புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
7 Posts - 58%
heezulia
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
5 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
49 Posts - 62%
heezulia
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
26 Posts - 33%
mohamed nizamudeen
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைவாணரின் நினைவுகள்


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 10, 2010 1:53 am

கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன், தமது 49_வது வயதில் 30_8_1957 அன்று மரணம் அடைந்தார்.
அவருடைய கடைசி படமான "அம்பிகாபதி" (சிவாஜி, பானுமதி நடித்தது) அவர்
மறைவுக்குப்பின் வெளிவந்தது.


என்.எஸ்.கிருஷ்ணன், அவர் மறையும் வரை படங்களில் தொடர்ந்து நடித்துக்
கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய வெற்றிப்படமான மதுரை வீரனில்
என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் நடித்தனர்.




கலைவாணரின் நினைவுகள் 5ffae7e6-ae2c-417d-b087-932e446d1ad7_S_secvpf






ஜெமினி கணேசன் _ சாவித்திரி நடித்த "யார் பையன்" படத்திலும் இந்த ஜோடி நடித்தது.

ஏ.எல்.சீனிவாசன்
தயாரிப்பில் சிவாஜி கணேசன் _ பானுமதி நடித்த "அம்பிகாபதி" படத்தில்
என்.எஸ்.கே. நடித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது (1957 ஆகஸ்டு) அவர்
உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டார்.


டாக்டர்கள்
பரிசோதனை செய்து, கலைவாணர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்தனர். அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.


கலைவாணர் குணம் அடைந்து வருவதாகவும், 10 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், ஆகஸ்டு 29_ந்தேதி அவர் உடல்நிலை மோசம்
அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
ஆகஸ்டு 30_ந்தேதி காலை 11_10 மணிக்கு, தமது 49_வது வயதில் காலமானார்.

செய்தி அறிந்ததும், சென்னை நகரில் உள்ள சினிமா ஸ்டூடியோக்கள் அனைத்தும் மூடப்பட்டன.

எம்.ஜி.ஆர்,
சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி உள்பட
திரை உலக நட்சத் திரங்கள், என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று இறுதி
மரியாதை செலுத்தினர். பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.


வாழ்விலும், தாழ்விலும் கலைவாணரின் இணை பிரியாத நண்பராக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், "கிருஷ்ணா! கிருஷ்ணா!" என்று கதறினார்.

மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து
கொண்டனர். ஐ.ஜி. ஆபீஸ் அருகில் உள்ள மயானத்தில் உடல் தகனம் நடந்தது.
"சிதை"க்கு கிருஷ்ணனின் மூத்த மகன் என்.எஸ்.கே.ராஜா தீ மூட்டினார்.


நாகையா
தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன்,
கலைஞர் கருணாநிதி, தியாகராஜ பாகவதர், கே.ஆர்.ராமசாமி, சிவாஜிகணேசன்,
கண்ணதாசன் உள்பட 21 பேர் பேசினார்கள்.


எம்.ஜி.ஆர். பேச எழுந்தார். துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதார். பேச முடியாமல் மேடையை விட்டு இறங்கிவிட்டார்.

என்.எஸ்.கே.
மரணத்துக்கு பிறகு, "அம்பிகாபதி" வெளிவந்தது. படத்தில், அவர்
இறந்துவிடுவதாக கதையை முடித்து, அவருக்கு சிலை வைக்கப்படுவதாகக்
காட்டினார்கள்.


கலைவாணர் மரணத்தால், தமிழ்த் திரை உலகில் ஒரு சகாப்தம் முடிவடைந்தது.

தமிழ்
நடிகர் _ நடிகைகளில், 100 படங்களுக்கு மேல் நடித்தவர்கள் என்ற பெருமையை
முதன் முதலாகப் பெற்றவர்கள் கலைவாணரும், டி.ஏ. மதுரமும்தான்.


வருமானத்தில்
பெரும் பகுதியை தர்மம் செய்வதற்கே செலவிட்டார். உதவி தேடி வருகிறவர்களை
வெறும் கையுடன் அனுப்பமாட்டார். பணம் இல்லாத போது, வீட்டில் உள்ள
வெள்ளிப்பாத்திரங்களைக் கொடுத்து இருக்கிறார்.


கலைவாணர்
மறைவுக்குப் பிறகு ஒரு சில படங்களில் மதுரம் நடித்தார். பின்னர் பட உலகில்
இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவர் 1974_ம் ஆண்டு மே 23_ந்தேதி காலமானார்.


என்.எஸ்.கிருஷ்ணனுக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி நாகம்மாளுக்கு ராஜா, கோலப்பன் என்று இரண்டு மகன்கள். இவர்கள் இறந்துவிட்டனர்.

டி.ஏ.மதுரம் இரண்டாவது மனைவி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, 6 மாதத்தில் இறந்துவிட்டது. டி.ஏ.மதுரத்தின் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாள், என்.எஸ். கிருஷ்ணனின் மூன்றாவது மனைவி. இவர் காலமாகிவிட்டார்.
இந்தத் தம்பதிகளுக்கு 4 மகன்கள்; 3 மகள்கள். இவர்களுடைய திருமணங்களை எம்.ஜி.ஆர். முன்னின்று நடத்தி வைத்தார். என்.எஸ்.கிருஷ்ணன்
_ டி.ஏ.வேம்பு அம்மாள் தம்பதிகளின் மகன்களும், மகள்களும் உயர் படிப்பு
படித்தவர்கள். பேரன், பேத்திகளில் பலர் வெளிநாடுகளில் உயர்ந்த
உத்தியோகத்தில் இருக்கிறார்கள்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக