புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
46 Posts - 40%
prajai
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
4 Posts - 3%
Jenila
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
1 Post - 1%
kargan86
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
1 Post - 1%
jairam
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
8 Posts - 5%
prajai
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
6 Posts - 4%
Jenila
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
1 Post - 1%
jairam
மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_m10மனித நேய மாண்பாளர் வள்ளலார் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித நேய மாண்பாளர் வள்ளலார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:07 pm

“அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி”

உலகமெல்லாம் உய்ய இந்த மகத்தான மா மந்திரத்தை அருளிய மகான் வள்ளாலார் இராமலிங்க அடிகள். சித்தர், முனிவர், யோகி, மகான், துறவி என்று எந்த நிலைகளுக்குள்ளும் அகப்படாத, அதே சமயம் இப்படி எல்லா நிலைகளையும் கடந்து நிற்கின்ற அவதாரபுருடர் தான் அடிகளார்! எளிமையான வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார்! அன்பர்களும், அடியார்களும் படும் துன்பங்கள் கண்டும் துயரங்கள் கண்டும் பலவாறு மனம் வருந்திய வள்ளலார். அது கண்டு உள்ளம் இரங்கிப் பாடியிருக்கிறார்!

”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”

என்று மனம் உருகுகிறார். அது மட்டுமா! வெறும் இரக்கப்படுவதோடு நின்று விடவில்லை அவர்.

“வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
மரபினில்யான்ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே!

-என்று இறைவனிடம் அவர்களின் துயர் தீர்ப்பதற்கு தமக்கு அருள் ஒளியை ற்றலைத் தருமாறும் இறைஞ்சுகிறார்! தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அந்த வள்ளலின் வாழ்வே ஒரு தவம் தான் என்றால் அதில் மிகையில்லை அல்லவா?.

பிற உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் கருணை உள்ளம் கொண்டவராக வள்ளலார் விளங்கினார்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ!

-என்று பிறர் உயிர்களையும் தம் உயிர் போல் போற்றி வாழும் மனிதர்களின் அடிமை ஏவல் புரிந்திடவும் தனக்குச் சம்மதம் என்று கூறுகிறார்.

வள்ளலார் வெறும் ன்மிகவாதியோ, அருளாளரோ மட்டுமல்ல; மிகச் சிறந்த சமூகச் சீர்த்திருத்தவாதியாகவும், சிந்தனைப்புரட்சியாளராகவும் விளங்கினார். “கலையுரைத்த கற்பனையே கலையெனக் கொண்டாடும் கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக” என்று அவர் அறச்சீற்றத்தோடு உரைத்திருப்பதிலிருந்தே அவரது உளப்பாங்கை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. உலக நீதிப் பாடலான “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம்” என்ற ‘வேண்டாம்’ என்று எதிர்மறையாகக் குறிப்பிட்ட பாடலைக் கேட்கச் சகியாது,

“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்”

- என்று, ‘வேண்டும், வேண்டும்’ என்று இறைவனைத் தொழும் பாடலாகப் பாடியதிலிருந்து அவரது நேர்மறைச் சிந்தனை பற்றி நாம் அறிந்து கொள்ள இயலுகிறது.

சைவ சமயம் சமூகத்தின் மூடப்பழக்கங்களால் தொய்வுற்றிருந்த காலத்தில் தோன்றியவர் வள்ளலார். காலம் காலமாகப் புரையோடிப் போயிருந்த சமூக மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து அவர் குரல் எழுப்பினார். தமது பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலமும் அவற்றை மிகக் கடுமையாகச் சாடினார். திருவள்ளுவருக்குப் பின் வந்த காலத்தில் சித்தர்கள் தங்கள் பாடல் மூலம் சமூகப் புரட்சி செய்தனர். சிவவாக்கியர், பட்டினத்தார் போன்றோர் தங்கள் பாடல்கள் மூலம் சமூக மூட நம்பிக்கைகளை, சடங்குகளைச் சாடினர். அவர்களுக்குப் பின் வந்த மரபில் பொதுவுடைமை பேசும் முதல் குரலாக ஒலித்தது வள்ளலாரின் குரலே! பிற்காலத்தில் சமூகச் சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்ட பாரதி, பாரதிதாசன், பெரியார் போன்றோருக்கும் காந்தியடிகளுக்கும் முன்னோடியாக விளங்கியது இராமலிங்க அடிகளார் தான் என்றால் அது மிகையில்லை.

”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
தியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே!”

- என்று சாதி சமய வேறுபாடுகளை மிகத் தீவிரமாகக் கண்டித்து அறிவுறுத்தி இருக்கிறார்.

”இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு..

என்று போலிச் சமயங்களையும் தத்துவக் குப்பைகளையும் சாடும் வள்ளலார், போலி கமங்களையும், சாத்திரங்களையும் மிகக் கடுமையாக

”வேதாக மங்களென்று வீண்வாதம் டுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை?”

என்று எதிர்த்துரைத்திருக்கிறார்.

சமத்துவம் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய வள்ளலார், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என ஜாதி வேறுபாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். “ண்டவன் முன் அனைவரும் சமமே, உயர்வு தாழ்விலாது அனைவரும் இறைவனை வணங்கலாம்” என்ற ன்ம நேய ஒருமைப்பாடே அவர் தம் கொள்கையாகும்.

எப்பொழுதும் இறைவனைப் பற்றிய நினைவோடு தனித்திருக்க வேண்டும். அவனை அடைய வேண்டுமென்ற மெய்ஞானப் பசியோடு இருக்க வேண்டும். எப்பொழுதும் புலன்களின் இச்சைகளுக்குப் பலியாகாமல் விழித்திருக்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக ‘தனித்திரு! விழித்திரு! பசித்திரு!’ என்ற அற்புதமான தத்துவத்தில் விளக்கியுள்ளார்!

“ஒருவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அதனைப் போக்க முற்பட வேண்டும். உரத்துப் பேசுதல், கையை வீசி வேகமாக நடத்தல், கடுஞ் சொல் கூறுதல், சண்டையிடுதல், பொய் வழக்குப் போடுதல் இவை கூடவே கூடாது. பூமி அதிர நடக்கக் கூடாது.” - என்றெல்லாம் அவர் கூறிய அறிவுரைகள் என்றும் எண்ணி மகிழத் தக்கவை.

“மனம், வாக்கு, காயம் என மூன்றினாலும் ஒருவன் தூயவனாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் நலத்திற்காக மட்டுமே பிரார்த்தனை செய்தல் கூடாது. மாறாக அனைத்து உலக உயிர்களுக்ககவும், அவற்றின் நலத்திற்காகவும் பிரார்த்தனை செய்தல் வேண்டும். அந்தப் பொதுப் பிரார்த்தனையிலேயே அனைத்து நன்மைகளும் அடங்கி இருக்கின்றது என்பதை உணர வேண்டும்.” - என்று அவர் கூறியுள்ள அறிவுரைகள் என்றும் நாம் பின்பற்றத் தக்கவையாகும். அவரது தத்துவங்களையும், அறிவுரைகளையும் சரியாகப் பின்பற்றுவது நம் ன்ம உயர்விற்கும், வாழ்க்கை வளத்திற்கும் வழிவகுக்கும் என்பதே உண்மை.



மனித நேய மாண்பாளர் வள்ளலார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:09 pm

திருவள்ளுவர், திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், பட்டினத்தார், தாயுமானவர் என்று வாழையடி வாழையடியாக வரும் திருகூட்ட மரபில்,சென்ற நுற்றாண்டில், தமிழ் நாட்டில் வந்து உதித்தவர், திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார். தமிழ் நாட்டில் தென்னார்க்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திற்க்கு வட மேற்கே சுமார் 16 கிலோ மீட்டர் துரத்தில் உள்ள மருதூர் என்ற கிராமத்தில் 1823 ம் ஆண்டில் அக்டோ பர் திங்கள் ஐந்தாம் நாள் ஞாயிற்றுகிழமை இராமலிங்க அடிகள் அவதரித்தார். தந்தையார் இராமையா பிள்ளை, தாயார் சின்னம்மை. இவர்களுக்கு அருட் பிரகாச வள்ளலார் ஐந்தாவது பிள்ளை. இராமலிங்கம் தன் சிறு வயதில் தன் தமையன் சபாபதியிடம் ஆரம்ப கல்வி கற்றார். உலகியல் கல்வியில் வள்ளலாருக்கு நாட்டம் இல்லை. இறைவனைப்பற்றி பாடுவதிலேயே ஈடுபட்டார். கற்க வேண்டுயவற்றை இறைவனிடமே கற்றார்.

வாலிப வயதில் இராமலிங்க அடிகளுக்குத் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்னரும் அடிகள் இல்லறத்தில் ஈடுபடாது இறைவன் நெறியிலேயே ஈடுபட்டுவந்தார். இந்தக் காலத்தில் இராமலிங்க அடிகளின் புகழ் பரவத் தொடங்கியது. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை 1865 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். 1867 ஆம் ஆண்டில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத் தொடங்கினார் 1872 ஆம் ஆண்டில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை நிறுவினார். 1870 ஆம் ஆண்டு முதல் அடிகளார் மேட்டுக்குப்பம் என்ற சிறு கிராமத்தில் இருக்கும் சித்திவளாகத் திருமாளிகை இன்னும் சிறுகுடிலில் தங்கி வரலானார். இங்கு அவர்இதுவரை எந்த ஞானிகளும் பெற்றிராத ஞான்யோக அனுபங்களை பெற்று மரணமில்லா பெரு வாழ்வை அடைந்தார் இந்த மூன்று சன்மார்க்க நிறுவனங்களையும் சித்திவளாகத்தையும் இன்று " திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்கள் " என்ற பெயரில் இந்து சமய பாதுகாப்பு துறையினர் நிறுவகித்து வருகிறார்கள்.

இந்தக் காலத்தில் இராமலிங்க அடிகளின் புகழ் பரவத் தொடங்கிவிட்டது. அதனால் அவரைச் சுற்றி எப்போதும் பெருங்கூட்டம் இருந்து வந்தது. சென்னை வாழ்க்கை தமது ஞான வாழ்க்கைக்கு ஒத்துவாரது என்பதை கண்ட அடிகள் சிதம்பரத்திற்குச் சென்றார். சிதம்பரத்திற்கு வடக்கே உள்ள கருங் குழி என்ற ஊரில் தங்கினார். தினந்தோறும் சிதம்பரத்திற்க்கு சென்று இறைவனை வழிப்பட்டார். இந்த நாட்களில் அவாரிடம் சமரச சுத்த சன்மார்க்க கொள்கை வலுப்பெற தொடங்கியது. தெய்வம் ஒன்றே என்னும் கொள்கையை வற்புறுத்தி வந்தார்

"தெய்வங்கள் பலபல சிந்தை செய்வரும் சேர்கதி பல பல செப்புகின்றோரும் பொய் வந்தகலை பல புகன்றிடுவரும் பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும் மெய்வந்த திருஅருள் விளக்கம் ஒன்றில்லார் "

என்று இறைவன் ஒருவனே என்பதை வற்புறுத்திப் பாடினார்.சாதி வேறுபடும் சமுதாயத்திலே சமரச சன்மார்க்க வாழ்வைக் கடைப்பிடிக்க முடியாமல் தடைகளாக கண்டார்.அந்த தடைகளை எல்லாம் நீக்குவதற்க்கு அரும்பாடுப்பட்டார். " சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே சகதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்! அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் ஆழ கலவே !

" பொறித்த மதம் சமயமெலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர்... " என்று அறை கூவினார்.

புலால் மறுத்தலை வலியுறுத்தினார். எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி அன்பு செய்யவேண்டும். இப்படிச் செய்வோர் உள்ளத்திலேதான் இறைவன் தங்கி உறைவன் என்று தம் கருத்துக்களை வல்லளார் வலியுறுத்தி வந்தார். தாம் கண்ட இந்த நெறிக்கு 'சமரச சுத்த சன்மார்க்கம்' என்று பெயாரிட்டார். இந்த சன்மார்க்கக்கு நிறுவினார். இதுதான் 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்' இதன் பின்னர் 'சத்தியதருமச்சாலை' சத்திய ஞான சபை' முக்கிய நிலையங்களை நிறுவியும் நிறுவித்தார்.

சன்மார்க்க சத்திய சங்கம் : தம்மைச் சுழ்ந்திருந்த அன்பர்களை கூட்டியே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வடலூரில் அமைத்தார். தமிழ் நாட்டில் முன்பிருந்த அருளார்கள் மடங்களை அமைத்து மக்களுக்கு தொண்டு செய்தார்கள். ஆனால், வள்ளலார் மடம் கட்டவில்லை. சங்கம் கண்டார். மடம் என்பது எல்லா மக்களுக்கும் சமமாக இடம் தரும் ஆலயம் அல்ல. சமயத்துறையில் பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கும், குறிப்பிட்ட இனத்தார்க்கு மட்டுமே இடம் தரக்கூடியது. சங்கத்தில் இந்த தொல்லை இல்லை. இதில்யார் வேண்டுமானாலும் சேர்ந்து பயனாற்றலாம். இதற்கென்றே வள்ளலார் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் " என்ற பெயாரில் ஒரு சங்கம் கண்டார்.

இச் சங்கத்திற்க்குத் தலைவர் இறைவன்தான்" என்றும் குறிப்பிட்டார்.

"சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" இன்று தமிழ் நாட்டில் நூற்றுக்கணக்கான இடங்களில் கிளைத்து படர்ந்து மிக அருமையான பணிகளைச் ஆற்றி வருகிறது. தமிழ் நாட்டிலும் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்பிரிக்கா, இலண்டன் ஆகிய நாடுகளிலும் [நமக்கு தொரிந்தவை] சங்கம் உள்ளது.

சத்திய தருமச்சாலை:

சத்திய தருமச் சாலையும் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்த ஒரு நிறுவனம் வள்ளலாரின் கொள்கையில் தலையானது ஜீவகாருண்யம். சத்திய தருமச்சாலை, சாதி மத இனவேறுபாடுகளைக் கடந்து எல்லா மக்களுக்கு பசி தீர்க்கும் இடமாகவும், அவர்களுக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய உணர்வை ஊட்டுவதற்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு புனிதமான நிலையமாகும். ஏறக்குறைய நூற்றுப்பத்து நூண்டுகளுக்கு முன்னால் வள்ளலார் தம் கையால் அடுப்பு மூட்டிஏழைகளுக்கு அன்னம்ப்பலிக்கும் சத்திய தருமசாலை இன்றும் அணையாமல் நூற்றுக்காணக்கான ஏழைக்கு அன்னம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு தங்கிதான் பல அருட்பாக்களை இயற்றி பாடினார். பல்வேறு அருள் அனுபவங்களை இந்தத் தருமச்சாலையில்தான் பெற்றார். ''மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும் பயனும் விளைவை எல்லாம் தருமச்சாலையில் ஒரு பகலில் இறைவன் எனக்கு தந்தான்'' என்று பாடுகிறார்.

சத்திய ஞான சபை:

இறைனவன் ஒருவனே, அவன் ஒளி வடிவானவன் என்று கண்ட வள்ளலார் அந்த இறைவனுக்கு "அருட் பெருஞ் ஜோதி " என்று பெயாரிட்டார். அதனை அடையும் வழி தனிப்பெரும் கருணையே என்றார். இந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவனை வழி படுவதற்கு அமைத்து அருளியதுதான் சத்திய ஞான சபை. தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்கச் சங்கமே கண்டு களிக்கவும், சங்கம் சார் திருக்கோயில் கண்டிடவும் தங்கமே பெறும் சற்சங்கம் நீடுழி துலங்கவும் சங்கத்தில் அடியேன் ஆங்கமே குளிர அன்றனைப் பாடிடவும் இச்சை எந்தாய் ! -பிள்ளை சிறுவிண்ணப்பம். என்னும் திருஅருட்பாவே இதற்குச் சான்றாகும். சத்திய ஞானசபை அமைக்கப்பட்ட ஊரின் பழைய பெயர் பார்வதிபுரம். இராமலிங்க அடிகள் இதற்கு வடலூர் என்றும் உத்திர ஞான சிதம்பரம் என்றும் பெயர்ச் சூட்டினார். அவர் வெளியிட்டு இருக்கும் சுத்த சன்மார்க்க சத்திய சிறுவிண்ணப்பதில் ''கடவுள் வழிப்பாடு எஞ்ஞான்றும் செய்வோம்? - கடவுள் திருவருள் விளக்கம் எந்நாள் அடைவோம்?- மரணம், பிணி, மூப்பு முதலிய ஆகியவை எப்போது நீங்கும்?-என்றும் அழியாத போரின்ப சித்தி எக்காலம் கிடைக்கும்?- என்று எண்ணி எண்ணி வழிதுறை தொரியாமல் வருந்தி நின்ற தருணத்தே, அவைகளைப்பற்றி அறிந்து உதவும் கருணைக் கடலாகிய கடவுளே! நெடுங்காலம் மரணம் முதலாகிய அவதைகளால் துன்பமுற்று களைப்படைந்து உங்களை இந்த அவத்தைகளினின்றும் நீக்கிக் களைப்பும் கலக்கமும் தவிர்த்து, அழியாத போரின்ப சித்தியை அடைவித்தல் பொருட்டாகவே பூர்வஞான சிதம்பரத்தின் வடபால் பார்வதிபுரம் என்று குறிக்கப்படுகின்ற உத்திர ஞான சித்திரத்தில் யாம அளவு கடந்த நெடுங்காலம் சித்தி எல்லாம் விளங்கத் திருவருள் நடம் செய்வோம்" என்றும் அப்பதியினிடத்தே யாம் அருள் நடம்புரிதற்கு அடையாளமாக ஓர் ஞானசபை காணுதல் வேண்டும் என்றும், திருவருட்குறிப்பால் அறிவித்ததும் அன்றி, அருள் உருவாகி எங்கள் அகத்தும் புறத்தும் அமர்ந்து அருளியதோர் தடைகளும் இன்றி,இத்திருசபையும் தோன்றி விளங்கச் செய்வித்து அருளிய தேவாணர் பெருங்கருணையைக் கருதுந்தோறும் பெருங்களிப்பு அடைகிறோம் என்று சொல்கிறார்.

வள்ளலார் வெளியிட்ட சத்திய ஞான விளம்பரத்தில் கடவுள் தாமே திருயுள்ளம் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற ஓர் ஞான சபையை இங்கே தமது திருவருட் சம்மததால் இயற்றுவித்து, இக்காலம் தொடங்கிய அளவு குறிக்கப்படாத நெடுங்காலம், அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க, யாமே அமர்ந்து விளையாடுகின்றோம். என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி அருட்பெருஞ் சோதியராய் வீற்றிருக்கின்றார் " என்கிறார். இறைவன் திரு உள்ளத்தின் படியே வள்ளலார் சத்திய ஞான சபையை வடலூரில் ஏற்படுத்தி இருக்கிறார் என்பது தெளிவாகப் புரிகிறது. அருட்பெருஞ் சோதியை வழிப்படுவதற்க்கு வழக்கம் போல் 'கோயில்' கட்டாமல் "சபை" கட்டியதை நாம் இங்கு சிந்திக்க வேண்டும். 'கோயில்' என்றால் அதில் குறிப்பிட்ட சமயத்தார் மட்டுமே செல்ல இயலும். 'சபை' யில் அது போன்ற கட்டுப்பாடுகள் கிடையாது. சாதி, மத, இன வேறுபாடு இன்றி மனித குலத்தினர் எல்லோரும் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபைக்கு சென்று வழிபடலாம். சத்திய ஞான சபை எண்கோண வடிவானது, தெற்கு நோக்கியது. கீழ் புறத்தில் பொற்சபையும், மேல் புறத்தில் சிற்சபையும் உள்ளன. என்கோண வடிவமான ஞான சபைக்குள் பன்னிருகால் மண்டபம் ஒன்றும் நாற்கால் மண்டபம் ஒன்றும் உள்ளன. நாற்கால் மண்டபத்தின் கீழே பூமிக்குள் ஒரு அறையும் இருக்கிறது. நாற்கால் மண்டபத்தில் மேலே நடுவில் ஒரு பொரிய அகல்விளக்கு வள்ளலாரால் ஏற்றி அருளப் பெற்றிருக்கிறது. அருட்பெருஞ் சோதி ஆண்டவனை நாம் காண முடியாமல் மறைத்துக் கொண்டு ஏழு வெவ்வேறு நிறத்தில் திரைகள் தொங்குகின்றன. ஏழும் மாயத்திரைகள்; தத்துவப் படலம். நம்மிடம் உள்ள அறியாமை ஆகிய திரைகள் நீங்கப் பெற்றால் ஆன்ம ஒளி அருட்பெருஞ் சோதியைத் தாரிசிக்கலாம், என்பதை எடுத்துக் காட்டுவது சத்திய ஞானசபை,அகத்தே தாம் பெற்ற அருட் பெருஞ் சோதி அனுபவத்தை புறத்தே சத்திய ஞான சபையாக அமைத்து இருக்கிறார். சோதி ஆண்டவரை மறைத்து தொங்கும் திரைகளைப் பற்றி அருட்பெரு சோதி அகவலில் வள்ளலார் மிக விரிவாகச் சொல்லியுள்ளார்.

''கரைவு இல்லா மாயைக் கரும் பெருந்திரையால் அரைசு அது மறைக்கும் அருட்பெருஞ் சோதி ! பேருறு நீலப்பெருந் திரையதனால் ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ் சோதி ! பச்சைத் திரையால் பரவெளி அதனை அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் சோதி ! செம்பைத் திரையால் சித்துறு வெளியை அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் சோதி ! பொன்மைத் திரையால் பொருள் உறு வெளியை அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் சோதி ! வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் சோதி ! கருப்புத் திரையால் கருது அனுபவங்களை அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் சோதி !

இப்படி சோதி ஆண்டவரை மறைத்துக் கொண்டிருக்கும் ஏழு வெவ்வேறு திரைகளைப் பற்றி விளக்கம் சொல்லி இருக்கிறார். இதையே மாயை, கிரியை, விருப்பம், அறிவு முதலிய ஏழு வகை சக்திகளாகப் பிரித்துக் காட்டி விளக்குகிறார். கறுப்புத் திரை மாயா சக்தி! நீலத் திரை கிரியா சக்தி ! பச்சைத் திரை பாரசக்தி ! சிகப்புத் திரை இச்சாசக்தி ! பொன்மைத் திரை ஞானசக்தி ! வெண்மைத் திரை ஆதிசக்தி ! கலப்புத் திரை சிற்சக்தி ! என்று ஏழுதிரைகளைக் குறிப்பிடுகிறார்.

இந்த சத்திய ஞானசபையை 1871 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் ஆரம்பித்து எட்டு திங்களில் 1872 ம் ஆண்டு தைத்திங்களில் முடித்துதிருக்கிறார். 1872 ஆம் ஆண்டு சனவாரி திங்கள் 25-ம் நாள் தைப்பூசத்தில் சோதி தாரிசன வழிப்பாடு ஆரம்பாகித் தொடங்கியுள்ளது. தொடக்க நாள் அன்று அதன் பெருமை உணர்த்த ஒரு முக்கிய விளம்பரம் வெளியிட்டார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த விளம்பரத்தினை காண்போம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த விளம்பரத்தில்:-

"தமக்கு ஒருவாற்ரானும் ஒப்பு உயர்வில்லாத தனிப்பெருந் தலைமை அருட் பெருஞ் சோதியார் என்றும், சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரானப் பொதுவெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாம் ஆகி விளங்குகின்றனர். அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ஆகிய கடவுளை, அறிந்து,அன்பு செய்து ,அருளை அடைந்து, அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று பலவேறு ஆபத்தைக்களினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகிறார்கள்." இனி இந்த சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்ககுணங்களைப் போற்றும் நற்செய்கை உடையவராய் எல்லாச் சமங்களுக்கும் எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று சுகத்தையும்,களிப்பையும் அடைந்து வாழ உண்மை கடவுளை தாமே திருவுளங்கொண்டு, திரு அருள் சம்மதத்தால் இயற்றுவித்து 'இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப் படாதநெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் ' என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தினார்.

சத்திய ஞானசபையில் அருட்பெருஞ்சோதி ஆண்டவனை வழிபடுவதற்குச் சில விதிகளை வகுத்து அருளினார் இராமலிங்க வள்ளலார். ஞானசபைக்குள் புகுந்து அருட்பெருஞ்சோதி ஆண்டவனை வழிபடுவதற்கும் வெளியில் இருந்து வழிபடுவதற்க்கும் சாதி சமயம் முதலிய வேறுபாடுகள் ஒன்றும் இல்லை. மற்ற கோயில்களைப்போல மேளதாளங்கள் முதலிய இசைக் கருவிகள் சோறு, தேங்காய்,பழம் முதலிய நைவேத்தியங்கள், இன்னும் இது போன்ற வழிபாட்டு முறைகள் ஞானசபை வழிபாட்டில் கிடையாது. ஞானசபை வழிபபாட்டுக்காக சன்மார்க்க சங்கத்தாருக்கு விடுத்த கட்டளை;



மனித நேய மாண்பாளர் வள்ளலார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:10 pm

''இன்று தொடங்கி அருட்பெருஞ் சோதி ஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும் வரைக்கும், ஞான சபைக்குள் தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும். பித்தளை முதலியவற்றால் செய்த குத்துவிளக்கு வேண்டாம். மேல் ஏற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம்." ''தகரக் கண்ணாடி விளக்கு வைக்குங் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் தேக சுத்தி கரண சுத்தி உடையவர்களாய், திருவாயிற்படிப் புறத்தில் இருந்துக்கொண்டு விளக்கேற்ற வேண்டும்.பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கையில் கொடுத்தாவது, அல்லது ஏழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்து வரச் செய்விக்க வேண்டும்.'' ''நாலு நாளைக்கு ஒரு விசை காலையில் மேற்குறித்த சிறியாரைக்கொண்டோ ,பொரியாரைக் கொண்டோ உள்ளே சுத்தம் செய்ய வேண்டும். நீராடி சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக் கொண்டு முழங்காலிட்டு சுத்தம் செய்விக்க வேண்டும்'' விளக்கு வைப்பவரும், சுத்தம் செய்யும் சிறுவர், பொரியவர் இருபாலாரும் பொருள், போகம்,இச்சை சிறிதும் இல்லாமல் - தெய்வ சிந்தை உடையராய், அன்புடையவர்களாய் இருத்தல் வேண்டும். ஒரு மனதாய் நின்று மெல்லெனத் துதி செய்தல் வேண்டும்''

இந்த கட்டளையை காணும் போது வள்ளலார் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் இருக்கும் இடத்தை எவ்வாறு மக்கள் புனிதமாகப் போற்றவேண்டும் என்பதில் கவனத்துடன் இருந்திருக்கிறார் என்பதைத் தொரிந்துக்கொள்ள முடிகிறது.சேதி தாரிசனம் சக்தியை பெருக்கவும், சோதி தாரிசனத்தைப் பார்த்து மகிழ்ந்து, மதங்களின் ஆரவாரங்கள் தொலைந்து ஒழிந்து போகும் என்றார்.

இதனை -

சித்தி புரத்தே தினந்தோறும் சீர்கொள் அருள் சத்திவிழா நீடித் தழைத்து ஓங்க,- எத்திசையில் உள்ளவரும் வந்தே உவகை உறுக ! மதத் துள்ளல் ஒழிக தொலைந்து !

இவ்வாறு வள்ளலார் வகுத்த விதிகளின்படி நித்திய வழிபாடு சில மாதங்கள் ஒழுங்காக நடந்து வந்தது. அதன் பிறகு ஞானசபையை நடத்தி வந்தவர்கள் முறைப்படி தொடந்து வழிப்பாட்டை நடத்தவில்லை. இதை அறிந்த வள்ளலார் சத்திய ஞான சபையைப் பூட்டி, அதன் சாவியைத் தம்முடன் மேட்டுக்குப்பம் எடுத்துச் சென்றுவிட்டார். ஞான சபை நித்திய வழிப்பாடு நின்று போயிற்று. வள்ளல் பெருமான் சித்தி பெறும் வரை சத்திய ஞான சபை திறக்கப் படவில்லை.

சித்தி வளாகம்:

சென்னையிலிருந்து சிதம்பரம் வந்த வள்ளலார் 1858 ஆம் ஆண்டு முதல் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள கருங்குழி என்ற கிராமத்தில் தங்க ஆரம்பித்தார்.1867 ஆம் ஆண்டு வடலூரில் சத்திய தருமச்சாலையை ஆரம்பித்தார். இதன் பிறகு தருமச் சாலையிலேயே தங்கி வந்தார்.நாளாடைவில் தருமச்சாலையில் கூட்டம் அதிகமாகிவிட்டது.வள்ளலார் அமைதியை நாடி 1870 ஆம் ஆண்டு வடலூருக்குத் தெற்கே நாலு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மேட்டுக்குப்பம் என்ற கிராமத்திற்க்குச் சென்று அங்கேயே தங்கத் தொடங்கிவிட்டார். இந்த மேட்டுக்குப்பம் சித்திவளாகக் குடிலில் இருக்கும்போதே அவரைத் தாரிசிப்பதற்கும், அவர் அருள் வாக்குகளைக் கேட்பதற்கும் பலர் சித்திவளாகக் குடிலில் வந்துக்கூட ஆரபித்துவிட்டார்கள்.வள்ளளார் சித்திவளாகத் திருமாளிகையில் பல உபதேசங்களைச் செய்திருக்கிறார். இங்கிருந்தபோதுதான் வடலூரில் சத்திய ஞானசபையையும் அவர் நிறுவி இருக்கிறார். சன்மார்க்க உலகில் பெரும் புகழ் பெற்ற அருட்பெருஞ்ஜோதி அகவலைப் பாடியதும் இந்த சித்திவளாகத் திருமாளிகையில்தான். சன்மார்க்க உலகில் பெரும் புகழ் பெற்ற அருட்பெருஞ்ஜோதி அகவலை பாடியதும் இந்த சித்திவளாகத் திருமாளிகையில்தான். வள்ளலாரின் ஞானயோக அனுபவங்களான ஆறாம் திருமுறையின் பிற்பகுதிப் பாடல்கள் பலவும் இங்கே பாடியவைகளே. சித்திவளாகத் திருமாளிகையில்தான் வள்ளலார் அருட்பெருஞ் ஜோதி சித்தி முழுதும் கைவரப்பெற்றார். வள்ளலார் சித்திவளாகத் திருமாளிகையில் இருக்கும்போது தம் உடலைப் பிறர் பார்க்காதபடி மறைத்துக்கொண்டிருக்கும் அளவு பல சித்துக்களைப் பெற்றார். இப்படிச் சில நாள் ஒருவர் கண்ணிலும் படாது அவர் தம்மை மறைத்துக்கொண்டு இருக்க எண்ணியபோது தம்மை காண வரும் அடியார்கள் பயந்துவிடக்கூடாது என்பதற்காக அவரே ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்:- ஒருவனைப் பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மை உண்டாம் என்பதை உண்மையாக நம்பி இருங்கள். என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னும் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகிறேன்."அது வரை பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில் தானே வெளிப்படுவேன். அஞ்சவேண்டாம். தருமச்சாலையை இலகுவாய் நடத்துங்கள்.- "திருச்சிற்றம்பலம்"

இவ்வாறு , அறிவிப்பை எழுதிவைத்துவிட்டு சில காலம் யார் கண்ணிலும் படாமல் இருந்து வந்திருக்கிறார். உடலை மறைத்துக்கொண்டு இறை அனுபவத்தில் மூழ்கித் திளைப்பதும், மீண்டும் மக்கள் முன் தோன்றுவதுமாக வள்ளலார் இருந்து வந்துள்ளார். மக்களுக்கு ஒரு நீண்ட உபதேசம் செய்திருக்கிறார்.

வள்ளலாரின் நீண்ட உபதேசத்தில் சில பகுதிகளை மட்டுமே போதும் வள்ளலார் அடைந்திருக்கும் உன்னத நிலையினை தொரிந்துக் கெள்ளலாம்.

"... காட்டில் சென்று ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்வதில் பெறும் பலன்களை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை நினைப்பதிலும்,அவரை வழி படுவதிலுமே பெற்றுவிடலாம். வேதம், ஆகமம்,புராணம், இதிகாசம் முதலியவற்றில் ஆண்டவனைப் பற்றி உண்மையைத் தெளிவாக விளக்கவில்லை. அவைகளில் ஈடுபடுவதன் மூலமாக அற்ப சித்துகளை வேண்டுமானால் அடையலாம். ஆனால் ஆண்டவனைக் கண்டு அனுபவிக்க முடியாது. ஆகையால் வேதம்,ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகளில் மனதைச் செலுத்தாமல் நேரே ஆண்டவனை வழிபடுவதற்கு முயலுங்கள். சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம்,சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் ஆண்டவனைப் பற்றி ஏதோ ஓரளவு கோடிட்டுக் காட்டி இருக்கிறதே ஒழிய போதுமான அளவு விளக்கமாகச் சொல்லவில்லை. ஆதலால் அதிலும் வாழ்க்கையை வீணாக்க வேண்டாம்.

''நான் சைவ சமயத்தில் லட்சியம் வைத்திருந்தது போல, வேறு யாரும் வைத்திருக்க முடியாது. நான் அந்த சமயப் பிடியிலிருந்து விலகிய பிறகுதான் ஆண்டவர் ஏறா தலையில் ஏற்றி வைத்திருக்கின்றார். என்னைப் போல் நீங்களும் சமயத் தளைகளை அறுத்துக்கொண்டு நேரே ஆண்டவனை வழிபடும் வழியில் ஈடுபடுங்கள்''

நான் இந்த ஏறாத தலையில் ஏறியதற்குக் காரணம் தயவுதான். தயவு என்னும் கருணைதான், என்னைத் தூக்கி விட்டது. அந்தத் தயவிற்க்கு மனதில் ஒருமை வரவேண்டும். தயவு வந்தால் பொரிய மலைமேல் ஏறலாம்'' ''தெய்வத்தைத் தொரிந்து கொள்ளாது என்னைத் தெய்வம் என்று மக்கள் நினைந்து சுற்றுகிறார்களே, இந்த வேதனைத் தாங்க முடியவில்லை.'' சாதாரண மக்கள் தெய்வத்தைத் தொரிந்து கொள்ளாமைக்கு காரணமும் உண்டு. அதன் சுவையைத் தொரிந்துக்கொள்ள, அனுபவிக்க தொரியவில்லை. தெய்வ இச்சை அனுபவிக்கத் தொரிந்துக்கொண்டால் தெய்வத்தினிடம் பிரியம் ஏற்படும். ஆதலால் தெய்வத்தை அனுபவிக்க தொரிந்துக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் தெய்வத்தை வழிபடுங்கள்.

"...அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !

தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!... "... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !

தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!...

என்னும் மந்திரத்தை ஆண்டவர் வெளிப்படையாக எனக்கு அருளியிருக்கிறார். தயவு கருணை, அருள் என்பன ஒரு பொருளைக் குறிக்கும். அதுவே ஒப்பற்ற தயவுடைய பேரறிவாகும். இதுதான் உண்மை. இதை உணர்ந்து செயல்படுங்கள். நீங்கள் அனுபவித்து மகிழும்படி ஆண்டவர் வருவார். அவர் வந்தவுடன் எல்லா நன்மையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம்! ஆண்டவாரின் கட்டளை.''

இவ்வாறு வள்ளல் பெருமான் அருள் உபதேசம் செய்த மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் சித்திவளாகக் குடிலில் தாம் வழிபட்டு வந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவாரின் அருஉருவமான திருவிளக்கைத் தம் குடிலில் இருந்து வெளியே எடுத்து வைத்து, ''இதைத் தடைபடாது ஆராதியுங்கள்; இந்தக் கதவைச் சாத்திவிடப் போகிறேன். ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால் இனி கொஞ்ச காலம் எல்லோரும் உங்களுடைய காலத்தை வீணாகக் கழிக்காமல் நான் பாடி இருக்கும் நினைந்து நினைந்து' என்று தொடக்கமுடைய 28 பாசுரங்கள் அடங்கிய பதிகத்தில் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் " என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

இதன் பின்னர் 1874-ம் ண்டு சனவாரித் திங்கள் 30 ம் நாள் வள்ளலார் தமது சித்திவளாகக் குடிலின் கதவைச் சாத்திக் கொண்டு ஞானசித்தி பெற்றுவிட்டார். சில நாட்களுக்குப் பின் சித்திவளாகக் குடிலைத் திறந்து பார்த்தபோது ".. திறந்து பார்ப்பின் வெற்று அறையாகத்தான் இருக்கும்..." என்று வள்ளலார் கூறியிருந்தது போலவே அது வெற்று அறையாகவே இருந்தது*** இவ்வாறு மறைவதுதான் ஞானசித்தியாகும். அருட்பெருஞ் சித்தியாகும். மரணமில்லாப் பெருவாழ்வு என்பதும் இதுதான். சித்திபெற்ற ஞான யோகியின் உடல் தரையில் வீழ்வதில்லை; மண்ணுக்கோ, நெருப்புக்கோ இரையாவதும் இல்லை.. 1878 ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்ட ஆட்சி இதழில் [S.A.District manual 1878- J.H. Garsteen] ஜார்ஸ்டீன் என்பவர் தம்மை மறைத்துக்கொண்டதுபற்றிக் குறித்துள்ளார். இதுவே நமக்குக் கிடைத்து இருக்கும் மிகப் பழமையான சான்றாகும்.

'In 1874 he locked himself in a room [Still in Existance] in Mettukkuppam [Hamlet of Karunguli] which he used for samadhi or mystic meditation and instructed his disciples not to open it for sometime. He was never seen since, and this room is still locked" என்பது அவரது குறிப்பு. இவரை பிலிப்ஸ் என்பவரும் இதே கருத்தைக் கூறியுள்ளார்

''In 1874 he disappeared from his house and nothing clear is known about his death'' இது 1910 ம் ஆண்டு எழுதப்பெற்றது. எனவே மிகப் பழமையான இச் சான்றுகள் மூலம் வள்ளலார் தம்முடம்பை மறைத்துக்கொண்டார் என்பது தெளிவாகிறது.

" ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வு ஒளிமயமாக் கோம்செயவே பெற்றுக் கொண்டேன்... " " ஊன் உடம்பே ஒளியுடம்பாய் ஓங்கிற்க ஞான அமுதெனக்கு நல்கியதே..." மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான்வடிவும் கொடுத்தெனக்கு முடியுஞ் சூட்டி பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பத்து..." இங்ஙனம் காணப்பெறும் அடிகளை, வள்ளலார் தம் ஊன் உடலை மறைத்துக் கொண்டார் என்பது முற்றும் உண்மையே என்பதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

அருட்பிரகாச வள்ளலார் ஞானசித்தி பெற்று நான்கு ஆண்டுகள் முடிந்தன. இதன் பின் சத்திய ஞானசபை வழிபாட்டை மீண்டும் தொடங்க சில அன்பர்கள் தொடங்க விரும்பினார்கள். ஆறு பேர்கள் கொண்ட ஒரு குழு உருவாகியது. இந்த குழுவினர் தாங்கள் விரும்பிய வண்ணம் வள்ளலார் வகுத்த வழிப்பாட்டு விதிகளுக்கு மாறாக, சில புதிய ஏற்பாடுகளை வகுத்துக் கொண்டு

ஞானசபை வழிபாட்டைத் தொடங்கினார்கள். இந்த புதிய வழிபாடு 1878 ஆம் ஆண்டு சத்திய ஞானசபையில் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழுவினர் ஞானசபை வழிப்பாட்டில் அவர்கள் விரும்பிய வேறு சில ஏற்பாடுகளையும் செய்துக்கொண்டார்கள். இதற்கு பிறகு 1881 ஆம் ஆண்டில் ஏழுபேர் கொண்ட ஒரு குழுவினர் கூடி தாங்கள் விரும்பிய வண்ணம் சில மாற்றங்களைச் செய்துக்கொண்டு இப்போது ஞானசபையில் நடைபெற்று வருகிற வழிபாட்டு முறைகளை வகுத்துச் செயல் படத்தொடங்கினர்.

சமீபகாலம் வரையில் ஞானசபையில் நடைபெற்று வரும் வழிபாட்டு முறைகள் வள்ளலார் வகுத்துக்கொடுத்த வழிபாட்டு முறைகள் அல்ல. 117ஆண்டுகளுக்கு முன்னால் அமைத்த குழுவினரால் தாங்கள் விருப்பப்படி மாற்றி அமைத்த வழிபாட்டு முறைகள்தான். அதன்பின் திருமுருக கிருபானந்த வாரியார் வள்ளலார் அமைத்த சத்திய ஞானசபைக்கு திருப்ப செய்தார். வாரியார் ஞான சபையின் மேற்கூரை அமைப்பை மாற்றி,அதை வள்ளலார் விரும்பிய வண்ணம் போலவே மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கருதிய சன்மார்க்க அன்பர்கள் அதன்படி அமைத்தனர். வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை சமயங்கடந்தாகும். இது முற்றிலும் தனித் தன்மை வாய்ந்தது. " தருணம் தொடங்கி வந்து தாரிசிக்கப் பெறுவீர்களாயின் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைந்தும் அன்றி மூப்பினர் இளமை பெற்று ஆற்றல் முதலிய பலவகை அற்புதங்களை கண்டு பெருங்களிப்பு அடைவீர்?" என்று தாம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தினந்தோறும் ஜோதி தாரிசனம் செய்ய வேண்டும் என்பதை வள்ளலார் வற்புறுத்தியுள்ளார். இறைவன் அரு உருவானவன் என்னும் தத்துவத்தை விளக்கும் ஜோதி வழிபாட்டினை கொண்டார். ஒளியை வெறுப்பவர் எவருமிலர். எச் சமத்தவரும் ஒளியை விரும்புவார். எனவே ஆன்ம நேய ஒருமைப்பாடுரிமையை வலியுறுத்தினார்.ஒளியை உருவாகவும் கொள்ள இயலாது,அருவாகவும் கொள்ள இயலாது. உரு கண்களால் புலனாக வேண்டும். கையில் பிடிபட வேண்டும். ஜோதி கண்ணுக்குப் புலனாகவும்,கையில் பிடிபடாமலும் உள்ளது. பிடிபடாததால் அருவாகும். இப்படி உருவாகவும் அருவாகவும் விளங்குவதால் ஜோதியினை மேலாகப் போற்றினார்.இந்த அளவிற்கு ஒளி வழிபாட்டைப் போற்றிய ஞானிகள் யாருமில்லை எனலாம். "மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதி...." 10; சிவவாக்கியர்.

"உச்சிக்கு நேரேயுண்ணாவுக்கு மேல்தம் வைத்த விளக்கும் எரியுதடி...." -25: வாலைகும்மி ''மூடத்துள் நின்ற சோதி..."1872:திருமந்திரம்

சமயத் தொடர்புடையராக ஆன்மீக வாழ்க்கையைத் தொடங்கிய வள்ளலார் சாதி,மதம், சமயம், சாத்திரம், கோத்திரம் அனைத்தும் பொய் பொய்யே என் வன்மையாகச் சாடும் உள்ளத் தெளிவும் வலிமையும் பெற்றவர். ''கலையுரைத்த கற்பனையே கலையெனக் கொண்டாடும் கண் மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக...'' சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

அவர் இயற்றி அருளிய திரு அருட்பா உலகம் எங்கும் பரவி மனித குலத்திற்கு வழிகாட்டும்.

அருட்பெருஞ் ஜோதி ! அருட்பெருஞ் ஜோதி!

தனிப்பெருங் கருணை! அருட்பெருஞ் ஜோதி!


(இதுபோன்ற கட்டுரைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி பதிவிற்கு உதவும் லக்ஷ்மி சிவகாமி அவர்களுக்கு நன்றி)



மனித நேய மாண்பாளர் வள்ளலார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக