புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
74 Posts - 44%
heezulia
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
6 Posts - 4%
prajai
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
10 Posts - 5%
prajai
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
8 Posts - 4%
Jenila
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_m10தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2009 12:30 am

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2009 12:33 am

மேஷம் ( சித்திரை முதல் பங்குனி வரை)

அசுவினி, பரணி, கார்த்திகை 1

பணவரவு (55/100)


உங்களுக்கு குரு, சனி, கேது அனுகூலக் குறைவான இடத்தில் உள்ளனர். ஆனால், கேதுவும், சனியும் செப்டம்பரில் பெயர்ச்சியான பிறகு எண்ணற்ற பலன்களை வழங்குவர். திட்டமிட்டு செயல்படாத பட்சத்தில், பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பணவரவு தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு இருக்கும். கடன்கள் அடைபடும். குருபகவான் அதிகாரவக்ரகதியாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் கும்பராசியில் அமருகிறார். அந்த சமயத்தில், ஆதாய பணவரவு தாரளமாக கிடைக்கும். நன்னடத்தை குறைவானவர்களின் சேர்க்கையால் சிரமங்களைச் சந்திக்க வேண்டி வரும். ஆண்டின் பிற்பகுதியில் நிலைமை சீராகும்.


வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். சிலர் பழைய வாகனத்திற்கு பதிலாக புதிய வாகனம் வாங்குவர். புத்திரர்களின் செயலில் இருந்த மந்தநிலை மாறும். திறமையை வளர்ப்பதிலும் புதிய விஷயங்களை அறிவதிலும் கவனம் கொள்வர். வழக்கு விவகாரத்தில் அனுகூல நிலை ஏற்படும். தம்பதியர் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு சரியாகும். இது சமயம் திருமணமுயற்சி செய்கிறவர்களுக்கு அனுகூல நிலை கை கூடும். தந்தை வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். உடல்நலம் சுமாராக இருக்கும்.


வெளிநாடு வேலை வாய்ப்பை விரும்புபவர்களுக்கு மே, ஜூன், ஜூலை மாதங்களில் வெற்றி கிடைக்கும்.


தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் சுமாரான நிலையே தென்படுகிறது. இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருத்துவ உபகரணங்கள், வீட்டு சாதனப் பொருட்கள், கட்டுமானப் பொருள் உற்பத்தி செய்பவர்கள் சீரான உற்பத்தியும், ஓரளவு லாபமும் கிடைக்கந் பெறுவர். இதர தொழிலதிபர்களுக்கு இவர்களை விட சற்று மேம்பட்ட நிலை இருக்கும். தொழிலை நடத்த கடன் வாங்கும் போது தகுதிக்கு மீறி செயல்பட்டால், சிரமங்களைச் சந்திக்க நேரிடும். உற்பத்தி செலவு அதிகரிக்கும்,


வியாபாரிகள்: கம்ப்யூட்டர், மொபைல், விளையாட்டு சாதனங்கள் பாத்திரங்கள், கட்டுமானப் பொருட்கள், காலணி, கம்பளி, தோல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பர்னிச்சர், அச்சக உபகரணம், டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்துபவர்கள் கடும் முயற்சியின் பேரிலேயே தொழிலை நடத்த முடியும். விற்பனையும், லாபமும் ஓரளவுக்கு இருக்கும். நகை, ஜவுளி, வாசனைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவர். பிற வியாபாரிகளுக்கும் சுமாரான லாபமே இருக்கும்.


பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு கவனச்சிதறல் காரணமாக அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். நிர்வாக நடவடிக்கையும் இடமாற்றமும் ஏற்படும். அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும் அளவுக்கு பணவரவு இருக்கும்.


மாணவர்கள்: தகவல் தொழில்நுட்பம், விவசாயம், சிவில் இன்ஜினியரிங், மருத்துவம், வங்கியியல், ஆசிரியர் பயிற்சி, நிதிநிர்வாகம், கேட்டரிங், சட்டம், விலங்கியல், இலக்கியம், பேஷன் டிசைனர் ஆகிய துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு சுமாராகவே இருக்கும். கவனத்துடன் படிப்பதால் தரத்தேர்ச்சி பெறுவர். வேலைவாய்ப்பு கிடைப்பதில் தடங்கல் ஏற்படும். படிப்புக்கான பணவசதியும் சுமாராகவே இருக்கும்.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு கவனக்குறைவு காரணமாக பிரச்னைகள் ஏற்படும். சலுகைகள் அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை. குடும்பப் பெண்கள், கணவரின் அன்பைப் பெற்று மகிழ்ச்சியாக இருப்பர். மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் நடத்தும் பெண்கள் மூலதனத்தை அதிகரித்தால் பணச்சிக்கலை சந்திப்பர். உற்பத்தி, லாபம் சுமாராகவே இருக்கும். சரக்கு பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதால் நன்மை உண்டு.


அரசியல்வாதிகள்: கடந்த காலங்களில் செய்த நற்பணிகளுக்கு குறைந்த அளவிலான அங்கீகாரமும் பாராட்டுமே கிடைத்தன. வரும் மே, ஜூன், ஜூலை மாங்களில் புதிய திட்டங்களை செயல்படுத்தி அபரிமிதமான வளர்ச்சி பெறுவீர்கள். எதிரியாக செயல்பட்டவர்களும் உங்களைத் தேடி வந்து நட்பு கொள்ள முயற்சிப்பர். ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள்.


விவசாயம்:
வருடத்தின் முற்பகுதியில் பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பில் செலவு அதிகரிக்கும். பலன் குறைந்த அளவிலேயே இருக்கும். வருட பிற்பகுதியில் மகசூல் அதிகரிக்கும். கால்நடைகள் மூலம் தாராள வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்தும் அனுகூலம் உள்ளது.


பரிகாரம்:
நடராஜரை வழிபடுவதால் சிரமங்களின் தன்மை குறையும்.வணங்க வேண்டிய தலம்: சிதம்பரம் நடராஜர் கோயில்

பரிகாரப் பாடல்:

குனித்த புருவமும்
கொவ்வைச் செவ்வாயும்
குமிண்சிரிப்பும்
பனித்த சடையும்
பவளம்போல் மேனியும்
பால் வெண்ணீறும்
இனித்தமுடன்
எடுத்த பொற்பாதமும்
காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும்
வேண்டுவதே இம்மாநிலத்தே.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2009 12:36 am

ரிஷபம் ( சித்திரை முதல் பங்குனி வரை)

கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2

நன்மை (60/100)


உங்கள் ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களில் குரு, கேது மிகுந்த அனுகூலத் தன்மையுடன் உள்ளனர். ராகுவும், சனியும் சில தொந்தரவுகளைத் தருவர். பேச்சைக் குறைத்தால், இந்த தொந்தரவுக்கும் இடமில்லை. பணவரவை உயர்த்திக் கொள்ள வாய்ப்புகள் தேடி வரும்.


வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். புதிதாக அபிவிருத்தி பணிகளைச் செய்தால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. வாகனங்களை வேகமாக இயக்குவதைத் தவிர்க்கவும். புத்தாண்டின் ஆறுமாதத்திற்கு பின் பெயர்ச்சியாகிற சனி பகவான், கண்டச்சனி என்ற நிலையில் இருந்து விலகுவார். அப்போது இந்த நிலைமை சீராகும். ஆனால், புத்திரர்கள் வகையில் சில தொல்லைகளை சந்திக்க நேரிடும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் அதிகார


வக்ரகதியாக கும்ப ராசியில் அமருகிறார். இந்த மூன்று மாதங்களில் கடன் வாங்கினால் அடைப்பதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். மேலும், இக்காலத்தில் தேவையற்ற வம்பு வழக்குகளிலும் மாட்ட நேரும். தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமை தேவை. வருடத்தின் முதல் ஆறு மாதத்திற்குள் குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்த அனுகூலம் உள்ளது. வெளிநாடு வேலைவாய்ப்பை விரும்புபவர்களுக்கு தடைகளின் பேரிலேயே விருப்பம் நிறைவேறும்.


தொழிலதிபர்கள்: ஜவுளி, பால், சாயப்பொருட்கள், காகிதம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அலங்காரப் பொருள், பெயின்ட் தொழிற்சாலை அதிபர்களுக்கு இந்தச் சிக்கல் அதிகமாக இருக்காது. இவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று தாராள லாபம் பெறுவர். தடைபட்ட அபிவிருத்தி பணிகளை இனிதாக நிறைவேற்றலாம். ஆஸ்பத்திரி, ஓட்டல், லாட்ஜ், டிராவல் ஏஜன்சி நடத்துபவர்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை புரிந்து தொழிலில் வளர்ச்சி இலக்கை எட்டுவர். மற்ற தொழிலதிபர்கள் சிரமங்களின் பேரிலேயே லாபம் ஈட்ட முடியும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, அழகு சாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், மாவு பொருள், உணவு பண்டங்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், அலங்கார பொருட்கள், விளையாட்டு சாதனங்கள், கட்டுமானப் பொருட்கள், பர்னிச்சர், ஆட்டோமொபைல் உதிரிபாகம் விற்பனை செய்பவர்கள் திறமையாக நடந்து வளர்ச்சியும் கூடுதல் லாபமும் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட சற்று குறைவான லாபம் கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், தங்கள் பணியை சிறப்பான முறையில் நிறைவேற்றுவர். நிர்வாகத்தின் சலுகையும், பாராட்டும் கிடைக்கும். பணி இடங்களில் அதிக வாக்குவாதம், பகைமை எண்ணம் உருவாக வாய்ப்பிருக்கிறது. தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் வருடமுற்பகுதியில் பணியில் சிறப்பு பெறுவர்.


மாணவர்கள்: தகவல் தொழில்நுட்பம், சட்டம், இன்ஜினியரிங், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, இலக்கியம், ஜர்னலிசம், ஆராய்ச்சி படிப்பு, ஓவியம், போட்டோ, வீடியோகிராபி, விளம்பரமாடலிங், பிரின்டிங் டெக்னாலஜி, கேட்டரிங் பயிற்சி பெறும் மாணவர்கள் பொறுப்புடன் படித்து தரத்தேர்ச்சி அடைவர். வேலைவாய்ப்பு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். படிப்புக்கான செலவு அதிகரிக்கும்.


பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள், பணியிடங்களில் இருந்த சிரம சூழ்நிலை விலகப்பெறுவர். தேங்கி நின்ற வேலைகள் எளிதில் முடிந்து விடும். பதவி உயர்வு, விரும்பிய பணியிட மாற்றம், மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடும் முயற்சியின் பேரில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு சிரமப்பட வேண்டியிருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அதிக விற்பனையும் நிறைவான பணவரவும் பெறுவர்.


அரசியல்வாதிகள்: உங்களின் சேவையால் பலன் பெற்றவர்கள் விசுவாசத்துடன் நடந்து கொள்வர். இருப்பினும் அரசியல்பணியில் ஆர்வக்குறைவான மனநிலையைப் பெறுவீர்கள். பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு கிடைப்பது சிரமமே. புத்திரர்களின் செயல்பாடுகள் உங்களின் வளர்ச்சிக்கு இடையூறு தருவதாக அமையும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு லாபம் நன்றாக இருக்கும்.

விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனைத்து உதவிகளும் தடங்கலின்றி கிடைக்கும். தாராள மகசூல் உண்டாகும். கால்நடைகளுக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். நிலம் தொடர்பான விவகாரங்களில் உள்ள சட்ட சிக்கல்கள் தீர கால தாமதமாகும். சுபநிகழ்ச்சிகளை எளிய முறையில் நடத்துவதால் நற்பலன் பெறலாம்.


பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி சீரான முன்னேற்றம் தரும்.


செல்ல வேண்டிய தலம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்


பரிகாரப் பாடல்:


நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்


விடியல் வழியதாக்கும் வேரிஅம் கமலை நோக்கும்


நீடிய அரக்கர்சேனை நீறுபட்டழிய வாகை


சூடிய சிலை ராமன் தோள்வலி கூறுவார்க்கே.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2009 12:38 am

மிதுனம் ( சித்திரை முதல் பங்குனி வரை)

மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3

செலவு (50/100)


உங்கள் ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் சனி பகவான் மட்டுமே நற்பலன் தரும் வகையில் உள்ளார். பணவரவு ஓரளவுக்கு இருக்கும் என்றாலும் செலவுகளின் தாக்கம் கிறங்கடிக்கும். பணம், பொருள் திருட்டுப் போகவும், பணம் பெற்றவர்கள் திருப்பிக் கொடுக்காமல் வஞ்சிக்கவும் இடமிருக்கிறது. கவனம். வீடு, வாகன வகையில் வருடத்தின் முற்பகுதியில் திருப்திகரமான தன்மை இருக்கும். செப்டம்பரில் சனிப்பெயர்ச்சியின் காரணமாக தொந்தரவு ஏற்படும். புத்திரர்கள் தகுதி திறமையை வளர்த்து படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.

மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் அதிகார வக்ரகதியாக கும்பராசியில் அமருகிறார். இது சமயம் புத்திரர்களுக்கு வேலைவாய்ப்பு, சுபகாரிய நிகழ்வு எளிதாக நிறைவேறும். உடல்நலம் ஆரோக்கியம் பெறும். வழக்கு, விவகாரத்தில் வெற்றி உண்டு. குடும்பத்தில் கணவன், மனைவி ஒற்றுமையில் அவ்வப்போது பிரச்னை இருந்தாலும், பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு விரும்புபவர்களுக்கு நம்பகமானவர்களின் உதவி கிடைக்கும்.


தொழிலதிபர்கள்: டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, கட்டுமானப்பொருள் உற்பத்தி செய்பவர்களும், கல்வி நிறுவனம், தொழிற்பயிற்சி நிறுவனம், அச்சகம், ரியல்எஸ்டேட், ஆஸ்பத்திரி, டிராவல்ஸ் நடத்துபவர்கள் குறைபாடுகள் காரணமாக மனச்சோர்வு அடைவர். ஓரளவுக்கு லாபம் இருக்கும். பணியாளர்களின் உறுதுணை சிறப்பாக கிடைக்கும். புதிய கிளை துவங்கும் வாய்ப்புகள் மே, ஜூன், ஜூலை மாதங்களில் நிறைவேறும்.அழகுசாதனம் மற்றும் கலைப்பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் அதிக லாபம் காண்பர். புதிய வீடு, வாகனம் வாங்கவும் அனுகூலம் உள்ளது. மற்றவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் இருக்கும்.


பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கவனக்குறைவாகப் பணியாற்ற வாய்ப்பிருக்கிறது. இதனால் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக கல்வித்துறை, இயந்திரப் பணியாளர்களக்கு இந்த சோதனை அதிகமாக இருக்கும். கவனம். சலுகைகள் அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை. தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் தங்கள் உற்பத்தி பொருளின் தரக்குறைவு காரணமாக அபராதம், சஸ்பெண்ட் போன்ற பிரச்னைகளைச் சந்திக்க நேரலாம்.


வியாபாரிகள்: ஸ்டேஷனரி, மளிகைப் பொருட்கள், எண்ணெய், ஜவுளி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அலங்காரப் பொருட்கள், வாசனை திரவியங்கள், பர்னீச்சர், விளையாட்டு சாமான், மருத்துவ உபகரணம், மருந்து விற்பனை செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவினால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கு யோகம் உண்டு.

மாணவர்கள்:
இசை, நடனம், ஓவியம், மாடலிங், அழகுக்கலை, ஆடை வடிவமைப்பு, பழ வகைகளை பதப்படுத்துதல், விவசாயம், மருத்துவம், மூலிகை வளர்ப்பு, தோட்டக்கலை, இலக்கியம், வானியல், மரைன், ஏரோநாட்டிக்கல் துறையில் பயிற்சி பெறும் மாணவர்கள், முழு கவனத்துடன் சுயதிறமையையும் பயன்படுத்தி தரத் தேர்ச்சி பெறுவர். மற்ற துறையினர் இவர்களை விட சிறப்பாகப் படிப்பர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவும், குடும்பத்தில் சந்தோஷம் தழைக்கவும் உதவுவீர்கள்.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஆர்வம் குறையும். பணிகளை முடிக்க முடியாமல் ஏதோ ஒரு மந்தநிலை ஏற்படும். பதவி உயர்வு, விரும்பிய பணியிட மாற்றம் சிலருக்கு மட்டுமே கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் நல்அன்பும், சீரான பணவசதியும் பெற்று சந்தோஷ வாழ்வு நடத்துவர். ஆபரண சேர்க்கை மே, ஜூன், ஜூலை மாதங்களில் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்தடன் அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். தொழில் சிறந்து ஆதாய பணவரவு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: உங்களுக்கு உரிய கவுரவமும், மதிப்புமிக்க பதவியும் கிடைக்கும். எதிரிடையாக செயல்பட்டவர்கள் வியப்படையும் நிலை உருவாகும். ஆதரவாளர்கள் உங்கள் மீது கூடுதல் நம்பிக்கை கொள்வர். யாராக இருந்தாலும் நியாயமாக நடந்து பிரச்னைகளை பைசல் செய்வீர்கள். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். புத்திரர்களுக்கு அரசியலில் வாய்ப்புகளைப் பெற மே, ஜூன், ஜூலை மாதங்கள் உதவிகரமாக இருக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு திறமைமிக்க பணியாளர் கிடைப்பர். ஆனால், விற்பனை சரிவால் பெரிய லாபத்தை எதிர்பார்க்க இயலாது.


விவசாயிகள்: மகசூல் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதை ஈடுகட்டும் வகையில் கால்நடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் அமையும். நிலம் தொடர்பான விவகாரங்களில் பிடிவாத குணத்துடன் செயல்படுவதால் பிரச்னை கூடுதலாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி மே, ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பாக நிறைவேறும்.


பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் சிரமம் விலகி நன்மை வளரும்.செல்ல வேண்டிய தலம்: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில்


பரிகாரப் பாடல்:


கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்

தண்ணார் தாமரை சூழ் தலைச்சங்க மேல்திசையுள்


விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெண்சுடரை


கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது எங்கென்று கொலோ!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2009 12:41 am

கடகம் ( சித்திரை முதல் பங்குனி வரை)

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்

யோகம் (75/100)


உங்கள் ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் குரு நற்பலன் வழங்கும்


இடத்தில் உள்ளார். ராகுவும், சனியும் செப்டம்பருக்குப் பிறகு அனுகூலம் தரும் இடங்களுக்கு பெயர்ச்சியாகிறார்கள். இதனால் வாழ்வில் வளம் பல பெறுவீர்கள். தற்போது ஏழரைச் சனியில் வாக்குச்சனி என்ற நிலை உள்ளது. இதனால் பேச்சில் நிதானம் தவறும். செப்டம்பருக்குப் பிறகு பொறுமையான மனப்பான்மை ஏற்படும்.


வீடு, வாகன வகையில் சனிப்பெயர்ச்சிக்கு பின் வளர்ச்சிமாற்றம் ஏற்படும். புத்திரர்கள் பிடிவாதமான குணத்துடன் செயல்படும் கிரகநிலை உள்ளது. ஏழரைச் சனி விலகும் காலத்திற்குள் குலதெய்வ வழிபாடு செய்து கொண்டால், அதன் பின்னுள்ள காலத்தில் சிரமங்கள் குறையும். உடல் நலம் சுமாராக இருக்கும். குருபகவான் அதிகார வக்ரகதியாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் கும்பராசியில் அமர்வு பெறுகிறார். இந்த சமயங்களில், வாகன பயணத்தில் மிதவேகம் அவசியம். தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். அறிமுகம் இல்லாத பெண்களால் இடையூறு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. நண்பர்களுடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை ஏற்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான கிரக நிலை குறைந்த அனுகூலத்தில் உள்ளது.


தொழிலதிபர்கள்: டெக்ஸ்டைல்ஸ், பால்பொருட்கள், வாசனை திரவியங்கள், உழவு உபகரணம், படகு, தண்ணீர் சார்ந்த பொருட்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஆடம்பர வீட்டு உபயோக சாதனங்கள் உற்பத்தி செய்பவர்கள், கூடுதல் உற்பத்தியும், புதிய வியாபார ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவர். தாராள லாபம் கிடைக்கும். மற்ற தொழில் செய்பவர்களுக்கு இவர்களை விட சற்று குறைவான லாபம் கிடைக்கும். புதிய கிளை துவங்கும் முயற்சி நிறைவேறும். புதிய பார்ட்னர்கள் சேர வாய்ப்புண்டு.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, தானியம், பலசரக்கு, இறைச்சி, கம்பளி, தோல், பிளாஸ்டிக், மருந்து, விவசாய இடுபொருள், மலைத் தோட்டப்பயிர்கள், ரப்பர் பொருட்கள், சமையலறை பாத்திரங்கள், மண்பாண்டம், மலர் வகைகள், மசாலா, பேக்கரி வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் விற்பனையும், சேமிக்கும் வகையில் பணவரவும் கிடைக்கப்பெறுவர். மே, ஜூன், ஜூலை மாதங்களில் வியாபார நடைமுறைகளில் கவனமுடன் செயல்படவேண்டும். அதிர்ஷ்ட வசமாக இதே காலகட்டத்தில் வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், சுறுசுறுப்புடன் செயல்பட்டு பணிஇலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, பணியிடமாற்றம் போன்றவை விரும்பிய வகையில் கிடைக்கும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கும் சலுகைகள் நிரம்ப கிடைக்கும். சேமிக்க வழி ஏற்படும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் செயல்களில் கவனத்தடுமாற்றம் வரும். விழிப்புடன் செயல்படுவதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.


மாணவர்கள்: மருத்துவம், கேட்டரிங், மரைன், ஏரோநாட்டிக்கல், விவசாயம், தகவல் தொழில் நுட்பம், சட்டம், இன்ஜனியரிங் பயிற்சி பெறும் மாணவர்கள், ஒருமித்த தன்மையுடன் படித்து கூடுதல் தர தேர்ச்சியும், புகழும் பெறுவர். மற்ற துறையிலுள்ள மாணவர்களும் சிறந்த மார்க் பெற்று உயர்வடைவர். மே, ஜூன், ஜூலை மாதங்களில் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். பெற்றோர், ஆசிரியரின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி வாழ்வில் சிறந்த இடத்தை பெறுவீர்கள்.


பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், தெளிந்த மனதுடன் பணியில் உற்சாகமாக செயல்படுவர். பணி இலக்கு எளிதில் நிறைவேறும். அக்டோபரில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு பதவி உயர்வு, பணியிடமாற்றம் போன்றவை கிடைக்கும். குடும்பப்பெண்கள் கணவரின் அன்பையும், பாசத்தையும் பெறுவர். ஆதிக்க மனப்பான்மை மேலோங்கும். வீட்டுச் செலவுக்கு தாராளமாக பணம் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய சந்தைவாய்ப்பு கிடைத்து அதிக லாபம் பெறுவர்.


அரசியல்வாதிகள்: சொந்தப் பணத்தை செலவு செய்தும், ஆதரவாளர்களிடம் மதிப்பை பெறுவதில் தாமதம் ஏற்படும். மனம் தளராமல் இருந்தால், ராகு, சனி பெயர்ச்சிக்கு பின் உரிய கவுரவமும், பொறுப்பு நிறைந்த பதவியும் கிடைக்கும். எதிரியால் இருந்த தொல்லை குறையும். ஆதரவாளர்கள் எண்ணிக்கை உயரும். வழக்கு விவகாரங்களில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள், வளர்ச்சியும், தாராள லாபமும் கிடைக்கப் பெறுவர். உறவினர்களும் உரிய மரியாதையுடன் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளில் உங்களை கவுரவிப்பர்.


விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனைத்து அம்சங்களும் நிறைவாக கிடைக்கப்பெறுவர். மகசூல் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பினால் கிடைக்கும் பலன் மே, ஜூன், ஜூலை மாதங்களில் அதிகரிக்கும். நில விவகாரங்களில் ராகு, கேது பெயர்ச்சிக்கு பின்னால் சாதகநிலை ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள்.


பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.


செல்ல வேண்டிய தலம்: சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்


பரிகாரப் பாடல்:


தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி


காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர்கள்வன்


ஏடுடைய மலரான் உனைநான் பணிந்தேத்த அருள்செய்த


பீடுடைய பிரமாபுரம்மேவிய பெம்மான் இவனன்றே!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2009 12:45 am

சிம்மம் ( சித்திரை முதல் பங்குனி வரை)

மகம், பூரம், உத்திரம் - 1

சுமார் (55/100)


உங்கள் ராசிக்கு பிரதான கிரகங்களில், ராகு வருட முற்பகுதியில் துவங்கும் செயல்களில் முழுமையான வெற்றியைத் தருவார். கேது பகவான் அக்டோபரில் மிதுனத்திற்கு பெயர்ச்சியாகும் போது வளம் நிறைந்த வாழ்வை தருவார். தற்போதைய ஜென்மச்சனியும், உங்கள் மனதில் குழப்பமான சிந்தனைகளை உருவாக்கும் நிலையில் உள்ளது. இதனால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு. புத்திரர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பூர்வ புண்ணிய பலன்கள் கிடைப்பதில் தடை ஏற்படும். தானதர்மம் செய்தால் இது சரியாகி விடும். குடும்பத்தின் தேவைக்காக கடன் வாங்க வேண்டியிருக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான கும்பராசியில் அதிகார வக்ர கதியாக அமர்வு பெறுகிறார். அப்போது, அதிர்ஷ்டக்காற்று பலமாக வீசும். இந்த சமயங்களில் உங்களது செயல்களில் முழு வெற்றி கிடைக்கும். திருமண முயற்சி இனிதாக நிறைவேறும். கடன்களை அடைப்பீர்கள். தம்பதியர் ஒற்றுமை சிறப்பாக அமையும். நண்பர்கள் ஒரு உதவியைச் செய்துவிட்டு, பல உதவிகளை எதிர்பார்த்து இம்சைப்படுத்துவர். வெளிநாடு வேலை வாய்ப்பில் கேது பெயர்ச்சிக்கு பின் அனுகூலம் உண்டு.


தொழிலதிபர்கள்:
இரும்பு, காகிதம், மின்பொருட்கள், அடுப்பு, பால் பொருட்கள், உணவுப்பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், அலங்காரப் பொருட்கள், பாத்திரம் உற்பத்தி செய்பவர்கள் கூடுதல் தொழில்வாய்ப்பு பெற்று அதிக உற்பத்தியும் சேமிக்கும் வகையில் பணவரவும் பெறுவர். மார்பிள், சோப்பு, அழகுசாதனப் பொருட்கள், பிளாஸ்டிக், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு சுமாரான வருமானமே இருக்கும். மற்ற தொழிலதிபர்களுக்கு அவ்வளவு விசேஷமான வருமானம் இருக்காது.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, ரப்பர், தோல், அலங்கார பொருட்கள், பாத்திரங்கள், பெயின்ட், வாசனை திரவியங்கள், பீங்கான் பொருள் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான லாபமே இருக்கும். ஏழரைச்சனியின் தாக்கத்தால் மற்றவர்களுக்கு இவர்களை விட குறைந்த லாபமே எதிர்பார்க்கலாம். சரக்கு வாகனம் வாங்குவீர்கள். மே, ஜூன், ஜூலை மாதங்களில் வியாபார வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை நிறைவேற்றி ஆதாய பலன் பெறுவீர்கள்.

பணியாளர்கள்:
அரசு, தனியார்துறையில் பணிபுரிபவர்களுக்கு கவனச்சிதறல் காரணமாக அதிகாரிகளின் கண்டிப்புக்கு அடிக்கடி ஆளாக நேரிடும். சலுகைகள் சுமாராக கிடைக்கும். தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கும் இதே நிலையே. குறிப்பாக, எலக்ட்ரிக்கல், கொதிகலன் இயக்குதல், வாகனம் இயக்குதல் ஆகிய தொழில் செய்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே விபத்து அணுகாத நன்னிலை ஏற்படும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் பணிஉயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.


மாணவர்கள்: விவசாயம், இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், சட்டம், நிர்வாகப்பணி சார்ந்த படிப்புகள், சினிமா தொழில்நுட்பம், கேட்டரிங், ஓவியப்பயிற்சி பெறும் மாணவர்களின் படிப்பு சொல்லிக் கொள்ளும்படி இராது. அனுபவசாலிகளின் உதவி, ஆலோசனையுடன் செயல்படுவதால் தேர்ச்சி பெறலாம். படிப்புக்கான பணவசதி, திருப்திகரமாக இருக்கும்.


பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அவ்வளவு உயர்வான ஆண்டல்ல. கடந்தகால அனுபவங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் அதிகாரிகளின் கண்டனத்துக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். சலுகைகளுக்கும் அவ்வளவாக இடமில்லை. குடும்பப் பெண்கள், கணவரின் நல்அன்பும், நிறைவான பொருளாதார வசதியும் பெற்று குடும்பத்தை சிறப்புற நடத்துவர். சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணிகளை செவ்வனே நிறைவேற்றுவர். வியாபாரம் சுமாராக இருக்கும்.

அரசியல்வாதிகள்: கடந்த கால செயல்களுக்கான முழுபலனையும் பெறுகின்ற முயற்சியில் கவனமுடன் ஈடுபடுவீர்கள். எதிரிகள் பலமிழந்து சீரான நற்பலனை கொண்டு வரும். ஆதரவாளர்கள் உங்கள் மீது அதிக நம்பிக்கை கொள்வர். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருவின் அனுகூலப் பார்வையால் மனதில் சந்தோஷமும், செயல்களில் அபரிமிதமான வெற்றியும் ஏற்படும். பதவிப்பொறுப்பு வந்து சேரும். அரசியலில் நம்பகமானவர் மற்றும் திறமைசாலிகளைப் புறக்கணிக்க வேண்டிய சூழல் வரும். இதைச் செய்தால் சிக்கல் ஏற்படக்கூடும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள், சீரான வளர்ச்சியும், சுமாரான லாபமும் பெறுவர்.


விவசாயிகள்: விவசாயத்தை நடத்துவதற்கு தேவையான கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். கிடைத்த மகசூலை பிறர் எடுத்துச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் கால்நடை வளர்ப்பிலும், பிறவகைகளிலும் கூடுதல் பணவரவு கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னை இருந்தால் சுமுக தீர்வுக்கு வரும்.


பரிகாரம்: தெட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வாழ்க்கையில் அதிக நற்பலன் கிடைக்கும்.


செல்ல வேண்டிய கோயில்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்.


பரிகாரப் பாடல்:


ஆலின்கீழ் அறங்களெல்லாம் அன்றவர்க்கருளிச் செய்து

நூலின்கீழ் அவர்கட்கெல்லா நுண்பொருளாகி நின்று


காலின்கீழ் காலன்தன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்


பாலின்கீழ் நெய்யுமானார் பழனத்தெம் பரமனாரே.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2009 12:47 am

கன்னி ( சித்திரை முதல் பங்குனி வரை)

உத்திரம் - 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2

திருப்தி (45/100)


உங்கள் ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் குருவும், கேதுவும் மட்டும் அளப்பரிய நற்பலன்களை வழங்கும் இடத்தில் உள்ளனர். வருட மத்தியில் பெயர்ச்சியாகும் ராகு, சனி பெரிய அளவில் மாற்றம் எதையும் தராது. உங்களின் தற்போதைய செயல்கள் உத்வேகத்துடன் இருந்து கூடுதல் வெற்றியை பெற்றுத்தரும். பேச்சில் இனிமையும், நிதானமும் அவசியம் பின்பற்ற வேண்டும். சகோதரர்களிடம் அன்பு, பாசம் வளரும். வீடு, வாகனத்தில் திருப்திகரமான நிலை உண்டு. புத்திரர் பிடிவாத குணங்களுடன் செயல்படும் தன்மை உள்ளது.


உடல்நலம் வருட முற்பகுதியில் சீராக இருக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் அதிகார வக்ரகதியாக கும்பராசியில் அமர்வு பெறுகிறார். இந்த சமயங்களில் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தின் முக்கிய தேவைகளுக்காக சொத்து மற்றும் பொருள்களின் பேரில் கடன் வாங்கும் நிலை ஏற்படும். சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் கொடுத்தால் கடும் சிரமங்களுக்கு ஆளாக நேரும். தம்பதியர் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளிநாடு வேலைவாய்ப்பு திருப்திகரமாக அமைய சனிப்பெயர்ச்சி உறுதுணையாக இருக்கும்.


தொழிலதிபர்கள்: கல்வி, நிதிநிறுவனம் நடத்துவோர், எண்ணெய் மின்சாதனங்கள், பர்னிச்சர், டெக்ஸ்டைல்ஸ், காகிதம், எழுது பொருட்கள், இரும்பு தொழிற்சாலை அதிபர்கள் புதிய யுக்திகளை புகுத்தி முன்னேற்றம் பெறுவர். கட்டுமானப் பொருட்கள், உணவுப் பண்டங்கள் தயாரிப்பு தொழிலில் இருப்பவர்கள் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் ஆர்டர் கிடைத்து ஆதாய பணவரவு பெறுவர். மற்ற்வர்களுக்கு ஓரளவு லாபமிருந்தாலும், உற்பத்தி, நிர்வாகச்செலவு அதிகரிக்கும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், விளையாட்டு பொருட்கள், பர்னிச்சர், அலங்காரப் பொருட்கள், மருந்து, மருத்துவ உபகரணங்கள், விவசாய இடுபொருட்கள், வாசனை திரவியம், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் வியாபாரம் சிறக்க கடும் பாடுபட வேண்டியிருக்கும். மூலதனத்துக்கேற்ற லாபம் இருக்காது. ஜாதக பலம் சரியில்லாதவர்கள் கடன் பெற்று வியாபாரத்தை தக்க வைக்க வேண்டி வரும். சரக்கு வாகன வகையில் பராமரிப்பு செலவு கூடும்.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், முழுகவனத்துடன் செயல்பட்டு பணிஇலக்கை செவ்வனே நிறைவேற்றுவர். சக பணியாளர்களுடன் கருத்து மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. கண்காணிப்பு, மேற்பார்வை, காவல் போன்ற உள்ளவர்களுக்கு சோதனையான காலகட்டம். இவர்கள் பொறுப்புடன் செயல்படாவிட்டால் பிரச்னைகள் அதிகமாகும். சிலர் கவனக்குறைவால் அலுவலகப் பொருட்களை தவறவிட்டு பொருள் இழப்பு, நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றை சந்திக்கும் தன்மை ஏற்படும். கேஷியர் பொறுப்பில் உள்ளவர்கள் அன்றாடம் வரவு செலவை சரிபார்த்து கொள்வது நல்லது. பணம் காணாமல் போக வாய்ப்பிருக்கிறது.


மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், வானியல், மருத்துவம், கேட்டரிங், தகவல் தொழில் நுட்பம், ஜர்னலிசம், அழகுக்கலை, விளம்பர மாடலிங், சிவில் இன்ஜினியரிங், சட்டம், வியாபார மேலாண்மை உள்ளிட்ட துறை மாணவர்கள், சுயதிறமையைப் பயன்படுத்தி நல்ல தரதேர்ச்சி பெறுவர். மற்றவர்கள் சுமாராகப் படிப்பர். படிப்புக்கான செலவு அதிகரிக்கும்.

பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள், சோம்பல் தலைதூக்குவதன் காரணமாக பணிகளில் கவனம் செலுத்தாமல் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவர். பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பப் பெண்கள் கணவருடன் கருத்து வேறுபாடு, வீட்டுச் செலவுக்கு திண்டாடுதல் ஆகிய பலன்களை எதிர்கொள்ள நேரிடும். அதே நேரம், சுபநிகழ்ச்சிகள் குறித்த முயற்சி நிறைவேறும். சுயதொழில்புரியும் பெண்கள் அபிவிருத்தி பணிகளைச் செய்யும் போது அதிக செலவை சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள்: அறிமுகம் இல்லாதவர்களுடன் கொண்ட தொடர்பால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆனாலும், அவற்றைத் தகர்த்து பணிகள் சிறந்து புகழையும், பொருளையும் பெற்றுத்தரும். ஆதரவாளர்கள் அதிக நம்பிக்கை வைப்பர். எதிரிகள் இடம்மாறிப் போகிற நன்னிலை உண்டு. வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். புத்திரரை அரசியல் பணிக்கு பயன்படுத்தி சிக்கலில் மாட்டுவீர்கள். மே, ஜூன், ஜூலை மாதங்களில் கவுரவம் தரும் பதவி பொறுப்பு கிடைக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள், பணியாளர்களின் உதவியால் வளர்ச்சியும், வருமானமும் பெறுவர்.


விவசாயிகள்: மகசூல் செலவு அதிகரிக்கும். புதிய உழவுக்கருவிகளை வாங்கி பயிரிட்டாலும் செலவுக்கேற்ற வருமானம் இராது. விவசாய வளர்ச்சிக்கடன் பெறுவதில் தாமதம் ஏற்படும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் கால்நடை வளர்ப்பிலும், விவசாயத்திலும் லாபம் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரங்கள் உள்ளவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வர வாய்ப்பு குறைவே.


பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் தொழில் வளர்ச்சியும், பணவரவும் கூடும்.


செல்ல வேண்டிய தலம்: நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்


பரிகாரப் பாடல்:


மாருதி உண்டேல் சோருதல் இல்லை

ஆறுதல் அவனே அவனே இறைவன்


காரியம் காரணம் ஆனவன் அவனே


கருதிய நிகழ்த்தும் கண்ணனும் அவனே


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2009 12:49 am

துலாம் ( சித்திரை முதல் பங்குனி வரை)

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3

நற்பலன் (60/100)


உங்கள் ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் சனிபகவான் வருட முற்பகுதியிலும், ராகு வருடத்தின் பிற்பகுதியிலும் நற்பலன்களை வழங்கும் நிலையில் உள்ளனர். வாழ்வில் உயர்வு தரும் பலன்களை பெறலாம். பேச்சில் நிதானம் நிறைந்திருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். சில ஜாதகர்களுக்கு பூர்வ புண்ணிய அடிப்படையில், அதிர்ஷ்டகரமான வகையில் ஆதாய பணவரவு கிடைக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான், அதிகார வக்ரகதியாக கும்பராசியில் அமர்வு பெறுகிறார்.


இந்த சமயங்களில் சகோதர ஒற்றுமை வியக்கும் அளவில் மாறிவிடும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி எளிதாக நிறைவேறும். வீடு, வாகன வகையில் இருப்பதைப் பாதுகாத்தாலே போதுமென்ற நிலையே இருக்கும். புத்திரர்களின் எதிர்காலம் குறித்த கவலை வளரும். உடல்நிலை ஒத்துழைக்காது. தம்பதியர் ஒற்றுமை பலம் பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் உறுதுணையாக நடந்து கொள்வர். ஆன்மிக சான்றோர்களின் அன்பும், ஆசியும் பெறுவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைப்பது சிரமமே.


தொழிலதிபர்கள்: இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், காகிதம், தண்ணீர் சார்ந்த தொழில், குளிர்பானம், பால் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தயாரிக்கும் தொழில் அதிபர்கள் கூடுதல் உற்பத்தியும், புதிய ஒப்பந்தமும் கிடைக்கப் பெறுவர். கடல் சார்ந்த தொழில் செய்பவர்கள், எஸ்டேட் உரிமையாளர்கள், கடற்கரை, லாட்ஜ், தொழிற்கல்வி நிறுவனம் நடத்துவோர் தொழிலில் நல்ல வரவேற்பு பெறுவர். பணவரவு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வரவும் செலவும் சரியென்ற நிலை ஏற்படும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் புதிய சொத்து வாங்கும் அனுகூலம் உண்டு. தொழிலில் இருந்த போட்டி பெருமளவு குறையும். பணியாளர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எண்ணெய், உணவு பண்டங்கள், விவசாய இடுபொருட்கள், தண்ணீர் சார்ந்த பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், குளிர்பானம், மீன்பிடி சாதனங்கள், கண் கண்ணாடி, குடை, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கம்ப்யூட்டர், கலை அழகுப் பொருட்கள், பீங்கான் பொருட்கள் விற்பவர்கள் தாராள பணவரவும், சமூக அந்தஸ்தும் பெறுவர். மற்றவர்களுக்கு சுமாரான நிலை இருக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் பெருமளவு அபிவிருத்தியும், புதிய கிளை துவங்குவதுமான நற்பலன் உண்டு. வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.


பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். சக ஊழியர்களுடன் சுமூகமான சூழ்நிலை நிறைந்திருக்கும். குறிப்பாக கலை அம்சம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணியிலுள்ளவர்கள் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி கூடுதல் வேலை வாய்ப்பும், தாராள பணவரவும் பெறுவர். மே, ஜூன், ஜூலை மாதங்களில் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எளிதாக கிடைக்கும். ஆடம்பரப்பொருட்கள் வாங்குவதற்கு யோகமிருக்கிறது.

மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட், கடல்சார் படிப்பு, சட்டம், சினிமா தொழில்நுட்பம், அனிமேஷன், விளம்பரமாடலிங், அழகுக்கலை உட்பட பல்வேறு துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் படிப்பில் பின்தங்க நேரிடும். மற்ற மாணவர்கள் ஓரளவுக்கு பரவாயில்லை என்ற நிலை இருக்கும். சகமாணவர்களுடன் விவாதம் செய்வதன் மூலம் கருத்து வேறுபாடு வளரும். ஜூலைக்குப் பிறகு இந்த நிலைமை அதிகரிக்கும். கவனமாக இருங்கள்.


பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், மே, ஜூன், ஜூலை மாதங்களில் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்றவை கிடைக்கும். இதன்பிறகு வேலைப்பளு, அதிகாரிகளின் அதிருப்தி உள்ளிட்ட சிரமமான நிலை ஏற்படும். குடும்பப் பெண்கள், கணவரின் நல் அன்பும், சீரான பணவசதியும் பெற்று சந்தோஷ வாழ்வு நடத்துவர். புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. ஆபரண சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில்புரியும் பெண்கள், வியாபாரம் சிறந்து தாராள பணவரவு பெறுவர்.


அரசியல்வாதிகள்: கூடுமானவரை ஆதரவாளர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய உரிய பணிபுரிவீர்கள். உங்களது நியாயமான எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். இருப்பினும் சிலருடன் மனத்தாங்கல் ஏற்படும். பிறர் விவகாரங்களில் தலையிட்டு சமரசம் செய்யும் முயற்சியை பெருமளவு குறைத்துக் கொள்வதால் நலம் உண்டு. புத்திரர்கள் அரசியல்பணியில் உறுதுணையாக செயல்படுவர்.


விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அம்சங்களை பெறுவதற்கு காத்திருக்கும் நிலைமை ஏற்படும். இருப்பினும் மகசூல் திருப்தியாக இருக்கும். கால்நடைகள் பராமரிப்பிற்கு கூடுதல் செலவு ஏற்படும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் நிலம் வாங்கும் யோகம் உள்ளது. குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி நிறைவேறும்.


பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் முயற்சி முழு வெற்றி தரும்.


செல்ல வேண்டிய தலம்: பூவரசங்குப்பம்(விழுப்புரம்) லட்சுமி நரசிம்மர் கோயில்

பரிகாரப் பாடல்:


ஆடிப்பாடி அகங்கரைந்து இசை

பாடி பாடி கண்ணீர் மல்கி


நாடிநாடி நரசிங்கா என்று


வாடும் இவ்வாணுதலே.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2009 12:50 am

விருச்சிகம் ( சித்திரை முதல் பங்குனி வரை)

விசாகம் 4, அனுஷம், கேட்டை

சுமார் (50/100)


உங்கள் ராசிக்கு, பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் ராகு வருடத்தின் முற்பகுதியிலும், சனிபகவான் வருடத்தின் பிற்பகுதியிலும் நற்பலன்களை வழங்கும் வகையில் உள்ளனர். பிற கிரகங்களின் தாக்கத்தால் இன்பமும் சிரமமும் கலந்திருக்கும். வாழ்வில் முன்னேற்றம் பெற வாய்ப்புக்கள் தேடி வரும். நீங்கள் உள்ளதையே பேசினாலும் பொல்லாப்பைத் தேடிக் கொள்ளும் நிலை ஏற்படும். உங்களுக்கு நம்பிக்கையானவர்களும் கூட துரோக குணத்துடன் நடந்து கொள்வர். தம்பதியர் ஒற்றுமை நன்றாக இருக்கும். மங்கல நிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்காது. பூர்வ சொத்தில் வளர்ச்சியும், வருமானமும் அதிகரிக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும். வெளிநாடு வேலை வாய்ப்புக்கு முயற்சிப்போருக்கு கிடைப்பதற்கு வழியுண்டு.


தொழிலதிபர்கள்:
கிரானைட் கற்கள், பட்டாசு, தீப்பெட்டி, அடுப்பு, ஜெனரேட்டர் மெழுகுவர்த்தி, காகிதம், மரஅறுவைமில், இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், வாகனம் சார்ந்த தொழில் செய்வோர் கூடுதல் நிர்வாக செலவுகளுக்கு உட்படுவர். ஓரளவுக்கு லாபம் இருக்கும். மற்றவர்களுக்கு இவர்களை விட அதிகமான லாபம் கிடைக்கும். ஆஸ்பத்திரி நடத்துவோர், சாலை, பாலம் கட்டுமான பணி ஒப்பந்ததாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் தொழிலில் கூடுதல் வரவேற்பு பெறுவர். தாராள பணவரவு கிடைக்கும். மே, ஜூன், ஜூலையில் உங்களுடன் கூட்டுசேர சிலர் முயற்சிப்பர். அவர்களைச் சேர்ப்பதில் சிரமம் ஏற்படும்.


வியாபாரிகள்:
நகை, ஜவுளி, மளிகை, தேயிலை, காபி, மருந்து, விவசாய இடுபொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மின்சார உபகரணங்கள், மெழுகுவர்த்தி, பூ, கட்டுமானப் பொருட்கள், உடற்பயிற்சி கருவிகள் வியாபாரத்தில் உள்ளவர்கள் சுமாரான லாபமே பெறுவர். மற்ற பொருட்களை விற்பவர்களுக்கு இவர்களை விட அதிகமான லாபம் இருக்கும். மே, ஜூன், ஜூலையில் விற்பனை நார்மலாக இருக்கும். சரக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. அதிகமாக கொள்முதல் செய்தால் நஷ்டப்படும் நிலை உருவாகும்.


பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணியில் குறைபாடு ஏற்பட்டு அதிகாரிகளின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும். பணியிடத்தில் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு பிரச்னைகள் வரும். இயந்திரம், நெருப்பு, மின்சாரம் உட்பட நுட்பமான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும். சலுகைகள் குறைந்து கடன் வாங்கும் நிலை உண்டாகும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் உழைப்புக்கேற்ற பணவரவு திருப்திகரமாக கிடைக்கும்.


மாணவர்கள்:
மருத்துவம், சிவில் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், சினிமா தொழில்நுட்பம், ஜர்னலிசம், விவசாயம், கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படித்து, ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பான தேர்ச்சியடைவர். மற்ற துறை மாணவர்கள் சுமாராகப் படிப்பர். படிப்புக்குரிய செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், மந்தநிலை காரணமாக பல சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். சலுகைகள் குறைந்த அளவே கிடைக்கும். பிறருக்காக ஜாமீன் கையெழுத்து போடுபவர்கள் பணவிஷயத்தில் சிக்கலை சந்திக்கும் நேரமாக இருக்கிறது. குடும்பப்பெண்கள் கணவருடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு குடும்பத்தின் சந்தோஷத்தை வளரச்செய்வர். ஆபரணங்கள் காணாமல் போக வாய்ப்பிருக்கிறது. குடும்பச் செலவுக்கு திண்டாட்டமாகவே இருக்கும். சுயதொழில்புரியும் பெண்கள் கடும் வேலைப்பளுவைச் சந்திப்பர். ஆனால், அதற்கேற்ற வருமானத்தை எதிர்பார்க்க இயலாது.

அரசியல்வாதிகள்: வெளிப்படையாகப் பேசி நல்லதையே செய்ய விரும்பினாலும் கூட கெட்ட பெயரே வந்து சேரும். அரசியல் வளர்ச்சியில் தேக்கநிலை ஏற்படும். ஆதரவாளர்கள் நம்பிக்கை குறைவுடன் நடந்து கொள்வர். சம்பாதித்ததை பிடுங்கும் வகையிலோ, அந்த பணத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலோ சிலர் நடந்து கொள்வர். இதனால் அவர்களுடன் பேரம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். வழக்கு விவகாரங்களில் அனுகூலத்தீர்வு பெறுவீர்கள். புத்திரர்களை அரசியல் பணிக்கு பயன்படுத்திக் கொள்வது சிறப்பான பலனைத்தரும்.தொழில் நடத்துபவர்கள், லாபநோக்கத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் தொழில்வாய்ப்பும் உதவும் ஒன்றாக இருக்கிறது என்ற எண்ணத்தில் நடந்து கொள்ளவேண்டும்.


விவசாயிகள்:
பயிர் வளர்க்க தேவையான பணவசதியைப் பெற கடும் முயற்சிக்கு உட்படும் சூழ்நிலை உள்ளது. மகசூல் அதிகம் கிடைப்பதற்கு இல்லை. கால்நடை வளர்ப்பில் குறைந்த அளவில்தான் பண வருமானம் கிடைக்கும். நில விவகாரங்கள் உள்ளவர்களுக்கு சட்டசிக்கல் காரணமாக சாதகமற்ற நிலையே நிலவி வரும்.


பரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் வாழ்க்கை மகிழ்ச்சி தருவதாக மாறும்.


செல்ல வேண்டிய தலம்:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்


பரிகாரப் பாடல்:


ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை

பாரில் நின் பாதமூலம் பற்றினேன் பரமமூர்த்தி


காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்


ஆருளர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2009 12:52 am

தனுசு ( சித்திரை முதல் பங்குனி வரை)

மூலம், பூராடம், உத்திராடம் 1

தொல்லை (50/100)



உங்கள் ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் குருபகவான் மட்டுமே அனுகூல பலன் தரும் வகையில் உள்ளார். இதனால் உங்களுக்கு இவ்வாண்டு சிக்கல் நிறைந்த ஆண்டாகவே இருக்கும். பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவது நல்லது. குடும்பச் செலவுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். வீடு, வாகன வகையில் இப்போதைய நிலை அப்படியே நீடிக்கும். புத்திரர்கள் உங்கள் கண்டிப்பைப் புறக்கணித்து தங்கள் இஷ்டத்திற்கு நடக்க ஆரம்பிப்பர். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் அதிகார வக்ரகதியாக கும்பராசியில் அமருகிறார். இதுசமயம் வீடு, வாகனத்தில் பராமரிப்புச் செலவு ஏற்படும். பயணங்களின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தம்பதியர் இடையே சச்சரவு ஏற்பட வாய்ப்புண்டு. பலகாலம் சேர்த்து வைத்த நற்புகழை பேணுவதில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் கொடுக்கல், வாங்கலில் அதிருப்தி ஏற்படும் கிரகநிலை உள்ளது. குடும்பத்தை நடத்துவதற்குரிய செலவுக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற அனுகூலநிலை உண்டு.


தொழிலதிபர்கள்: கல்வி நிறுவனங்கள், டிராவல்ஸ், நட்சத்திர ஓட்டல், நிதிநிறுவனம், ஆஸ்பத்திரி, ரியல் எஸ்டேட் தொழில் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, மாவுமில் அதிபர்கள் தங்கள் தொழிலில் பின்தங்க நேரிடும். நிர்வாகச் செலவு உயரும். வாடிக்கையாளர்களுக்கு சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டியிருக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், காகிதம், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் அளவான உற்பத்தியும், சுமாரான லாபமும் பெறுவர்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, மலைத்தோட்ட பயிர்கள், ரப்பர், தோல்பொருட்கள், உடற்பயிற்சிகருவி, மருந்து, மருத்துவ உபகரணம், இசைக்கருவிகள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப்பொருள், பாத்திரம், காகித பொருட்கள், அளவீட்டுக் கருவிகள், உணவுப் பண்டம், மின்சாரப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், காய்கறி, ஸ்டேஷனரி வியாபாரம் செய்பவர்களுக்கு நிலைமை சாதகமாக இல்லை. மற்றவர்களும் கூடுதல் ஈடுபாட்டுடன் வியாபாரத்தில் செயல்படுவதால் மட்டுமே பலன்களைப் பெறலாம். மூலதனத்தை உயர்த்தினால் அதற்கேற்ற வருமானம் இருக்காது. சரக்கு வாகனங்கள் மூலம் வருமானம் நன்றாக இருக்கும். பிறருக்காக ஜாமீன் இடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பணியாளர்கள்: அரசு, தனியார்துறையில் பணிபுரிபவர்களுக்கு கவனச்சிதறல், பணியில் பிடிப்பின்மை ஏற்பட்டு அதிகாரிகளின் கண்டனத்துக்கு ஆளாக நேரும். பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு வளரும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் கவனக்குறைவு காரணமாக உற்பத்தி இழப்புக்கு காரணமாக அமைந்து அபராதம் கட்ட நேரிடலாம். பணியில் நேரம் தவறாமையையும், கவனமும் கொண்டால் மட்டுமே பிரச்னைகளைத் தடுக்கலாம்.

மாணவர்கள்:
ஜர்னலிசம், ஆசிரியர்பயிற்சி, சாஸ்திரபடிப்பு, இலக்கியம், ஓவியம், மருத்துவம், வணிகவியல், வங்கியியல், தகவல் தொழில்நுட்பம், பிசினஸ் மேனேஜ்மென்ட், கேட்டரிங், சட்டம், அரசு நிர்வாகம் சார்ந்த துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் தமக்குள்ள பொறுப்பை உணர்ந்து படித்து தரத் தேர்ச்சி பெறுவர். பிறதுறை மாணவர்களுக்கு படிப்பு பரவாயில்லை என்ற நிலை இருக்கும். படிப்புக்கான பணத்துக்கு சிரமப்பட வேண்டியிருக்கும்.


பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். பணியை நிறைவேற்ற முடியாமல் திண்டாடி அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவர். சலுகைகள் சுமாராகவே கிடைக்கும். குடும்பப் பெண்கள், அன்றாடச் செலவுக்கு பணமின்றி திண்டாடுவர். சிக்கனம் தேவை. கணவர் வழி சார்ந்த உறவினர்களை விமர்சித்து சிக்கலில் மாட்ட நேரும். சுயதொழில்புரியும் பெண்கள், தொழிலை அபிவிருத்தி செய்தாலும் சுமாரான அளவு வியாபாரமே நடக்கும்.


அரசியல்வாதிகள்: ஆதரவாளர்கள் வாழ்வில் முன்னேற சொந்த பணச் செலவில் தேவைப்படும் உதவியை செய்து கொடுப்பீர்கள். சமூகத்தில் நற்பெயர் பெற அனுகூலகாரணிகள் பலம் பெறும். எதிரிகளால் தொல்லை உண்டு. அவர்களிடம் இருந்து விலகிப்போவதால் காலமும், பணமும் பெருமளவு மிச்சப்படும். புத்திரர்கள் அரசியல் பணியில் ஒத்துழைக்க மாட்டார்கள். மே, ஜூன், ஜூலை மாதங்களில் அனுபவம் நிறைந்தவர்களின் ஆலோசனையும், உதவியும் கிடைத்து உங்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள், சராசரி வியாபாரமும், மிதமான லாபமும் பெறுவர்.


விவசாயிகள்:
பயிர் வளர்ப்பிற்கு அதிக செலவு ஏற்படும். மகசூல் ஓரளவே கிடைக்கும். கால்நடைகள் வளர்ப்பினால் மே, ஜூன், ஜூலையில் கூடுதல் பணவரவு வரும். நிலம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு பெற தாமதம் ஏற்படும்.


பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி பெறும்.


செல்ல வேண்டிய தலம்: மருதமலை முருகன் கோயில்


பரிகாரப் பாடல்:


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்


கருவாய் உயிராய் கதியாய் விதியாய்


குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக