புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10 
17 Posts - 4%
prajai
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10 
8 Posts - 2%
jairam
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 20, 2010 2:57 pm

இது நிறைய பேரின் பிரச்சனை . என்ன தீர்வு என் பார்ப்போம்.

இந்த வயிற்று வலி கல்யாணமானால் நிற்கும் என்பார் என் பாட்டி புன்னகை பொதுவாக தூரம் வருவதற்கு ஒரு வாரம் பத்து நாள் முன்னாடியே, வெந்தயம், வெந்தய கீரை, வாழை பூ போன்ற துவர்ப்பு பொருட்களை உணவில் சேர்க்க சொல்வார்கள். மணத்தக்காளி கூட உபயோகிக்கலாம். கீரை யாகவோ, வற்றலாகவோ உபயோகிக்கலாம்.

வெந்தயத்தை ஊற வைத்து வெறும் வயற்றில் காலைல் கொஞ்சம் தயிருடன் மென்று சாப்பிடவும். ஏறவே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். கொஞ்சம் கசக்கும் என்றாலும் நாளடைவில் பழகிவிடும். மேலும் வைற்று
வலியை compare பண்ணும் போது இந்த கசப்பு எவ்வளவோ தேவலை. சரியா?

வெந்தயம் நெறைய நனைத்து தோசை பண்ணலாம். தோசை கிட்டத்தட்ட இளம் மஞ்சளாகவே வரணும். அவ்வளவு போடணும்.

அல்லது, வெந்தயத்தை முளை கட்டி சுண்டல் பண்ணி சாப்பிடலாம்.

இவ்வாறு சாப்பிடுவது வைற்று வழியை குறைக்கும். ட்ரை பண்ணி பாருங்கள்

வெந்தய கீரை கிடைத்தால், கூட்டு பண்ணி சாப்பிடலாம். வாழை பூவின் உள்ளே இருக்கும் மொக்கு போன்ற பகுதியை அப்படியே பச்சையாக சாப்பிடுங்கோ. ரொம்ப நல்லது. சுவையாகவும் இருக்கும். புன்னகை மற்றபடி படி வாழை பூ வை கூட்டோ , கறியோ, செய்து சாப்பிடவும்.

நான் குகளில் பார்த்தது இதோ:

மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன் உப்பைக் குறைத்தல்
காபி அருந்துதலை தவீர்த்தல், உடற்பயிர்ச்சியில் ஈடுபடல்,
போதியளவு தூங்குதல்.

மூன்று பிரதான உணவுகளை தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஆறுமுறை சாப்பிடுதல்

மேலே சொன்ன நடவடிக்கைகளை இந்த பாதிப்பு ஏற்படும் காலத்தில் மட்டும் மேற்கொண்டாலே போதும்.(அதாவது மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரத்திற்கு முன் மாத்திரம்)

இவற்றின் மூலம் இந்தப் பிரச்சினை குறையாவிட்டால் வைத்தியரை சந்தித்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 20, 2010 2:59 pm

இக்கேள்வியை ஒரு செமினாறில் வந்த டாக்டரிடம் கேட்ட போது அவர் சொன்ன விளக்கம்
பெண்களுக்குப் பொதுவாக இப்பிரச்சினை இருக்குமாம். சில பெண்களுக்கு குழந்தை
கிடைத்தவுடன் இந்தப்பிரச்சினை இருக்காதாம் என்று தற்காலிகமாக வலியைப் பொறுத்துக்
கொள்வதற்கு பனடோல் போடலாம் என்று கூறினார்.

இத்துடன் குமுதம் கெல்த்தில் வந்த ஒரு ஆர்ட்டிக்கலை இணைக்கிறேன் படித்துப் பாருங்கள் .

பெண்கள் திடீரென்று சில நாட்களாகக் காரணமில்லாமல் எரிந்து விழுவது, வயிற்று வலி, தலைவலி, கோபப்படுவது, டிப்ரஷன், டென்ஷன் இவையனைத்தும் மாதவிடாயின் முன்பு அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளின் பிரதிபலிப்பு. ஹார்மோனின் வேலைகள்தான். Premenstrual Syndrome.. அதாவது, மாதவிடாயின் சில நாட்களுக்கு முன்பு ஏற்படும் சில அசௌகரியங்கள் அதற்கு பின்பு இருக்கும் மருத்துவ உண்மைகள், அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கமளிக்கிறார் மகப்பேறு மருத்துவர் கீதா ஹரிப்பிரியா!

சினை முட்டையை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு பெண்ணும், மாதவிடாய்க்கு முன்பு சில மாற்றங்களை அனுபவிக்கிறாள். மார்பக வலி, வீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் மாதவிடாய்க்கு முன்பு இருக்கும். இதனை மருத்துவம் Premenstrual Syndrome என்கிறது. அதிக சதவிகிதப் பெண்கள் உடலால் மட்டுமின்றி மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

இதனால் தொடர்ந்து சில நாட்கள் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைகிறது. முன்பெல்லாம் இதைச் சகித்துக் கொண்டு இயல்பு வாழ்க்கையைத் தொடரவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்றைய மருத்துவத்தில் இதற்குத் தேவையான மருந்துகள் வந்தாகிவிட்டது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில், அவதிகள் காரணமாக பெண்கள் தங்கள் வேலைக்கோ, குடும்ப உறவுகளிலோ எந்தவித இடையூறுகளும் வராமல் ஜாலியாகச் சமாளிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 20, 2010 3:00 pm

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை அனுபவித்திருப்பார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான். செல் அணுக்களில் நீர் தேங்கலால், உடலில் வெயிட் போட்டு விட்டது போல கனமான உணர்வு தோன்றுகிறது. தலைவலி சர்வ சாதாரணமாகப் பலருக்கும் இருக்கும். இளம் பெண்களின் ஒற்றைத் தலைவலிக்குக் காரணம், இந்த ஹார்மோனல் இம்பேலன்ஸ் தான். மேலும் பீரியட்ஸ் சமயத்தின் சில நாட்களுக்கு முன்பு முகப்பருக்கள் வரத் தொடங்கும்.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், என்ட்ரோஜன் ஹார்மோன் அளவை மாற்றி, முகப்பருக்களைப் பருக்க வைத்துவிடும். உடலில் ஏற்படும் இந்தப் பிரச்னைகளின் பிரதிபலிப்பு உடல் சோர்வையும், மனப்பிரச்னைகளையும் கொடுக்கும். காரணமில்லாமல் எரிந்து விழுதல், அமைதியின்மை, மனக்கவலை, திடீரென்று அழுதல் என்று ஒரு கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் பிரதிபலிப்பார்கள்... வீட்டில் உள்ளவர்களும், கணவர்களும் இந்த நேரத்தில் அவர்களைப் புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்வதே அவர்களுக்குச்செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும். பெண்களின் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டால், அவர்களுடைய உடல்நலம் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டு விடும்.

மாதவிலக்கு ஏற்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அடிவயிற்றிலும், பக்கவாட்டிலும் சற்று கனமான உணர்வு, சூடு தெரியும். இதை வைத்தே தீட்டு ஏற்பட இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் எல்லாப் பெண்களும் அறிந்திருப்பார்கள். இதற்குக் காரணம் கருப்பையிலும், கரு முட்டையிலும் ஏற்படும் அதிக இரத்த ஓட்டம்தான். சிலருக்கு வயிற்று வலி படாய்ப்படுத்தும். திடீரென்று ஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வலியால் சுருண்டு விடுவார்கள்.

நாக்கு வறண்டு போதல், வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம். மாதவிலக்கு ஏற்பட்டவுடன் வலி படிப்படியாகக் குறையலாம். கையால் பிசைவது போல வலி இருந்தால் அது கருப்பை அதிகமாக சுருங்கி விரிவதால்தான் இருக்கும். கருப்பையின் உட்சுவர் சீராகச் சிதையாமல், தாறுமாறாகச் சிதைவதால் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம். தாங்கமுடியாத வலி இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 20, 2010 3:01 pm

ஒரு சில பெண்களுக்கு கருப்பையில் கட்டிகள், கரு முட்டைப் பையில் நீர்க்கட்டிகள் போன்றவை இருந்தால் கொஞ்சம் சீரியஸ் கவனம் தேவை. கருப்பையின் உட்சுவர் திசுக்கள் கருப்பையினுள் வளர்வதுண்டு. அதேபோல, சினைக்குழாய், சினை முட்டைப்பை, வயிற்றுப் பகுதி போன்ற பகுதிகளாக வளர்ந்து ‘எண்டோமிட்ரியோஸிஸ்’ எனப்படும் தொந்தரவுகளுக்கு ஆளாகலாம். எண்டோ மிட்ரியோஸிஸ் தீவிரமடைந்து சிறு குடலைப் பாதிக்கும்போது தான் மாதவிடாயின் போது வாந்தி, பேதி ஏற்பட்டுவிடுகிறது. எனவே, மாதவிடாயின் போது இதுபோன்ற தீவிர பிரச்சினைகள் இருந்தால், அதைத் தள்ளிப் போடக் கூடாது. இதனால்கூட மாதவிடாயின் போது தீராத வலி ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் அவசியம்!

பொதுவாகத் தீட்டுக் கோளாறுகள் என்று நீங்கள் மருத்துவரை அணுகினால் அவர் ஹார்மோனல், இம்பாலன்ஸ் என்று தான் குறிப்பிடுவார். இந்த ஹார்மோனல் இம்பாலன்ஸ் என்பது, ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறையினைக் குறிக்கிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டை, மூளையின் அடிபாகத்தில் உள்ள பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்த பிட்யூட்டரி சுரப்பியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ‘ஹைம்போதலாமஸ்’ எனப்படும் மூளையின் ஒரு பகுதி, இந்தப் பகுதி, உடலின் தேவையை அறிந்து அவ்வப்போது பிட்யூட்டரிக்கு கட்டளையிட்டுக் கட்டுப்படுத்தும்! சாதாரணமாக ஏற்படும் மன பயம், அதிர்ச்சி போன்றவை மாதவிலக்கால் சற்று மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது, இந்த ‘ஹைபோதலாமஸ்’ எனும் பகுதி தான்! பொதுவாக, தீட்டுக் கோளாறுகளுக்கு மருத்துவர் அளிக்கும் பரிசோதனைச் சீட்டுகளைப் பாருங்கள், இந்த ஹார்மோன்களின் நிர்ணயப் பரிசோதனையாகத்தான் இருக்கும். பொதுவாக, மாதவிடாய் ஏற்படவும், முட்டை நல்ல ஆரோக்யமாக வெளிவர... சினைமுட்டைப்பை, பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் மற்றும் கருப்பை போன்றவற்றின் ஒத்துழைப்பு ஒன்றுக்கொன்று சீராக இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு உறுப்பில் கோளாறு ஏற்பட்டாலும் தீட்டுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மாதவிலக்கின் முன்பு ஏற்படக்கூடிய இந்த அறிகுறிகளில் ஏற்படும் பிரச்னைகளை உட்கொள்ளும் உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம். சரி... என்ன செய்யலாம்?

கொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Pre menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

உப்பு அதிகம் சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி வகைகளை ஒதுக்கிவிட வேண்டும்.

PMS இன்போது ஸ்வீட், ஐஸ்க்ரீம்களை ஒரு பிடி பிடித்தால் நன்றாக இருக்குமே என்று படும். சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை ஒரு வெட்டு வெட்டத் தோன்றும். இருந்தாலும் இனிப்புக் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது.

மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு, இருபது நிமிட வாக்கிங் பழகிக்கொண்டால் மனரீதியான பாதிப்புகளைக் குறைக்கலாம்.

காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்க்கலாம். தினமும் இரண்டு கப்பிற்கு மேல் காபி, டீ, குடிக்கும் பெண்கள் சாதாரணப் பெண்களைவிட ஏழு மடங்கு றிவிஷி ஆல் அவதிப்படுவார்கள் என்கிறார்கள், ஆராச்சியாளர்கள். காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்தும்.

7_8 மணி நேரம் உறக்கம் கட்டாயம்.

இந்தச் சமயத்தில் வைட்டமின் ஏ,டி அவசியம். இவை அதிகம் உள்ள கேரட், பசளைக்கீரை, பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

மார்பக வலி, களைப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற, வைட்டமின் பி6 உதவும். மீன், கோழி, வாழை, உருளை போன்றவை வைட்டமின் பி6 உள்ள உணவுகள்.

மனஅழுத்தம் நீங்க வைட்டமின் ‘சி’ உள்ள ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை சேர்த்துக் கொள்ளுங்கள்!

இந்த உணவுப் பழக்கங்களை மாதவிடாயின் ஒரு வாரத்துக்கு முன்பும், மாதவிடாயின் போதும் கடைப்பிடித்தல் நல்லது!

இதி லிருந்து விடுபட குடும்பத்தாரின் சப்போர்ட் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம். இதுதான் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்!




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Dec 20, 2010 3:02 pm

தகவலுக்கு நன்றி அம்மா.

அதைவிடவும் அந்த நாட்களில் constipation இருக்க கூடாது. அது வலியை மேலும் அதிகபடுத்தும்.
வெந்தயம் உண்மையில் நல்லது. அன்பவம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 20, 2010 3:08 pm

varsha wrote:தகவலுக்கு நன்றி அம்மா.

அதைவிடவும் அந்த நாட்களில் constipation இருக்க கூடாது. அது வலியை மேலும் அதிகபடுத்தும்.
வெந்தயம் உண்மையில் நல்லது. அன்பவம்

வர்ஷா, constipation எப்பவுமே இருக்க கூடாது மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Dec 20, 2010 3:12 pm

krishnaamma wrote:
varsha wrote:தகவலுக்கு நன்றி அம்மா.

அதைவிடவும் அந்த நாட்களில் constipation இருக்க கூடாது. அது வலியை மேலும் அதிகபடுத்தும்.
வெந்தயம் உண்மையில் நல்லது. அன்பவம்

வர்ஷா, constipation எப்பவுமே இருக்க கூடாது மா புன்னகை

சரிதான் அம்மா
மன சிக்கலும் மல சிக்கலும் இல்லாத வாழ்க்கை ஆனந்தம் தான் மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... 755837

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 20, 2010 3:20 pm

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... 678642 பயனுள்ள கட்டுரை

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Dec 20, 2010 3:22 pm

கல்யாணம் ஆனால் வயிறு வலி போய் தலைவலி வரும்
என்று எங்க பாட்டி சொன்னார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 20, 2010 3:23 pm

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக