புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
78 Posts - 49%
heezulia
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
6 Posts - 4%
prajai
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
120 Posts - 53%
heezulia
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
8 Posts - 4%
prajai
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை தோரணங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 14, 2010 1:28 pm


கவிதை 1

மாறுவதாம் உலகு! மனமும்தானே!

மங்குமிருளும் மாலைஒளியும் மனதில் மையல் கூட்டும்
எங்குமின்பம் மஞ்சள் வெயிலில் இதயம் கண்டு ஏங்கும்
பொங்கும் உள்ளம் பூரிப்பாகி போதைகண்டு வாடும்
தூங்கும் இரவின் கருமை சூழ துடித்தேஇதயம் மாளும்

கங்குல் தோன்றிக்கதிரோன் வார காணும் காட்சிமாறும்
எங்கும் ஒளியும் இதயக் கனவின் ஏற்றம்மறைந்துபோகும்
சங்கும் கூவி தமிழும்பாடி தேவன் கோவில் தெய்வம்
இங்கும் அன்பைக்கண்டே மனமும் இன்பம் கொள்ளக்காணும்

பொன்னைக் காணும் மாதர்நெஞ்சாய் புகழின் பின்னேபோகும்
தன்னை காணா இதயம் கொண்டோர் தரணியெங்கும்வாழும்
நன்மைகென்றே வாழா நாலுசொல்லுகென்று வாழும்
தன்மைகொண்ட இதயம்தன்னில்தமிழும் சுகமும் தோற்கும்

வெண்ணைக்காக திரளும் போது வெடித்ததே கலயம் உடையும்
எண்ணக்கருவும் தோன்றும்போது எழுதும்பேனா உடையும்
மண்ணில் ஈழமெண்ணத் தமிழும் மாறிப்பகைமை தோன்றும்
விண்ணைப்போலே இந்த உலகில் வேளைதோறும் மாற்றம்



கவிதை 2

உன்னை நீ மாற்று

அன்பான உள்ளங்கள் கண்ணாடிபோலெதிர்
ஆழம் புரிந்துகொள்ளும்
முன்னாலிருப்பதை காட்டிவிடும்
முகத் திரைக்குள் ஊடுருவும்
பின்னால் நடப்பது ஏதறியோம் -சிலர்
பேச்சு மயக்கிவிடும்
தன்னால் நடப்பது யார் நிறுத்த இந்த
தாரணியில் முடியும்

கால்வைத்துப் போன திசையினிலே சில
கல்லுமிடித்துவிடும்
ஜில்லென்று மேனி துடிதுடித்து ஒரு
சொல்லும் பிறந்துவரும்
அல்லலுற்று மன மேடையிலே சில
ஆட்டங்கள் கண்டுவிடும்
வல்லென வாழும் அவ் வாழ்வுக்கல்லால்
பல நெஞ்சங்கள் ஏனோஅழும்?

வில்லைவளைத்தவன்முல்லை மலர்கணை
விட்டிடும் மன்மதனால்
எல்லையற்ற சுகம் எண்ணி மனதினில்
இன்பக் கனவுவரும்
கல்லும் கரைந்து கணம் தடுமாறிட
காட்டினில் தீஎரியும்
இல்லையென வாழ்வு ஆகி உயிர் துடித்
தேங்கிடும் நாளும்வரும்

தொல்லை தரும் இந்தவாழ்வு கசந்தொரு
தூர நினைவுவரும்
எல்லைகடந் தந்த வானில் கலந்திட
ஏனோமனம் இசைக்கும்
கல்லை இணைத்தொரு கடல்குதித்திட
காணும் இதயம் சொல்லும்
நல்லவர் நட்புமில்லாத மனம்தன்னை
நாடி இருள்மயக்கும்.

சொல்லும் இனியதோர் சுந்தரத்தேனிசை
செவியில் கேட்டுவிடு
செல்லசிறுவர் மழைலையிலே உந்தன்
சிந்தனையைச் சிதறு
நல்லதமிழ்கவி நாளும்படித்து ஒர்
வல்லமனது கொள்ளு
வாழ்வின் கசப்பினை மாற்று திடமுடன்
மற்றொரு பாதை செல்லு


(கீழே தொடர்கிறது தோரணம்.)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 14, 2010 1:31 pm

கவிதை 3

அதுவரை பொறுப்பீரே!

நிலவைப்பிடித்து ஒளியெடுத்து
நினைவைப்பிடித்து உணர்வெடுத்து
மலரைப்பிடித்து இதமெடுத்து
மாறுமுலகில் கருவெடுத்து
பலரும்பிடிக்க சில கடியப்
பாடிப்பாடி கடிகடித்து
அலரும் கவிதை பூக்களஎன
அளிப்பேன் தொல்லை பொறுப்பீரே

பூக்கள் பூக்கும் புன்னகைக்கும்
பொழுதும் மகிழ்வாய் புரண்டோடும்
நாட்கள் போகும் நடைபழகி
நானும் வருவேன் கவிபழகி
பாக்கள் பாடும் பைத்தியம்நான்
பாடிப்பாடி உயிரெடுப்பேன்
காக்கும் கடவுள் உதவட்டும்
கவிகள் கவியாய் காணும்வரை


கவிதை 4

திடமுடன் வாழுவோம்

காயுமிள மனதில் கவலைகளை நீக்கு
தேயு நிலவாகா தீரம் தனைக் கொள்ளு
போயுமுளம்துன்பம் பெற்றிடவே வேண்டாம்
பாயு நதியாக பாடி மகிழ் வாகு

வந்தவையும் நலமே வருபவையும் நன்றே
சிந்தியதும் நன்றே சிதறியதும் நன்றே
சொந்தமென உள்ள சுகங்களதும் நன்றே
வந்தவையும் ஒன்றே வருவனவும் அஃதே

தாமரையின் தண்ணீர் தவிப்பதென வாழா
பூமரத்து வேராய் பூமிபற்றி வாழ்வோம்
மா உரமும்மனதில் மல்லிகையின்மென்மை
யாவும்நலம் கொண்டே நாமுமுயர்வாவோம்



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 14, 2010 1:54 pm

பாக்கள் பாடும் பைத்தியம்நான்
பாடிப்பாடி உயிரெடுப்பேன்
காக்கும் கடவுள் உதவட்டும்
கவிகள் கவியாய் காணும்வரை

உங்கள் அவையடக்கத்திற்கு அடியேனின் வாழ்த்துக்கள் அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 4:35 pm

கவிதை தோரணங்கள்! 677196 கவிதை தோரணங்கள்! 677196 கவிதை தோரணங்கள்! 677196



கவிதை தோரணங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 14, 2010 7:23 pm

மனமகிழ்வோடு தங்களுக்கு நன்றிகள்!
நதிபோல ஓடும் உணர்வுகளுக்கு வழியமைத்துக் கொடுக்கும்
தங்களுக்கு என்றும் கடமைப்பட்டவன். நன்றிகள்!

அன்புடன் கிரிகாசன்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 15, 2010 1:38 pm

அருமை கவிதை தோரணங்கள்! 677196

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 15, 2010 3:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



கவிதை தோரணங்கள்! Mகவிதை தோரணங்கள்! Oகவிதை தோரணங்கள்! Hகவிதை தோரணங்கள்! Aகவிதை தோரணங்கள்! N
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 15, 2010 7:46 pm

//நிலவைப்பிடித்து ஒளியெடுத்து
நினைவைப்பிடித்து உணர்வெடுத்து
மலரைப்பிடித்து இதமெடுத்து
//மாறுமுலகில் கருவெடுத்து//
பலரும்பிடிக்க சிலர் கடியப்
பாடிப்பாடி கடிகடித்து
அலரும் கவிதை பூக்களஎன
அளிப்பேன் தொல்லை பொறுப்பீரே

அப்போதுதானே புத்தமுதம் பல பருக முடியும்... மாற்றம்தானே மாறாத்து... நல்ல கவிச்சோலையின் மணம் நுகர்ந்தேன். ஒவ்வொன்றும் அழ்கான தோரணம்..நன்றி,,கிரிகாசன். கவிதை தோரணங்கள்! 678642



கவிதை தோரணங்கள்! Aகவிதை தோரணங்கள்! Aகவிதை தோரணங்கள்! Tகவிதை தோரணங்கள்! Hகவிதை தோரணங்கள்! Iகவிதை தோரணங்கள்! Rகவிதை தோரணங்கள்! Aகவிதை தோரணங்கள்! Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 16, 2010 10:47 am

//வெண்ணைக்காக திரளும் போது வெடித்ததே கலயம் உடையும்
எண்ணக்கருவும் தோன்றும்போது எழுதும்பேனா உடையும்
மண்ணில் ஈழமெண்ணத் தமிழும் மாறிப்பகைமை தோன்றும்
விண்ணைப்போலே இந்த உலகில் வேளைதோறும் மாற்றம்//

எண்ணக்கரு தோன்றும்போதுபேனாவும் உடையும் அருமை


//கால்வைத்துப் போன திசையினிலே சில
கல்லுமிடித்துவிடும்
ஜில்லென்று மேனி துடிதுடித்து ஒரு
சொல்லும் பிறந்துவரும்
அல்லலுற்று மன மேடையிலே சில
ஆட்டங்கள் கண்டுவிடும்
வல்லென வாழும் அவ் வாழ்வுக்கல்லால்
பல நெஞ்சங்கள் ஏனோஅழும்?//

வாழ்வுக்கல்லால் பல நெஞ்சங்கள் ஏனோஅழும்? ......

//நல்லவர் நட்புமில்லாத மனம்தன்னை
நாடி இருள்மயக்கும்.//

நிச்சயம் ..

//
நிலவைப்பிடித்து ஒளியெடுத்து
நினைவைப்பிடித்து உணர்வெடுத்து
மலரைப்பிடித்து இதமெடுத்து
மாறுமுலகில் கருவெடுத்து
பலரும்பிடிக்க சில கடியப்
பாடிப்பாடி கடிகடித்து
அலரும் கவிதை பூக்களஎன
அளிப்பேன் தொல்லை பொறுப்பீரே//

அருமையாக வடிவமைத்த தாங்கள் கவிதை பூக்கள் படிக்கும்
போது முகத்தில் மலர்ச்சி தோன்றுகிறது ..

//தாமரையின் தண்ணீர் தவிப்பதென வாழா
பூமரத்து வேராய் பூமிபற்றி வாழ்வோம்
மா உரமும்மனதில் மல்லிகையின்மென்மை
யாவும்நலம் கொண்டே நாமுமுயர்வாவோம்//

மனம் மல்லிகையின் மென்மை அருமையான உவமை ..

அனைத்து வரிகளும் அழகு கோர்வையின் தோரணம்.. நன்றி ஐயா .......




srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Dec 16, 2010 10:59 am

வீட்டில் சுபநிகழ்ச்சி என்றால் மாவிலை தோரணங்கள் மனதை கவரும்...

ஈகரையில் உங்கள் கவிதை தோரணங்கள் மனதை வருடிக்கொண்டு.... கவிதை தோரணங்கள்! 677196 கவிதை தோரணங்கள்! 678642

தங்களை போன்றவர்கள் மாதிரி கவி பாடிட என் மனத்திற்குள் மட்டும் ஆசையாய்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக