புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_m10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_m10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10 
13 Posts - 25%
prajai
ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_m10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_m10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_m10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10 
2 Posts - 4%
Rutu
ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_m10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10 
1 Post - 2%
சிவா
ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_m10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10 
1 Post - 2%
viyasan
ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_m10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_m10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_m10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10 
1 Post - 8%
Rutu
ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_m10ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 26, 2023 2:49 am


ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? _120568121_6c0f11b6-6ee0-41b1-890a-b23ff384e9df
1939-ஆம் ஆண்டில் திபெத்தியர்களுடன் ஜெர்மானியக் குழுவினர்


1938 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் நாஜி கட்சியின் முன்னணி உறுப்பினரும், யூத அழிப்பின் முக்கிய கூட்டாளியுமான ஹென்ரிக் ஹிம்லர், ஐந்து பேர் கொண்ட குழுவை திபெத்துக்கு அனுப்பி ஆரிய இனத்தின் தோற்றம் பற்றிய அறிய முயன்றார். எழுத்தாளர் வைபவ் புரந்தரே இந்தச் சுவாரஸ்யமான ஆய்வுப் பயணம் பற்றி விவரிக்கிறார்.

இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பு ஜெர்மானியர்களின் குழு ஒன்று இந்தியாவின் கிழக்கு எல்லையில் ரகசியமாகத் தரையிறங்கியது.

அவர்கள் ஆரிய இனத்தின் தோற்றம் பற்றிய தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

ஐரோப்பிய வடக்கு நாடுகளைச் சேர்ந்த "ஆரிய" இன மக்கள் வடக்கு ஐரோப்பிய பகுதியில் இருந்து சுமார் 1,500 ஆ்ண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்று அடாஃல்ப் ஹிட்லர் நம்பினார். அங்கு வேறு இன மக்களுடன் கலந்து "குற்றம்" இழைத்ததாகவும், அதனால் பூமியின் "உயர்ந்த இனம்" என்ற அந்தஸ்தை அவர்கள் இழந்தனர் என்றும் ஹிட்லர் கருதினார்.

இந்திய மக்கள், அவர்களது விடுதலைப் போராட்டம் ஆகியவற்றின் மீதான வெறுப்பை ஹிட்லர் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அவரது உரைகளிலும் எழுத்துகளிலும் இந்த உணர்வைக் காணலாம்.

ஆயினும், ஹிட்லரின் சிறந்த தளபதிகளில் ஒருவரும், நாஜியின் எஸ்எஸ் படைப்பிரிவுத் தலைவருமான ஹிம்லர், இந்தியத் துணைக் கண்டத்தை இன்னும் கூர்ந்து நோக்க வேண்டும் என்று கருதினார். இங்குதான் திபெத் வருகிறது.

வடக்கு ஐரோப்பிய வெள்ளை நோர்டிக் இனமே உயர்ந்தது என்று கருதுவோர், தொலைந்து போனதாக கருதப்படும் கற்பனை நகரமான அட்லாண்டிஸின் கதையையும் நம்புகிறார்கள். "தூய்மையான ரத்தம் கொண்டவர்கள்" அங்கு வாழ்ந்ததார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. இங்கிலாந்துக்கும் போர்ச்சுகலுக்கும் இடையே அட்லாண்டிக் பெருங்கடலின் ஏதோ ஒரு பகுதியில் அட்லாண்டிஸ் தீவு நகரம் இருந்ததாகவும் தெய்வீகமான இடி தாக்கியதில் அது கடலில் மூழ்கியதாகவும் கதைகள் இருக்கின்றன.

தப்பிப் பிழைத்த "ஆரியர்கள்" அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதாகவும், அதில் ஒன்றுதான் இமயமலை என்றும் கூறப்படுகிறது. உலகத்தின் கூரை என்று அழைக்கப்படும் திபெத் அதில் முக்கியமானது.

பெரும் பிரளயத்தால் அட்லாண்டிஸ் தீவு மூழ்கிய பிறகு அங்கிருந்த மக்கள் எங்கெல்லாம் சென்றார்கள், இன்னும் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக எஸ்எஸ் படையில் அஹ்னென்பெர் என்ற ஒரு பிரிவை ஹிம்லர் நிறுவினார்.

1938-ஆம் ஆண்டில் இந்தத் தேடுதல் பணிக்காக 5 ஜெர்மானியர்களைக் கொண்ட குழுவை அவர் திபெத்துக்கு அனுப்பினார்.

அணியின் இரண்டு உறுப்பினர்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து நின்றனர். ஒருவர் எர்னஸ்ட் ஷாஃபர். இவர் 28 வயதான விலங்கியல் நிபுணர். அதற்கு முன்பு இரண்டு முறை இந்திய - திபெத் - சீன எல்லைப் பகுதிக்குச் சென்றிருக்கிறார். 1933- ஆம் ஆண்டு நாஜிக் கட்சி வெற்றி பெற்றதும் அவர் எஸ்எஸ் படையில் இணைந்துவிட்டார்.

ஷாஃபர் வேட்டையாடுவதில் வேட்கை கொண்டவர். அதற்காக பல கோப்பைகளைப் பெற்று தனது பெர்லின் வீட்டில் அடுக்கியிருந்தார். ஒரு வேட்டைப் பயணத்தின்போது அவரது மனைவியுடன் படகில் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு வாத்தை துப்பாக்கியால் குறிவைத்துச் சுட முயன்றபோது படகில் இருந்து வழுக்கியதால், அவரது மனைவியின் தலையில் குண்டு பாய்ந்து அவர் இறந்துவிட்டார்.

ஹிம்லரின் அணியில் இரண்டாவது முக்கியமான நபர் புருனோ பெகர். மானுடவியல் படித்த இளைஞர். 1935-ஆம் ஆண்டு நாஜியின் எஸ்எஸ் படைப் பிரிவில் சேர்ந்தார்.

பெகர் திபெத்தியர்களின் மண்டை ஓடுகள் மற்றும் முக விவரங்களை அளவிட்டவர். அவற்றைக் கொண்டு முகமூடிகளை உருவாக்கினார். "இந்தப் பிராந்தியத்தில் நோர்டிக் இனத்தின் விகிதாச்சாரம், தோற்றம், முக்கியத்துவம் வளர்ச்சி போன்றவை தொடர்பான பொருள்களைத் திரட்டுவது நோக்கம்" என்று அவர் கூறியிருக்கிறார்.

சென்னைக்கு வந்த ஜெர்மானியர்களின் கப்பல்


1938-ஆண்டு மே மாதத் தொடக்கத்தில் ஐந்து ஜெர்மானியர்களைக் கொண்ட கப்பல் இலங்கையின் கொழும்பு நகருக்கு வந்து சேர்ந்தது. அதன் பிறகு வேறொரு கப்பலில் அவர்கள் சென்னைக்கு (அப்போதைய மெட்ராஸ்) வந்து சேர்ந்தனர். அதன் பிறகு இன்னொரு கப்பலில் கொல்கத்தாவுக்குச் சென்றார்கள்.

அப்போது இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் ஜெர்மானியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர். அவர்கள் ஒற்றர்களாக இருக்கக்கூடும் என்றும் கருதினர். முதலில் இந்தியாவுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போதைய டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் "இந்தியாவில் ஜெர்மானிய உளவாளி" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.

இப்போது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாக இருக்கும் சிக்கிம் அந்தக் காலகட்டத்தில் தனிப் பிராந்தியமாக இருந்தது. அங்கு பொறுப்பில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரியும் ஜெர்மானியர்களை சிக்கிம் வழியாக திபெத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

ஆயினும் கடைசியில் நாஜி விஞ்ஞானிகளே வெற்றி பெற்றனர். ஸ்வஸ்திகா கொடி கட்டப்பட்ட கழுதைகளில் பொருள்களை எடுத்துக் கொண்டு 5 நாஜி விஞ்ஞானிகளும் திபெத்துக்குள் நுழைந்தனர்.

ஸ்வஸ்திகா என்பது திபெத் எங்கும் காணப்படும் அடையாளம். அங்கு அதை "யுங்ட்ரங்" என்று அழைக்கிறார்கள். ஷாஃபரும் அவரது குழுவினரும் இந்தியாவில் இருந்த காலத்திலும் அந்த முத்திரையை அதிகமாகப் பார்த்திருப்பார்கள்.

அதிர்ஷ்டத்தின் சின்னமாக அது இந்துக்களால் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போதும் வீட்டுக்கு வெளியிலும் வாகனங்களிலும் இந்த முத்திரையைக் காணலாம்.

அந்த நேரத்தில் திபெத்தில் நிலைமை மாறிக் கொண்டிருந்தது.

13-ஆவது தலாய் லாமா 1933-ஆம் ஆண்டில் இறந்தார். புதிய தலாய் லாமாவுக்கு வயது வெறும் மூன்றுதான். எனவே அவரது பிரநிதியால் திபெத் ஆளப்பட்டு வந்தது. ஜெர்மானியர்கள் அங்கு சென்றபோது, அவர்களுக்கு திபெத்திய மக்களும் பிரதிநிதியும் உற்சாகமான வரவேற்புக் கொடுத்தார்கள்.

திபெத்துக்கு வந்த ஆரியர்களை இந்து மதத்தைப் போலவே, புத்த மதமும் பலவீனப் படுத்தியது என நாஜிக்களின் கற்பனையில் நம்பிக் கொண்டிருந்தார்கள் என்பதை திபெத்தியர்கள் அறிந்திருக்கவில்லை.

திபெத்தில் கிடைத்தவை என்னென்ன?


ஷாஃபரும் அவருடன் வந்தவர்களும் விலங்கியல், மானுவியல் ஆய்வுகள் என்ற பெயரில் தங்களது உண்மையான "ஆரியத் தேடல்" ஆராய்ச்சியை தொடங்க முற்பட்ட சிறிது காலத்திலேயே அதை திடீரென நிறுத்தவேண்டியதாயிற்று. 1939-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் தொடங்கிவிட்டது.

அந்தத் தருணத்தில் ​​376 திபெத்தியர்களின் மண்டை ஓடுகள், முக அம்சங்களை அளந்திருந்தார். 2,000 புகைப்படங்களை எடுத்திருந்தார். 350 பேரின் விரல் மற்றும் கை அச்சுகளைச் சேகரித்திருந்தார்.

அவர்களது குழுவில் வேறொருவர் 2 ஆயிரம் பொருள்களைச் சேகரித்திருந்தார். சுமார் 18,000 மீட்டர் நீளம் கொண்ட வீடியோ, 40,000 புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

அவர்களது ஆய்வுப் பயணம் பாதியில் நிறுத்தப்பட்டதால், அவர்கள் கல்கத்தாவில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை ஹிம்லர் செய்திருந்தார். மியூனிக் நகரில் அவர்களது விமானம் தரையிறங்கியபோது, நேரில் வந்து வரவேற்றார்.

திபெத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட "பொக்கிஷங்களை" சால்ஸ்பர்க்கில் உள்ள ஒரு கோட்டையில் ஷாஃபர் வைத்திருந்தார். ஆனால் 1945 இல் நேச நாட்டுப் படைகள் வந்தவுடன், அந்த இடம் சூறையாடப்பட்டது. பெரும்பாலான திபெத்தியப் புகைப்படங்களும் பொருள்களும் அழிக்கப்பட்டன.

பயணத்தின் மற்ற "அறிவியல் முடிவுகள்" என்று கூறப்பட்டவையும் போரில் நாஜிக்களுக்கு ஏற்பட்ட அதே முடிவைச் சந்தித்தன. அவை காணாமல் போயின அல்லது அழிக்கப்பட்டன. நாஜி மீதான கொடூரமான பார்வை ஏற்பட்டதால், போருக்குப் பிறகு அந்தப் பொருள்களையோ, தடயங்களையோ தேட யாரும் முயற்சி செய்யவில்லை.

"ஹிட்லர் மற்றும் இந்தியா: நாடு மற்றும் அதன் மக்களின் மீது அவரது வெறுப்பு பற்றி சொல்லப்படாத கதை" என்ற புத்தகத்தை எழுதியவர் வைபவ் புரந்தரே.

பிபிசி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 26, 2023 2:53 am

இந்தியாவில் 'தூய ஆரிய' ஆண்களிடம் கர்ப்பம் தரிக்க ஜெர்மானிய பெண்கள் வந்தார்களா?


ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? 278108e0-8527-11ed-90a7-556e529f9f89

லடாக்கின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 5,000 ப்ரோக்பாக்கள் தங்களை உலகின் எஞ்சியிருக்கும் கடைசி தூய ஆரியர்கள் என்று கருதுகின்றனர்.

நாஜிக்கள் 'மாஸ்டர் ரேஸ்' என்று கருதியது உண்மையிலேயே இவர்களைத்தானா அல்லது தங்களுக்கு பயன் அளிக்கும் என்பதால் ஒரு கட்டுக்கதையாக இந்தக்கூற்று சொல்லப்படுகிறதா?

நம் காலத்தின் மிகவும் பிரபலமான போர்க்களத்தை நெருங்கிப் பார்க்கும் உற்சாகம், பயணத்தை ஒரு சுமையாக கருதவிடாது.

லேயில் இருந்து வடமேற்காக நகரும் போது ​​கார்கில் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. ஆனால் பிபிசி குழு வேறு எதையோ கண்டுபிடிக்க இந்த சாலையில் சென்றது.

லேயில் இருந்து படாலிக் செல்லும் சுமார் 4 மணி நேர சாலை, நெடுஞ்சாலை போல் உள்ளது. இதற்குப் பிறகு சாலை குறுகி, சிந்து நதியின் கரையை அணைக்கிறது.

செப்பனிடப்படாத, சில இடங்களில் செப்பனிடப்பட்ட சாலைகளில் சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்த பிறகு கார்கோன் கிராமத்தை சென்றடைகிறோம்.

கிராமத்திற்கு சற்று முன்பு பியாமாவில் உங்கள் கவனம் முதலில் 2015 வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளை நோக்கி செல்கிறது.

வெறுமையான, கற்கள் நிறைந்த மலைகளில் பச்சை திட்டுகள் போன்ற வயல்வெளிகள், உள்ளூர் மக்களின் உழைப்பு நிறைந்த வாழ்க்கைக்கு சாட்சியமளிக்கின்றன. ஆனால் இந்த இடத்தின் மிகப்பெரிய சிறப்பு இந்த மக்களே.

ப்ரோக்பா ஏன் சிறப்பு?


கார்கோனில் உள்ள குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் நகர்புற மக்களைப்போல தோற்றமளிப்பவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுவதில்லை. என்ன ஆர்வம் அவர்களை இங்கு கொண்டு வந்துள்ளது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

கிராமத்தில் உள்ள ஒருவருடன் 5 நிமிட உரையாடல்கூட இந்தக் கேள்விக்கு உங்களை அழைத்துச் செல்கிறது. தூய ஆரியராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தனது சமூகத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது என்று சண்டிகரில் படிக்கும் சோனம் லாஹாமோ கூறுகிறார்.

"ஆரியர்கள் உயரமாகவும் அழகாகவும் இருந்தார்கள் என்று நீங்கள் படித்திருப்பீர்கள். இங்குள்ள மக்களிடையே அதை நீங்கள் பார்க்கலாம். நாங்களும் இயற்கையை வணங்குகிறோம். நாங்கள் தூய ஆரியர்கள் என்பதற்கு மிகப்பெரிய சான்றாக எங்கள் கலாச்சாரத்தை கருதுகிறோம்,”என்று அவர் சொன்னார்.

பியாமா, காகர்கோன், டார்ச்சிக், தாஹ் மற்றும் ஹனு ஆகிய இடங்களில் உள்ள மக்களின் முகங்கள் பிற லடாக் மக்களின் மங்கோலிய அம்சங்களிலிருந்து வேறுபட்டிருப்பதைக் காணலாம்.

லடாக்கின் மற்ற மக்கள் அவர்களுக்கு ப்ரோக்பா என்ற பெயரை அளித்துள்ளனர். உள்ளூர் மொழியில் இதற்கு நாடோடி என்று பொருள்.

பௌத்தர்களாக இருந்தாலும் ப்ரோக்பா, கடவுள்களையும் தெய்வங்களையும் நம்புகிறார்கள். நெருப்பு போன்ற இயற்கை சக்திகளை வணங்குகிறார்கள். இன்றைய தலைமுறையில் பலி கொடுப்பது எதிர்க்கப்பட்டாலும் இன்னும் அந்த வழக்கம் உயிர்ப்புடன் இருக்கிறது.

நெருப்பு மற்றும் இயற்கையின் பிற சக்திகளை வணங்குதல் மற்றும் பலியிடுதல் பற்றிய குறிப்பு வேதங்களிலும் காணப்படுகிறது.

இருப்பினும் ப்ரோக்பா கலாச்சாரத்தில், மாடுகளை விட ஆடுகளுக்கு உயர்ந்த அந்தஸ்து உள்ளது. மாறிவரும் காலத்திற்கேற்ப சில இடங்களில் பசுக்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. ஆனால் ஆட்டுப்பால் மற்றும் நெய் இன்னும் இந்த மக்களின் முதல் தேர்வாக உள்ளது.

லடாக்கி கலாசாரத்தில் இருந்து வேறுபட்டிருப்பது மட்டுமே அவர்களின் தூய ஆரியத்தின் சான்றாக இருக்க முடியாது என்பது உண்மைதான்.

இந்த சமூகத்தைச் சேர்ந்த ஸ்வாங் கேல்சன் கார்கில் கல்லூரியில் பாடம் நடத்துகிறார். தனது வரலாற்றின் அடித்தளத்திற்குச்செல்வதில் அவர் ஆர்வம் காட்டுகிறார்.

”பல வரலாற்றாசிரியர்கள் இதை சுட்டிக்காட்டியுள்ளனர். எடுத்துக்காட்டாக, ஜெர்மன் நிபுணர் ஏ.எச். ஃப்ராங்கி தனது 'தி ஹிஸ்டரி ஆஃப் வெஸ்டர்ன் திபெத்' என்ற புத்தகத்தில் எங்கள் மக்களை ஆரிய இனம் என்று குறிப்பிட்டுள்ளார்,” என்று அவர் கூறுகிறார்.

சமீபத்தில் தனது மொழியின் அகராதியை வெளியிட்ட கேல்சன், சமஸ்கிருதத்துடன் தனது மொழியின் ஒற்றுமைகளையும் சுட்டிக்காட்டுகிறார்.

”மற்ற லடாக்கி மொழிகளைப் போலல்லாமல், பல சமஸ்கிருத சொற்கள் எங்கள் மொழியில் காணப்படுகின்றன,”என்கிறார் அவர்.

உதாரணமாக, குதிரைக்கு அஷ்வா, சூரியனுக்கு சூர்யா போன்றவை. எண்கள் விஷயத்திலும் இதையே சொல்லலாம்.

தங்கள் சமூகம் பேரரசர் அலெக்சாண்டரின் வீரர்களின் வழித்தோன்றல்கள் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் பாகிஸ்தானின் கலாஷ் சாதி, இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலானா மற்றும் படா பங்கால் பகுதி மக்களும் இதே போன்ற கூற்றுக்களை முன்வைக்கின்றனர் என்று கேல்சன் கூறுகிறார்.

அவர்களின் மூதாதையர்கள் ஏழாம் நூற்றாண்டில் கில்கிட்-பல்டிஸ்தானிலிருந்து வந்து படாலிக் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியேறியிருக்கலாம் என்று ப்ரோக்பா நாட்டுப்புறக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் அறுவடை காலத்தில் கொண்டாடப்படும் பொனோனா அவர்களின் மிகப்பெரிய திருவிழா ஆகும்.

ஆரியர்களின் வரலாறு என்ன?


இன்றைய இந்தியாவில் இந்தக் கேள்வி அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால் ஆரியர்களைப் பற்றி ஒருமித்த கருத்து இல்லை என்பதே உண்மை.

இந்தோ-ஐரோப்பிய மொழி பேசும் இந்த குழு மத்திய ஆசியாவில் இருந்து கிமு 2000-1500 இல் இந்தியாவிற்கு வந்திருக்கும் என்று 20 ஆம் நூற்றாண்டு வரை நம்பப்பட்டது.

இந்த மக்கள் சிறந்த உணவு வாய்ப்புகளைத் தேடி அலைந்த நாடோடிகளா அல்லது தாக்குதல்கார்களா என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆரியர்களே இந்தியாவின் பூர்வீகக் குடிமக்கள் என்ற கோட்பாடும் கடந்த இரண்டு தசாப்தங்களில் வேகம் பெற்றுள்ளது.

பிரிட்டனின் ஹடர்ஸ்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்ட்டின் பி ரிச்சர்ட்ஸ் தலைமையிலான 16 விஞ்ஞானிகள் குழு உண்மையை கண்டறிய, மத்திய ஆசியா, ஐரோப்பா மற்றும் தெற்காசியாவின் மக்கள்தொகையின் ஒய்-குரோமோசோமை ஆய்வு செய்தது. ஒய்-குரோமோசோம் தந்தையிடமிருந்து மகனுக்கு மட்டுமே செல்கிறது.

Bronze age(கி.மு. 3000-1200)இல் இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

"பெண்களின் மரபணுக்கள் கிட்டத்தட்ட 55 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறிய முதல் மனிதர்களைப் போலவே இருக்கின்றன. ஆனால் ஆண்களின் மரபணுக்கள் வேறுபட்டவை என்றும் தென்மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவுடன் தொடர்புடையவை என்றும் எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது,” என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

இந்த இடம்பெயர்வு செயல்முறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்திருக்கும் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.

ஆரியர்கள் உண்மையில் மத்திய ஆசியாவின் காஸ்பியன் கடலைச் சுற்றியுள்ள புல்வெளிகளிலிருந்து தெற்காசியாவிற்கு வந்திருந்தால், அவர்களின் பாதை கில்கிட்-பல்டிஸ்தான் வழியாகச் சென்றிருப்பது சாத்தியமாகும்.

ப்ரோக்பாவின் டிஎன்ஏவை பரிசோதிக்க கேல்சன் முயற்சி செய்கிறார்.

இது குறித்து மேலும் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அவர் கருதுகிறார். ”ஆரியர்களின் வரலாற்று பிம்பம் வெற்றியாளர்களின் உருவமாகவே இருந்து வருகிறது. இன்றைய ப்ரோக்பா இளைஞர்கள் இந்த அடையாளத்தைப் பற்றி ஆர்வமாக இருப்பதற்கு இதுவே காரணம், ஆனால் இந்தக் கூற்றுக்கு அதிக ஆராய்ச்சி தேவை என்று நாங்கள் நம்புகிறோம்,”என்கிறார் அவர்.

’கர்ப்ப சுற்றுலா’ பற்றிய கதைகள்


இணையத்தின் வருகைக்குப் பிறகு, ப்ரோக்பாவின் இந்த அடையாளம் உலகெங்கிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'சுத்த ஆரிய விதை'யைத் தேடி ஜெர்மன் பெண்கள் இங்கு வந்த கதைகள் இந்த கிராமங்களில் பிரபலம்.

திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சீவ் சிவனின் 2007 ஆவணப்படத்தில், ஒரு ஜெர்மன் பெண் இதை கேமராவில் ஒப்புக்கொள்வதைக் கேட்கலாம்.

பெரும்பாலான ப்ரோக்பாக்கள் இதைப் பற்றி பேசுவதை தவிர்க்கிறார்கள்.

”பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜெர்மன் பெண் என்னை லே ஹோட்டலில் தன்னுடன் வைத்திருந்தார். கர்ப்பமான பிறகு அந்தப் பெண் ஜெர்மனிக்குத் திரும்பினார். சில வருடங்கள் கழித்து தன் குழந்தையுடன் என்னை சந்திக்க வந்திருந்தார்,” என்று படாலிக்கில் கடை நடத்தி வரும் இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தெரிவித்தார்.

இன்றைய ப்ரோக்பா என்ன விரும்புகிறார்?


ப்ரோக்பாவின் தற்போதைய தலைமுறையில் படிப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. பெண்களுக்கு படிப்பதற்கும் தொழில் செய்வதற்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் வேலைகள் குறைவாகவே உள்ளன.

பாதாமி(apricot) தோட்டம், ராணுவம் மற்றும் எல்லை சாலை அமைப்பின் வேலைகளில் இருந்து கிடைக்கும் ஊதியம்தான் மிகப்பெரிய வாழ்வாதாரமாக உள்ளது.

இன்றும் காலை மற்றும் மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் உள்ளது. ஆனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளும் திறக்கப்படுகின்றன.

மொபைலின் ஊடுருவல் அதிகரித்து வருவதால், ப்ரோக்பா இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மூலம் எல்லைக்கு அப்பால் உள்ள கில்கிட் இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்திகொண்டுள்ளனர்.

'அவர்களும் எங்கள் மொழியை பேசுகிறார்கள், தங்களை ஆரியர்கள் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள்' என்கிறார் லாமோ.

தங்கள் கிராமங்களில் வேலை செய்வதை விரும்புகிறார்களா அல்லது வாய்ப்பு கிடைத்தால் நகரத்தில் குடியேற விரும்புகிறார்களா என்று இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பல ப்ரோக்பாக்களிடம் கேட்டோம். இதற்கு கலவையான பதில்கள் கிடைத்தன.

”வாழ்வாதாரத்துடன் கூடவே எங்கள் அடையாளத்தையும் பாதுகாப்பதே இன்று எங்களுக்கு இருக்கும் பெரிய பிரச்னை,” என்கிறார் கேல்சன்.

21 ஆம் நூற்றாண்டின் இந்த தூய ஆரியர்களின் போராட்டம் பேரசுகளுக்காக அல்ல, வேலைவாய்ப்பிற்காக உள்ளது. ஆனால் தங்களின் அடையாளத்தை இழந்த பிறகு அது கிடைக்குமேயானால் அந்த வெற்றி முழுமையாக இருக்காது.

பிபிசி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 26, 2023 3:00 am

ஹிட்லர் திட்டத்துக்காக ஆரிய பெண்கள் பிரசவித்து தந்த பல ஆயிரம் குழந்தைகள் - அதிகம் அறியப்படாத வரலாறு



ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? _120785513_gettyimages-105211758
இரண்டாம் உலகப் போர் காலத்தில் லெபென்ஸ்போர்ன்
திட்டத்தின்கீழ் பிரசவிக்கப்பட்ட குழந்தைகள்


அடோல்ஃப் ஹிட்லர், 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பிறந்து, 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி இறந்தார் என்பதெல்லாம் வரலாறு. 1934இல் அந்த நாட்டின் தலைவராக உருவெடுத்த அவர், 'ஃபியூரர்' என 'மகா தலைவர்' பட்டத்துடன் அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாஜிப்படைகள் தோல்வியுற்றன. அந்த படையினர் தன்னை நெருங்கி வரும் முன்பே ஹிட்லரும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்ட வரலாறை படித்திருப்போம்.

முதலாம் போரில் வீழ்ச்சியடைந்த ஜெர்மன் மக்கள் தொகையை மீண்டும் பெருக்க ஒரு அதிரடி திட்டத்தை அந்த நாட்டின் நாஜிப்படை அறிமுகப்படுத்தியது. அதில் பல பெண்கள் தாமாக முன்வந்து கர்ப்பம் தரித்து நாட்டுக்காக குழந்தைகளைப் பெற்றெடுக்க ஆர்வம் காட்டியது, நாம் அதிகம் படித்திருக்காத வரலாறு. அத்தகைய ஒரு மாறுபட்ட வரலாற்றுப்பதிவைத்தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

1936 ஆம் ஆண்டில், நாஜி ஆதரவாளரும் பட்டதாரியுமான ஹில்டேகார்ட் ட்ரூட்ஸ் ஜெர்மனியின் இனரீதியான 'தூய்மையான' பெண்களில் ஒருவராக ஒரு திட்டத்தில் சேர்க்கப்பட்டார். ஆரிய குழந்தையை உருவாக்கும் நம்பிக்கையில் 'ஷுட்ஸ் ஸ்டேஃபல்' எனப்படும் எஸ்.எஸ் அதிகாரிகளுடன் உடலுறவு கொள்வது இந்த பெண்கள் நாஜி ஆளுகைக்கு ஆற்றும் சேவையாகப் பார்க்கப்பட்டது.

இந்த எஸ்.எஸ். அதிகாரிகள், கறுப்பு நிற சீருடையில் ஹிட்லரின் மெய்க்காவல் படையின் முக்கிய கேடயமாக விளங்கியவர்கள். இதன் தலைவராக இருந்தவர் ஹிம்லர். ஹிட்லரின் நிழலாகவும் அவரது முடிவுகளை செயல்படுத்தும் தளபதியாகவும் இவர் செயல்பட்டார்.

இவரது எண்ணத்தில் உருவான தன்னார்வ பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் திட்டம் தான் லெபென்ஸ்போர்ன். இதற்கு தமிழில் 'வாழ்க்கையின் நீரூற்று' என அர்த்தம்.

ஜெர்மனியில் அக்காலத்தில் வீழ்ச்சியடைந்த ஜெர்மனிய பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், நாஜி கொள்கைக்கு கட்டுப்பட்ட படை வம்சத்தை புனித இனமாக வகைப்படுத்தும் முயற்சியாகவும் இந்த லெபென்ஸ்போர்ன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆதி ரோமாபுரி மற்றும் ஜெர்மன் சாம்ராஜ்ஜியத்தின் வழிவந்தவராக தன்னை அழைத்துக் கொண்ட ஹிட்லரின் ஆளுகை (1933-45) நடந்த 12 ஆண்டுகளில், குறிப்பாக ஜெர்மனி மற்றும் நார்வேயில் சுமார் 20 ஆயிரம் குழந்தைகள், லெபென்ஸ்போர்ன் திட்டப்படி இனப்பெருக்கம் செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டப்படி எஸ்.எஸ். படையில் இருப்பவர்கள் குறைந்தபட்சம் நான்கு பிள்ளைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் ஹிம்லர் வகுத்த ஆரிய குணாதியம் கொண்ட பெண் வழியாகவே அந்த குழந்தை பெற்றெடுக்கப்பட வேண்டும். ஆனால், அவர் எதிர்பார்த்த பலன் திட்டத்தின் மூலம் கிடைக்கவில்லை.

ஹிட்லரால் கவரப்பட்ட பெண்கள்


இந்த காலகட்டத்தில்தான் தன்னார்வ முறையில் குழந்தைகளை ஈன்ற இளம் பெண்களில் ஒருவரது வாழ்வை மையமாக வைத்து பிரிட்டிஷ் எழுத்தாளர் கைல்ஸ் மில்டன் தமது புத்தகத்தை எழுதியிருந்தார். அந்த பெண்ணின் பெயர் 'ஹில்ட்கார்ட் ட்ரூட்ஸ்'.

ஹிட்லரின் நாஜி கட்சியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே இளைஞர் இயக்கத்தின் (பிடிஎம்) பெண்கள் அணியில் ட்ரூட்ஸ் உறுப்பினராக இருந்தார். ஜெர்மன் மொழியில் இந்த அணியை 'பண்ட் டாய்ச்சர் மேடல்' (Bund Deutscher Mädel) என அழைத்தனர்.

இந்த ஹில்ட்கார்ட், ட்ரூட்ஸின் அனுபவத்தை ஆராய்ந்து, ஹிட்லருக்காக கர்ப்பம் தரிக்க பல இளம் ஜெர்மன்கள் ஏன் ஆர்வமாக இருந்தனர் என்பதை பிரிட்டிஷ் எழுத்தாளர் கைல்ஸ் மில்டன் தமது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

ஹிட்லரின் தலைமைக்கு, ஹில்ட்கார்ட் ட்ரூட்ஸ் விசுவாசமான ஆதரவாளராக இருந்தார். அவர் 1933இல் பிடிஎம் அணியில் சேர்ந்து, அதன் வாராந்திர கூட்டங்களில் கலந்து கொண்டார்.

"அடோல்ஃப் ஹிட்லர் மீதும் எங்களுடைய புதிய சிறந்த ஜெர்மனி குறித்தும் நான் பைத்தியக்காரத்தனமான நம்பிக்கையை கொண்டிருந்தேன். இளைஞர்களான நாங்கள் ஜெர்மனிக்கு எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்பதை அந்த அணியில் சேர்ந்த பிறகே உணர்ந்தேன்," என்று ஹில்ட்கார்ட் கூறியிருக்கிறார். ட்ரூட்ஸ் விரைவில் உள்ளூர் அமைப்பின் முக்கிய தலைவரானார்.

"ஜெர்மனியர்களுக்கே உரிய பொன்னிற முடி மற்றும் நீலக் கண்கள் காரணமாக 'நோர்டிக்' பெண்ணின் கச்சிதமான உதாரணமாக நான் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்டேன். நீளமான கால்கள், வலுவான புஜங்கள், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு வசதியான அகலமான இடுப்பு எலும்புக்கட்டு போன்ற அம்சங்கள் எனக்கு இயல்பாகவே இருந்தன," என்று ட்ரூட்ஸ் கூறினார்.

1936ஆம் ஆண்டில், ட்ரூட்ஸுக்கு 18 வயதானபோது, தனது பள்ளிப்படிப்பை அவர் முடித்தார், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். ட்ரூட்ஸின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு ஆலோசனையை அவருக்கு பிடிஎம் தலைவர் ஒருவர் வழங்கினார்.

"வாழ்வில் உருப்படியாக என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், ஃப்யூரருக்காக (ஹிட்லரின் பட்டப்பெயர்) ஒரு குழந்தையை ஏன் பெற்றுக் கொடுக்கக்கூடாது? ஜெர்மனிக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிகமாக தேவைப்படுவது இன ரீதியாக பங்களிப்பு." என அந்த தலைவர் கூறினார்.

அதுவரை லெபென்ஸ்போர்ன் எனப்படும் அரசு ஆதரவு பெற்ற திட்டத்தைப் பற்றி ட்ரூட்ஸ் அறிந்திருக்கவில்லை. அதன் நோக்கம் இனப்பெருக்கம் மூலம் பொன்னிற முடி, நீலக்கண்ணுள்ள 'ஆரிய' குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதாகும். இனத் தூய்மை உள்ள 'கன்னிப் பெண்கள்' எஸ்.எஸ். அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால், அவர்கள் கர்ப்பம் தரித்து ஆரிய குழந்தைகளை பெற்றெடுப்பார்கள் என்று பிடிஎம் தலைமை நம்பியது.

இந்த லெபென்ஸ்போர்ன் திட்டம் எப்படி வேலை செய்கிறது என்பதை ட்ரூட்ஸுக்கு அந்த தலைவர் விளக்கினார். ஆரம்பத்தில் சில மருத்துவ பரிசோதனைகளுக்கு தன்னார்வலர் உட்பட வேண்டும். அதன் மூலம் அவரது வம்சம் உறுதிப்படுத்தப்படும். எவ்வித யூத ரத்தமும் அவரது உடலில் கலக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவே இந்த பரிசோதனை. பரிசோதனைகள் முடிந்து விட்டால், எஸ்.எஸ். துணைவரை தேர்வு செய்யும் கட்டத்தை அந்த பெண் தன்னார்வலர் அடைவார்.

பதின்ம வயதை கடந்த நிலையில், ஹிட்லருக்காக குழந்தை பெற்றுக் கொடுக்கும் திட்டம் ட்ரூட்ஸை மெய்சிலிர்க்க வைத்தது. உடனடியாக திட்டத்துக்கு உடன்பட ஒப்புக்கொள்ளும் படிவங்களில் கையெழுத்திட்டார். இதுபோன்ற முரண்பாடான திட்டத்துக்கு தமது பெற்றோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதால், அவர்களிடம் ஓராண்டுக்கு தேசிய சோஷலிச பயிற்சிக்காக உறைவிட பள்ளியொன்றுக்கு செல்லவிருப்பதாக கூறிச்சென்றார்.

பிரம்மாண்ட கோட்டையில் சொகுசு வசதிகள்


இதையடுத்து பிடிஎம் தலைமை முன்பு ஆஜரான அவரை டேகர்ன்ஸே அருகே உள்ள பவேரியா என்ற இடத்துக்கு நாஜி அதிகாரிகள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அங்குள்ள பிரும்மாண்டமான கோட்டையில் இவரைப் போலவே மேலும் 40 பெண்கள் இருந்தனர். எல்லோரும் உண்மையான பெயரை மறைத்துக் கொண்டு புனை பெயரில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். இங்குவரை வருவதற்கு இந்த பெண்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் இவர்கள் குறைந்தபட்சம் தங்களுடைய தாத்தா வழி முதல் ஆரிய இனத்தவர்தான் என்பதை நிரூபிக்க ஓர் சான்றிதழ் மட்டுமே.

அந்த கோட்டை, செல்வச்செழிப்பின் உச்சமாக இருந்தது. விளையாட்டுகள், உள்ளரங்கு விளையாட்டுகளுக்கு என பெரிய, பெரிய பொதுவான அறைகள் மற்றும் அரங்குகள் அதனுள் இருந்தன. நூலகம், இசை கேட்கும் அறை, திரையரங்கு கூட அங்கு இருந்தது. அங்கு பரிமாறப்பட்ட உணவு, தனது வாழ்நாளில் அதுவரை சுவைத்திராததாக இருந்தது என்று ட்ரூட்ஸ் கூறினார். வேலை செய்யவே அவசியமற்ற நிலை போல, எண்ணிலடங்கா பணியாளர்கள் அங்கு இருந்தனர். அந்த சூழ்நிலை, தன்னை சோம்பேறியாக்கியதாகவும், வெகு சீக்கிரத்திலேயே அந்த சொகுசு வாழ்க்கைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டதாகவும் ட்ரூட்ஸ் தெரிவித்தார்.

நார்வேஜிய தாய்க்கும் ஜெர்மன் தந்தைக்கும் பிறந்த 154 நார்வேஜிய குழந்தைகளில் ஒருவரான கெர்ட் ஃபீச்சர், கிழக்கு பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் 2007ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி தமது வழக்கறிஞருடன் பேசிக் கொண்டிருக்கிறார். இவரைப் போன்ற குழந்தைகள், லெபென்ஸ்போர்ன் குழந்தைகள் ஆக அந்த காலத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அந்த கோட்டையின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் எஸ்.எஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் கையசைவில் இருந்தது.

"நாங்கள் கோட்டைக்குள் நுழைந்தவுடனேயே ஒவ்வொருவரையும் அங்குலம் விடாமல் அந்த மருத்துவர் பரிசோதனை செய்தார். எவ்வித பரம்பரை நோயும் இல்லை, மது மீது நாட்டம் கிடையாது, குடும்பப் பற்று கிடையாது என நாங்கள் அனைவரும் சுய விருப்பத்துடன் ஆவணத்தில் கையெழுத்திட கேட்டுக் கொள்ளப்பட்டோம்," என்று ட்ரூஸ்ட் தெரிவித்தார்.

அந்த மருத்துவர், தாங்கள் பெற்றெடுக்கும் எந்தவொரு குழந்தைக்கும் உரிமை கோர மாட்டோம் என்ற ஆவணத்திலும் கையெழுத்திட வேண்டும் என்று கூறினார். அந்த குழந்தைகள் தேசத்தின் சொத்தாக கருதப்படுவர் என்பதையும் அந்த மருத்துவர் தெளிவாக கூறினார்.

அவ்வாறு பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகள், நாஜி சிந்தனைக்கு விசுவாசமாக மாறும் கட்டம் வரை அவர்கள் நாச்சின் சிறப்பு கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படுவர்.

ஒரு வாரம் பழகி துணைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு


இந்த விதிகள் அனைத்துக்கும் ட்ரூட்ஸ் மற்றும் அவருடன் இருந்த பிற பெண்கள் ஒப்புக் கொண்டனர். இதைத்தொடர்ந்து ஒப்பந்த ஆவணங்கள் கையெழுத்தானதும், தங்களுடைய படுக்கையை பகிர விரும்பும் துணைவர்களை இந்த பெண்கள் தேர்வு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த இளைஞர்களும் உயரமான தோற்றம், நீலக்கண்களைக் கொண்டவர்களுமாக இருந்தனர். பரஸ்பர அறிமுகம், குழு விளையாட்டுகள், ஒன்றாக சேர்ந்து படங்களை பார்ப்பது மற்றும் சமூக கலந்தாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்கள் பேசிப் பழகும் வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டது.

"ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது துணைவரை தேர்வு செய்ய ஒரு வாரம் அவகாசம் தரப்பட்டது," என்று ட்ரூட்ஸ் தெரிவித்தார். துணைவரைத் தேர்வு செய்யும்போது உங்களுடைய தலை முடி நிறமும் அவரது கண்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பெண்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இப்படி பழகும் எந்தவொரு ஆண் வீரர் அல்லது அதிகாரியின் பெயரும் அந்த பெண்களிடம் பகிரப்படவில்லை. அதுதானே லெபென்ஸ்போர்ன் திட்டத்தின் அடிப்படை.

"எல்லா நடைமுறையும் முடிந்து மாதவிடாய் தொடங்கிய பத்தாம் நாளில் எங்களுடைய துணைவருடன் சேரும் கட்டம் வந்தது. அதற்கு முன்பாக ஒரு மருத்துவப் பரிசோதனைக்கு நாங்கள் உட்படுத்தப்பட்டோம். அதன் பிறகு தனி அறையில் எங்களுக்கு பிடித்த, நாங்கள் தேர்வு செய்த ஆணுடன் இரவைக் கழிக்க அனுமதிக்கப்பட்டோம்."

"இது ஒரு பாலியல் உறவு கொள்ளும் செயல்பாடு என்பதை தாண்டி, எனது ஞானத்தந்தை ஃபியூரருக்காக (ஹிட்லர்) செய்கிறேன் என்ற பெருமையே எனக்கு அதிகமாக இருந்தது. உறவில் ஈடுபட்ட நானும் சரி, எனது துணைவரும் சரி, எங்களுடைய பரஸ்பர நோக்கத்தை புரிந்து கொண்டவர்களாக இருந்தோம். இதை செய்வதில் எங்களுக்கு எவ்வித அவமானமும் இருக்கவில்லை. சொல்லப்போனால், இது ஒரு முட்டாள்தனமான நினைப்பாக இருக்கலாம். ஆனால், என்னுடன் சேர்ந்த துணைவரின் வசீகர தோற்றத்தால் நானும் கவர்ந்து இழுக்கப்பட்டேன்," என்றார் ட்ரூட்ஸ்.

தாயிடம் இருந்து குழந்தைகள் பிரிப்பு


அந்த வாரத்தின் முதல் மூன்று நாட்களும் அந்த எஸ்.எஸ். அதிகாரி ட்ரூட்ஸின் படுக்கையை பகிர்ந்து கொண்டார். மற்ற மூன்று நாட்களும் அவருக்கு வேறு பெண்ணுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள கட்டளையிடப்பட்டிருந்தது.

ட்ரூட்ஸ் அடுத்த சில வாரங்களிலேயே தாம் கருவுற்று இருப்பதை உணர்ந்தார். பரிசோதனைகள் அதை உறுதிப்படுத்தியதும், அவர் அந்த கோட்டையில் இருந்து மகப்பேறு இல்லத்துக்கு மாற்றப்பட்டார்.

"கோட்டையின் உள்ளேயே இருந்த தனக்கு இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் சூழ்நிலை வரும் என்பதை ட்ரூட்ஸ் நினைத்திருக்கவில்லை. பிரசவ நாளும் வந்தது. அது வலி நிறைந்ததாக இருந்தது. இப்போதைய நவீன ஜனநாயகத்தில் வலியின்றி ஊசி செலுத்தி பிரசவம் நடப்பது போல அந்த காலத்தில் எந்தவொரு ஜெர்மன் பெண்ணும் தனக்கு செயற்கையாக பிரசவம் நடப்பதை விரும்ப மாட்டார்," என்றார் ட்ரூட்ஸ்.

பிரசவத்தில் ட்ரூட்ஸுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அவர் பாலூட்டினார். இரண்டு வாரங்களுக்கு அக்குழந்தை அவரது அரவணைப்பில் இருந்தது. பிறகு தாயிடம் இருந்து குழந்தை பிரிக்கப்பட்டு சிறப்பு எஸ்எஸ் விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்பட்டது. நாஜிப்படையின் விசுவாசமான வீரனாக அந்த குழந்தை வளர்க்கப்படலாம்.

தான் உறவு கொண்ட எஸ்.எஸ் அதிகாரியை ட்ரூட்ஸ் அதன் பிறகு பார்க்கவில்லை. அந்த குழந்தையும் பார்த்திருக்காது என்று அவர் நம்பினார்.

உடல் நலம் தேறி வீடு திரும்பிய அவரிடம் தேசப்பணிக்காக மேலும் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று பிடிஎம் தலைவர் ஆசையைத் தூண்டினார். ஆனால், வெகு விரைவிலேயே மற்றொரு இளம் அதிகாரியுடன் நட்பு கொண்டு அவரை ட்ரூட்ஸ் திருமணம் செய்து கொண்டார்.

தனது புதிய கணவரிடம் ஃபியூரருக்காக குழந்தை பெற்றுக் கொடுத்த திட்டத்தில் தான் முன்பு பங்கெடுத்தது பற்றி அவர் தெரிவித்தார். ஆனால், தான் எதிர்பார்த்தபடி அவரது கணவர் ட்ரூட்ஸின் பேச்சை கேட்டு மகிழ்ச்சி கொள்ளவில்லை. வெளிப்படையாக தனது மனைவியை அவர் விமர்சிக்கவும் இல்லை.

ஆனாலும், ஃபியூரருக்கு ஆற்றிய கடமையாகவே அதை செய்ததாக ட்ரூஸ்ட் உறுதியாக நம்பினார்.

ட்ரூட்ஸால் கடைசிவரை தனது குழந்தைக்கு என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்கவில்லை, அந்த குழந்தையின் தலைவிதி ஒரு மர்மமாகவே இருந்தது. பல லெபென்ஸ்பார்ன் குழந்தைகளைப் போலவே, அந்த குழந்தையும் வளர்ந்து பின்னாளில் போருக்குப் போயிருக்கும். அந்த குழந்தையின் பிறப்பு மற்றும் வளர்ப்பு முற்றிலும் களங்கமாகவே இருந்திருக்கும் என்று அவர் கருதத் தொடங்கினார்.

லெபன்ஸ்பார்ன் திட்டத்தின்கீழ் 20 கோடி குழந்தைகளையாவது பெற்றெடுத்தால் உலகை தமது காலடிக்குள் கொண்டு வந்து விடலாம் என்பது ஹிட்லரின் தளபதிகளில் ஒருவரான ஹிம்லரின் நம்பிக்கை. ஆனால், அவரது திட்டம் ஈடேற ஜெர்மனியில் வாழும் தன்னார்வ பெண்கள் மட்டும் போதவில்லை. அதனால், ஆரிய வம்சத்துக்கான குணாதிசயங்கள் பொருந்தியவர்கள் உலகின் வேறு பகுதிகளில் இருந்தாலு்ம், அவர்களை கடத்தி ஜெர்மனிக்கு அழைத்து வர புறப்பட்டது ஹிட்லரின் நாஜிப்படை.

குறிப்பாக, உலகப் போர் காரணமாக ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐரோப்பாவின் பிற இடங்களில் வாழ்ந்த ஜெர்மனியர்களை இலக்கு வைத்து இந்த படை தேடுதல் வேட்டையை நடத்தியதாக வரலாறு கூறுகிறது.

ஹிட்லரின் ஆளுகையில் அந்த குறிப்பிட்ட பன்னிரண்டு ஆண்டுகளில், முக்கியமாக ஜெர்மனி மற்றும் நார்வேயில் ட்ரூட்ஸை போலவே பிற பெண்கள் மூலம் சுமார் 20,000 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போர் முடிந்த பிறகு கைப்பற்றப்பட்ட அந்த குழந்தைகளில் பலர் தத்துக் கொடுக்கப்பட்டனர். அவர்களின் பிறப்புப் பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. அடையாளமின்மை, சமூக புறக்கணிப்பு போன்ற பல துவேஷங்களுக்கு அந்த குழந்தைகள் ஆளாயினர். தங்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிக்காக அதில் சிலர் நீதிமன்றம் சென்றனர்.

அந்த பிஞ்சுக் குழந்தைகளில் பலர் வயோதிகம் காரணமாக காலப்போக்கில் இறந்து விட்டனர். மற்றவர்களின் 'பிறப்பு ரகசியம்' கண்டறியப்படாத களங்கமாகவே வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள ட்ரூட்ஸ் தொடர்பான தகவல்கள், இருபதாம் நூற்றாண்டில் ஆறு கண்டங்களில் நடந்த உலகின் 100 வினோதமான வரலாற்றை விவரிக்கும் கைல்ஸ் மில்டனின் புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டு இங்கே வழங்கப்பட்டிருக்கிறது.
பிபிசி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 26, 2023 11:18 am

"ஆரியர்களின் வரலாற்று பிம்பம் வெற்றியாளர்களின் உருவமாகவே இருந்து வருகிறது. இன்றைய ப்ரோக்பா இளைஞர்கள் இந்த அடையாளத்தைப் பற்றி ஆர்வமாக இருப்பதற்கு இதுவே காரணம், ஆனால் இந்தக் கூற்றுக்கு அதிக ஆராய்ச்சி தேவை என்று நாங்கள் நம்புகிறோம்,”என்கிறார் அவர்."




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக