புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10 
3 Posts - 5%
prajai
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10 
2 Posts - 4%
Baarushree
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10 
2 Posts - 4%
Rutu
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10 
1 Post - 2%
சிவா
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10 
1 Post - 2%
viyasan
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10 
10 Posts - 67%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10 
2 Posts - 13%
ரா.ரமேஷ்குமார்
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10 
2 Posts - 13%
Rutu
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 1:53 am

( டாக்டர். அண்ணா பரிமளம் )


அண்ணாவின் இளமைக் காலம்

அறிஞர் அண்ணா பிறந்தது பல்லவ நாட்டின் தலைநகரம் காஞ்சி. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் புத்தர் காஞ்சிக்கு வந்து சமயத் தொண்டாற்றியிருக்கிறார். காஞ்சிபுரத்துக்கு யுவான் சுவாங் சீனயாத்ரிகன் அசோகன் மணிமேகலை ஆகியோர் வந்து சமயத் தொண்டாற்றிருக்கிறார்கள்.

மிகப்பெரிய வடமொழி பல்கலைக்கழகம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு இருந்திருக்கிறது.

காஞ்சியில் இருந்து தர்ம பாலர் எனும் பேராசிரியர் நாளந்தா பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருக்கிறார்.

திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் பிறந்து காஞ்சியில் கல்வி வள்ளல் பச்சையப்பர் பிறந்த ஊர்.

இசைக் கலையில் சிறந்த நயனா பிள்ளை பிறந்த ஊர்.

கல்வி, கலை இவைகளில் சிறந்திருந்த காஞ்சி நெசவுத் தொழிலிலும் பெயர் பெற்று இருந்தது.

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் தேதி நடராசன் - பங்காரு இணையினருக்கு அண்ணா பிறந்தார்.

தொடக்கக்கல்வியும் உயர் நிலைக் கல்வியும் காஞ்சி பச்சையப்பர் கல்வி நிறவனங்களில் பயின்றார். தெய்வீக நம்பிக்கைக் கொண்டது அண்ணாவின் குடும்பம். ஆலய வழிபாட்டிற்கு அண்ணா கூட்டம் குறைவாக உள்ளக் கோயிலுக்கே செல்வார்.

பள்ளிக்குச் செல்லும் போது தானே மாட்டு வண்டி ஓட்டிச் செல்வார்.

அண்ணாவின் குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். அண்ணாவின் சிற்றன்னை இராசாமணி அம்மையார் அண்ணா அவர்களைத் தொத்தா என்றே அழைப்பார்கள். அண்ணாவை வளர்த்தவர் வழிகாட்டியாக அண்ணாவின் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர், அவர்தான்.

உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே அண்ணாவிடம் பொடி போடும் பழக்கம் தொற்றிக் கொண்டது. பத்தாம் வகுப்பு முடித்ததும், மேலே படிப்பைத் தொடர முடியாமல், குடும்ப சூழ்நிலைக் காரணமாக காஞ்சி நகராட்சியில் எழுத்தராகச் சேர்ந்து ஆறு மாதம் பணியாற்றினர்.

அண்ணா அவர்களை அவருடைய தாய் தந்தையர் அந்த நாளில் மதப்பற்றும் தெய்வ நம்பிக்கையும் உள்ளவராகவே வளர்த்தனர். அண்ணாவுக்கு அருந்துணையாக இருந்து ஆளாக்கி விட்ட அவருடைய சிற்றன்னையும்(தொத்தா) அதற்கு விதிவலக்காக இருக்கவில்லை.

இன்று பகுத்தறிவு இயக்கத்தின் தனிப் பெரும் சுடராய் ஒளிவிட்டுத் திகழும் அண்ணா, இளமைப் பருவத்தில் ஆலய வழிபாட்டைத் தவறவிடாத இளைஞராகத்தான் திகழ்ந்து கொண்டிருந்தார். ஆலய வழிபாட்டில் தவறாத அவர் அதிலும் ஒரு புதுமையைக் கையாண்டார். எந்த தோயிலில் கூட்டம் அதிகம் இருக்குமோ அங்கு செல்லாமல், கூட்டம் குறைவாக உள்ள கோயிலுக்குச் சென்று தெய்வ வழிபாடு செய்துகொண்டு வந்தார். கூட்டம் இல்லாத நேரத்தில் தனியாகக் கோயிலுக்குச் செல்வதில் அவர் பெரிதும் விருப்பம் உள்ளவராகவே விளங்கினார்.

எல்லா மக்களும் கூட்டமாகச் சென்று இடநெருக்கடியில் திண்டாடாமல், கூட்டம் குறைவாக உள்ள இடத்துக்குச் சென்று வழிபடுவோம் என்ற கொள்கையை இளமைப் பருவத்தில் அடாப்பிடியாகக் கைக்கொண்டிருந்தார். எல்லோரும் செல்லும் போயிலுக்கு அவரும் போவதுண்டு; ஆனாலும் கூட்டமே அங்கு இல்லாத நேரமாகப் பார்த்துத்தான் செல்வது வழக்கம்.

இளமையில் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தமான கடவுள் பிள்ளையார்தான்! பிள்ளையாருக்கு இளம் வயதில் பூஜைகளும் செய்வதுண்டு. பிள்ளைப் பருவத்தில் பிள்ளையார் பக்தராக அண்ணா விளங்கியிருந்தார் என்றால் பலருக் ஆச்சரியமாக இருக்கும். காஞ்சியிலுள்ள அதிகம்பேர் கவனத்தில் கவராத புண்ணிய கோடீசுவரர் கோயில் என்ற சிறிய கோயிலுக்குத்தான் அண்ணா அடிக்கடி சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.



நொண்டிச் சாக்கு

பிள்ளைப் பருவத்தில் அண்ணா விளாயாட்டில் ஆர்வம் உள்ளவராகவே இருந்தார். தன்னொத்த இளம்பருவத் தோழர்களுடன் கலந்து கேரம் விளையாடுவதில் அவருக்கு அளவு கடந்த ஆனந்தம். ஓய்வு கிடைக்கின்ற நேரங்களிலெல்லம் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு கேரம் விளையாடியே பொழுதைக் கழிப்பார். அதைப்போலவே சீட்டாடுவதையும் பிற்காலத்தில் பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.

விளையாட்டில் ஆர்வம் உண்டென்றாலும் பள்ளியில் நடக்கும் டிரில் வகுப்புக்கு அதிகம் போவது கிடையாது. பொதுவாகவே அண்ணாவுக்கும் உடற் பயிற்சிக்கும் அதிகம் சம்பந்தமில்லை. அதிகத் தேகப் பயிற்சி பெற்றவருமல்ல அன்பதை அவரது உடலும் உயரமும் காட்டும். உடற்பயிற்சி வகுப்புக்கு, பள்ளி நாட்களில் அண்ணா போனது இல்லை. இவரது விருப்பத்துக்கு ஏற்ப இவரது குடும்பத்தினரும் இருந்தார்கள். டிரில் வகுப்புக்குப் போகாமல் இருக்க ஒரு உபாயம் சொல்லிக் கொடுத்தார்கள். டிரில் வகுப்புக்கு போகாமல் இருக்க வேண்டுமானால் காலில் கட்டு போட்டுக்கொள் என்பாராம் அண்ணாவின் தாத்தா. அதன்படி அண்ணாவும் காலில் சிவப்பு மையைக் கொட்டி, கட்டும் போட்டுக் கொள்வார். சுளுக்குபோல நொண்டிச் சென்று, கால் வலிக்கிறது சார் என்பாராம். டிரில் வாத்தியாரும் அண்ணாவை வீட்டுக்கு அனுப்பி விடுவாராம்.


மாமியார் அனுபவம்

அண்ணா பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, வீடு வெகு தூரத்தில் இருந்தது. ஆகவே அவர் வீட்டுக் வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்குப் போவது கஷ்டமாக தோன்றிய காரணத்தால், அவரது பெற்றோர்கள் பள்ளிக்கு அருகிலேயே தங்கள் உறவினர் வீட்டில் பகல் உணவுக்கு எற்பாடு செய்திருந்தார்கள். அந்த வீட்டின் நிலையோ மிகவும் விசித்திரமாக இருந்ததை அண்ணா சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்.

அண்ணா சாப்பிட ஏற்பாடாகியிருந்த அந்த வீட்டுக்குரிய மாமியார், வீட்டில் உயர்ந்த பொருளாக இருந்தால் அதை அலமாரியில் வைத்துப் பூட்டி விடுவார்களாம். அண்ணா அவ்வீட்டுக்குச் சாப்பிடப் போனதும் வீட்டிற்குரிய மருமகள் அண்ணாவுக்கு சாதம் போட்டுவிட்டு, மாமியாரை அழைத்து, சாதம் போட்டுவிட்டேன், உருளைக் கிழங்கு வறுவல் வேண்டும் என்று சொன்னால், மாமியார் சாவியைச் கொடுத்து அனுப்பி அதை எடுத்துக்கொண்டு வந்து அண்ணாவுக்கு வைத்த விறகு, அதனை மீண்டும் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிடுவார்களாம் அந்த மாமியார்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 1:54 am

அசடு வழிந்தது

ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது - மாணவனின் கண்களில் நீர் குபுகுபுவெனக் கிளம்பி வழிகிறது - கோவெனக் கதறவில்லை - ஆனால் விம்மலை அடியோடு அவனால் அடக்க முடியவில்லை.

அலறலுட, தாயார் கேட்டார்கள் - ஏண்டா அழுகை? என்ன நடந்தது! ஏன் அழுகிறே - சொல்லித்தொலையேன் - என்று. பதில் இல்லை மாணவனிடமிருந்து.

கோபம் பிறந்துவிட்டது தாயாருக்கு. ஏண்டா? நாகப்பழம் தின்றதற்காக அடித்தேனே, அதற்காகவா அழறே!

டேய் உண்மையைச் சொல் இன்னும் இரண்டு நாள் இங்கே இருக்க வேண்டும் என்று அழுகிறாயா? மலைப் பிரதட்சணத்தின்போது தலையில் குட்டினேனே, அதை எண்ணிக் கொண்டா இப்ப அழறே - தாயார் என்ன கேட்டும் அவனிடமிருந்து பதில் இல்லை. வண்டியில் உள்ளவர்கள் சிரித்தார்கள்!

ஊருக்குப்போனதும் நாளைக்குப் பள்ளிக்கூடம் போகவேனுமே, விளாயடுவதற்கு இல்லையே என்று அழறியா - என்றார், தாயார். அப்போதும் பதில் இல்லை. கேள்வி கேட்கும் பொறுமையை இழந்தார் தாயார்; கோபம் தாயாருக்கு! மகனுடைய கையைப் பிடித்து இழுத்தபடி என்னடா? நாலு நாழியா நான் கத்து கத்தென்று கத்துகிறேன் . . . என்று கூறி முடிப்பதற்குள்.

ஐயையோ. . . கையை விடு, விடு கையை, ஐயையோ என்று கையை உதறியபடி கதறுகிறான் மகன். விஷயம் அப்போதுதான் எல்லோருக்கும் தெரிந்தது.

கை கட்டைவிரல் நசுங்கிப்போயிருக்கிறது. இரத்தமும் கசிந்துகொண்டிருந்தது.

எப்படி விரல் நசுங்கிவிட்டதாடா என்று தாய் கோட்டாள். மகனோ ரயில் வண்டிக் கதவைக் காட்டினான் விம்மலும் வெட்கமும் கலந்த நிலையில்.

அட அசடே! கதவை சாத்தினகோது கை விரல் நசுங்கிவிட்டதா என்று தாயார் கேட்டுவிட்டு இப்படி ஒரு அசட்டுப் பிள்ளை இருக்குமா? சரிசரி காட்டடா விரலை என்று தாயார் கூறிவிட்டு, ஈரத் துணிகொண்டு விரலைத் துடைத்துக் கட்டினார்கள். கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். அந்த மாணவன் வேறு யாருமல்ல; அண்ணாதான் அன்றைக்கு அசடாக நடந்துகொண்டவர்.

அண்ணா அவர்கள் ஆறாவது வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு முறை தன் தாயாருடன் திருவிழவிற்காக திருக்கழுக்குன்றம் சென்றுவிட்டு ரயிலில் வீடு திரும்பும்போது இந்த வேடிக்கை நடந்தது.

கட்டை விரல், ரயில் கதவின் இடுக்கிலே சிக்கிக்கொண்டது, தான் சாத்தும்போது, என்பதை வெளியே சொல்ல வெட்கம் - அதேபோது கைவிரல் நசுங்கியதால் ஏற்பட்ட வலியைத் தாங்கிக்கொள்ள முடியாத துக்கம்.

ஆகவே கண்ணீர் - விம்மல்! என்ன காரணம் என்று தாயார் கேட்டதற்கு உண்மையைக் கூறினால் கேலி செய்வார்களே என்ற கூச்சம்! எனவே ஏதேதோ நொண்டிச் சாக்குகளைக் காட்டினார் - நெடுநேரம் கடைசியில் உண்மைக் காரணம் வெளிவந்துவிட்டது. கண்ணீர் நின்றது. ஆனால் அவரது முகத்திலோ அசடு வழிந்தது.

தெருக்கூத்து ரசிகர்!

தெருக்கூத்து வேடிக்கைப் பார்ப்பதில் அண்ணாவுக்கு இளம் வயதிலிருந்தே விருப்பம் நிறைய உண்டு. தெருக்கூத்தை ஒரு பொழுதுபோக்காகவும், நகைச்சுவையை ரசிக்கும் வாய்ப்பாகவும் கொள்வது அவரது பண்பாடு. பள்ளிப்பருவக் காலத்தில், காஞ்சிபுரத்தில் எங்கு தெருக்கூத்து நடந்தாலும் அங்கு முதலில் சென்று உட்கார்ந்து, இறுதிவரையில் இமைகொட்டாமல் பார்த்திருந்துவிட்டு கூட்டம் கலைந்து எல்லோரும் வீடு திரும்பியதற்குப் பிறகுதான் கடைசியாக வீடு வந்து சேருவார்.

அண்ணா அவர்கள் ஆரம்பப்பள்ளி மாணவாராக இருந்தபோது, அவரோடு ஒத்த அவருடைய நண்பர்களைக் கூட்டிக்கொண்டு, தமது வீட்டுக்கு அடுத்துச் சில வீடுகள் தள்ளி, ஒரு வீட்டின் மாட்டுக் கொட்டகையில் வேடங்கள் புனைந்துகொண்டு நாடகம் ஒன்று நடத்திக்கொண்டிருந்தார்கள். அச்செய்தியை அறிந்த அண்ணாவின் பாட்டியார் கோபத்தோடு சென்று, நாடம் ஆடிக்கொண்டிருந்த அண்ணா அவர்களை வேடத்தோடு பிடித்து இழுத்துக்கொண்டு வந்து வீட்டில் வைத்து அவரது முதுகில் நன்றாக அடித்துவிட்டார்களாம். என்ன செய்தும் தெருக்கூத்துப் பைத்தியம் மட்டும் அதற்குப் பின்னும் அவரைவிட்டு விலகவில்லை.

இப்பொழுதும் சுற்றுப்பயணத்தை ஒட்டி வெளியூர் நோக்கிச் சென்றுகொண்டு இருக்கும்போது எங்கேயேனும் சாலையோரத்தில் தெருக்கூத்து நடைபெற்றுக்கொண்டிருந்தால், தான் ஏறிவந்த காரை தூரத்தில் நிறுத்திவிட்டு யாரும் அறியாவண்ணம் ஒதுக்கமான இடத்தில் நின்றுகொண்டு, காட்சிகளைக் கண்டு ரசித்துக்கொண்டிருப்பாராம்.

திருடனிடம் சிக்கினார்

அண்ணா சிறுவனாயிருந்தபோது - அப்போது அவருக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும் - காஞ்சிபுரத்திலிருந்து அண்ணாவின் தாயார் சென்னையில் நடக்கும் பார்க்பேர் கண்காட்சிக்கு அண்ணாவை அழைத்துவந்தார்கள்.

எழும்பூர் ரயிலடியில் இறங்கியதும் அங்குள்ள பொருட்களைப் பார்த்து அண்ணா அது வேண்டும். இது வேண்டும் என்று தனது தாயாரை தொல்லைகொடுத்துக்கொண்டே இருந்தார்.

அப்போது அவருக்கு தங்கக் காப்பும் சங்கிலியும் அணிவித்திருந்தனர். அதை ஒருவன் பாத்துக்கோண்டே இருந்திருக்கிறான். பிறகு அவரது குடும்பத்தாருடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே பையன் பலூன் வேண்டும் என்று அப்போதிருந்து அழுகிறானே வாங்கித் தந்தால் என்ன? என்று கேட்டான். அவரது தாயார் தனது பிள்ளையின் மீது வேறு ஒருவர் இரக்கப்படும் அளவுக்கு விட்டுவிட்டோமே என்று வெட்கமடைந்து பலூன் இங்கு விற்கவில்லையே! என்று கூறினார்கள். அதோ! அங்கு விற்கிறான்! நான் வாங்கித்தருகிறேன் என்று விடுவிடென அண்ணாவை அழைத்துக்கொண்டுபோனான். அவன் பழகிய நல்ல முறையை வைத்து அண்ணாவின் வீட்டார் விட்டுவிட்டார்கள்.

அண்ணாவை அழைத்துச் சென்ற அவன் எல்லா பிளாட்பாரங்களையும் கடந்து கடைசி பிளாட்பாரத்துக்கு வந்துவிட்டான். அப்போது அண்ணாவுக்கு விவரம் தெரியாவிட்டாலும் அவன் பலூன் வாங்கித் தருவதாக கூட்டிப்போகவில்லை என்பதை மட்டும் தெரிந்துகொண்டார். ஆகவே சத்தம்போட்டு அழ ஆரம்பித்தார். அவனது நோக்கமெல்லாம் கூட்ஸ் வண்டியில் போட்டுவிட்டால் எங்காவது போய்விடும் என்ற நினைப்புத்தான்! ஆனால் அண்ணா போட்ட கூக்குரலை கேட்ட அந்த வழியில் போகிறவர்கள் அவனை தடுத்து நிறுத்தி யார் நீ! ஏன் பையனை அழைத்து போகிறாய்? என்று கேட்டபோது அவன் சரிவர பதில் சொல்லாததால் சந்தேகப்பட்டு அவனை போலீசில் ஒப்படைத்தார்கள். அண்ணாவை அவருடைய தாயிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது அண்ணாவின் தாயார் அண்ணாவைப் பார்த்து, பலூன் எங்கே என்றுதான் கேட்டார்களாம்.

காந்தி யார்? அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் 8-வது வகுப்பில் படித்துக்கோண்டிருக்கும்போது, நாட்டில் சுதந்திரக் கிளர்ச்சி பெருகிக்கொண்டிருந்தது. சுதந்திர கிளர்ச்சி விளைவாக காந்தியார் எரவாடா சிறையில் தள்ளப்பட்டார். இந்த செய்தியை அறிந்ததும் ஊரிலுள்ள காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கடை அடைப்பு நடத்த ஏற்பாடு செய்தனர். அவர்கள் ஒவ்வொரு கடைக்காரர்களையும் அணுகி கடையடைக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அப்போது ஒரு கற்பூரக் கடைக்காரர் ஏன் கடையடைக்கச் சொல்கிறீர்கள்? என்று கேட்டார். காந்தி சிறையில் அடைக்கப்பட்டதற்காகக் கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றனர். அதைக் கேட்டதும் அக்கடைக்காரர், காந்தியா? அவர் யார்? என்று ஆச்சரியத்துடன் கேட்டாராம். அவர் கேட்டதைப் பார்த்த மற்றவர்களும், காந்தியைத் தெரியாதவரும் இருக்கின்றாரே என்று ஆச்சரியப்பட்டனராம்.

சத்தியமூர்த்தியும் திருப்பதி ஐதீகரும்

அண்ணா பள்ளி மாணவராக இருந்தபோது காங்கிரசுத் தலைவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு பல நேரங்களில் கிடைத்து இருந்தது. அதில் சத்தியமூர்த்தி பேசுவதும் உண்டு. நீதிக் கட்சியைப் பள்ளி அவர் பேசிய பேச்சு வேடிக்கையானதாகும், நீதிக்கட்சி காலத்தில், திருப்பதி உண்டியலில் விழும் பணமெல்லாம் மக்கள் கல்விக்காகச் செலவிடப்பட வேண்டும்! உண்டியல் பணத்திற்கு கணக்கு காட்டவேண்டும் என்று சொன்னார்கள். அதைச் சத்தியமூர்த்தி போன்ற காங்கிரசுக்காரார்கள் எதிர்த்தார்கள்.

திருப்பதி உண்டியலில் விழுகின்ற பணத்துக்கெல்லாம் மகந்துகள் என்று சொல்லப்படுபவர்கள்தான் சொந்தக்காரர்கள். இரவு 12 மணிக்குமேல் வெங்கடாஜலபதிக்கப் பொழுது போகாதாம். அதனாலே அவர் மகந்துகளை அழைத்து வைத்துக்கொண்டு சொக்கட்டான் ஆடவாராம். இதனாலே உண்டியல் பணம் முழுவதும் மகந்துகளுக்கு கொடுத்துவிடவேண்டுமாம். இப்படி இரு ஐதீகம் சொல்லப்பட்டு வந்தது. இந்த முறையை மாற்றி, உண்டியலில் போடப்படும் பணம் மதக் காரியங்களுக்காகத்தான் போடப்படுகிறது; கல்விக்காக அந்தப் பணம் செலவிடப்படவேண்டும் என்று நீதிக் கட்சியார் சொன்னார்கள். இதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த சத்தியமூர்த்தி, உண்டியலில் பொடப்படும் பணம் யாவும் நீதிக்கட்சிக்காரர்கள் அள்ளிக்கொன்டு போவதாக மக்களிடம் சொன்னார்கள். அப்பொழுது காங்கிரசுத் தலைவரான சத்தியமூர்த்தியே அப்படி பிரச்சாரம் செய்ததை பள்ளி மாணவராக இருந்த அண்ணா கேட்டு ஆச்சரியப்படுவாராம்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 1:57 am

பரீட்சையில் பொடி

பள்ளி இறுதி வகுப்பு பரீட்சை நடந்துகொண்டு இருந்த நேரம். . . திடீரென்று அண்ணாவுக்கு பொடி நினைவு வந்துவிடவே, சுற்றுப்புற சூழ்நிலை எதையும் கவனிக்காமல், மடியிலிருந்த மட்டையை எடுத்து யாருக்கும் தெரியாவண்ணம் ஒரு சிட்டிகை எடுத்து கைக்குட்டையால் முகத்தை மறைத்து முகத்தின் அருகில் கொண்டு போனார். உடனே பார்வையாளராக வந்திருந்த ஆசிரியர் இதை கவனித்துவிட்டார். கவனித்த அவர் கண்டுங்ககாணாததுபோல் இராமல் அருகே வந்தார். . . வந்ததோடு நில்லாமல், மடியில் இருந்து என்ன எடுத்தாய்? ஏதாவது பரீட்சைக் குறிப்புகளை எழுதி எடுத்து வந்திருந்தாயா? என்றார்.

அதெல்லாமொமன்றுமில்லை என்று அண்ணா எவ்வளவோ மழுப்பியுங் கூட அவர் விடவில்லை!

ஒன்றுமில்லையென்றால் மடியிலிருந்து எடுத்ததை என்னிடம் காண்பி என்றார்! நிலைமை தர்ம சங்கடமாகப் போய்விடவே, அண்ணா அவர்கள் வேறு வழியின்றி புன்முறுவலோடு மடியிலிருந்து எடுத்த அந்த மட்டையை அவரிடம் காண்பித்து, இதைத்தான் எடுத்தேன்! இது இருந்தால் எழுத்து ஜோராய் ஓடுகிறது, தயவுசெய்து இதை யாரிடமும் தொல்லாதீர்கள்! என்ற விவரத்தை வெளியிட்டு பணிவன்புடன் வேண்டிக்கொண்டாராம். பார்வையாளர் என்ன செய்வார்? பதிலுக்கு ஒரு புன்முறுவலை உதிர்துவிட்டு போய்விட்டார்.


வெற்றிலைப் பாக்கு வைத்தியம்!

பொடிப் பழக்கத்தைப் போன்றே வெற்றிலைப் பாக்கு புகையிலையும் போட்டு பழகிக்கொண்டார். அதில் அண்ணாவுக்கு அளவற்ற மோகம். கல்லூரி மாணவராயிற்றே, வெற்றிலைப் பாக்கு போட்டால் நாகரீகத்தில் திளைத்துள்ள மற்ற கல்லூரி நண்பர்கள் கேலி செய்வார்களே என்ற எண்ணத்திற்கு அண்ணா ஒரு சிறிதும் கவலைப்படுவதே இல்லை.

வெற்றிலைப் பாக்கு மீது அவர் கொண்டிருந்த மோகம், கல்லூரி வகுப்பறையில் இருக்கும்போது கூட அவரை விடவில்லை. வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போதுகூட வெற்றிலைப் புகையிலையை உபயோகிக்க ஆரம்பித்தார். வெற்றிலைப் போடுவதை ஆசிரியர் பார்த்துபிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக வீதிப் பக்கமாக இருக்கும் சன்னல் ஒரமாக உள்ள பெஞ்சில் அண்ணா உட்கார்ந்துகொள்வார். எப்படி எப்படியோ முயன்றும் நீண்ட நாட்களுக்கு பேராசிரியர்களை அண்ணாவால் ஏமாற்ற முடியவில்லை. ஒரு தடவை மோசூர் கந்தசாமி என்ற தமிழ்ப் பேராசிரியர், அண்ணா வெற்றிலைப் பாக்கு புகையிலையுடன் வகுப்பில் இருப்பதைக் கண்டு கடிந்து கொண்டாராம்.

அடா என்று அழைத்தவர்!

பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா படித்த காலத்தில் மோசூர் கந்தசாமி புலவர் என்பவரும் மணி திருநாவுக்கரசு என்பவரும் தமிழாசிரியர்கள் கூனிக் குறுகி, அச்சத்துக்கும் ஆயாசத்துக்கும் உட்பட்டு செல்வதைப் போலல்லாது, அந்தக் காலத்திலேயே நிமிர்ந்த நடையோடு நேரிய பர்வையோடு நடந்து கொள்வார்கள். அந்த துணிவு மிக்க ஆசிரியர்களிடம் பாடம் கேட்ட காரணத்தால்தான எந்த தொல்லைகளையும் ஏற்று, எந்த பிரச்னைக்கும் ஈடு கொடுத்து சமாளிக்க அண்ணாவால் முடிகிறது. மோசூர் கந்த சாமிப் புலவர் முதல்முதலாக வகுப்புக்கு வந்தததும் அண்ணா போன்ற மாணவர்களைப் பார்த்து, உங்களை நான் கூப்பிடும்போது அவன் இவன் என்றோ, அது இது என்றோ கூறமாட்டேன். அவன் இவன் என்று கூறுவது அவ்வளவு சரியாக எனக்குப் படவில்லை; அது, இது என்று கூறுவதோ அஃறினையைக் குறிக்கும், அடா! என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும், எனென்றால், அதுதான் அன்புச் சொல், அன்பின் சின்னம்தான் அது என்று கூறினாராம், அண்ணாவின் கல்லூரிப் படிப்பு காலத்திலேயே தன்மான உணர்ச்சியும், வீர உணர்ச்சியும் பெற தமிழாசிரியர்களும் காரணமாக இருந்தார்கள்.

கட்டுரையில் கைவண்ணம்!

பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரி பேராசிரியர், மாணவர்களிடம் கட்டுரை ஒன்றை எழுதி வரும்படி கூறியிருந்தார். மறுநாள் மாணவர்கள் எழுதி வந்த கட்டுரைகளை திருத்துவதற்காக பேராசிரியர் எடுத்துச் சென்றார். அண்ணாவின் கட்டுரையை திருத்துவதற்கு, அண்ணாவின் கட்டுரையில்தான் பேரதிர்ச்சியுற்றார். அண்ணாவின் கட்டுரையில்தான் எதிர்பாராத பல புதிய செய்திகள் இருப்பதைக் கண்டு வியப்புற்றார் நாம் சொல்லிக்கொடுத்தவைகளைத்தானே எல்லா மாணவர்களும் எழுதி இருக்கின்றனர். அப்படியிருக்க, நாம் சொல்லாத செய்திகள், புதுப்புது கருத்துக்கள், அண்ணாதுரையால் மட்டும் எப்படி எழுத முடிந்தது. இவ்வளவு உயர்ந்த முறையில் எழுத அவரால் முடியாது. வேறு ஏதாவது ஒரு புத்தகத்தில் இருந்தததை அப்படியே பார்த்து எழுதியிருக்கவேண்டும் என்றுதான் அவர் எண்ணியிருந்தார்.

மறுநாள் கல்லூரி வகுப்பறைக்குள் நுழைந்த பேராசிரியர் முதன்முதலாக அண்ணாவைத் தன் அருகில் அழைத்து சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அண்ணாதுரை நீ எந்த புத்தகத்திலிருந்து கட்டுரைக்கு வேண்டிய கருத்துக்களை தொகுத்து எடுத்து எழுதியிருக்கிறாய்? என்று கேட்டாராம். பேராசிரியரின் கேள்வியைக் கேட்ட அண்ணா புன்சிரிப்புடன் நான் என் கட்டுரையில் எழுதியவைகள் யாவும் என்னுடைய சொந்த கற்பனையில் தோன்றிய கருத்துக்களேயாகும். அவைகள் எந்தப் புத்தகத்திலிருந்தும் எழுதப்பட்டவைகள் அல்ல என்று கூறினாராம். கல்லுரிப் பருவத்திலேயே கட்டுரை எழுதுவதில் வல்லமை பெற்றிருந்த அண்ணாவைக் கண்டு பேராசிரியர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 1:58 am

ஆசிரியரிடம் வேடிக்கை!

அண்ணா அவர்கள் கல்லூரியில் படிக்கும்பொழுது ஆங்கிலத்தில் கட்டுரை எழுவதிலும், பேசுவிதிலும், சிறந்து வளிங்கினார்கள். அவர் கல்லூரியில் முதல் வருட வகுப்பு படிக்கும்பொழுதே அவருடைய ஆங்கிலக் கட்டுரைகளை எடுத்து ஆசிரியர்கள், மற்ற மாணவர்களுக்கு வகுப்பில் காட்டுவார்களாம்.

ஆனால் அவர் இரண்டாவது வருட வகுப்பில் படித்தபொழுது, ஆங்கிலக் கட்டுரை வகுப்பிற்கு வந்த ஆசிரியருக்கு, அண்ணா எழுதிய உயர்தர ஆங்கில நடை அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

அண்ணாத்துரை! உன்னுடைய கட்டுரையில் நீண்ட வாக்கியங்கள் பல வருகின்றன. கட்டுரையென்றால், சிறு சிறு வாக்கியங்களாக இருக்கவேண்டும் என்று சொன்னாராம்.

சரி! கவனத்தில் வைத்துக்கொள்கிறேன் என்று அண்ணா அந்த வகுப்பில் உட்கார்ந்துவிட்டார்.

அடுத்த ஆங்கலக் கட்டுரை வகுப்பில், அண்ணா கட்டுரை எழுதி முடித்ததும், ஆசிரியர் அதை வாங்கிப்படித்தார். ஒரு காலத்தில் ஒரு கிழவன் இருந்தான். அவன் பெயர் ராபர்ட்

இப்படிக் கட்டுரை ஆரம்பித்தது, தான் சொன்னதைப் பையன் அப்படியே கடைப் பிடித்தது அவருக்கு சற்று
மகிழ்ச்சியைத் தந்தது. மேற்கொண்டு கட்டுரையைப் படித்தார்.

அவன் காலையில் எழுந்தான். வெளியில் வந்தான். சந்தையை நோக்கி நடந்தான். சந்தைக்கு வந்தான். அங்கு ஒரு கடையிருந்தது

இப்படி வாக்கியங்கள் எல்லாம் எழுவாய் பயனிலை இவைகளை மட்டும் கொண்டதாய், மிகச் சிறு சிறு வாக்கியங்களாக இருந்தன. வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் சிரித்துவிட்டார்கள். கேலியைப் புரிந்துகொண்டதும் ஆசிரியர் கட்டுரையை வைத்துவிட்டு, இப்படி கட்டுரை முழுவதும் சிறு சிறு வாக்கியங்களாகப் போட்டுவிட்டாயே, ஏன்? என்று அண்ணாவைக் கேட்டாராம்.

நீங்கள்தானே, நீண்ட வாக்கியங்கள் கூடாது; சிறு சிறு வாக்கியங்களாக இருக்கவேண்டுமென்று சொன்னீர்கள் என்று அண்ணா பதிலளித்தார்.

அதற்காக ஒரேயடியாக வெறும் சிறு வாக்கியங்களாகவே கட்டுரை முழுவதும் இருக்க வேண்டாம். ஆங்காங்கு சில நீண்ட வாக்கியங்களும் வரலாம்! என்று ஆசிரியர் சொன்னாராம். அதிலிருந்து அண்ணாவின் கட்டுரையை அவர் குறை கூறுவதே கிடையாது.

பேச்சுக்குப் பரிசு!

3-வது வருடம் ஆனர்ஸ் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோதுதான் அதுவும் லயோலாக் கல்லூரி மண்டபத்தில்தான் முதன்முதலில் அண்ணா ஆங்கிலத்தில் பேசினார்.

லயோலாக் கல்லூரிப் பொருளாதாரக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் பல்வேறு கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர்.

அண்ணா முதன்முதலில் அந்தப் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு ஆங்கிலத்தில் பேசினார். அங்கு அமர்ந்திருந்த பல பேராசிரியர்களும், அண்ணாவின் பேச்சுதான் நன்றாக இருந்தது என்று சிபாரிசு செய்தார்கள். இருந்தாலும் பிரசிடென்சி கல்லூரியைச் சார்ந்த வாரியார் என்னும் மாணவருக்குத்தான் முதல் பரிசு என அறிவிக்கப்பட்டது. உடனே கூடியிருந்த அத்தனை பேரும் பரிசு அண்ணாத்துரைக்குத்தான் கொடுக்கவேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். பேராசிரியர்களும் அதை ஆதரித்ர்கள்; கடைசியாக அண்ணாவுக்கும் ஒரு பரிசு கொடுத்தார்கள்.

சிகரெட்டும் சுதந்திரமும்

அண்ணா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு மாணவர் அதிகமாக சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று ஏன் அதிகமாக சிகரெட் பிடிக்கிறாய் என்று கேட்ட நேரத்தில் அவர் 'பர்னிங் தி பிரிட்டிஷ் கூட்ஸ் என்று கூறி, இதன் மூலம் வெள்ளைக்காரர்களுடைய பொருளைக் கொளுத்துவதாகவும் இருக்கும், அதே நேரத்தில் சுதந்திரத்திற்காக தியாகம் செய்ததாகவும் இருக்கும் என்று சொன்னாராம். அந்தக் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் திட்டங்களை எப்படியெல்லாம் அர்த்தப்படுத்திக்கொண்டு நடந்தார்கள் என்பதை அண்ணா வேடிக்கையாக கூறுவது உண்டு.

பேராசிரியருக்குப் புகழ் மாலை

அண்ணா அவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஷேக்ஸ்பிர் புகழ் பேராசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கல்வி பயின்றவர். திரு.கிருஷ்ணமூர்த்தியை நினைத்தாலே புதிய மாணவர்களுக்குக் குலை நடுங்கும். ஆனால் சில மாணவர்கள அவரிடம் அடக்கத்துடன் நெருங்கிப் பழகுவார்கள. வேறு சில மாணவர்கள் தோழர்களாகவும் பழகுவார்கள். இந்தப் பேராசிரியரைப் பற்றி அறிஞர் அண்ணா இறுதி ஆண்டின்போது நடந்த பாராட்டு விருந்தில் குறிப்பிட்டவை புகழ்பெற்ற சொற்கள். அவை:

பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி முதலாண்டின் சர்வாதிகாரி, இரண்டாம் ஆண்டில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட சக்கரவர்த்தி, மூன்றாம் ஆண்டில் குடியரசுத் தலைவர். நான்காம் ஆண்டில் தோழர்.
இதைக் கேட்ட பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி உட்பட அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்து மகிழ்ந்தார்களாம்.

ஆறு மாதம் ஆசிரியர்

அண்ணா அவர்கள் எம்.ஏ.படித்து முடித்தவுடன் சென்னையிலுள்ள கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஒரு ஆறு மாதம் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது கல்வியில் ஒரு புதிய பாடமுறையை புகுத்தினார்கள். அப்போது, அண்ணாவுக்கு உற்ற நண்பர் அண்ணா இடத்தில், நீ ஆசிரியராக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி ஒரு ஆறு மாதம் ஆசிரியராக பணியாற்றினார். பின்னால் விலகி பொது வாழ்வில் ஈடுபடத்தொடங்கினார்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:00 am

கேட்டது ஒன்று கிடைத்தது வேறு

அண்ணா அவர்கள உத்தியோகத்தில் இருக்க வேண்டும் என்பது அவரது சிறிய தாயாரின் விருப்பம். ஆனால் அண்ணாவுக்கோ ஒருவரின் கீழ்ப்படிந்து பணிபுரிவதிலே விருப்பமில்லை. சிறிய தாயாரின் சொல்லை அண்ணா எப்பொழுதும் தட்டிப் பேசியதில்லை. சிறிய தாயாரின் வற்புறுத்தலின்பேரில் அப்போது குமாரராஜாவாக இருந்த திரு.முத்தையா செட்டியாரை சந்திக்க அண்ணா சென்றார். குமார ராஜா அவர்கள் தன் அரண்மனைக்கருகே ஓடும் அடையாற்றில் படகில் அமர்ந்தபடி அண்ணாவுடன் இரையாடிக்கொண்டே சென்றார்கள். 75 ரூபாய் சம்பளம் தரக்கூடிய கல்லூரியில் விரிவுரையளார் வேலை தரவேண்டுமென்று அண்ணா கேட்டதற்கு, குமாரராஜா து வேண்டாம் நம் கட்சிக்கு நல்ல பேச்சாளர் கிடைப்பது பின்னர் அரிதாகிவிடும், ஆதலால் எனக்கு விரதம துணையாளராக (ஞநசளடியே; ஹளளவ.) ரூ.120 சம்பளம் தருகிறேன் என்றார். ஆனால் அண்ணா அவர்கள் வீடு வந்ததும் கீழ்க்கண்ட முறையிலே ராஜா அவர்களுக்குக் கடிதம் எழுதி அனுப்பி விட்டாராம்.

அன்புள்ள ஐயா, தங்கள் பணியை மேற்கொள்ள இயலாததற்கு வருந்துகிறேன். என்பதே அவர் எழுதின ரத்தின சுருக்கமான கடிதம். ஜட்ஜ் வேலை கேட்ட மாஜிஸ்ட்ரேட்

அண்ணா அப்போதுதான் அரசியலில் புகுந்த நேரம், ஆர்வமாக அரசியலில் ஈடுபடுவதும் பொதுக்கூட்டங்களில் அதிகமாகப் பேசுவதுமாக இருந்தார் அவர். இந்த மாதிரி அரசியலில் ஈடுபட்டு வேலை ஒன்றும் பார்க்காமல் காலம் கழித்து வந்தால் அண்ணா கெட்டுவிடுவார் என்று எண்ணி, அவருக்குத் தெரிந்த சப் மாஜிஸ்ட்ரேட் ஒருவருக்கு குமாஸ்தா வேலைக்காக சிபாரிசு கடிதம் கொடுத்து அனுப்பிவைத்தார். அண்ணாவும் சிபாரிசுக் கடிதத்துடன் மேற்படி சப் மாஜிஸ்ட்ரேட் வீட்டின் உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்தார். வெளியில் இருந்த வேரைக்காரரிடம் ஒரு பேப்பரில், சி.என்.அண்ணாதுரை, காஞ்சீபுரம் என்று எழுதிக்கொடுத்து இதை சப் மாஜிஸ்ட்ரேட்டிடம் காண்பித்து நான் வந்திருப்பதாகச் சொல்லு என்று அனுப்பிவிட்டு வெளியில் நின்றுகொண்டிருந்தார்.

வேலைக்காரர் கொடுத்த சீட்டைப் பார்த்த சப் மாஜிஸ்ட்ரேட் சாப்பாட்டைக் கூடப் பாதியிலேயே வைத்துவிட்டு, வெளியில் வந்தார். வாருங்கள்! வாருங்கள்! தாங்கள்தான் அண்ணாத்துரையா? 50 வயதாவது இருக்கும் என்ற எண்ணினேன். இவ்வளவு இளமையாக இருக்கிறீர்களே! என்று கூறிக்கொண்டே தாங்கள் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். ஆற்காடு திரு.ஏ.இராமசாமி முதலியார் அவர்களிடம் சொல்லி எனக்கு இரு ஜட்ஜ் வேலை வாங்கித்தர தாங்கள்தான் சிபாரிசு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வேலைத் தேடிவந்த அண்ணாவோ தனக்கு அரசியலில் நல்ல செல்வாக்கும் எதிர்காலமும் இருப்பதைக் கண்டு வேலை கூடக் கேட்காமல் வீடு திரும்பி வந்தார். அரசியலில் ஈடுபடலானார்.



ஆற்காடு இராமசாமியின் அறிவுரை

காலஞ்சென்ற டாக்டர் சி.நடேச முதலியார் மரணப் படுக்கையில் இருந்தபோது ஆற்காடு ஏ.ராமசாமி முதலியாரைச் சந்திக்க நேரிட்டது. அப்போது டாக்டர் சி.நடேச முதலியார் அவர்கள். ராமசாமி முதலியாரைப் பார்த்து அப்பா, நான் இந்த கட்சியில் உழைத்ததால் கஷ்டங்கள் பல அடைந்தேன். இன்னலுக்கும் தொல்லைக்கும் ஆளானேன். ஆனால் அதற்காக இந்தக் கட்சியைக் கை கழுவிவிட்டுவிடவில்லை. இந்தக் கட்சி மட்டும் இல்லாவிட்டால் ஒரு மாபெரும் சமுதாயமே அழிந்துவிடும். ஆகையால் நீயும் கடைசிவரையில் இந்தக் கட்சியைக் கைவிடாதே என்று கூறினாராம்.

இந்தச் சந்திப்பு நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை அண்ணா அவர்கள் ஆற்காடு ஏ.ராமசாமி முதலியாரைச் சந்திக்க நேரிட்டது. அப்பொழுது அண்ணா அவர்களை நோக்கி ஆற்காடு ராமசாமி முதலியார் கூறினாராம், ஏனப்பா கட்சி, கொள்கை என்று அலைகின்றாய்! செகரட்ரியேட்டில் ஒரு வேலை வாங்கித் தருகிறேன். போய் சுகமாக இரு என்று.

இங்கிலீசில் பேசு!

கொஞ்சம் படித்துவிட்டால் இங்கிலீசில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியல் படித்துவிட்டால் இங்கிலீசில் பேசவேண்டும் என்ற மனப்பான்மை இருந்த காலம் அது.

இங்கிலீசில் பேசினால் அது ஒரு கவுரவம் என்று அப்போது பலர் எண்ணியதுண்டு.

அண்ணா அப்போது சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். ஆறு மாதங்கள் தொடர்ந்து படித்த பின் விடுமுறைக்காக வீட்டுக்குச் சென்றார். அப்போது அவரது பாட்டியார் அவரை அருகில் அழைத்து கொஞ்சம் பேசு என்று கூறினார்கள்.

நாம் இப்போது பேசிக்கொண்டுதானே இருக்கிறோம் என்றார் அண்ணா.

இல்லை கொஞ்சம் இங்கிலீசில் பேசு என்று அவரது பாட்டியார் கேட்டார்கள்.

இங்கிலீசில் பேசினால் உங்களுக்கு என்ன புரியும்? என்று அண்ணா கேட்டார்.

என்ன சொல்கிறாய்? இதற்காகவா இவ்வளவு பணம் செலவு செய்து படிக்க வைக்கிறோம் என்று அண்ணாவின் பாட்டியார் கேட்டு சலித்துக்கொண்டார்களாம்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:01 am

காப்பி அடித்த பேச்சாளர்

கல்லூரி நண்பர் ஒருவர் அண்ணாவுடன் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வந்தார். மக்களை கவரும்படியாக எப்படிப் பேசுவது என்று அவர் கேட்டதற்கு, அண்ணா எப்படிப் பேசுகிறாரோ, அப்படியே பேசிவிடுங்கள் என்று சிலர் சொல்லிவைத்தார்கள்.

முதன் நாளன்று அந்தக் கல்லூரி நண்பன் அண்ணா பேசிய கூட்டத்துக் வந்திருந்ததர். அன்று கூட்டம் நடந்தபோது நள்ளிரவு நேரம், எனவே மக்கள் சோர்ந்து அமர்ந்திருப்பதைப் பார்த்து, உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக மன்னிக்கவேண்டும். நீங்கள் அயர்ந்து தூங்கும் நேரத்தில் தொலைலை தருவதற்காக மன்னிக்கவேண்டும்.... என்று கூறி அண்ணா பேச்சை தொடங்கினால். மக்கள் புத்துணர்ச்சியுடன் உட்கார்ந்து பேச்சைக் கேட்கத் தொடங்கினார்கள்.

இதைக் கவனித்துவிட்டுச் சென்ற அந்த நண்பன் மறுநாளும் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது மாலை 6 மணி. மக்கள் எல்லோரும் சுறுசுறுப்பாக இருக்கும் நேரம். அந்த நண்பனிடம் பேசுகிறாயா? என்று கேட்டவுடன் எழுந்து சென்று பேசத் தொடங்கினார். கூட்டத்தினரைப் பார்த்து அவர் நீங்கள் எல்லோரும் தூக்கத்தில் எந்திருக்கிறீர்கள். உங்களுக்குத் தொல்லை கொடுப்பதற்காக மன்னிக்கவேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டதும் கூட்டதினர் கை தட்டவில்லை. கொல் என்று சிரித்தார்கள். அண்ணா பேசினால் மட்டும் கை தட்டுகிறார்களே நான் பேசும்போது கேலியாக சிரிக்கிறார்களே என்று அன்றிரவு அந்த நண்பர் வருத்தப்பட்டாராம்.

நேருவிடம் கொடுத்த துண்டு அறிக்கை!


முன்பு ஒருமுறை அண்ணா கல்லூரி மாணவராக இருந்த சமயத்தில், சென்னைக்கு சுற்றுப் பயணம் வந்த நேரு அவர்கள் பிரபாத் டாக்கீசில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிப்கொண்டிருந்தார். திலகர் நிதி பற்றி நாடு எங்கும் பரபரப்புடன் பேரப்பட்டு வந்தசமயம் அது. அதைப்பற்றி அண்ணா அவர்கள் ஆங்கிலத்தில் இரு அறிக்கை தயார் செய்து அந்தக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் நுழைந்து மேடை அருகே சென்று நேருவின் கையிலே அந்தத் துண்டு அறிக்கையைக் கொடுத்துவிட்டு வந்தார். திலகர் நிதி என்னும் பேரால் காங்கிரஸ்காரார்கள் செய்த மோசடிப்பற்றி ஆங்கிலத்தில் அத்துண் அறிக்கை அச்சடிக்கப்பட்டிருந்தது. ஒரு இளைஞன் இவ்வளகூ துணிச்சலாக தன்னந்தனியாக நேருவின் கையிலே இதைக் கொடுத்துவிட்டானே என்று எல்லோரும் ஆத்திரப்பட்டனர்.

செங்கல்வராயன் முயற்சி தோற்றது!

ஆங்கிலத்திலும் அருந்தமிழிலும் போச்சாளராக விளங்ககும் காங்கிரஸ் பிரமுகர் திரு.டி.செங்கல்வராயன் அவர்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, நாடு சுதந்திரம் பெறவேண்டும் என்கிற தேசிய எழுச்சி தீவிரமாக இருந்த நேரம். அப்போது கல்லூரியில் கடித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பலர் ஒன்றுகூடி நாடு விடுதலை பெறவேண்டும் என்று எண்ணி கல்லூரி மாணவர் மன்றம் ஒன்று துவக்கி, அதில் மேடைப் பேச்சுக்களை பயின்றுவந்தார்கள். அப்போது ஒரு தோழர் திரு.செங்கல்வராயன் அவர்களிடம் அண்ணா அவர்களின் பேச்சாற்றல் பற்றி கூறினால். நன்றாகப் பேசக்கூடியவர். அவரை நீங்கள் அவசியம் சந்திக்கவேண்டும் என்று வலியுறுதினார். நண்பர் விருப்பப்படி அண்ணா அவர்களை சந்தித்தார். அநத் சந்திப்பின் மூலம் பண்புள்ள இயல்பு, அன்புமிக்க நட்பு இவைகளை அண்ணாவிடம் கண்டார். திரு. செங்கல்வராயன் அண்ணாவைக் கண்டதும், அவரை தேச வேவையில் தன்னிடத்திலுள்ள இயக்கத்தில் ஈடுபடுத்த சேருமாறு பெருமுயற்சி செய்தார். அண்ணா அவர்களோ செங்கல்வராயன் விருப்பப்படி அந்தக் கல்லூரி மாணவர் மன்றத்தில் சேர்ந்தார். ஆனால் அவர் சார்ந்துள்ள கட்சியில் மட்டும் தன்னை சேர்த்துக்கொள்ளவில்லை. அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் ஆழமாக அமைந்துவிட்டன. திரு. செங்கல்வராயன் தன் தலைவர் சத்தியமூர்திக்காக டெல்லி சட்டசபை தேர்தலில் கடுமையாக உழைத்தார். அண்ணா நீதிக்கட்சியின் வேட்பாளர் ஆன உயர்திரு. இராமசாமி முதலியார் பக்கம் நின்று ஆதரவு திரட்டினார். அதுமுதல் இருவரும் அரசியலில் பிரிவுதான், என்றாலும் நட்பில் மட்டும் பிளவு ஏற்படவில்லை.

தேர்தல் பிரச்சாரம்!

1936-ம் ஆண்டு சென்னை நகரசபைக்கு நடந்த உறுப்பினர் பதவிக்காக அண்ணா அவர்கள போட்டியிட்டார்கள். பெத்துநாய்க்கன் பேட்டைப் பகுதித் தொகுதிக்கு அவர் ஜஸ்டிஸ் கட்சியின் சாரிபில் நின்றார். அண்ணா அவர்களை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தோழர் பாலசுப்பிரமணிய முதலியார் என்பவர் நிறுத்தப்பட்டார்.

அண்ணாவைப் போலவே அவரும் எம்.ஏ. பட்டம் வெற்றவர். ஆனால் அவருக்கு கூட்டங்களில் பேச வராது. அண்ணா அவர்கள் கூட்டங்களில் பேசும்போது, நானும் எம்.ஏ. வரை படித்தவன். என்னை எதிர்த்து நிற்பவரும் எம்.ஏ. வரை படித்தவர். நாங்கள் இருவரும் செல்ல விரும்பும் இடம் உங்கள் சார்பாகக் கருத்துக்களை எடுத்துச் சொல்லவேண்டிய நகரசபை. நான் உங்கள் முன் பேசுகிறேன். அவரையும் பேசச் சொல்லி நீங்கள் கேளுங்கள். இருவரில் எவரை அனுப்பலாம், அனுப்பினால் பலன் ஏற்படும் என்பதைப் பிறகு தீர்மானித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவார்.

காங்கிராஸ் தேர்தல் கூட்டம் நடக்கும்போது பொது மக்கள் தேர்தலுக்கு நிற்கும் தோழர பாலசுப்பிரமணிய முதலியாரை பேசும்படி வற்புறுத்துவார்கள். காங்கிரஸ் தொண்டர்களும் அவரை கொங்ச நேரம் பேசும்படி கெஞ்சுவார்கள். நான் தேர்தலில் வேண்டுமானாலும் நிற்காமல் நின்றுவிடுகிறேன். ஆனால் பொதுக்கூட்டங்களில் பேசமட்டும் மாட்டேன் என்று கூறிவிடுவார். அவருக்குப் பதிலாக பேசுகிறாம் என்று தோழர்கள் டி.செங்கல்வராயன், கோபாலரத்தினம், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்வந்து பேசுவார்கள்.

தம்மை எதிர்த்து நின்ற தோழர பாலசுப்ரமணிய முதலியாரைப்பற்றிப் பேசும்போது அண்ணா அவர்கள், என்னுடைய நண்பர் பாலசுப்ரமணியம் நெய்க்கு தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா? என்ற தத்துவத் துறையைப் பற்றி படித்தவர், நான் நெய்யும், தொன்னையும் மக்களுக்கு கிடைக்கச் செய்வது எப்படி என்று ஆராயும் பொருளாதார துயையைப் பற்றிப் படித்தவன். இருவரில் யார் உங்களுக்குப் பயன்படுவோம் என்பதை நீக்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிடுவார்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:02 am

நந்தவனமும் நாயும்

1936-ம் ஆண்டில் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் பெத்துநாய்க்கன்பேட்டையில் அண்ணாவை எதிர்த்து நின்ற காங்கிரஸ்காரருக்கு ஆதரவாக பலப்பல சொற்பொழிவாளர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் திரு.வி.கலியாணசுந்தரனார் ஆவார்

தேர்தல் கூட்டமொன்றில் திரு.வி.க. அவர்கள் சொற்பொழிவாற்றும்பொழுது நந்தவனத்தில் நாயொன்று செத்துக் கிடந்தால் மக்கள் நாயை அகற்றுவரோ! நந்தவனத்தை அழிப்பரோ! நாயையே அகற்றுவர். அதுபோல காங்கிரஸில் தீயவர் சிலர் இருந்தால், தீயவரை அகற்றுவது நன்றா? அல்லது அதற்காக காங்கிரஸையே அழிப்பது நன்றா? கூர்ந்து பார்மின்! தீயவரை அகற்றுவதன்றோ நல்லவரின் கடமை? நந்தவனத்தை தூய்மைப்படுத்தி காப்பற்றுவதால் காங்கிரஸையும் காப்பாற்றவேண்டும் என்பர் என்று கூறினார்.

அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா அவர்கள் பேசம்போது, திரு.வி.கலியாணசுந்தரனார் பேசும்போது நந்தவனத்தில் நாய் செத்துக் கிடந்தால் நாயை அகற்றுவதா? அல்லது நந்தவனத்தை அழிப்பதா? என்று கேட்கிறார். நல்லவர்கள் சுகம் பெறவும் நலிவடைந்தோர் குணம் பெறவுமே நந்தவனம் அமைந்திருக்கிறது. நல்ல மனிதர்கள் நுழையவேண்டிய நந்தவனத்தில் நாய் நுழையலாமா? நாய் நுழைந்தால் பின் அது நந்தவனமாகுமா? நலிந்தவர்க்கும் நலம்பயக்கவேண்டிய நந்த வனம் நாயை சாகடிக்குமா? நாயும் சாகிறதென்றால் நந்தவனத்தில் மணம் வீசவில்லை, விஷக்காற்று வீசுகிறகென்றுதானே பொருள்படும். நாயையும் சாகடிக்கும் விஷக்காற்று வீசும் நந்தவனம் ஊரின் நடுவே இருக்கலாம்? அதனை அழித்து புதிதாக தோற்றுவிப்பதுதானே நல்லவர் செய்யும் கடமையாக இருக்க முடியும் என்று பதிலுரைத்தார்.

காங்கிரஸ்காரர்கள் வழக்கம்போல் அதற்குச் சமாதானம் கூற முன்வரமுடியாமல் வேறு முறைகளில் திரும்புவார்களாம்.

கோவிலுக்கு விளக்கா?

சென்னை மாநகராட்சி மன்ற தேர்தலில் அண்ணா போட்டியிட்டபோது பெத்துநாயக்கன்பேட்டை வட்டரத்தில் அப்பொழுது கோயில்களுக்கும், மெர்க்குரி விளக்குகள் போடப்பட்டு வந்தன. அந்த நேரத்தில் அண்ணாபுக்கு எதிராகக் காங்கிரஸ்காரர்கள் நோட்டீசு அடித்து வெளியிட்டார்கள். அப்பொழுது நடைபெற்ற ஜெயபாரதம் பத்திரிகையிலும் அண்ணாதுரைக்கு ட்டுப் போட்டால் ஆலயங்களில் விளக்கு எரியாது என்று எழுதியிருந்தார்கள்.

அதற்கு அண்ணா பதிலளிக்கையிலே, இந்த நகரத்திலுள்ள சேரிகளெல்லாம் பன்னெடுங்காலமாக இருளில் மூழ்கி இருக்கின்றன. அந்த சேரிகளுக்கெல்லாம் விளக்கு போட்ட பிறகு, ஏழை எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கெல்லாம் விளக்குப்போட்ட பிறகு, பணமும், மின்சாரமும் மிச்சப்பட்டால் கோயிலுக்கு விளக்கு எரியும். சேரிப் பகுதிகளிலே இருட்டிலே மக்கள் வசிக்கிறார்கள். அங்கு நண்டு கடித்தாலும், நட்டுவாய்ககாலி கடித்தாலும் அந்தத் துன்பங்களையெல்லாம் மக்கள் அனுபவிக்கவேண்டியிருக்கிறது; அவர்களுக்கு விளக்கப் போடாமல் ஆண்டவனுக்கு விளக்குப் போட்டால் ஆண்டவன் முகம் கருக்குமேயொழிய ஒளி பெறாது என்று சொன்னார். அப்படியானால் உனக்கு ஓட்டு இல்லை என்றார்கள். அப்படிப்பட்ட ஓட்டு எனக்கு வேண்டாம் என்றார் அண்ணா. அதனால் தேர்தலில் தோற்றார்

என்.வி.நடராசனை சேரியில் சாப்பிடவைத்தார்!

சென்னையில் அண்ணா அவர்கள் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது ஓட்டுக் கேட்பதற்காக சேரிக்கு சென்றிருந்தார்கள். அங்கே ஓட்டையும் கேட்டுவிட்டு அவர்கள். வீட்டிலேயும் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். வரும்போது அவர்களைப் பார்த்து, இன்று நான் ஓட்டுக் கேட்க வந்தேன், உங்கள் வீட்டில் சாப்பிட்டேன். நாளை கங்கிரஸ்காரர்கள் வருவார்கள். அவர்களையும் நீங்கள் சாப்பிடச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு வந்தார். அதேபோல், மறுநாள் காங்கரிஸ்காராக்ள் போனார்கள். அப்போது தோழர் என்.வி.நடராசன் காங்கிரசில் இருந்தார்; அவரும் அவர்களுடன் போனார். அவர்கள் போய் ஓட்டு கேட்டதும், சாப்பிட வாருங்கள் என்று கையைப் பிடித்துக்கொண்டனர். என்ன செய்வார்கள்? சீனுவாச அய்யர் என்ற ஒரு காங்கரிஸ் பிரமுகர். அவரும், என்.வி.நடராசனும் முதல் தடவையாக சேரியில் சாப்பிட்டார்கள். காங்கிரஸ்காரார்களை சேரியில் முதல் தடவையாக சாப்பிட வைத்த பெருமை அண்ணா அவர்களையே சாரும்.

போக்கிரியை அடக்கினார்


சென்னை பெத்துநாய்க்கன்பேட்டையில் நகரசபை தேர்தலுக்கு அண்ணா போட்டியிட்டபோது காங்கிரஸ்காரர்கள் ஒரு போக்கிரிக்குக் கூலி கொடுத்து அண்ணாவின் கூட்டத்தைக் கலைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்; அவன் வேலை எப்படியாவது கூட்டத்தைக் கலைக்கவேண்டுமென்பதுதான். அபனும் அங்கு ஒரு ஓரமாக நின்றுகொண்டிருப்பான். அண்ணாவுக்குத் தெரியும். அவன் எதற்காக வந்திருக்கிறான் என்று. அப்பொழுதெல்லாம் ஒலி பெருக்கி இல்லாததால் எல்லோருக்கம் கேட்கவேண்டும் என்பதற்காக ல்லாப் பக்கமும் திரும்பிப்பேசுவது வழக்கம். யார் யார் எப்படி இருக்கிறார்கள, என்னென்ன நோக்கத்தோடு வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்தபடி தோழர்களே! உங்களுடைய வலிவை கேவலம் எட்டணா, கத்தணாவுக்கா விற்கவேண்டும்? என்று கேலியாகப் பேசினார். அண்ணா அப்படிப் பேசியதும் அந்த போக்கிரி ஏதும் செய்யாத நிலையில் சும்மா இருந்து விடுவான். கூட்டத்தை அவன் கலைக்காமல் போனதும் அவர்கள் அவனைப்பார்த்து நீயும் அண்ணாத்துரை பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்துவிட்டாயா? என்பார்கள். என்ன செய்ய? அவன், ஏதாவது வம்பு பேசினால்தானே கலகம் செய்யலாம் என்பான். அப்படியானால் உனக்கு நாயையிலிருந்து கூலியில்லை என்பார்கள், உடனே அவன் கூலி தராவிட்டால் நாளை முதல் உங்கள் கூட்டத்தில் கலகம் செய்வேன் என்பான். ஆகவே தேர்தல் முடியும் வரை அவனுக்குக் கூலி கொடுத்துக்கொண்டு வந்தார்கள்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:02 am

1934 ம் ஆண்டு கோவைக்கு அருகில் உள்ள திருப்பூரில் செங்குந்த இளைஞர் மாநாட்டில் இரையாற்றிய அண்ணா அங்கு தந்தை பெரியாரை சந்தித்தார்.

கல்லூரி நாட்களில் அண்ணா எழுதிய முதல் தமிழ்க் கட்டுரை மகளிர் சமத்துவம் என்பது.
அதேபோன்று ஆங்கிலத்தில் ஆடீளுஊடீறு ஆடீக்ஷ ஞஹசுஹனுநு எனும் கட்டுரை எழுதினார்.

1934-ல் இருந்து 1936 வரை அண்ணா தொழிற்சங்கவாதியாகச் செயல்பட்டார். அப்போது காங்கிரஸில் இருந்து திரு.என்வி.நடராசன் தொடர்பு எற்பட்டது. தொழிற்சங்கத்தில் பணியாற்றிய அண்ணாவுக்கு ஆல்பர்ட் ஜேசுதாசன் பொதுவுடமைவாதி திரு.பாசுதேவ் அவர்களின் தொடர்பு கிடைத்தது. சிறிது காலம் சென்னையில் உள்ள தொண்டை மண்டல துளுவ வெள்ளாளர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1936-ல் திரு.பாசுதேவ் நடத்திய பால பாரதி எனும் இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1937-ல் காஞ்சி மணிமொழியார் நடத்திய நவயுகம் எனும் இதழில் சிறிதுகாலம் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1936-ல் சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெத்துநாய்கன்பேட்டையில் நின்று தோற்றார்.

55 ஆண்டுகளுக்க முன் 1934-ல் திருச்சி தேவர் மன்றத்தில் நீதிக் கட்சி மாநாடு ஒன்றை பெரிய அனவில் நடத்திக்கொண்டிருந்தேன். மாநாட்டின் தலைவர் சர்.ஏ.இராமசாமி முதலியார் தன் பேச்சை மொழிபெயர்க்க ஒருவர் தேவை என்று கோரினார். வந்திருந்த பல வழக்கறிஞர்களை வேண்டினேன். அனைவரும் மறுத்துவிட்டனர். இவ்வளவு பெரிய மாநாட்டில் மொழிபெயர்பாளர் ஒருவரும் இல்லையே என்று வருந்தி வெட்கப்பட்டடேன்.

இந்நிலையில் ஒருவர் என்னிடம் வந்து இவர் கல்லூரி மாணவர். மொழிபெயர்பாளர் என்று கூறினார். இதை கேட்டதும் அதிக கோபம் வந்தது. பெரிய அரசியல் தலைவர்களின் பேச்சுகளைப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைக்கொண்டு மொழிபெயர்ப்பதைவிட ஆங்கிலப்பேச்சு ஒன்றே மாநாட்டை சிறப்பிக்கும் என்று சும்மா இருந்துவிட்டேன். இந்த நிலையில் மொழிபெயர்க்க ஆள் வந்துவிட்டதா என்று முதலியாரிடமிருந்து செய்தி வந்தது. நான் வேறு வழி இல்லாமல் அதே மாணவரிடம் சென்று தம்பி உன் பெர் என்ன என்றேன். அண்ணாதுரை என்றார். ஊர் எது என்றேன் காஞ்சீபுரம் என்றார். என்ன செய்கிறாய் என்றேன். எம்.ஏ. படித்துவிடு சும்மாயிருக்கிறேன் என்றார். நன்றாக மொழிபெயர்ப்பாயா என்றேன். ஏதோ கொஞ்சம் தெரியும் என்றார்.

பேச்சுக்கு பேச்சு மொழிபெயர்ப்பு மிக சிறப்பாக நடைபெற்றது. நானே வெற்றி பெற்றதாக மகிழ்ந்தேன். வழக்கறிஞர்களிடம் சென்று மறுத்துவிட்டீர்களே, பார்தீர்களா? என்று பெருமிதத்துடன் வினவினேன். நாங்கள் மறுத்ததினால்தான் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் கிடைத்தார் என்று கூறி சிரித்தார்கள். சர்.ஏ.ராமசாமி முதலியாரிடம் மொழிபெயர்ப்பு எப்படி என்று வினவினேன். அதில் சிறிது சன்னப்பொடியும் கலந்திருந்தது எனக் கூறி புன்னகை புரிந்தார்.

. . . ஆங்கிலம் கற்றவர்களில் பலர் அம்மொழியிலேயே ஆழ்ந்துவிடுகின்றனர். இரண்டொருவர் கரையேறினனலும் அவர்கள் கரையேறியது தமிழ்நாட்டுக் கரையாக இருப்பதில்லை. ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க் கரையேறிய அறிஞர்களில் அண்ணாத்துரையும் ஒருவர்.

பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களெல்லாம், வெளியேரிக்கொண்டிருப்பது ஒரு வழக்கம். அப்போதெல்லாம் நான் பெரியாரை ஆதரித்தும், பிரிந்தவர்களை வெறுத்தும் வந்தவன். நான் நெருங்கிப் பழகியதால் என்னுடைய முறையும் வந்துவிட்டது. காலியான என் இடமும் உடனே பெரியாரால் நிரப்பப்பட்டது. என்னுடைய பதவிகளில் காரியதரிசி பதவிக்கு அண்ணாத்துரை, பொருள் வசூலிக்க பொன்னம்பலனாரும் அமர்த்தப்பட்டனர். பின்னர் அவர்கள் மூவரும் நெருங்கி பழக ஆரம்பித்ததால் வழக்கப்படி அவர்கள் வெளியேறும் முறையும் வந்துவிட்டது.

.... பேராசிரியர் ஆர்.வி.சேதுப்பிள்ளை அவர்களுடன் ஒரு முறையும், பேராசிரியர் ச.தோமசுந்தரபாரதியார் அவர்களுடன், கம்பராமயணம் பற்றிய சொற்போர் சென்னையிலும், சேலத்திலும் நடைபெற்றன. இந்த இரண்டிலும் யார் வெற்றி பெற்றனர் என்பது கேள்வியே இல்லை. இருவரும் சொற்போர் நிகழ்த்த ஒப்புக்கொண்டதே அண்ணாத்துரைக்கு ஒரு வெற்றியாக அமைந்துவிட்டது.

தமிழ்நாட்டில் படிப்பில்லாத மக்களில் பெரும்பான்மையோரைப் பேச்சின் மூலம் தட்டி எழுப்பிய பெருமையில் பெரியாருக்கும் பெரும் பங்கு உண்டு. அது போலவே படித்து முடித்த இளைஞர்களில் பெரும்பாலோரை பேச்சின் மூலம் தட்டி எழுப்பிய பெரும் பங்கு அன்பர் அண்ணாத்துரைக்கு உண்டு என உறுதியாகக் கூறலாம்.

அன்பர் அண்ணாத்துரை ஆங்கிலத்திலும் நன்றாக பேசும் ஆற்றல் படைத்தவர். இக்காலத்தில் மேடைப்பேச்சுகறில் பயனிலையை முன்வைத்து, செயல்படுபொருளை பின்னே வைத்துப் பேசப்படுகிறது. அது தூது அனுப்பினார், பதில் வந்தது என்றிராமல் அனுப்பினார் தூது, வந்தது பதில் என்றிருக்கும். இம்முறையை நம் நாட்டில் மேடைப் பேச்சுகளில் முதலில் புகுத்தியவர் அன்பர் அண்ணாத்துரையே ஆவார்.

. . . அன்பர் அண்ணாத்துரை அவர்களுடைய உள்ளம் தூய்மையானது. விருப்பு வெறுப்பற்றது. இதனாலேயே பலருடைய அன்புக்கும் இவர் பாத்திரமானார்.

. . . இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்திருந்தால். உலகத் தலைவர்களில் ஒருவராக ஆகியிருப்பார். (முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்)

சன்டே அப்ஸர்வர் பி.பாலசுப்பிரமணியம் அவர்களும், திரு.டி.ஏ.வி.நாதன் அவர்களும், அண்ணா நீதி கட்சியில் சேர்ந்து பணியாற்ற காரணமாயிருந்தவர்கள்.

அவர்கள் அண்ணாவின் சிற்றன்னை இராசாமணி அம்மையாரைச் சந்தித்து, அவர்களின் சம்மதத்தைப் பெற்று அண்ணாவை முதன் முதலில் நீதிக்கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று அண்ணாவை அறிமுகப்படுத்தினர்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:04 am

தொழிற்சங்கத்துறையில் அண்ணா!

கல்லூரப் படிப்பை முடித்த அண்ணா, முதன் முதலில் தொழிற்சங்கத் துறையில்தான் ஈடுபட்டார். தொழிறாளர்களிடையே ஒற்றுமை ஓங்கிவும் அவர்கள் உரிமை பெற்றவரிகளாக விளங்கிடவும் வேண்டுமென 1934-ம் ஆண்டிலிருந்து மூன்றாண்டுக் காலம் பாடுபட்டார்.

அப்போது தொழிற்சங்கத் துறையில் முனைந்து செயல்பட்டு வந்த தோழர்கள் பாசுதேவ், ஆல்பர்ட் ஜேசுதாஸ், என்.வி.நடராசன் போன்றவர்களோடு அண்ணாவும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கினார்.

இலட்சுமணபுரியில் நடைபெற்ற அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் மாநாட்டிற்கு தோழர ஜம்னாதாஸ் மேத்தா தலைமையில் ஒரு குழு சென்றது. அதில் அண்ணாவும் தமிழகப் பிரதிநிதிகளில் ஒருவராகச் சென்றார்.

இந்கிருந்து சென்றவர்கள் அண்ணாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

மாநாட்டில் ஒரு தீர்மானத்தின் மீது சிறிது நேரம் பேசம் வாய்ப்பும் அண்ணாவுக்குக் கிடைத்தது. தொஞ்ச நேரப் பேச்சிலேயே மாநட்டுக்கு வந்திருந்த அனைவரையும் கவர்ந்துவிட்டார். பிறகு மாநாடு முடியும்வரை எல்லோரும் அண்ணாவையே வண்டாய் மொய்த்துக் கிடந்தார்கள்.

அந்த மாநாட்டில்தான், அண்ணா அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொழிற்சங்கத் துறையிலிருந்த அண்ணாவை நேரடியாக அரசியலில் ஈடுபடச் செய்தவர் சன்டே அப்சர்வர் பி.பாலசுப்ரமணியம் அவர்கள்தான்!

பொது வாழ்க்கை

தந்தை பெரியாருடன் 1936-ல் இருந்து இணைந்து சுற்றுப்பயணம் செய்தார். வடநாட்டில் பெரியார் சுற்றுப்பயணம் செய்தபோதுத, உடன் சென்ற அண்ணா தந்தை பெரியாரின் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். அப்போது கல்கத்தாவில் இருந்த பொது உடமை வாதி எம்.என்.ராய் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கார் அவர்களைச் சந்தித்தபோது அண்ணா உடன் இருந்து மொழி பெயர்ப்பு செய்தார். அப்போது அண்ணாவுக் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களான திரு.டி.ஏ.வி.நாதன், திரு.பாலசுப்பிரமணியம் போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது.

சென்னையில் உள்ள நூலகங்களைன பண்டிட் ஆனந்தன் நூலகம், சென்னை மாநகராட்சி நூலகம், கன்னிமாரா நூலகம் ஆகியவைகளைஇ அண்ணா கல்லூரி மாணவராக இருந்தபோதே பயன்படுத்தி தன் அறிவை வளர்த்துக்கொண்டார்.

1937-ல் இருந்து 1940 வரை அண்ணா அவர்கள் ஈரோடு சென்று, தந்தை பெரியார் அவர்களின் இதழ்களான குடியரசு, விடுதலை, பகுத்தறிவு ஆகியவற்றில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். கல்கத்தா காய்ச்சல், ரிப்பன் மண்டபத்து மகான்கள், ஓமான் கடற்கரையிலே போன்ற சிறப்பு மிக்கக் கட்டுரைகளை எழுதினார். அப்போது நக்கீரன், பரதன், வீரன் எனும் புனைப் பெயர்களில் பல கட்டுரைகளை வரைந்தார். 1938-ல் முதல் இந்தி எதிர்ப்பு போர் தந்தை பெரியார் தலமையில் தொங்ககியது. அண்ணா முதல் தளபதியாகப் பொறுப்பேற்று நான்கு மாதம் சிறை தண்டனைப் பெற்றார்.

தந்தை பெரியாருடன் பணியாற்றிய அந்த காலகட்டத்தில் அண்ணாவுக்கு கீழ்கண்டவர்களுடன் தொடர் ஏற்பட்டது. திரு.ப.ஜீவானந்தம், திரு.கி.ஆ.பெ.விசுவநாதம், பனகல். பொப்பிலி அரசர்கள், மறைமலை அடிகள், திரு.வி.கல்யாணசுந்தரனார், திரு.சிங்கரவேலர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பி.பாலசுப்பிரமணியம், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், முவாலூர் இராம மிருதம்மையார், திருமதி. தர்மாம்பாள், திருமதி. மீனாம்பாள் சிவராஜ், திரு.டி.ஏ.வி.நாதன், ராஜா.சர்.குமார முத்தையா, ஆற்காடு. இராமசாமி(முதலியார்), அ.க.தங்கவேலர்.

திரு. என்.வி.நடராசன் - 1935

நான் அண்ணா அவர்களுடன் ஏறத்தாழ 32 ஆண்டுகளாகத் தொடர்புகொண்டிருக்கிறேன். முதல் நாலைந்து ஆண்டுகள் அவரது அரசியல் கருத்துக் மாறபட்ட கட்சியைச் சார்ந்தவனாகவும், 1937 இறுதியில் அண்ணா அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றவனாகவும் (கட்சியைச் சார்ந்தவனாகவும்) இருந்து வருகிறேன். இந்தக் கட்டங்களில் ஏற்பட்ட நட்பு - பந்தபாசம் - நிதானமாக உறுதியாக வளந்ந்து, அண்ணா அவர்கள் ஓர் அரசியல் கட்சித் தலைவராக மட்டுமின்றி குடும்பத் தலைவராகவும் வளங்குசிறார்கள். இநவ்வித உறவு எனக்கு மட்டுமல்ல கழகப் பணிஅய எனது உயிரினும் மேம்பட்டது என்று யார் யார் மனமார எண்ணிப் பணியாற்றி வருகிறார்களோ அவர்கள அனைவருக்குமே அண்ணா அவர்கள் குடும்பத் தலைவர்தான்.

எனவேதான் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் கழகத்திற்கும் உள்ள அடிப்படையே சற்று மாறுபட்டதாகவும் இருந்து வருகிறது. சிலருக்கு இது ஆச்சரியமாகவும் இருக்கக் கூடும். இதன் தன்மையை நடைமுறையில் உணர்ந்து பார்த்தவர்களுக்கே தெரியும்-புரியும்.

அறிஞர் அண்ணா அவர்களை நான் முதன் முதலாகச் சந்தித்தது, மறைந்த தொழிலாளர் தலைவர் சி.பாசுதேவ் எம்.எல்.சி. அவர்கள் மூலமாகத்தார்.

1934-34-ம் ஆண்டுகளில் நான் காங்கிரசைச் சார்ந்தவனாகயிருப்பினும் தொழிலாளர் இயக்கத்தைப் பொருத்தவரையில் மற்ற கட்சியினரோடும் சேர்ந்து பணியாற்றுவேன். அதாவது தொழிலாளர் நலனே முதன்மையானது என்பது எனது குறிக்கோள். அந்த முறையில் தோழர்; சி.பாசுதேவ் அவர்களும் அறிஞர் அண்ணா அவர்களும் நீதிக் கட்சியை சார்ந்தவர்களாயினும் பொதுவாகத் தொழிலாளர் முன்னேற்றத்திற்குப் பணியாற்ற யார் முன்வந்தாலும் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எனக்கு ஆர்வம் இருந்துவந்தது.

1934-ம் ஆண்டு என்று கருதுகிறேன். ரிக்ஷா தொழிலாளர்களுக்கென்று ஒரு சங்கம் அமைக்கவேண்டும் என்று தோழர் சி.பாசுதேவ், எஸ்.நடெசனார் வி.வி.முருகேசன், என்.டி.முத்து, தில்லை ராசன் போன்ற தொழிற் சங்கத் தலைவர்கள் கலந்து பெசுவதாக முடிவு செற்திருந்தார்கள். அக்கூட்டத்திற்கு என்னையும் வருமாறு ழைத்திருந்தார்கள்.

அந்த ஆலோகனைக் கூட்டம் எங்கு நடைபெற்றது தெரியுமா? சட்டக் கல்லூரிக்கு அருகே உள்ள நடைபாதையில். இரவு 1-மணி அளவில் அந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் என்னை அண்ணா அவர்களுக்கு தோழர் பாசுதேவ் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார்.

அன்று அவருடன் ஏற்பட்ட அத்தொடர்பு பின்னர் எங்கள் தொழிற் சங்கசார்பில் அன்றைய அரசினருக்கு எழுதும் மடல்களைக்கூட அவரது உதவியைப் பெற்றே செய்துவரும் நிலைக்கு வளர்ந்தது.

தொழிற்சங்கம் அமைப்பதில் அண்ணாவின் ஒத்துழைப்பைப் பெற்றே தோழர். கி. பாசுதேவ் செய்வார்.

தொழிற்சங்கத் துறையில் அறிஞர் அண்ணா அவர்கள் அன்று என்ன கருத்து தொண்டிருந்தார்களோ அந்தக் கருத்தை இன்றும் கைவிடாமலிருப்பது போற்றுதற்குரியதாகும்.

தொழிற் சங்கங்கள் அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக இருத்தல் கூடாது. அதனால் தொழிற் சங்கத்தின் ஒன்றுபட்ட தன்மை சிதறுண்டுபோகும், ஆனால் தொழிலாளர்கள் அரசியலில் மிகவும் அக்கறைதொண்டாகவேண்டும், எனினும் அந்த அரசியலில் நோக்கங்கள் - வேறுபாடுகள் தோழிற் சங்கப் பணிகளில் குறுக்கிடக் கூடாது.

நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தபோது-சென்னை பக்கிங்காம்-கர்னாடிக் ஆலைத் தொழிலாளர்கள் மிகப் பெரிய வேலை நிறுத்தத்தை நீதிக்கட்சி அரசு அடக்க முற்பட்டது. அதுசமயம் அறிஞர் அண்ணா அவர்கள் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராய் இருந்தும், வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தந்தார்கள். தொழிலாளர் உரிமைக்காக பல கூட்டங்களில் பேசினார்கள், எனவே கட்சி கண்ணோட்டத்தை தொழிற்சங்கக் கட்டுக்கோப்பினை சிகைவுறச் செய்யும் என்று அறிஞர் அண்ணா அவர்கள் அன்றே அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, தீவிரமாகப் பேசி இறுதியாக மிகச் சாதாரண காரியங்களைச் செய்வதைக் காட்டிலும் நிதானமாகச் பெசி உருப்படியான திட்டத்தைச் செயல்படுத்துவதுதான் தொழிலாளர் சங்கப் பணியில் அடிப்படையாகக் கொள்ளவேண்டிய முறையென்பதும் அண்ணா அவர்கள் தொழிலாளர் இயக்கப் பணிபற்றி மேற்கொண்டுள்ள கருத்தாகும்.

எனவே அறிஞர் அண்ணா அவர்களின் 60-வது ஆன்று பிறந்த நாளை நாடெங்கும் கொண்டாடும் தொழிற் சங்கங்களும், தொழிலாளர் தோழர்களும் அண்ணா அவர்கள் தொழிற் சங்கத் துறையில் மேற்கொண்டுள்ள சீரிய கருத்தைச் சிந்தித்து அதன் வழி நின்று தொழிலாளர் சமுதாயம் தனது நியாயமான கோரிக்கைகளை நேர்மையான வழியில் பெற்று இதன் வாயிலாகப் பொதுவாக நாட்டுக்கே நல்வாழ்வு அமையப்பெற உறுதிதொள்ள வேண்டுகிறேன்.

தொழிற் சங்க வாதிகளுக்கு மற்ற எல்லோரைக் காட்டிலும் அரசியல் இன்றியமையாததுதான். ஆனால் அவ்வித அரசியல் தொள்கைகளை அவரவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின் வாயிலாக நினறு பணியாற்றுவதுதான் சிறந்த பண்பாடாகும்.

இந்த வேண்டுகோளை தொழிற்சங்கத் துறையில் பணியாற்றும் நண்பர்களுக்கு; தொழிலாளர் தோழர்களுக்கு எனது வேண்டுகோளாக வைத்து; முரசொலி மூலமாக எனது வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:05 am

அண்ணாவைப் பற்றிய ஒரு சில நினைவுகளை இந்தக் கட்டுரையில் தரலாம் என்றெண்ணி, எந்தெந்த நிகழ்ச்சிகளை சொல்லலாம் என்று தீர்மானிக் முடியாமல் திக்குமுக்காடிவிட்டேன் எனென்றால் அண்ணா அவர்கள் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளால் மட்டும் மற்றவர்களை மலைக்க வைக்கவில்லை. அவரது அசைவுகள் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லும்.

மொத்தத்தில் அண்ணா என்ற ஒரு வார்த்தைக்குள் இநத அகிலமே அடக்கம். அந்த ஒரு வார்த்தைக்குள் எத்தனை எத்தனைக் கவிதைகள் . . .! அப்பப்பா . . . சொல்லி மாளாத அளவிற்கு அவர் ஒரு சுரங்கப் பெட்டகம்! அண்ணா அவர்கள பிறந்ததால் இருபதாம் நூற்றாண்டுக்குப் பெருமை; தமிழ்மொழிக்குப் பெருமை; தமிழ் சமுதாயத்திற்குப் பெருமை. ஏன் . . . தமிழ்நாடு என்று சொல்லுக்கேகூட பெருமை!

அவர் ஒரு உயிராக பிறக்கவில்லை. உலகமாகவே விறைந்தார். அவர் ஒரு குழந்தையாகப் பிறக்கவில்லை. தமிழ்நாட்டில் குடிகொண்டிருந்த மூடநம்பிக்கைகளை குழிதோண்டிப் புதைக்கும் விடவெள்ளியாகப் பிறந்தார்.

அண்ணாவின் பெருமைகளில் தலையாயது, அவர் என்னைப் பொன்ற தன்னிலும் மூத்தவர்களைக் கூட அண்ணா என்று விளிக்க வைத்தாலே அதுதான் என்று உறுதியாகக் கூறுவேன். அள்ளாதுரை! அண்ணாதுரை. . .! என்று வாய் மணக்க அழைத்து வந்த தந்தை பெரியார் அவர்கள் கூட அண்ணா அவர்ககளின் இரங்கல் செய்தியில் - அண்ணா நாலரைக் கோடி தமிழ் மக்களுக்கும் பேரிழப்பைத் தந்துவிட்டு போய்விட்டார் என்று சொன்னாரே - அதைவிட அண்ணா அவர்களின் பெருமையை வேறு எப்படி சொல்லிட இயலும்? வரலாற்றை சிலர் படிக்கிறார்கள். சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள். அண்ணாவோ வரலாறாகவே வாழ்ந்தவர்க என்பது மிகையல்ல! 1933-ல் கோவை மாவட்டம் (இப்போதைய பெரியார் மாவட்டம்) காங்கேயத்தில் முதலாவது செங்குந்தார் இளைஞர் மாநாடு நடைபெற்றது. தந்தை பெரியார் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்து அண்ணா அந்த மாநாட்டில் சிறப்புரையாற்றினார். ஏறத்தாழ 2 மணி நேரம் பேசினார். அவரது பேச்சில் மூடநம்பிக்கையைப் பற்றிய சாடல்களும் ஜாதிக் தொடுமைகளைப் பற்றிய கண்டிப்புகளும் அதிகமாக காணப்பட்டது.
மேடையில் அமர்ந்திருந்த தந்தை பெரியார் அண்ணாவின் பேச்சை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாவுக்கு தந்தை பெரியாரோடு பழக்கம் இல்லாத நேரம். எனவே அண்ணா தனது பேச்சை முடித்ததும் மேடையைவிட்டு இறங்கி வெளியே போய்விட்டார். பெரியார் கூடடம் முடிந்ததும் அண்ணாவை ழைத்து வரச் சொல்லி, இந்த இளம் வயதில் இவ்வளவு அருமையாகப் பேசுகிறாயே; உனக்குக் கண்டிப்பாக ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது! என்று பாராட்டிவிட்டு,

நீங்க என்ன படிச்சிருக்கீங்க? என்று கேட்டார்.

எம்.ஏ. எழுதியிருக்கிறேன் என்றார் அண்ணா. பாஸ் பண்ணினதும் என்ன செய்யப் போகிறீங்க? என்றார் தந்தை பெரியார். ஏன் நீங்களும் என்னோடு சேர்ந்து அரசியல் பணி செய்யக்கூடாது என்று கேட்ட பெரியார் மேற்கொண்டு அரசியல் பணிகள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது பற்றியும் சில அறிவுரைகளை ஆலோசனைகளாக நல்கினார்.

அண்ணா, தந்தை பெரியாரின் பேச்சை மீற இயலவில்லை.

பெரியாரின் விருப்பப்படியே, அண்ணா நீதிக்கட்சியில் சேர்ந்து பணியாள்ள முடிவு செய்தார். அப்போதே - இரு வாரத்திற்கொரு முறை வந்து கொண்டிருந்த விடுதலை ஏட்டில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று தனது அண்ணங்களுக்கு எழுத்து வடிவம் தரச் தொடங்கினார்.

படித்து முடித்து பட்டம் பெற்றதும் எங்கோ ஒரு வேலைக்குச் சென்று, ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்க வேண்டிய அண்ணாவை-அகிலம் புகழும் தலைவராக மாற்றி, பேச்சாலும் எழுத்தாலும் கோடானு கோடி மக்களைக்
கவர்ந்தவராக ஆக்கி, மாட மாளிகைகளிலும் கூட கோபுரங்களிலும் மட்டுமே நிரந்தரக் குத்தகை எடுத்துக் கொண்டு தங்கியிருந்த அரசியலை, மரத்தடிக்கும், மண்குடிசைக்கும் கொண்டு வந்த பெருமைக்குரியவராக்கி - சாமன்யர்களும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திட முடியும் என்ற நிலையை ஒருவாக்கிக் காட்டிட வழி வகுத்துக் கொடுத்தது அண்ணாவின் இந்த செங்குந்தர் இளைஞர் மாநாட்டுப் பேச்சுதான்!

த் 1936-ம் ஆண்டு, சென்னை மாநகராட்சித் தேர்தலில் தங்கசாலை அருகேயுள்ள பெத்துநாயக்கன் பேட்டை வட்டத்தில் நீதிக்கட்சி சார்பில் அண்ணா பேட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாலசுப்பிரமணியம் என்பர் போட்டியிட்டார். அவரும் அண்ணாவைப் போலவே எம்.ஏ. படித்தவர்.

அப்போது அண்ணாவை எதிர்த்து, அப்போதைய காங்கிரஸ் முன்னணித் தலைவர்களான எஸ்.சர்தியமூர்த்தி, பி.சி.கோபாலரத்தினம் மற்றம், டி.செங்கல்வராயன், என்.வி.நடராஜன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்தார்க்.ள

ஆனால் அண்ணா தன்னந்தனியாக - ஒரு மெக்காப்போனை கையில் எடுத்துக்கொண்டு தெருத்தெருவாகச் சென்று ஒவ்வொரு தெரு முனையிலும் நின்று பிரச்சாரம் செய்தார்.

என்னையும் நான் சார்ந்திருக்கிய கட்சியையும் தாறுமாறாக விமர்சிக்கம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் என்னை ஒரே மேடையில் சந்தித்து என்னோடு விவாதிக்கத் தயாரா? என்று அறைகூவல் விடுத்தார்.

ஆனால் வேட்பாளர் பாலசுப்பிரமணியம் உட்பட காங்கிரஸ் தலைவர்க யாருமே அண்ணாவின் அறைகூவலை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.

இருந்தும் தேர்தலில் அண்ணா தோற்றுவிட்டார். ஆனால் அண்ணாவைத் தேடிய அவரது நண்பர்களுக்கு அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஒரு வேளை தேர்தல் முடிவு கண்டு தயரம் தாங்காமல் எங்காவது ஓடிவிட்டாரா? என்றுகூட நண்பர்கள் நினைத்தார்க்ள்.

ஆனால் அண்ணா அவர்கள் பட்டினத்தார் படம் பார்த்துவிட்டு சிரித்த முகத்தோடு திரையயரங்கைவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்.

நண்பர்கள் அவரிடம் ஓடி, என்ன அண்ணா! தேர்தலில் நீங்கள் தேற்றுவிட்டீர்கள்; இருந்தும் படம் பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக வருகிறீர்களே! என்று கேட்டார்கள். அதற்கு அண்ணா அவர்கள், தேர்தலில் போட்டியிடுவது நமது உரிமை; பிரச்சாரம் செய்வதும் நமது உரிமை; மக்களை அணுகி எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதுகூட நமது உரிமைதான். ஆனால் ஏன் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்ற கேட்கக்கூடிய உரிமை நமக்கேது? வெற்றியோ தோல்வியோ நம் கையில் இல்லை; மக்கள் கையில்தான் இருக்கிறது என்கிறபோது அதைக் கண்டு நாம் ஏன் வருத்தப்படவேண்டும்; துயரம் கொள்ள வேண்டும்? என்று சொன்னார்கள்.
தேல்வியைக் கண்டு துவளாது உள்ளம் - எதையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிற சுபாவம் அண்ணாவுக்கு அப்போதே இருந்திருக்கிறது.

தஞ்கை மாவட்டம் திருவாரூரில் திராவிடர் கழக மாநாடு கிபும் சீரும் சிறப்புமான முறையில் - காலை முதல் மாலை வரை நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்கள், திராவிடநாடு பிரச்சியை வலியுறுத்தி தக்க சான்றுகளோடு, வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்து உதாரணங்களைக் காட்டி தந்தை பெரியார் அவர்களே வியக்கும் வண்ணம், சுமார் மூன்று மணி நேரம் உரை நிகழ்த்தினார்கள். அந்தத் திறமையான பேச்சுக்கு அன்றைய மாலையே - அதுவரையிலும் சரி . . அல்லது அதற்குப் பிறதும் சரி . . . யாருக்குமே கிடைத்திராத ஒரு மாபெரும் பரிசு கிடைத்தது. அன்று மாலை மாயவரம் ஆற்றங்கரையில் திராவிடர் கழகத்தினர் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்க்.ள வழங்கறிஞர் சிவசுப்பிரமணியம்என்பவரது தலைமையில் நடைபெற இருந்த அந்தக் கூட்டத்திற்கு, ஏறாளமான வழக்கறிஞர்களும், பட்டதாரிகளும் வருகை தந்திருந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கதான் சிறப்புரை நல்குவதாக இருந்தது. அண்ணா அவர்கள் கூட அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தார்.

ஆனால், கூட்டம் ஆரம்பிக்கத் தொடங்கியதும் தந்தை பெரியார் அவர்கள் அண்ணாவை அழைத்து இந்தக் கூட்டத்தில் நான் பேசப்போவதில்லை. காரணம் இங்கே ஏராளமான வழக்கறிஞர்களும், பட்டதாரிகளும் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புரிகிற விதத்திலும் அவர்களை வசப்படுத்துகிற விதத்திலும் உன்னால்தான் ஆணித்தரமான கருத்துக்களை எடுத்து வைக்க முடியும்; எனவே நீதான் இன்று சிறப்புரை ஆற்றவேண்டும் என்று கூறி மேடையைவிட்டு கீழே இறங்கி மக்களோடு அமர்ந்துவிட்டார்கள்.

இந்த பெருமை வேறு யாருக்குக் கிடைத்திருக்கிறது? தந்தை பெரியார் அவர்கள், தான் கீசூ அமர்ந்துகொண்டு இன்னொருவரைப் பேசச் சொல்லிக்கேட்டு மகிழ்ந்தார்க்ள என்று சொன்னால் - அது அகிலமே பாராட்டிய பேரறிஞர் அண்ணா ஒருவர்தான்!

அந்தக் கூட்டத்தில் - காலையில் நடைபெற்ற மாநாட்டுப் பேச்சைக் காட்டிலும் இன்னும் பல சீரிய கருத்துக்களை எடுத்துக்கூறி 3 மஒ நேரம் பேசி தந்தை பெரியார் அவர்கள் உட்பட எல்லோரது கவனத்தையும் தன்பால் ஈர்த்துக்கொண்டவர் அண்ணா.

அண்ணாவின் பேச்சை வென்றிடக்கூடிய பேச்சு அண்ணாவின் இன்னொரு பேச்சாகத்தான் இருந்திட இயலும் என்பதை அன்றைய நிகழ்ச்சி மெய்ப்பித்துக் காட்டியது.

த் 1945-ம் ஆண்டு! அண்ணா ஈரோட்டில் விடுதலையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொட்டிருந்த நேரம்.

விஞ்ஞான மேதை கோவை ஜி.டி. நாயுடுவும் சாமி கைவல்யம் சாமியாரும் அண்ணாவைப் பார்க்க ஈரோடு வந்தார்கள்.

சாமி கைவல்யம் சாமியார் அண்ணாவைத் தனியாக அழைத்துச் சென்று நாயுடு உங்க்ளை அவரது செயலாளராக வைத்துக் கொள்ள விரும்புகிறார்; உங்களுக்கு தனி பங்களா, கார் கோன்ற வசதிகளையும் செய்து தருகிறான் என்ற சொல்கிறார். நீங்கள் மறுக்காமல் ஒப்புக் கொள்ளவேண்டும் என்று சொன்னார்.

அண்ணா, கைவர்யம் சொன்னதைக் கேட்டு அப்படியா என்று வாய் பிளக்கவில்லை.

அரசியலில் தனக்கென்று ஒரு சாதனையை பிற்காலத்தில் ஊற்படுத்திக் காட்டுவதற்காக பிறந்த அண்ணா, அதை எப்படி ஒப்புக் கொள்வார்?

நான் தந்தை பெரியாருடன் இருந்து அரசியல் பணியாற்றுவதையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்; எனவே என்னை நீங்கள் வற்புறுத்திப் பயனில்லை என்ற தெளிந்த நீரோடை பேல - சிறிதும் சபலமின்றி பதில் தந்தார்.

வசதியைத் தேடியே ரேசியலுக்கு வரும் பல்லோர் மத்தியில் - வசதியை உதறித்தள்ளிவிட்டு உத்தமாராக அரசியல் வாழ்க்கையைத் தெடர்ந்தவர் அண்ணா!

த் காஞ்சியில் ரேறிஞர் அண்ணா 07.03.1942-ல் திராவிட நாடு இதழைத் தொடங்கி காங்சியிலுள்ள குமரன் அச்சகத்தில் அச்சடித்து வெளியிட்டு வந்தார்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக