புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_m10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10 
62 Posts - 57%
heezulia
நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_m10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_m10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_m10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_m10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10 
104 Posts - 59%
heezulia
நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_m10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_m10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_m10நம்மைவிடச் சிறந்தவர்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மைவிடச் சிறந்தவர்!


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 6:53 pm

[color=brown]பொன்னகரத்தை ஒட்டியுள்ள காட்டில் இருந்த மிருகங்கள் எல்லாம் மிகவும் திமிர் பிடித்தவை. பறவை இனத்தை விட தாங்களே மிகவும் வலிமையானவர்கள், சிறந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டிருந்தன. அடிக்கடி பறவை இனத்தை மிகவும் கேவலப்படுத்தின. இதனால் பறவை இனம் ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என காத்திருந்தன.
அந்தக் காட்டில் சேவல் ஒன்று வசித்து வந்தது. அது காலையில் ஐந்து மணிக்கெல்லாம் கூவ ஆரம்பித்துவிடும். இதனால் அங்கு வசித்து வந்த ஒரு வாலில்லா குரங்கிற்குக் காலைத் தூக்கம் கெட்டுப் போனது. இதனால் அந்தச் சேவல் மீது கோபம் ஏற்பட்டது. எப்படியாவது இந்தச் சேவலை அடித்துக் கொல்ல வேண்டும். அப்போதுதான் நிம்மதியாகத் தூங்க முடியும் என்ற வெறி குரங்கிற்கு ஏற்பட்டது.


ஒருநாள் சேவலின் மீது பாய்ந்தது. சேவல் வேகமாக மலையடிவாரத்தை நோக்கி ஓடித் தப்பியது. அடுத்த நாள் மலையடிவாரத்தில் இருந்த ஒரு பெரிய பாறை மீது நின்று கொண்டு சேவல் கூவியது. பாறைகளில் எதிரொலித்துக் காடு முழுவதும் அந்த ஒலி கேட்டது. இதனால் பல மிருகங்கள் எழுந்து கொண்டன. குரங்கிற்கு மிகுந்த கோபம் வந்தது. சேவலின் குரல்வளையை நெறித்துப் போட வேகமாக மலையடிவாரத்திற்குச் சென்றது.
சேவல் ஒரு மரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தது. அதன் மீது குரங்கு பாய்ந்தது. சேவல் உடனே அங்கிருந்து பறந்தது. குரங்கு கால் தவறி பாறையில் விழுந்தது. இதனால் அதற்குப் பலத்த காயம் ஏற்பட்டது. மிகுந்தவலி ஏற்பட, பொறுக்க முடியாமல் கத்தியது.


சேவல் கீழே பறந்து வந்து ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு ஒட்டகச்சிவிங்கி வந்தது. மரத்தின் இலைகளை மென்று தின்றது. ஒட்டகச்சிவிங்கியின் மீது அமர்ந்து கூவினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்த சேவல், உடனே பறந்து, அதன் முதுகில் அமர்ந்து கூவ ஆரம்பித்தது.


ஒட்டகச்சிவிங்கியின் முதுகில் ஒரு காயம் ஆறி காய்ந்திருந்தது. சேவல் அதை ஏதோ பூச்சி என்று நினைத்து கொத்த ஆரம்பித்தது. இதனால் ஒட்டகச்சிவிங்கிக்கு மிகுந்த வலி ஏற்பட்டது. உடனே அது 'என் முதுகைக் குத்தாதே' என்று தன் மொழியில் கூறியது. ஆனால், அதைச் சேவலால் புரிந்து கொள்ள முடியவில்லை.


சேவல் தன் காலால் காயத்தைப் பிராண்ட ஆரம்பித்தது. வலி அதிகம் ஏற்பட தன் தலையை வளைத்து சேவலைக் கீழே தள்ளப் பார்த்தது ஒட்டகச்சிவிங்கி. அந்தச் சமயத்தில் சேவல் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து எட்டாதபடி அதன் முதுகில் உட்கார்ந்து கொண்டது.


தன்னால் சேவலைத் துரத்த முடியாது என்று உணர்ந்த ஒட்டகச்சிவிங்கி, தான் வேகமாக ஓடினால் சேவல் கீழே குதித்து விடுமென்று நினைத்து வேகமாக ஓடியது. ஆனால் சேவல் நன்றாக அதன் முதுகைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டது. ஒட்டகச்சிவிங்கியால் என்னதான் வேகமாக ஓடினாலும் சேவலைக் கீழே விழச் செய்ய முடியவில்லை. அப்போது நம் குரங்கு வலி தாங்க முடியாமல் மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒட்டகச்சிவிங்கி, ''குரங்குத் தம்பி, எனக்கு ஓர் உதவி செய்வாயா? தயவு செய்து என் முதுகில் இருக்கும் இந்தச் சேவலைப் பிடித்துக் கீழே தள்ளி விடு,'' என்றது.


சேவலின் மீது மிகவும் கோபமாக இருந்த குரங்கு எப்படியும் அதன் மீது பாய்ந்து அதைக் குதறி எடுக்கலாம் என்று ஒட்டகச்சிவிங்கியின் முதுகில் குதித்தது. சேவல் உடனே மேல் நோக்கிப் பறந்தது. ஒட்டகச்சிவிங்கியின் முதுகுக் காயத்தின் மீது குரங்கு வந்து பொத்தென்று விழுந்தது. ஒட்டகச்சிவிங்கியால் வலி பொறுக்க முடியவில்லை. குரங்கைக் கீழே தள்ளியது. கீழே விழுந்த குரங்கை தன் காலால் எட்டி உதைத்தது. குரங்கு தூரத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் போய் விழுந்தது. வலி தாங்க முடியாமல் நெடு நேரம் அழுது கொண்டிருந்தது குரங்கு.
சேவல் திரும்பவும் ஒட்டகச் சிவிங்கியின் முதுகில் வந்து உட்கார்ந்து கொண்டது. ஒட்டகச்சிவிங்கிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது.


அப்போது எதிரே ஒரு யானை வந்தது. ''அண்ணா, அண்ணா,'' என்று அன்போடு கூப்பிட்டது ஒட்டகச்சிவிங்கி.
''என்ன சிவிங்கியாரே?'' என்று யானை கேட்டது.
''எனக்கு இப்போது உங்கள் உதவி மிகவும் தேவை. என் முதுகில் இருக்கும் சேவலைக் கீழே தள்ளி விடுங்கள்,'' என்று கூறியது.
யானைத் தன் துதிக்கையால் ஒட்டகச்சிவிங்கியின் முதுகைத் தடவியது. உடனே சேவல் அங்கிருந்து பறந்து, யானையின் சிறிய கண்ணைத் தன் கால் விரலால் பிராண்டி விட்டுச் சென்று விட்டது. இதனால் யானையின் கண்ணில் மிகுந்த வலி உண்டாகியது. கோபம் கொண்ட யானை ஒட்டகச்சிவிங்கியைத் தன் துதிக்கையால் அடித்து விட்டுச் சென்றது.


சிறிது தூரம் ஒட்டகச்சிவிங்கி நடந்து போனபோது, மரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த சேவல் மீண்டும் பறந்து வந்து அதன் முதுகில் உட்கார்ந்து கொண்டது. ஒட்டகச்சிவிங்கிக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. 'நாம் இவ்வளவு உயரம் இருக்கிறோம். இந்தச் சின்ன சேவலை நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே!'' என்று வருந்தியது. அப்போது அங்கு நரியொன்று வந்தது. ஆகா நரிதான் சரியான ஆள். அதற்குச் சேவல் கறி என்றால் மிகவும் விருப்பம். அதனிடம் இதைப் பிடித்துச் சாப்பிடச் சொல்லலாம் என்று நினைத்தது. ''நரியாரே! கொஞ்சம் இங்க வாங்க,'' என்று அன்போடு கூப்பிட்டது.
நரியும் அதன் அருகில் வந்தது. ''தம்பி! கோழிக்கறி என்றால் உங்களுக்குப் பிரியம் இல்லையா? என் முதுகில் ஒரு சேவல் இருக்கு. உங்களுக்காகவே அதைக் கொண்டு வந்தேன். உடனே அதைப் பிடித்துச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்,'' என்றது.


''சிவிங்கியாரே! நான் குள்ளமானவன். நீங்களோ வானத்தைத் தொடுவது போல் இருக்கிறீர்கள். என் கண்ணுக்கு உம் முதுகில் சேவல் இருக்கும் இடம் கூடத் தெரியவில்லை. அதனால் நீங்கள் அப்படியே உட்காருங்கள். நான் அதைப் பிடித்துக் கொள்கிறேன்,'' என்றது நரி.
உடனே சிவிங்கியார் மிகவும் கஷ்டப்பட்டு உட்கார்ந்தது. நரி அதன் மேலே ஏறி வந்தது. இதைப் பார்த்து விட்ட சேவல் பறந்து மேலே இருந்த மரத்தின் கிளையில் போய் உட்கார்ந்து கொண்டது.


அப்போது ஒட்டகச்சிவிங்கி எழுந்து நின்றது. அதன் மீது நரி உட்கார்ந்து கொண்டிருந்தது. மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்த சேவல் அதற்கு அருகில் இருப்பதைப் போல் தோன்றியது. இதனால் அங்கிருந்து சேவலை நோக்கிப் பாய்ந்தது நரி. சேவல் அதற்கும் மேலிருந்த கிளைக்குப் பறந்து சென்றது. அதனால் மரக்கிளையில் பலமாக அடிபட்ட நரி வலியால் துடித்தபடி பரிதாபமாகக் கீழே விழுந்தது.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 6:54 pm

நரிக்கு மார்பில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. வலி தாள முடியாமல் அங்கிருந்து மெதுவாக நடந்து போனது. அப்படியும் சேவலைப் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை அடங்கவில்லை. அதனால் திரும்பவும் வந்து மரத்தின் அடியில் நின்று கொண்டது நரி. எப்படியும் சேவல் கீழே இறங்கி விடும், அதைச் சாப்பிடலாம் என்று காத்திருந்தது.
மரத்தில் அடிபட்ட சோர்வினால் நரி மரத்தின் கீழே படுத்துக் கொண்டது. சிறிது நேரத்தில் கண்ணயர்ந்து விட்டது. உடனே சேவல் அருகில் இருந்த மற்றொரு மரத்தின் மீது பறந்து போய் உட்கார்ந்து கொண்டது. பிறகு அங்கிருந்து மெதுவாகக் கீழே இறங்கி வந்து ஓடிப் போனது.


நரி கண் விழித்துப் பார்த்தபோது மரத்தில் சேவலைக் காணவில்லை. 'சே! சேவலைப் பிடிக்காமல் விட்டு விட்டோமே' என்று தன்னையே நொந்து கொண்டு தன் இருப்பிடத்திற்குச் சென்றது.
சில நாட்களுக்குப் பிறகு சேவல் மீண்டும் ஒட்டகச்சிவிங்கி வருவதைப் பார்த்தவுடன் அதன் மீது பறந்து போய் உட்கார்ந்து கொண்டது.


'சே! என்னடா இந்தச் சேவல் மீண்டும் நம்மைப் பிடித்துக் கொண்டதே' என்று நினைத்த ஒட்டகச்சிவிங்கி, 'நாம் செத்தாலும் பரவாயில்லை. இதை எப்படியாவது கொன்றுவிட வேண்டும்' என்று உறுதி பூண்டது.


தூரத்தில் ஒரு சிறுத்தை நின்று கொண்டிருந்ததைப் பார்த்தது. சிறுத்தையால் மரம் ஏற முடியும். சேவல் மரத்தின் மீது ஏறினாலும் அதைப் பிடித்து விடும் என்று எண்ணியது. சிறுத்தையிடம் உதவி கேட்கச் சென்றது. ஆனால் இதில் ஒரு ஆபத்தும் உள்ளது. சிறுத்தை தன்னையே கடித்துப் போட்டாலும் போட்டு விடும். இருந்தாலும் இந்தச் சேவலிடமிருந்து தப்பினால் போதும் என எண்ணியது.
சிறுத்தையின் அருகில் வந்த ஒட்டகச்சிவிங்கி, ''சிறுத்தையாரே! என் முதுகில் ஒரு சேவல் இருக்கிறது. அதைப் பிடித்துக் கொள்ளும்,'' என்றது.
சிறுத்தை மரத்தின் மீது ஏறி அங்கிருந்து பாய்ந்தால் சேவலைப் பிடித்து விடலாம் என்று முடிவெடுத்து அருகில் இருந்த மரத்தின் மீது ஏறியது. இதைப் பார்த்துவிட்ட சேவல், கீழே குதித்து ஓட ஆரம்பித்துவிட்டது. இதைப் பார்த்ததும் சிறுத்தையும் கீழே குதித்து அதைப் பின் தொடர்ந்து ஓடியது.
சேவல் ஒரு முள் புதருக்குள் சென்று ஒளிந்து கொண்டது.

சிறுத்தைக்குப் பயங்கரமான கோபம் வந்தது. முட்புதருக்குள் வேகமாக நுழைந்தது. சேவல் மறுபக்கமாக ஓடிவிட்டது. அப்படியும் சேவலைப் பிடிக்க முடியவில்லை. இதனால் உடலெங்கும் முட்கள் கீற வலியால் துடித்துப் போய் வெளியே வந்தது சிறுத்தை.


'இதற்கெல்லாம் காரணம்... அந்த ஒட்டகச் சிவிங்கிதானே. அதை விடக்கூடாது' என்று சிவிங்கியை நோக்கி ஓடியது சிறுத்தை. அதைப் பார்த்ததும் பயந்து போய் சிவிங்கியும் ஓட ஆரம்பித்தது. நல்ல வேளையாக ஒரு யானைக் கூட்டம் எதிரே வர, அதன் நடுவில் போய் பாதுகாப்பாக நின்று கொண்டது சிவிங்கி.


'இனி சிவிங்கியாரை ஒன்றும் செய்ய முடியாது' என்று நினைத்த சிறுத்தை ஏமாந்து திரும்பிப் போனது. சேவல் புதரில் இருந்து வெளியே வந்து மகிழ்ச்சியாகக் கூவியது.
மறுநாள் —
காட்டு மிருகங்கள் எல்லாம் கூடி பேசிக் கொண்டன. பறவை இனத்தை என்னவோ என்று நினைத்தோமே. இந்த சேவல் ஒன்றின் 'லொள்ளே' தாங்க முடியல... மற்ற பறவைகள் என்ன பாடுபடுத்துமோ என்று.
குட்டீஸ்... யாரையும் சுலபமா நினைக்கக் கூடாது. நம்மை விட மற்றவர்களை உயர்வானவர்களாகவே நினைக்க வேண்டும்






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக