புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_c10விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_m10விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_c10 
60 Posts - 48%
heezulia
விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_c10விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_m10விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_c10விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_m10விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_c10விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_m10விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_c10விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_m10விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_c10விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_m10விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_c10விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_m10விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 26, 2011 3:10 pm

அன்றே சொன்னார் ராஜாஜி!
- இன்னம்பூரான்

(தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதையொட்டி, விகடன் டாட் காம் செய்தித் தளத்துக்கு வாசகர் அனுப்பிய கட்டுரை)



மே 16, 2011... தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுக்கொண்டார். உடனக்குடனே, அமைச்சர்களும் பதவியில் அமர்ந்ததும் நன்நிமித்தமே.

மக்களின் விருப்பம், வாக்கு, ஆணை எல்லாவற்றையும் ஒரு சொல்லில் அடக்கி விடலாம்: 'அறம்'. அது யாது என்று தமிழ் மொழியின் அமுதசுரபியான மணிமேகலையிடம் கேட்க, அவர் சொல்லுவார்,

"...அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்,
மறவாது இது கேள்! மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்..."

உணவும், ஆடையும், தங்குமிடமும் உவமைகள் என்க, நிறைவான வாழ்க்கைக்கு. அதை அளிக்ககூடிய நல்லாட்சியை, அறிவு, ஆற்றல், தன்னலம் இல்லாத ஈகைப் பண்பு, அருள் ஆகிய நல்ல இயல்புகள் அனைத்தும் கொண்ட அரசியல் தலைமை மட்டுமே தர இயலும். அவ்விடம் அறம் தளைத்து ஓங்கும்.

அந்த நல்வழியில் அரசாளுவது, முதல்வரின் கடமை, பணி, தொண்டு. இத்தருணம் அவருக்கு சான்றோரின் ஆலோசனையும், ஆசிகளும், வாழ்த்துக்களும் தாராளமாகக் கிடைக்க வேண்டும். நம் பொற்காலத்து முதல்வரும், மாமேதையும், தர்மபோதகரும் ஆன ராஜாஜி அறிவுரைகளை மதித்து நடந்தாலே, தெளிவு பிறக்கும்; இன்னல்கள் களையும்; நல்ல காலம் பிறக்கும்.




நாடு விடுதலை அடைந்த பத்தாவது வருடம், ஒரு ரூபாய் விலையில் ஒரு நூல் பிரசுரம் ஆயிற்று - ராஜாஜியின் ஒன்பது கட்டுரைகள். முன்னுரையில் அந்த தீர்க்கதரிசி இரு விஷயங்களை தெளிவுற கூறுகிறார் - 1) அவரது கருத்துக்களை, மக்களை மேய்ப்பர்கள் ஏற்காமல் இருக்கக்கூடும். 2) இந்த கருத்துக்கள் சிந்தித்து, சிந்தித்து எழுதப்பட்டவை; அவசரம் அவசரமாக தன்னிச்சையாக எழுதப்பட்டவை அல்ல.

பல்லாண்டு, பல்லாண்டுகளாக, மக்களை மேய்த்தவர்கள் அவருடைய கருத்துக்களை அசட்டை செய்ததால், மக்களின் துன்பம் கரை கடந்தது. அவருடைய சிந்தனைகள் எக்காலமும் ஏற்புடையவை; அரசை உருப்படியாக நடத்திய தலைவரின் நன்கொடை, அவை. ஐம்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு அவரின் சொல் ஒவ்வொன்றும் கணீரென்று கணீரென்று ஆலயமணி அடிப்பது போலும், கீற்று மின்னல் 'டால்' அடிப்பது போலும், இன்றைய இந்திய சூழ்நிலைக்கு கனபொருத்தமாக இருப்பது, நம் முதல்வரின் கொடுப்பினையே.

'அரசியலின் உள்ளுறைவது, தேர்தலில் எப்படியாவது வெற்றியடைவது என்று தான் அவர்கள் நம்பினார்கள். வரலாற்றில் மறைபொருள் உண்டு. அவர்கள் தேர்தலில் தோற்றல்லவோ போனார்கள்,' என அன்று அவர் விடுத்த எச்சரிக்கையை இன்று காண்கிறோம்.

இனி ராஜாஜி நல்லுரையின் முதல் பகுதியின் சுருக்கம்:

1. பற்பல படிநிலைகளில் வசித்து வரும் மக்களிடையே, அரசின் குறிக்கோள்களை பற்றி பெருமளவில் ஏகோபித்த அபிப்ராயம் இருக்கவேண்டும். அப்போது தான், நாடாளுமன்ற பிரதிநித்துவம் என்ற மக்களாட்சி முறை செயல்பாடுகளில் வெற்றி பெற முடியம்.

- அதை மணிமேகலையின் 'அறம்' எனலாம்.

2. நல்லாட்சி அளிக்கக்கூடிய, இரு கட்சிகள் களத்தில் இருக்கவேண்டும். மக்களாட்சியெனில், வலிமையான எதிர்க்கட்சி தேவை. அரசியல் கருத்துக்கள், ஒன்றுக்கொன்று சளைக்காத இரு கட்சிகள் இல்லையெனில், நீர்த்து விடும்... மாற்றுக் கருத்துடையோர் தனியார்களாகவோ அல்லது சின்ன சின்ன குழுக்களாகவோ இருப்பின், அரசு நிச்சியமாக, சர்வாதிகாரம் செய்யத்தொடங்கும்.

- மக்களால், நல்லாட்சி அளிக்கக்கூடிய, இரு கட்சிகளை காண இயலவில்லை. எனவே, நம் முதல்வர் ஆரோக்கியமான மாற்றுக்கருத்துக்கள் தன்னை அடைய வகை செய்து கொள்ளவேண்டும். இது நடக்கக்கூடிய செயல்.

3. ஒரே கட்சியை ஆளுமையில் வைத்தால், அத்தருணம், மக்களாட்சி தராதரத்தை இழந்து விடுகிறது. பார்க்க முடிந்தும், காண முடியாது; ஏற்றதாழ்வுகளை எடை போடமுடியாது; எழும் வினாக்களின் எல்லா பரிமாணங்களையும் காண இயலாது.

- இந்த சிக்கலான பிரச்னையை முதல்வர் கவனித்து, நிவாரணங்களை நாட வேண்டும். ஆளுமைத்திறனும், உகந்த அணுகுமுறையும் உடையவ தலைவரால், யதேச்சாதிகாரமும் இயலும்/ நிவாரணங்களும் இயலும்.

4. இந்திய மக்கள் அடி பணிபவர்களாக இருந்தாலும், அவர்கள் களிமண் பொம்மைகள் அல்ல. அவர்களின் வாழ்வியல் இயந்திர கதியில் இயங்கவில்லை. சிக்கலான எண்ணங்களும், உணர்ச்சிகளும், மன உளைச்சல்களும் நிறைந்த வாழ்வில், உரசல்களும், தூக்கிப்போடும் இடைஞ்சல்களும் இருக்கத்தான் செய்யும். பற்பல பற்பல படிநிலைகளில் வாழும் மக்கள் யாவரும் இதன் இலக்கே. நீண்ட கால வரலாறே இதற்கு அத்தாட்சி. இந்த தாக்கங்கள் எங்கோ அத்வானத்தில் நடை பெறவில்லை. வாழ்ந்து வரும் நம்மை தான் அவை குறி வைக்கின்றன.

- ராஜாஜி அன்று சொன்னதை, இன்று கண் கூடாக காண்கிறோம்.

5. ராஜாஜி 'மாற்றம் தரும் வலி' ஒரு எளிய சொற்றொடரை (transition blues) ஒரு சூத்ரமாகவே படைக்கிறார். வரி பளு, வேலையில்லா திண்டாட்டம் ('disemployment' is his word), விலைவாசி ஏற்றம், பதவி மோகம் கொண்டவர்களின் சுரண்டல், வீட்டு வரவு/ செலவு உதைப்பது, இவற்றால் ஏற்படும் உளைச்சல், ('ஹிஸ்டீரியா' என்கிறார்.) தனிமனிதர்களின் இயலாமை என்ற கொடுமை எல்லாமே அந்த சொற்றொடரில் அடக்கம். இத்தகைய மோதல்களால் அவஸ்தை படுபவர்கள் வரவேற்பது யாதெனில், இந்த உரசல்களையும், இடைஞ்சல்களையும், குலுங்கல்களையும் கவனித்து நிவாரணம் தேடும் நாடாளுமன்ற பிரதிநித்துவ கட்சி.

- இன்று தமிழ்நாட்டில் அந்த பொறுப்பு, அ.தி.மு.க.வுக்கு.

6. அந்த கட்சி, இடதுசாரியை கையாளும் திறனுடன், சட்டமசோதாக்களையும், அன்றாட நிர்வாகத்தையும் சோதித்து, எடை போட்டு, ஆளும் கட்சியின் விவேகத்தை அலசி, ஆளுமையில் உள்ளவர்கள் மக்கள் நலனுக்கு இயங்குகிறார்களா அல்லது 'மாற்றம் தரும் வலி'யை தருகிறார்களா என்று பகுத்தறிந்து, ஏற்புடைய வகையில் அவர்களை பணி செய்ய கட்டாயப்படுத்தும் திறனையும் முன்னிறுத்த வேண்டும். இது தான் நான் கூறும் வலதுசாரி; அத்தகைய கட்சிக்கு பெருமளவு ஆதரவு இருக்கும். 'முன்னேற்றத்தில்' ஓரளவு பழம்பெருமைக்கு (கன்ஸெர்வேட்டிவ்) மதிப்பு உண்டு. அதை விரும்புவோர், மேற்படி முறையில் இயங்கக்கூடிய எதிர்தரப்பை நிலை நாட்ட வேண்டும். இதை ஆளுமை ரகசியம் எனலாம்.


7. ஏதோ ஒரு கோட்பாடு, ஏன் ஒரு பொருளற்ற கூப்பாடு (ஸ்லோகன்) கூட, மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடும்; அதன் விளைவாக, தக்கதொரு மாற்றுக்கருத்தின் சார்பில் மக்களை திரட்டி, எதிர்த்தரப்பை உருவாக்க இயலாமல் போகாலாம்... மக்களிடையே, அன்றாட வாழ்க்கைக்கு, அரசின் பரிசில்களும் சிபாரிசுகளும் இன்றியமையாதவையாக ஆகிவிட்டன.

- தேர்தல் இலவச வாக்குறுதிகளை ராஜாஜி ஆரூடம் கூறுகிறார் என்று தான் நினைக்க தோன்றுகிறது. இலவசங்கள் தேவையே இல்லை. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை, பொதுநலம் நாடி, திருத்தி அமைக்க, ஏற்புடைய இலக்கணம் வகுக்கவேண்டும்.

8. இந்தியாவில் பிராந்திய ஈடுபாடுகள் அரசியல் களத்தில் புகுந்து விளையாடுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு நிலைகளில். எனவே, பிராந்திய ஈடுபாடுகளும், அவற்றால் மக்களின் நலம் நோக்கி எழும் பிரச்னைகளும், மற்றவை எல்லாவற்றையும் அமுக்கி விடுகின்றன. இதற்கு விடை, பிராந்திய உணர்வுகளை புறக்கணிப்பது இல்லை. விடை, மாநிலங்களுக்கு மேலும் அதிகாரம் வழங்குவதில் இருக்கிறது. அவ்வாறு செய்தால், பிராந்திய அளவில் என்ற குறுகிய மனப்பான்மை குறையும்.

- நம் முதல்வருக்கு, இங்கு இருமுனை செயல்பாடுகள்: மத்திய அரசிடமிருந்து பெறுவதும், மாவட்டங்களுக்கும், பஞ்சாயத்துக்களுக்கு கொடுப்பதும்.

9. மத்திய அரசின் ஆளுமையை போற்றுவோர், நாட்டுப்பற்று, ஒருமைப்பாடு என்று கூப்பாடு (ஸ்லோகன்) போடுவர்; மாநில ஆதரவாளர்களோ தங்கள் தங்கள் பிராந்திய தேவைகளுக்கு குரல் கொடுப்பர். இப்படிப்பட்ட ஆரோக்கியமான போட்டாபோட்டிகள், ஜாதி, இனம், போன்ற குறுகிய அரசியலை கடந்து சென்றால், நலம் பயக்கும். நிர்வாகம் நாணயத்துடன் செவ்வனே இயங்கும்.

- ராஜாஜி அறிவுரையை நல்லாட்சியாக இயக்கிக்காட்டும் திறன், நம் முதல்வரிடம் உண்டு என்று யாவரும் அறிவர்.

10. எது எப்படி இருந்தாலும், மக்கள் வேண்டுவதெல்லாம், பாரபட்சமற்ற, நியாயமான, செவ்வனே இயங்கும் அன்றாட நிர்வாகம். குடும்பமும், இனமும் ஆட்சி புரிந்தால், அரசு ஊழியர்களும், அந்த தகாத வட்டங்களில் சிக்கிக்கொள்வர். ஏனெனில், குறுகிய வட்டங்களின் அதிகாரபலம், அவர்களின் தரத்தை குறைத்து விடுகிறது. எல்லா துறைகளிலும் ஆரோக்கியமான வளர்ச்சியும், தகாத செயல்களை ஒழிப்பதும் குறிக்கோள் என்றால், மாநிலங்களுக்கு ஆளுமை கொடுத்தால் மட்டும் போதாது. அரசு பணி செய்பவர்களை - மாநில/மத்திய ஊழியர்கள் - கண்டிப்பான ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், மத்திய அரசின் நேரடி பார்வையில். அதற்கென்று சீனியர் அதிகாரிகளைக்கொண்ட மத்தியக்குழு ஒன்று தேவை. அக்குழுவின் பணி: எல்லா துரைகளிலும் உயர்ந்த தரம் நிலவ வேண்டும்; அரசியலர்களின் அச்சுறுத்தல், பழி வாங்குதல் போன்றவற்றிலிருந்து அவர்களை காப்பாற்றுவது.

- இன்று நடப்பதை அன்று சொன்னார், ராஜாஜி!






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 5:27 pm

சிறந்த பகிர்வு...நன்றி மணி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu May 26, 2011 5:51 pm

நன்றி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக