புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_c10 
30 Posts - 50%
heezulia
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_c10 
72 Posts - 57%
heezulia
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Feb 05, 2011 5:06 pm

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Kid-and-stress


தோல்வி ,வலி ,அவமானம்





மூன்று அத்தியாயம் கொண்ட இக் கிறுக்கலை தொடர்ந்து படியுங்கள் (இது கற்பனை கதையல்ல)



இன்று தேர்ச்சி அறிவிப்பு
பள்ளி முற்றத்தில் ஆவலாக
கூடி இருந்தார்கள் மாணர்வர்கள்




பள்ளி அறிவுப்பு பலகையின்
தேர்ச்சிப் பட்டியலில்
என்பெயரை காணவில்லை




இந்தவருஷம் தோத்திட்டியா
மறுபடியும் அதே வகுப்புதானா
கேலிசெய்தனர் சகமாணவர்கள்




அப்பா அம்மாவிடம்
எப்படிச் சொல்வேன்
தேர்வில் தோற்றதை




அடிவயிற்றில் புளியயை
கரைக்குது என்பார்கள்
அதே நிலையில் நான்




தேறிய சகமாணவர்கள்
இனிப்புக்கள் உபசரித்து
ஆனந்த கொண்டாட்டங்களில்




சுடுநீரில் தவறிவிழுந்த
பூனையைப் போல்
கூனிக்குறுகி நிற்கிறேன் நான்




மாலைகழிந்து இரவுவந்தும்
வீட்டுக்கு பயணிக்க
மறுத்தது என் கால்கள்




நான் வீடுபோகும்முன்
அம்மாவின் காதுகளில் எட்டியது
என்னைப்பற்றிய செய்தி




நெஞ்சுமுழுக்க பயமும்
நடுங்கிய உடலுமாய்
வீட்டு முற்றத்தில் நான்




எங்கடா போனா அக்கா
ஏன் இவ்வளவுநேரம் அண்ணன்
எந்த கேள்வியுமின்றி விழுந்தது
அம்மாவின் முதல் அடி




கைவலிக்கும் வரை அடித்தும்
அடியின் வலி தெரியவில்லை
ஏற்கனவே மறத்துபோயிருந்தது உடம்பு




தெருவே கூடி நின்று
அடியை ரசித்து நிற்கையில்
உள்ளுக்குள் ரணமாக வலித்தது




ஒஅப்பனுக்கு என்னபதில் சொல்லுவேன்
இப்படி தோத்திட்டு வந்துநிக்கிறானே
புலம்பியபடி அம்மாவின் அழுகை




இரவில் உணவு சமைத்திருந்தும்
உண்ணக் கசந்து உண்ணாவிரதம்
கிடந்தது ரத்த உறவுகள்




வந்த உறவுக்காரங்களோ
ஆறுதல்கள் சொல்லி
திரும்பிச் சென்றார்கள்




வலிகளை சுமந்துகொண்டு
எப்படி உறங்கின்னேன் தெரியவில்ல
வழக்கம் போல விடிந்தத
மறுநாள் காலை




இரண்டு நாளாகியும்
பேசாத அம்மாவின் முகம்
தனிமையில் உள்ளுக்குள் அழுதேன்




வகுப்பறைகளை முடுகிட்டும்
படிப்பை கவனிக்காலமும்
ஊரைச் சுற்றியதன் பலன்




நித்தமும் காலை மலைகளில்
புத்தகங்கள் சுமக்கும்
கழுதையாக இருந்திருக்கிறேன்




இன்னும் சில தினங்களில்
திறக்கும் பள்ளிக்கூடம்
அதேவகுப்பு புதிய சகாக்கள்




ஆசிரியரும் சகாக்களும்
என்னோக்கி நகைக்கும் காட்சி
சிந்தனைகளில் வந்துபோனது




ஏச்சுக்கும் பேச்சுக்கும் முற்றுப்புள்ளியிட
பள்ளி உறவை முறிப்பதென்று
சுயமுடிவு எடுத்தேன்




அவமானங்களை மறக்க
ஊரையும் வீட்டையும் துறக்க
முடிவு கொண்டேன்






தொடரும். . . . .








செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 5:22 pm

அருமை அடுத்த பதிவிற்காக எதிர்பார்து காதிருக்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 05, 2011 5:23 pm

அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் ஸார்,

என்ன சொல வாரிக? புன்னகை



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! 812496
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Feb 05, 2011 6:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 05, 2011 7:43 pm

இன்னுமொரு உலக இயல்பான சம்பவங்கள்... அதன் அடர்த்தியை அதிகமாக்கி சோகம் தெறிக்க கோர்த்து வந்த வரிகள்... அருமை நண்பரே...

தொடருங்கள்...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Feb 06, 2011 10:03 am

SK wrote:அருமை அடுத்த பதிவிற்காக எதிர்பார்து காதிருக்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நண்பரே அடுத்த பதிவு உடனே வருகிறது




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Feb 06, 2011 10:05 am

prakash.lux wrote:அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் ஸார்,

என்ன சொல வாரிக? புன்னகை

மீதி அத்தியாயத்தையும் படியுங்க நண்பா சொல்ல வருவது புரியும்






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Feb 06, 2011 10:07 am

கலை wrote:இன்னுமொரு உலக இயல்பான சம்பவங்கள்... அதன் அடர்த்தியை அதிகமாக்கி சோகம் தெறிக்க கோர்த்து வந்த வரிகள்... அருமை நண்பரே...

தொடருங்கள்...!


கலை அண்ணா ஊக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Feb 06, 2011 1:02 pm

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! Nandalala120608_1


பயணம், இருள், பயம்



பள்ளியும் திறந்தது
புதிய வகுப்பறை மகிழ்ச்சியில்
சக மாணவர்கள்




அவரவர் நண்பர்களுடன்
பேசிக்கொண்டு இருதார்கள்
தனிமையில் மௌனமாக நான்




என்னுடன் பேசத்தயங்கும் சகாக்கள்
யாராவது பேசமாட்டார்களா
ஏங்கியது என் மனம்




கூட்டத்தில் இருந்தும்
தனிமையை உணர்ந்த
ரணமான நாட்கள்




இரண்டுவாரங்கள் உருண்டோடியது
புத்தகம் வாங்க போகிறேன்
அக்காவிடம் பொய்சொல்லி
பணம் வாங்கினேன்




வார விடுமுறை கழிந்து
வழக்கம்போல பள்ளி புறப்பெட்டு
பள்ளிக்குச் செல்லவில்லை




கையில் முப்பது ரூபாயும்
போட்டிருந்த பள்ளியுடையுடன்
பஸ் ஏறினேன்




எல்லாரும் ஒரு ஊரைச்சொல்லி
பயணசீட்டு வாங்கினார்கள்
அதையே நானும் கேட்டேன்
கையில் மீதம் பத்துருபாய்




இரண்டு மணி நேரத்திற்குப்பின்
ஒரு நகரை சென்றடைந்தது
மலைகளுக்கு இடையேபயணித்த பேரூந்து




கடைசி நிறுத்தத்தில்
எல்லாரும் இறங்கிச் சென்றார்கள்
கடைசி பயணியாய் நானும்




ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த
அவ்வூர் கேரளா மாநிலத்திலுள்ள
ஒரு நகரம் என்பதை உணர்ந்தேன்




புதிய இடம் மனிதர்கள்
மொழியும் விளங்கவில்லை
சற்று திகைத்து நின்றேன்




எங்கே செல்கிறோம் என்று
திசை தெரியாமல் நடந்தது
மனமுடன் கால்களும்




சூரியன் மறைந்ததால்
வானமும் கருத்து
சுற்றிலும் இருள் சூழ்ந்தது




நடந்து களைத்ததால்
தாகமும் பசியும்
ஒன்றுகொன்று போட்டியிட்டது




தனித்து நின்றிருந்த
சாலையோரக் கல்லின்மேல்
சற்று அமர்ந்து கொண்டேன்




மீதமிருந்த பத்து ரூபாயையும்
பசி விழுங்கிக் கொள்ள
வெற்றுக் கையுமாய் நான்




அங்கும் இங்குமாய் கூட்டமாக
உலவிக் கொண்டிருந்த
மனிதர்களும் மறைந்து போனார்கள்




சாலை விளக்குகள் உயிர்த்தெழுந்தது
நெடுஞ்சாலையில் வாகனத்தின்
நெரிசலும் குறைந்து




மனிதர்களின் குரல் ஒலிகள்
சிறுகச் சிறுக துலைந்துபோக
சுற்றும் அமைதி நிலவியது




மீண்டும் பசியில் வயிறு
இருளோ என்னை பயமுறுத்தியது
விழியில் நிரம்பிவழிந்தது கண்ணீர்




ஏன் எதற்கு என்றுகேட்காமல்
என் அழுகையை வேடிக்கைபார்த்தபடி
சிலர் கடந்து சென்றார்கள்




இருளின் நாழிகையின் ஏற்றம்
மீண்டும் ஒருவித பயம்தர
உள்ளுக்குள் இறைவனிடம் மன்றாடினேன்




அறிமுகம் இல்லாத் நகரம்
அடையாளம் தெரியாத மனிதர்கள்
தெரியாத மொழி




என்செய்வதறியாது நிலைகுலைந்து
தனிமரமாய் நிற்கையில்
என்னோக்கி ஒரு குரல்




யாரப்பா ஏன் அழுகிறாய்
என் அழுகையை நிறுத்தியது
அந்த முதியவரின் அவ்வார்த்தைகள்




தொடரும் . . . .








செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Feb 06, 2011 3:10 pm

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! India_school_kids


முதியவர் , அனுபவ கதைகள் ,பள்ளிக்கூடம்




ஒரு அழுக்கு தோல்பையும்
கையில் ஊன்றுகோல் கம்புடனும்
மெதுவாக நடந்துவந்தார் முதியவர்




அருகில் வந்தவரிடம்
கண்ணீர் மல்க
கதைகளை சொன்னேன்




என்னைப் பற்றி விசாரித்தவர்
இறுதியில் கேட்டார்
தம்பி சாப்பிட்டியா




என் வாடிய முகம்
காட்டிக் கொடுத்தது
என் பசியை




வா என்று அழைத்துக்கொண்டு
ஒரு உணவக விடுதில்
எனக்கு பசியாற்றினார்




அவர் தங்கும் இடத்திற்கான
நடை பயணத்தில்
ஆறுதல் பலம் தந்தார்




இங்க பாரு தம்பி
இவங்க எல்லாம் ஊரைவிட்டு
ஓடி வந்தவங்க




வீத்யோரம் உறங்கி
இருந்தவர்களை சுட்டுகாட்டில்
சொனார் அந்த முதியவர்




வேலை சாப்பாடு இல்லாம
படுக்க இடமும் இல்லாம
வாழுற மனுசங்கதான் இவங்க




அங்கு இருக்கிற சில
மனிதர்களை காட்டி
நிறைய கதைகள் சொன்னா




என் என்னையே எடுத்துக்கோ
அவரை பற்றி சொல்ல
ஆரம்பித்தார் தணிந்த குரலில்




ஒரு ஊரின் பெயரைச்சொல்லி
விவசாயம் தான் தொழில்
எனக்கு இத்தினை பிள்ளைகள்




பெத்த பிள்ளைகளுக்கு
கால் முளைத்தவுடன்
தன்னை உதறியாதாக சொன்னார்




அறுபது வயசு ஆச்சு
சாவு வரைக்கும் வாழனும்
பிள்ளைங்க கைவிட்டுட்டாங்கன்னு
சாக முடியுமா




முகம் தெரியாத இந்த ஊரில்
எதோ பிச்சை எடுத்து
பொளைக்கிறேன் என்றார்




எந்த துக்கமும் இன்றி
அவர் கதையை சொல்லுகையில்
முதுமையிலும் அவரின் தன்னபிக்கையை
உணர்ந்து கொண்டேன்




பேசி நடந்த சிறிய தூரத்தில்
பிளாஸ்டிக் சருகையால்
மூடப்பட்டிருந்த சிறு குடிலில்
போய் சேர்ந்தும்




இங்குதான் தங்கி
என் காலத்தை ஒட்டுகிறேன்
அங்கு அமர்ந்துகொண்டே சொன்னார்




உனக்கு அப்பா அம்மா
நல்ல வசதியும் இருக்கு
உன் இந்த முடிவால
வாழ்க்கைய துலைச்சிராத




படிச்சவங்கதான்
நல்ல வேலையில் இருக்காங்க
அந்த படிப்பை நீஉதரலாமா




அவர் படிக்காதவர் இருந்தும்
படிப்பின் மகத்துவத்தை சொல்லி
மீண்டும் ஊருக்கு போஎன்றார்




நீ சின்ன வயசு படிப்பு முக்கியம்
இப்படியெலாம் இனி செய்க்கூடாது
இரவு முழுக்க அறிவுரைகள்




இங்கு தங்கு காலையில்
ஊருக்கு அனுப்புகிறேன் என்றார்
தலையை அசைத்தபடி தூங்கச்சென்றேன்




பயமுறுத்திய இரவு விடிந்தது
ஒரு குவளை தேநீருடன்
என்னை எழுப்பினார்




காலை சிற்றுணவு கொடுத்தார்
ஊருக்கு போகும் பஸ்சுக்கு
பயண சீட்டும் எடுத்தார்




தம்பியை இந்த ஊரில்
இறக்கி விடுங்க என்று
நடத்துனரிடம் கேட்டுகொண்டார்




சொன்னதெல்லாம் கவனித்த்துல வைச்சுக்கோ
ஊருக்கு போய் நல்லபடியா
படி என்று சொன்னார்




என் நன்றியை கூட
எதிபார்க்காமல் என்னிடமிருந்து
விடைபெற்றுச் சென்றார்




இப்படியும் சில மனிதர்களா
ஊர்வரை அவரைப்பற்றியே
நினைத்துக் கொண்டு வந்தேன்




பேரூந்து ஊரை நெருங்கியது
வீட்டைப் பற்றி பயம் இருந்தும்
ஆனந்தக் கொண்டாட்டத்தில் மனசு




பஸ்ஸைவிட்டு இறங்கினேன்
உங்க பையன் வந்துட்டான்
பெரும் குரலெழுப்பிய ஊர்வாசி




அண்ணன் அக்கா
என் பால்ய நண்பர்கள்
இப்படி என்னை சூழ்ந்தார்கள்




என்னைப் பார்த்ததும்
கட்டிபிடித்து அம்மா அழ
நானும் அழுதேன்




என்னைப் பார்க்கவந்த
ஊர் மக்களும்
திரும்பிச் சென்றார்கள்




அண்ணனும் அக்காவும்
துருவித் துருவி கேட்டார்கள்
மௌனமாக நான்




இனிமேல் நல்லா படிக்கிறேன்
உன் பேச்சை கேட்கிறேன்
ஊரைவிட்டு போக மாட்டேன்
என்று அம்மாவிடம் கதறியழுதேன்




சரி பரவா இல்லடா
அன்று அம்மா
என்னை அடிக்கவும் இல்லை


மறுநாள் மீண்டும்
பள்ளிக்கு புறப்பட்டு
பள்ளிக்கே சென்றன்




நேத்து எங்கடா போன
நலம் விசாரித்தார்கள்
வகுப்பு சகாக்கள்




நண்பர்களில் அன்பில்
பூரித்துப் போனேன்
எனக்குள் புத்துயிர் வந்தது




வகுப்புக்கு வந்த ஆசிரியர்
பாடம் நடத்த ஆர்வத்துடன்
கவனிக்க துடங்கினேன் நான்


முடிந்தது.




- செய்தாலி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக