புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
30 Posts - 50%
heezulia
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
72 Posts - 57%
heezulia
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியத்தில் ஓர் ஐயம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Jul 25, 2009 9:54 am

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
நீண்ட நாட்களாக ஒரு ஐயம் என்னை வாட்டுகின்றது, நான் தமிழ் படிக்கும் காலை ஒரு பாடல் என்னைச் சிந்திக்க வைத்தது
அந்தப் பாடல்
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்
பிடர்த் தலைப் பேரானைப்பெற்று- கடைக்கால்
செயிறறு செங்கோல் செலீயினான், இல்லை
உயிருடையார் எய்தா வினை

இந்தப் பாடல் கரிகால் பெருவளத்தானைப் பற்றியது. கரிகாலன் சிறுவனாக இருந்த போது எதிரிகள் அவன் இருந்த இல்லிற்குத் தீ வைத்தனர். இரும்பிடர்த் தலையர் என்னும் பெரும் புலவரின் உதவியால் தப்பித்துப் பின்னர் குற்றமற்ற ஆட்சி நடத்தினான் என்பதே அதன் பொருள்.
1. நெருப்பினால் உடல் சுடப்பட்டால் தோலில் உள்ள நிறமிகள் அழிந்து கால் வெண்மையாக மாறி இருக்கும். கருப்பு நிறம் அடையாது. ஏன் கரிகாலன் என்ற பெயர் பெற்றான்.

2. ஒருவனது உடற்குறையைச் சுட்டிக் காட்டுதல் மேலோர்க்கு ஒப்ப முடிந்த ஒன்று அன்று, கருகிய காலை உடையவன் என்று சுட்டிக் காட்டுதல் பண்புள்ளார் செயலுமன்று . ஏன் அவ்வாறு சுட்டி இருக்கின்றனர் நம் முன்னோர்?
செந்தமிழ் வல்லார் எவரேனும் மறு மொழி இடுவார்களா?
அன்புடன்
நந்திதா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 25, 2009 11:24 am

அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 1:07 pm

கரிகால சோழனின் தந்தை இளஞ்சேட் சென்னியை சோழப் பேரரசின் கீழ் இருந்த பெரும்பான்மையான வேளிர்களின் ஆதரவுடன் சேரனும், பாண்டியனும் சேர்ந்து சூழ்ச்சி செய்து கொன்று, அவர்கள் தங்கியிருந்த மாளிகையை தீ வைத்து எரித்தனர். அந்த தீ விபத்தில் இருந்து தப்பிய போது காலில் தீயால் காயமடைந்ததால் தான் கரிகாலன் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது.

கரிகால சோழன் அரசனாக இருக்கும்பொழுது இச்சம்பவம் நடைவெறவில்லை. கரிகால சோழனின் இளம்பருவத்தில் நடைபெற்றதால் அவரை கரிகாலர் என அழைத்தனர். அதுவே அவருக்கு நிரந்தப் பெயராகி விட்டது.

அவரின் கால் கருகினால் எப்படிக் கறுப்பாகும் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 1:14 pm

கரிகாலன்

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்கு, கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப் பெற்றபோது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள்

உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.
"வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் கொடுவரிக்
குருளைகூட்டுள் வளர்த்தாங்குப் பிறர், பிணியகத்திருந்து
பீடுகாழ், முற்றி யருங்கரை கவியக்குத்திக் குழி

கொன்று யானை பிடிபுக்காங்கு" (பட்டினப்பாலை 220-228)
"நுண்ணுதி னுணர நாடி நண்ணார்
செறிவடைத் திண்காப் பேறிவாழ் கழித்
துருகெழ தாப மூழி னெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்வான்" (பட்டினப்பாலை 220-228)

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளிருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக் கூடங்களில் வாழ்ந்தபோது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு பின் சிறைக் காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதைக் கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப் புலவர் விளக்குகிறார்.

இவனது படைபலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்க்காமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப் பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாகக் கூறுகிறார். நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியார் அவரது காலத்தில் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jul 28, 2009 6:57 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
அருமையான செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளார் சிவா அவர்கள். அவருக்கு என் நன்றிகள். எதனையும் ஆராயாமல் வடமொழி ஆக்கம் பல நடந்துள்ளன. எனது கேள்வி.உடற்குறையைச் சுட்டிக்காட்டுதல் மரபன்று. மேலும் தீக்காயத்தால் தோல் கருமை பெறாது, இது தான் எனது ஐயம்
அன்புடன்
நந்திதா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 28, 2009 7:04 pm

அதாவது ....


ஐயோ திரும்பவும் இங்க வந்துட்டனா , அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 7:06 pm

சிரி சிரி உடுட்டுக்கட்டை அடி வ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 7:38 pm

தமிழ் இலக்கிய முனைவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன், பதில் கிடைத்ததும் அறியத்தருகிறேன் நந்திதா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 11:59 pm

நிலாசகி, இங்கு நந்திதாவின் கேள்விக்கு தங்களின் பதில் என்ன?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 12:22 am

இன்னும் கால் ஊனமானவர்களுக்கு சப்பாணி என்ற பெயர் வைப்பது(பட்ட பெயர் வைப்பது)இன்னும் நம் சமூகத்திலிருந்து மறையவில்லை.ஆனால்.....வீரனுக்கு அது ஒரு பொருட்டாக தெரிந்திருக்கவில்லை ...கால் கருகி கறுப்பாக கண்ருவதற்கும் வாய்ப்புகள் உண்டு.........

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக