புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
31 Posts - 55%
heezulia
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
17 Posts - 3%
prajai
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
9 Posts - 1%
Jenila
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
4 Posts - 1%
jairam
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாடி ஜோதிடம் Poll_c10நாடி ஜோதிடம் Poll_m10நாடி ஜோதிடம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடி ஜோதிடம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 4:14 am

இறந்த காலம், நிகழ்காலம்,வருங்காலம்ஆகியவற்றைக் கண்டறியும் ஆற்றல் படைத்த நிபுணர்கள் இருந்தனர். அவர்களைத் "திரிகால ஞானிகள்" என்று அழைப்பர்.

இவர்களில் பலர் முனிவர்களாகவும், ரிஷிகளாகவும், சிலர் சித்தர்களாகவும் விளங்கினர். அவர்களுக்கு "ஞானதிருஷ்டி எனப்படும் விசேடப் பார்வை இருந்தது. அதை வைத்து அவர்கள் எக்காலத்திலும் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டறிந்தார்கள். ஜோதிட விதிகளையும் யாத்து, நிகழ்வுகளுடன் ஏற்ற முறையில் தொடர்பு படுத்தி அவற்றை நெறிப்படுத்தித் தொகுத்து எழுதிவைத்துச சென்றனர்.

அத்தகையதோர் சாஸ்திரம் தமிழ்நாட்டில் உண்டு.
அதன் பெயர் "நாடி சாஸ்திரம்"
அதை "ஏடு பார்த்தல்" என்றும் அழைப்பர்.

ஏனெனில் அந்த நூல்கள் பாடல்களின் வடிவில் பனை ஓலையால் ஆன ஏட்டுச ்சுவடிகளில ்எழுதப்பட்டிருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரிஷிகளும் சித்தர்களும் எதிர்காலத்தில் வாழப்போகும் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றியும் அவர்களின் ஜாதக அமைப்புகளைப் பற்றியும் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றியும் அந்த ஏடுகளில் எழுதி வைத்திருக்கின்றனர்.

குறிப்பிட்ட மனிதனின் பெயர், ஊர், பெற்றோர், உருவ அமைப்பு, முதற்கொண்டு அந்த ஏடுகளில் காணப்படும்.

தமிழ்நாட்டில் வழங்கும் நாடிகளில் "காகபுசுண்டர் நாடி", கெளசிக நாடி, "சப்தரிஷி நாடி", அகத்தியர் நாடி,போன்றவை முக்கியமானவை.

"கேரள மணி கண்ட ஜோதிடம்" என்ற நூலுமுண்டு.வடமொழியிலே "பிருகுஸம்ஹிதை" என்ற நூலே பிரபலமாக உள்ளது.

நாடி சாஸ்திர நூல்களுக்கெல்லாம் முதல்வராக பிருகு முனிவரையே சிலர் சொல்லுவார்கள்.

தமிழகத்தில் சில இடங்களில் இன்றும்ஆயிரக்கணக்கில் நாடி ஜோதிட ஏடுகள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் பல அழிந்துவிட்டன. மேலும் பல மறைந்து போயின. தற்சயம் மிகவும் பிரபலமானவை சென்னையில் உள்ள காகபுசுண்டர் நாடியும் வைத்தீஸ்வ்ரன்கோயில், திருவானைக்கா ஆகிய இடங்களில் உள்ள கெளசிக நாடியும்தான்.வைத்தீஸ்வரன் கோயிலில் அகத்தியர் நாடியும் இருக்கிறது.

இப்போது சிறிது "Theory" (Want to skip?)

பழந்தமிழ் நூல்களில் "கணக்கதிகாரம்"என்றொரு நூலுண்டு. அதில் பல கணித விதிகளும், சித்தாந்தங்களும் பாடல்கள் உருவில் விளங்கும்.

ஒரு பலாப்பழத்தில் எத்தனை சுளைகள்இருக்கின்றன என்பதனை அதன் காம்பைச் சுற்றியுள்ள முட்களின் எண்ணிக்கையை வைத்துக் கணக்கிட்டு அறிந்துகொள்ளும ்முறையை ஒரு பாடல் கூறுகிறது:

"பலவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை".


('மோனை முட்டுகிறதே, எதுகை எகிறுகிறதே, தளை தட்டுகிறதே?' என்றெல்லாம் என்னைக் கேட்காதீர்கள். சத்தியமாக நான் எழுதவில்லை).

பலாப்பழத்தின காம்பைச் சுற்றிலுமுள்ள முட்களை எண்ணி, அவ்வெண்ணிக்கையை ஆறால் பெருக்கி வரும் தொகையை ஐந்தால் வகுத்தால் வருவதுதான் அப்பழத்தினுள் இருக்கும் சுளையின் எண்ணிக்கை.

இப்போது ஒரு சந்தேகம்.

சுளையின் எண்ணிக்கையை வைத்து முட்கள் தோன்றினவா?
அல்லது முட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுளைகள் எற்பட்டனவா?

விண்ணில் உள்ள கோள்களின் நிலைகளுக்கு ஏற்ப உலகில் நிகழ்வுகள் நடை பெறுகின்றனவா? அல்லது அந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப கோள்கள் அந்தந்த நிலைகளில இயங்குகின்றனவா?

காரணத்தின் விளைவாகக் காரியமா?அல்லது காரியத்துக்கேற்ற காரணங்கள் அதற்கு முன்னதாகவே தோற்றுவிக்கப் பட்டுவிட்டனவா?

மகாபாரதத்தில் துரியோதனன் இடதுதொடையில் அடி பட்டு இறந்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு. கதையின் போக்கில் அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றி ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, இணைந்து, கதையின் முடிவில் பீமனுடைய கதாயுதம் துரியோதனின் தொடையைப் பிளப்பதில் முடிகிறது.

துரியோதனன் இடது தொடையில் அடி பட்டு இறப்பது என்பதைக் காரியமாகக் கொண்டோமானால், பாஞ்சாலியின் சபதம், பீமனின் சூளுரை, முனிவர்களின்சாபம், தாய் காந்தாரி கொடுக்க முயன்ற பாதுகாப்பு முயற்சியின் தோல்வி போன்ற காரணங்கள் ஆங்காங்கு தோற்றுவிக்கப்பட்டு விடுகின்றன.அவை ஒன்றுடன் ஒன்று சூட்சுமமான முறையில் தொடர்பு கொள்கின்றன.

நிகழ்ச்சிகளீன் போக்கைத் தன் வசமாக்கிக் கொள்கின்றன.சா¢யான தருணத்தில் அவை இணைந்து அவற்றின் ஆற்றலை வெளிப்படுத்திக் காரியத்தைத் தோற்றுவிக்கின்றன.

மகாபாரதக்கதையில் துரியோதனின்இறப்பு இன்றியமையாதது; கட்டாயம் நிகழவேண்டியது; தவிர்க்க முடியாதது; வேறு வழியில்லை.

"அவனுடைய இறப்பு எனப்படும் 'கட்டாயம்', நிச்சயமாக நிகழவேண்டி, காரணங்கள் தோன்றின", என்று வைத்துக் கொண்டோமானால், காரியத்தின் கருப்பொருள் முன்னதாகவும், காரணங்கள் பின்னதாகவும் உருவாவதைக் காணலாம்.

கொடியசைந்தும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?


ஆயிரத்தைந்நூற்று ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் சுவாங் சூ நகரில் ZEN பெளத்தமதப்பேரவை ஒன்று நடந்தது. தலைமை குருக்கள் மஹா பரிநிர்வாண சூத்திரத்தை விளக்கிக்கொண்டிருந்தார். அவ்வமயம் அங்கு தொங்கிக் கொண்டிருந்த கொடியன்று அசைந்தது.

அதைக் கண்ட புத்த பிக்குகளுக்கு மேற்கூறிய சந்தேகம் வந்தது. அதன் தொடர்பாக வாக்குவாதமும், அதன் விளைவாகப் பொரியதொரு ஆர்ப்பாட்டமும் நிகழ்ந்தன.

இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் ஒழுங்குமுறையும நியதியும், கட்டுக்கோப்பும் விளங்குகின்றன. இதையே "Cosmic Order" என்று கூறுவார்கள்.இதில் விளங்கும் அனைத்துப் பொருள்களும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு நியதிக்குட்பட்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக விளங்குகின்றன.

இந்த நியதி கெட்டால்தான் "மகாப்பிரளயம்" எனப்படும் "Chaos" ஏற்படும்.

இந்த மாதிரி நிர்ணயிக்கப்பட்ட, நிச்சயமான நியதிகள் இருப்பதால்தான் "Goddoes not play dice with the Universe", என்று Einstein கூறினார்.

காலதத்துவத்தின் அமைப்பே விசித்திரமானது.இதன் ரகசியங்கள் பலவற்றை நம்முடைய பழைய சாஸ்திரங்களில் நிறையவே காண முடிகிறது. மேல் நாட்டறிஞர்கள் இதைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து வருகிறார்கள்.ஆனால் அவர்களில் மிகச்சிலருக்கே நம் சாஸ்திரங்களில்காணப்படும் நுட்பங்களில் சில தொரிந்திருக்கின்றன.

இம்மாதிரி ஆய்வில் இந்தியர்கள் ஈடுபட்டால்தான் பெரும்பலன் ஏற்படும். அதிலும் யாராவது தற்காலச்சித்தர் அல்லது ரிஷி இதில் ஈடு பட்டார்களானால் மிகவும் மேன்மையாக இருக்கும்.

இதையெல்லாம் ஏன் வெட்டித்தனமாகச் செய்து கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணமே நம்மவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.ஆகையால்தன் ஆய்வு செய்பவர்களும் குறைவு; ஆதரவும் குறைவு.
ஆகவேதான் வசதியான சூழ்நிலைகளில்இருக்கும் போலிகள் அருமையாக சரடு விட முடிகிறது.



நாடி ஜோதிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 4:17 am

காலதத்துவத்தின் ரகசியங்களையும் "CosmicOrder" எனப்படும் பிரபஞ்ச நியதியையும் தன்னுள்ளடக்கிக் காட்டும் நூல்களில் நாடி சாஸ்திரமும் அடங்கும்.Thank you for your perseverance. We go to hard facts.

நாடி ஜோதிடத்தில் கெளசிகம்,அகத்தியம்,சப்தரிஷி என்றெல்லாம் பெயர்கள் கொண்ட பல பிரிவுகள் உள்ளன என்று ஏற்கனவே கூறியுள்ளேன்.

இவற்றுள் கெளசிகம், அகத்தியம் போன்ற நாடி நூல்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களின் கைரேகைகளை அடிப்படையாகக் கொள்கிறார்கள்.ஆனால் சப்தரிஷி நாடியிலோ குறிப்பிட்டநபரின் ஜனன ஜாதகத்தில் கண்டுள்ள ஜன்ம லக்கினத்தையும் மற்ற கிரகங்கள் நின்ற நிலைகளையுமே எடுத்துக் கொள்கிறார்கள் இவற்றின் அடிப்படையில் அவரவருக்குரிய நாடி நூல்களை எப்படித் தேடிக் கண்டு பிடிக்கிறார்கள் என்பதைப் பிறகு சொல்கிறேன்.

அதற்கு முன் ஒரு கேள்விக்கு பதில் கூறிவிடுகிறேனே!

ஒருவருக்கான நாடி நூல் இன்னொருவருக்குப்பொருந்த முடியுமா?

மனிதர்களின் கை ரேகைகளில் பல வகையான அமைப்புகள் காணப்படுகின்றன. எத்தனையோ வகையான ரேகை அமைப்புகளில் குறிப்பிட்ட சில ரேகைஅமைப்புகளை மட்டுமே நாடி சாஸ்திரத்துக்கு உரியதாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.இந்த சிறப்பு ரேகை அமைப்புகள் பதினொன்று இருக்கின்றன.

இவற்றை வைத்துத்தான் ஒரு குறிப்பிட்டநபருக்குரிய நாடி ஜோதிட ஏடு தேடப்படும். கோபுராங்கி,தனயோகம், புவிச்சக்கரம், சங்கு, தாமரை, போன்ற பெயர்களைஅவ்வமைப்புகள் கொண்டிருக்கின்றன. இந்த 11 வகையான ரேகை அமைப்புகளும் எந்த விதமான வரிசையில் அமைந்துள்ளன என்று பார்ப்பார்கள்.

உதாரணமாக இவை, தனயோகம், சங்கு- தாமரை - புவிச்சக்கரம்- என்றவாறோ, சங்கு- தாமரை- தனயோகம்- புவிச்சக்கரம் என்றவாறோ, கோபுராங்கி- சங்கு- தாமரை- புவிச்சக்கரம்- தனயோகம் என்றவாறோ, பல வகைகளில் வரிசையாக அமைய முடியும். இந்தத் தொடர்கள் வெவ்வேறு முறைகளில் ஒவ்வொருவருக்கும் அமைந்தி ருக்கும்.

இந்த இடத்தில் கணித சாஸ்திரத்தில்காணப்படும் சில விதிகளைப் பற்றிஉங்களிடம் கட்டாயம் கூறியாக வேண்டியிருக்கிறது.

கணித சாஸ்திரத்தில் "Permutation and Combination" என்றொரு விதியுண்டு. இரண்டு எண்களை நான்கு விதமாக இரண்டிரண்டாக வரிசைப்படுத்தலாம்.

1,2 என்னும் இரண்டு எண்களை எடுத்துக்கொள்வோம். 1,2; 2,1; 2,2; 1,1 என்றவாறு நான்கு வகைகளில் இவை அமையும்.

மூன்று எண்களோ 3X3X3 =27 வகைகளில் அமையும்.
இப்போது 1,2,3யை எடுத்துக் கொள்வோம்.
1,1,1; 1,1,2; 1,1,3; 1,2,1; 1,2,2; 1,2,3; 1,3,1; 1,3,2; 1,3,3.....etc., etc., என்றவாறு
3,3,3, வரை 27.
.நான்கு எண்களோ 4X4X4X4=256 வகைகளில் அமையும் ..
இம்முறைக்கு தமிழ் மந்திர சாஸ்த்ரத்தில் "மாறல்" என்று பெயர். பஞ்சாட்சர மாறல், சடாட்சர மாறல் என்றெல்லாம் சில மந்திர அமைப்புகள்இருக்கின்றன.

தமிழ் இலக்கண விதிகளில் கூட இந்த Permutation/Combination பயன்பட்டிருக்கிறது.
தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் செய்யுளியலில் 357, 406, ஆகிய பாடல்களில் பார்த்தீர்களானால் தொல்காப்பியரேகூட இதைக் கையாண்டிருப்பது தெரியும்.

நமது இந்திய சாஸ்திரிய சங்கீதத்திலும் கூட Permtation/Combination அமைந்துள்ளது. ராகங்களில் ஆரோகண அவரோகணக் கிரமத்தில் அமைந்துள்ள ஸ்வர வரிசைகளை கற்பனையைப் பயன்படுத்தி Permutation/Combination விதியின்படி விரிவாக்கிக்கொண்டே போகலாம்.ஒரே ராகத்தை மணிக்கணக்கில் பெரிய வித்வான்கள் விஸ்தாரமாகப் பாட முடிகிறது அல்லவா?

வேதங்களை ஓதும் முறைகள் சில இருக்கின்றன. அவற்றைப் "பாடங்கள்" என்று கூறுவார்கள்.சிகா பாடம், ஜடாப்பாடம், கனப்பாடம்,முதலிய எட்டுவகைகள் இருக்கின்றன."அஷ்ட விக்ருதிகள்" என்று இவற்றைக் கூறுவார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

மனிதர்களிடையே காணப்படும் அந்த பதினோரு வகையான ரேகை அமைப்புகளை Permutation/Combination படி
11X11X11X11X11X11X11X11X11X11X11 = 285,311,670,611
வெவ்வேறு வரிசைகளாக ஏற்படுத்தமுடியும்.
Theoretically, இந்த உலகின் ஜனத்தொகை இந்த எண்ணிக்கையை மீறும்போதுதான் ஒரே மாதிரியான ரேகை வரிசைகள் கொண்ட இரண்டு பேர் இருக்க முடியும். அப்பொதுதான் கலிமுற்றும்.

பூபாரம் அதிகரித்துவிடும்.

28531 கோடியை ஜனத்தொகை எட்டும்வரைகாத்திருந்து பார்ப்போமே?
Cloning முறையால் ஏற்படுத்தப்படும் மனிதப்பிரதிகளுக்கு( அச்சுபிழையல்ல) ஒரே மாதியான ரேகை அமைப்புகள் இருக்குமா?

Again ,theoretically possible.

அந்த அளவுக்கு மனித இனம் தன்னையே செயற்கையாகப் படைத்துகொள்ள முடியும்போது கலி முற்றியதாகத்தானே அர்த்தம்? இதுவும் பண்டைய சாஸ்திரங்களில் சொல்லப்படுவதுதானே?

இந்த இடத்தில் கொஞ்சம் diversion. உலகில வியாபகமாகத் தமிழர்கள் பரவி விட்டதால் மற்றவர்களைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வது நல்லதுதானே?

Permutation/Combination விதியைத் தன்னகத்தே கொண்ட மற்றொரு சாஸ்திரம்" யீத்சிங்"
Iching; சீனதேசத்துச் சோதிடம். "யீ" என்றால் மாறுதல். "சிங்" என்றால் நூல்.

அவ்வப்போது ஏற்படும் மாறுதல்களை முன்கூட்டியே அறிவிப்பது இந்நூல். யீச்சிங்கைப் பயன்படுத்தி தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை நடப்புகளைஅறியலாம். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் எவ்வித நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதற்குரிய ஆலோசனைகளையும் இந்நூலின் மூலம் பெறலாம். New York Stock Exchange இல் இந்த முறையே பிரபலமாயிருக்கிறது.

("அப்படியானால் "Feng Shui" என்றால் என்ன?" என்று கேட்கப்போகிறார்கள் .)

ஒரு நாடு அல்லது சமுதாயத்தின் எதிர்காலத்தையும் அறிந்து கொள்ளலாம். உலகின் நடப்பையும்தெரிந்து கொள்ளலாம். பண்டைய சீன ஞானிகளும் இதையெல்லாம் அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர்களிடம்கூட தமிழ் நாடி சாஸ்திரநூல்களுக்கு இணையானவை கிடையாது. திபெத்நாட்டில் வழங்கிவரும் Akashik Records என்பவையும் ஒருவகையான நாடி சாஸ்திரம்தான் என்று சொல்வார்கள்

யீத்சிங்கில் Permutation மட்டுமல்லாது BinarySystemமும் இருக்கிறது.

இந்திய ஜோதிடத்தில் புலமை வாய்ந்தவர்கள் யீத்சிங் போன்ற முறைகளையும் ஆராயவேண்டும்.

தமிழ்நாட்டில் பிரபலமாக விளங்கும் நாடி நூல்களில் வைத்தீஸ்வரன் கோயில், திருவானைக்கா முதலிய ஏடுகளே முக்கியமானவை. குன்றக்குடியிலும் ஏடுகள்இருப்பது பலருக்குத் தெரியாது.

ஒரு குறிப்பிட்ட நப்ன் நாடி ஏடுகள்யாரிடம் இருக்கின்றன என்பதைத் தேடித்தான் கண்டுபிடிக்க முடியும். பலருக்குக் கிடைக்கமாட்டா. சிலருக்கு மட்டுமே அதிகத் தேடல் இல்லமலேயே கிடைக்கும்.

ஏடுகளைக் கண்டு பிடிக்கச் சில முறைகள்இருக்கின்றன.

சப்தரிஷி நாடிக்கு ஜனன லக்னமே அடிப்படை. கெளசிகம், மச்சேந்திரம், முதலிய ஏடுகளில் கைரேகைகளைப் பயன்படுத்துகிறார்கள்.



நாடி ஜோதிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 4:23 am

குன்றக்குடி முறையை விளக்குகிறேன்.

ஏடு பார்க்க விரும்பும் நபர், ஜோதிடரை சந்திக்கும் நேரம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

விநாயகர் வழிபாட்டுடன் ஜோதிடர்,நபரின் கை ரேகை அமைப்புகளை வரிசைக் கிரமமாகக் குறித்துக் கொள்வார். இவ்வாறு பதினோரு வகையான ரேகை அமைப்புகளையும் குறித்துக் கொண்ட பின்னர் ஏடு தேடல் ஆரம்பமாகும்.

உதாரணமாக முதலாவது ரேகை அமைப்பு கோபுராங்கியாகவும், இரண்டாவது தனயோகமாகவும், மூன்றாவது புவிச்சக்கரமாகவும், நான்காவது சங்கு, ஐந்தாவது தாமரை என்றும் வைத்துக் கொள்வோம்.

முதலமைப்பு கோபுராங்கியாக உள்ள சுவடிக்கட்டுகளிலிருந்து தனயோக ரேகைப்
பிரிவை எடுப்பார்கள். கோபுராங்கி-தனயோகச் சுவடிகளில ்மூன்றாவது அமைப்பாக விளங்கும் புவிச்சக்கர ரேகை ஏடுகளை எடுத்துவிடுவார்கள். அதிலேயே சங்கு சுவடிகளை ப்பிரித்தபின்னர், அவற்றுள் தாமரை சுவடிகளைத்தேடுவார்கள்.

Internetடில் surfing செய்து உள்ளுக்குப் போகும்போது இதைத்தானே செய்கிறோம்?

கடைசியில் அவர்கள் தேடிய sequence வந்துவிடும்.கிடைக்காமல் போய்விடுவது அதிகம்.

ரேகை அமைப்புகளின் வரிசைக்கேற்பஏடுகளில் காணப்படும் ரேகை அமைப்பு வரிசை ஒத்திருக்கவேண்டும்.அப்படி இல்லையெனில் தேடி வந்தவர் திரும்பவேண்டியதுதான்.

அவ்வாறு ஏடு அமைந்துவிட்டால், நல்ல நேரம் பார்த்துப் படிக்க ஆரம்பிப்பார்கள்........



முழுவதும் பாடல்கள் ரூபத்திலேயே ஜோதிடக் குறிப்புகள் அமை ந்திருக்கும்.
ஜாதகருடைய பிறந்த வீடு, ஊர், மூதாதையர் விபரம்,உறவு,சொந்தப்பெயர், மனைவிமக்கள், சொத்துசுகம், குலம, கோத்திரம், முதலியவை சொல்லப்பட்டிருக்கும்.

உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.

"தலைவாசல் உத்தரமாகும்
சாற்றுவோம் கீழ்மேல்வீதி
நீலமாய்த் தந்தி யீசன்
நிகழ்த்துவோம் கீழ்பாலாக"

வடக்குப் பார்த்த வாசலுடைய வீடு;
கிழக்குமேற்காக ஓடும் வீதி;
கிழக்கினில்சிவன் கோயில்.

"சங்கையாய்ச் சிற்றூர்தன்னில்
தந்தையின் இல்லம் சொன்னோம்
கங்கையின் குலத்திலேதான்
காவலனுதிப்பானாகும்"

சிறிய கிராமம்; வேளாள ஜாதி

"கைமுதல் அதிகம் இல்லான்
கரமதில் கத்தரி ரேகை
செய்தொழில் கிருஷி என்றோம்
தீரமா நெஞ்சுமாவான்
இக்குணமுடையானுக்கு
இவனுமே அஞ்சாம் ஜென்மம்
மிக்கவே யுதிப்பானாகும்
விளம்புவோம் அவன் குணத்தை"

அதிக பணமில்லாமலும், கையினில் கத்தரி அமைப்புள்ள ரேகையுடனும் ¨ தீர மனதுடைய விவசாயிக்கு ஐந்தாவது பிள்ளையாக ஜாதகன் பிறந்திருப்பான்.

இவ்வாறு ஒருவருடைய ஏட்டில் காணப்பட்டது. சரி தான் என்று ஒப்புக் கொண்டார்.

இப்படியே அந்த ஜாதகரின் அம்சங்கள்அனைத்துமே சொல்லப் பட்டிருக்கும். இவை ஒவ்வொன்றையும் ஜோதிடர் சரி பார்த்துக் கொண்டே வருவார். சில விவரங்கள் சரி யாக இராவிட்டால் மேற்கொண்டு அந்த ஏடு படிக்கப்படமாட்டாது.

எல்லாமே சரியாக இருந்தால், சென்றபிறவியின் கூறுகளைப் பற்றி சொல்லப்படும். தற்சமயம் உள்ள நிலவரங்களைச் சொல்வார்கள்.இதெல்லாம் பதினொன்றாம் காண்டத்தில் காண்ப்படும்.

ஏடு பார்க்கும் சமயத்தில் ஏதாவது சங்கடங்கள் இருந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுவார்கள்.

சில பாடல்கள் நேரடியான அர்த்தத்தைக்கொடுக்கும்; சில பாடல்களோ சூட்சுமமாக அல்லது சூசகமாக உரைக்கும்.

"சகரத்தில் ஆறொன்பாந்தான்
இவனது நாமந்தானே"
என்றொரு பாடலில் காணப்பட்டது.
சகர வரிசையில் ஆறாவது எழுத்து "சூ";
ஒன்பதாம் எழுத்து "சை"
அந்த ஜாதகருடைய பெயர் "சூசை" என்பதாகும்.
'வங்கத்தின் மீது சென்று
வரவதைக் காணுவானே"

என்று ஒரு பாடலில் இருந்தது. அதற்கு அர்த்தம் கூறியவர் "வங்கம்" என்றால் வங்காளம் என்று அர்த்தப்படுத்திக் கொண்டு ஜாதகர் கல்கத்தா சென்று சம்பாதிப்பார் என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த நபரோ கல்கத்தா செல்லவில்லை.

கப்பலொன்றில் சமையல் வேலை பார்த்தார். "வங்கம்" என்ற சொல் கப்பலையும் குறிக்கும் என்பதைத் தமிழ்ப் புலவர் ஒருவர் மூலம் பின்னரே அறிந்தனர்.

நாடி ஜோதிடத்தில் போலிகள் நிறைய உண்டு. அதில் நம்பிக்கையுடையவர்கள் ஏமாறும் பொருட்டு போலியான ஏடுகளும் தயாரி க்கப் படுவதுண்டு.

பேரறிஞர் Dr.A.V. ஜெயச்சந்திரன் செய்த பல ஆராய்ச்சிகளில் நாடி ஜோதிடமும ஒன்று. அவருடைய தொடர்ச்சியான நீண்ட கால ஆய்வுகளை அவருடைய மரணமே நிறுத்தி வைத்தது. அவருடைய ஆய்வுக்குறிப்புகள் என்னவாயின என்றும் தெரியவில்லை.

நாடி ஜோதிடத்தின் மூலம் தனி நபர்களின் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே அறிந்து கொள்ளமுடியும் என்று நினைத்து விடாதீர்கள்.

நாடுகளின் போக்கையும் உலகின்நிலைமையையும்,எதிர்காலத்தைப் பற்றியும்கூட எழுதி வைத்திருக்கிறார்கள்.

Nostradamus தீர்க்கதரிசனங்கள், ஐஸேயா, எஸெக்கியெல் போன்றோரின் தீர்க்கதரிசனங்களும் அவ்வகைப்பட்டனவையே.

ஒரு உண்மையான விசித்திரமான கதையுடன் முடிப்போம்.....

முப்பத்தாறாண்டுகளுக்கு முன் மதுரை ஆதீனத்தின் முந்திய ஆதீன கர்த்தராகிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் என்னிடம் கூறிய உண்மைச் சம்பவம் இது.

மதுரையைச் சேர்ந்த ஒரு நபர் நாடி ஜோதிடம் பார்ப்பதற்காக தஞ்சை மாவட்டத்தில் ஓரிடத்திற்குச் சென்றார்.அவருடைய ஏடு கிடைத்தது. ஜோதிடர் படித்துக் கொண்டே வந்தார். எல்லாம் சரி யாகவே இருந்தது. திடீரென்று பாதியிலேயே நின்றுவிட்டது. ஏனெனில் அதற்கு மேல் தொடர்ச்சியாக இருக்கவேண்டிய ஏடுகளைக் காணோம்!

ஜோதிடர் கூறினார்.

"இந்த ஏடுகள் என்னுடைய மூதாதைகளுக்குச் சொந்தம். என் தந்தையாருக்குப் பிறகு நானும் என் தம்பியும் பாகப்பிரி வினை செய்து கொண்டோம்.அப்போது சரி பாதி ஏட்டுச்சுவடிகளை என்னுடைய தம்பி எடுத்துக்கொண்டான். இப்போது நான் படித்த சுவடியின் மீதிப் பாகம் என்னுடைய தம்பியிடம் இருக்கலாம். அவனிடம் சென்று பாருங்கள்.

தற்சமயம் அவன் கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருக்கிறான்.", என்று கூறி ஜோதிடர் தன் தம்பியின் விலாசத்தையும் கொடுத்தார்.

சில காலம் கழித்து மதுரைக்காரர், திருவனந்தபுரத்திற்குச் சென்றார்.

பாதி வழியில் ஒரு விபத்தில் அவர் இறந்து போனார். அவருடன் சென்ற நண்பர்தப்பினார். விடுபட்டுப் போன அந்த ஏடுகளில் என்னதான் இருந்தது என்பதைப் பார்க்க அவர் ஆர்வம் கொண்டார். ஆகையால் திருவனந்தபுரம் சென்று இளைய ஜோதிடரைச் சந்தித்து அவருடைய அண்ணன் கூறிய விபரங்களைச் சொல்லி அவர்கொடுத்த சுவடிக்கட்டின் முதல் பாகத்தின் ஏடுகளைக் கொடுத்தார்.

அவற்றை வைத்து மீதிப் பகுதியைத் தேடிக் கண்டு பிடித்து இளைய ஜோதிடர் படிக்கலானர்.
அப்பகுதியில் ஒரே ஓர் ஏடுதான் இருந்தது.
அதன் ஆரம்பத்தில் ஒரே ஒரு வாசகம் மட்டுமே காணப்பட்டது.
'மலையாள தேசஞ்சென்று
மரணத்தில் ஏகுவானே"

என்றிருந்தது!

சாகவேண்டிய தருணத்தில் அவர் மலையாளதேசம் செல்லவேண்டி யிருந்தது. ஏட்டைத்தேடி அவர் மலையாள தேசம் சென்றார்.

முழுச்சுவடியும் தஞ்சாவூரிலேயே இருந்திருந்தால் அவர் மலையாளம் சென்றிருக்கமாட்டார்.

ஏடு தேடும் நோக்கமே இல்லாமலிருந்திருந்தால் அவர் தஞ்சைக்கும் சென்றிருக்கமாட்டார்.

காரணம்/காரி யம் ஆகியவற்றிற்கிடையே எவ்வளவு சிக்கலாக தொடர்புகள்அமைந்துள்ளன , பார்த்தீர்களா!

நாடி ஜோதிடம் பார்க்கப்படும் அந்த கணம் வரையிலுள்ள இறந்த காலத்தையும்,நிகழ்காலத்தையும், உடன் நிகழப்போவதையும் கூட சரியாகக் கூறும்.

ஆனால், நீண்ட காலப்பலன்கள் அவ்வளவாகச் சரியாக இருப்பதில்லை.
நீண்ட காலப் பலன்களையும்கூட அந்தச் சுவடிகள் பெரும்பாலும் சொல்வது கிடையாது.
இதற்குத் தக்க காரணம் இருக்கிறது.

அது என்ன?

இக்கட்டுரையின் முடிவுரையாக இன்னொரு கேள்வியை உங்களிடம் போடுகிறேன்.

மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தின் அன்றைய பட்டத்திளவரசர் இன்றைய ராஜா என்னிடம் கேட்ட கேள்வி அது.

அந்த முஸ்லிம் இளவரசரி ன் மனைவியாகிய "கூப்புவான்" ஓர் அறுவை சிகிச்சையை முன்னிட்டு பெர்லிஸ் மாநில அரசினர்ப் பெரிய மருத்துவ மனையில் Royal Ward இல்இருந்தார்கள். அந்த மருத்துவ மனையின் Medical Superintendant- ஆக இருந்த சமயம் அது.

கூப்புவானுக்கு மயக்கமருந்து கொடுத்து அதன்பின் Follow up செய்ய Anaesthetic Specialist Dr.குமார் கெடா மாநிலத்திலிருந்துவந்திருந்தார். அவருடைய மனைவியும் ஒரு மருத்துவர்தாம். அவருக்கு Caesarean Section செய்து குழந்தையை எடுக்கவேண்டியிருந்தது.

அதைச் செய்வதற்கு நல்ல நேரமாகப்பார்த்துக் கொடுக்கும்படி கேட்டிருந்தார். நானும் அதனைக் கணித்துக் கொடுத்தேன்.
(இங்கெல்லாம் Elective Caesarean செய்ய இந்துக்கள் நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம். முடிந்தால் செய்வார்கள்.)
இதையெல்லம் கவனித்துக் கொண்டிருந்த இளவரசர் விபரம் கேட்டார்.

விளக்கினோம்.

அதற்கு அவர் சொன்னார்.

"எல்லாமே இறைவனின் சித்தப்படிதானே நடக்கிறது? மனிதனின் விதியும் இறைவன் நிர்ணயித்ததுதானே? அவ்வாறிருக்க, இந்த மாதிரியெல்லாம் செய்து, பிறக்கும் குழந்தையின் விதியை மாற்ற முயல்கிறீர்களா, அல்லது புதிதாகவே விதியை ஏற்படுத்தப் பார்க்கிறீர்களா?"

இப்படி நீங்கள் நேரம் வைப்பதுகூட இறைவனின் சித்தப்படியே நடப்பதாக இருக்கலாம் அல்லவா?"

இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு அதன்பேரில் நாடிஜோதிடம் பற்றி சில கேள்விகளை தமிழ் இணைய மடற்குழுவின் உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் அடிப்படையில் எழுந்த உரையாடலை அடுத்த பாகத்தில் காணலாம்.



நாடி ஜோதிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 4:26 am

1997-ஆம் ஆண்டு தமிழ் இணையத்தில் Tamil.net மடற்குழுவில் நான் எழுதிய நாடி ஜோதிடம் நீள்கட்டுரையின் பேரில் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றிற்கு நான் தந்த பதில்களும்:

Dr. கண்ணனின் கருத்துக்கள் :
.......... காலம், வெளி (time and space) என்பதை காலம் காலமாக நம் முன்னோர்கள் வித்தியாசமாகப் பார்த்து வந்திருக்கின்றனர். விளைவுதான் மகாபாரதம் போன்ற கதைக் களஞ்சியங்கள்..........

.............அந்த மதுரைக்காரர் கதையில் எப்படி நாடி ஜோஸ்யரின் கதையும் பிணைந்துள்ளது பார்த்தீர்களா? (அவர்கள் பாகப் பிரிவினை செய்யாவிட்டால், பாவம் மதுரைக்காரர் கேரளா செல்லவேண்டிய அவசியமே இல்லாது இருந்திருக்கும். அவர் சாவுக்கு இப்போது யார் காரணம்? நாடி ஜோஸ்யரா? இல்லை நாடி ஜோஸ்யமா? எவ்வளவு சிக்கல் பாருங்கள்!)

ஜேய்பி : ஆமாம்.

தென்னெமரிக்காவில் Aztec Empire ஓங்கியிருந்த நேரம். கடைசிப் பேரரசனாகிய Montezuma ஆண்டு கொண்டிருந்த சமயம்.

அவர்களுடைய பெருந்தேவனாகிய Quetzalcoatal மீண்டும் அவர்களிடையே தோன்றப்போவதாக aztecக்குகளின் நாடி சாஸ்திரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே சொல்லியிருந்தது.
தேவன் வருகை கி.பி.1519 இல் நிகழ வேண்டும். Quetzalcoatal வெண்ணிறம் படைத்தவன்; பொன்னிறக் கூந்தல்; உயரமானவன்; நீலவண்ணக்கண்ணன்.

கி.பி.1519 இல் ஸ்பெயின் நாட்டுநாடுபிடிக்கிவீரன்(நாடுபிடுங்கிவீரன்?) Hernando Cortez கியூபாவிலிருந்து புறப்பட்டு வந்து Tabasco வில் கரையிறங்கினான்.

Cortezஸின் உருவ அமைப்பும் தேவனின் உருவத்தை ஒத்திருந்தது. வருடமும் ஒத்திருந்தது.

தேவன் வருகையை நம்பியதால் Montezuma போரிடாமல் விட்டு விட்டான். 553 வீரர்களையும் 16 குதிரைகளையும் தவிடுபொடியாக்க Montezumaவுக்கு எவ்வளவு நேரம் பிடித்திருக்கும்?

Montezuma மட்டும் நாடி சோதிடத்தை நம்பியிருக்காவிட்டால்...? அல்லது அந்த விஷயமே அவனுக்குத் தொரியாமல் இருந்திருந்தால்...? அமெரிக்காவின் விதி மாறியிருக்குமோ?"

தனி மனித விதியில் இறைவனின் சித்தம் என்ன?

ஜேய்பி : "இதைப் பற்றி பின்னால் சேர்த்துச்சொல்லியிருக்கிறேன்."

நாம் கனவு காணும் போது கனவில் இருக்கும் நாம் நிஜமா, இல்லை கனவு காணும் நபர் நிஜமா? இல்லை கனவுதான் நிஜமா?

கனவை உருவாக்கும் இயக்கம் நிஜமா? இதில் எது எதைச் சார்ந்தது? எது முதலில்தோன்றுகிறது? எது எதின் பிரதிபலிப்பு? மூலம் உண்டா? கண்ணாடி உண்டா?

ஜேய்பி : "நீங்கள் நிறைய Zen படிப்பீர்கள் போலிருக்கிறது."

மணிவண்ணனின் கேள்விகளில் சில:

1. இந்த ஓலைகள் எப்போது எழுதப் பட்டன?

முதன்முதலில் எப்போது எழுதப்பட்டன என்பது யாருக்கும் தெரியாது. அந்த ஓலைகளைப் பரிசீலிக்கும்போது, எழுத்துக்களைப் பார்க்கும்போது அவை சுமார் 600 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவையாகத் தோன்றுகின்றன. ஆனால் இந்தப் பிரதுகளின் மூல ஓலைகள் எவ்வளவு பழமை வாய்ந்தவை என்பது தெரியாது.

சுவடியின் சொந்தக்காரர் கூறினார். பழைய காலத்தில் சுவடிகளின் காப்பாளர்கள் அவ்வப்போது ஓலைகளைப் பரிசோதித்துப் பார்த்து, சிதிலமடைந்த ஓலைகளைப் புதிதாக வேறு ஓலைகளில் பிரதி செய்து கொண்டு மூல ஓலையை நெய்யில் தோய்த்து வேள்வியில் இட்டுவிடுவார்களாம்.

ஒரே ஓலையின் மூன்று பிரதிகளை நான் பார்த்திருக்கிறேன்.மிகப் பழமையானது, சிறியதாகவும், பொடியான நெருக்கமான எழுத்துக்களைக் கொண்டதாகவும் இருந்தது.

அந்த சுவடிக்காரர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.அவற்றின் வயதை அறுதியிட்டுக் கூற இயலவில்லை.


>2. (Carbon dating) கரிமூலக்கணக்குப் படி இந்த ஓலைகள் எல்லாம், ஒரே நூற்றாண்டில் எழுதப்பட்டவையா என்ற ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளதா?

இந்த வகையில் எந்த ஓர் ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை.


>3. அவற்றில் உள்ள தமிழ் வார்த்தைகள் எப்போது வழக்கத்தில் இருந்தன?

இப்போது இருப்பதைப்போலவே பண்டைக்காலத்திலும் ஒரே சமயத்தில் பல மாதிரியான தமிழ் இருந்திருக்கிறது.
பொதுவாகப் பேச்சுத்தமிழ் ஒன்றும், எழுதுதமிழ் ஒன்றும் இருக்கும். இதனை "Diglossi" என்று கூறுவார்கள்.

எழுது தமிழிலும் பல தினுசுகளைப் பார்த்திருக்கிறேன்.
இலக்கியத் தமிழ் ஒன்று இருக்கும். கல்வெட்டுக்களில் காணப்படும் தமிழ் வேறு வகையானதாக இருக்கும். சித்தர் பாடல்கள், சோதிட, வைத்திய, சில்ப நூல்கள் முதலியவற்றில் வேறு வகையான தமிழ் இருக்கும். அன்றிலிருந்து இன்றுவரை சித்தர் வழங்கிய மொழியில் மாற்றமே இல்லை. ஆகவேதான் சித்தர் பாடல்கள் மிகவும் பிற்காலத்தனவாக இருக்கும் என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது.

ஓர் உதாரணம்,
பன்னிரண்டாம் நூற்றாண்டில் பன்னிரு திருமுறைகளின் இறுதி அங்கமாகிய பெரிய புராணம் இயற்றப்பட்டுவிட்டது. அதற்கு முன்னரேயே பதினோரு திருமுறைகளையும் அதிகாரபூர்வமாகத் தொகுத்துவிட்டார்கள். அவற்றில் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரமும் அடங்கும்.

பத்தாம் நுற்றாண்டின் இறுதியில் நம்பி ஆண்டார் நம்பி பதினோரு திருமுறைகளைத் தொகுத்துவிட்டார். கடைசியாகக் கருவூர்த்தேவர் பாடிய பாடல்கள் தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஆகியவற்றிற்காகப் பாடிய பாசுரங்கள். ஆகவே 1030-க்கும் முன்பாகவே பதினோரு திருமுறைகளும் பூர்த்தியாகிவிட்டன.
நம்பி ஆண்டார் நம்பி காலத்துக்கும் முன்பே திருமந்திரம் இருந்திருக்கிறது.

திருஆவடுதுறையில் ஒரு பீடத்தின் கீழிருந்து திருஞானசம்பந்தரால் கண்டெடுக்கப் பட்டது, திருமந்திரம். அந்த இடத்தில் தெய்வீகத் தமிழ்மணம் கமழ்ந்ததை வைத்துதான் கண்டுபிடித்து எடுத்தாராம்.
திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவருக்கும் முற்பட்டதாகத் திருமந்திரம் விளங்குகிறது. மூவர் தேவாரத்துக்கும் முற்பட்ட நூல் திருமந்திரம்.

ஆனால் பார்க்கும்போது, ஏனைய திருமுறை இலக்கியங்களினின்று சொல்லமைதியிலும், Stylistics, phraseology, போன்றவற்றிலும் திருமந்திரம் பெரிதும் மாறுபட்டிருக்கிறது. பார்க்கும்போது contemporary style ஆகத்தோன்றும்.

ஆக சொற்களை வைத்துப் பார்த்தோமானால் திருமந்திரம் மிகப் பிற்கால நூல்போலத்தான் தோற்றமளிக்கும். திருமந்திரத்தின் மரபுவழி வரலாற்றைப் பார்த்தோமானால், அது மிகப் பழமையானதாக விளங்கும்.

இதே மாதிரி சொல்லமைதி, stylistic, கொண்டவைதான் நாடி ஜோதிட ஏடுகள். (அதாவதுauthentic ஏடுகள்) ஆகையால்தான் அவற்றின் வயதை இந்தமாதிரி முறைகளால் கண்டுபிடித்து விட முடிவதில்லை.

>4. எல்லா ஓலைகளும் ஒரே நேரத்தில் எழுதப் பட்டனவா?

அப்படித் தெரியவில்லை.
பல ரிஷிகள் முனிவர்கள் சித்தர்களின் பெயரால் இவை நிலவுகின்றன. மேலும் எனக்குத் தெரிந்து மூன்று வெவ்வேறு முறைகள் நாடிஜோதிடத்தில் இருக்கின்றன.

ஆகவே, logically, இவை ஒரே நேரத்தில் இயற்றப்பட்டிருக்கமுடியாது.

>5. எந்த ஓலை மெய் எது பொய் என்று எவ்வாறு அறிய முடியும்?

அவற்றில் கூறியுள்ள விவரங்களிலிருந்து அறிய முடியும். சோதிடர்கள் கையாளும் methodology யிலிருந்தும் அறிந்துகொள்ள முடியும்.

>6. இவை மனிதர்களுக்கு மட்டும் பொருந்துமா அல்லது எல்லா உயிரினங்களுக்கும் (நாய், பூனை, பசு, ஆடு,
கோழி...) வருங்காலம் வரையப் பட்டுள்ளதா?

இதுவரை கிடைக்கும் ஏடுகள் மனிதப்பிறவியைப் பற்றியவையாகத்தான் இருக்கின்றன.

>7. எல்லா உயிரினங்களின் வருங்காலமும்பிறக்கும் முன்பே நிர்ணயிக்கப் பட்டிருந்தால், வாழ்க்கையின் பொருள் என்ன?

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

கதி.....
விதி.....

மணி! இப்போது சொல்லுங்கள்.

கதியென்றால் என்ன?
விதியென்றால் என்ன?
இரண்டும் ஒன்றேதானா,
அல்லது
வெவ்வேறா.......?

Dr.கண்ணனின் கேள்வி:

> தனி மனித விதியில் இறைவனின் சித்தம் என்ன?

> எல்லா உயிரினங்களின் வருங்காலமும்பிறக்கும் முன்பே நிர்ணயிக்கப் பட்டிருந்தால், வாழ்க்கையின் பொருள் என்ன?

>8. தனி உரிமை (free choice) இல்லாத உயிர்கள் எவ்வாறு பிறப்பு/இறப்பு என்ற சுற்று வட்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்?

>9. ஒரு மூலக்கூற்றின் (molecule) மின்னணுவின்(electron) இருப்பிடத்தைக் கூடத் திட்ட வட்டமாக நிர்ணயிக்க முடியாது என்று Heisenberg Uncertainty principle கூறும் போது, மானிடர் யாவரின் பிற்காலத்தைத் திட்ட வட்டமாகச் சொல்ல முடியும் என்பதற்கு என்ன நிறூபணம் காட்ட முடியும்?

இந்தக் கேள்விகளுக்கு நேரடியாகவும் தனியாகவும் என்னால் கூற இயலவில்லை.

முடிந்தவரையில் எல்லாவறறுக்கும் சேர்த்து பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.



நாடி ஜோதிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 4:29 am

நம்முடைய சாஸ்திரங்கள் கூறியிருப்பதன் சுருக்கம் இதுதான்:
உயிர்களின் பிறவிக்கு மூல காரணம் -பிராரத்தம், சஞ்சிதம் ஆகாமியம் என்னும் மூவகையான வினைகள்தாம். இவற்றின் விளைவாகவே பிறவியும் அப்பிறவியில் உள்ள விதியும் நிர்ணயிக்கப்படுகின்றன.

இவையெல்லாம் ஒரு Grand Design, ஒரு Master Plan இன் உட்கூறுகளாக, ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக, பின்னிப் பிணைந்து விளங்கும்.

ஒரு Master Plan, Grand Design என்று இருந்தால் ஒரு Executor, Orchestrator இருந்தாகவேண்டுமே?

ஒளவையார் கூறுகிறார்:

"மேலைத் தவத்தளவேயாகுமாம்
தான் பெற்ற செல்வம்."

முற்பிறவியில் செய்த தவமே இப்பிறவியில் அடையும் செல்வத்தை நிர்ணயிக்கிறதாம்.

இன்னும் கூறுகிறார்:

எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே!
கருதியவாறாகுமோ கருமம்? - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை!

நினைத்ததெலாம் கொடுக்ககூடியது, தேவலோகத்துக் கற்பகத்தரு என்னும் மரம். அத்தகைய மரத்தை நாடி அதன் பழத்தை நினைப்பவர்க்கு அது காஞ்சிரங்காய் ஈந்ததானால் அது முற்பிறவியில்செய்த வினை என்கிறார்.
காஞ்சிரங்காய் என்பது கசப்பும் விஷத்தன்மையும் கொண்டதொரு காய்.

இந்த பிறவி என்பது முற்பிறவிகளில் சேர்த்துவைத்த வினைகளின் கூட்டு விளைவு என்றாகிறது.

கேட்பவர் ஒளவையார்.
ஆமோதிப்பவர் திருவள்ளுவர்.

'"ஆகூழால் தோன்றும் அசைவின்மை, கைப்பொருள்
போகூழால் தொன்று மடி"

இந்த "ஆகூழ்", "போகூழ்" என்று வள்ளுவர் குறிப்பிடுவதெல்லாம் சென்ற பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளின் விளைவாக ஏற்பட்ட விதிப்பயனைத்தான்.

"வகுத்தான் வகுத்தவகையல்லாற் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தலரிது."

இவ்வாறெல்லாம் விரிவாக "ஊழ்" என்னும்அதிகாரத்தில் கூறிவிட்டுப் பெருமூச்சுடன் இறுதியில் நம்மிடமே கேட்கிறார் வள்ளுவர்.

"ஊழிற் பெரு வலி யாவுள?"

முற்பிறவியில் செய்த நல்வினைகள்தீவினைகளால் மட்டுமே இப்பிறப்பில் எல்லாமே அமையும் என்றால் "அது வேண்டும், இது வேண்டும்" என்று ஏன் தெய்வத்தைக் கேட்க வேண்டும்? யாகம் ஏன்? பூசை ஏன்? ஹோமம்ஏன்? கேட்டாலும் கிடைக்காது எனின் கேட்பதால் ஆவதுதான் என்ன, முயற்சி எவ்வளவு செய்தாலும்ஆகமாட்டாது என்றிருந்தக்கால்?

'ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர்"

நல்ல முயற்சியுடையோர் ஊழையும்கூடப் புறமுதுகிடச் செய்து விடுவார்கள் என்றும்,

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூலி தரும்.

என்றும் வள்ளுவர் கூறியிருப்பது?

வினைகளையும், பிறவிகளைய்ம், விதியையும் modify செய்து கொள்ள முடியுமா?

The Grand DEsigner, the Master Planner, the CEO of the the universe in its
entirity is brought into the play.

மீண்டும் சாஸ்திரங்களுக்கே செல்கிறேன்.
விதியை மாற்ற வல்லவன் இறைவன். விதியின் எந்த அம்சங்களையெல்லாம் மாற்றவேண்டும் என்று நினைக்கிறானோ, அவற்றையெல்லாம் மாற்ற வல்லவன் இறைவன்.

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றுமில்லையே!
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நம சிவாயவே!

அப்பர் வாக்கு. விண்ணளவுக்கு அடுக்கிவைத்த விறகுக் குவியல் எரிந்து கிளப்பும்நெருப்பு; சிந்தித்துப் பார்த்துச்சொல்லும்போது அது ஒன்றுமே இல்லை. நாதனின் நாமம் தீவினைகளை அழித்துவிடும்.

இறைவனாலும் மாற்றியமைக்க முடியாததுவிதி என்றால், அது இறைவனின் இறைத்தன்மையையே கேள்விக்குரியதாகச் செய்யும்.

இறைவனாலும்கூட விதியை மாற்ற முடியாது என்னும்போது, நமது சமயத்தின் அஸ்திவாரமே ஆட்டங்கண்டுவிடும். பிரார்த்தனைகளுக்கு அங்கு இடமே கிடையாது.

வழிபாட்டில் காம்ய வழிபாடு, நிஷ்காம்ய வழிபாடு என்று இரு வகையுண்டு.
எதையேனும் வேண்டி ,பெறுதலுக்காகச்செய்யப்படுவதே காம்யம்.
For the sake of God, செய்யப்படுவது நிஷ்காம்யம்.

கலையாத கல்வியும், குறையாத வயதும்,கபடுவராத நட்பும், என்ற பாடலில்
அன்னை அபிராமியிடம் நீண்ட பட்டியலிட்டு பதினாறு பேறுகளையும் நிறையவே கேட்கிறார், அபிராமி பட்டர்.

இப்பாடலின் முடிவில் அபிராமி தோன்றி,
"மகனே, சுப்பிரமணிய பட்டா! எல்லாமே விதிப்படிதான் நடக்கும். ஆகவே நீ கேட்பது எதையுமே என்னால் தர இயலாது" என்று கூறினால், எப்படியிருக்கும்?

முற்பிறப்பில் செய்த வினைப்பயனால்இப்பிறப்பில் எதுவுமே நடக்கும் என்பது ஒரு பொது விதி.

விதி என்றிருந்தக்கால், விதி விலக்கும் இருக்கும் அல்லவா? விதியிலுருந்து விலகி நின்று விதிக்கெல்லாம் விலக்கு வழங்க வல்லான் இறைவன்.

கந்தர் அனுபூதியின் கடைசிப்பாடலில்,

கருவாய் உயிராய், கதியாய் விதியாய்,
குருவாய் வருவாய்; அருள்வாய் குகனே!

கதி என்பது மாற்றப்பட முடியாத General Plan.
விதி என்பது அதற்குள் உள்ள மாற்றக்கூடியஅம்சம்.

விதியை, மதியால் modify பண்ண முடியும். விதியை மாற்றுமாறு இறைவனை இறைஞ்சுவதும் கூட மதியினால் ஆவதுதான்.

ஒரு space vehicleலின் design, construction, launching, flightprogramme, முதலிய பல விஷயங்களை NASA நிர்ணயிக்கிறது. இதில் Houston சர்வ வல்லமை படைத்தாக இருக்கிறது.
அந்த space vehicleலின் உள்ளே பயணிக்கும்astronauts அதற்கெல்லாம் கட்டுப்பட்டே இருக்கவேண்டியுள்ளது.

ஆனாலும்கூட அந்த space vehicleலின் உள்ளே செய்யக்கூடிய பல காரியங்களில் அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் இஷ்டப்படி முன்பின்னாகவோ அல்லது அவர்களின் சக்திக்கு உட்பட்ட விதத்திலோ அவர்களின் activitiesஐ modify செய்து கொள்ளமுடியும்.

ஏன்? ஏதாவது ஏடாகூடமாகச் செய்து அந்த mission ஐயே abort செய்ய வைக்கமுடியும். அல்லது self-destructive ஆக ஏதாவது செய்து கொள்ளலாம்....
ஆயுள் முடியுமுன் தற்கொலை செய்து கொள்வது போல.

Houston கையில் கதியும் விதியும் இருக்கிறது.

Astronauts கையில் விதியை modify செய்துகொள்ளும் சக்தி இருக்கிறது.

மனித ஜாதகத்தில், பிறக்கும்போது இருந்த லக்னம், கிரகங்களின் நிலை கதியைக் குறிக்கும்.

தசாபுக்திகள் எனப்படுபவை, விதியைக் குறிக்கும்.

சந்திரனை அடிப்படையாகக் கொண்டுள்ள"கோசாரம்" மதியைக் குறிக்கும்.

ஒரு சிறிய கதை......

எழு நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. மைசூர்ப்பகுதியில் ஓர் ஏழை.
செல்வம் வேண்டி நீண்டகாலம் திருமகளை உபாசித்துவந்தான். லட்சுமியும் தோன்றினாள்.
" உனக்கு செல்வம் இந்த ஜென்மத்தில் கொடுத்து வைக்கவில்லை." என்று கூறினாள். Undaunted, அந்த ஏழை, உடனடியாக ஆபத் சன்னியாச முறையில் தன்னையே சன்னியாசியாக்கிக ்கொண்டான்.
"அம்மா! சன்னியாசம் என்பது மறுபிறவிபோன்றதே! ஆகவே இப்பொது எனக்கு செல்வம் வழங்க அட்டியன்றும் இல்லையே?" என்று லட்சுமியைக் கேட்டான்.
லட்சுமியும் பொன்மழையாகக் கொட்டச் செய்தாள்.

அதை அள்ளப் போனவனிடம் கேட்டாள்,
" சன்னியாசிக்கு ஏனப்பா இவ்வளவு செல்வம்?"
(வித்யாரண்யர் அந்த செல்வத்தையெல்லாம் என்ன செய்தார் என்பது வேறொரு கதை).

மணி, மந்திர, ஒளஷதங்கள் முதலிய முறைகளில் விதியை ஓரளவிற்கு மாற்றியமைக்கலாம்.

இவை அனைத்துமே மனித முயற்சிகள்.

ஒரு limit டுக்குள் திருவினையாகும்.
(மணி = ஜோதிடம், gemmology,etc.;
மந்திரம் = யாகம், பரிகாரம், வழிபாடு,etc.;
ஒளஷதம் = மருந்து, மூலிகை, மருத்துவ முறைகள்)

அடுத்து.....
Heisenberg, etc,.....

> எல்லா உயிரினங்களின் வருங்காலமும் பிறக்கும் முன்பே நிர்ணயிக்கப் பட்டிருந்தால், வாழ்க்கையின் பொருள் என்ன?

One of the Imponderables of the Universe.
தான் சார்ந்திருக்கும் சமயத்திலேயே இதற்குரிய பதிலைத் தானே தேடிக் கொள்வதே சிறந்தது.

>8. தனி உரிமை (free choice) இல்லாத உயிர்கள் எவ்வாறு பிறப்பு/இறப்பு என்ற சுற்று வட்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்?

அடுத்த பிறவி எப்படியிருக்கவேண்டும்என்பதில் உயிர்களுக்கு ஓரளவிற்கு நிணயிக்க latitude உண்டு. நல்வினைகளைச்செய்து அடுத்த பிறவியை நல்ல பிறவியாகவோ அல்லது நன்மைகள் நிறைந்த பிறவியாகவோ ஆக்கிக்கொள்ளலாமே? பிறவியே இல்லாமற்போவதற்கு இறைவனிடம் பரிபூரண சரணாகதியையும், யோகமுறைகளினால் நிற்விகற்ப சமாதியையும் சாஸ்திரங்கள் கூறியுள்ளன.

>9. ஒரு மூலக்கூற்றின் (molecule) மின்னணுவின்(electron) இருப்பிடத்தைக் கூடத் திட்ட வட்டமாக நிர்ணயிக்க முடியாது என்று Heisenberg Uncertainty principle கூறும் போது, மானிடர் யாவரின் பிற்காலத்தைத் திட்ட வட்டமாகச் சொல்ல முடியும் என்பதற்கு என்ன நிறூபணம் காட்ட முடியும்?

நாடி ஜோதிடத்தில் உள்ள paradox என்னவென்றால்,மிகப் பிற்காலத்தில் நடக்கப்போவதில் ஒரு பகுதியைச் சொல்லியிருப்பார்கள். அந்தப் பகுதியில் அந்த ஜாதகர் வந்து நாடியைப் பார்க்கும்வரையில் சொல்லப்பட்டிருக்கும்.
அதிலிருந்து ஏற்படக்கூடிய future காணப்படமாட்டாது. அப்படியே சொல்லப்பட்டிருந்தாலும் அந்த பலன்கள் சரியாக இராது. இருவகையாக இதை விளக்கலாம். ஒரு மனிதர் ஓரிடத்திற்குப் போனால் இறந்துவிடுவார் என்று விதி இருக்கிறது. அவர் போனால்தானே? போகாவிட்டால்? அல்லது எச்சரிக்கையோடு இருந்துவிட்டால்?

வருங்காலம் என்பது பல possibilities உடன் கூடிய sequence of eventsதானே?
பல Parallel Universes-இல் பல நிகழ்காலங்களும் பல பல வகையான வெவ்வேறு வருங்காலங்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ரிஷிகளால் அவற்றைப் பார்க்கமுடிந்தது.
ஞானதிருஷ்டியின் மூலம் பார்த்தார்கள்.
'தீர்க்கதரிசனம்' என்றும் குறிப்பிடப்பட்டது.
ஆகையால்தான் அவர்களைத் 'திரிகாலஞானிகள்' என்று சொன்னார்கள்.
'த்ரஷ்டா' என்னும் பழஞ்சொல்லும் இருக்கிறது. 'த்ரஷ்டா' என்றால் 'பார்ப்பவன்' என்று பொருள்.

இன்னொரு approach: Heisenbergஐ இழுப்போம்.

பார்க்கப்பட்டபின் அல்லது சிந்திக்கப்பட்டபின் அந்த மின்னணுவின் போக்குமாறுகிறது.
அந்த Schrodinger's பூனை காணப்படாமல் இருக்கும்போது உயிருடன் இருக்கும்/அல்லது உயிருடன் இல்லாமல் இருக்கும். பார்க்கப்பட்டவுடன் இறந்திருப்பதாகக் காணப்படுகிறது அல்லவா?

காண்பானால் காணும்செயல் இயற்றப்படும்போது காட்சியின் தன்மை மாறிவிடுகிறது.
காணும் செயல் நடக்கவில்லையானால்?
அல்லது காண்பானே இல்லையென்றால்?
இந்த திரிபுடி sequence-இல் உள்ள தொடர்பில் சூட்சுமமான ரகசியம் அடங்கியிருக்கிறது. ரகசியமா அல்லது மர்மமா?
பார்த்து உணர்வதற்கு மனது இல்லையென்றால் ஆகாயம் நீல நிறமாக இருக்குமா?

அது போல விதியும்; பார்க்கப்படும்போது மாறிவிடுகிறது.


ரிஷிகள் சம்பந்தப்படாத Future; ஜாதகரின் past ஆக நாடி ஜோதிட ஏடுகளில் காணப்படுகிறது. ஆனால் அதன் பின் uncertain ஆகிவிடுகிறது.

On a broad basis, ஹைஸென்பெர்கின் Uncertainty Principle இல் அவர், "We can know, as a matter of principle, the past in all its details. We cannot know as a matter of principle , the present in all its details."

பார்க்கவரும்வரையில் அந்த ஏடுகள் இருந்தனவா இல்லையா? - Schrodinger's Cat போல.
பார்ப்பதற்கு ஆள் வருவான் என்பதற்காக ஓலை காத்திருந்ததா?
பார்ப்பதற்கே ஆள் இல்லையானால்?
நடந்தவை, நடப்பவை, நடக்கப்போகின்றவை அனைத்துமே space/time continuum எனப்படும் ஸ்தூல பிரபஞ்சத்துக்கு அப்பாலுள்ள Hyperspace அல்லது Superspace எனப்படும் பராகாச சூன்யத்தில் பல planeகளில் உள்ள பல parallel universeகளில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. They are frozen in time.

Points போடப்படுவதற்கேற்ற வகையில் ரயில் வண்டி அந்தந்த தண்டவாளத்தில் மாறிமாறிச் செல்வதுபோல நாம் காலத்தின் வழியே சென்று கொண்டிருக்கிறோம்.

அன்புடன்
ஜேய்பி

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி




நாடி ஜோதிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 27, 2010 8:03 am

நாடி ஜோசியத்தில் இவ்வளவு விஷயங்களா?
ஆச்சர்யம் அதிகம் ஆகிறது.
ஆர்வமும் அதிகம் ஆகிறது.
ஆமாம், இதிலும் ஆராய்ச்சி செய்து doctorate வாங்கி இருக்கிறீர்களா?

ரமணீயன்.

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 10:18 am

பேரறிஞர் Dr.A.V. ஜெயச்சந்திரன் செய்த பல ஆராய்ச்சிகளில் நாடி ஜோதிடமும ஒன்று. அவருடைய தொடர்ச்சியான நீண்ட கால ஆய்வுகளை அவருடைய மரணமே நிறுத்தி வைத்தது.

மருத்துவர் தன்னுடைய நாடியை பார்க்க மறந்து விட்டார் போல...

நண்பா...
விடியும் என்று விண்ணை நம்பும் நீ...
முடியும் என்று உன்னை நம்பு...
அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 27, 2010 10:44 am

நாடி ஜோதிடக்கலை அற்புதமான ஒன்று. கடல் போல் செய்திகளைக் கொடுத்த சிவா அவர்களுக்கு நன்றி.

தமிழ் மொழி தொன்மையான மொழி என்பதற்கு இதுவும் ஒரு சான்று. அகத்தியம், தொல்காப்பியம் போன்ற நூல்கள் இன்றைய சிலிகான் வேலி தொழில்நுட்பத்திற்கு சவால் கூறும் ஏடுகள் என்றே சொல்லலாம்.

......கா.ந.கல்யாணசுந்தரம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 27, 2010 11:39 am

படிக்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது , அப்பப்பா எவ்வளவு விஷயங்கள் ,

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிவா நாடி ஜோதிடம் 678642 நாடி ஜோதிடம் 154550

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Oct 27, 2010 12:50 pm

ஆச்சர்யமான அபூர்வ தொகுப்பு, நன்றிகள்....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக