புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
56 Posts - 50%
heezulia
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
1 Post - 1%
Shivanya
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
12 Posts - 2%
prajai
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
9 Posts - 2%
jairam
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
4 Posts - 1%
Jenila
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_m10லெனின் வாழ்க்கை வரலாறு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லெனின் வாழ்க்கை வரலாறு


   
   
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Feb 18, 2011 3:28 pm

1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்

1924-ஆம் ஆண்டு ஜனவா¢ 27-ம் நாள் மாலை நேரம். அமொ¢க்காவின் பொ¢ய
நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக
வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதா¢ன்
உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகா¢ல்
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும்
கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர்
சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக்
காட்சிகள் நடக்கின்றன.

அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவா¢ 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள
உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவா¢ன் கவனமும்
சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான
அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது.
பொ¢யவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பா¡¢
வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.
கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால்
மூடப்பட்டிருந்தன.

சா¢யாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து
நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.”
சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமொ¢க்க ஐரோப்பிய
தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பி¡¢க்க நாடுகளின்
தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி
செலுத்தப்பட்டது.

உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம்
இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி
விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சா¢, அவருக்குப்
பின்னரும் சா¢, எந்தத் தலைவருக்கும் இந்த மா¢யாதை கிடைக்கவில்லை.
எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை
மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது.
சோவியத் ரசியாவின் தலைவருக்காக உலகமே ஏன் அழ வேண்டும்? அப்படி என்ன
செய்துவிட்டார் அவர்?


2. வறுமையை ஒழித்த லெனின்

எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கே பணக்காரர்கள் இருப்பார்கள்.
அதுபோலவே ஏழைகளும் இருப்பார்கள். ஒருவன் பணக்காரன் என்றால், 100 பேர்
ஏழைகள். இந்த ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி பணக்காரர்கள் கொள்ளை லாபம்
சம்பாதிப்பார்கள். உழைக்கும் மக்கள் மேலும் மேலும் வறுமையில்
வாடிக்கிடப்பார்கள். ரசியாவிலும் ஒரு காலத்தில் மக்கள் அப்படித்தான்
துன்பத்தில் உழன்றனர்.

இந்த அநியாயத்தை ஒழித்துக் கட்டியவர்தான் லெனின். அவருடைய தலைமையில்
1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற புரட்சியினால்
தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி மலர்ந்தது. உலகில் முதன்முறையாக
தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அந்த தொழிலாளர்களின் ஆட்சிதான்
உலகில் எங்குமே நடக்காத சாதனைகளை நிகழ்த்தியது. மனிதனை மனிதன்
சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. தேசத்தின் வளங்களை ஒரு
சிலர் மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது. அவை அனைவருக்கும்
பொதுவாக்கப்பட்டது. வயது வந்த அனைவருக்கும் திறமைக் கேற்ற வேலையும்,
வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இலவச கட்டாயக்
கல்வி அளிக்கப்பட்டது. சமத்துவச் சமூகம் படைக்கப்பட்டது.

இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடந்தது. இதன் மூலம் தன்னுடைய
நாட்டில் வறுமையை ஒழித்துக் கட்டினார். மற்ற நாடுகளிலுள்ள உழைக்கும்
மக்களின் கவனம் சோவியத் ரசியாவை நோக்கித் திரும்பியது. லெனினுடைய
வழியைப் பின்பற்றினால் மட்டுமே தங்களின் வறுமை ஒழியும் என்று அவர்கள்
நம்பினர். தங்களின் நல்வாழ்விற்காக போராடத் தயாராக இருந்த உலகத்
தொழிலாளர்களுக்கு லெனின் சா¢யான வழி காட்டினார். ஆனால் ரசிய
மக்களுக்குக் கிடைத்த வெற்றி உலகத்திலுள்ள அனைவருக்கும் கிடைப்பதற்கு
முன்னரே அவர் மரணமடைந்து விட்டார்.

இதனால்தான் அவருடைய மரணத்துக்கு உலகமே அழுதது. உலகின் ஆறில் ஒரு பகுதி
நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற நன்றியும், மீதி நிலப்பரப்பில்
அதை நிறைவேற்றும் முன்னரே இறந்து விட்டாரே என்ற துக்கமும்தான் உலகத்
தொழிலாளர்களை கண்ணீர் சிந்த வைத்தது.

3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்

லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில்
பிறந்தார். அவருடைய தந்தையான இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகா¡¢யாக
பணி பு¡¢ந்தார். நேர்மையான மனிதர். தாயார் மா¢யா உல்யானவ் அன்பே
வடிவானவர். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன்
உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதி¡¢கள்
லெனினுடைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அறிவுடையவர்களாகவும்,
பண்புடையவர்களாகவும் வளர்த்தனர். மேலும் தங்கள் சக மனிதர்களை
நேசிக்கவும் கற்றுக் கொடுத்தனர். நேர்மையான அதிகா¡¢யான தங்கள்
தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள்
பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையான
கதைகளைச் சொல்வார்.

சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களை
விரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய
குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும்
விரைவாகப் பு¡¢ந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும்
விளையாட்டிலும் முதலிடத்தில் இருந்தார்.

அவர்தன் அண்ணனான அலெக்சாண்டர் மீது மிகுந்த பாசமும், மதிப்பும்
கொண்டிருந்தார். அலெக்சாண்டருக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம்
அதிகம். சகோதரர்கள் இருவரும், உலகம் எப்படி தோன்றியது? உயிர் எப்படி
தோன்றியது? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க விவாதிப்பார்கள்.
நிறைய புத்தகங்கள் படித்ததன் விளைவாக அலெக்சாண்டருக்கு ஏராளமான
விசயங்கள் தொ¢ந்திருந்தன. எதிர்காலத்தில் தன் அண்ணனைப் போலவே தானும்
அறிவாளியாக வேண்டுமென்று லெனின் தீர்மானித்துக் கொண்டார். அதற்காக
கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தார்.

இப்படி மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்வில் முதல் இடி
விழுந்தது. திடீரென ஒருநாள் தந்தை இறந்து போனார். அந்த அடியிலிருந்து
மீள்வதற்குள் அடுத்த இடி தாக்கியது. ரசியாவில் கொடுங்கோலாட்சி
நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனைக் கொல்ல முயற்சி செய்ததற்காக
அலெக்சாண்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த செய்தியால்
குடும்பம் நிலைகுலைந்து போனது.

அலெக்சாண்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாளில் லெனினுக்குப்
பள்ளியில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. அந்தக் கொடூரமான
துக்கத்தினால் லெனின் துவண்டு போகவில்லை. தேர்வு முடிவுகளில்
மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறினார். இது அவருடைய உருக்கு போன்ற
மனவலிமைக்கு ஒரு சான்று.

4. வக்கீல் உருவில் ஒரு போராளி!

லெனின் தன்னுடைய உயர் படிப்பைப் தொடர கசான் என்ற நகா¢ன் பல்கலைக்
கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஜார் மன்னனுக்கு எதிராக
மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். ஜார் தேசத்தின் வளங்களை சூறையாடி
ஆடம்பரமாக செலவு செய்தான். மக்களையோ வறுமையில் தள்ளினான். அவர்களின்
உ¡¢மைகளைக் காலில் போட்டு மிதித்தான். மன்னன் சட்டத்திற்கு உட்பட்டு
நியாயமாக ஆட்சி நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் கோ¡¢க்கை.

மாணவர்களின் போராட்டத்தை வன்முறையால் ஒடுக்கினான் ஜார். மாணவர்கள்
குற்றவாளிகளைப் போல கண்காணிக்கப்பட்டனர். கசான் பல்கலைக்கழகம்
சிறைச்சாலை போல மாற்றப்பட்டது. மாணவர்களின் அனைத்து உ¡¢மைகளும்
பறிக்கப்பட்டன. தன்மானமுள்ள மாணவர்கள் இதை எதிர்க்கத் தீர்மானித்தனர்.
ஒட்டு மொத்தமாக பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறினர். லெனினும்
வெளியேறினார்.

பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய லெனின், ஜார் ஆட்சியின்
கொடுமைகளை அனுபவத்தின் மூலம் பு¡¢ந்துகொண்டார். ஒடுக்கப்பட்ட
மக்களுக்காக போராடத் தீர்மானித்தார். வழக்கறிஞர் தொழிலின் மூலம் அதை
செய்யத் திட்டமிட்டார். எனினும் சட்டக்கல்லூ¡¢யில் அவரை சேர்த்துக்
கொள்ள மறுத்தனர். லெனின் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். வீட்டில்
இருந்தே படித்தார். நான்கு வருட சட்டக்கல்வியை ஒன்றரை ஆண்டில் படித்து
முடித்துப் பட்டம் பெற்றார். அதிலும் மாநிலத்தில் முதலாவதாக.

அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் மேலும் ஒரு துக்க செய்தி அவரது தங்கை
ஓல்கா நோயினால் மரணமடைந்தார். லெனினுடைய தாயார் மனமுடைந்து போனார்.
லெனின் பெத்ரோகிராடு நகா¢ல் வழக்கறிஞர் தொழில் மேற்கொள்ள சென்றார்.
அவருடைய குடும்பம் மாஸ்கோ நகா¢ல் குடியேறியது.

5. லெனின் தேர்வு செய்த பாதை

லெனின் பெத்ரோகிராடில் ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே
நடத்தினரர். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன. ஏனெனில்
தொழிலாளர்கள் மிக வறியச் சூழலில் வாழ்ந்தனர். ஜார் ஆட்சிக்கு முடிவு
கட்டினால்தான் தொழிலாளர்களுக்கு விடுதலை என்பதை உணர்ந்து கொண்டார்
லெனின். அது குறித்து தீவிரமாகச் சிந்தித்தார். ஏராளமாகப் படித்தார்.
அப்படித் தான் அவர் காரல்மார்க்ஸ் என்பவர் எழுதிய ‘மூலதனம்’ என்ற
நூலைப் படிக்க நேர்ந்தது. லெனினை அந்தப் புத்தகம் வெகுவாக ஈர்த்தது.
மனிதர்கள் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் முதலிய ஏராளமான தேவைகள்
பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தேவையும் ஒவ்வொரு பொருளின்
மூலமே நிறைவேறுகின்றது. இயற்கையயோடு போராடித்தான் மனிதன் அந்தப்
பொருட்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதையே உழைப்பு என்கிறோம்.
மனிதர்கள் உழைப்பதனால்தான் செல்வம் உண்டாகின்றது. ஆனால் அந்த
செல்வத்தை ஒரு சிலர் மட்டுமே சுருட்டிக்கொள்கின்றனர்.
உழைப்பாளிகளுக்கோ கூலியாக சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது. இதுவே
வறுமைக்குக் காரணம். உழைக்கும் மக்கள் இதை பு¡¢ந்து கொண்டு
எதிர்த்துப் போராடினால், அவர்களை ஒடுக்குவதற்காக போலீசு, இராணுவம்,
சிறைச்சாலை, சட்டம் போன்றவை பணக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ளர்.
இதுவே அரசு எனப்படுகிறது. தற்போதுள்ள அரசு பணக்காரர்களுக்கானது.
வறுமையில் வாடும் மக்களைச் சுரண்டுவதே அதன் நோக்கம். உழைக்கும் மக்கள்
ஒரு புரட்சியின் மூலம் பழைய அரசையும், அநீதியான சட்டங்களையும்
வீழ்த்த வேண்டும். அந்த இடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கான புதிய
அரசையும், சமத்துவத்திற்கான சட்டங்களையும் இயற்ற வேண்டும்.

இதுதான் அந்தப் புத்தகத்தின் சாரம். இந்தக் கருத்துக்கள் கம்யூனிச
தத்துவம் என அழைக்கப்படுகிறது. அடுத்ததாக காரல் மார்க்கம் அவருடைய
நண்பர் எங்கெல்சும் எழுதிய அனைத்து நூல்களையும் படித்து முடித்தார்.
அதிலிருந்து ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்ட தொழிலாளர்களின் புரட்சி
ஒன்றுதான் வழி என்று தீர்மானித்தார். அந்தப் புரட்சிக்காகத் தன்
வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதிலிருந்து கம்யூனிஸ்டாக
மாறினார்.

6. போராட்டமே வாழ்க்கையாக...!

லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு
செல்லத் தொடங்கினார். தொழிலாளர் கூட்டங்களில் பேசினார். மக்களின் அவல
வாழ்க்கைக்கான காரணத்தை விளக்கினார். அதை ஒரு புரட்சியின் மூலம்
மாற்றும் சக்தி தொழிலாளர்களுக்கு மட்டுமே உண்டு என்றார்.
இக்கூட்டங்கள் அனைத்தும் இரகசியமாகவே நடந்தன. ஏனெனில் வெளிப்படையாக
கூட்டம் நடத்தினால் ஜா¡¢ன் போலீசு அனைவரையும் சிறையில் தள்ளிவிடும்.

லெனினுடைய பிரச்சாரத்திற்கு நல்ல பலன் இருந்தது. அவருடைய கருத்துக்கள்
பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்கள் அனைவரையும் சென்று அடைந்தன.
தொழிலாளர்கள் மெதுவாக விழிப்புணர்வு பெற்றனர். தொழிலாளர்கள் ஒவ்வொரு
நாளும் 16 மணிநேரம் முதலாளிகளுக்கு உழைத்துக் கொட்ட வேண்டியிருந்தது.
கூலியோ மிகமிகக் குறைவு. இதற்கெதிராகப் போராட்டங்கள் வெடிக்கத்
தொடங்கின.

இந்த போராட்டங்களை வழிநடத்தும் தலைவர் யார் என்று தொ¢ந்து கொள்ள
இயலாமல் ஜார் அரசு மண்டையைச் குடைந்து கொண்டிருந்தது. லெனின் மீது
சந்தேகம் ஏற்பட்டது. அவரை கையும் களவுமாகப் பிடிக்க ஏராளமான உளவாளிகள்
அவரைப் பின்தொடரத் தொடங்கினர்.

லெனின் அவர்களை ஏமாற்றிவிட்டு ரகசிய கூட்டங்கள் நடக்கும் இடத்திற்கு
சென்றுவிடுவார். வலிமையான உடற்கட்டும் புத்திக் கூர்மையும் இதற்கு
உதவின. ரயிலில் செல்லும்போது அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிடும்.
ரயில் நிற்கும். ஆனால் அவர் இறங்கமாட்டார். கையில் ஒரு புத்தகத்தை
வைத்துக் கொண்டு ஆழ்ந்து படிப்பது போல் இருப்பார். ரயில் கிளம்பி
வேகமெடுக்கும். அப்போது அவர் மிக விரைவாக ஓடும் ரயிலில் இருந்து கீழே
குதிப்பார். ஒரு கணநேரத்தில் மாயாஜால வித்தை போல தங்கள் கண்ணெதிரே
லெனின் தப்பி ஓடுவதைக் கண்டு உளவாளிகள் மண்டையைப் பிய்த்துக்
கொள்வார்கள். இதுபோல் பலமுறை உளவாளிகள் ஏமாந்து போனதுண்டு.

7. சைபீ¡¢யச் சிறைவாசம்

1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது
செய்யப்பட்டனர். ஐ¡ர் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு
நான்கு ஆண்டு கால சைபீ¡¢யச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. சைபீ¡¢யாவிற்கு
அனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் சைபீ¡¢யா
என்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் மூடியிருக்கும்.
எந்நேரமும் பனி பெய்யும். புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும்.
ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீ¡¢யாவிற்கு அனுப்பி விடும். அங்கே
அவர்கள் குளி¡¢ல் விறைத்து இறந்து போவார்கள்.

ஆனால் சைபீ¡¢யக் குளிரை லெனின் தோற்கடித்தார். அவருடைய உறுதியான
உடற்கட்டையை உருக்குலைக்க சைபீ¡¢யப் பனிப் பிரதேசத்தால் இயலவில்லை.
அதுமட்டுமல்ல லெனின் தான் காதலித்த கிரூப்ஸ்காயா என்ற பெண்ணைத்
திருமணமும் செய்து கொண்டார். லெனினுடன் சேர்த்து அவரையும் சைபீ¡¢யாவிற்கு
நாடு கடத்தியிருந்தது ஜார் அரசு.

சைபீ¡¢யாவில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவர் ஏராளமான புத்தகங்கள்
எழுதினார். அவை ரசியாவில் புரட்சியை எப்படி நடத்துவது என விளக்கும்
புத்தகங்கள். மக்களைத் திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை. தனது
கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பத்தி¡¢க்கை அவசியம் என்ற
முடிவுக்கு வந்தார். அதனை ரசியாவிற்குள் இருந்து கொண்டு நடத்த
முடியாது. அரசு அதை அனுமதிக்காது. ஆகவே வெளிநாட்டில் இருந்து ஒரு
பத்தி¡¢க்கையை வெளியிட முடிவு செய்தார். பத்தி¡¢க்கையின் மூலம்
கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கத் தீர்மானித்தார். ஏனெனில்
கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் புரட்சியை வழி
நடத்தமுடியாது.

1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரே
தீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார்.
‘இஸ்கரா’ என்ற முதல் கம்யூனிச பத்தி¡¢கை வெளிவந்தது.

8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்

லெனினுடைய கருத்துக்களை ஆதா¢த்த ஊழியர்கள் இஸ்கரா பத்தி¡¢க்கையை
நாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாக
வழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி தொ¢யாமல்
தவித்தனர் தொழிலாளர்கள். லெனினுடைய கருத்துக்கள் புதிய வழி காட்டியது.
அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.

அந்த வகுப்புகளில் அரசியல், அறிவியல், வரலாறு முதலியவை விளக்கப்பட்டன.
கம்யூனிச, மார்க்சிய தத்துவமும் போதிக்கப்பட்டது. இப்படி மெதுவாக
கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது.
தூரத்தில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும்
வழிகாட்டினார்..

1905-ஆம் ஆண்டு ஜா¡¢ன் ஒடுக்குமுறை உச்சகட்டத்தை அடைந்தது. முதலாளிகள்
தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தனர். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது
என்ற நிலை வந்தபோது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள்
வறுமை நிலையை ஜா¡¢டம் சொல்ல மனு ஒன்றைத் தயா¡¢த்தனர். அதை ஜா¡¢டம்
கொடுக்க பேரணியாக சென்றனர். தொழிலாளர்கள் அமைதியாகத்தான் ஊர்வலம்
நடத்தினர். ஆனால் ஜார் அவர்களைக் கண்டு பயந்தான். அவர்களைச் சுட்டுக்
கொல்ல உத்தரவிட்டான். பீரங்கிகள் முழங்கின. எந்திரத் துப்பாக்கிகள்
அதிர்ந்தன. பெத்ரோகிராடு வீதிகள் ரத்தத்தில் மிதந்தன.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

கோழைத்தனமாகத் தங்களைத் தாக்கிய படைகளை எதிர்த்துப் போ¡¢ட
தொழிலாளர்கள் துணிந்தனர். முதல் ரசியப் புரட்சி எழுந்தது.
வெளிநாட்டில் இருந்த லெனின் புரட்சிக்குத் தலைமை ஏற்க
பெத்ரோகிராடுக்கு விரைந்து வந்தார். இருந்ததும் முதல் ரசியப் புரட்சி
தோல்வியில் முடிந்தது. ஆனால் லெனின் மனம் தளர வில்லை. தன்னுடைய
தோழர்கள¨யும் உற்சாகப்படுத்தினார். “தோல்வியில் இருந்து பாடம் கற்போம்.
தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே” என்றார்.

புரட்சியை ஒடுக்கிய ஜார், லெனினை எப்படியாவது கொன்றுவிடுமாறு தன்
படைகளுக்கு உத்தரவிட்டான். அதனால் மீண்டும் ஒருமுறை லெனின் தன் நாட்டை
விட்டுத் தலைமறைவாக வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அது மிகவும்
ஆபத்தான வேலை. எல்லைப்புறத்தில் காவல் அதிகமாக இருந்தது. லெனின் கடல்
வழியாக பக்கத்து நாடான சுவீடனுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார்.
அது குளிர் காலமாதலால் கடலின் மேற்பரப்பு பனிக்கட்டி பாளமாக
மாறியிருந்தது. கப்பலையோ, படகையோ அதில் செலுத்த முடியாது. இந்த
நேரத்தில்தான் லெனின் துணிச்சலான ஒரு முடிவெடுத்தார். கடலின் மீது
நடந்து செல்வதே அம்முடிவு.

அது மிகமிக அபாயகரமான திட்டம் பனிப்பாளம் பல இடங்களில் மிக
மெல்லியதாக இருக்கும். கால் வைத்தவுடன் உடைந்துவிடும். உள்ளே
நடுக்கடலில் விழுந்தால் மரணம் நிச்சயம். அது மட்டுமல்ல, அச்சுமூட்டும்
பனிப்புயலும் வீசிக் கொண்டிருந்தது. எதை¨யும் பொருட்படுத்தாது கடல்
மீது நடக்கத் தொடங்கினார்.

அவருடன் மூன்று மீனவத் தோழர்களும் பயணம் செய்தனர். ஒரு இரும்புச்
கம்பியினால் பனிப்பாளங்களைத் தட்டிப் பார்த்தபடி மெதுவாக பா¡திதூரம்
கடந்துவிட்டனர்.

9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்

1905-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோதனையான கால கட்டம்
தொடங்கியது. நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்டனர்; சித்திரவதை செய்யப்பட்டனர். லெனினுடைய
குடும்பமும் சித்திரவதைக்கு உள்ளானது. இந்தத் தாக்குதல்கள்
கம்யூனிஸ்ட் கட்சியை கலைக்கும்படிகூறினர்.

இந்தக் கோழைக்களுக்கு லெனின் சா¢யான பதிலடி கொடுத்தார். புரட்சியில்
தொழிலாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும், கம்யூனிஸ்ட் கட்சியால்
மட்டுமே அதற்கு வழிகாட்ட முடியும் என்றும் சான்றுகளுடன் நிரூபித்தார்.
தொழிலாளர்களின் மனக்கலக்கத்தைப் போக்கினார். மீண்டும் அவர்களை
அணிதிரட்டினார்.

இதே நேரத்தில் ஏகாதிபத்திய நாடுகள் உலகப்போருக்கு ஆயத்தம் ஆகிக்
கொண்டிருந்தன. பி¡¢ட்டன், பிரான்சு, அமொ¢க்கா முதலிய நாடுகள் ஆசிய,
ஆப்பிரிக்க நாடுகளைத் தம் அடிமையாக (காலனியாக) வைத்திருந்தன. இந்த
நாடு பிடிக்கும் போட்டியில் தாமதமாக குதித்தன ஜெர்மனி, ஆஸ்ட்¡¢யா,
துருக்கி முதலிய நாடுகள். இவை பழைய ஏகாதிபத்தியங்களிடம் உலகைப் பி¡¢த்து
தமது பங்கைக் கொடுக்குமாறு கேட்டன. இக்கோ¡¢க்கை மறுக்கப்பட்டது உலகை
ஏற்கெனவே கொள்ளையடித்துக் கொண்டிருந்த பி¡¢ட்டன், அமொ¢க்கா, பிரான்சு
ஒருபுறமும், புதிதாக கொள்ளையடிக்கப் புறப்பட்ட ஜெர்மனி முதலான நாடுகள்
மறுபுறமாக 1914-ஆம் வருடம் போ¡¢ல் ஈடுபட்டன. இதுவே முதல் உலகப்
போரானது. இதில் ரசியா, பி¡¢ட்டனை ஆதா¢த்து ஜெர்மனிக்கு எதிராகப்
போ¡¢ல் குதித்தது.

10. ஜாரை வீழ்த்திய பிப்ரவா¢ புரட்சி

லெனினும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போரைக் கொள்ளைக்காரப் போர்
என்றனர். ஏழை நாடுகளை அடிமையாக்குவதன் மூலம் அவற்றைச் சுரண்டி
பணக்கார நாடுகளின் முதலாளிகள் லாபம் சம்பாதிப்பார்கள்.
தொழிலாளர்களுக்கு இதில் நன்மை ஏதுமில்லை. மேலும் அதற்கான போ¡¢ல்
கலந்து கொண்டு தொழிலாளர்கள் வீணாக உயிரை இழக்க நோ¢டும். இதற்கு
பதிலாகத் தங்களை இதுவரை சுரண்டிக் கொழுத்துள்ள சொந்த நாட்டு
முதலாளிகளுடன் போ¡¢ட்டால், தொழிலாளர் வாழ்வில் விடியல் பிறக்கும்
எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் ஒரே மாதி¡¢தான் சுரண்டப்படுகின்றனர்.
அவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒன்றுபட வேண்டும். புரட்சி செய்ய
வேண்டும் என்று லெனின் கூறினர்.

ஆனால் போர் வெறி யூட்டப்பட்டிருந்த உழைக்கும் மக்களின் காதுகளில் இது
ஏறவே இல்லை. போர் மேலும் மேலும் உக்கிரமடைந்த போதுதான் அவர்களுக்கு
இது உறைத்தது. பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பஞ்சம் தலைவி¡¢த்தாடியது.
எங்கும் பசி பட்டினி, தொழிலாளர்கள் ஜாருக்காக சண்டையிட்டு மடிந்து
கொண்டிருந்தனர். அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் மடிந்து
கொண்டிருந்தனர். இந்தக் கஷ்டம் தொழிலாளர்களுக்குத் தான் முதலாளிகளோ
போரைப் பயன்படுத்தி எல்லா பொருட்களுக்கும் விலை ஏற்றினர். கொள்ளை
லாபம் சம்பாதித்தனர்.

லெனினுடைய வார்த்தைகள் எவ்வளவு சா¢யானவை என்ற மக்கள் பு¡¢ந்து
கொண்டனர். இந்தக் கொள்ளைக்காரப் போரை நிறுத்தும்படி படைவீரர்களும்,
தொழிலாளர்களும் கொடுத்த மனுக்கள் குப்பையில் வீசப்பட்டன. மக்களின்
கோபம் எல்லை மீறியது. 1917-ஆம் ஆண்டு பிப்ரவா¢ மாதம் புரட்சி
வெடித்தது. ஒரே நாளில் வெற்றியும் பெற்றது. மன்னராட்சி முறை
ஒடுக்கப்பட்டது. ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு அரசு அதிகாரத்தை
முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டனர்.

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த லெனின் ரசியாவிற்கு விரைந்து வந்தார்.
பெத்ரோகிராடு ரயில் நிலையத்தில் இறங்கிய அவர் முன்னே லட்சக்கணக்கான
தொழிலாளர்கள் திரண்டு நின்றனர். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக அவர்கள்
ஓடோடி வந்திருந்தனர்.

11. சதியை முறியடித்த லெனின்

ஒரு உயர்ந்த மேடை மீது நின்று கொண்டு லெனின் பேசத் தொடங்கினார்.
தோழர்களே! உங்களுடைய வீரத்தினால் கொடுங்கோலன் ஜாரை
வீழ்த்திவிட்டீர்கள். ஆனால் வெற்றி இன்னும் முழுமை அடையவில்லை.
ஜா¡¢ன் அதிகாரத்தை முதலாளிகளும், பண்ணையார்களும் கையில் எடுத்துக்
கொண்டுள்ளனர். பணக்காரர்கள் ஏழைக்களைச் சுரண்டுவதையே இவர்கள் ஆதா¢ப்பார்கள்.
பிற நாடுகளைக் கொள்ளையடிக்க போரைத் தொடர்ந்து நடத்துவார்கள். இவர்களை
ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு
வரவேண்டும். சோசலிசம் ஒன்றுதான் தீர்வு. தொடர்ந்து முன்னேறுங்கள்
என்று அறைகூவினார்.

லெனினுடைய வார்த்தைகளை நம்பிய தொழிலாளர்கள் சிறுபான்மையினராகவே
இருந்தனர். பெரும்பாலானவர்கள் முதலாளிகளுடைய நாடாளுமன்றத்தின் மீது
நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப்
போனது. புதிய அரசு போ¡¢ல் உழைக்கும் மக்கள் வீணாக சாவதைப் பற்றி கவலை
கொள்ளவில்லை. ஏழைகள் பட்டினியால் மாண்டனர். பணக்காரர்கள் தேசத்தின்
செல்வத்தை உறிஞ்சிக் கொழுத்தனர். நாடாளுமன்றத்தில் அடிதடியும்
ரகளையும் தான் நடந்தது. மக்கள் அதன் மீது நம்பிக்கை இழந்தனர்.
லெனினுடைய கருத்துக்களே சா¢யானவை என ஏற்கத் தொடங்கினர்.

மக்களை ஒடுக்குவதற்காக புதிய அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. லெனினைக் கொலை செய்யும்படி
படைகளுக்கு கட்டளையிடப்பட்டது. மீண்டும் ஒரு முறை லெனின் தலைமறைவாக
செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இந்தமுறை அவர் பெத்ரோகிராடை விட்டு
வெகுதூரம் செல்லவில்லை. எப்படியும் புரட்சி வெடிக்கும் என்று
நம்பினார். அதனால் பெத்ரோகிடின் அருகிலேயே தங்கினார்.

புல் அறுப்பவராக, கூலி விவசாயியாக, என்ஜின் டிரைவராக மாறுவேடம் பூண்டு
வெவ்வேறு இடங்களில் தங்கினார். ஹெல்சிங்கி நகா¢ல் லெனின்
தங்கியிருப்பதாக அரசு சந்தேகப்பட்டது. அந்தநகா¢ன்
மூலைமுடுக்குகளெல்லாம் வலைவீசித் தேடியது. ஒரு இளம் காவல் துறை அதிகா¡¢யிடம்
லெனினைப் பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதில் குறிப்பிட
வேண்டிய விசயம் என்னவென்றால், அந்த அதிகா¡¢யின் வீட்டில் லெனின்
பாதுகாப்பாகத் தங்கியிருந்தார். ஒரு தொழிலாளியின் மகனான அந்த இளம்
காவல் அதிகாரி கம்யூனிஸ்ட் கட்சியை ஆதா¢த்தார்.

மக்களின் கோ¡¢க்கைகளான போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம்,
உழைப்பவனுக்கு அதிகாரம் போன்றவற்றை கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே
செயல்படுத்த முடியும் என மக்கள் பு¡¢ந்து கொள்ளத் தொடங்கினர்.
ரசியாவெங்கும் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. புரட்சிக்கான
காலகட்டம் நெருங்கிவிட்டது. என லெனின் உணர்ந்து கொண்டார். உடனடியாக
தொழிலாளர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் கட்சி
அதற்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் அவர் கூறியதைக் கட்சியின் மையக்
குழு ஏற்றுக் கொண்டது.


ஆனால் மைக்குழுவில் இருந்த பயந்தாங்கொள்ளிகள் இத்திட்டத்தை
எதிர்த்தனர். அதுமட்டுமல்ல, மிக இரகசிமான இந்த திட்டத்தை பத்தி¡¢கைகளுக்கு
வெளிப்படுத்தி துரோகம் செய்தனர். ஆகவே திட்டத்தில் குறிப்பிட்டிருந்த
நாளுக்கு முன்பாகவே நவம்பர் 7-ம் தேதி புரட்சியைத் தொடங்க முடிவு
செய்தார் லெனின். இத்தகவல் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்களுக்கு
ரகிசயமாக கொண்டு செல்லப்பட்டன.

12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து
நிற்கும் நாள். முதன் முதலாக சுரண்டல் ஒழிக்கப்பட்டது. அந்த நாளில்
தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள்
தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது. அந்த நாளில்தான். அன்றுதான் உலகின்
முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.

அன்று காலை முதல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன்
அணிவகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள். ரயில் நிலையங்கள், காவல்
நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றப்பட்டன. அரசின்
தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி
அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி
வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது.
லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.

ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம்
செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போ¡¢னால் நீண்ட காலமாக அமைதி
இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். ரசியாவின் அனைத்து நிலங்களும்,
வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை
வளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு
பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தொ¢யாமல்
மறைந்தது.

உழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர்.
சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிர்வாகத்தை
நடத்தின. ஒரு ஊ¡¢ன் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத்
தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டுவார்கள். அதை
அமல்படுத்த ஒரு நிர்வாகக் குழவும் தேர்ந்தெடுக்கப்படும். நிர்வாகக்
குழ உறுப்பினர்கள் கடுமையாக வேலை செய்து அந்த திட்டங்களை நிறைவேற்ற
வேண்டும். சா¢யாக ஒருமாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம்
நடைபெறும். அதில் நிர்வாகக் குழு உ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 4:35 pm

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி சாந்தி!



லெனின் வாழ்க்கை வரலாறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக