புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
37 Posts - 51%
heezulia
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
17 Posts - 2%
prajai
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_m10ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 10:19 am

சென்னை- மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் சலுகை,
இ-டிக்கெட் முன்பதிவு கட்டணம் குறைப்பு,
புதிய சூப்பர் ஏ.சி. ரெயில் பெட்டிகள் அறிமுகம்,
தமிழ்நாட்டுக்கு 13 புதிய ரெயில்கள்,
செந்தூர் எக்ஸ்பிரஸ் தினமும் ஓடும்,
பயணிகள்-சரக்கு கட்டணம் உயர்வு இல்லை



நேற்று தாக்கலான ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு 13 புதிய ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி ரெயிலாக மாற்றப்பட்டுள்ளது.

2011-12-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை, மத்திய மந்திரி மம்தா பானர்ஜி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் இரண்டாவது முறையாக பொறுப்பு ஏற்றபின், மம்தா பானர்ஜி தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும் இது.

கட்டண உயர்வு இல்லை

இந்த பட்ஜெட்டிலும் பயணிகள் கட்டண உயர்வோ, சீசன் டிக்கெட் கட்டண உயர்வோ அல்லது சரக்கு கட்டண உயர்வோ அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து 8-வது ஆண்டாக ரெயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் முதியோர்களுக்கான ரெயில் கட்டணத்தில் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் மம்தா பானர்ஜி அறிவித்து இருக்கிறார். அதன் விவரம் வருமாறு:-

கட்டண சலுகை

முதியோர்களுக்கான கட்டண சலுகை பெறும் வயது வரம்பு பெண்களுக்கு 60 வயதில் இருந்து 58 வயதாக குறைக்கப்பட்டு உள்ளது.

60 வயதை தாண்டிய ஆண்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மாற்று திறனாளிகள்


மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள், ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. `கீர்த்தி' மற்றும் `சவுரிய சக்ரா' விருது பெற்றவர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும்.

பத்திரிகையாளர்கள், ஆண்டுக்கு ஒரு முறை குடும்பத்துடன் பயணிப்பதற்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டண சலுகை ஆண்டுக்கு இரு முறையாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. `பரம்வீர் சக்ரா', `அசோக் சக்ரா' விருது பெறும் வீரமரணம் அடைந்த திருமணமாகாத ராணுவத்தினரின் பெற்றோருக்கும் இலவச ரெயில் பயண பாஸ் வழங்கப்படும்.

செந்தூர் எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து திருச்செந்தூர் வரை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் ஒரு முறை இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் இனி தினசரி ரெயிலாக இயக்கப்படும்.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் புதிய பயணிகள் ரெயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும்.

திருச்சி-கரூர் பயணிகள் ரெயில் சேவை வாரம் 6 நாட்களில் இருந்து தினசரி ரெயிலாக இயக்கப்படும்.


தமிழ்நாட்டுக்கு 13 புதிய ரெயில்கள்


நாடு முழுவதும் 56 புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இவற்றில் தமிழ்நாட்டில் இருந்தும், தமிழ்நாடு வழியாகவும், தமிழ்நாட்டுக்கு உள்ளும் மொத்தம் 13 புதிய ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த 13 ரெயில்களில் 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சென்னையில் இருந்து மதுரை, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு வழியில் எங்கும் நிற்காமல் செல்லும் 2 துரந்தோ எக்ஸ்பிரஸ் (ஏ.சி.) ரெயில்கள் (வாரம் இருமுறை), 2 விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், தமிழகத்துக்குள் விடப்படும் சிறப்பு சுற்றுலா ரெயில் மற்றும் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் புதிய பயணிகள் ரெயில் ஆகியவை அடங்கும்.

சுற்றுலா சிறப்பு ரெயில்கள்

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளையொட்டி, `விவேக் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், கவிஞர் ரவீந்திரநாத்தாகூர் 150-வது பிறந்த நாளையொட்டி `கவிகுரு எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் 4 ரெயில்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சுற்றுலா மேம்பாட்டுக்காக `ஜனம் பூமி கவுரவ்' என்ற பெயரில் 4 புதிய சுற்றுலா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். மாநில நகரங்களுக்கு இடையே `ராஜ்ய ராணி' எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் 10 புதிய ரெயில்களும், 3 புதிய சதாப்தி ரெயில்களும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

1 3/4 லட்சம் புதிய பணியாளர்கள்

ரெயில்வே `சி' மற்றும் `டி' பிரிவில் காலியாக உள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் பணியிடங்களுக்கு புதிய ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மார்ச் மாதத்திற்குள் 16 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

ரெயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள், அவர்களுடைய பெற்றோருக்கும் விரிவுபடுத்தப்படும். `டி' பிரிவு ஊழியர்களின் மகள்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மாதம் ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது. ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகளுக்காக கூடுதலாக 20 விடுதிகள் கட்டப்படும்.

சென்னை புறநகர் ரெயில் சேவை

சென்னை புறநகர் ரெயில் சேவையில் கூடுதலாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன.

சென்னை, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் ஒருங்கிணைந்த புறநகர் ரெயில் சேவை உருவாக்கப்படும்.

இரண்டு அடுக்கு (மாடி ரெயில்) ஏ.சி. ரெயில்கள் 2-ம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன. `சூப்பர் ஏ.சி.' வகுப்பு புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.

ரெயில் சேவைக்கு ஊக்கம் அளிக்கும் மாநிலங்களுக்கு புதிய இரு ரெயில்களும், இரண்டு ரெயில்வே திட்டங்களும் ஒதுக்கப்படும்.

குறைந்த கட்டணத்தில் முன்பதிவு


இணையதளம் மூலம் குறைந்த கட்டணத்தில் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக புதிய பிரிவு ஒன்று விரைவில் தொடங்கப்படும். ஏ.சி.வகுப்புகளுக்கு ரு.10-ம், மற்ற வகுப்புகளுக்கு ரூ.5-ம் இங்கு முன்பதிவு செய்யலாம்.

தொலைதூர மற்றும் புறநகர் ரெயில் பயணத்துக்கு கிïவில் நின்று டிக்கெட் வாங்குவதை தவிர்ப்பதற்காக முன்னோடி திட்டமாக, `பான் இந்தியா' மற்றும் `கோ இந்தியா' என்ற பெயர்களில் பல நோக்கு ஸ்டார்ட் கார்டுகள் அறிமுகம் செய்யப்படும்.

ரெயில்பாதை வாசிகளுக்கு குடியிருப்பு

ரெயில்பாதை ஓரமாக வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் மும்பை, சீல்டா, சிலுகுரி ஆகிய நகரங்களில் இந்த குடியிருப்புகள் கட்டப்படும்.

நாடு முழுவதும் 236 ரெயில் நிலையங்கள் `ஆதர்ஷ்' நிலையங்களாக தரம் உயர்த்தப்படும். பயணிகள் ரெயிலின் வேகத்தை 160 முதல் 200 கிலோமீட்டராக அதிகரிப்பதற்கான ஆய்வு பணி ஜப்பான் நாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்படும்.

விபத்து தடுப்பு கருவிகள்

8 பிராந்தியங்களில் ரெயில்கள் மோதலை தடுக்கும் கருவிகள் பொருத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பனிமூட்ட பாதுகாப்பு கருவிகளும் அறிமுகம் செய்யப்படும். புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக, 9 ஆயிரத்து 583 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நடப்பு நிதியாண்டில் 1300 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும். 867 கிலோமீட்டர் தூர பாதை இரட்டை ரெயில் பாதையாகவும், 1017 கிலோ மீட்டர் தூர பாதை அகல பாதையாகவும் மாற்றி அமைக்கப்படும்.

ரூ.1 லட்சம் கோடி வருவாய்


நடப்பு நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, ரெயில்வே வருவாய், முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதுவரை இல்லாத அளவில், நடப்பு நிதியாண்டு திட்ட ஒதுக்கீடு ரூ.57 ஆயிரத்து 630 கோடியாக அதிகரித்து உள்ளது.

மேற்கண்ட தகவல்கள் ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

உரையின் போது அமளி

ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜியின் சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு காங்கிரஸ்-திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக அவர் முன்னிலைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் பட்ஜெட்டில் பெரும்பாலான திட்டங்கள் மேற்கு வங்காள மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டதால், மற்ற மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு மம்தா பானர்ஜி மிகவும் கோபத்துடன் பதில் அளித்தார். இதனால் மம்தா பானர்ஜியின் பட்ஜெட் உரையில் சிறிது நேரம் தடங்கல் ஏற்பட்டது.



ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 10:19 am

ரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்


ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பயணிகள், சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.

* தமிழ்நாட்டுக்கு 13 புதிய ரெயில்கள்.

* செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்படும்.

* சென்னை புறநகர் ரெயில் சேவையில் புதிதாக 9 ரெயில்கள் இயக்கப்படும்.

* சென்னை எழும்பூர்-நாகூர் எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்கால் வரை நீடிப்பு.

* நாகர்கோவில்-திருவனந்தபுரம் பயணிகள் ரெயில் கொச்சுவேலி வரை நீடிப்பு.

* சென்னை-மதுரை, சென்னை-திருவனந்தபுரம் இடையே வாரம் இருமுறை இடையில் நிற்காத ஏ.,சி. துரந்தோ எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும்

* புதிதாக சூப்பர் ஏ.சி. வகுப்பு ரெயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும்.

* இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய தொடங்கப்படும் புதிய பிரிவில் முன்பதிவுக்கான கட்டணம் ஏ.சி.வகுப்புக்கு 10 ரூபாயாகவும், பிற வகுப்புகளுக்கு ரூ.5 ஆகவும் குறைப்பு.

* புதிய ரெயில் பாதைகள் அமைப்பதற்காக ரூ.9,583 கோடி ஒதுக்கீடு.

* 1,300 கி.மீ. நீளத்துக்கு புதிய ரெயில் பாதையும், 867 கி.மீ. நீள பாதை இரட்டை பாதையாக மாற்றப்படும். 1,017 நீள மீட்டர் கேஜ் பாதை அகல பாதையாக மாற்றப்படும்.

* திருச்சி உள்பட 4 நகரங்களில் ரெயில் பாதை ஓரம் வசிக்கும் ஏழைகளுக்காக 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும்.

* 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான கட்டண சலுகை 40 சதவீதமாக அதிகரிப்பு.

* 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு தற்போது கிடைத்து வரும் 50 சதவீத கட்டண சலுகை, இனி 58 வயதில் இருந்து கிடைக்கும்.

* ஊனமுற்றோருக்கு அளிக்கப்படும் சலுகைகள் ராஜதானி, சதாப்தி ரெயில்களிலும் விரிவுபடுத்தப்படும்.

* விமான நிலையத்தில் உள்ளதைப் போன்று ரெயில் நிலையங்களில் தள்ளுவண்டிகள் (டிராலி) அறிமுகப்படுத்தப்படும்.

* பயணிகள் ரெயிலின் வேகத்தை மணிக்கு 160 முதல் 200 கி.மீ. வரை அதிகரிக்க ஆய்வு செய்யப்படும்.

* 3 ஆயிரம் ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

* ரெயில்வே டி பிரிவு ஊழியர்களின் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,200 ஆக அதிகரிப்பு.

* ரெயில்வே பணியாளர்களின் குழந்தைகள் தங்கி படிக்க மேலும் 20 தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.



ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 26, 2011 10:24 am

எல்லாம் சரிதான் ஆனா ரயில அடிக்கடி கவுக்கிரயே! அத பத்தி ஒண்ணும் சொல்லவே இல்ல. ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 10:24 am

ரெயில்வே ஊழியர்களுக்கு சலுகைகள்

ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மம்தா பானர்ஜி, ரெயில்வே ஊழியர்களுக்கு சில சலுகைகளையும் அறிவித்தார். அவர் கூறியதாவது:-


* ரெயில்வே ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மருத்துவ வசதியை, அவர்களின் பெற்றோருக்கும் விரிவு படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

* டி பிரிவு ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ``கேங்மென்''களின் மகள்களுக்கு உயர் கல்விக்கு தற்போது மாதம் தோறும் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்படும்.

* ரெயில்வே ஊழியர்களின் பிள்ளைகளுக்காக 20 புதிய விடுதிகள் கட்டப்படும். அனைத்து ரெயில்வே ஊழியர்களுக்கும் பதவி உயர்வு அளிக்க தற்போது இருந்து வரும் சில தடைகள் நீக்கப்படும்.

* ரெயில்வே துறையில் பணியாற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு தகுதிகள் அளிக்கப்படும்.

* ரெயில்வேயில் பணியாற்றும் லோடுமேன், லைன்மேன், கிராசிங் பணியாளர்கள் மற்றும் அடிமட்ட பணியாளர்கள் 50-வயதுக்கு மேல் உடல் நலம் பாதிக்கப்படும் நிலையில் அவர்களது வாரிசுகளுக்கு ரெயில்வேயில் பணி வழங்கப்படும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.



ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 10:26 am

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம்


ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய ரெயில்கள் மற்றும் திட்டங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

13 புதிய ரெயில்கள்

2 துராந்தோ உள்பட 13 புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்படும். சென்னை-திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறையில் இருந்து தினசரி ரெயிலாக மாற்றப்பட்டு உள்ளது.

கோவை-மேட்டுப்பாளையம் இடையே புதிய ரெயில், வாரம் 6 நாட்கள் இயக்கப்படும். தர்மபுரி-பெங்களூர் இடையே புதிய டீசல்-மின்சார ரெயில் சேவை அறிமுகம். கொல்லம்-நாகர்கோவில் இடையே புதிய மெயின்லைன் மின்சார ரெயில் சேவை. திருச்சி-கரூர் ரெயில் சேவை, வாரம் ஆறு முறையில் இருந்து தினசரி ரெயிலாக இயக்கப்படும்.

சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையில் கூடுதலாக 9 சேவைகள் தொடங்கும். சென்னை எழும்பூர்- நாகூர் எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும். திருச்சி-கரூர் பயணிகள் ரெயில் சேவை தினசரி ரெயிலாக மாற்றப்படும்.

புதிய ரெயில் பாதை

மதுரை-தூத்துக்குடி இடையே புதிய ரெயில் பாதை அமைக்கப்படும். வரும் நிதியாண்டில் ஓமலூர்-மேட்டூர் அணை ரெயில் பாதை திட்டம் மேற்கொள்ளப்படும். சேலம்-நாமக்கல், நாகூர்- காரைக்கால் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி, இந்த நிதியாண்டில் நிறைவடையும்

பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, சேலம்-காரைக்கால் (வழி-பெரம்பலூர், மயிலாடுதுறை), மன்னார்குடி-பட்டுக்கோட்டை, நாகூர்-பலாவுடி (ராஜஸ்தான்), காரைக்கால்-பேரளம், காரைக்கால்-சீர்காழி, ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி (இணைப்பு - இருங்காட்டுக்கோட்டை- ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்) ஆகிய ரெயில் பாதை திட்டங்கள் பரிசீலிக்கப்படும்.

ரெயில் பாதை மாற்றம்

நடப்பு நிதியாண்டில், இருகூர்-போடனூர் ரெயில்பாதை இரட்டை ரெயில்பாதையாகவும் போடனூர்- பாலக்காடு பாதை, 3 வழி பாதையாகவும் நடப்பு நிதியாண்டில் மாற்றப்படும். 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் புதிய வழித்தடம் - அகல பாதையாக மாற்றம் மற்றும் இரட்டை ரெயில் பாதை மாற்றத்துக்காக மதுரை-கோட்டயம், திண்டுக்கல்-குமுளி, ராமேஸ்வரம்-தனுஷ்கோடி, மதுரை-எர்ணாகுளம் (கொச்சி), ஜோலார்பேட்டை-ஓசூர் (வழி கிருஷ்ணகிரி), செங்கல்பட்டு (சில பகுதி)-விழுப்புரம் வழி- ஆகிய வழித்தடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

எண்ணூர்-அத்திப்பட்டு

நடப்பு நிதியாண்டில் நீடாமங்கலம்-மன்னார்குடி, பாலக்காடு-பொள்ளாச்சி, பழனி-பொள்ளாச்சி, மானாமதுரை-விருதுநகர் மார்க்கத்தில் இரட்டை ரெயில் பாதையாக மாற்றப்படும். நாமக்கல்-கரூர், வாலாஜா சாலை-ராணிப்பேட்டை இடையே புதிய ரெயில் பாதை அமைக்கப்படும். எண்ணூர்-அத்திப்பட்டு பாதை இரட்டை வழி பாதையாக இந்த ஆண்டுக்குள் மாற்றப்பட்டுவிடும்

மயிலாடுதுறை-திருவாரூர், திண்டுக்கல்-பழனி, திருநெல்வேலி-தென்காசி வழியில் இந்த நிதியாண்டுக்குள் அகல பாதையாக மாற்றப்பட்டுவிடும்.

உணவு விடுதி

வேலூர், கன்னியாகுமரி ரெயில் நிலையங்களில், குறைவான செலவில் தரமான உணவு விடுதிகள் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் மதுரை மற்றும் ராமேஸ்வரம் மற்றும் ஆந்திராவில் திருப்பதி உள்ளிட்ட 24 ரெயில் நிலையங்களில். சுற்றுலா துறையுடன் இணைந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையின் 2-வது பிரிவில் விரைவில் பணி தொடங்கும்.



ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 10:28 am

மத்திய ரெயில்வே பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து


மத்திய ரெயில்வே பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கே.வி.தங்கபாலு

மத்திய ரெயில்வே பட்ஜெட் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் கடந்த ஆண்டுகால சிறந்த சாதனைகளை தொடர்ந்து இந்த ஆண்டும் ரெயில்வே வரவு - செலவு அறிக்கையில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் உயர்வு இல்லை என்பது மக்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியைத் தரும் செய்தியாகும்.

நாட்டின் அற்புதமான வளர்ச்சிக்கும், அனைத்து மக்களின் வாழ்வுயர்வுக்கும் பயனளிக்கும் வண்ணம் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறந்த ரெயில்வே வரவு - செலவு அறிக்கைக்காக சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருக்கும், ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய ரெயில்வே பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதை தவிர்த்து இந்த பட்ஜெட்டில் புதுமை எதுவும் இல்லை. மிக விரைவில் நடைபெற இருக்கும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு மம்தா பானர்ஜி மத்திய ரெயில்வே பட்ஜெட்டை தயாரித்து அளித்துள்ளார். அந்த அளவிற்கு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள ஒரு சில புதிய திட்டங்கள், பெரும்பாலான புதிய ரெயில்கள் அனைத்தும் மேற்குவங்கத்திற்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 56 புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார். அதில் சில தொடர்வண்டிகள் மட்டுமே தமிழ்நாட்டிற்குள்ளும், தமிழ்நாடு வழியாகவும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் இரு ரெயில்கள் தவிர மற்றவை நாள்தோறும் இயக்கப்படுபவை அல்ல. இவை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை இயக்கப்படும் என்ற அறிவிப்பு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

நிதி ஒதுக்கவில்லை

விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் குறுகிய ரெயில் பாதை (மீட்டர் கேஜ்) அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு தொடர்வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் இயக்கப்பட்டு வந்த இரண்டு தொடர்வண்டிகள் மட்டுமே இந்தப் பாதை வழியாக இயக்கப்படுகின்றன.

சென்னை பரங்கிமலையில் இருந்து மகாபலிபுரம் வழியாக புதுச்சேரிக்கு புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் பா.ம.க. அமைச்சரின் பெரு முயற்சியால் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் இப்போது கிடப்பில் போடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வைகோ


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னைக்குக் கூடுதல் மின் ரெயில் போன்ற வரவேற்கத்தக்கவை இருந்தாலும், தமிழ்நாட்டில் நீண்டகாலமாகப் பின்தங்கியுள்ள ரெயில்வே திட்டங்களை நிறைவேற்ற எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

தாம்பரம்-விழுப்புரம் இரட்டைப் பாதைத் திட்டத்திற்கும், விழுப்புரம்-திண்டுக்கல் இடையேயான 272 கி.மீ. தூரம் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கும் குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் தாமதமாகி வருகின்றன.

பல திட்டங்கள் முடக்கம்

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அகலப்பாதை அமைக்கும் திட்டங்கள், இரட்டை ரெயில் பாதை, புதிய ரெயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் போன்ற பல திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமையால் கிடப்பில் கிடக்கின்றன.

சென்னையைப் போன்று கோவை, மதுரை போன்ற நகரங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.

ரெயில் பயணிகள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தரமான உணவு குறித்த மக்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

போதிய நிதி ஒதுக்கீடு இன்றித் தமிழக ரெயில்வே திட்டங்கள் ஆமை வேகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், ஒரு சில புதிய ரெயில்கள் பற்றிய அறிவிப்பு மட்டுமே தமிழ்நாட்டுக்கு முழு திருப்தி அளிக்காது.

இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆர்.சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரெயில்வே பட்ஜெட்டில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு இவற்றை கருத்தில் கொண்டு ரெயில்வே சரக்கு கட்டணத்தையும் தொடர்ந்து 8 ஆண்டுகளாக பயணிகள் கட்டணத்தையும் உயர்த்தாமல் அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கதாகும்.

ராஜதானி மற்றும் சதாப்தி ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. ரெயில் விபத்துக்களை குறைப்பதற்கும் பயணிகள் பாதுகாப்புக்கும் அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மொத்தத்தில் ஏற்றத்தாழ்வுகளற்ற சமமான பட்ஜெட்டாகவே அமைந்திருக்கிறது என்று கருதலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஏ.சி.சண்முகம்

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியிருப்பதாவது:-

பட்ஜெட்டில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்தாதது மிகவும் வரவேற்கத்தக்கது. சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி, ஆவடி, திருவள்ளூர், செங்கல்பட்டிற்கு புதியதாக 9 மின்சார ரெயில்கள் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மூத்த குடிமக்களின் கட்டண சலுகை வயது 60-லிருந்து 58ஆக குறைத்திருப்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும். தண்டவாள ஓரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு திருச்சியில் வீடுகட்டப்படும் என்று அறிவித்திருப்பது, ஏழை எளியோருக்கு மிகவும் நன்மை பயக்கும். அடுத்த மாதத்திற்குள் 1.75 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பு மிகவும் பாராட்டுக்குரியது.

இவ்வாறு ஏ.சி.சண்முகம் அறிக்கையில் கூறியுள்ளார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் ந.சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல சலுகைகளை மம்தா அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்களைவிட தரகர்களுக்கே லாபம்'' என்று கூறியுள்ளார்.



ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 10:31 am

ரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாடு மகிழ்ச்சியடைய ஒன்றும் இல்லை - ஜெயலலிதா அறிக்கை

ரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாடு மகிழ்ச்சியடைவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மத்திய ரெயில்வே பட்ஜெட் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெரும்பாலான திட்டங்கள் நிறைவேறவில்லை

மத்திய ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள 3-வது ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அந்த வகையில் இது சாதாரண மக்களின் பட்ஜெட்டாக இருக்கிறது. பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இருந்தபோதிலும், கடந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ள பெரும்பாலான திட்டங்கள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் ரெயில்வே மந்திரியின் சாதனை குறிப்பிடும்படியாக இல்லை. ரெயில்வே அமைச்சகத்தின் நிதிநிலைமையும் திருப்திகரமாக இல்லை.

வருவாய் பெருக்கத்திற்கும் ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் காணப்படவில்லை. இந்தப் போக்கு, தேசிய பொருளாதாரத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்துவதுடன், உலகத்தில் மிகப்பெரிய ரெயில்வே நெட்வொர்க்கை அதலபாதாளத்தில் தள்ளிவிடும். இந்த ரெயில்வே பட்ஜெட்டால் தமிழ்நாடு மகிழ்ச்சியடைவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. சில மின்சார ரெயில்கள், இரண்டு புயல்வேக ரெயில்கள் தவிர, தமிழ்நாட்டிற்காக புதிய ரெயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

தேர்தலை மனதில் கொண்டு...


ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி தனது சொந்த மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் யுத்தம் நடத்தி வெற்றி கண்ட நந்திகிராம் மற்றும் சிங்கூர் ஆகிய இடங்கள் பயன்பெறும் வகையில் பல பெரிய திட்டங்களை அறிவித்துள்ளார். மொத்தத்தில், தேசிய வளம் ரெயில்வே மந்திரியால் உள்ளூர் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதை ஒதுக்கிவிடவோ, மறுக்கவோ முடியாது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



ரெயில்வே பட்ஜெட் தாக்கல்: புதிய சலுகைக∙ விவரம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Feb 26, 2011 10:34 am

பட்ஜெட் கூடத்தொடரில் கலந்து கொண்டது போன்ற உணர்வை ஏற்படுத்திய செய்திக்கு நன்றி தல



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக