புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_m10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10 
83 Posts - 50%
heezulia
கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_m10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_m10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_m10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10 
6 Posts - 4%
prajai
கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_m10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_m10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_m10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_m10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10 
125 Posts - 54%
heezulia
கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_m10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_m10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_m10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_m10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_m10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_m10கியாமத் நாளின் அடையாளங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கியாமத் நாளின் அடையாளங்கள்


   
   
djnashath
djnashath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 16/03/2011

Postdjnashath Fri Mar 18, 2011 6:25 pm

உலகம் எப்போது அழிக்கப்டும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான். நபிமார்களோ, வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய முடியாது. ஆயினும் அந்த நாள் நெருங்கும் போது ஏற்படும் அடையாளங்கள் சிலவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துச் சென்றனர்.

முஸ்லிம்கள் ஆறு விஷயங்களைக் கட்டாயம் நம்ப வேண்டும்.
1. அல்லாஹ்வை நம்ப வேண்டும்.
2. வானவர்களை நம்ப வேண்டும்.
3. வேதங்களை நம்ப வேண்டும்.
4. தூதர்களை நம்ப வேண்டும்.
5. இறுதி நாளை நம்ப வேண்டும்.
6. விதியை நம்ப வேண்டும்.
'இவ்வுலகம் ஒரு நாள் அடியோடு அழிக்கப்படும். அவ்வாறு அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். அப்போது அனைவரையும் இறைவன் விசாரித்து நல்லோர்க்கு சொர்க்கத்தையும், தீயோருக்கு நரகத்தையும் அளிப்பான்'' என்பது அந்த ஆறு விஷயங்களில் ஒன்றாகும்.
மேற்கண்டவாறு நம்புவது தான் இறுதி நாளை நம்புதல் என்ற சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது.
இந்த நம்பிக்கை தான் இஸ்லாத்தின் ஆணி வேராகத் திகழ்கிறது.
இப்படி ஒரு நியாயத் தீர்ப்பு நாள் தேவை தான் என்று ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்வும் ஒப்புக் கொள்கிறது.
இவ்வுலகில் ஒருவன் மிகவும் நல்லவனாக வாழ்கிறான். ஆனாலும் அவன் மிகவும் சிரமப்படுகிறான். அவன் செய்த நன்மைகளுக்கான பரிசு இவ்வுலகில் அவனுக்குக் கிடைப்பதில்லை என்பதை நாம் பரவலாகக் காண்கிறோம்.
அது போல் ஒரு மனிதன் அனைத்து தீமைகளிலும் மூழ்கிக் கிடக்கிறான். எல்லா விதமான அக்கிரமங்களையும் செய்கிறான். ஆனாலும் இவன் சொகுசாக வாழ்ந்து மரணித்து விடுவதையும் நாம் காண்கிறோம். இவன் செய்த தீமைகளுக்கான தண்டனையை இவ்வுலகில் இவன் அனுபவிக்கவில்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
பத்து கொலை செய்த ஒருவன் மரண தண்டனை பெற்றால் கூட அது அவனது குற்றத்திற்குத் தகுந்த தண்டனை அல்ல. ஒரு உயிரைக் கொன்றதற்குப் பகரமாக அவனது உயிரை வாங்குகிறோம். ஆனால் மீதி ஒன்பது கொலைகள் செய்ததற்கு என்ன தண்டனை? அதற்கான தண்டனையை இவ்வுலகில் அவனுக்கு யாராலும் வழங்க முடியாது.
எனவே இது போன்றவர்கள் தமது செயலுக்கேற்ற தண்டனையை அல்லது பரிசை அடைய வேண்டுமானால் அது இவ்வுலகில் அறவே சாத்தியமற்றதாகி விடுகிறது.
இதன் காரணமாக தீயவர்களைப் பார்த்து மற்றவர்களும் தம் மைத் தீய செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றனர்.
'யாரும் தன்னைப் பார்க்காத வகையில் குற்றம் செய்து விட முடியும்'' என்று குற்றம் செய்யும் மனிதன் நம்புகிறான். அப்படி யாராவது பார்த்து விட்டாலும் அவர்களைச் சரிக்கட்ட முடியும் எனவும் நினைக்கிறான். இதன் காரணமாக குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.
இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், மனிதன் நல்லவனாகவே வாழ வேண்டுமானால் நியாயத் தீர்ப்பு நாள் ஒன்று உள்ளது என்று நம்புவது தான் அதற்கான ஒரே வழி.
அதைத் தான் இறுதி நாளை நம்புதல் என்று இஸ்லாம் குறிப்பிடு கிறது. அந்த நாளில் நமது செயல்களின் விளைவை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் எச்சரிக்கை


ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்





கியாமத் நாளின் அடையாளங்கள் 34dpts9
djnashath
djnashath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 16/03/2011

Postdjnashath Fri Mar 18, 2011 6:26 pm

அந்த நாள் அருகிலேயே உள்ளது


அந்த நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறாவிட்டாலும் சீக்கிரமே அந்த நாள் வந்து விடும் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறது.
சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏக இறைவனை) மறுப்பவன் கூறுவான்.
(திருக்குர்ஆன் 78:40)
அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர். நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.
(திருக்குர்ஆன் 70:6,7)
அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது.
(திருக்குர்ஆன் 54:1)
அந்த நேரம் அருகில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?
(திருக்குர்ஆன் 42:17)
(முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது'' எனக் கூறுவீராக! அந்த நேரம் சமீபத்தில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?
(திருக்குர்ஆன் 33:63)
உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. அப்போது (ஏக இறைவனை) மறுத்தோரின் பார்வைகள் நிலை குத்தியதாக இருக்கும். 'எங்களுக்குக் கேடு தான். நாங்கள் இது பற்றிக் கவனமற்று இருந்து விட்டோம். இல்லை நாங்கள் அநீதி இழைத்தோம்'' (என்று கூறுவார்கள்).
(திருக்குர்ஆன் 21:97)
மனிதர்களுக்கு அவர்களின் விசாரணை நெருங்கி விட்டது. அவர்களோ புறக்கணித்து, கவனமின்றி உள்ளனர்.
(திருக்குர்ஆன் 21:1)
'எங்களை எவன் மீண்டும் படைப்பான்?'' என்று அவர்கள் கேட்கின்றனர். 'முதல் தடவை யார் உங்களைப் படைத்தான்?'' என்று கேட்பீராக! உம்மிடம் தங்கள் தலைகளைச் சாய்த்து, 'அது எப்போது வரும்?'' என்று கேட்கின்றனர். 'அது சமீபத்தில் வரக் கூடும்'' என்று கூறுவீராக!
(திருக்குர்ஆன் 17:51)
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியையும், அவன் படைத்துள்ள ஏனைய பொருட்களையும், அவர்களின் காலக்கெடு அருகில் இருக்கக் கூடும் என்பதையும் அவர்கள் கவனிக்கவில்லையா? இதன் பிறகு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்பப் போகிறார்கள்? (திருக்குர்ஆன் 7:185)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டி 'நானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி),
நூல்: புகாரி 4936, 5301, 6503
அந்த நாள் மிகவும் சமீபத்தில் வந்து விடும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ் அறிவித்த பின் இன்னும் அந்த நாள் வரவில்லையே என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.
இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வுலகம் படைக்கப்பட்டு இலட்சோப லட்சம் ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்து விட்ட இலட்சோப லட்சம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 1400 ஆண்டுகள் என்பது மிகவும் அற்பம் தான். இன்னொரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து மறுமை நாள் வந்தாலும் 'அது சமீபத்தில் தான் உள்ளது'' என்ற அறிவிப்புக்கு அது முரணாக அமையாது.


ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்



கியாமத் நாளின் அடையாளங்கள் 34dpts9
djnashath
djnashath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 16/03/2011

Postdjnashath Fri Mar 18, 2011 8:19 pm

யாராலும் அறிய முடியாது


'அந்த நாள் எந்த ஆண்டு வரும்? எப்போது இந்த உலகம் அழிக்கப்படும்'' என்ற கேள்விக்கு திருக்குர்ஆன் அளிக்கும் விடை 'அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதை அறிய முடியாது'' என்பது தான்.
'அந்த நேரம் எப்போது வரும்?'' என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். 'இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப் படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்'' என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்ற னர். 'இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது'' என்று கூறு வீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.
(திருக்குர்ஆன் 7:187)
'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த எச்சரிக்கை எப்போது?'' எனக் கேட்கின்றனர். 'அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே'' எனக் கூறுவீராக!
(திருக்குர்ஆன் 67:25, 26)
நீங்கள் எச்சரிக்கப்படுவது அருகில் உள்ளதா? அல்லது அதற்கு என் இறைவன் (கூடுதல்) தவணையை ஏற்படுத்துவானா என்பதை அறிய மாட்டேன்'' என்று கூறுவீராக!
(திருக்குர்ஆன் 72:25)
'அந்த நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்?'' என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே. அதை அவர்கள் காணும் போது ஒரு மாலையோ, அல்லது ஒரு காலையோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்.
(திருக்குர்ஆன் 79:42-46)
சுற்றி வளைக்கும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வருவதைப் பற்றியோ, அவர்கள் அறியாத நிலையில் திடீரென அந்த நேரம் வந்து விடுவதைப் பற்றியோ அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா?
(திருக்குர்ஆன் 12:107)
அந்த நேரம் வரக்கூடியதே. ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூ கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன். அதை நம்பாது, தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்!
(திருக்குர்ஆன் 20:15,16)
(முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது'' எனக் கூறுவீராக! அந்த நேரம் சமீபத்தில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?
(திருக்குர்ஆன் 33:63)
'அது எப்போது நிகழும்'' என்பதை நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த மனிதரும் அறிந்திருக்கவில்லை; அது இறைவன் மாத்திரமே அறிந்த ஒரு விஷயமாகும் என்று இவ்வசனங்கள் விளக்குகின்றன.


ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்




கியாமத் நாளின் அடையாளங்கள் 34dpts9
djnashath
djnashath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 16/03/2011

Postdjnashath Fri Mar 18, 2011 8:20 pm

மறைத்து வைத்த மர்மம் என்ன?


அந்த நாள் நிச்சயம் வரத் தான் போகிறது எனும் போது அந்த நாளை இறைவன் தெளிவாக அறிவித்து விடலாமே! ஏன் அறிவிக்க மறுக்கிறான்? என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்.
அந்த நாளை இரகசியமாக வைத்திருப்பதில் உலகுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரையும் சரியான முறையில் பரீட்சிக்க இது அவசியமானதாக இருக்கின்றது.
ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக மரணத்தைத் தழுவப் போகிறான். ஆயினும் எந்த நாளில், எந்த மாதத்தில், எந்த நேரத்தில் மரணிக்கப் போகிறோம் என்பதை எவருமே அறிய முடியாது.
மரணம் எப்போது வரும் என்பது தெரியாததால் தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதனாக வாழ்ந்து வருகிறான். தனக்கு மரணம் வரும் நேரத்தை ஒருவன் முன்கூட்டியே அறிந்து விட்டால் எல்லாவிதமான அக்கிரமங்களையும் துணிந்து செய்வான். மரணத்திற்குச் சற்று முன்பாக பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்வோம் என்று எண்ணி விடுவான்.
நல்லவனையும், கெட்டவனையும் சரியான முறையில் பிரித்தறிய இயலாமல் போய்விடும். எல்லா மனிதனும் மரணத்திற்கு முதல் நாள் வரை மகாக் கெட்டவனாக வாழ்ந்து விட்டு ஒரு நாள் மட்டும் எல்லோருக்கும் நல்லவனாக வாழ்ந்து விடுவான். நல்லவனை யும், கெட்டவனையும் பிரித்தறிய இந்த ஏற்பாடு அவசியம் என்பது போலவே மறுமை நாளைப் பற்றி மறைத்து வைப்பதும் அவசியமே.
நாம் வாழுகின்ற போதே அந்த நாள் வந்து விடுமோ என்ற அச்சம் தான் சிலரையாவது நல்லவர்களாக வாழச் செய்கின்றது. செய்கின்ற அக்கிரமத்தை எல்லாம் செய்து விட்டுக் கடைசி நேரத்தில் மட்டும் நல்லவனாக ஆகிவிடக் கூடாது என்பதற்கே அந்நாள் எது என்பதை இறைவன் இரகசியமாக வைத்திருக் கின்றான். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம் அறியமுடியும்.
அந்த நேரம் வரக்கூடியதே. ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூ கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன். அதை நம்பாது, தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்!
(திருக்குர்ஆன் 20:15,16)
ஒவ்வொருவரும் அவரவர் செயலுக்கேற்ப கூலி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே அதை இரகசியமாக வைத்திருக்கிறான்.
இதன் காரணமாகவே அந்த நாள் எதுவென்று அவன் அறிவிக்கவில்லை.
அந்த நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறாவிட்டா லும் அந்த நாள் நெருங்க நெருங்க உலகில் ஏற்படும் விபரீதங்களை நபி(ஸல்) அவர்கள் முன்கூட்டியே அறிவித்துச் சென்றுள்ளார்கள்.
அந்த நாளை நம் காலத்தவர்கள் எந்த அளவுக்கு நெருங்கி யுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள அந்த முன்னறிவிப்புகள் நமக்கு உதவும் என்பதால் அவற்றைத் தெரிந்து கொள்வோம்.



ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்



கியாமத் நாளின் அடையாளங்கள் 34dpts9
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 8:45 pm

மிக அருமையான பகிர்வு...... மரணம் முன்கூட்டியே அறிந்தால் மனிதனின் அக்கிரமங்களுக்கும் அளவில்லாமல் போகும்....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கியாமத் நாளின் அடையாளங்கள் 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக