புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
59 Posts - 50%
heezulia
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
3 Posts - 3%
Guna.D
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
1 Post - 1%
Shivanya
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
12 Posts - 2%
prajai
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
9 Posts - 2%
Jenila
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
4 Posts - 1%
jairam
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அழகுராணி Poll_c10அழகுராணி Poll_m10அழகுராணி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுராணி


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 26, 2010 9:28 pm

அழகுராணி



அழகுராணி Pbucket

ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன.

ஆனாலும் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும்.
ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும்
மவுனமாக இருக்கும்.

``நம் நால்வரில் நான் தான் மிக அழகு! மனிதர்கள் கூட எங்கள்
இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள்!'' குதித்து குதித்து நடன
மாடியபடி சொல்லியது குரங்கு.


``நாங்கள் மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்தும்
வாழ்கிறோம்! எங்களிடம் அழகும் அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு
தேவதை!'' என்றது எலி.

``மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூட உங்களைப்
பற்றிக் கூறுவார்கள்! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில்
அதைப் போன்றே அழகாக இருக்கிறேன்!'' பெருமிதம் பொங்கக் கூறியது
வெட்டுக்கிளி.

``நான் இந்த அழகுப் போட்டிக்கே வர வில்லை!'' முயல் சொல்ல, மூன்றும் சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது.

``என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல் ஓடி வரும் அழகே தனிதான்!'' குரங்கு சொல்லியது.

``ஆமாம்... ஆமாம்...!'' ஒப்புக் கொண்டது வெட்டுக்கிளி.

``நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா? அறிவு, புத்திசாலித்தனம்
எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக் கொள்ள முடியும்''
என்றது எலி.

``எனக்கொரு யோசனை தோன்றுகிறது! நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டி நடத்தினால் என்ன?'' கேட்டது வெட்டுக்கிளி.

``போட்டி நடத்தலாம். ஆனால் நடுவர் யார்?'' சந்தேகம் எழுப்பியது எலி.

``நடுவராக நானிருக்கிறேன்!'' திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. அனைத்தும் மேலே பார்க்க, மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது.

``நீங்கள் எப்படி?'' ஆச் சரியப்பட்டது குரங்கு.

``நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். முயலை யும்
அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் தேடி வாருங்கள். ஆனால் நான்
தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள
வேண்டும்!'' என்று காகம் தன் முகவரி கூறியது.

``அப்படியே செய்கிறோம்...'' அனைத் தும் சேர்ந்து குரல் கொடுத்தன.

மறுநாள் அனைத்தும் அழகிய அழகுராணி கனவில் மிதந்து காகத்தைத் தேடி போய்க் கொண்டு இருந்தன.

அப்பொழுது குருவி ஒன்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது. அதன் கால்களில் காயம் தெரிந்தது.

``எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன். ஒரு சிறுவன் கல்லெடுத்து
எறிந்து காலில் காயப்படுத்தி விட்டான்!'' குருவி பல கீனமாக உதவி கேட்டது.

``நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அபசகுனமாக பேசாதே!'' கடுமையாக கூறியது குரங்கு.

குருவியைப் பார்த்த எலியும், வெட்டுக்கிளியும் முகம் திருப்பி சென்று
விட்டன. முயல் குருவி அருகே தயங்கி நின்றது. பின்னர் அவசர அவசரமாக மருந்து
தேடிக் காலில் வைத்து விட்டு அழகிப்போட்டிக்கு சென்றது.

அழகிப் போட்டி தொடங்கியது. குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை. மீதி மூன்றும் மனசுக்குள் மகிழத் தொடங்கின.

``அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண் போட்டு விட்டேன். இனி உங்கள் நல்ல
குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன்! இதற்குத்தான் அதிக மதிப்பெண்கள்
ஒதுக்கி இருக்கிறேன்!'' காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும்
ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.

அப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது.

``முயல்தான் அழகு ராணி! இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான்
பெருமைப் படுகிறேன்! குருவி என் நண்பன்தான்! ஒரு ஆபத்திலிருந்து முயல்
காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது. அப்பொழுது மூவரும்
உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி வருத்தப்பட்டது! உதவும் நல்ல மனசு
உள்ளவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்!'' காகம் கூறியதும் எலி,
வெட்டுக்கிளி, குரங்கு ஆகியவற்றின் முகங்கள் அஷ்டகோணலாகின.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக