புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_m10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10 
62 Posts - 57%
heezulia
ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_m10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_m10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_m10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_m10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10 
104 Posts - 59%
heezulia
ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_m10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_m10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_m10ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனநாயகம் காப்பாற்றப்படுமா?


   
   
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Jul 06, 2010 9:09 pm

ஜனநாயகம்
காப்பாற்றப்படுமா? என். கணபதி











தமிழக அரசியல்
அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப போர்க்களமாகவும், ஜனநாயகப் பூங்காவாகவும்
காட்சி அளித்துள்ளது. மன்னராட்சிக் காலத்திலேயே குடவோலை முறையின் மூலம்
ஜனநாயக ஆட்சி முறைக்கு வித்திட்ட தமிழகத்தில் இன்று அராஜக அரசியல்,
சர்வாதிகாரத்தால் ஜனநாயகம் அழிந்து வருகிறது. ஜனநாயக நாடான
இந்தியா இன்று கொள்கை மற்றும் நாணயமில்லா அரசியல் சூழலால்
சீர்குலைந்துவிட்டது. அமைதிப் பூங்கா என்று கூறிக்கொள்ளும் நாம்,
பதவிக்காக, பணத்துக்காக தாய்நாட்டையும், கொள்கை இல்லா அரசியலுக்காக அராஜக
ஆள்கொல்லிகளின் காலடியில் மண்டியிட வைத்துவிட்டோம். ஆண்டவனே நினைத்தாலும்
அராஜக அரசியலில் இருந்து இனி மக்களைக் காப்பாற்ற முடியாது என்ற நிலைக்குத்
தள்ளப்பட்டுவிட்டோம்.

அரசியல் என்ற அமைப்பு தோன்றக் காரணம்,
நாட்டில் வாழும் மக்கள் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும், ஒற்றுமையுடன்
சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்ற குறிக்கோள்தான். இதில்
ஏதேனும் ஒரு நோக்கமாவது நிறைவேறியதா? இவை நிறைவேறாததற்கு காரணம் ஆசை...
பதவி ஆசை, பண ஆசை. இவற்றுக்காக இன்று எதையும் இழக்கத் தயாராகி விட்டோம்.

கழுதை
தேய்ந்து கட்டெறும்பானதுபோல, அரசியல் சாக்கடையின் தாக்கத்தில் மக்களும்
பணத்துக்கு ஆசைப்பட்டு ஜனநாயகத்தை விலை பேசி, குழி தோண்டிப் புதைத்து
விட்டனர். கூனிக் குறுகி நிற்கும் வாக்காளர்கள், ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும்
ஒருமுறை தேர்தல் காலத்தில்தான் நிமிர்ந்து நின்று சுதந்திரமாய் இருக்க
முடியும் என்று இருந்த அந்த ஒரு சந்தர்ப்பத்தையும் இழக்கச் செய்து, இனி
எழக்கூட முடியாத நிலைக்கு பேரம் பேசி விலைக்கு வாங்கிவிட்டார்கள்.
விலை கொடுத்து வாங்கியவர்கள் சும்மாவா இருப்பார்கள்? பதவிக்காக முதலீடு
செய்த காசை எடுக்க சமூகத்தைச் சுரண்டும் வேலையைத்தான் செய்வார்கள். இதை
யார் தட்டிக் கேட்பது? காசுக்காக தாய்நாட்டை அடமானம் வைத்த நம்மால்,
அவர்களைத் தட்டிக் கேட்க முடியுமா? ஜனநாயகத் தேர்தலில் மக்கள்
முன் நிற்கும் வேட்பாளர் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில்
யாருக்கும் அஞ்சாத நெறிகள் என்பதற்கு ஏற்ப இருக்க வேண்டும். அப்படியும்
இருந்தார்கள் நமது தலைவர்கள் காமராஜர், கக்கன் போன்றவர்கள். இவர்கள்
மக்களுக்காகப் பாடுபட்டார்கள். நீதி தவறாமல் மானம் காத்தார்கள். அவர்களை
காட்சிப் பொருளாக காட்டும் நம் அரசியல்வாதிகள், அவர்களுடைய கொள்கைகளை
மட்டும் ஏன் காற்றில் பறக்க விட்டார்கள்.

மக்களை ஈர்க்கக்கூடிய
பேச்சுத் திறமை, போலித்தனமில்லாத யதார்த்தமான அரசியல் முழக்கங்கள்,
நாகரிகமான மேடைப் பேச்சு, தூய்மையான தனித்தன்மை, ஒழுக்கம் பற்றிய உயர்ந்த
மதிப்பீடு, பல்வேறு பிரச்னைகளில் யதார்த்த அணுகுமுறை ஆகியவையே முந்தைய
தலைவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது. ஆனால், இன்றுள்ள அரசியல்,
காசு இருந்தால் எதுவும் நடக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
வேட்பாளராகப் போட்டியிட இருக்க வேண்டிய நியாயமான தகுதிகள் என்னென்னவோ அவை
அனைத்தும் மாறி, இன்று வாக்காளர்களுக்கு நன்கொடையாக, பணமோ, பொருளோ வாரி
வழங்கும் தகுதி உடையவர்களாக யார் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற
நிலை உருவாகிவிட்டது.

மக்களின் ஏழ்மை நிலையை சாதகமாக்கிக் கொண்டு
வாக்காளர்களை கையேந்த வைத்துவிட்டார்கள் நமது அரசியல் சாணக்கியர்கள்.
வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகக் கடமை என்ற நிலை மாறி, என்றைக்கு
கையேந்தி நின்றார்களோ அன்றே ஜனநாயகம் செத்துவிட்டது. மக்களின்
அறியாமை மற்றும் இயலாமையை மோப்பம் பிடித்துக் கொண்ட அரசியல்வாதிகள் இன்று
இடத்துக்கு தக்கவாறு, ஆள்களுக்கு தகுந்தாற் போல பணத்தை வாரி இறைக்கின்றனர்.
இனி ஒரு வார்டு உறுப்பினர் பதவிக்குக்கூட லட்சக்கணக்கில் செலவு செய்தாக
வேண்டும். அதற்குத் தகுதியான ஆளாகவும், அந்த வார்டில் இருக்க வேண்டும்.
இல்லை என்றால், பெரிய அரசியல் தலைவர்களின் ஆதரவில் ஆள்கள்
நிறுத்தப்படுவார்கள். அப்படி நிறுத்தப்படும் இவர்கள் யாரும் சுதந்திரமாகச்
செயல்பட முடியாது. ஏனெனில், இவர்களை ஆட்டுவிக்கும் அங்குசம் தலைமையின்
கையில் இருக்கும். ஒவ்வொரு ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சித்
தேர்தலும் இவ்வாறே அமையப் போகிறது.

தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு
வேட்பாளரும் வாரி இறைக்கும் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது எனக் கேள்வி
கேட்க யார் இருக்கிறார்கள்? முதுகெலும்பு இல்லாத தேர்தல் ஆணையத்தால் என்ன
செய்ய முடியும்? ஒவ்வொரு தொகுதியிலும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறையை
மீறாமல்தான் தேர்தல் நடக்கிறதா? அப்படி நடக்கும் என்றால் பிறகு எதற்காக
இந்தத் தேர்தல் ஆணையம். மக்கள் அளிக்கும் வாக்கு, பணத்துக்காக விலை
போகும் போது ஜனநாயகத் தேர்தல் முறை பறிபோகிறது. பதவிக்காகவும், தனது
சுயநலனுக்காகவும் கொள்கை மறந்து கட்சி தாவும் அரசியல்வாதிகளால் இந்திய
ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது. வீட்டு உபயோகத்துக்காக பொருள்
வாங்கவோ அல்லது ஒரு சேலை எடுக்க வேண்டும் என்றால்கூட, இது நல்லதா அல்லது
கெட்டதா என தரம் பார்த்து வாங்கும் மக்கள், நாட்டின் தலை எழுத்தை நிர்ணயம்
செய்யக்கூடிய பொறுப்பேற்கும் ஓர் அரசியல் தலைவரை தேர்ந்தெடுக்கும் போது
பார்ப்பதில்லையே ஏன்? இந்த மனநிலை உருவாகக் காரணம் என்ன? மக்களின்
மனோபாவம்தான் இதற்கு காரணமா? மனிதனைச் சோம்பேறிகளாக்கும் சுயநல அரசியலின்
இலவசத் திட்டங்களுக்கு அடிமையான மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இலவசத்திற்குப்
பலியாகிவிட்டனர். இதன் விளைவு ஜனநாயகம் இன்று பணநாயகமாக மாறிவிட்டது. இலவசத்
திட்டங்களை மறுத்து ஆக்கப்பூர்வமான தொழில் முன்னேற்றத்துக்கு வித்திடும்
திட்டங்களில் அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்கிற ஒருமித்த கருத்தை மக்கள்
அரசுக்கு வலியுறுத்த வேண்டும். சோம்பேறியாக்கும் இலவசத்
திட்டங்களின் தாக்கம் வருங்கால இளைஞர் சமுதாயத்தின் மீது படிந்திடாதபடி
பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். இன்று உலகில் உயர்ந்த நிலையை
அடைந்திருக்கும் பல நாடுகள் மக்களின் சுயமான உழைப்பு காரணமாகத்தான்
உயர்ந்து நிற்கின்றன. இலவசத்தால் அல்ல. இதை ஏன் அரசு மறந்துவிட்டது. வாக்குக்காக
இலவசங்களைக் காட்டி அப்பாவி மக்களைத் திசை திருப்புவது நல்ல
அரசியல்வாதிக்கு அழகல்ல. இதை ஒவ்வோர் அரசியல்வாதியும் மனதில் இருத்திக்
கொண்டாலே இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்படும்.



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக