புதிய பதிவுகள்
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10இஸ்லாமிய குண நலன்கள் Poll_m10இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10 
64 Posts - 58%
heezulia
இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10இஸ்லாமிய குண நலன்கள் Poll_m10இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10இஸ்லாமிய குண நலன்கள் Poll_m10இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10இஸ்லாமிய குண நலன்கள் Poll_m10இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10இஸ்லாமிய குண நலன்கள் Poll_m10இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10 
106 Posts - 60%
heezulia
இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10இஸ்லாமிய குண நலன்கள் Poll_m10இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10இஸ்லாமிய குண நலன்கள் Poll_m10இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10இஸ்லாமிய குண நலன்கள் Poll_m10இஸ்லாமிய குண நலன்கள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமிய குண நலன்கள்


   
   
avatar
தாளையன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 22/06/2009

Postதாளையன் Mon Apr 18, 2011 11:41 am

இஸ்லாமிய குண நலன்கள்



1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?

பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.

(
காண்க அல்குர்ஆன் 31:1742:43)

சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)


2.
மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:11029:4

3.
இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :

இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.

(
அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

தாய்க்கு நன்மை செய்வது :

இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,

மேலும் காண்க அல்குர்ஆன் 17:24
31:15)

4 .
பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?

ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)

பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக


5 .
பெற்றோரை திட்டாமல் இருப்பது ?

ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)

தீய குணங்கள்



1 .
தற்பெருமை

(
நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


(
அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

2 .
கொடுமை

அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)

3 .
கோபம்

(
பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.


(
அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

4 .
பிறர் துன்பத்தை கண்டு மகிழல்

உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).

5.
பொய்

எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)

சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)


6.
கெட்டவற்றை பேசுதல்

எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)

7.
இரட்டை வேடம் போடுதல்

மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)

8.
பாரபட்சம் காட்டுதல்

நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)

முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)

9.
வரம்பை மீறிய புகழ்ச்சி

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)

10. பரிகாசம்

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)

11.
வாக்குறுதி மீறல்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)

நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)


12.
சண்டை

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)

13.
குறை கூறல்

குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன்
49:12)

14.
பொறாமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)

15.
கெட்ட பார்வை

(
நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)

கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்
40:19)

செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)


நற் குணங்கள்


1.
நிதானம்

இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)

உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன்
31:19)

2.
எளிமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, 'எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.' (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்)

3.
தூய்மை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)

(
நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)

4..
மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்

மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்

உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள்.. இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)

5.
நாவடக்கம்

இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)

எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)

6.
அன்பாக பேசுதல்

கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)

7.
பிறருக்கு உதவி புரிதல்

நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்)

8.
உண்மை பேசுதல்

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)

விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)


9.
நன்றி செலுத்துதல்

மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்)

10.
வெட்கப்படுதல்

திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)

11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)

அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)

12.
தவ்பா (மன்னிப்பு கோருதல்)

எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி


13.
உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்

நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)

தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,முஸ்லிம்







--
அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்களின் ஒருவர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 660




--


--


"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)

இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!ஆமீன்.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 18, 2011 12:00 pm

நன்றி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Apr 18, 2011 12:36 pm

சிறப்பான தகவலுக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 18, 2011 3:12 pm

நன்றிகள் நல்ல தகவல்



நேசமுடன் ஹாசிம்
இஸ்லாமிய குண நலன்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக