புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கம் வளர்த்த தமிழ்! Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
சங்கம் வளர்த்த தமிழ்! Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கம் வளர்த்த தமிழ்! Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
சங்கம் வளர்த்த தமிழ்! Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
சங்கம் வளர்த்த தமிழ்! Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சங்கம் வளர்த்த தமிழ்! Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கம் வளர்த்த தமிழ்!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:02 pm


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!


.....................................................................


"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"


"வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!"




இவ்வாறு தமிழ் மொழியின் வண்மையையும் தண்மையையும் பாரதியார் மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மேலும்



"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்வள்ளுவர் போல் இளங்கோ வைப் போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"



என்று மகாகவி பாரதியார் பெருமிதத்தோடு பாடியிருக்கிறார்.



மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு பல மொழிகளில் புலமை இருந்தது. அவரது தாய் மொழியான தமிழைத் தமிழ் பண்டிதர்களிடம் கற்றார். காசி சர்வகலாசாலையில் (1898-1902) இந்தியும் வடமொழியும் கற்றார், புதுவையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததால் பிரன்சுமொழி அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆங்கில மொழியிலும் அவருக்குப் புலமை இருந்தது.



எனவே தமிழ்மொழியை ஏனைய மொழிகளோடு ஒப்பீடு செய்து "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தீர்ப்பு வழங்கினார். "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே" என்றும் "வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!" அறுதியிட்டுக் கூறினார்.



உண்மையில் பாரதியார் பிறப்பால் பிராமணர். ஆன காரணத்தால் "தேவபாஷை" என்று அழைக்கப்பட்ட வடமொழியை அவர் உயர்த்திச் சொல்லியிருக்கலாம். இன்றுகூட நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காட்டுத் தமிழ் நாட்டுப் பிராமணர் வடமொழியைத் தங்கள் "தந்தை மொழி" எனக் கூறிக் கொள்கிறார்கள். திருக்கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்படுவதற்கு எதிராக அர்ச்சகர்களே போர்க் கொடி தூக்குகிறார்கள். ஆனால் கவிச் சக்கரவர்த்தி பாரதியார் தமிழையே இனிமையான மொழி, உயர்வான மொழி, செழுமையான மொழி என நெஞ்சாரப் போற்றியிருக்கிறார்.



பாரதியார் இந்த மண்ணலகத்தில் 39 (1882-1921) அகவையே வாழ்ந்து மறைந்தவர். அவர் வாழ்ந்த காலம் குறுகியது என்றாலும் பாரதியாரே உச்சி மீது வைத்துப் பாராட்டிய கல்வியில் பெரிய கம்பன், நெஞ்சை அள்ளும் சிலம்பு படைத்த இளங்கோ, வானுயர் வள்ளுவர் இவர்களோடு அரியாசனத்தில் சரியாசனம்; இருக்கக் கூடியவர். தமிழ் மொழிக்கும், தமிழினத்துக்கும் ஒரு புதிய நீர்மையையும், சீர்மையையும் ஏற்படுத்தியவர். தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய எழுச்சியையும் மொழிப் புரட்சியையும் செய்தவர். தனது பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலிக்கச் செய்ததோடு தமிழ் தேசியத்துக்கு லாலி பாடியவர். அவரது சொல்லாட்சியும் பொருள் நயமும் எம்மைத் திகைக்க வைக்கிறது.



"...............................................பெண்ணரசின்

மேனி நலத்தினையும் வெட்டினையுங் கட்டினையும்
தேனி னினியாள் திருத்த நலத்தினையும்,
மற்றவர்க்குச் சொல்ல வசமோ? ஓர் வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான் கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்"




வேறு மொழியில் உலகக் கவிஞன் யாராவது பெண்ணின் மேனி நலத்தினையும், வெட்டினையும், கட்டினையும் இவ்வாறு வர்ணித்திருப்பார்கள் என்பது ஐயமே!



"காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும், - அங்கு

தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்

துய்ய நிறத்தினவாய் -அந்தக்

காணி நிலத்திடையே - ஓர் மாளிகை

கட்டித் தரவேண்டும் - அங்குக்

கேணியருகினிலே -தென்னைமரம்

கீற்று மிள நீரும்,

பத்துப் பன்னிரண்டு -தென்னைமரம்

பக்கத்திலே வேணும் - நல்ல

முத்துச் சுடர்போல -நிலாவொளி

முன்பு வரவேணும் - அங்கு

............................................................

பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு

பத்தினிப் பெண் வேணும் -

எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைகள்

கொண்டுதர வேணும் ........"




தமிழகம் கைவிட்ட நிலையில் வாழ்நாளெல்லாம் பட்டினியோடு போரிட்ட ஒரு கவிஞனின் ஆசை எப்படியெல்லாம் சிறகடித்துப் பறக்கிறது? தனது இறுதி யாத்திரையை பத்துப் பன்னிரண்டு பேரோடு நடாத்திய பாரதியா இப்படிப் பாடினார்? அதனை நம்ப முடிகிறதா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:03 pm

இருந்தும் ஒரு குறை. பாரதியாருக்கும் தமிழன்னைக்கும் இருந்த உறவு நற்றவ வானிலும் சிறந்த தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு. தாயைப் போற்றாத பிள்ளை தரணியில் உண்டா?


தமிழா? வடமொழியா? எது உயர்ந்தது என்ற கருத்து மோதல் காலம் காலமாக நடந்து வருகிறது.


தமிழ் வழிபாட்டிற்கும், தமிழர் வீட்டுத் திருமணத்திற்கும் தகாத மொழி என்று தள்ளப்பட்டது. தள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் திருக்கோயில்களில் தேவாரமும் திருப்பாவையும் திருவெம்பாவையும் திருவாசகமும் ஓதுவதை விடுத்து வடமொழியில் மட்டுமே வழிபாடு நடாத்தி தமிழை தமிழன் கட்டிய தமிழ்நாட்டுக் கோயில்களில் இருந்து விரட்டியவர் யார்?

சமய குரவர்களான அப்பரும் சுந்தரரும் ஆளுடைப்பிள்ளையாரும் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 96,000 தேவாரப் பாடல்கள் ஆகும். அதில் அப்பரடிகள் பாடிய பாடல்கள் 49,000 என்பர். இந்தப் பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகள் தில்லைவாழ் அந்தணர்களின் தமிழ் எதிர்ப்பு உணர்வால் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் குடிகொண்டிருக்கும் தில்லையம்பலத்தில் செல்லரித்துப் போயின.

சோழப் பேரரசன் இராசராசன் ( கி.பி. 985-1014) மீட்டெடுத்த பதிகங்கள் வெறும் 796 (அப்பரடிகள் 313 பதிகங்கள்) மட்டுமே. "அரசே கவலற்க! இக்காலத்திற்கு வேண்டியனவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு வேண்டாதவற்றை யாமே செல்லரிக்க விட்டுவிட்டோம்" என இராசராசனுக்கு இறைவனின் வானுரை (அசரீரி) கேட்டதாம்! எனவே அவன் தில்லைவாழ் அந்தணர்களை மன்னித்து விட்டானாம்!

"திருமகள்போலப் பெருநிலச் செல்வியும்

தனக்கே யுரிமை பூண்டமை மனங்கொள

காந்த@ர்ச் சாலைக் கலமறுத் தருளி

வேங்கை நாடுங் கங்கபாடியுந்

தடிகை பாடியும் நுளம்ப பாடியும்

குடமலைநாடுங் கொலமுங் கலிங்கமும்

முரட்டொழிற் சிங்கள ரீழமண்டலமும்

இரட்டைபாடி யேழரை இலக்கமும்

முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமுந்

திண்டிறல் வென்றித் தண்டாற்கொண்டதண்


..........................................................................

தேசுகொள் கோ ராசகேசரி வர்மரான

உடையார் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு."




படை பல நடாத்தி களம்பல கண்டு வெற்றிவாகை சூடி அதனை மெய்கீர்த்தியாக எழுதிவைத்த இராசராச சோழனே முப்புரி நூலோரின் சூழ்ச்சிக்குப் பலியாகி விட்டான் என்பதை நினைக்க நெஞ்சம் கனக்கிறது.

"கோடன்" என்னும் குயவன் தமிழைப் பழித்து ஆரிய மொழியைப் போற்றிப் புகழ்ந்ததைக் கண்டு நக்கீரர் சினங்கொண்டார். அதனால் "இழவு வருக" என அவனை அவர் சபித்தார். அந்தக் குயவன் உடனே செத்து வீழ்ந்தான். நக்கீரர் பாடியதாகச் சொல்லப்படும் அந்தப் பாடல் இது.



"ஆரியம் நன்று தமிழ் தீ தெனவுரைத்த

காரியத்தாற் காலக் கோட் பட்டானைச் -சீரிய

அந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்

செந்தமிழே தீர்க்க சிவா"



பின்னர் சினம் ஆறிய நக்கீரர் அவனுக்கு மீண்டும் உயிர் தந்தார். இதன் வாயிலாக வடமொழியை விட ஒருவனை வாழவும் சாகவும் செய்யவல்ல தெய்வ ஆற்றல் தமிழுக்கு உண்டென்பதை நக்கீரர் மெய்ப்பித்தார். தமிழ்மொழியைப் போற்றிக் கற்குமாறு அவனை மாற்றினார். தமிழைப் பழித்த இன்னொரு ஆரியவரசன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த பிரகத்தனாவான். இவனுக்குத் தமிழின் உயர்வையும் சிறப்பையும் எடுத்துச் சொல்ல சங்கப் புலவர் கபிலர் பத்துப் பாட்டுக்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டைப் பாடினார் என்பது கதை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:06 pm


"எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?"



குயக்கோடன் தமிழைப் பழித்து ஆரிய மொழியைப் போற்றிப் புகழ்ந்ததைக் கண்டு நக்கீரர் சினம் கொண்டு அவனது உயிரை நீக்கம் செய்ததையும் பின்னர் மீண்டும் பாடி உயிர்த்தெழச் செய்ததையும் பார்த்தோம். அவனை உயிர்தெழச் செய்த பாடல் பின்வருமாறு. இந்தப் பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன.



"முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி

பரண கபிலரும் வாழி - முரணிய

ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்

ஆனந்தஞ் சேர்க்கசுவா கா"



திருவிளையாடற் புராணத்தை எழுதியவர் பரஞ்சோதி முனிவர். அவர் இலக்கண வரம்பிலாத ஏனைய சில மொழிகள் போலல்லாது தமிழ்மொழி இலக்கணச் சிறப்புடைய மொழி எனப் போற்றியவர்.


"கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து

பண்ணு றத்தெரிந் தாய்நதவிப் பசுந்தமிழ் ஏனை

மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ"
(திருவிளையாடற் புராணம்)


திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும் முருகக் கடவுளும் உட்பட 549 புலவர்கள் முதற் சங்கத்தில் உடனிருந்து தமிழாராய்ந்தனர் என்ற செய்தியை முதன் முதலாக இறையனார் களவியலுரை எழுதிய அடியார்க்கு நல்லார் என்ற உரையாசிரியரே தெரிவிக்கின்றார். இவரது காலம் கி.பி. 11 அல்லது 12ம் நூற்றாண்டாகும். சிலர் அவரது காலத்தை 16ம் நூற்றாண்டு என்றும் கூறுகிறார்கள். அடியார்க்கு நல்லார் கருத்தின் அடிப்படையிலேயே பரஞ்சோதி முனிவர் "கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து"எனப் பாடியிருக்கிறார்.


திருக்குறளின் சிறப்புப்பற்றி பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். வௌ;வேறு காலத்துப் புலவர்கள் பாடிய இப் பாடல்களைக் மாலையாகக் கோர்த்து திருவள்ளுவ மாலை என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடல்கள் சிலவற்றில் திருக்குறளை ஆரிய வேதம் நான்கினோடு ஒப்பிட்டும், தமிழ்மொழியை வடமொழியோடு ஒப்பிட்டும் புலவர்கள் பாடியுள்ளார்கள். உக்கிரப்பெருவழுதியார் என்ற புலவர் பாடிய பாடல் இது.



"நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்

தான்மலைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த -நூன்முறையை

வந்திக்க சென்னி, வாய், வாழ்த்துக, நன்னெஞ்சம்

சிந்திக்க, கேட்க செவி."
(திருவள்ளுவர் மாலை 4)


நான்முகன் தன் உருவை மறைத்து திருவள்ளுவராகத் தோன்றி நான்கு வேதங்களின் உண்மைப் பொருளை அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாற் பொருளாகத் தமிழில் தந்து கூறிய திருக்குறளாகிய திருமுறையை என் தலை வணங்குக, வாய் போற்றுக, நல்ல மனம் தியானிக்க. செவி கேட்க என்பது இதன் பொருள்..


ஆலங்குடி வங்கனார் என்ற புலவர் தமிழ் வளம் நிறைந்த மொழி என மிகவும் மகிழ்ந்து பாடியிருக்கிறார்.



"வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்

தௌ;ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் - தௌ;ளமுதம்

உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்

வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து." (திருவள்ளுவர் மாலை 53)



திருவள்ளுவரது பாட்டினது தீஞ்சுவையைச் சொல்லுமிடத்து, உண்ணப்படுகின்ற தௌ;ளிய அமுதினது தித்திப்பாகிய சுவையும் ஒப்பாகாது. அத்தௌ;ளிய அமுதை உண்டு அதன் சுவையை அறிபவர் தேவர்கள். வளம் பொருந்திய தமிழின் கண்ணதாகிய முப்பாலாகிய சிறந்த பாலை எவ்வுலகத்தாரும் மகிழ்ந்து உண்டு தீஞ்சுவை அறிவார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:07 pm

நத்தத்தனார் என்ற புலவர் "பாயிரம் நான்கு அதிகாரங்களையும் சேர்த்து மொத்தம் அரிய ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் வெண்பாக்களையும் ஓதியுணர்ந்த பின்பு, ஒருவன் போய் ஒருவரது வாயாலே கேட்டறிதற்கு நூலுளவோ? (இல்லை) நிலைபெற்ற தமிழிலே புலமை நிரம்பியோராகிப் பிறர் தம்மிடத்து வந்து கேட்க வீற்றிருக்கலாம்" என்று மொழிகிறார்.


மேலும் வெள்ளி வீதியார் என்ற புலவர் "ஒருவராலே செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும் திருவள்ளுவரால் அருளப்பட்டதன் வழியின் ஒழுகுவோர்க்குப் பயன் விளைவிலே பொய்படாத அவ்வேதம் ஓதுதற்குரியவர் அந்தணரே. பொய்படாத இத் திருக்குறள் ஓதுதற்கு உரியவர் அல்லாதார் உலகத்தில் இல்லை" என்கிறார்.


ஆரிய வேதம் செய்யா மொழி. வேதம் சொல்லளவில், கேள்வி மாத்திரையே நின்று விட்டது. ஏட்டில் எழுதினால் அதன் ஆற்றல் குறையுமென்று எழுதாது விட்டனர். மேலும் அதனை அந்தணர் மட்டுமே ஓதலாம். ஏனைய சூத்திரர் (தமிழர்) அதனைப் படிக்கக் கூடாது. காதால் கேட்கவும் அடாது. ஆனால் பொய்யா மொழியாகிய தமிழ் மறையோ பிறப்பு வேற்றுமையின்றி எல்லோரும் படித்துப் பயன்பெறுமாறு ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது. எனவே வடமொழியைவிட தமிழே சிறப்புடையது என்று வெள்ளி வீதியார் தீர்ப்பளிக்கிறார்!


பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் மகாகவி பாரதியார் போல தமிழ்த் தேசியத்துக்கு கால்கோள் இட்டவர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணார் அவரை "தமிழன் பள்ளி எழுச்சிப் பாடகர்" என விழிப்பார்.


சுந்தரனார் ஏனைய புலவர்களைவிட பலபடி மேலே சென்று வடமொழி வழக்கிழந்தமொழி தமிழ்மொழி என்றும் இளமை குன்றாத உயர்தனிச் செம்மொழி என்கிறார். மனோன்மணீயம் என்ற நாடக நூலுக்கு எழுதிய தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலில் "ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன் சீரிழமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே" என்று தமிழ்த் தாயைப் போற்றிப் பாடியிருக்கிறார். மேலும்



"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணந்தோர்கள்

உள்ளுவரோ மனுவாதி யொருகுலத்துக் கொருநீதி"


என்று தமிழர்கள் கண்மூடித்தனமாகப் போற்றும் மனுநீதியைச் சாடி திருக்குறளை குற்றமறக் கற்பவர்கள் ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசும் மனுநீதியை நினைக்கமாட்டார்கள் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.


மேற்கூறியவை யாவும் ஒருபுறம் ஆரிய வேதமான நால்வேதத்திற்கும் - தமிழ் மறையான திருக்குறளுக்கும், இன்னொருபுறம் வடமொழிக்கும் - செந்தமிழுக்கும் காலம் காலமாக ஒரு பனிப் போர் அல்லது பிரகடனப்படுத்தப் படாத யுத்தம் இடம்பெற்று வந்திருப்பதைச் எடுத்துக் காட்டுகிறது.


வடமொழியோடு சமரசம் செய்து கொண்ட புலவர்களும் இருந்திருக்கிறார்கள். வண்ணக்கஞ் சாத்தனார் என்ற புலவர்-



ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்(து) - ஆரியம்

சீரிய தென்தொன்றைச் செப்பரிதால் -ஆரியம்

வேதம் உடைத்து, தமிழ்திரு வள்ளுவனார்

ஓது குறட்பா உடைத்து"
(திருவள்ளுவ மாலை 43)


வடமொழி வேதமுடைத்து, தமிழ் மொழி திருவள்ளுவ நாயனார் சொல்லிய குறட்பாவுடைத்து. ஆதலால் வடமொழியையும் தென்மொழியையும் ஆராய்ந்து இதைக் காட்டிலும் இது சிறப்புடையது என்று ஒன்றைத் தெரிந்து சொல்லுதல் கூடாது என்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:09 pm

வண்ணக்கஞ் சாத்தனார் கூடப் பருவாயில்லை. வடமொழி- தென்மொழி இரண்டும் ஒன்றாக வைத்து ஒப்பிடக்கூடியது என்றார். வடமொழியை உயர்த்தி, தமிழைத் தாழ்த்திப் பாடிய பிற்கால இலக்கண ஆசிரியர் ஒருவர் இருந்திருக்கிறார். அவரிடம் அளப்பரிய தமிழ்ப் புலமை இருந்தது. ஆனால் தமிழ்ப் பற்று இருக்கவில்லை. அவர் பெயர் ஈசான தேசிகர். நெல்லை ஈசான மடத்துத் தலைவராக இருந்தமையால் அப்பெயர் பெற்றார் என்பர். அவருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் சாமிநாத தேசிகர் என்பதாகும்.


இலக்கண விளக்க நூலாசிரியராகிய வைத்தியநாத தேசிகரால் "தொல்காப்பிய முதலிய நூல்களை எழுத்ததெண்ணிப் படித்த சுவாமிநாத மூர்த்தி" என்று பாராட்டப்பெற்றவர். "இலக்கணக் கொத்து" என்னும் நூலை வடமொழி இலக்கணம் தழுவி எழுதியவர்.


இவர் "வடநூலை விட்டுத் தனியே தமிழ்நூல் நடவாதது நியமமே" என்கிறார். எப்படி?


"தமிழ்நூற்கு அளவிலை அவற்றுள்

ஒன்றே யாயினும் தனித் தமிழ் உண்டோ?"




"ஐந்தெழுத் தாலொரு பாடையென்று

அறையவே நாணுவர் அறிவுடையோரே!

ஆகையால் யானும் அதுவே அறிக"




திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல். அதில் காணப்படும் 133 அதிகாரங்களிலும்நூற்றுக்குச் சற்று அதிகமான வடமொழி சொற்களே காணப்படுகின்றன. அதாவது ஒரு அதிகாரத்துக்கு ஒரு வடசொல். எனவே திருக்குறள் தனித் தமிழ் நூல்தான்.

தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 33 என்று சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிப்போந்தார். இதனைத் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூல்மரபில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.


முதல் எழுத்துக்கள்



எழுத்தெனப் படுவ

அகரம் முதல் னகரம் இறுவாய்

முப்பஃது என்ப,

சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே



தமிழ் எழுத்துக்கள் "அ" முதல் "ன" இறுதியாக முப்பது எனக் கூறுவர். சார்பு எழுத்துக்கள் மூன்றும் அல்லாமல்.


சார்பு எழுத்துக்கள்


அவை தாம்

குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம்

ஆய்தம் என்ற

முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன.



சார்பு எழுத்துக்கள் குறுகிய ஓசையை உடைய இகரம், குறுகிய ஓசையை உடைய உகரம், ஆய்தம் என்ற மூன்று புள்ளிகளை உடையவை. இவை எழுத்தை ஒத்து அமைவன.

எழுத்தெண்ணி தொல்காப்பியத்தைக் கற்ற சாமிநாத தேசிகர் தமிழில் ஐந்தெழுத்து மட்டும் உண்டு என்று எப்படிக் கண்டுபிடித்தார்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:12 pm

"ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்!"


வடமொழியில் இல்லாமல் தமிழில் மட்டுமே இருக்கும் எழுத்துகள் "ற ன ழ எ ஒ" என்பன. இந்த ஐந்து எழுத்துக்கள் மட்டும் தமிழ் எழுத்துக்கள் என்கிறார் சாமிநாத தேசிகர். மற்றவை எல்லாம் தமிழ் எழுத்துக்கள் இல்லை என்பது அவரது வாதம். தமிழ் மொழியில் ஐந்தெழுத்து மட்டுமே இருப்பதால் அவர் நாணுகிறாராம்.


இப்படி வயிற்றைத் தமிழ் மண்ணுக்கு வைத்து உள்ளத்தை வடமொழிக்கு வைத்த சாமிநாத தேசிகர் போன்ற தமிழ்ப் பகைவர்கள் போல் வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள்.



வானுயர் வள்ளுவரின் திருக்குறளுக்கு பதின்மர் உரை செய்திருக்கிறார்கள். பரிதியார் அதிலொருவர். இவரது காலம் 13 அல்லது 14 நூற்றாண்டாகும். தமிழ்மறை என்று போற்றப்படும் திருக்குறளுக்கு உரையெழுதிய பரிதியார் சாமிநாத தேசிகரை மிஞ்சும் வண்ணம் தமிழ்மொழியைப் பழித்தும் இழித்தும் எழுதியிருக்கிறார்.


"தமிழ் பைஸாச பாஷை. சமஸ்கிருதம் தேவபாஷை. தமிழ் அபிவிருத்தி அடைந்ததும் அது இந்நாள்வரை ஜீவித்து வருவதும் வடமொழியால்தான். வேதாந்த சித்தாந்த சாஸ்திர பூஜா விதிகளையும் ஸ்தோத்ரா பூஜா விதிகளையும் தவயோக ஸாதனங்களையும் நாடக நாட்டிய கலா ஞானங்களையும் தமிழர் சமஸ்கிருத்திடமிருந்தே ஆஸ்ரயித்துக் கொண்டனர். அதனால் சம்ஸ்கிருதப் பதங்களை லிவிகளைத் தமிழில் வெகுவாக ஸம்பத்தப்படுத்தி தமிழைப் போஷிக்க வேண்டும்."



தமிழில் உள்ள வேதாந்த சித்தாந்த நூல்கள், நாடக நாட்டியக் கலைகள் வடமொழியிலிருந்து கடன்பெற்றவை என்று சொல்வதோடு நிற்காமல் வடமொழிச் சொற்களை தமிழில் கூடியளவு கலந்து தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார் பரிதியார். இப்படித் தமிழில் "சம்ஸ்கிருதப் பதங்களை வெகுவாகச் ஸம்பந்தப்படுத்தி தமிழைப் போஷிக்க வேண்டும்" என்பதை செயலிலும் காட்டுமாறு தமிழை மணிப்பிரவாள நடையில் எழுதி "போஷிக்கவும்" செய்கிறார்!


தமிழ் உட்பட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளை "பைசாச பாகதம்" என்ற வகுப்பினுள் அடக்கி விடுவது வடமொழியாளரது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. திராவிட மொழிகளை மட்டுமல்லாது அக்காலத்தில் வழங்கிய திபத்துப் போன்ற உள்நாட்டு மொழிகளையும் "பைசாச பாகதம்" என்ற தொகுப்பிற் சேர்த்திருக்கிறார்கள். "பைசாச பாகதம்" என்றால் பைசாசம் (பசாசு) அல்லது பேய்களால் பேசப்படும் மொழியென்பது பொருள்.


சாமிநாத தேசிகர், பரிதியார் போன்றவர்களின் உபயத்தால் வடமொழியே இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி என்ற மாயை நீண்ட காலமாக நீடித்து வந்திருக்கிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழின் பெருமையை எடுத்துச் சொல்ல ஒரு பாரதியும், சுந்தரனாரும், மறைமலை அடிகளாரும், பாரதிதாசனும், வேவநேயப் பாவாணரும் இல்லாத ஒரு காலகட்டத்தில் கல்டுவெலார் என்ற மொழிஞறியர் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" (Comparative Grammar of the Dravidian Languages) என்ற நூலை எழுதி மொழித்துறையில் அதுவரை மறைக்கப்பட்டு அல்லது மறுக்கப்பட்டு வந்த ஒரு உண்மையைத் தெளிவாக்கினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:13 pm

தமிழ் மொழிக்கும் ஆரியத்திற்கும் தொடர்பில்லை என்றும் அது ஆரிய மொழிக்கும் முந்தியதும் மாந்தன் முதன்மொழிக்கு நெருக்கமானதும் என்ற பேருண்மையை கல்டுவெலார் பல ஆண்டு காலம் ஆராய்ந்து நிலைநிறுத்தினார். (இதையிட்டு பின்னர் எழுதுவோம்.)


இப்போதெல்லாம் தமிழர்கள் கொஞ்சம் விழித்துக் கொண்டு விட்டார்கள். தமிழ் தமிழ்நாட்டில் சட்டப்படி ஆட்சிமொழி. தமிழ்மொழிக்கு தனிப் பல்கலைக் கழகம் (தஞ்சைப் பல்கலைக் கழகம்) தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இப்போது உலகளாவிய தமிழர்கள் இணைய தளப் பல்கலைக் கழகத்தில் தமிழில் பட்டப் படிப்புப் படித்துப் பட்டம் பெறலாம். அந்தப் பட்டத்தை தஞ்சைப் பல்கலைக் கழகம் வழங்கும்.


இருந்தும் ஏற்கனவே குறிப்பிட்டவாறு அன்றுபோல் இன்றும் தமிழின் தொன்மையையும், தண்மையையும், வண்மையையும், தொடர்ச்சியையும் ஒப்புக்கொள்ளாத தமிழ்ப் பகைவர்கள் சிலர் இருக்கிறார்கள்.


ஆதி சங்கரர் (7 ஆவது நூற்றாண்டு) கேரளத்தில் கல்லாடி என்ற ஊரில் பிறந்தவர். ஐந்து வயதில் வேதங்களையும் உபநிடதங்களையும் கற்றறிந்து எட்டு வயதில் சன்னியாசம் பெற்றுக் கொண்டவர். அத்வைத வேதாந்தத்தை (இருமையற்ற கோட்பாடு) உருவாக்கியவர். இந்தியாவின் நான்கு திசைகளிலும் கால் நடையாகச் சென்று சமயப்பணி ஆற்றியவர். தெற்கில் சிருங்கேரி, கிழக்கில் பூரி, மேற்கில் துவாரகா, வடக்கில் பண்டரிநாத் என நான்கு இந்து மதபீடங்களை நிறுவியவர்.


இந்தியாவில் சமணம், பவுத்தம், உலோகாயுதம் அழிவதற்கும் இந்து மதத்திற்குப் புத்துயிர் அளிப்பதற்கும் சங்கரரின் அத்வைத வேதாந்த ஞானமும் வாதத் திறமையும் கைகொடுத்தது.


காஞ்சி காமகோடிபீடமும் ஆதி சங்கரரால் நிறுவப்பட்டதென்று சொல்லப்படுகிறது. அதன் பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார். அவரும் பரிதியார்போல தமிழ்மொழியை "நீசபாஷை" எனப் பழித்தும் வடமொழியை "தேவபாஷை" எனப் போற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழ்மொழி "நீசபாஷை" என்பதால் அது ஆண்டவன் திருச்செவிக்கு ஆகாது என்கிறார்.


அப்பர், சுந்தரர், ஆளுடைப்பிள்ளையார் மூவரதும், அருண்மொழிவாசகரையும் சேர்த்து நால்வரதும், தாயுமானாரதும் தமிழ் கேட்கும் இறைவன் திருட்செவிக்கு வடமொழிதான் பிடிக்கும், தமிழ் பிடிக்காது என்று ஜெகக்குரு சங்கராச்சாரியார் சொல்வது ஆணவமாகும். இது பரம்பரை பரம்பரையாக "அவாளுக்கு" தமிழ் மீது கொண்டுள்ள பகைமைக்கு எடுத்துக் காட்டாகும்.



காஞ்சிப் பெரியவர் தன்னுடன் தனக்கு விளங்காத சமஸ்கிருத மொழியிலே பேசியதைப் பார்த்த இராமலிங்கனார் என்ற அரச ஊழியர் அருகில் இருந்தவரைப் பார்த்து "சுவாமிகள் ஏன் தமிழில் உரையடாமல் சமஸ்கிருதத்தில் பேசுகிறார்" என்று கேட்டதற்கு "மதியம் பன்னிரண்டெரை மணிக்கு சந்திர மவுலீஸ்வரர் பூசை நடக்கிறது. அதுவரை சுவாமிகள் நீச பாஷையில் பேசமாட்டார்கள்" என்று பதில் வந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:15 pm

தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் சைவசமய குரவர்களான நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் (7-8ம் நூற்றாண்டு) அளப்பரிய தொண்டாற்றியிருக்கிறார்கள்.


பாரதியார் பாடியது போல தமிழ்மொழி இனிமையான மொழி என்பதை நாயன்மார்களின் தேவார திருவாசகங்களும், ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் எண்பிக்கின்றன.

தமிழின் இலக்கிய வளத்திற்கு அவர்களது பாடல்கள் அரண் சேர்க்கின்றன.


இவர்கள் இறை பக்தியோடு தமிழ்ப் பற்றையும் ஊட்டி வளர்த்தார்கள். இவர்களில் "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் திருஞானசம்பந்தர்" என ஆளுடைப்பிள்ளையாரை சுந்தரரே பாராட்டுவார், "தமிழோடிசை பாடல்மறந்தறியேன்" என அப்பர் அருளியுள்ளார்.



"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா -நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்"



எனப் பூதத்தாழ்வார் தனது ஆழமான கடவுள் பக்தியையும் தமிழ் பக்தியையும் காட்டுமாறு ஒருசேரப் போற்றிப் பாடியிருக்கிறார்.


வடமொழியின் மீது ஆழ்வார்களுக்கு மிகுந்த ஈடுபாடும் மதிப்பும் உண்டு. அதே நேரத்தில் தமிழின் மீது அவர்கள் கொண்ட காதலும், ஈடுபாடும் அதைவிட உயர்ந்து காணப்பட்டது. செந்தமிழின் முழுவடிவமாகவே அவர்கள் திருமாலைக் கண்டு அனுபவித்துப் பாடினார்கள்.


"செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி" என்ற அடி திருநெடுந்தாண்டகத்தில் உள்ளது. இதன் பொருள் திருமால் தமிழிசையாகவும் வடசொல்லாகாவும் உள்ளான் என்பது. தமிழ் முதலில் சொல்லப்பட்டு வடமொழி பின்னர் சொல்லப்படுவது கவனிக்கத் தக்கது. மேலும் தமிழ் என்று சொல்லும்போது ஓசை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். வடமொழி என்று சொல்லும்போது வெறுமனே வடசொல் என்கிறார்.


வடமொழியிலுள்ள வேதங்களைப் புரிந்து கொள்வதற்கு ஆழ்வார்களின் ஈரத் தமிழ்ப்பாசுரங்கள் ஒன்றே போதும் என வேதாந்த தேசிகர் பாடுகிறார்.



"செய்ய தமிழ் மாலைகள் தெளிய ஓதி

தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோம்"




"செந்திறத்த என்ற சொல்லுக்கு இனிமை என்பது பொருள். இனிய தமிழ் என்பது முரட்டு சமஸ்கிருதம் என்பதற்கு மாறுபட்டது" இவ்வாறு "தமிழ் இலக்கியங்களில் வைணவம"; என்ற நூலில் இந்திரா பார்த்தசாரதி எழுதியிருக்கிறார்.


சைவசமய மறுமலர்ச்சிக் காலத்தில் தோன்றிய சமய இலக்கியங்களான தேவார திருவாசகங்களை பத்தாம் நூற்றாண்டில் (பிற்காலச் சோழர்கள் எழுச்சி பெறத் தொடங்கியதும் இந்த நூற்றாண்டே) வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி வகுத்தும், தொகுத்தும் பண்முறையில் முறைப்படுத்தினார். இவையே சைவ சித்தாந்த தத்துவத்தின் ஊற்றுக்களாக அமைந்தன. இவற்றின் பொதுப் பெயர் பன்னிரு திருமுறை ஆகும்.


நம்பியாண்டார் நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததுபோல் அதே பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் தமிழ் வைணவத்தின் திருமுறையான நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைக் கண்டு பிடித்து, பகுத்து, பண் அமைத்து ( நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு மட்டும் மதுரகவிகள் ஏற்கனவே பண் அமைத்துவிட்;டார்) முறைப்படுத்தினார். நாதமுனிகள் பெருமளவு தமிழறிவும், தமிழ்ப்பற்றும், வேதாந்த ஞானமும் கைவரப்பெற்றவர். வைணவத் திருமுறையின் கண்டுபிடிப்பே சைவத் திருமுறைகளைக் காணவும் வழிவகுத்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:18 pm


"பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைல்லார்..."



அரிஞ்சய சோழரின் மறைவை அடுத்து அவரது மகனும் முதலாம் இராசராசனின் தந்தையுமான சுந்தர சோழர் (கி.பி. 955-985) முடிசூட்டிக் கொண்டார். அதே மூச்சில் தமது வீரத் திருமகன் "வீரபாண்டியன் தலை கொண்ட" ஆதித்த கரிகாலனுக்கும் இளவரசப் பட்டம் கட்டி வைத்தார்.


சுந்தர சோழரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக அமைச்சர் அநிருத்தர் விளங்கினார். இவர் தனது வேலைப் பளுவுக்கு மத்தியிலும் தமது நண்பர் மாதவப் பட்டரோடு திருவரங்கத்திற்கு (ஸ்ரீரங்கம்) அடிக்கடி வந்து கொண்டிருந்தார்.


இப்படி வரும்போதெல்லாம் நாதமுனிகள் தனது சீடர்கள் சகிதம் திருமால் வெளிவீதி எழுந்தருளும் போது நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும் இசைப் பொழிவுகளையும் தப்பாமல் கேட்டு வந்தார். நாதமுனிகளிடம் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் மேன்பைபற்றிக் கேட்டறிந்து கொண்டார்.


அதில் திருவாய்மொழி திருமங்கையாழ்வாரின் காலத்தே திருவரங்கத்தில் வேதங்களோடு ஓதப்பட்டதையும் அதனைத் தான் உயிர்ப்பிக்க தமது ஆசார்யராகிய பராங்குசதாசருக்கு அளித்த உறுதி மொழியைப் பற்றியும் நாதமுனிகள் அநிருத்தருக்கு எடுத்துச் சொன்னார்.


அவருக்கு ஏதாவதொரு வகையில் உதவ வேண்டும் என்று எண்ணம் அநிருத்தரது உள்ளத்தில் தோன்றியது. நாதமுனிகளை அழைத்துப் பேசுமாறு நம்பெருமாள் ஸ்ரீகார்யம் அவர்களைப் பணித்துவிட்டு அநிருத்தர் தஞ்சை போய்விட்டார்.


ஸ்ரீகார்யம் நாதமுனிகளை வரவழைத்து பின்வருமாறு பேசினார்.


"ஐய, நாதமுனி! கோவிலுக்கு வரும் மக்கள் எங்கள் கோயில் உற்சவங்கள், பூசைகளைக் காட்டிலும் உங்கள் பிரபந்தப் பாடல்களிலும், சொற்பொழிவுகளிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முன் எப்போதும் இல்லாதவாறு மக்கள் கூட்டம் திருவிழாக்களின்போது அலை மோதுகிறது. அதனால் திருவரங்கமே ஒரு புதிய கலகலப்போடும் களையோடும் காணப்படுகிறது.


இதனால், எங்களில் சிலர் உங்கள் பாடல்களையும் உற்சவத்தின்போது சேர்க்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்கிறார்கள். இது உமது இறைபணியின் விரும்பத்தகாத எதிரொலி. நீர் தனிப்பட்ட முறையில் தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் எங்களுக்கு மறுப்பில்லை. ஆனால் அதைக் கோயில் வேதாத் யயனத்தோடேயே இணைத்துவிட வேண்டும் என்பது என்ன நியாயம்? அனாதியான வேதங்களோடு அண்மைக் காலத்தில் வாழ்ந்த ஆழ்வார்களின் தமிழ்ப் பாடல்களை இணைப்பது பிராமணர் என்று கூறிக் கொள்ளும் உமக்கு அடுக்குமா? சொல்லும்?"


சொல்கிறேன் என்ற நாதமுனிகள் உடன் பாடினார்.


"வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறு எங்கள்
வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே சரண்"


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:19 pm

தொடர்ந்து நாதமுனிகள் மணிப்பிரவாள உரைநடையில் கேள்விகளுக்கான விடையைக் கூறினார். சொல்லிய சொல்லல் என்ற குற்றச்சாட்டுக்கு நான் ஆளாகினாலும் அதன் முக்கியத்துவம் கருதி நாதமுனிகளது பதிலை அப்படியே தருகிறேன்.


"உங்கள் மனத்தில் மூன்றுவித ஆட்சேபங்கள் ஒன்றோடொன்று உரசிக் கிடக்கின்றன. ஸம்ஸ்கிருதம், திராவிடம் - என்ற பாஷைப் பிரச்சினை நாம் முதலில் அறுத்துக் கொள்ளவேண்டும். எனெனில், அதுவே பலரின் அடிமனதில் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை சம்பாஷணைகளில் நான் கவனித்திருக்கிறேன்.


ஸம்ஸ்கிருத மோகம் பிராமணர்களின் கண்ணை மறைக்கும் ஒரு மாயை. அது விலகினால் அன்றி உண்மை புலப்படாது.


ஸம்ஸ்கிருதம் ஒரு தேவ பாஷை என்பதை நான் மறுப்பதாக யாரும் தப்பர்த்தம் செய்து கொள்ளக்கூடாது. பூ மண்டலத்திலேயே அதற்கிணையாக இன்னொரு பழைமையான பாஷை இல்லை. வேதங்களைப் போல் அனாதியான, அதாவது இன்ன காலத்தியது என்று அறியக் கூடாத அளவுக்குப் பழைமையான, கிரந்தங்கள் வேறெங்கு மில்லை.


ஆனால், பரத கண்டத்திலேயே ஸம்ஸ்கிருத்திற்கு அடுத்தாற்போலச் சிறந்த பாஷை எது? ஸம்ஸ்கிருதம் சிவபெருமான் ஏந்திய டமருகத்தின் வலப்பக்கத்தில் இருந்தும், திராவிடம் அதன் இடப்பக்கத்திலிருந்தும் தோன்றியதாகச் சொல்லப்படுவதை நீங்கள் கேட்டதில்லையா? நாம் வேண்டுமானால் நாராயணனே இரண்டு மொழிகளையும் படைத்தான் என்று கொள்ளலாம். திராவிடத்தின் வியாகரணத்தை அகஸ்தியரே செய்தார் என்கிறார்கள். இவர் வேதகால ரிஷி அல்லாவா?


இன்றுள்ள தமிழ் வியாகரணங்களுள் எல்லாம் பழைமையான தொல்காப்பியத்தைச் செய்தவர் அகஸ்தியரின் பிரதம சிஷ்யர் என்றுதானே சொல்கிறார்கள்.? இந்தத் தொல்காப்பியமும் பாணினியின் அஷ்டாத்தியாயிக்கும் முற்பட்ட இந்திர வியாகரணமான ஐந்திரத்துக்கு இணையானதாம். பாரதப் போரில் உணவளித்த சேரமான் ஒருவனைப் பற்றிய பாடல் ஒன்று புறனானூறு என்ற கிரந்தத்தில் உண்டென்றும், அதில தொல்காப்பிய விதிகளை மீறிய இடங்களும் இருப்பதால், இவ் ஆதி வியாகரணம் குறைந்தது துவாபர யுதத்துக்காகிலும் பிற்படாதென்றும் நான் பல வித்துவான்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.


திராவிட சங்கத்தார் முன் திராவிட பாஷையைக் குறைத்து ஸம்ஸ்கிருதத்தை மட்டுமே பாராட்டி வேட்கோ குயக் கொண்டான் பேசியதாகவும், அது கேட்கப் பெறாத வேளாப் பார்ப்பனரான நக்கீரர்


"முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி!
"பரண கபிலரும் வாழி! - அரணிலா
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக் கொண்டான்
ஆனந்தம் சேர்க சுவாகா"



எனப் பாடவே அவன் இறந்துபட்டானாம். பின் அவனைச் சேர்ந்தோர் பிழை பொறுக்க வேண்டினராக அவர்க்கிரங்கி அப்புலவர் பெருந்தகை,


"ஆரியம் நன்று, தமிழ் தீ தென உரைத்த
காரியாத்தால் காலக்கோட் பட்டானை -சீரிய
அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையால்
செந்தமிழே தீர்க்க சுவாகா"



எனவும் பாடி உயிர்ப்பித்தாகவும் சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். சோழியப் பிராமணராய் மூங்கிற் குடியிற் பிறந்து விஷ்ணு தருமோத்திர முதலாகிய சிரந்தங்களை எல்லாம் கற்றுத் துறைபோகிய தொண்டரடிப் பொடிகள் தாம் இறைவனைப் பாடப் புக்க போது தமிழாலேயே பாராட்டினார். அது மட்டுமா? அவர் செய்த ஸம்ஸ்கிருத கிரந்தம் ஒன்று கூட இல்லை.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக