புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
47 Posts - 47%
heezulia
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
44 Posts - 44%
T.N.Balasubramanian
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
12 Posts - 2%
prajai
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
9 Posts - 2%
Jenila
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_m10ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்

avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 3:12 pm

இந்தியாவில், தொலை தொடர்புத்துறையில் 2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அந்தத் துறைக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் தொலை தொடர்புத்துறைச் செயலர் ஆகியோரிடம், மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்தத் தவறியது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிவிசி எனப்படும் மத்திய கண்காணிப்பு ஆணையம் மற்றும் சிஏஜி எனப்படும் இந்தியக் கணக்குத் தணிக்கை ஆணையம் ஆகிய இரு முக்கிய விசாரணை அமைப்புக்களும், இந்த முறைகேட்டில் அமைச்சர் மற்றும் செயலருக்கு உள்ள தொடர்புகள் குறித்து கடுமையாகக் கண்டித்திருந்த போதிலும், புலனாய்வுத்துறை விசாரணை நடத்தாதது ஏன் என்று நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள்.

எந்த ஒரு பொறுப்பான நபரும், அமைச்சர் மற்றும் செயலரின் தொடர்பு குறித்து விசாரணை நடத்துவார்கள். ஆனால், 8 ஆயிரம் ஆவணங்களை ஆய்வு செய்ததாகக் கூறும் புலனாய்வுத்துறை, அந்த இருவரிடமும் விசாரணை நடத்தாதது ஏன் என்று நீதிபதிக் கேட்டார்கள்.

அதற்கான தாமதம் குறித்து, மத்திய புலனாய்வுத்துறையின் சார்பில் விளக்கமளித்த மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், புலனாய்வுத்துறைக்கென தனியான விசாரணை நடைமுறை உள்ளதாகத் தெரிவித்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படையான முறை கடைடிபிக்கப்படவில்லை என்றும், அதனால் அரசுக்கு உத்தேசமாக 1.76 லட்சம் கோடி ரூபாய் இழ்பபு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் முடக்கம்

இதனிடையே, ஆ. ராசா அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பாக ஆழமான விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனல், அரசு அதற்கு சம்மதிக்க முடியாது என மறுத்து வருகிறது.

இதனால், வியாழக்கிழமை தொடர்ந்து 10-வது நாளாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 3:16 pm

///ராசா அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பாக ஆழமான விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனல், அரசு அதற்கு சம்மதிக்க முடியாது என மறுத்து வருகிறது.///

இதன் மூலம் பிரதமருக்கும் இதில் தொடர்பிருப்பது தெரியவருகிறது!

ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 3:38 pm

சிவா wrote:///ராசா அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பாக ஆழமான விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனல், அரசு அதற்கு சம்மதிக்க முடியாது என மறுத்து வருகிறது.///

இதன் மூலம் பிரதமருக்கும் இதில் தொடர்பிருப்பது தெரியவருகிறது!

அவர் தான் பந்தி பரிமாறி இருக்கிறாரே.. உலகமெங்கும்.. பிரதமருக்கு இல்லாமலா போகும்.

http://stopbribe.blogspot.com/2010/11/blog-post_7073.html
தினமணி தலையங்கம்
1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது. ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Raja_thumb%5B2%5D இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்? இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை. தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை. தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை. பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும். அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Large_116449_thumb%5B2%5D முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும். தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது. இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும். ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்? ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...'!

ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Aராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Aராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Tராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Hராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Iராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Rராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Aராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்  Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக