புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உ.பி - பிரபல ரவுடி அதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக் கொலை Poll_c10உ.பி - பிரபல ரவுடி அதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக் கொலை Poll_m10உ.பி - பிரபல ரவுடி அதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக் கொலை Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
உ.பி - பிரபல ரவுடி அதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக் கொலை Poll_c10உ.பி - பிரபல ரவுடி அதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக் கொலை Poll_m10உ.பி - பிரபல ரவுடி அதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக் கொலை Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen

3 Posts - 4%
prajai

2 Posts - 3%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

viyasan

Rutu

1 Post - 1%
சிவா

manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உ.பி - பிரபல ரவுடி அதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக் கொலை Poll_c10உ.பி - பிரபல ரவுடி அதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக் கொலை Poll_m10உ.பி - பிரபல ரவுடி அதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக் கொலை Poll_c10 
24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.பி - பிரபல ரவுடி அதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக் கொலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 16, 2023 6:21 pm

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் எம்.பியும், பிரபல தாதாவுமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் அகமது ஆகியோர் நேற்று (சனிக்கிழமை) இரவு போலீஸ் பாதுகாப்புடன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜிக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது இருவரும் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அங்கு வந்த மர்ம நபர்கள் அதிக் அகமது மற்றும் அஷ்ரப் அகமது மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது அங்கு அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநில அரசு அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுகுறித்து விசாரணை செய்ய குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன் அதிக் அகமதுவின் 19 வயது மகன் ஆசாத் அகமது உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையினரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காவல்துறை மூத்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், அதிக் மற்றும் அஷ்ரஃப் ஆகியோரின் வழக்கு விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி, இருவரும் மீண்டும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, மருத்துவ சோதனைக்காக போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கூறினார்.

பிரயாக்ராஜ் போலீஸ் கமிஷனர் ரமித் சர்மா கூறுகையில், துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் செய்தியாளர்கள் போல வேடமிட்டு அங்கு வந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக் அகமது அகமதாபாத் சிறையில் இருந்து உத்தரப் பிரதேச சிறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து இவரும் இவரது குடும்பத்தினரும் தாங்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி நீதிமன்றங்களில் பாதுகாப்பு கோரி வழக்கு தொடர்ந்தனர். உமேஷ் பால் கொலைவழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிக் அகமது உச்ச நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டினார்.

அதிக் அகமது அரசியல்வாதியும் ஆவர். 2004-ம் ஆண்டு உ.பியின் புல்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியில் போட்டியிட்டு
வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அதிக் அகமது மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அதிக் அகமது, மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆசாத், குலாம் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி ஜான்சி அருகே மாநில அதிரடிப் படை போலீசார் நடத்திய எக்கவுண்டரில் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ், ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாவுதீன் ஓவைசி உள்ளிட்டோர் உ.பி அரசை கடுமையாக சாடி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 16, 2023 6:22 pm

’ஃபேமஸ் ஆவதற்காக கொன்றோம்’; அதிக் அகமதுவை சுட்டவர்கள் உ.பி. போலீசிடம் வாக்குமூலம்

உ.பி - பிரபல ரவுடி அதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக் கொலை 1681614482-6802

உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் போலீசார், குண்டர் கும்பலாக மாறிய அரசியல்வாதியான அதிக் அகமது மற்றும் அவரது இளைய சகோதரர் காலித் அசிம் என்ற அஷ்ரப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பின்னர் பிடிபட்ட 3 பேர் லாவ்லேஷ் திவாரி, அருண் மவுரியா மற்றும் சன்னி சிங் என முதல் பார்வையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் முறையே பண்டா, கஸ்கஞ்ச் மற்றும் ஹமீர்பூரைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (ஏப்ரல் 15) இரவு மோதிலால் நேரு மண்டல மருத்துவமனையின் (கொல்வின்) வாயிலில் அதிக் மற்றும் அஷ்ரஃப் சுட்டுக் கொல்லப்பட்டனர், அங்கு பிரயாக்ராஜ் போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். உமேஷ் பால் கொலை வழக்கில் அதிக் மற்றும் அஷ்ரப் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் இருந்தனர். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சகோதரர்கள் இருவரும் பதில் அளித்து வந்த நிலையில், நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொலைக்காட்சியில் நேரலையாக படம்பிடிக்கப்பட்டது.

பிடிபட்ட மூன்று பேரின் பின்னணி தகவல்களை போலீசார் சேகரித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆதாரங்களின்படி, சன்னி சிங் ஹமீர்பூரின் குராரா பகுதியில் வசிப்பவர். சன்னியின் மூத்த சகோதரர் பிண்டூ சிங், 10 ஆண்டுகளாக அவர் வீட்டில் இல்லை என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். “கிரிமினல் வழக்குகளில் அவர் ஈடுபட்டதால் நாங்கள் அவருடனான உறவை முறித்துக் கொண்டோம்” என்று பிண்டூ கூறினார்.

பண்டாவின் லோமர் கிராமத்தைச் சேர்ந்த லவ்லேஷ் திவாரியின் தந்தை யக்யா குமார் திவாரி ஒரு தனியார் ஓட்டுநர். லவ்லேஷ் கடந்த 7 ஆண்டுகளாக பண்டாவில் உள்ள கெவ்தாரா பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்ததாக வீட்டின் உரிமையாளர் ரமேஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ரமேஷ் குமார் ஊடகங்களிடம் கூறுகையில், “நேற்றைய துப்பாக்கிச் சூட்டில் அவர் ஈடுபட்டதை அறிந்ததும் நாங்கள் ஆச்சரியமடைந்தோம். ஒரு பெண்ணைத் தாக்கியதாக லவ்லேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்,” என்று கூறினார்.

மூன்று சகோதரர்களில் இளையவரான அருண் மௌரியா காஸ்கஞ்சில் உள்ள பகேலா புக்தா கிராமத்தைச் சேர்ந்தவர். அருண் தனது பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர், மேலும் அவர் அவ்வப்போது வந்து செல்வதாகவும், நொய்டாவில் தங்கியிருப்பதாகவும் கூறினார்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, உத்தரப் பிரதேச அரசு அனைத்து மாவட்டங்களிலும் சி.ஆர்.பி.சி.,யின் 144 வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த கொலைகள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார்.

பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையைச் சுற்றியுள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. உடல்களின் போஸ்ட்மார்ட்டம் இன்னும் தொடங்கவில்லை.

இந்தநிலையில், “குண்டர்களாக மாறிய அரசியல்வாதியான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப்-ஐ நாங்கள் பிரபலமடைவதற்காக கொல்ல விரும்பினோம்” என்று பிரயாக்ராஜில் அதிக்-அஷ்ரஃப் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்று துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், விசாரணையின் போது போலீஸாரிடம் கூறியதாக FIR இல் குறிப்பிடப்பட்டுள்ளது, என ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

"We wanted to kill gangster-turned politician Atiq Ahmed and his brother Ashraf to become popular," said the three shooters involved in the killing of Atiq-Ashraf in Prayagraj yesterday, to police during interrogation, as mentioned in the FIR https://t.co/QZZBw0OSKN

— ANI (@ANI) April 16, 2023

மேலும், பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் படி, தாக்குதல் நடத்தியவர்கள் உத்தரபிரதேச காவல்துறையிடம், திக் அகமது மற்றும் அவரது சகோதரரைக் கொல்வதற்காக பத்திரிக்கையாளர்களாக வந்ததாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “அதிக் மற்றும் அஷ்ரப் போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், நாங்கள் பத்திரிகையாளர்கள் போல் காட்டிக்கொண்டு உள்ளூர் பத்திரிகையாளர்களிடையே நடமாட ஆரம்பித்தோம், மேலும் அவர்கள் இருவரையும் கொல்ல திட்டமிட்டோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 16, 2023 6:42 pm

உ.பி.,யில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: மம்தா குற்றச்சாட்டு

கோல்கட்டா: உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீர்குலைந்துவிட்டது என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

உ.பி.,யில், சமாஜ்வாதி முன்னாள் எம்.பி., அட்டிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் இருவரையும், மர்ம நபர்கள் நேற்றிரவு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இது குறித்து மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‛குற்றவாளிகள் தங்களது கைகளில் சட்டத்தினை எடுத்துக் கொள்கின்றனர். போலீஸ் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இருக்கும்போது நடந்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு வெட்கக் கேடான செயலாகும். நான் இந்த செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

உத்தர பிரதேசத்தில் ஒட்டு மொத்தமாக சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இடமில்லை'எனக் கூறப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 16, 2023 7:24 pm

11,684 கோடியில் சொத்துகள்,
160 வழக்குகள்,
ஐஎஸ்ஐ தொடர்பு:
அஷ்ரப், ஆதிக் அகமதுவின் குற்ற அறிக்கை விபரம்!

ஆயுதம் ஏந்திய போலீசார் கண் முன்னே துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஆதிக் மீது 160 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

ஆதிக் அகமது- சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி. ஐந்து முறை எம்எல்ஏ, புல்பூர் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்பி., சமாஜ்வாதி கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் இருந்த போது அக்கட்சியின் செல்வாக்கான தலைவராக இருந்தார்.

2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ ராஜ்பால் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆதிக் அகமது, அவரது மனைவி சஷிதா பர்வீன், அவருடைய இரண்டு மகன்கள், தம்பி அஷ்ரஃப் ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். அதன்பிறகு அரசியல்வாதியாக இருந்த ஆதிக் அகமது டானாக மாறத் தொடங்கினார். அகிலேஷ் யாதவ் தலைவராக வந்த பிறகு ஆதிக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார்.

அதன்பிறகு பிரக்யாராஜின் தவிர்க்க முடியாத டானாக உருவானார் ஆதிக் அகமது. உத்தரப்பிரதேச காவல்துறையின் தகவல் படி தற்போது வரை ஆதிக் மீது 160 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவற்றில் 100 வழக்குகள் ஆதிக்கிற்கு எதிராகவும், 52 வழக்குகள் அவரது தம்பி அஷ்ரஃப்-ற்கு எதிராகவும், 3 வழக்குகள் அவரது மனைவி ஷசிதா பர்வீனுக்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கமான ஐஎஸ்ஐவுடன் தொடர்பிருப்பதாக கூறி குடும்ப மாஃபியாவான ஆதிக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து சுமார் 11,684 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அமலாகக்த்துறை ஆதிக்கின் வீட்டில் சோதனை நடத்திய போது 200 வங்கி கணக்குகளின் ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். யோகி ஆதித்யாநாத் உத்தரப்பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஆதிக் அமகது குடும்பத்தின் மீதான நடவடிக்கைகள் இருகின. சட்டவிரோதமான அவரது தொழில்கள் முடக்கப்பட்டன. அவரின் வழக்குகள் மீதான வழக்கு விசாரணை துரிதப்பத்தப்பட்டன. ரியல் எஸ்டேட் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துகள் முடக்கப்பட்டன. ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வநத ஆதிக்கின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் அவரின் பெரும்பாலான குற்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்போது அவர் மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் ராஜ்பால்-ன் வழக்கறிஞர் உமேஷ் பால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆதிக்கின் மகன் ஆசாத் மற்றும் ஆதிக்கின் நெருங்கிய உதவியாளர் குலாம் ஆகியோடு ஈடுபட்டது தெரியவந்ததும் அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து கடந்த வியாழக் கிழமை ஆசாத் மற்றும் குலாம் ஆகியோரை போலீசார் ஜான்சியில் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். கடந்த 58 மணி நேரத்தில் அதிக், அவரது மகன் ஆசாத் மற்றும் சகோதரர் அஷ்ரப் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆதிக்கின் மனைவி ஷாயிஸ்தா தலைமறைவாக உள்ளார். மைத்துனர் அக்லக் மற்றும் அதிக் ஆகியோரின் இரண்டு மகன்கள் சிறையிலும், இரண்டு மைனர் மகன்கள் சிறார் இல்லத்திலும் உள்ளனர்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக