இருக்கும்.

வனத்துறை சார்பாக யானை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை மகிழ்வூட்டும் வகையில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தவிர இந்த விழாவில் சுற்றுலா பயணிகள், வன ஆர்வலர்கள், வனப்பணியாளர்கள் என அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 17 Jan 2023 - 20:39

மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? Main-qimg-2f199d81ec4662447b1b6a2eda10d796-lq
-
வனத்துறைக்கு உதவும் யானைகள்!

எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் கால்நடைகளைப் பெருமைப்படுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடாப்படுகிறது. அதுபோல வனத்துறையினருக்கு மனித – வனவிலங்கு மோதல்களை தடுத்தல், விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கும்கி பணிகளில் உதவும் துறை யானைகளைச் சிறப்பிக்கும் வகையில் யானை பொங்கல் கொண்டாடப்படுகிறது.

வேறு எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?

யானை பொங்கல் கோழிகமுத்தி யானைகள் முகாமைத் தவிர, முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாம் ஆகியவற்றிலும் கொண்டாடப்படுகிறது” என்றார்.

மக்களே, நீங்களும் யானை பொங்கலில் கலந்து கொள்ள ரெடியா?

-நிவேதா.நா (விகடன்)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 18 Jan 2023 - 20:46

மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? 3838410834 .... மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? 103459460 ..... மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா? 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக