புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
43 Posts - 44%
ayyasamy ram
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
42 Posts - 43%
prajai
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
3 Posts - 3%
Jenila
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
1 Post - 1%
jairam
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
86 Posts - 54%
ayyasamy ram
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
7 Posts - 4%
prajai
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
7 Posts - 4%
Jenila
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
4 Posts - 3%
Baarushree
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
3 Posts - 2%
Rutu
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
2 Posts - 1%
manikavi
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
1 Post - 1%
jairam
நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_m10நங்கவரத்தில் ஓர் ஞானி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கவரத்தில் ஓர் ஞானி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 10:55 am

மோனை நயம் கருதி நாம் "நங்கவரத்தில் ஓர் ஞானி' என்று தலைப்பிட்டிருக்கிறோமே தவிர மராட்டியர்கள் அந்த மகானை "ஞானியர்' வரிசையில் சர்வ சாதாரணமாகச் சேர்த்துவிட மாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை மட்டுமன்று, இந்த அகிலத்திலுள்ள ஸ்ரீவிட்டல பக்தர்கள் அனைவர்க்கும் அவ்வருளாளர், "ஞானிகளின் அரசர்! குருநாதர்களின் தலைவர்!' ஆம்! "சந்த் ஞானேஸ்வரர்' என்ற மகானை அப்படித்தான் கொண்டாடி மகிழ்கின்றனர், ஸ்ரீ விட்டல பக்தர்கள்.

ஞானேஸ்வரரை பற்றி காணும் முன், அவரால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீ விட்டலனைக் குறித்து சற்று அறிவோமாகுக!


விட்டல் எனும் பாண்டுரங்கன் :

ஒரு காலத்தில் "திண்டிர வனம்' என்றொரு அடர்ந்த காடு, இன்றைய மகாராஷ்டிரத்தில் இருந்தது. அங்கே குக்குட முனிவரை குருவாக ஏற்று, வனத்திலேயே ஆஸ்ரமம் அமைத்து, தன் முதிய பெற்றோர்களுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார், "புண்டலீகன்' என்னும் பெரும் பக்தர்.

அவருக்குள் "வட பாரத தீர்த்த யாத்திரை' செய்யும் ஆவல் இருப்பினும், "அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்' என்ற தீர்மானமான கருத்தினால் யாத்திரையைத் தவிர்த்து, "பெற்றோர்களே கதி' என்றிருந்தார்.

"மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ! அதிதி தேவோ பவ! ஆசார்ய தேவோ பவ!' என்கிறது வேதம். "அன்னையே தெய்வம்! தந்தையே இறைவன்! அதிதியே (அறியா விருந்தினர்) பகவான்! ஆசாரியனே கடவுள்' என்பது இதன் பொருள்!

என்ன ஆச்சரியம்! புண்டலீகரின் குருவான குக்குட முனிவரும், அவரது ஆஸ்ரமத்துக்கு அருகிலிருந்து ஞானோபதேசம் நல்கிக் கொண்டிருந்தார். தன் அம்மையப்பரையே தெய்வங்களாகக் கருதி சேவை செய்து கொண்டிருந்தார் புண்டலீகன். ஆக வேதம் சொன்ன நான்கு தெய்வங்களில் மூவர் அவரை சுற்றியிருக்க, அவருடைய "பித்ரு பக்தியால்' கவரப்பட்டு "அதிதி'யாக இறைவனே அங்கு வந்து புண்டலீகனுக்கு தரிசனமளித்தார்.

தலையில் பாண லிங்கமும், விசாலமான நெற்றியும், தாமரை போன்ற கண்களும், அழகிய காதுகளில் மீன் வடிவக் குண்டலங்களும், மார்பில் வைஜயந்தி மாலையும், தனது இரு கரங்களும் இடுப்பில் இருக்க, சம்சாரக் கடலின் ஓடமாக விளங்கும் தனது இரண்டு திருவடிகளையும் செங்கல்லின் மீது வைத்தபடி புண்டலீகனுக்கு காட்சி அளித்தார் இறைவன். இவரே ஸ்ரீவிட்டலன் என்னும் பாண்டுரங்கன் ஆவார்.


ஸ்ரீ விட்டலன் யார்?

"பாண்டு' என்ற சொல்லுக்கு "வெண்மை' என்று பொருள். "ரங்' என்றால் நிறத்தைக் குறிக்கும். கண்ணனின் நிறமோ கருநீலம்! ஸ்ரீ விட்டலனோ, "பாண்டுரங்கன்' என்றழைக்கப்படுகிறார். சிவபெருமானுக்குத்தான் "பால் வண்ண நாதர்' என்ற திருப்பெயருண்டு. போதாக் குறைக்கு, பாண்டுரங்கனுடைய சிரசில் "பாண லிங்கம்' இருக்கின்றது.

"உண்மையில் பரமாத்மாவுக்கு வடிவம் இல்லை; பக்தர்களின் பொருட்டே அவர் சிவ-விஷ்ணு ரூபங்களைத் தாங்கி நிற்கின்றார்' என்கின்றனர் அருளாளர்கள். அவர்கள் கூற்றை மெய்ப்பிக்கும் பொருட்டு, சிவ-விஷ்ணு ஐக்கிய வடிவமான பரமாத்மாவே, எங்கும் இல்லாத ஓர் இன்ப வடிவத்துடன் புண்டலீகனுக்கு தரிசனம் அளித்தது.

இந்தத் தலமே தற்போது பண்டரிபுரம் எனப்படுகிறது. இவ்விடம், மஹாராட்டிரத்தில் உள்ள "சோளாபூர்' என்னும் பெருநகரிலிருந்து, சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ளது.



நங்கவரத்தில் ஓர் ஞானி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 10:56 am


சந்த் ஸ்ரீ ஞானேஸ்வரர்


இப்போது நம் கதாநாயனாகிய ஸ்ரீ ஞானேஸ்வரரிடம் வருவோம். "ஆலந்தி' என்னும் சிவத்தலம் (புனே மாநகரின் அருகில் உள்ளது), புராணப் பிரசித்தி பெற்றது. அங்கே "விட்டல் பந்த்' என்ற பக்தர், தனது மனைவியான ருக்மிணியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

உலகியல் வாழ்வில் ஈடுபட முடியாத அளவு பக்குவம் பெற்றுவிட்ட விட்டல் பந்த், காசிக்கு சென்று, "ஸ்ரீ பாத சுவாமிகள்' என்பவரிடம் துறவறம் ஏற்றார். இந்த விஷயம் ருக்மிணிக்கு தெரிய வந்ததும், "எல்லாம் விட்டலன் திருவுள்ளம்' என்று மனதை சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சித்தபடி வாழ்ந்து வந்தாள். அவளது துன்பங்களை மறக்கடிக்க, அவளுக்குக் குழந்தைகளும் இல்லை.

ஒரு முறை தீர்த்த யாத்திரையாக ஆலந்தி வந்த "ஸ்ரீ பாத சுவாமிகளை' நமஸ்கரித்தாள் ருக்மிணி. "உனக்கு உத்தமமான குழந்தைகள் பிறக்கும்' என்று ஆசிர்வதித்தார் சுவாமிகள். இதனால் பிரமிப்பும், திகைப்பும், குழப்பமும் ஏற்பட.. கண்ணீர் மல்கினாள் ருக்மிணி.

தனது சீடர்களில் ஒருவரான "ஸ்ரீ சைதன்யா' என்கிற விட்டல் பந்தின் மனைவியே இந்த ருக்மிணி என உணர்ந்தார் ஸ்ரீ பாத சுவாமிகள். உடனே விட்டல் பந்த்தை அழைத்து, "துறவறத்தைத் துறந்து இல்லறம் செல்' என்று ஆணையிட்டார் ஸ்ரீபாதர். மகான்களின் இயல்புகளை உலகியல் கண்ணோட்டத்தால் உணர்வது கடினமன்றோ!


ஞானச் சூரியன்களின் உதயம்:


குருவின் உத்தரவை சிரமேற்கொண்டு துவராடையைத் துறந்து, ஆலந்திக்கு மீண்டார் விட்டல பந்த். இவர்களுக்கு சிவபெருமானின் அம்சமாக "நிவ்ருத்தி நாத்' என்ற மூத்த மகனும், திருமாலின் அம்சமாக "ஞானேஸ்வரர்' என்ற பிள்ளையும், நான்முகனின் அம்சமாக "சோபான தேவர்' எனும் புத்திரனும், பராசக்தியின் அம்சமாக "முக்தாபாயி' என்ற பெண்ணும்-இரண்டிரண்டு கால இடைவெளியில் பிறந்தனர்.

இந்த நான்கு குழந்தைகளும் மிகச் சிறு வயதிலேயே தங்களது தேகப் பொலிவாலும், வசீகரமான-அர்த்தமுள்ள பேச்சுகளாலும், நடத்தையாலும் அனைவரையும் கவர்ந்தனர். ஆனால் பொறாமை என்னும் தீய குணம், எப்பேர்ப்பட்டவரையும் பொசுக்கிவிடும் அல்லவா? "நீங்கள் சந்யாசி பெற்ற குழந்தைகள்தானே?' என்று ஊரார் கேலி செய்தனர். சகோதரர்கள் மூவரும், சக்தி முக்தாபாயியும் இந்த ஏளனங்களை எள்ளளவும் பொருட்படுத்தவில்லை எனினும், அவர்களது பெற்றோர்கள், ஊராரின் ஏச்சு தாங்காமல் "திரிவேணி' சங்கமத்தில் உயிர்த் தியாகம் செய்தனர்.



நங்கவரத்தில் ஓர் ஞானி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 10:58 am

மலர்ந்தது ஆன்மீகப் புரட்சி!

"குரு மாதா! குரு பிதா' என்ற வாக்கியப்படி பெற்றோர்களை இழந்த இந்நால்வரும் "அனாதைகள்' என்று ஆகிவிடாதபடி குருநாதனின் திருவருளைக் கூட்டுவித்தான் ஸ்ரீவிட்டலன்.

மராட்டியத்தில் "நாத பரம்பரை' வழிபாடு என்பது இன்றளவும் உள்ளது. நமது தமிழகத்தில் "பதிணெண் சித்தர்கள்' போற்றப்படுவது போல் அங்கு "நவ நாதர்கள்' எனும் ஒன்பது அருளாளர்கள் பூஜிக்கப்படுகின்றனர்.

இவர்களில் ஒருவரான ஸ்ரீகஹினிநாத், தனது சீடனாக நிவ்ருத்தி நாதரை ஏற்றார்; யோக தீக்கை கொடுத்து, பக்தி நெறியையும் உபதேசித்தார்.

பின்னர் நிவ்ருத்தி நாதரே தனது சகோதரர்களான ஞானேஸ்வரருக்கும், சோபான தேவருக்கும், சகோதரி முக்தாவுக்கும் அருளுபதேசம் செய்தார். அங்கே மாபெரும் ஆன்மீகப் புரட்சிக்கான விதை ஊன்றப்பட்டது.

ஏறக்குறைய 12-ம் நூற்றாண்டில் நடைபெற்ற இந்தச் சம்பவம், மராட்டிய மாநிலத்தில் "பக்தி இயக்கம்' பரவலாகக் காரணம் ஆனது. "கலியுகத்தில் இறைவனை அடைய ஒரே உன்னதமான, எளிமையான வழி, இறைவனது திருநாமங்களைப் பாடிப் பரவுவதுதான்' என்பதை குருவருளால் உணர்ந்து கொண்டார் ஞானேஸ்வரர்.

"யோகம், யாகங்கள், விரதங்கள், ஹோமங்கள் போன்ற அனைத்து அறங்களையும்விட இறை நாம கீர்த்தனமே கலியுகத்தில் முக்தியைப் பெற சுலபமான வழி' என்ற அடிப்படை சித்தாந்தத்துடன் "வார்கரீ சம்பிரதாயம்' உருவாக்கப்பட்டது. "வாரி-கரீ' என்றால் "போய் வருதல்' என்பது பொருள். "பண்டரீசா மஹிமா தேதா ஆணிக உபாமா' என்கிறார் ஸ்ரீதுகாராம் சுவாமிகள். "பண்டரிபுரத்திற்கு இணையான தலம் பூவுலகில் இல்லை' என்பது இதன் பொருள். இந்த அடிப்படையில், பண்டரி யாத்திரைக்கு மட்டுமே வார்கரீ சம்பிரதாயத்தில் முக்கியத்துவம் என்பது புலனாகிறது. அப்படிச் செல்லும் யாத்ரீகர்கள் பாண்டுரங்கனையே தியானித்துக் கொண்டும், அவனது திருநாமங்களையே பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் செல்வர். இவர்களே "வார்கரீ' எனப்படுகின்றனர்.

ஜீவ சமாதி

எருமை மாட்டை வேதம் சொல்ல வைத்தது முதல் எத்தனையோ அற்புதங்களை ஞானேஸ்வரர் நிகழ்த்தியுள்ளார். ஆனால் இந்த அதிசயச் செயல்களையெல்லாம் விஞ்சி நிற்பது, மராட்டிய மாநிலம் முழுவதும் பக்தி வெள்ளத்தை அவர் பாயவிட்டதுதான். அந்தப் பக்தி, ஜீவநதியாக இன்றளவும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. வருடா வருடம் ஆலந்தியிலிருந்து ஞானேஸ்வரர் பாதுகைகளையும், "தேஹு' கிராமத்திலிருந்து துகாராமின் பாதுகைகளையும், இன்னும் எண்ணற்ற குருநாதர்களின் பாதக் குறடுகளையும் பல்லக்கில் ஏற்றியபடி, பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கால்நடையாகவே "ஆஷாட ஏகாதசி' தினத்தன்றும், "கார்த்திக ஏகாதசி' தினத்தன்றும் பண்டரி நாதனை, நாம சங்கீர்த்தனத்துடன் தரிசிக்க வரும் அற்புதக் கோலத்தை நேரில் கண்டவர்களே அறிவார்கள்.

பகவத் கீதைக்கு, தனது 15-வது வயதில் மராட்டிய மொழியில் "பாவார்த்த தீபிகா' என்ற உரையை எழுதினார் ஞானேஸ்வரர். "அம்ருதானுபவ' என்ற நூலையும், "ஹரி பாட்' உள்ளிட்ட ஏராளமான அபங்கங்களையும் இயற்றி வார்கரீ கலாசாரத்தை வலுப்படுத்திய இந்த மாபெரும் ஞானி, தனது 22வது வயதில் (சக ஆண்டு 1218, துர்முக வருடம் கார்த்திகை 13ம் தேதி), ஆலந்தியில் உள்ள சிவாலயத்தில் ஜீவசமாதி அடைந்தார். இன்றளவும் அந்தச் சமாதியில் இருந்தபடி லட்சக் கணக்கான பக்தர்களுக்கு, அவரவர் பக்குவ நிலைக்கேற்பத் திருவருள் செய்து கொண்டிருக்கிறார். மராட்டிய பக்தர்கள் இவரை பேரன்போடு "மாவூலி' (அம்மா) என்றழைத்து ஆனந்தப்படுகின்றனர்.



நங்கவரத்தில் ஓர் ஞானி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 10:59 am

நங்கவரத்தில் ஞானேஸ்வரர்

இத்தனைச் சிறப்பியல்புகள் உடைய ஞானேஸ்வரருக்கு, தென்னகத்தில் ஒரு ஆலயம் எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது விட்டல பக்தர்களுக்குப் பெரு மகிழ்வூட்டும் இனிய செய்தியாகும்.

திருச்சி-கரூர் ரோட்டில், பெருகமணியிலிருந்து நச்சலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது நங்கவரம். (திருச்சியிலிருந்து 21 கி.மீ. தொலைவு.) இங்கு "சந்த் ஞானேஸ்வரர் சதன்' என்ற பெயரில் ஆலயம் அமைக்க பத்தாயிரம் சதுர அடி கொண்ட நிலப்பரப்பு வாங்கப்பட்டுள்ளது. இங்கே ஞானேஸ்வரருக்கும், ஸ்ரீ விட்டலன்-ரக்குமாயிக்கும் சந்நிதிகள் அமைக்கப்படவுள்ளன.

நங்கவரம் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தின் பின்புறத்திலேயே "சந்த் ஸ்ரீ ஞானேஸ்வரர் சதன்' அமையவுள்ளது ஒரு தெய்வீகப் பொருத்தமாகும்.

ஆலயம் கட்டப்பட்டவுடன் தினசரி பூஜை, "ஹரி பாட்' பாடுதல், இசைக் கருவிகள் மற்றும் சங்கீதம் கற்பித்தல், சொற்பொழிவு, நாம சங்கீர்த்தனம், முதியோர்களுக்கும், மாற்றுத்திறனுடையோருக்கும் இலவச மருத்துவ முகாம்கள், அன்னதானம், ஏழை எளியோர்க்கு உதவுதல் போன்ற பல அறப்பணிகளும்-பக்தி நெறிப் பணிகளும் நடத்த விரிவாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இம்மாபெரும் பணிகளைச் செய்ய பெரும் நிதி தேவைப்படுகிறது. சூட்சும உடலில் இன்றும், என்றும் இருக்கப் போகின்ற பக்த சிரோண்மணியும், சித்த புருஷருமான ஞானேஸ்வரரின் திருவருளையும், ஸ்ரீவிட்டலன்-ரக்குமாயி தேவியின் கருணையும் பெற விரும்பும் அடியவர்கள் அனைவரும் இத்திருப்பணியில் இயன்ற அளவு பங்கேற்று, நிதி வழங்கி, இம்மை-மறுமைப் பயன்களை அடைக!.

தட்சிண தேசத்தில் விட்டல ஆலயங்கள் பல உள்ளன. ஆனால் நங்கவரத்தில் அமையப் போவதே ஸ்ரீஞானேஸ்வரருக்கான முதல் பிரத்யேக ஆலயம். வருங்காலத்தில் "தட்சிண ஆலந்தி' என்று புகழ் பெற வாய்ப்புள்ள இந்த அரும்பணியில் பங்கேற்பவர்களுக்கு, ஜீவ சமாதியில் நிரந்தரமாய் வசிக்கின்ற ஸ்ரீ ஞானேஸ்வரரின் அருளாசிகள் என்றென்றும் கிட்டும் என்பதில் ஐயமில்லை.



நங்கவரத்தில் ஓர் ஞானி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed May 19, 2010 12:04 pm

நீண்ட பதிவு மிக அற்புதமாக உள்ளது
தெரியாத விஷயத்தை தெரிந்துகொண்டேன்
நன்றி ! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக